வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவாக்கும் திறன்


வெள்ளம் பாதித்தபோதும், அதனால் விடுபட்ட உப்புத்தன்மையும் , வேளாண்மைக்கு சவாலாக மாறுகிறது. மேலும் விவாசாயிகளின் காலநிலை மற்றும் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறது. தொழில்நுட்ப உதவி மற்றும் டிஜிட்டல் காலநிலை முன்கணிப்பும், இணைப்பின் மூலம் கற்றல் பயிற்சி ஆகியவை பண்ணையின் விரிதிறனை அதிகாித்து, நிஷா போன்ற விவசாயிகளின் தலையெழுத்துகளை மாற்றுகிறது.


பிஹாரில் , மேற்கு சம்பாரம் மாவட்டத்தில், பாகா 1, பாகா2, மதுபானி, பிட்டா, பிப்ராசி வட்டங்களிலும் மற்றும் உத்திர பிரதேசத்தில் மஹாராஜகஞ்ச் மற்றும் குஷி நகர் மாவட்டத்தை சேர்ந்த நிச்லால் மற்றும் கத்தா வட்டங்களிலும் உள்ள பல கிராமங்கள் கந்தக் ஆற்றின்கறை ஓரங்களிலும், கந்தக் குறுக்கு அணைகளின் அருகேயும் அமைந்திருக்கின்றன. இந்த கிராமங்கள் மற்றும் அற்றிற்கு மத்தியில் தண்ணீர் சேமிக்கும் அணை இல்லாததால் ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தினாலும், தண்ணீர் தேக்கத்தினாலும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிக மழைபொழிவு மற்றும் அருகேயுள்ள மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் உள்ளே வருவதால் கரீப் பயிர்கள் மற்றும் பருவக்கால காய்கறிப் பயிர்கள் அழிவிற்குள்ளாகிறது. மேலும் பால்மிகி வனவிலங்குகள் சரணாலயம் அருகில் இருப்பதால், விலங்குகளும் இந்தப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

கிராமத்தில் வாழும் பல குடும்பங்களுக்கு வேளாண்மையே வருமானத்தின் முதன்மை ஆதாரமாக இருக்கிறது. கரீப் பருவத்தில் 15-20 சதவிகித பகுதியில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ராபி பருவத்தில் கோதுமை, கடுகு, அவரை, மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. தண்ணீர் தேங்கும் நிலை சுமார் 6 மாதங்களாக நீடித்திருக்கும் என்பதால், இங்கே நெல் சாகுபடி செய்வது கடினம். இந்தப்பகுதியில்; கரும்பு முக்கியப்பயிராக கருதப்படுகிறது. உள்ளூரில் உள்ள இரண்டு கரும்பு ஆலைகளுக்கு அல்லது வியாபாரிகளுக்கு, இந்த விவசாயிகள் வேறுவழியின்றி குறைந்த வருமானத்திற்கு விற்கின்றனர். மேலும் விவசாயிகள் உத்திரபிரதேசத்தில், குஷிநகர் மாவட்டத்தில் உள்ள வெல்லம் தயாரிப்பவர்களுக்கு விற்கின்றனர். ஆனால், இதில் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதில்லை.

2018 ஆம் ஆண்டு, கோரக்பூர் சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குழு (GEAG) என்ற ஒரு தொண்டு நிறுவனம் மேற்கு சம்பாரன் பகுதியில் ராஜ்வாத்தியா கிராமத்தில் பணிபுரிய தொடங்கியது. சமூகத்தின் விரிதிறன் மேம்படுத்துவதற்கு எல்டபல்புஆர்தவியுடன்; பல்வேறு முயற்சிகளை, ‘சபை எல்லைக்குட்டபட்ட வெள்ள விரிதிறன் திட்டம், கந்தக் ஆற்று பள்ளத்தாக்கு” -ன் கீழ் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கிராம அளவின் அமைப்புகளான, கிராம பேரழிவு மேலாண்மை குழுமம், வயல்வெளிப் பள்ளி, சுய உதவிக் குழுக்கள் உருவாக்குவதும் அடங்கும் . திட்டத்தின் மூலம் பயனடைந்த திருமதி. நிஷா குறித்த வெற்றிக் கதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிஷா தேவி, ஒரு சிறந்த உதாரணம்
நிஷா தேவி, பிஹாரில் மேற்கு சம்பாரன் பகுதியில் ராஜ்வாத்தியா கிராமத்தை சேர்ந்தவர். நிஷாவிற்கு 1.5 ஏக்கர் சாகுபடி நிலம் சொந்தமாக உள்ளது. அதில் 0.4 ஏக்கர் நிலம் கந்தக் ஆற்றிற்கு அருகில் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதியில் உள்ளது. இந்த நிலம் வருடத்தில் ஆறு மாத காலத்திந்கு தண்ணீரில் மூழ்கியிருப்பதால் , குடும்பத்திற்கு தேவையான உணவு உற்பத்தி செய்யும் வாய்ப்பில்லை. இவரது கணவர் டெல்லி, பெங்களுரூ போன்ற பெருநகரங்களுக்கு சென்று வருமானம் ஈட்டி குடும்பத்தை பார்த்துகொள்கிறாார்.

2020 ஆம் ஆண்டு கோவிட் 19 பரவியிருந்த காலத்தில், நிஷா மிகுந்த கஷ்டத்தை சந்தித்தார். ஜூன் மாதத்தில், நிலத்தில் வெள்ளம் தாக்கி பயிர்கள் அனைத்தும் அழிந்தது. இதுனுடன் இவரது கணவரும் கோவிட் 19 பரவல் காரணமாக விட்டிற்கு திரும்பிவிட்டார். இது அவர்களை மிக மோசமான நிலைக்கு தள்ளியது.

நிஷா தேவி, எப்ஜிடி கூட்டத்தின்போது, கியாக் குழு உறுப்பினர்களை சந்தித்தார்.அங்கு கணிசமான, சுலபமான, வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் வேளாண்மையை மேம்படுத்தும் விரிதிறன் தொழில்நுட்பங்களை அரிந்துகொண்டார். சாக்கு பை வேளாண்மை, மூங்கில் வடிவத்தை பயன்படுத்துதல், மேடு மற்றும் வரப்பு வேளாண்மை, உயர்த்தப்பட்ட படுக்கை வேளாண்மை மற்றும் உயர்த்தப்பட்ட நாற்றங்கால் ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் விவசாய வயல்வெளிப் பள்ளியில் கலந்துகொண்டார்.அதில் தொழில்நுட்பங்களின் தாக்கத்தை கண்டார், மேலும் நீண்ட கால ஆரோக்கியம், மட்கா உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்களையும் தொிந்துகொண்டார். இவர் மேலும் மட்கா உரம் மற்றும் மட்கா பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் செய்முறையை கற்றுக்கொண்டார். விவசாய வயல் வெளிப்பள்ளியில், கியாக் குழுவின் மூலம் கற்ற பல்வேறு தொழில்நுட்பங்களை தனது நிலத்தில் செய்தார். அவருடைய பண்ணை செயல்பாடுகளை திட்டமிடுவதற்கு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் வேளாண் அறிவுரைகள் வாட்ஸ் ஆப் தகவல், குறுஞ்செய்திகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் , பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தகவல் பலகை மூலம் பெறும் தகவல்களை பயன்படுத்துகிறார்.
செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு, கியாக் திட்டக் குழுவிடமிருந்து சிப்பி காளான் சாகுபடி குறித்து தொிந்துகொண்டார். பின்னர் ரூ.1250 செலவில் 18 பைகள் கொண்ட மூலக்கூறுகளை தயாரித்தார். 40 நாட்களுக்குப் பிறகு, ரூ.840 செலவில் 7 கிலோ காளான் சாகுபடி செய்தார். மெதுவாக ஒவ்வொரு மூன்று முதல் நான்கு நாட்களில் காளான்கள் வெளிவர தொடங்கி, டிசம்பர் வரை, மொத்தம் 45 கிலோ காளான் உற்பத்தி செய்தார். அவருடைய குடும்பத்திற்கு 15 கிலோ உட்கொண்டதன் மூலம், குடும்ப ஊட்டச்சத்து கூடியது. மீதமுள்ள 30 கிலோ காளானை, ஒரு கிலோ ரூ. 150 வீதத்தில் விற்றதால் ரூ.4500 அதிக வருமானம் கிடைத்தது. இதனால் மூன்று மாத காலங்களில், நிஷா சில வருமானத்தை ஈட்ட முடிந்தது.
மேலும் நிஷா விவசாய வயல் வெளிப் பள்ளியில் கற்ற புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் அறிவுரைகளை பயன்படுத்தி காய்கறி வேளாண்மையையும் செய்ய தொடங்கினார். இவர் 0.30 ஏக்கர் நிலத்தில் வெந்தய விதைகளை, பூண்டு விதைக்கப்பட்ட இரண்டு வரிசைக்கு மத்தியில் விதத்தார். மேலும் நிலத்தின் வரப்புகளில் முள்ளங்கியை சாகுபடி செய்தார். இதில் 7.5 குவிண்டால் பூண்டு,3.8 குவிண்டால் வெந்தயம் மற்றும் 60 கிலோ முள்ளங்கி கிடைத்தது. முடிவாக, அவர் இந்த மூன்று பயிர்களிலிருந்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினார். மட்கா காத் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தியதால், மிக குறைவான இடுபொருள் ரூ.1980 மட்டுமே செலவாகியது.
அவர் மேலும் அதிக வருமானம் பெறுவதற்கு ஊடுபயிர் சாகுபடி முறையை பின்பற்றினார். ஊடுபயிராக பூண்டு பயிரை, வெண்டை, நுரை பீர்க்கங்காய் மற்றும் மக்காச்சோளம் பயிர்களோடு. இதன் மூலம், ரூ.12600 கூடுதல் தொகை பெற்றதை உணர்ந்தார். தொடர்ச்சியாக , 1.1 குவிண்டால் நுரை பீர்க்கங்காயும், 1.5குவிண்டால் வெண்டையையும் சந்தையில் விற்பனை செய்ததனால் ரூ.7800 ஈட்டினார்.
இந்த வெற்றியை பார்த்து என் கணவர் பண்ணை செயல்பாடுகளில் எனக்கு உதவியாக இருக்க தொடங்கினார். இதுவே ஒரு ஏக்கர் உவர் நிலத்தில் டசம்பர் மாதத்தில் சாகுபடி செய்வதற்கு என்னை ஊக்குவித்தது. மண் வளத்தை மீண்டும் கொண்டு வர நாங்கள் பல்வேறு பண்ணை அடிப்படையிலான தொழில்நுட்பங்களை பின்பற்றினோம். இதில் சுயமாக தயாரித்த மக்குஉரம், வரிசை விதைப்பு முறை, உள்ளூர் மரத்தின் இலைகளை பயன்படுத்தி மண் ஈரப்பதத்தை தக்கவைப்பது ஆகியவை உள்ளடக்கியுள்ளது என்று நிஷா கூறினார்.

ஒரு இஞ்ச் ஆழத்திற்கு 12 இஞ்ச் விட்டத்தில் குழி எடுத்து, அதில் வீட்டில் தயாரிக்கும் மக்கு உரத்தை நிரப்பினார். மேலும் நுரை பீர்க்கங்காய் மற்றும் சுரைக்காய் வரிசை விதைப்பு முறையில் தர்பூசனியுடன் ஊடுபயிராக விதைத்தார் ( நிலத்தின் ஒரு பக்கத்தில் 2 மீட்டர் தூரம் மேம்படுத்தப்பட்டது).
ஈரப்பதம் மேம்படுத்துவதற்கு தர்பூசனி கிளைகளை வெட்டி ½ இஞ்ச் அடுக்கு வயல் முழுவதும் பரப்பி விடுவார்.இது தண்ணீர் பாசனத்திற்கான செலவு குறைந்தது. மூடாக்கு போட்டதால் களைகள் முளைப்பது தடுக்கப்பட்டு, அதனால் களையெடுக்கும் கூலியும் சேமித்தார். இந்த தொழில்நுட்பம் பயிர்கள் மண் மற்றும் மணலில் படாமல் வளர்வதற்கு உதவுகிறது. மேலும் பயிர் அழுகல் வருவது குறைகிறது.
காலநிலை சார்ந்த தகவல்களை பயன்படுத்தி பாசன செலவை குறைத்து, மழையினால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்தார். இதன் விளைவாக, ஊரடங்கு உத்தரவு விதித்த சமயத்தில், உவர் நிலத்தில் உற்பத்தி செய்த தர்பூசனி, சுரைக்காய் மற்றும் நுரை பீர்க்கங்காய் விற்றதினால் மொத்தம் ரூ.28500 ஈட்டினார் .

இன்று, நிஷா தேவி ராஜ்வைத்தியா கிராமத்தில் முதுமை பயிற்சியாளராக உருவெடுத்தார். காளான் உற்பத்தி முறை மிக சுலபமாக இருப்பதை கண்டு , ஆர்வத்துடனும் பெருமையுடனும் மாற்று வருமான ஆதாரமாக காளான் வளர்ப்பு முறையை ஊக்குவிக்கிறார். ‘காளான் வளர்ப்பு விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தும் திறன் கொண்டது. கல்வியறிவு உடைய மற்றும் கல்வியறிவில்லாத கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது என்று நிஷா கூறினார். மேலும் அவர், குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு சிறந்த வரமாகும் என்கிறார்.இது பெண்களுக்கு, அவர்களின் வீட்டு பொறுப்புகளை தியாகம் செய்யாமல், மற்ற நேரத்தில் இந்த மாற்றுத் தொழிலில் ஈடுபடலாம் என்றும் கூறுகிறார்”

முன்கூட்டியே காலநிலை முன்னறிவிப்பு தகவல்கள் மற்றும் வேளாண்மை அறிவுரைகள் பருவப் பயிர்கள் சாகுபடி செய்வதற்குமுன் முடிவு எடுப்பதற்கும், திட்டமிடுவதற்கும் உதவியது. நிஷா தேவி தன்னுடைய உவர் நிலத்தில் விரிதிறன் தொழில்நுட்பங்களை டிஜிட்டல் தொழில்நட்பம் மற்றும் இயற்கை ஆதாரங்களை பின்பற்றி சாகுபடி செய்து வெற்றியும் பெற்றார். மேலும் இதர விவசாயிகளுக்கு ஒரு முன்உதாரணமாக இருக்கிறார்.

ஆர்ச்சனா ஸ்ரீவஸ்தாவா மற்றும் பிஜை பிரகாஷ்


Archana Srivastava
Project Coordinator
E-mail: archanasri844@gmail.com

Bijay Prakash
Environmental Planner
E-mail: bijay.plan@gmail.com
Gorakhpur Environmental Action Group
224, Purdilpur, M G College Road
Gorakhpur - 273 001, Uttar Pradesh, INDIA
www.geagindia.org

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2022, வால்யூம் 24, இதழ் 3

அண்மைய இடுகைகள்