கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் – புதுப்பிக்கப்படும் வளத்தின் வழியாக


நாட்டின் தொலைதூர கிராம பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் ஆதாரம்/வளங்களை அளிப்பதில் வெற்றி கண்ட இந்தியா பல அனுபவங்களை பெற்றுள்ளது. மேலும் இது பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் இருக்கும் வளங்களை கொண்டு வெற்றிகண்ட மாதிரிகளின் வீடாக இருக்கிறது. சுமார் 28 ஆச்சாிமூட்டும் வெற்றி கதைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரூட்டும் மாதிரிகளாக இருக்கிறது. மாற்றங்கள் உருவாக்க, தடைகளை கடந்து செல்லும் உறுதி, உள்ளூர் தேவைக்கு ஏற்றவாறு புதுப்பிக்கும் வளம் கொண்ட தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தி, செயல்படுத்த செய்வது ஆகும். இவ்வாறு குறிப்பட்டுள்ள தலைப்புகளை ஒருங்கிணைத்து சுருக்கத் தொகுப்பாக ‘ கிராம இந்தியாவை மேம்படுத்துதல், புதுப்பிக்கதக்க வளம் வழியாக : ஆச்சாியபடுத்தும் வெற்றிக்கதைகள்” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதியில் வேளாண்மை பிரிவில் புதுப்பிக்கதக்க வளத்தை பயன்படுத்தி வெற்றி கண்ட இரண்டு கதைகளை அளித்துள்ளோம்.


வெற்றிக்கதை 1

லடாக்கில் பசுமையான காய்கறிகள்

ஜம்மு காஷ்மீர், லடாக் மாவட்டம்; கடல் மட்ட அளவிலிருந்து 3500 மீட்டர் மேல் உயரத்தில் அமைந்திருக்கிறது. இது உலகத்திலேயே மிக பிரபலமான குளிர்ந்த பாலைவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு குளிர்ந்த காற்று மற்றும் சூரிய ஒளியுடன் இருக்கிறது. லடாக்கில் மிக குறைவாகவே மழை பொழிகிறது. பனிக்காலங்களில், வெப்பம் குறைந்து – 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த உரைபனி கொண்ட சீதோஷன நிலையில் பசுமையான காய்கறிகள் மற்றும் இதர பயிர்கள் வளர்ப்பது கடினம். பனிக்காலத்தில், நிலப்பகுதியிலிருந்து வான்வழியாகவும், கோடை காலத்தில் சாலை வழியாகவும் காய்கறிகள் கொண்டு வருவது லடாக்கில் உள்ள மக்களுக்கு சாதாரன பழக்கமாகும். இதனால் காய்கறிகள் கிடைப்பது அரிதாகவும், விலை அதிகமாகவும் இருக்கிறது. பெரும்பாலான உள்ளூர் மக்களுக்கு பச்சை காய்கறிகள் கிடைப்பது அரிதாக மாறியுள்ளால், இவர்கள் சத்துகுறைபாடு பிரச்சனையால் அவதியுறுகிறார்கள். மழைநிழல் பகுதி என்றால் வானத்தில் எந்த மேகங்களும் இருக்காது. வருடத்தில் 300 நாட்களும் தௌிவான சூரியஒளி கொண்ட நாட்களாகவே லடாக்கில் இருக்கும். லடாக்கின் இந்த சூரியஒளி சீதோஷன நிலையை பயன்படுத்தி, ஜிஇஆர்இஎஸ் (சுற்றுச்சூழல், புதுப்பிக்கதக்க வளம் மற்றும் ஒற்றுமைக்கான குழு) பனிக்காலத்திலும் உள்ளேயே பச்சை காய்கறிகள் மற்றும் இதர பயிர்கள் வளர்க்க மந்தமான பசுமை குடிலை உயர்த்தி வளர்க்க தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக ஜிஇஆர்இஎஸ், லேஹோ (லடாக் சுற்றுச்சூழல் ஆரோக்கிய நிறுவனம்), லிடிக் (லடாக் உயிர்ச்சூழல் வளர்ச்சிக் குழு), லே ஊட்டச்சத்து திட்டம் மற்றும் ஸ்டாக் (ஸ்கார்ச்சன் மற்றும் ஸ்பித்தி மத்திய இமயமலை செயல்பாட்டு குழு/ உயர்அடுக்கு) ஆகிய அமைப்புகளுடன் கலந்து பணிசெய்து வந்தது.

ஜிஇஆர்இஎஸ் உயர்த்தப்பட்ட பசுமைகுடிலை உருவாக்கியது. இது பகலில் சூரிய ஆற்றலை அதிகப்படுத்தவும், இரவில் வெப்பத்தை குறைக்கிறது. இதனால் உறைப்பனியால் பயிர்கள் இறப்பதை தடுக்கலாம். பசுமை குடிலை சூரிய ஆற்றலை மட்டுமே வைத்து வெப்பமேற்றுவது போதுமானது, மேலும் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தும் திட்டத்தில் கூடுதல் வெப்பம் தேவையில்லை. உயர்த்தப்பட்ட பசுமை குடில்களின் சில முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.

பசுமைக்குடில் கிழக்கு மேற்கு திசையில் அமைத்து நீண்ட தெற்கு நோக்கிய பக்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தெற்குப் பக்கம் ஒளி ஊடுருவுகிறது கனரக பாலித்தீனைக் கொண்டு செய்யப்பட்ட விரிப்பை, கூடுதலாக ஸ்டெபிலைசரை கொண்டு சூரியனிலிருந்து அடர்த்தியாக வெளியிடும் புறஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த பாலித்தீன் ஐந்து வருடங்களுக்கு மேல் பயன்படுத்தலாம். இரண்டு அடுக்கு பாலித்தீனை மிக குளிர்ந்த பகுதிகளில் பயன்படுத்தலாம்.
வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் உள்ள பசுமைக்குடில் சுவர்கள் மண் செங்கலை பயன்படுத்தி குறைந்த மற்றும் மிதமான பனி பொழியும் பகுதியிலும், அதிக பனி பொழியும் இடங்களில் கல் அல்லது பாறையை வைத்தும் கட்ட வேண்டும். ஏனென்றால் பகலில் சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை ஈர்க்கிறது, இரவில் சேமித்து வைத்திருந்த வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால் பசுமைக்குடிலில் வெப்பம் மேம்படுத்தி உள்ளே இருக்கும் பயிர்களும் ஆரோக்கியமாக வளரும்.
வடக்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பக்கங்களில் சுவர்கள் குழி சுவர்களாக கட்டப்படுகிறது. இது பசுமை குடிலிலிருந்து வெப்பம் வெளியாவது குறைக்கிறது. 100 மிமீ குழி சுவர்களில், காப்பு பொருளான தவிடு அல்லது வைக்கோல் நிரப்பப்படுகிறது. மேல் கூரை 35 டிகிரி சாய்வில் இருப்பதால் பனிக்காலத்தில் நேரடி சூரிய ஒளி அதிகமாக ஊடுருவும். இரவில் ஓலையால் மேல்கூரையை போடப்படுகிறது. மேலும் பாலிதீன் கொண்ட தெற்கு பக்கத்தில் துணி அல்லது தார்பாலீன் கொண்டு மறைக்கப்படுகிறது. இது வெப்பம் வெளியிடுவது தடுக்கும்.

சுவர்களிலும், மேல்கூரைகளிலும், சிறுதுளைகள் அமைக்கப்பட்டது.இது அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பத்தை தவிர்க்கிறது. மேலும் இயற்கை கற்றோட்டத்தை அனுமதிக்கிறது.
வடக்கு மற்றும் மேற்கு பார்க்கும் சுவர்களில் உள்ளே கருப்பு பையிண்ட்டை, வெப்பம் ஊடுருவுவதற்காக அடிக்கப்படுகிறது. கிழக்கு பார்த்த சுவரில் வெள்ளை நிற பையிண்ட்டை அடித்தால் காலை சூரியனின் வெப்பத்தை பயிர்கள் மேல் பிரதிபலிக்கும். இந்த சுவற்றில் ஒரு ஓரத்தில் ஒரு கதவும் இருக்கிறது.
தெற்கு பக்கத்தில் உள்ள பாலித்தீனை தவிர, பசுமைக்குடிலில் பயன்படுத்திய அனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கட்டப்பட்டவையே. மேல் கூரையில் முக்கிய பிரேம்களில் பயன்படுத்தப்பட்டது நெலிங்க மர வகையை சேர்ந்தது,கருநொச்சியை பயன்படுத்தி சட்டமாக பயன்படுத்துதல், மேலும் வைக்கோல் அல்லது தண்ணீரை எதிர்த்து நிற்கும் உள்ளூர் புல் கூரை போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. பாறை, கல், மண் செங்கல் அல்லது திமித்த மண் ஆகியவற்றை பயன்படுத்தி சுவர்கள் கட்டப்பட்டன. பாலித்தீன் தாள்கள் மும்பை போன்ற இடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. உள்ளூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தேவைப்படும்போது பசுமைக்குடில் கட்டும் சிறப்பு பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பசுமைக் குடில் இரண்டு அளவுகளில் இருக்கிறது. சிறிய பசுமைக்குடில் 4.5மீ அகலமும், 9.7மீ நீளமும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அளவாகும்.பொிய பசுமைக்குடில் 4.8 மீ அகலமும், 27.3 மீ நீளம் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட பசுமைக்குடில் வீட்டு உபயோகத்திற்கு கட்ட வேண்டுமென்றால் தோராயமாக ரூ.30,000 செலவாகும். வீட்டு உயகோத்திற்கு கட்டுபவர் உயர்த்தப்பட்ட பசுமைக்குடிலுக்கு தேவையான செலவை ஏற்க வேண்டும் அல்லது உள்ளூரில் கிடைக்கும் மேல்கூரைக்கு தேவையான கட்டை, ஓலைக்குத் தேவையான வைக்கோல், மண் செங்கல், மற்றும் காப்பு பொருட்கள் அவர்களே சேகாித்து வழங்க வேண்டும். அவர் கட்டும் பணியை செய்ய வேண்டும் அல்லது அதற்கான கூலி, கதவு, சிறுதுளைகள், சிறப்பு புறஊதா நிலைக்கும் பாலித்தீன் ஆகிய பொருட்களின் செலவான சுமார் 25 சதவிகிதம் அளிக்க வேண்டும் . சில உயர்த்தப்பட்ட பசுமைக்குடிலுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

லடாக்கில் நிலவும் வேளாண் சுழற்சிக்கு ஏற்றவகையில் பசுமைக்குடில் கட்டுப்படுகிறது. ஜிஇஆர்இஎஸ் நிறுவனம் கட்டும் முறை மற்றும் வடிவத்தை அளித்து, உயர்த்தப்பட்ட பசுமைக்குடிலை கண்காணிக்கின்றது. லீஹோ மற்றும் இதர உள்ளூர் தொண்டு நிறுவனத்தை இணைந்து வருங்கால உரிமையாளர்களை தேர்வு செய்து, பசுமைக்குடில் மேம்பாடு மற்றும் செயல்பாடு குறித்து பயிற்சியளித்து, மற்றும் உள்ளூர் உரிமையாளர்களுக்கு பசுமைக்குடில் கட்டுவதில் தேவைப்படும் இதர உதவிகளை அளிக்கிறது.

உயர்த்தப்பட்ட பசுமைக்குடிலை வீட்டு உயயோகத்திற்கு அமைக்க வரும்பும் வருங்கால உரிமையாளர்களை தேர்வு செய்வதற்கு உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் சில அளவுகோல்களை உருவாக்கியது.

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பிரிவின் குடும்பங்களை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு பசுமைக்குடிலை கட்டுவதற்கு ஏதுவான நிலத்தை பெற்றிருக்க வேண்டும். பசுமைக்குடிலை ஆர்வத்தோடு திறம்பட பயன்படுத்தும் குடும்பமாக இருக்க வேண்டும். மேலும் விளைபொருட்களை பொியளவில் சமூகத்திற்கு பகிரும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

பனிக்காலத்தில் கீரை, கொத்தமல்லி, பூண்டு, முள்ளங்கி, வெங்காயம், மலைக்கீரை, மற்றும் ஸ்ட்ராபெரீஸ் ஆகியவை வளர்க்கப்படுகறது. இலையுதிர் காலத்தில் தக்காளி, வெள்ளரி, மற்றும் திராட்சை வளர்க்கப்படுகிறது, வசந்த காலத்தில் பசுமைக்குடிலில் நாற்றங்கால் வளர்க்கப்படுகிறது. சில குடும்பங்கள் மலர்களையும் தொட்டி செடிகளையும் வளர்க்கத் தொடங்கினர்.
உயர்த்தப்பட்ட பசுமைக்குடில்களால் லடாக்கில் உள்ள மக்கள் பயனுற்றனர், குறிப்பாக ஆரோக்கியத்தில் பயனடைந்துள்ளனர். உயர்த்தப்பட்ட பசுமைக்குடிலை அறிமுகப்படுத்துவதற்கு முன், பனிக்காலத்தில் மக்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறைதான் பச்சை காய்கறிகளை உண்டனர். எனினும், உயர்த்தப்பட்ட பசுமைக்குடில் அறிமுகம் செய்த காலம் முதல், காய்கறிகள் உண்பது வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை அதிகாித்துள்ளது. சராசாியாக ஒரு உயர்த்தப்பட்ட பசுமைக்குடில் உரிமையாளர் பச்சை காய்கறிகளை ஒன்பது குடும்பங்களுக்கு அளிக்கின்றார். மேலும் மற்ற ஆறு குடும்பங்களுடன் பண்டமாற்று முறையில் காய்கறிகளை மாற்றி கொள்கின்றனர். இதனால் குடும்பங்களின் ஆரோக்கியமும் உயர்கிறது. சராசாியாக, இறுக்குமதி செய்யப்பட்ட காய்கறிகளைவிட கிராமத்தினர்; உள்ளூர் காய்கறிகளை குறைந்த விலையில் வாங்குவதினால் ரூ.500 முதல் 1000 வரை சேமிக்கின்றனர்.
பச்சை காய்கறிகளை உள்ளூரிலேயே உற்பத்தி செய்வதால் நிலப்பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் காய்கறிகளை சார்ந்திருப்பது குறைந்துள்ளது, இதனால் போக்குவரத்திற்கான செலவுகள் சேமிக்கப்படுகிறது. ஜிஇஆர்இஎஸ் சில ஆய்வுகளின் அடிப்படையில், 560 பசுமைக்குடில்கள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு வருடத்திற்கு வெளியிடும் 460 டன் கனிம வெளியீடு சேமிக்கிறது.

உயர்த்தப்பட்ட பசுமைக்குடில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கிறது. சுமார் 220 கட்டுமான பணியாளர்கள் மற்றும் 15 தச்சர்கள் பயிற்சி பெற்றனர். மேலும் பசுமைக்குடில் கட்டுவது மூலம் வாழ்வாதாரத்தை பெற்றுள்ளனர்.

உயர்த்தப்பட்ட பசுமைக்குடில்கள் அதன் உரிமையாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. தற்போது காய்கறிகள் மற்றும் நாற்றங்காலை விற்று கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி உயர்த்தப்பட்ட பசுமைக்குடில் உரிமையாளர்கள் ரூ.8250 / வருடத்திற்கு ஈட்டுகின்றனர். உபாியாக கிடைக்கும் விளைபொருட்களை விற்றதில் 30மூ அதிக வருமானம் வழங்குகிறது.

உயர்த்தப்பட்ட பசுமைக்குடில்கள் மிக உயரத்தில் உள்ள இமாலயன் மாநிலங்களில் பரவலாக்கம் செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. லடாக்கில் மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவையான பச்சை காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு சுமார் 3000 குடில்கள் உருவாக்கும் தேவை இருக்கிறது. இராணுவத்தின் தேவையை சேர்த்தால் குடில்கள் இரட்டிப்பாகி 6000 ஆக வாய்ப்பு இருக்கிறது. தற்போது புறஊதா கதிர்கள் எதிர்க்கும் பாலித்தீன் விரிப்புகளை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவதும் மாநில அளவில் செயல்படும் வேளாண்/தோட்டக்கலை துறை குறித்த விழிப்புணர்வு இல்லாததும் உயர்த்தப்பட்ட பசுமைக்குடில்கள் ஊக்கப்படுத்துவதற்கு தடையாக இருக்கிறது. சூரிய செயலற்ற கருத்துகளான தெற்கு பார்க்கும் கதிர்கள்,அதிக வெப்ப பொருள், மற்றும் காப்பு பொருட்கள் ஆகியவற்றை தனி வீடுகள், பொது கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற இதர கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.

வெற்றிக்கதை 2

கிராம இந்தியாவிற்கு அளிக்கும் உயிர்பொருள் ஆற்றல்

கர்நாடக கிராமங்களின் கதை
பொி (கிராம இந்தியாவிற்கு உயிர்பொருள் ஆற்றல் ) திட்டம் உருவாக்கி, பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டை குறைப்பதற்கு உயிர்பொருள் தொழில்நுட்ப செயல்பாடுகள் செயல்படுத்தி, மேலும் நிலைத்த மற்றும் பங்கேற்புடன்கூடிய அனுகுமுறையை கிராம ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஊக்கப்படுத்துகிறது. இந்த முயற்சியின் மொத்த பட்ஜெட் 8,623,000 டாலர்கள் ஆகும். மேலும் இந்தத் திட்டத்தில் கர்நாடக அரசு, கிராம பஞ்சாயத்து மக்கள் பரதிநிதிகள், தனியார் முதலீட்டாளர்கள், மேலும் திட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், உலக சுற்றுச்சூழல் கட்டமைப்பு மூலம் வழங்கப்படம் நிதி ஒன்றிணைந்த தேசிய வளர்ச்சி திட்டம், மேலும் இந்தியா கனடா சுற்றுச்சூழல் கட்டமைப்பு மூலம் துணை-நிதி, கர்நாடக அரசு, புதிய மற்றும் புதுபிக்கதக்க வள அமைச்சகம், இந்திய அரசு, மற்றும் பயனீட்டாளர்கள் ஆதரவாக உள்ளன. கர்நாடகா, தும்கூர் மாவட்டத்தில் உள்ள 28 கிராமங்கள் உள்ளடக்கிய ஐந்து கூட்டு கிராமங்களில் 2001 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் உயிர்ஆற்றல் தொழில்நுட்பங்களான உயிர்பொருள் வாயுசெயல்பாடிலிருந்து உயிர் மின்சாரம் தயாரித்தல், சமூக உயிர்வாயு கலன், மற்றும் சிறப்பான சமையல்அடுப்புகள் உட்பட்டிருக்கிறது. உயிர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட மரத்தோப்புகளிலிருந்து உயிர்பொருளை பயன்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளது.

ஆற்றல் அளிக்கும் தோப்புகள், உயிர்பொருள் வாயுக்கலன்கள், மற்றும் சக்தியின் வெளியேற்றம்
ஆயிரம் மெகாவாட் உயிர்பொருள் வாயுக்கலன் செயல்படுத்துவதற்கு தோராயமாக 3000 ஹெட்டேர் நிலமும், அதன் உயிர்பொருள் மகசூல் வருடத்திற்கு 12,000 டன் (ஒரு வருடத்தில் ஒரு ஹெக்டேருக்கு 4.2 டன்கள்) தேவைப்படுவதாக கணிக்கப்படுகிறது. வாயுக் கலன்களுக்கு தேவையான உயிர்பொருள் சேகாிப்புக்கு தேவையான உதவி 2930 ஹெக்டாில் (1983 ஹெக்டேர் காட்டு நிலம் மற்றும் 947 ஹெக்டேர் மரம் அடிப்படையிலான சாகுபடி) மரப் தோப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது 81 சுய உதவிக் குழு உள்ள சுமார் 240 பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாய் அமைந்துள்ளது. இந்த பெண்கள் ஒரு மில்லியன் நாற்றங்காலை வளர்த்துள்ளன. மரம் அடிப்படையிலான சாகுபடியில் 30 குடும்பங்களை ஈடுபடுத்தி பணியமர்த்துகின்றனர்.

வாயு அடிப்படையிலான கலன்கள் மூன்று கூட்டு கிராமங்களில் உருவாக்கப்பட்டது. கபிகிர் பகுதியில் 500 கிலோ வாட் அளவு கொண்ட அமைப்பினை நிறுவப்பட்டது (ஒவ்வொரு 100 கிலோ வாட்டிற்கும் இரண்டு வாயு கலன்கள் இருக்கும், ஒன்று 100 சதவிகிதம் உற்பத்தி வாயுவை பயன்படுத்தி 200 கிலோ வாட்டும், மற்றோன்று 100கிலோ வாட் இரட்டை எரிவாயுடன்) இந்த கலன்கள் ஒன்று சேர்ந்து 1,520,000கிலோ வாட் ஹவர் மன்சாரத்தை ஜுன் 2012 வரை உற்பத்தி செய்யப்பட்டது. கூடுதலாக, சீபனயனபல்யா மற்றும் போரிகுன்டே ஆகிய பகுதிகளில் ஒவ்வொன்றிலும் 250 கிலோவாட் வாயு அடிப்படையிலான சக்தி கலன்கள் அமைக்கப்பட்டது. சேகாிக்கப்பட்ட மின்சாரத்தை பெங்களுரூ மின்சார விநியோக நிறுவனத்திற்கு சேர்க்கப்படுகிறது. உற்பத்தி செய்து மற்றும் விநியோகம் ஒன்றாக இணைத்து மின்சார விநியோக அமைப்பு மூலம் 11 கிலோவாட் மாற்று கட்டமைப்பில் செலுத்தப்படுகிறது. பொி சமூகம் மற்றும் டோவின்கரே கிராம பஞ்சாயத்தும் முதல் முறையாக மின்சாரம் விற்பனை ஒப்பந்தம் பெங்களுரூ மின்சார விநியோக நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டது. மாநில மின்சார பயன்பாட்டிற்கு உற்பத்தி செய்த மன்சாரத்தை விற்பதற்காகவே இந்த ஒப்பந்தம். ஒரு கிலோ வாட் ஹவருக்கு ரூ.2.85 நிர்ணயிக்கப்பட்டது.

வாயு மின்சார கலனின் செயல்பாடு உயிர்பொருள் உற்பத்திக்கு மரங்கள் வளர்க்கப்படுகிறது. கிராம வன குழுமம் இந்த மரங்களை பராமாிக்கின்றனர். கிராம உயிர்பொருள் ஆற்றல் மேலாண்மை குழுமம் மற்றும் பஞ்சாயத்தும் ஒன்றுசேர்ந்து உயிர்பொருள் கொள்முதல் மற்றும் வாயு கலன் மேம்பாடு குறித்த முடிவுகளை எடுக்கின்றனர். உற்பத்தி செய்த மின்சாரத்தை அளந்து சேகாிக்கும் மின்சார அமைப்பில் செலுத்தப்படுகிறது. இந்த இணைப்புகளின் வரைப்படத்தை படம் 1 கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சமூகத்துடன் ஈடுபடுவது

நான்கு தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து ஆற்றல் பிரச்சனைகள் மற்றும் திட்டத்தை ஊக்கப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கு சமூகங்களுடன் பணிப்புரிதல். அவை பர்ட்-கே, மதர்,ஐ.வெளய்.டி, ஸ்ரீஜன் ஆவர். ஆழ்துளை கிணறு, சொட்டுநீர் பாசனம் அமைத்தல், சமூக சாண எரிவாயு கலன்கள் கட்டுதல், கிராம குடும்பங்களுக்கு உயர்த்தப்பட்ட சமையல் அடுப்பு ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றனர். சமூக ஆழ்துளை கிணறு, சாண எரிவாயு கலன்கள், மற்றும் உயர்த்தப்பட்ட சமையல் அடுப்புகள்.127 குடும்பங்கள் பயனடையும் வகையில் 56 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டது. ஆழ்துளை கிணற்றின் தண்ணீரை மூன்று முதல் நான்கு அருகே உள்ள குடும்பங்கள் பகிர்ந்துகொள்வர்.இந்த கிணற்றோடு சொட்டு நீர்ப்பாசனம் இணைத்து, அதன் மூலம் தண்ணீர் சேமிப்பது மற்றும் 300 அடி ஆழத்திலிருந்து பம்ப் செய்வதற்கு தேவையான ஆற்றல் குறைவதை உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டம் அரசின் மற்றொரு திட்டமான கிராம சரக்கு மேம்பாட்டுத் திட்டமும் கிடைத்துள்ளது. கிராமத்தினர் பயனடைவதற்கு நிண்ட நேரத்திற்கு நல்ல தரமான மின்சாரத்தை உறுதிப்படுத்துகிறது.

இதர முயற்சியில் 51 சிறிய சமூக சாண எரிவாயு கலன்கள் கட்டப்பட்டு, அதன் மூலம் 95,000 மீ3 மேல் உயிர் எரிவாயு உற்பத்தி செய்யப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. வீடுகளில் உயர்த்தப்பட்ட சமையல் அடுப்பு எரிவாயு பயன்பாடு மற்றும் உள்ளே காற்று மாசுபாடு குறைவதற்கு உதவுகிறது.

சமூக தண்ணீர் பாசனத்திட்டம்

இந்தத் திட்டத்தின் மிக முக்கிய முயற்சிகளில் ஒன்றாக, தண்ணீர் பயன்பாட்டு சங்கம் கருதப்படுகிறது. இந்த திட்டப் பகுதி பெரும்பாலும் மானாவாரி நிலத்தை சேர்ந்தது. மேலும் திட்டப்பகுதியில் உள்ள பொரும்பான்மையான விவசாயிகள் மானாவாரி பயிர்களான கேழ்வரகு மற்றும் வெள்ளை சோளம். தொடக்கப்புள்ளி செயல்பாடாக , மேலும் நீண்ட கால அனுகுமுறையாக, சமூக நீர்ப்பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு வழிநடத்தப்படுகிறது. ஆழ்துளை கிணறுகள் திட்ட கிராமங்களில் தோண்டப்பட்டன. மேலும் உயிர்பொருள் அடிப்படையாக கொண்ட மன்சார உற்பத்தியை இந்த திட்டத்தின் கீழ் முக்கியமாக செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மிக முக்கிய காரணம் என்னவென்றால் தற்போது உள்ள வாழ்வாதாரத்தை உயாத்துதல், வருமானத்தை பெருக்குதல், ஏழை விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துதல், எந்த சேவைக்கு கட்டனம் செலுத்தும் வழக்கத்தை கொண்டுவர வேண்டும். மிக முக்கியமாக இந்த செயல்பாடுகள் அறிமுகப்படுத்தி, பொருந்தக்கூடிய மேடைகளில் கலந்துரையாடுவதற்கு, ஒழுங்முறை உருவாக்குவதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மேலும் விதிகள் மற்றும் நியமங்கள் ஆகியவை பொிய சமூகத்தை இணைக்கிறது. இது சமூக உரிமையை பொியளவில் செயல்படுத்தியது மேலும் ஒன்றாக பணி செய்வதன் மனநிலை ஏற்படுகிறது.

சமூகத்தில் திட்டத்தின் தாக்கம், அதன் பரவலாக்கம்: 
இந்த திட்டத்தின் கீழ், கொரட்டகரே தாலுக்கா மூன்று கிராமங்களில் ஒரு மெகாவாட் உயிர்பொருள் வாயு சக்தி கலன் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு ஒன்று சேர்ந்து தோராயமாக 1.5 மில்லியன் யுனிட்டுகள் 30 ஜுன் 2012 உற்பத்தியை செய்யப்பட்டது. இது சுமார் 1200 டன் கனிம வாயுக்கள் வெளியிடுவது குறைத்துள்ளது. சென்ற வருடம் செய்த ஆய்வில் மின்சார உற்பத்தி செலவு ஒரு கிலோவாட் ஹவருக்கு ரூ.4.50 முதல் 8.28 விரை ஆகிறது. இது வாயுக்கலனின் கொள் காரணி, தரம் மற்றும் உயிர்பொருளின் செலவு, செயல்படுத்தும் மேம்பாடு, மற்றும் பல வகையான காரணிகளை சார்ந்துள்ளது. ஒரு மின்சார விநியோக அமைப்பிற்கு விற்பதினால், ஒரு கிலோவாட் ஹவருக்கு ரூ.2.85 மட்டுமே இலாபம் கிடைக்கிறது (அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட விலை). விலை நிர்ணயம் சிறியளவில் உற்பத்தி செய்யும் உரிமையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தீர்வு காண்பது அவசியம். சிறியளவில் உற்பத்தி செய்பவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அளவிட முடியாத பயன்களான பயிர் வளர்ச்சி, கிராம பொருளாதாரத்தை அதிகாித்தல் மற்றும் வேலை பெறுகின்றனர். 3000 ஹெட்டோில் பயிரிடப்பட்ட உயிர்பொருள் தரும் மரங்கள் வருடத்திற்கு 12000டன் மகசூல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், வருடத்திற்கு 5000 டன் மட்டுமே மகசூல் அளிக்கிறது.

வருடத்திற்கு தோராயமாக 26,580 டன் கனிமத்தை வெளியிடுவதை மரங்கள் வளர்த்து பயன்படுத்துதல் மூலம் தடுப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. 51 வாயு மின்சார கலன் நிறுவப்பட்டது.மேலும் 2010 ஆம் நடத்தப்பட்ட ஆய்வில் 40 கலன்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் 148 டன் கார்பன் டை ஆக்ஸைடை இது குறைக்கிறது. திட்ட விளக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளின் தரவுகள் வலைதளத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அடிப்படை தரவுகளை ஏற்றம் செய்த முதல் திட்டமாகும். உயிர்பொருள் மின்சாரத்தின் உற்பத்தி செலவின் பகிர்மான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 57% எரிபொருள் (உயிர்பொருள்), 18% மாறாச் செலவு, 15% மேம்பாட்டு செலவு மற்றும் 10% கூலி . இந்த திட்டம் நிறைய சமூக பயன்களை அளித்துள்ளது. மொத்த ஈட்டிய தொகை 45% சமூகத்துடன் இருப்பதால் இந்த பயன்களை அடைகின்றனர். திட்டத்தில் உள்ள 28 கிராமங்களில் பரவி 127 விவசாயிகளுக்கு 32 ஆழ்துளை கிணறுகளும், 20 சமூக ஆழ்துளை கிணறுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர் சாகுபடி தீவிரத்தை அதிகாித்தது – தற்போது வருடத்தில் இரண்டு பயிர்களுக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது.இதனால் பண்ணை வருமானம் 20%-30% வரை அதிகாித்துள்ளது (தற்போது ரூ. 40000-50000 வரை வருமானம் / ஏக்கர்).
26 உயிர்-ஆற்றல் மேலாண்மை குழுமங்கள், 26 கிராம வன குழுமங்கள், மற்றும் 72 புதிய சுய உதவி குழுக்கள், மற்றும் திடமான 68 பழைய சுய உதவி குழுக்கள் 2244 குடும்பங்களுக்கு பயனளித்தது (74%), 31 தண்ணீர் ஒருங்கிணைந்த சங்கங்கள் (216 குடும்பங்கள்) மற்றும் 33 சாண எரிவாயு பயன்படும் குழுக்கள். இந்தத் திட்டத்தில் 1மெகாவாட் மின்சார கலனில் ரூ. 7 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக செயல்படும்போது, ஒரு வருடத்திற்கு விற்பனை சக்தியை ரூ.1.5-2.5 கோடி வருமானம் ஈட்டமுடியும். தும்கூர் மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு மனித வருமானம் ரூ.12000 ஆக நினைத்துக்கொண்டால், 8000 மனிதர்கள் கொண்ட முழுமையான கிராம பஞ்சாயத்தில், வருமானம் ரூ.9 கோடியாக இருக்கும். இந்த திட்டம் 4 கிராம பஞ்சாயத்தில் பரவியிருப்பதால் , மொத்தம் ரூ.35 கோடி வருமானம் ஆகும். ஆகையால், இந்த பசுமை தலையீட்டினால் ஒட்டுமொத்த வருமானத்தை 7% – 8% விரிவுபடுத்துகிறது இது வேலைவாய்ப்பு கூடுதலாக அளிக்கிறது. உயிர்பொருள் மின்சார உற்பத்திக் கலன்களையும் சேர்த்து அதிகமாக உயிர்ஆற்றல் செயல்பாடுகளின் மேலாண்மை செய்வதற்கு சுமார் 100 மக்களுக்கு வேலையும் அளிக்கப்படும். கூடுதலாக, மரம்வளர்ப்பு மேலாண்மை வேலைவாய்ப்பும், நாற்றங்கால் வளர்ப்பின் மூலம் பசுமை வெளியிடுதல்.

பரவலாக்கத் திறன்

பொி அடிப்படை சரக்குகளின் நுனி வால் உதவி அளித்ததன் பிரதிபலிப்பின் மாதிரியாகும்.இது உள்ளூர் சமூகங்கள் மையசக்தி விநியோகத்தை காண்பிக்கிறது.விலை நிர்ணயம் மீண்டும் கட்டமைக்குமபோது, குறிப்பாக உப மெகாவாட் அளவுகோலில் பரதிபலிப்பதற்கும், ஊடுருவுவதற்கும், தொழில் உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்கும், கிராம மக்கள் பயனடைவதற்கும் இதற்கு திறன் இருக்கிறது.பொது கலன்களில் போக்குவரத்து இழப்பு இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும். மேலும், இடமாற்றத்தின்போது ஏற்படும் ஆற்றல் இழப்பின் விலையும் இருக்கிறது. வேகமாக வளரக்கூடிய மரங்களான கருவேலம், லேண்ட்டனா கேமரா, சுபாபுல், கிளேரியா மற்றும் மூங்கில் ஆகியவை ஆற்றல் கொடுக்கும் மரங்களாக இருக்கிறது. இது எரிவாயு விநியோக இணைப்புகளை வழங்குகிறது பசுமையை விரிவடைகிறது, மேலும் கனிம வெளியீட்டை தடுக்கிறது.

அட்டவணை 1 : திட்டத்தில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்கள்

வரிசை எண் தொண்டு நிறுவனம் கூட்டு கிராமங்கள்
1 பர்ட் – கே கொரட்டகரே (5 கிராமங்கள்)
2 பர்ட் – கே மதுரகிரி (5 கிராமங்கள்)
3 மதர் கப்பி (7 கிராமங்கள்)
4 ஐஓய்டி  தும்கூர் (5 கிராமங்கள்)
5 ஸ்ரீஜன் சிரா (6 கிராமங்கள்)

 


Source: V K Jain and S N Srinivas (Eds.),
‘Empowering rural India the RE way: inspiring success
stories’, © Ministry of New and Renewable Energy,
2012, ISBN: 978-81-920040-0-6

மூலம்:  லீசா இந்தியா, டிசம்பர் 2022, வால்யூம் 24, இதழ் 4

அண்மைய இடுகைகள்