ஒருங்கிணைத்தல் – பண்ணையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நம்பிக்கை


பல உத்வேக விவசாயிகள், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லாத வகையில் உணவு உற்பத்தி குறித்த அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை மீண்டும் சமூகத்துக்கு அளிக்கின்றனர். இப்படித்தான் அறிவானது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பாரம்பாியமாக கடக்கிறது. ஆனால், தற்போது விவசாயிகள் ஒரு படி முன்னேறி, நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தை ஒருங்கிணைத்து, பயிர் சாகுபடியில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்ல மற்றும் கற்பிக்க பயன்படுத்துகின்றனர். திரு. ஆயுப் அவர்கள், உத்வேகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடிக்கும் பண்ணை ஆசிரியர் ஆவார்.


சீதோஷன மாற்றம் மற்றும் உணவு உத்திரவாதம் இன்று சந்தித்து வரும் நிலையை, ஒரு முழுமையான அனுகுமுறையின் மூலம் வேளாண்மையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பது அவசியம். வழக்கமான கற்றல் முறையில், வேளாண் உயிர்ச்சூழலின் செய்முறை விளக்கங்கள் பெறிதாக கருதுவதில்லை. இன்றும்கூட, நமது கல்வி முறையில் இந்த எண்ணங்களிலிருந்து மிக தொலைவில் உள்ளது. சில சாத்தியமுள்ள முடிவுகளான ஊட்டச்சத்து தோட்டங்கள் வேளாண் பள்ளிகள் போன்ற தலைப்புகள் அனைத்தும் சில தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் சேர்த்து, வேளாண்மை குறித்து இளைஞர்கள் அரிந்துகொள்ள முயற்சி எடுக்கப்படுகிறது. சில ஆர்வமிக்க விவசாயிகள் அவர்களின் கள அளவு அனுபவத்தை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இதுபோன்ற ஒரு விவசாயிதான் திரு. ஆயுப் தொட்டோளி, கேரளா, வயநாட்டில் மனனத்வாடி என்ற இடத்தை சர்ந்த இவர், தனது சமூகத்துடன் அவருடைய அனுபவத்தை ஆர்வத்துடன் பகிர்ந்துவருகிறார். திரு.ஆயுப் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், வெளியாட்கள் ஆகியோருக்கு வேளாண்மையை இலாபகரமாக எப்படி செய்வது, இயற்கை சாகுபடி, பல்வேறு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பல செயல்பாடுகளை தனது பண்ணையிலேயே வகுப்புகள் நடத்துகிறார். மொத்தத்தில் திரு. ஆயுப் தற்போது வேளாண்மை குறித்து ஆர்வமுடன் கற்றுகொள்ளும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார்.

ஒரு தொடக்கம்
திரு. ஆயுப் அவர்கள் வழக்கமான விவசாயி அல்ல. பொருளாதாரத்தில் பட்டம் பெற்று பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். 2004 ஆம் ஆண்டு, வயதான தந்தைக்கு ஏற்பட்ட ஆரோக்கிய குறைப்பாட்டினால், நல்ல சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த வேலையை விட்டு, தன் சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்ய முடிவு செய்தார்.

விவசாயம் அவருக்கு புதிது என்பதால், தொடக்கத்தில் திரு.ஆயுப் அவர்கள் பல போராட்டங்களை சந்தித்தார். இவர் முதலில் வாழை மற்றும் பல காய்கறிகளை சாகுபடி செய்தார். பின்னர் தனது பண்ணையை குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து, நாள் மற்றும் மாத வருமானம் நிலையாக பெறுவதற்கு பல்வகைமை முறையை புகுத்தினார்.பப்பாளி போன்ற சில பயிர்களை ஒரே நேரத்தில் மொத்தமாக அறுவடை செய்யாமல், வருடம் முழுவதும் பழம் கிடைக்கும், செடிகள் நடும் காலத்தை மாற்றினார். எனினும் விற்பனை சவால்களை சந்தித்தார். இரசாயனம் இல்லாமல் நல்ல தரமான காய்கறிகளை உற்பத்தி செய்தாலும் பல்பொருள் அங்காடியில் இருப்பதை போன்று காண்பதற்கு கவரும் வண்ணம் இல்லை என்பதால், குறைந்த விலையே கிடைத்தது. இந்த சவால்களை சந்திக்க, உற்பத்தி செய்த பொருட்கள் யாவையும் பண்ணையிலிருந்தே விற்பனை செய்தார். நேரடியாக விற்பனை செய்ததால் அதிக லாபம் கிடைப்பதற்கு உதவியாக இருந்தது, குறிப்பாக சுற்றுலாப் பயனிகள் வாங்கி செல்கின்றனர். உள்ளூர் ஊடகமும் இவருக்கு உதவி செய்தது. காலங்கள் செல்ல, திரு.ஆயுப் அவர்களின் ஆர்வம் மற்றும் முயற்சித்திறன் ஆகிய பண்புகளின் காரணமாக அவரது பண்ணையில் இலாபம் ஈட்ட முடிந்தது.

திரு. ஆயுப் அவர்கள் புதிய யுக்திகளை கடைப்பிடித்து சக விவசாயிகளை தனது பண்ணைக்கு வரவழைக்கிறார். கடினமான சீதோஷன நிலைக்கு கடின இயல்பையுடைய மூங்கில் சாகுபடியை துவக்கினார்.இவர் அதிக அடர்த்தியான எண்ணிக்கையில் பயிர் செய்வதற்கு வியட்நாம் முறையில் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் இவருக்கு அதிக அங்கீகாரம் மற்றும் வருமானம் அளித்தது. தற்போது நல்ல பல்வகைமை கொண்ட பண்ணையாக பல்வேறு பழங்கள், காய்கறிகள், மூங்கில், மீன்கள் மற்றும் நாட்டு மரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நுகர்வோரின் தேவையை கருத்தில் கொண்டு, இவர் சாகுபடி தொழில்நுட்பங்கள் கட்டுப்படுத்தி முழுவதுமாக இயற்கை முறையில் பின்பற்றி செலவில்லா சாகுபடி, இயற்கை சாகுபடி மற்றும் இதர இயற்கை மேம்பாட்டுத் தொழில்நுட்ப செயல்பாடுகளில் ஈடுபடுத்தினார்.

ஒழுங்குபடுத்தப்பட்ட நம்பிக்கை
பல வருட தொடர் கற்றல் வழியாக, திரு. ஆயுப் அவர்கள் தற்போது பண்ணைத் தொழிலை வெற்றிகரமாக செய்துவருவதாக பெருமையுடன் உறுதிபடுத்துகிறார். ஒருவருடைய சொந்த அனுபவம், மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் அறிவு ஆகியவற்றிலிருந்து கற்றல் ஏற்படுகிறது என்று இவர் திடமாக நம்புகிறார். இவரும், அனுபவமுள்ள விவசாயிகள், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை படித்து, கருத்தரங்குகளில் பங்கேற்பது, மற்றும் இணையதளம் ஆகியவற்றிலிருந்து கற்று தனது பயனத்தை துவக்கினார்.
சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு, வயநாட்டில் உள்ள எம்.எஸ்.எஸ்.ஆர்.எப். சமூக வேளாண்-உயிர்பல்வகைமை மையத்தில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள், திரு.ஆயுப் -பை பயிற்சி எடுக்குமாறு ஊக்கப்படுத்தினார். பல்வேறு மக்கள் மற்றும் ஊடகங்களிலிருந்து பெற்றுகொண்ட அறிவை, மற்றவர்களுக்கு இந்த அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வது எனது பொறுப்பு என்று உணர்ந்தார். எம்.எஸ்.எஸ்.ஆர்.எப். மற்றும் இவரது குடும்பத்தின் உதவியுடன் விவசாயிகள், ஓய்வு பெற்றவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு வகுப்புகள் எடுக்கத் துவங்கினார். இவர் வகுப்பு எடுக்கத் துவங்கும்போது கற்றல் பாிமாற்றம் மிக முக்கியம் என்று உணர்ந்தார். பல வருடங்களாக கற்பித்தல் மூலம் பார்வையாளர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுகொண்டேன் என்றும், தகவல் பாிமாற்றம் இருபுறமும் இருக்க வேண்டும் என்றும் கூறினார். சென்ற வருடம் மட்டும், கோவிட் கட்டுபாடுகளை பின்பற்றி 1000 பேருக்கு மேல் வகுப்புகள் நடத்தினார். திரு. ஆயுப் அவர்கள், முக்கியமாக இயற்கை மேலாண்மை செயல்பாடுகள், சீதோஷனம் சார்ந்த செயல்பாடுகள், வியட்நாம் மிளகு சாகுபடி மாதிரி, கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு மேம்பாடு, பப்பாளி சாகுபடி, மண் மேம்பாடு, உயிர் உரங்களான ஜீவாமிர்தம், மீன் அமினோ போன்றவற்றின் உற்பத்தி குறித்த பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் எடுத்தார் . இவர் குறிப்பாக நிலைத்த செயல்பாடுகளை மையமாக வைத்து ஒட்டுமொத்த உயிர்சூழலையும் மனதில் வைத்து வகுப்புகளை கையாண்டார். இவருடைய பயிற்சி செய்முறை விளக்கத்தோடு சமமாக கலந்து கள அனுபவங்களை அதன் உள்கருத்தை பங்கேற்பாளருக்கு வளக்கத்தை அளிப்பார். அவருடைய பொருளாதார பன்னனி மற்றும் கள அனுபவத்தோடு, திரு.ஆயுப் -பின் வகுப்புகள் சிறந்த அறிவு கலவையோடு பயிற்சியாளருக்கு அளிக்கப்பட்டது.

புதிய முறைகளை பின்பற்றும் சமயத்தில், திரு. ஆயுப், பல்வேறு காய்கறிகள், பழங்கள், நாட்டு மரங்கள் மற்றும் கால்நடை ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிலைத்த முறையை பண்ணையில் ஏற்படுத்தி பயிர் பல்வகைமையை மேம்படுத்துவதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பதை உறுதிப்படுத்துகிறார். அவருடைய சொந்த வீடு, நாட்டுப்பசு இரகங்கள், கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் பல்வேறு பழ இரகங்கள்(மா, கொய்யா, வாழைப்பழம், பப்பாளி, ட்ரகான் பழம், சபோட்டா, லிட்சி, ரம்புட்டான், சீத்தாப்பழம், மல்பாி, அற்புத அல்லது அதிசய பழம், வெண்ணை பழம், மங்குஸ்தான், மாதுளம் பழம்), காய்கறிகள், காப்பி, பாக்கு, தென்னை, மிளகு, ஏலக்காய், மூங்கில், முருங்கை, வேம்பு மற்றும் இதர நாட்டு மரங்கள் ஆகியவற்றின் வீடாக இருக்கிறது.

திரு.ஆயுப்பின் உத்வேகப்படுத்தும் செய்தி என்னவென்றால், இவர் பயிற்சி எடுக்கும்போது இலாபம் எடுப்பதும், நிலைத்த வேளாண்மை தொழில்நுட்பங்கள் இரண்டையும் இணைக்கும் முறையை அழகாக கூறுவார். இவர் பயிற்சி எடுக்கும்போது பண்ணையிலேயே எடுப்பதை திடமாக நம்புகிறார். ஏனென்றால், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்கள், மண், நுண்ணுயிர், பூச்சிகள் உட்பட மொத்த வேளாண் உயிர்ச்சூழல் முறையையும், அதன் பணியை புரிந்துகொண்டு சமன்பாட்டை மேம்படுத்துவது அவசியம்.
‘என்னுடைய மூதாதையர்கள் எனக்கு இந்த நிலத்தை பாிசுத்தமாக அளித்தனர், அதேபோல் நான் அடுத்த சந்ததியினருக்கு பாிசுத்தமாக அளிக்க வேண்டும்;” என்று கூறினார்.

வகுப்புகளைத் தாண்டி, பலர் பண்ணையை பார்வையிட்டு தொழில்நுட்பங்களை கற்றுசெல்கின்றனர். ஒவ்வொரு வருடமும், வேளாண்மை பல்கலைகழகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர்கள் பார்வையிட்டு அவர்களிடம் அனுபவ அறிவை பகிர்ந்து கொள்கின்றனர். வேளாண்மை மற்றும் இதர அரசு துறை மற்றும் தொண்டு நிறுவனங்களிலிருந்து அலுவலர்கள் இவரது பண்ணைக்கு களபார்வை ஏற்பாடு செய்வர்.

திரு.ஆயுப் அவர்கள் சமூக ஊடகத்தில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளார். பல விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், அவருடைய பயிர் மேலாண்மை, விற்பனை போன்ற தலைப்புகளில் தனது அனுபவங்கள் மற்றும் அதனை சார்ந்த தகவல்கள் குறித்து முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் விளக்கமளிக்கிறார். முகநூலில் மட்டும், இந்தியாவில் உள்ள சுமார் 10,000 விவசாயிகளை அடைந்துள்ளார். இவருடைய முகநூல் பக்கத்தை காண, வேளாண்மை குறித்து அவருடைய உள்ளார்ந்த அர்த்தத்தை பகிர்ந்துகொண்ட பகுதியை https://www.facebook.com/ayoobkrishiwayanad.thotoli.

இவர் அளிக்கும் பயிற்சி இவருக்கு பெருமையை தந்தது. பொிய ஹோட்டல்கள், தோப்பு மற்றும் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல். பல தலைப்புகளில் அவரது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைப்பர். திரு.ஆயுப் அவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலிருந்து பல பாராட்டுகளை வழங்கி கவுரவித்துள்ளனர்.

எதிர்காலத்தின் நம்பிக்கை
வரும் வருடங்களில், திரு. ஆயுப் சமூக ஊடகம் மற்றும் உள்ளூர் இணைப்புகளை பயன்படுத்தி விவசாயிகளுக்கு நல்ல விற்பனை இணையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். மற்றொரு திட்டம் என்னவென்றால், பொது மக்களுக்காக இயற்கை பண்ணையை உருவாக்கி வழிநடத்துதல். அதாவது இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஆர்வம் கொண்ட மக்களுக்காக ஒரு சிறிய நிலத்தில் பண்ணையை மேம்படுத்துதல். இந்தத் திட்டம் சார்ந்த செயல்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது, மேலும் பல பேர் ஏற்கனவே இதுகுறித்து ஆர்வம் தெரிவித்துள்ளனர். திரு.ஆயுப் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் வேளாண்மையை செயல்படுத்தி, பயிற்சி அளித்தும், சக விவசாயிகளிடமிருந்து புதிய தகவல்களை கற்றுகொள்வதில் உறுதியாக இருக்கிறார். அரசுக்கு அவர் முன் வைக்கும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், சீதோஷன மாற்றங்களால் ஏற்படும் மோசமான சவால்கள், காட்டுஇனங்கள் குறித்த பிரச்சனைகள், அதிக இரசாயன பயன்பாடு மற்றும் அறிவியல் மற்றும் செயல்பாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி ஆகியவற்றை மனதில் கொண்டு விவசாய சமூகங்களுக்கு ஒரு கொள்கை உதவியை அளிக்க வேண்டும் என்பதுதான்.

பெட்டி செய்தி 1 : திரு. ஆயுப் அவர்கள் பகிர்ந்துகொண்ட சில தொழில்நுட்பங்கள்
வியட்நாம் மிளகு சாகுபடி முறை
வியட்நாம் மிளகு சாகுபடி முறையில், உயிரற்ற தாங்கி, அதாவது மிளகு கொடி படர்வதற்கு மரத்தைவிட சிமெண்ட் தூன் போதுமானது. இந்த முறை அதிக அடர்த்தியில் மரங்கள் வளர்க்கும் அனுகுமுறையை பின்பற்றவும், சத்துக்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் உதவுகிறது. எனினும், இந்த முறை குளிர்ச்சியான சீதோஷனத்திற்கு உகந்தது என்பதால், அதிக வெப்பத்தில் இந்த சிமெண்ட் தூணின் வெப்பம் பயிரை எதிர்மறையாக தாக்குகிறது.

பப்பாளி சாகுபடி
துவக்கத்தில், திரு. ஆயுப் அவர்கள் பப்பாளி சாகுபடியில் நிலையான சந்தை இல்லாததால் நஷ்டத்தை சந்தித்தார்.ஆனால் நடவு நேரத்தை மாற்றி, பப்பாளியில் சுரக்கும் பாலான ‘பப்பாயன்” என்ற பாலை அறுவடை செய்து நல்ல இலாபத்தை ஈட்டத் தொடங்கினார். இந்த அனுபவத்தை சக விவசாயிகளும் பயனடைய அவர்களிடமும் பகிர்ந்துகொண்டார்.

அர்ச்சனா பட், விபின் தாஸ், திவ்யா பி.ஆர்.


Archana Bhatt, Vipindas and Divya P R
MSSRF-Community Agrobiodiversity Centre
Puthoorvayal, Kalpetta, Wayanad
Kerala – 673577, E-mail: archanabhatt1991@gmail.com

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2022, வால்யூம் 24, இதழ் 2

அண்மைய இடுகைகள்