சிறந்த எதிர்காலத்திற்காக உணவு தினத்தன்று ஒன்றிணைவோம்
உணவு, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று, இன்னும் இலட்சக்கணக்காணோர் பசியாலும், சத்து குறைபாடுகளாலும் அவதிப்படுகின்றனர். இவற்றுக்கு தீர்வு காண, ஒவ்வொரு வருடமும், அக்டோபர் மாதம்16 ஆம் தேதி, உலக உணவு தினம் கடைப்படிக்கப்படுகிறது. உலக உணவு தினம் 2025, சிறந்த உணவுகள் மற்றும் எதிர்காலத்திற்காக கைகோர்போம் என்ற கருவை மையமாக வைத்து, உலகளாவிய பட்டினி மற்றும் உணவு உத்திரவாதமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கான அவசரத்தேவையை மேற்கோள்காட்டுகிறது. இதற்கு நிலைத்த வேளாண்மை, சாியான உணவு வினியோகம் மற்றும் பொறுப்பான முறையில் உட்கொள்வது மூலம் ஆரோக்கியமான பசியற்ற உலகை உருவாக்குவதற்கு, ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்படுகிறது. மதிப்பிடப்பட்ட 673 மில்லியன் மக்கள் பசியோடு வாழ்கின்றனர், அதனால் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு உடனடித்தேவை இருப்பதாக மேற்கோள் காட்டுகிறது.
ஏ.எம்.இ நிறுவனம்,இருபத்தி ஐந்து ஆண்டுகளாக, நிலைத்த வேளாண்மையை ஊக்குவத்து வருகிறது. இதனை பல்வேறு வல்லுநர்களான விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலதரப்பட்ட வளர்ச்சி முகமைகள் மூலம் பணிசெய்து வருகிறது. இந்த பயணத்தின்போது, நிறுவனத்தின் குறிகோளை உணர்ந்து உயிர்ச்சூழல் வேளாண்மைகளை, பல அடுக்கு வல்லுநர்களின் குழுவிற்கு விரிவாக்கம் செய்தது. இங்கு பகிரப்பட்ட சில அனுபவங்கள் எதிர்காலத்தில், மேலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு முயற்சியை எடுப்பதற்கு ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உலக உணவு தினத்தில், பாதுகாப்பான உணவு உத்திரவாதம் கொண்ட சமூகத்தை உருவாக்க நாம் நமது கரங்களை கோர்ப்போம்.



