இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்


நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டு, நிலையான விவசாய மாதிரியாக இயற்கை விவசாயத்தின் திறனைப் புரிந்து கொள்ள ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த கள ஆய்வில், இயற்கை விவசாய முறைகள் விவசாயிகளின் நிலைத்ததன்மையின் சுற்றுச்சூழல்/உயிர்ச்சூழல் பாிமாணங்களுக்கு அதிக பங்களிப்பை வழங்குகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது . அதேநேரத்தில் பொருளாதார பாிமாணத்தில் தௌிவான வர்த்தக பாிமாற்றம் உள்ளது என்பதையும்  இந்த மதிப்பீடு வெளிப்படுத்தியது. இயற்கை வேளாண்மைக்கான நிறுவன, நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்துதல் அம்சங்களில் செயலாக்கத்திற்கான  தலையீடுகளைப் பின்பற்றும் பல்முனை அணுகுமுறையை, உள்ளடக்கிய விவசாய வளர்ச்சிக்கான ஒரு புதிய முன்னுதாரணமாக ஊக்குவிக்க வேண்டும் என்று ஆய்வு பாிந்துரைக்கிறது.

நிலையான வேளாண்மை என்ற வார்த்தையானது பல்வேறு பங்குதாரர்களால் பலதரப்பட்ட கருத்துக்களில் இருந்து வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விவசாய முறைகளின் (லீசா, வேளாண் உயிர்ச்சூழல், நிலைத்த வேளாண்மை, இயற்கை விவசாயம் போன்றவை) எதிர்ப்புத்தன்மையைக் கட்டியெழுப்பும் உரிமைகோரல்களுடன் நிலையான விவசாயமாக பல்வேறு வகையான அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. விவசாயம் மனிதனால் இயக்கப்படுகிறது.  விவசாயத்தில்  விரிதிறன் என்ற கருத்து,  விவசாயியை,  உற்பத்தி முறைகளின் நிலைத்தத்தன்மை குறித்த  கலந்துரையாடல்களின் மையத்தில் வைக்கப்படுகிறது.  எனவே, விவசாயிகள் நகர்ப்புற, சமூக-சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைப்புகளின் ஒரு பகுதியாக விவசாயிகளின் வெளிச்சத்தின் மூலம்,  விவசாயத்தின் விரிதிறன் ஆராயப்பட்டது.
ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நிலவும் இயற்கை வேளாண்மை முறையானது, இது போன்ற ஒரு விவசாய அமைப்பாகும். இது நிலையான வேளாண்மையின் மாதிரியாகப் பிரபலமடைந்து வருகிறது.  இந்த விவசாய முறைகள் உயிர்ச்சூழல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.  ஆனால் இயற்கையில் பாிந்துரைக்கப்படவில்லை.  மேலும், அவை மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒருங்கிணைந்த உறவை மையமாகக் கொண்டவை மற்றும் வலுவான சமூக இயக்கத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
இயற்கை வேளாண்மை முறையின் நோக்கங்கள். அவை (1) வெளிப்புற செயற்கை உள்ளீடுகள் மற்றும் விவசாயக் கடனைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருதல், (2) மண்ணின் நிலையை மேம்படுத்துதல், (3) உள்ளூர் வளங்களிலிருந்து மூல உள்ளீடுகள், (4) செயல்பாட்டு பல்வகைமை பாதுகாப்பை வலியுறுத்துதல், (5) நீர்ப்பாசனத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்தல் மற்றும் (6) மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல்.  அதன்படி மையத்தில், இயற்கை விவசாய செயல்பாடுகளான (1) பசுவின் சாணம் மற்றும் பசுவின் கோமியம் (பீஜாமிர்த்) கலவையைப் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல் (2) உள்நாட்டு கால்நடைகளின் நீர், மாட்டு எரு மற்றும் கோமியம் ஆகியவற்றின் இடத்திலேயே இந்தக் கலவையை  பயன்படுத்துதல், சுத்திகாிக்கப்படாத கரும்புச் சர்க்கரை, பருப்பு மாவு மற்றும் மாசுபடாத/கன்னி மண், உள்ளூர் மண் நுண்ணுயிரிகளை அறிமுகப்படுத்த (ஜீவாமிர்தா) (3) அச்சாதனர் நேரடி, மண் மற்றும் வைக்கோல் தழைக்கூளம் – மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மற்றும் வாபசர் மண்ணின் காற்றோட்டத்தை மேம்படுத்துதல் – மண்ணின் மட்கு உருவாக்கம். நிலங்கள் “ஐந்து அடுக்கு பல பயிர்” மாதிரியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கை விவசாயத்தில் உள்ளீடுகளில் முதன்மையான மூலப்பொருளான நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தைப் பயன்படுத்துவது இந்த நடைமுறையின் தனித்துவமானது.  எனவே, இயற்கை விவசாயத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயல்முறைகள் சமபங்கு, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒருங்கிணைந்த உறவு மற்றும் சந்தைகளை மையப்படுத்துதல் ஆகியவை வேளாண் சூழலியல் கோட்பாடுகளுடன் இணைந்துள்ளன.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டுள்ளது மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளின் 169 இலக்குகளை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இயக்கம் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள அனைத்து வகை விவசாயிகளையும் உள்ளடக்கியது.  இந்தியாவில் இயற்கை விவசாய இயக்கம், லா வியா கேம்பேசினா, வேளாண்மை சார்ந்த உலகளாவிய விவசாயிகள் இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த அமைப்பு தேசிய அரசாங்கத்திடமிருந்து மட்டுமல்ல, சர்வதேச அபிவிருத்தி முகவர்களிடமிருந்தும் கொள்கை கவனத்தை ஈர்த்தது.  2020-21 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய பிரகிருதிக் கிரிஷி பதாதி (பீ.பி.கே.பி), பாரம்பரிய உள்நாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக பரம்பரகத் கிரிஷி விசாஸ் யோஜனாவின் (பி.கே.வி.ஒய்) துணைத் திட்டமாக, இயற்கை விவசாயம் மற்றும் வேளாண்மையின் கொள்கைளை வலியுறுத்துகிறது.  மேலும், 2019-20 (“அடிப்படைகளுக்குத் திரும்புதல்”) மற்றும் 2020-21 யூனியன் வரவு செலவுத் திட்டங்களில் இந்த நடைமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், என்.ஐ.டி.ஐ ஆயோக், இந்திய அரசின் சிந்தனைக் குழுவானது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு வழிமுறையாக இயற்கை விவசாயத்தைப் பட்டியலிட்டுள்ளது.  சமீபத்திய என்.ஐ.டி.ஐ ஆயோக் பணிக் கட்டுரை இயற்கை விவசாயத்தை (வேளாண் சூழலியல்) விவசாய வளர்ச்சிக்கான ஒரு புதிய முன்னுதாரணமாகப் போற்றுகிறது.  கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இயற்கை வேளாண்மைக்கான மாநில முன்முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதி உதவியைப் பெற்றுள்ளன. ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இயற்கை வேளாண்மைக்கு குறிப்பிட்ட ஒதுக்கீடுகளை கொண்டுள்ளன.  அதேசமயம் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேகாலயா அரசுகள் அதற்கான திட்டங்களை வகுத்துள்ளன.
இயற்கை வேளாண்மை முறைகள் மீதான ஆணையிடப்பட்ட ஆய்வுகள், பணம் செலுத்தும் செலவுகளில் கணிசமான சேமிப்புகள், சந்தைகளின் பின்னடைவில் சாிவு மற்றும் பண்ணையின் செயல்திறனில் நீண்டகால முன்னேற்றம் ஆகியவற்றை காட்டுகின்றன. இயற்கை விவசாயத்தின் சாத்தியமான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம், குறிப்பிட்ட வழக்கு ஆய்வுகளைப் பயன்படுத்தி 17 நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளின் கீழ் குறிப்பிட்ட இலக்குகளுக்கு வரைபடமாக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், இயற்கை விவசாயம், இயற்கையான உள்ளீடுகளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் உழைப்பின் அளவுக்கான விமர்சனத்தை ஈர்த்துள்ளது.  இதில் பெரும்பகுதி குடும்ப உழைப்பு, உற்பத்திச் செலவில் கணக்கிடப்பட்டால், செலவினங்களைக் குறைப்பதற்கான உரிமைகோரல்களை சவால் செய்ய வேண்டியிருக்கும். எனவே, இயற்கை விவசாயத்தின் சுற்றுச்சூழல் ஆதாயங்கள் பொருளாதார நம்பகத்தன்மையின் மிகப்பொிய வர்த்தகத்தில் உணரப்பட்டதாக வாதிடப்படுகிறது.
இந்தப் பின்னணியில், ஒரு விரிவான மதிப்பீட்டுக் கட்டமைப்பை பயன்படுத்தி, நிலைத்ததன்மையின் பல்வேறு அளவுருக்கள் மீது இயற்கை விவசாய முறைகளின் செயல்திறனை அளவிடுவதற்கான கள ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் (முன்பு பிரிக்கப்படாத அனந்தபூர் மாவட்டத்தின் ஒரு பகுதி) ரோடம் தொகுதி (மண்டலம்)  ரச்சுரு கிராமத்தில் 15 விவசாயிகளிடையே மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
பின்னணி
இந்திய தீபகற்பத்தின் புவியியல் நிலை அனந்தபூர் பகுதியை (ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மற்றும் அனந்தபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியது) நாட்டில் மழை நிழல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும். ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் அதன் மொத்த புவியியல் பரப்பளவில் 34.7 சதவீதம் மட்டுமே நிகர விதைப்பு நிலப்பரப்பில் 604 மிமீ சராசாி ஆண்டு மழையைப் பதிவு செய்கிறது.  மொத்தம் 79 சதவீதம் நிலம் சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் உள்ளது மற்றும் மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பில் 22.7 சதவீதம் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.  தென்மேற்கு பருவமழையின் அதிக மாறுபாடு, மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான அபாயங்களின் அறிகுறியாகும்.
ரச்சுரு கிராமத்தில் உள்ள விவசாயிகள் பலர், திம்பக்டு கூட்டுறவால் ஊக்குவிக்கப்பட்ட தரணி விவசாயம் மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். தரணி கூட்டுறவு என்பது அனந்தபூர் பகுதியில் உள்ள எட்டு தொகுதிகளில் (மண்டலங்கள்) 2000 க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் உற்பத்தியாளருக்கு சொந்தமான வணிக நிறுவனமாகும்.  விவசாயிகளுக்கு பயிர் திட்டமிடல் மற்றும் நிலையான விவசாய முறைகளில் பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், உறுப்பினர்களின் விளைபொருட்களை கொள்முதல் செய்தல், செயலாக்கம் செய்தல், மதிப்பு கூட்டுதல், பேக்கேஜிங் செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கூட்டுறவு நிறுவனம் மேற்கொள்கிறது. கிராமத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர்களில் சிறுதானியங்கள், நிலக்கடலை, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும், பட்டுப்புழு வளர்ப்பும் ஒரு முக்கிய தொழிலாக இருந்தது. இதற்காக விவசாயிகள் மல்பொியையும் பயிரிடுகின்றனர்.
நிலைத்தத்தன்மை மதிப்பீட்டு கட்டமைப்பு
நிலைத்ததன்மை மதிப்பீட்டு கட்டமைப்பானது நிலையான தன்மையின் முக்கிய களங்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது – பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய கருத்து (அட்டவணை 1)ஆகியவை.  குறிகாட்டிகளுக்கு சமமான மதிப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் நிலைத்ததன்மையின் பாிமாணங்களும் கட்டமைப்பில் சமமாக மதிப்பு போடப்படுகின்றன. குறிகாட்டிகள் ஒன்று, மூன்று மற்றும் ஐந்தின் மதிப்பீடுகளை குறிக்கும்.  அங்கு ஐந்து உயர்ந்த (சிறந்த தரம்) மற்றும் ஒன்று குறிகாட்டியின் குறைந்த (குறைந்த தரம் ) மதிப்பைக் குறிக்கிறது.
நிலைத்தத்தன்மை கட்டமைப்பின் பாிமாணங்களின் செயல்திறன் அந்த பாிமாணத்தில் தனிப்பட்ட குறிகாட்டிகளின் ஒட்டுமொத்த மதிப்பாகும்.  இவ்வாறு, தனிப்பட்ட பாிமாணங்கள் 6 முதல் 30 வரையிலான வரம்பில் மதிப்புகளை கொடுக்கும்.  மதிப்பு 30க்கு நெருக்கமாக இருந்தால், நிலைத்தத்தன்மை கட்டமைப்பில் பாிமாணத்தின் செயல்திறன் அதிகமாகும்.
முடிவுகள்
சுற்றுச்சூழல் பாிமாணம் கட்டமைப்பில் சிறப்பாக செயல்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக, பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய கருத்து ஆகியவை பண்ணைகள் முழுவதும் காணப்பட்டன. சுற்றுச்சூழலின் பாிமாணம் 22 முதல் 24 வரையிலான வரம்பில் மதிப்பைப் பெற்றது.  சுற்றுச்சூழல் பாிமாணத்தில் சிறப்பாக செயல்பட்ட குறிகாட்டிகள் மண், பல்லுயிர் மற்றும் இயற்கை உள்ளீடுகளின் பயன்பாடு ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது .  இருப்பினும், நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் இருப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்த குறிகாட்டிகள் மதிப்பீட்டு கட்டமைப்பில் மிகவும் மோசமாக செயல்படுவதைக் காண முடிந்தது.
பொருளாதார பாிமாணங்கள் 14-20 என்ற வரம்பில் இருந்தன.  கடனுக்கான அணுகல் என்பது பொருளாதார பாிமாணத்தின் ஒரே குறிகாட்டியாகும்.  இது உயர்மட்ட செயல்திறனைக் காட்டியது.  தனிபட்ட பண்ணைகள் மற்றும் பண்ணை குடும்பங்களின் பொருளாதார நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும் மற்ற குறிகாட்டிகள் கட்டமைப்பில் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளன. கடனுக்கான அணுகல் விவசாயிகளின் சமூக மூலதனத்தின் குறிகாட்டியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.  மதிப்பீட்டின் மூலம் பொருளாதார பாிமாணத்தில் “கடன் பெறுவதற்கான அணுகல்” குறிகாட்டியில் அதிக மதிப்பெண் பெற்ற விவசாயிகளே சமூக பாிமாணத்தில் “கூட்டுக் குழுவில் உறுப்பினர்” குறிகாட்டியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என்பதும் காணப்பட்டது.
சமூகப் பாிமாணத்தில் உள்ள மற்ற குறிகாட்டிகளான, “பண்ணை நிலை முடிவெடுப்பதில் பாலின அம்சங்கள்”, “பாலின ஊதிய வேறுபாடுகள்” மற்றும் “நிலத்தின் பாலின உரிமை” போன்றவை கட்டமைப்பில் மோசமாக மதிப்பெண் பெற்றுள்ளன.  “முடிவெடுப்பதில்” குறிகாட்டி மோசமாக செயல்படுகிறது.  ஆளுமை குறிகாட்டிகள், அதாவது – “அரசு திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் அணுகல்” மற்றும் “நீட்டிப்பு பணியாளர் ஈடுபாட்டின் தீவரம்” ஆகியவை நடுத்தர செயல்திறனை காட்டுகின்றன (மதிப்பெண் 3).  கூடுதலாக, மீதமுள்ள குறிகாட்டிகள் இந்த பாிமாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இது காலநிலை மாற்றம் மற்றும் விவசாயத்தில் அதன் தாக்கம் பற்றிய விவசாயிகளின் உணர்வைப் படம்பிடிக்கிறது.
ரச்சுரு கிராமத்தில் விவசாயிகளின் நிலைத்ததன்மையின் சுற்றுச்சூழல்/உயிர்ச்சூழல் பாிமாணங்களுக்கு அதிக பங்களிப்பை வழங்கும் இயற்கை விவசாய முறைகளையே கள மதிப்பீடு வெளிப்படுத்துகிறது.  எவ்வாறாயினும், பொருளாதார பாிமாணத்தில் ஒரு தௌிவான வர்த்தக பாிமாற்றம் பகுப்பாய்விலிருந்து தௌிவாக தொிந்தது. மேலும், கடனுக்கான அணுகல், அரசாங்கத் திட்டங்கள், உரிமைகள் மற்றும் நீட்டிப்பு சேவைகள் போன்ற குறிகாட்டிகளின் நேர்மறையான முடிவுகள் அனைத்தும் கூட்டு உறுப்பினர்களுடன் இணைக்கப்படலாம்.  இப்பகுதியில் உள்ள சிறு விவசாயிகளின் நெகிழ்ச்சித்தன்மையை வளர்ப்பதில் தரணி கூட்டுறவு ஆற்றிய வலுவான பங்களிப்பை இது குறிக்கிறது. சுற்றுச்சூழல் பாிமாணங்களின் செயல்திறன், கூட்டுறவுகளில் உறுப்பினர்களாக இருப்பதன் காரணமாக, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மற்றும் இயற்கை விவசாய முறைகளின் தூண்களான வாபசர் மற்றும் பல பயிர் மாதிரிகள் போன்ற நுட்பங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தும் திறனை உறுப்பினர்கள் பெறுகின்றனர். கூடுதலாக, கிராமத்தில் இயற்கையான உள்ளீடுகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான பரவலாக்கப்பட்ட அலகு உள்ளது.  இயற்கை விவசாய முறைகளில் இருந்து விளைபொருட்களின் மதிப்பு கூட்டல், வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் தரணி கூட்டுறவு பங்கு எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு குறைவாகவே உள்ளது.  எனினும், தோட்டக்கலையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பிராண்டிங் அல்லது பிரீமியம் விலையின் அடிப்படையில் பொருளாதார நன்மைகளை அடைவதில் சவாலை எதிர்கொள்கின்றனர்.  கூட்டுறவு சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதால் சமூகத்திலோ அல்லது குடும்ப மட்டத்திலோ விவசாய உறவுகளில் பாலின மாறுதல் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் பகுப்பாய்விலிருந்து தௌிவாகிறது.
நிலையான விவசாய மாதிரியாக இயற்கை விவசாயத்தின் திறனை புரிந்து கொள்ளும் முயற்சியே இந்த ஆய்வு.  இருப்பினும், சிறிய மாதிரி அளவு, ஆய்வின் முடிவுகள், தற்போதைய விவசாயக் கொள்கை மற்றும் நடைமுறை சூழலில் பொருத்தமாக உள்ளன.  பொது கொள்கை சிந்தனை குழுவான என்.ஐ.டி.ஐ ஆயோக்கின் சமீபத்திய ஆய்வறிக்கையில் வேளாண் சூழலியல்/இயற்கை வேளாண்மை ஒரு புதிய விவசாய முன்னுதாரணமாகப் பாராட்டப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஏற்கனவே பி.பி.கே.பி க்காக பட்ஜெட் ஒதுக்கீடுகளை செய்து வருகிறது.  எவ்வாறாயினும், இயற்கை விவசாயத்தை உள்ளடக்கிய விவசாய வளர்ச்சிக்கான ஒரு புதிய முன்னுதாரணமாக ஊக்குவிக்கும் அளவில், நிறுவன நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்தல் அம்சங்களில் செயல்பாட்டு தலையீடுகளை ஏற்றுக்கொள்ளும்  பலமுறை  அணுகுமுறை  தேவைப்படும்.
அங்கீகாரங்கள்
நிலைத்ததன்மை பாிமாணங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்கள், ஏப்ரல் 2022 ல் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நிலையான விவசாயம் குறித்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழுவால் மேற்கொள்ளப்பட் கள மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.  ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் ரோடம் தொகுதியில் தரணி கூட்டுறவான திம்பக்டு கூட்டுறவிலிருந்து பெறப்பட்ட ஆதரவை ஆசிரியர்கள் மற்றும் விவசாய சமூகம் ஒப்புக்கொண்டனர்.
 
அட்டவணை 1 : நிலைத்ததன்மை மதிப்பீட்டிற்கான அளவீட்டு பணி
அளவீடுகள்கள்/அறிகுறிகள் மதிப்பெண் அளவுகள்
  சுற்றுச்சூழல் 1 3 5
1
பண்ணைக்கான வெளியிடு பொருட்களின் உபயோகம்
இரசாயனம் இரண்டும் இயற்கை
2 மண்புழுக்களின் இருப்பு இல்லை இருந்தது
3 தேனீக்களின் இருப்பு இல்லை இருந்தது
4 மண் வகை மணல்சாரி களிமண்
 செந்நிற களிமன்/செம்மன்
5 நிலத்தடி நீர் மட்டத்தில் மாற்றம் –  கடந்த பத்தாண்டில்  ஆழமாக அதேபோல் மேற்பரப்பிற்கு அருகாமையில்
6 மேற்பரப்பு நீர் கிடைப்பதில் மாற்றம் முன்பை விட குறைவான மாதங்கள் அதேபோல் முன்பை விட அதிக மாதங்கள்
  பொருளாதாரம் 1 3 5
1
முக்கிய பயிர்களின் சராசாி மகசூல்
கொடுக்கக்கூடிய மகசூலுக்கும் குறைவாக அதேபோல் கொடுக்கக்கூடிய மகசூலுக்கும் அதிகமாக
2 குடும்ப வருமானத்தில் வேளாண் வருமானத்தின் பங்கு 25 சதவீதத்திற்கும் குறைவு 25-50 சதவீதம் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகம்
3 வருடத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு மூன்று மூன்றுக்கும் மேல்
4 கடனுக்கான ஆதாரம் ஆதாரம் இல்லை முறையற்ற வழியில் முறையான வழியில்
5 மாற்று வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை பயிரை அடிப்படையாக கொண்ட வேளாண்மை யோடு இரண்டு பயிரை அடிப்படையாக கொண்ட வேளாண்மையோடு இரண்டுக்கும் மேற்பட்ட
6
நிலப்பரப்பின் அளவு
2.5 ஏக்கருக்கும் குறைவாக 2.6 – 5 ஏக்கருக்கும் குறைவாக 5 ஏக்கருக்கும் அதிகமாக
  சமூகம் 1 3 5
1
நிலப்பரப்பின் உரிமை
குத்தகை குடும்பத்தோடு இணைந்த நில உரிமை தனியாக/கணவன் அல்லது மனைவி பெயாில் சொந்தமாக
2 யாருடைய பெயாில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆண் பெண்
3 வேளாண்மை தொடர்பான முடிவுகளை பொதுவாக யார் எடுக்கிறார்கள் ஆண் மட்டும் ஆண்கள் முடிவுகளை முன்னின்று எடுத்தாலும் பெண்களோடு கலந்து பேசி கருத்தொற்றுமையாக இணைந்த முடிவுகள்
4 கூலியில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு இரண்டு மடங்கு இரண்டு மடங்கிற்கு குறைவாக வேறுபாடு இல்லை
5 கூட்டுச்செயல்பாடுகளில் உறுப்பினராக இல்லை இருக்கின்றனர்
6 உற்பத்தி ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்வதில் சாதிய ஆதிக்கம் எப்போதும் சில சமயங்களில் ஒரு போதும் இல்லை
  நிர்வாகம் மற்றும் பருவநிலை வேறுபாடுகள் 1 3 5
1 கடந்த இரண்டு வேளாண் பருவங்களில் வேளாண்மையில் பெறப்பட்ட திட்டங்கள் இல்லை ஒன்று அல்லது இரண்டு இரண்டுக்கும் மேல்
2 கடந்த இரண்டு வேளாண் பருவங்களில் விரிவாக்க அலுவலரிடம் நடைபெற்ற சந்திப்புகளின் எண்ணிக்கை இல்லை ஒன்று அல்லது இரண்டு இரண்டுக்கும் மேல்
3 ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான தூரம் 5 கி.மீ க்கு மேல் 5 கி. மீ க்குள் கிராமத்திற்குள்ளே
4 அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கான தூரம் 5 கி.மீ க்கு மேல் 1-5 கி. மீ க்குள் 1 கி.மீ க்கும் குறைவு
5 மழைப்பொழிவு குறித்து கண்ணோட்டம் – பெற்றோர்களின் காலங்களோடு ஒப்பிடுகையில் மாறுபாடு உள்ளது மாறுபாடு இல்லை
6
வேளாண்மையை அடிப்படையாக கொண்ட வாழ்வாதாரங்களின் மீது வானிலை தாக்கங்கள் குறித்த கண்ணோட்டம்
எதிர்மறையாக ஒன்றுமில்லை நேர்மறையாக
கட்டுரை  ஆசிரியாின் பணி
எம். மஞ்சுளா, வி மணிகண்டன் மற்றும் திவ்யா ஷர்மா

References
Bharucha, Z. P., Mitjans, S. B., & Pretty, J., Towards redesign at scale through zero budget 
natural farming in Andhra Pradesh, India, 2020, International Journal of Agricultural 
Sustainability, 18:1, 1-20
Tripathi, S., Shahidi, T., Nagbhushan,S., & Gupta, N., Zero Budget Natural Farming for the 
Sustainable Development Goals, Andhra Pradesh, India, 2018, Council on Energy, Environment 
and Water. New Delhi.https://srisathyasai.ap.gov.in/document-category/district-profile/

M Manjula, V Manikandan and Divya Sharma
Faculty, School of Development
Azim Premji University
Survey No 66, Burugunte Village
Bikkanahalli Main Road, Sarjapura
Bangalore, Karnataka – 562125
E-mail: manjula.m@apu.edu.in

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2022, வால்யூம் 24, இதழ் 3

அண்மைய இடுகைகள்