நகர்ப்புற பால்பண்ணைகளை மேலும் நிலையானதாக மாற்றுதல்


நிலக்காி, எண்ணெய் மற்றும் வாயுக்கள் போன்ற புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களில் மனிதகுலம் சார்ந்திருப்பது உலகம் முழுவதும் அதிகாித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான மாட்டுச் சாணம் போன்றவற்றுக்கு மாற வேண்டிய நேரம் இது.


இந்தியாவின் கோவில்களின் நகரமான ஜம்மு, பல சிறிய நகர்ப்புற பால்பண்ணைகளால் நிரம்பி வழிகிறது. புதிய பால் கொள்முதல் செய்வதில் உள்ளூர் சமூகங்களுக்கு இந்தப் பண்ணைகள் மிகவும் முக்கியமானவை என்றாலும், இந்தப் பால்பண்ணைகளும் கவலைக்குரியதாகி வருகிறது. கால்நடைகளின் சாணம் காலனியின் வடிகால் அமைப்பில் சுத்தபடுத்தப்பட்டு, அப்பகுதியில் ஏற்கனவே நிரம்பிய வடிகால்களில், மேலும் அதிக வடிகால்களில் நிரப்பப்படுகிறது. தற்காலிகமாக கூட சாணம் சேமிக்க இடம் இல்லாததால் இது தவிர்க்க முடியாததாகிறது. இவ்வாறு வீணாகும் கால்நடைகளின் சாணம் மற்றும் கோமியத்தை நகர்ப்புற பால்பண்ணைகளில் இருந்து பணம் செலுத்தி கொள்முதல் செய்து பல்வேறு பொருட்களாக மறுசுழற்சி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

கால்நடைகளின் சாணத்தை பல வழிகளில் மறுசுழற்சி செய்யலாம். இது சாண எரிவாயுவுக்காகச் செயலாக்கப்பட்டு, பின்னர் அழுத்தம் கொண்ட உயிர்வாயு (சி.பி.ஜி)/ அழுத்தம் கொண்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) ஆக மாற்றப்படலாம். பால்/பால் பதப்படுத்தும் அலகுகள் தங்கள் கொதிகலன் ஆலைகள், உணவகங்கள், மின்சாரத்திற்கான ஜெனரேட்டர்களை இயக்குதல், தெருக்களில் மின்விளக்குகளுக்கு மற்றும் இதர தேவையின் அடிப்படையில் தொழில்சாலைகளில் இயக்க பயன்படுத்தலாம். எஞ்சியிருக்கும் கால்நடைகளின் சாணம் மற்றும் உயிர்வாயு ஆலையில் இருந்து கிடைக்கும் அதிக அளவு திரவ கழிவுகள், மண்புழு உரம், சுடுகாடு கட்டைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகள், வண்ணப்பூச்சுகள், சிலைகள்/மூர்த்திகள், பூந்தொட்டிகள், உயிர் உரம், மாட்டு சாணம் பிண்ணாக்கு போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தலாம். இவற்றை அதிக அளவில் விரிவாக்கும் அடிப்படையில் தொழில் ரீதியாக சாத்தியமான மற்றும் நிலையான உத்தேச வணிகத்தை செய்யலாம். . மேலும், சேகாிக்கப்பட்ட கோமியத்தை காய்ச்சி வடிகட்டி உயிர் பூச்சிக்கொல்லிகள், விரட்டிகள், மருந்துகளாக பயன்படுத்தலாம்.

மாட்டு சாணத்தை மறுசுழற்சி செய்வது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பால் பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகாிக்கிறது. பசுமை வேலைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம். நிலையான விவசாயம் மற்றும் கால்நடை மேம்பாடு, சுத்தமான மற்றும் பசுமையான நகரங்களை மேம்படுத்துதல். ஐ. எல். ஓ ஆய்வின்படி சாணத்தின் உற்பத்தி பயன்பாடு இந்தியாவின் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மில்லியன் பசுமை மற்றும் ஒழுக்கமான வேலைகளை ஆதாிக்கும். ஒரு கிலோ பசுவின் சாணத்தை அதிகபட்சமாக பயன்படுத்தினால் அதன் மதிப்பு பத்து மடங்கு அதிகாிக்கும் என்றும் ஆய்வு தொிவிக்கிறது.

கால்நடைகளின் சாணத்தை சுத்திகாிப்பதன் மூலம் உருவாக்கக்கூடிய சில பொருட்கள் பின்வருமாறு.

பயோ கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ் (பயோ-சிஎன்ஜி) அல்லது கம்ப்ரஸ்டு பயோ கேஸ் (சிபிஜி) என்பது வீணாகும் மாட்டுச் சாணத்திலிருந்து பெறப்படும் சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலமாகும். பயோ சிஎன்ஜியில் சுமார் 92-98 சதவீதம் மீத்தேன் மற்றும் 2-8 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு மட்டுமே உள்ளது. பயோ சிஎன்ஜியின் கலோரிபிக் மதிப்பு ஒரு கிலோவுக்கு சுமார் 52,000 கிலோஜூல்கள் (கே.ஜே) ஆகும். இது உயிர்வாயுவை விட 167 சதவீதம் அதிகம்.

தற்போது, இந்தியாவில் பதினேழு பயோ-சிஎன்ஜி ஆலைகள் செயல்படுகின்றன. அவை ஒரு நாளைக்கு 46,178 கிலோகிராம் திறன் கொண்டவை. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூரில் அமைந்துள்ள பயோ-சிஎன்ஜி ஆலை, 40 டன் ஈரக் கழிவுகளுக்கு 1.6 டன் பயோ சிஎன்ஜி உற்பத்தித் திறன் கொண்டது.

பிராகிருதிக்/வேதிக் பெயிண்ட்: கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் வருமானத்திற்கான நிலையான ஆதாரம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட “காதி பிரகிருதிக்” வண்ணப்பூச்சியின் புதுமையான தொழில்நுட்பத்துடன் ஆராயப்படுகிறது. மாட்டுச் சாணத்திலிருந்து உருவாக்கப்பட்ட பிரகிருதிக்/வேதிக் பெயிண்ட் பிளாஸ்டிக் அல்லது செயற்கைப் பொருட்கள் இல்லாதது மற்றும் ஈயம், பாதரசம், குரோமியம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இல்லாததால் “ஆரோக்கியமான தயாரிப்பு” ஆகும். இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணப்பூச்சுகளில் இருக்கும் கன உலோகங்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைக்க உதவும்.

மாட்டு சாணம் பெயிண்ட், விவசாயிகளுக்கு ஒரு சாத்தியமான வருமானத்தை அதிகாிக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத்தன்மையற்ற, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய மணமற்ற தயாரிப்பு ஒரு விவசாயி ஆண்டுக்கு ஒரு மாட்டிலிருந்து ரூ. 30000 கூடுதலாக சம்பாதிக்க முடியும். கே.வி.ஐ.சி இன் கூற்றுப்படி, அடுத்த சில ஆண்டுகளில் இந்த வண்ணப்பூச்சுகள் ரூ. 6000 கோடிக்கு விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் பச்சை மாட்டு சாணத்தை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 1000 கோடியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இது இப்போது பெருமளவில் வீணாகிறது.

500 லிட்டர் பிரகிருதிக் பெயிண்ட் தயாரிக்க சுமார் 150-170 கிலோ சாணம் தேவைப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆலையை அமைக்க, 20 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது. இது எம்.எஸ்.எம்.இ துறைக்கான அரசின் திட்டத்தால் நிதியளிக்கப்படும். ஒவ்வொரு ஆலையும் 11 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை அளிக்கும். எனவே, காதி பிரகிருதிக் பெயிண்ட் ஏழைகளின் நலனுக்காக நிலையான வளர்ச்சியை உருவாக்கும் மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது.

மண்புழு உரம்
எளிமையான தொழில்நுட்பத்தின் காரணமாக, பல விவசாயிகள் மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் இது மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மண் உற்பத்தித்திறன் சாகுபடி செலவை குறைக்கிறது. இதன் விளைவாக, அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் மண்புழு உரத்தின் தேவை படிப்படியாக அதிகாித்து வருகிறது. ஜம்முவில் பல முற்போக்கான விவசாயிகள், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் என்றாலும் மரபுவழியில் இருந்து இயற்கை/இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பும் ஒரு பொிய நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பொிய அளவில் மண்புழு உரம் உற்பத்தி செய்வதில்லை.

மாட்டு சாணக் கட்டைகள் மாட்டுச் சாணத்தை மறுசுழற்சி செய்வதற்கான மற்றொரு வழி. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து கோடி மரங்களை வெட்டுவதன் மூலம் கிடைக்கும் மரங்கள் தகனம் செய்வதற்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இன்றுவரை, மரத்தின் பயன்பாட்டை மாட்டு சாணம் போன்ற பொருட்களுடன் திறம்பட மாற்றுவதற்கான பொிய அளவிலான அரசாங்கத் திட்டம் எதுவும் இல்லை. ஜம்முவில், மின்சார தகனம் எதுவும் இயங்கவில்லை. மேலும், அனைத்து சுடுகாடுகளும் மரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. எனவே, காடுகளுக்கு பதிலாக மாட்டு சாணம் மரக்கட்டைகளை மாற்ற ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.

முடிவுரை

சாணம் மற்றும் கோமியம் சார்ந்த தொழில் முனைவோர் முயற்சியை ஒரு மாதிரி பயிற்சி மையமாக உருவாக்கலாம். இதில் இந்தியா முழுவதிலுமிருந்து ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள்) வந்து சாணம் மற்றும் கோமியம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கற்றுக்கொள்வார்கள். கூடுதலாக, இந்த பயிற்சி மையம் மேலும்  சாணம் மற்றும் கோமியம் சார்ந்த தயாரிப்புகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது .

பசுவின் சாணம் பற்றிய உண்மைகள்
ஒரு மதிப்பீட்டின்படி, ஒரு மாடு ஆண்டுக்கு 3500 கிலோ மாட்டுச் சாணம், 2000 லிட்டர் மாட்டு கோமியம், 4500 கன அடி உயிர் வாயு, 100 டன் காிம உரம் ஆகியவற்றை வழங்குகிறது. காிம உரத்தின் உற்பத்தியும் பயிரில் 20 முதல் 30 சதவீதம் அதிகாிக்கிறது.

ஒரு கிலோகிராம் மாட்டு எரு 24-26 டிகிரி செல்சியஸ் சுற்றுப்புற வெப்பநிலையில் பராமாிக்கப்படும். 55-60 நாட்கள் ஹைட்ராலிக் தக்கவைப்பு நேரத்துடன் (ஹெச். ஆர். டி.) சம அளவு தண்ணீரில் கலந்து 35-40 லிட்டர் உயிர்வாயுவை உருவாக்க முடியும். (காலியா மற்றும் சிங் 2004)

ஒரு நாளைக்கு 3-5 கால்நடைகளிலிருந்து உருவாக்கப்படும் மாட்டுச் சாணம் ஒரு எளிய 8-10 கன மீட்டர் உயிர்வாயு ஆலையை இயக்க முடியும். இது ஒரு நாளைக்கு 1.5-2 கன மீட்டர் உயிர்வாயுவை உற்பத்தி செய்ய முடியும். இது 6-8 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு போதுமானது, 2 முதல் 3 முறை உணவை சமைக்க முடியும். இரண்டு விளக்குகள் 3 மணி நேரத்திற்கு ஏற்றலாம் அல்லது நாள் முழுவதும் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இயக்கலாம் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 3 கிலோ வாட் மோட்டர் -ஜெனரேட்டரை இயக்கலாம் (வெர்னர் மற்றும் பலர் (1989)

ப்ரனவ் குமார் மற்றும் மனின்தர் சிங்


Pranav Kumar and Maninder Singh
Pranav Kumar
Senior Assistant Professor
Email : vet_pranav@rediffmail.com

Maninder Singh
MVSc Scholar
Division of Veterinary & Animal Husbandry
Extension Education,
Sher-e-Kashmir University of Agricultural Sciences &
Technology of Jammu (SKUAST-Jammu),
R.S. Pura, Jammu (UT of J&K)
India - 181102

மூலம்: லீசா இந்தியா, டிசம்பா; 2022, வால்யூம் 24, இதழ் 4

 

அண்மைய இடுகைகள்
இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டு,...