சுயசார்பு நிலை அடைவதற்கு மறுசுழற்சி ஆற்றல்


இந்தியாவில் பரவலாக்கப்பட்ட மறுசுழற்சி ஆற்றல், விவசாயிகளை சுயசார்பு நிலையை அடைவதற்கு மட்டுமில்லாமல், பொிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கள அளவில் தீர்வு அளிக்கிறது. கிராம பகுதியில் நமக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய நிலைத்த ஆற்றலுக்கான தேர்வுகள் குறித்த சில ஆச்சாியமூட்டும் வெற்றி கதைகள் இந்த தலைப்பில் அளிக்கப்பட்டுள்ளது.


இந்திய வேளாண்மையில் நடைப்பயணம் செய்யும்போது, இருண்ட புகைப்படமே நமது எண்ணத்தில் கடக்கிறது. அதாவது, எதிர்பாராத காலநிலை, அதிகாிக்கும் இரசாயன உரத்தின் விலைகள், மந்தமான சந்தை விலைகள், திருப்பி செலுத்த இயலாத தவணைகள், குவிந்துள்ள கடன் சுமை மற்றும் முடிவாக விவசாய தற்கொலைகள் ஆகியவை நம் கண்முன்னே வந்து செல்கிறது. நமக்கு தேவையான உணவை அளிக்கும் சிறந்த இந்திய விவசாயி தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் அவதிப்படும் அதே நேரத்தில், வேறு சிலபேர் விவசாய விநியோக சங்கிலியின் அலமாரியை வைத்து இலாபம் காண்கின்றனர். அதிக கடன், குறைந்த வருமானம் மற்றும் நமது விவசாயிகளுக்கு பசுமை கொண்ட எதிர்காலம் வண்ணமிகு காட்சியை கற்பனையில் தீட்டும் மோசமான சுழற்சியை ஏன் நாம் உடைக்க முடியாது.

எதிர்பாராத விதமாக தூய்மை தொழில்நுட்பம் இந்த மோசமான சுழற்சியை உடைப்பதற்கு உதவி கரங்களை அளிக்கிறது. இதனால் கிராமத்தில் உள்ள விவசாயிகள் சுய சார்புத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கதக்க வளங்கள் விவசாயிகளை சுய சார்புத்தன்மையை அடைவதற்கு மட்டுமில்லாமல் அடிமட்ட அளவில் இருக்கும் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வும் அளிக்கிறது.

பரவலாக்கபட்ட புதுபிக்கத்தக்க வளத்தின் அமைப்பு, பயனீட்டாளர்களுக்கு கிடைக்க செய்கிறது. மேலும் வரும் வருடங்களில் நிலைத்தத்தன்மையை உறுதிபடுத்துகிறது. இங்கே சில பரவலாக்கபட்ட புதுப்பிக்கத்தக்க வள நிறுவனங்கள், கிராம சமூகங்களுக்கு உகந்த தூய்மை தொழில்நுட்பங்களோடு செயல்பட செய்ததன் வெற்றிக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தேசிய அளவில் உள்ள இணையமான, தூய்மை வளம் கிடைக்கும் இணையம் என்ற அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கின்றன. இது பரவலாக்கபட்ட புதுபிக்கதக்க வளத்தை பரபலப்படுத்தி செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பண்ணை வாசலிலேயே பதப்படுத்தும் உணவு 
பண்ணையிலேயே 20 -30 சதவிகிதம் நுகர்வோரிடம் சேர்வதற்குமுன் உணவு கணிந்துவிடுகிறது.  வீணாகும் உணவை மையமாக வைத்து செயல்படும் பல்வேறு அரசு திட்டங்களைத் தாண்டி உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு ஆகியவை இல்லாத காரணத்தால் எதுவும் முன்னேறவில்லை. பரவலாக்கபட்ட புதுப்பிக்கத்தக்க வள அமைப்பு, உணவு பதப்படுத்துதல் குறித்த தீர்வுகள் அளிக்கின்றன. மேலும் குளிர்-பதன பெட்டிகள் அறுவடைக்கு பின், சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கு உதவுகிறது.

எஸ்4எஸ் தொழில்நுட்பங்கள் என்ற அமைப்பு பண்ணை இழப்பிலிருந்து உணவு பொருட்களாக பண்ணை வாசலிலிருந்து கொள்முதல் செய்து பதப்படுத்தப்படுகிறது – அனைத்தும் பெண் தொழிலதிபர்களால் செய்யப்படுத்தப்படுகிறது. எஸ்4எஸ், நிலமற்ற பெண் மற்றும் விவசாயிகளை பயிற்றுவித்து, அவர்களை சிறிய தொழிலதிபர்களாக மாற்றுவதற்கு, சறியான தொழில்நுட்பங்கள், நிதி மற்றும் விற்பனை மையம் ஆகியவற்றை இணைத்து பயிற்சியளிக்கப்படுகிறது. உணவு வீணாவதையும், அறுவடைக்குபின் ஏற்படும் இழப்புகளையும் குறைப்பதற்கு, எஸ்4எஸ் தொழில்நுட்ப அமைப்பு ஏற்கனவே 6 நாடுகளில் உள்ள 1000 விவசாயிகளுக்கும் மேல் அவர்களின் நிலைத்த தொழில்நுட்பங்களை, சூரிய சக்தியின் மூலம் தீங்கு விளைவிக்கும் புகைகளை குறைத்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி, தொழிலதிபர்களை உருவாக்கி பயனடைவும் செய்துள்ளது. எஸ்4எஸ் சூரிய சக்தி உலர்ப்பான் என்ற சிறிய கருவியை வைத்து மஹாராஷ்டிராவில் ஜல்கோன் மாவட்டத்தில் வடலா-வடலி என்ற பகுதியில் உள்ள 29 கிராம பெண்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது. சூரிய சக்தி உலர்ப்பான் என்பது சூரிய சக்தியில் உணவு உலர்த்த வேளாண் பொருட்களின் ஈரப்பதத்தை குறைத்து பதப்படுத்தப்படுத்தும் பொருட்களை இரசாயனம் மற்றும் பாதுகாப்பு பொருட்கள் இல்லாமல் ஒரு வருடம் சேமித்து வைக்க முடியும். எஸ்சிடி என்பது அனைத்து வெப்ப மாற்று முறையை ஒன்றுசேர்த்த (கடத்துதல், வெப்பச்சலனம் மற்றும் கதிர்வீச்சு) முதல் சூரிய உலர்ப்பான், 22 சதவிகிதம் வரை குறைக்கும் சிறந்த உலர்ப்பான்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் தூய்மை, நேரம் மேலாண்மை, வெங்காயம் மற்றும் இஞ்சியின் ஈரப்பதத்தை குறைக்கும் உணவு பாதுகாப்பு செய்முறை மற்றும் இதர நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், உணவு ஈரப்பதத்தை குறைக்கும் செய்முறை குறித்து கற்றபின்னர், சிறிய தொழிலதிபராக மாற்றும் வாய்ப்புகள் இதில் அதிகம் இருப்பதாக பெண்கள் உணர்ந்தனர். அனைத்து 30 பெண்களும் நம்பிக்கையை அடைந்த பின்னர் எஸ்4எஸ் என்ற படையில் சேர்ந்துள்ளனர்.
துருபத ஷிவேரின் வெற்றிக் கதை பெட்டி செய்தி 1 ல் விவரிக்கப்பட்டுள்ளது

தூய்மையான சமையலுக்கு உயிர்பொருள்
தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகள் பத்து வருடங்களாக செய்த பணியை தாண்டி, இப்பொழுதும்கூட தூய்மையான சமையல் செய்வதற்கு கிராம பெண்கள் இன்றும் சாியாக கிடைப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது. உயிர்பொருள் எரிவாயு ஆதாரங்கள் நமது நாட்டில் குவிந்து கிடைக்கும் என்றாலும், சில தூய்மை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் கொண்ட தொழில்துறைகள் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் எந்த வசதியும் இல்லாத கிராம பகுதிகளில் சுய சார்புத்தன்மையை கொண்டு வருவதற்கு பணி செய்கின்றனர்.
பெங்களுரூவை அடிப்படையாக கொண்ட தூய்மை தொழில்நுட்ப நிறுவனமான டைட் (தொழில்நுட்ப தகவல் வடிவமைப்பு முயற்சி- Technology Informatics Design Endeavour) முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் அசாம் மாநிலங்களில் உயிர்பொருள் மற்றும்; தூய்மை தொழில்நுட்பங்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துதல். இவற்றை பங்குதார நிறுவனங்களோடு இணைந்து எல்லை வனப்பகுதியில் வசிக்கும் சிறிய பழங்குடியின சமூகங்கள் மத்தியில் பரவலாக விரிவடைய செய்வதை உறுதிபடுத்துகிறது.

டைட் நிறுவனம் தூய்மை சாியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுச்சசூழல் பாதுகாப்பதற்கு மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்குவது மற்றும் சமூக பிரச்சனைகளை தீர்வுகாணுவதற்கு துணையாக இருந்தது. டபுள்யூ. டபுள்யூ.எப். இந்தியா மேற்குதொடர்ச்சி மலை, நீலகிரி நிலவடிவமைப்பு பிரிவு, டைட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு பகுதியில் உள்ள தொலைதூர கிராமங்களில், சரளா உயர்த்தப்பட்ட சமையல் அடுப்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டது. இந்த கூட்டு செயல்பாடுகள் வன எல்லையில் உள்ள வீடுகளில் கரும்புகை கொண்ட சமையலறையிலிருந்து தூய்மையான புகையில்லாத அடுப்பாக மாற்றுவதற்கு உதவியது. இந்த அடுப்பு கட்டும் முறையை உள்ளூர் மக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் இந்த மாற்றம் ஏற்பட்டது. இங்கே உள்ள குடும்பங்கள் தங்களது பங்காக அடுப்பு கட்டும் செய்முறையை ஏற்றுக்கொண்டது இந்த திட்டத்தின் தனித்தன்மைமிக்க ஒன்றாக இருக்கிறது. அடுப்பு கட்டும் பயிற்சி மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது.

திரு. ஆர். சேகர் அவர்கள், முன்னாள்; மக்கள்தொகை கணக்கெடுப்பவர், இந்தத் திட்டத்தின் பயனாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பசுமை வேலைகளுக்கான திறன் ஆணையத்தால், உயர்த்தப்பட்ட சமையல் அடுப்பு நிறுவுபவராக சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் நீலகிரி பகுதியில் 120 அடுப்புகளுக்கு மேல் கட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு, சரளா உயர்த்தப்பட்ட அடுப்பு கட்டும் பயிற்சியை டைட் நிறுவனத்திலிருந்து பெற்றபிறகு, அவரது எதிர்காலத்தில் கடலளவு மாற்றத்தை கண்டார். இந்த 36 வயது தந்தை தற்போது புதிய திறனை பெற்ற பெருமையில் , “என்னால் மாதந்தோறும் ரூ. 2000 த்தை தங்கத்தில் முதலீடு செய்து தனது பெண்ணின் உயர்க்கல்விக்காக சேமிக்க முடிகிறது” என்று கூறினார். பயிர் சாகுபடி இல்லாத காலங்களில் பண்ணையில் பணிகள் இல்லாதபோது தூய்மை சமையல் அடுப்பு கட்டும் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சேகர் இன்னும் பல பேருக்கு அடுப்பு கட்டும் பயிற்சியையும் சிறப்பாக அளித்தார். இன்று, குறைந்த செலவில் உயர்த்தபட்ட சமையல் அடுப்பு கட்டுவது குறித்து டைட் நிறுவனம் பயிற்சியளித்ததன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 பர் அடுப்பு கட்டும் சான்றிதழை பெற்றுள்ளனர். பயிற்சி அளித்த பின்னர் இந்த பயிற்றுனர்கள் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள பல குக்கிராமங்களில் சரளா அடுப்புகளை கட்டிகொடுத்தனர். அடுப்பு கட்டும் தொழிலாளர் 3-5 அடுப்புகள் கட்டி ஒரு நாளைக்கு ரூ.300-500 வரை ஈட்டுகின்றனர். இறுதியில் பயனாளிகள் இந்த உயர்த்தப்பட்ட சமையல் அடுப்புகளை பயன்படுத்தி சந்தோஷமடைந்துள்ளனர். இனி சமையலறையில் புகையில்லாமல் இருக்கும், மேலும் காட்டில் விறகை தேடி நேரம் செலவிட தேவையில்லை. ஆர். ஜே. எ. ஸ்டீபன் அஜெய், மூத்த திட்ட அலுவலர், டபிள்யூ.டபிள்யூ.எப் – இந்தியா, டபிள்யூ.ஜி.என்.எல். ‘டைட் மற்றும் டபிள்யூ.டபிள்யூ.எப் – இந்தியாவின், இந்த கூட்டுத் திறன் பயிற்சி திட்டம் மூலம், எஸ்.டி.ஆர். பகுதியில் வனப்பகுதியில் விறகு சேகாிப்பது நன்கு குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில்,குறைந்த மக்கள் தொகை உள்ள வனஎல்லைகளில் 1000 அடுப்புகளுக்கு மேல் கட்டுப்பட்டுள்ளன. இந்த மாதிரி திட்டத்தின் மூலம் 1000 அடுப்புகள் கட்டப்பட்டதால், ஒவ்வொரு வருடமும், சமையலுக்கு தேவையான, சுமார் 1440 டன்களுக்கு மேல் காட்டில் விறகுகள் வெட்டி சேகாிப்பதை எஸ்.டி.ஆர் பகுதியில் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த செயல்பாடு பரவலாக்கம் செய்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எதிர்காலத்தில் சரளா அடுப்பு சுமார் 9000 பயனாளிகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு செய்துள்ளோம். முன்னேற்ற பாதையில், எஸ்.டி.ஆர் பகுதியில், சேகர் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட அடுப்பு கட்டும் தொழிலாளர்களுக்கு, தாபாக்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றிற்கு தேவையான சமையலறை அடுப்புகள் கட்டும் பயிற்சி அளிக்கப்படும். இதில் வருமானம் அதிகாிப்பது மட்டுமல்லாமல், பரவலாக்கப்பட்ட மறுசூழற்சி வளத்தின் தீர்வுகளான வணிக ரீதியிலான சமையலறை அடுப்புகள் போன்ற தொழில் திட்டம் உருவாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒரு அடுப்பு அமைப்பதால், 2.5 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடை குறைக்கும் திறன் கொண்டது. எஸ்.டி.ஆர் பகுதியில் உள்ள சமூகம் மற்றும் காட்டுவிலங்குகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதை டைட் நிறுவனம், சமைப்பதற்கான நிலைத்த பரவலாக்கப்பட்ட மறுசூழற்சி வளத் தீர்வுகளை கொண்டு உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் வனப்பகுதியை பாதுகாக்கிறது, மேலும் பழங்குடியின சமூகங்களின் வாழ்க்கை உயர்கிறது.

வேளாண் கழிவுகள் முதல் செல்வம்
பெரும்பாலான இந்திய விவசாயிகள் வேளாண் பொருட்களிலிருந்து கிடைக்கும் கழிவுகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. நெல், கரும்பு மற்றும் கோதுமை பயிர்களிலிருந்து அறுவடைக்குபின் வரும் கழிவுகளை விவசாயிகள் எரித்துவிடுகின்றனர். ஏனென்றால் பயிர் தோகையை எடுத்து தீவனமாக பயன்படுத்துவதற்கு கூலியாட்கள் மற்றும் நேரம் தேவை. இந்த மாதிரி கழிவுகளை எரிக்கும்போது மதிப்புமிக்க ஆதாரங்கள் வீணாவதோடு மட்டுமில்லாமல் காற்றும் மாசுபடுகிறது.
பயிர் தோகை எரிப்பதை மேம்படுத்துவதற்கு சில புதிய தீர்வுகள் இருக்கின்றன. பல்வேறு வேளாண் கருவிகளான ஹேப்பி விதைப்பான், ரோட்டாவேட்டர், வைக்கோல் வெட்டும் கருவி, கையால் காிகட்டியை செய்யும் கருவிகளை உருவாக்குவதன் மூலம் விவசாயிகள் பயிர் மற்றும் பயிர் கழிவுகளை சுலபமாக மேம்படுத்துகின்றனர். விவசாயிகளுக்கு இந்த கருவிகள் கிடைக்க மாநில அரசு மானியம் வழங்குகிறது. பயிர் கழிவுகளை, போக்குவரத்துக்கு அல்லது உற்பத்திக்கு தேவையான உயிர்எரிவாயுவாக பயன்படுத்தியதால் முக்கியமாக கனிம வெளியீட்டை குறைக்கிறது.

தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு, எஸ்.கே. பொறியாளர், வாப்பியை அடிப்படையாக கொண்ட நிறுவனம் 2011 ஆம் ஆண்டு உருவாக்கினர். இவர்கள் மனிதன் இயக்கும் காிகட்டிகளை உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபடித்தனர்.இந்தக் கருவி எந்த வேளாண் கழிவுகளும் கட்டிகளாக மாற்றி கிராம இந்தியாவிற்கு வரமான ஒன்றாக நரூபித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் பணியை என் எம் சத்குரு நிறுவனத்தோடு, தர்ஷில் பஞ்சால், எஸ்.கே.பொறியாளர் குழுவின் மேம்பாட்டு பங்குதாரர், கிராம சமூகங்களுடன் நெருக்கமாக பணி செய்து, அதன் மூலம் சமையல் செய்யும் எரிவாயுவிற்கான ஆதாரம் இல்லாததை கண்டறிந்தனர். பிரச்சனையின் தீர்வை தேடியபோது தர்ஷில் பாய்லர்களை பார்க்க நேரும்போது, நிலக்காிக்கு பதிலாக காிகட்டிகளை பயன்படுத்துவது ஏதுவாக இருக்கும்.
காிகட்டிகளை தயாரிக்கும் உரிமையாளர்கள் கிராம சமூகங்களில் குவிந்துகிடக்கும் பயிர்கழிவுகளை கொள்முதல் செய்கின்றனர். அவர்கள் இவற்றை கொண்டு கட்டிகளை தயாரித்து பாய்லர்கள் வைத்திருப்பவர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். இதனை புரிந்துகொண்டு தர்ஷில் கட்டிகளை மனித இயக்கத்தினால் தயாரிக்கப்படும் கருவியை வைத்து வேளாண் கழிவுகளை மேம்படுத்த முடிவு செய்தார். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து பல பயிர் கழிவுகளான வேளாண் கழிவுகள், தீவனம், சமையலரை கழிவுகள், காகிதம்/நெகிழி/அட்டை கழிவுகள் போன்றவற்றை சிறப்பாக மேம்படுத்தினார். பொதுவாக, நெகிழி கழிவுகள், பல அடுக்கு நெகிழி பொட்டல பொருட்கள், காகித கழிவுகள், அட்டை, பண்ணை கழிவுகள் போன்றவை அதிக மதிப்பு இருப்பதில்லை, ஏனென்றால் அதிக அளவு குவிவதால் சுலபமாக போக்குவரத்து செய்ய இயலாது. இதனை புரிந்து கொண்ட தர்ஷில், மனிதன் இயக்கும் ட்ரம் கொண்ட கருவியை கண்டுபிடித்து அதன் மூலம் கழிவுகளை சிறப்பாக ஒழுங்குபடுத்தி இடம் பெயர்த்தார்.

மனிதன் இயக்கும் இந்த பேலர் கருவியில் சக்கரம் இருப்பதால், பொருட்களை எடுத்துசெல்வதற்கு சுலபமாக இருக்கும். இதை செயல்படுத்துவதற்கு சுலபமாகவும், பொருளாதார ரீதியில் கருவி மேம்பாட்டு செலவு குறைந்துள்ளது. இந்தக் கருவிக்கு மின்சாரம் தேவையில்லை என்பதால், இது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கையால் இயக்குவதும் மிக குறைவு, மேலும் சுலபமாக நிறுவி, செயல்படுத்தலாம். காி கட்டிகள் தயாரிக்கும் கருவியை வைத்து வேளாண் கழிவுகள் கட்டிகளாக மாற்றப்படுகிறது. இந்த கட்டிகள் நேரடியாக வீடுகளில் எரிவாயுவிற்கு பதிலாக பயன்படுத்தலாம் அல்லது ஒரு கிலோ ரூ. 7-10 விலையில் சந்தையில் அதிக வருமானத்திற்கு விற்கலாம். ஏற்கனவே பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிராம வளர்ச்சி நிறுவனங்கள் இந்த கருவியை வாங்கி, கழிவு மேலாண்மை செய்வதற்கும், வருமானம் பெருக்குவதற்கும் பயன்படுத்துகின்றன.

பெட்டி செய்தி 1: துருபதா ஷேவரின் வெற்றிக்கதை
45 வயது நிரம்பிய துருபதா ஷேவர் எப்பொழுதும் வாழ்க்கையை நிறைவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். மஹாராஷ்ட்ரா, ஜல்கோன் மாவட்டத்தில், தொலைதூர கிராமமான வடலா-வடலியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார், இதுவே இவருக்கு குழந்தைபருவத்திலிருந்து தைரியமான சவால்களை சந்திக்கும்நிலை இருந்துவந்தது. கடைசியாக துருபதா, பள்ளிக்கு தான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது சென்றார். அவர் படிக்கும்போது கட்டணம் செலுத்த இயலாததால், இவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக பள்ளியிலிருந்து நிறுத்தினர். சில வருடங்களுக்கு பின்னர், துருபதா மணப்பெண்ணாக மாறினார். சிறுவயதில் திருமணம் என்பதால் சிறுவயதிலேயே தாய்மையடைந்து, இன்று இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என மொத்தம் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவருடைய சிறப்பான நாட்களில், அவரும் அவரது கணவரும் குழந்தைகளை வளர்ப்பதற்கு பண்ணையில் மிக கடினமாக உழைத்தார்கள். நல்ல பயிர் பட்டம் இருந்தால் இருவரும் சேர்ந்து வருடத்தில் நான்கு மாதங்களுக்கு ரூ.3000 ஈட்ட முடியும். நான்கு குழந்தைகளும் விரைவாக வளர்ந்துவிட்டனர். 45 வயதிலேயே துருபதா 17 வயது குழந்தைக்கு ஏற்கனவே பாட்டியாகி விட்டார். இவ்வாறு அனைத்து வளர்ச்சிகளும் அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கலைப்படைய செய்தது. அவருடைய நிலையான வாழ்க்கை கனவுகள் அவரை விட்டு கடந்தபோது, அவர் அறிவியலுக்கான சமூகம் என்ற அமைப்பின் துணைக்கொண்டு கடக்க நேர்ந்தது. மெதுவாக துருபதா சில விஷயங்களை தொிந்து கொண்டு, தினமும் 45-90 கிலோ பச்சை காய்கறிகளை உலர வைத்தார். அவற்றைக் கொண்டு ஒரு நாளிற்கு 10-12 கிலோ உலர்ந்த இஞ்சியை தயாரித்தார். பயிற்சி மூலம் அவர் நல்ல தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்ய உதவியது.மேலும் இது உண்ணுவதற்கு உயர்த்தப்பட்ட திறனோடு அமைந்துள்ளது. எல்லாவற்றையும்விட பொருளாதார ரீதியாகவும் அவருக்கு உதவியது. புதிதாக கற்றுக்கொண்ட திறனைக்கொண்டு துருபதா தற்போது மாதம் ரூ. 5000 ஈட்டுகிறார். இது அவர் வாழ்க்கையில் கிடைக்காத ஒரு நிலையை தாண்டி அடைந்துள்ளார். இந்த வாய்ப்பு அவரும், அவரது கணவரும் வாழ்க்கையின் நோக்கத்தை புதுப்பித்து ஒன்று சேர்ந்து சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி அளித்தது.

பெட்டி செய்தி 2: காி கட்டிகளை தயாரிக்கும் செய்முறை
அனைத்து வேளாண் கழிவுகளும் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இந்த பொருளை சிறிது தண்ணீர் மாற்றும் சாணத்தை ஊற்றி கலந்து கூழாக மாற்ற வேண்டும். இந்த கூழ் தயாரான பின்னர் பி.எல்.பி கருவி உள்ள நிள்வட்ட வடிவ குழியில் ஊற்ற வேண்டும். லீவரை அழுத்தி அழுத்தம்கொடுக்கும் செய்முறையை தொடங்க வேண்டும். அழுத்திய கூழை எடுத்து சூரிய வெப்பத்தில் காய வைக்க வேண்டும். காய்ந்தபிறகு கட்டி தயாராகி விடும்.

லேவின் லாரன்ஸ்


Levine Lawrence
Content Director
Ecoideaz Ventures
#24, 1st Cross, 2nd Stage, Gayathripuram,
Udayagiri, Mysuru,
Karnataka - 570019, India.
E-mail: editor@ecoideaz.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2022, வால்யூம் 24, இதழ் 4

 

அண்மைய இடுகைகள்