சிறிய வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுரா, செம்மை நெல் சாகுபடியிலிருந்து யுக்திமுறைக்கு வளர்ந்துள்ளது. இதற்கு நெல் உற்பத்தியில் மாநிலம் சுயசார்புடைய பல்வேறு வல்லுநர்கள் ஒன்று சேர்ந்தனர். திரிபுராவின் செம்மை நெல் சாகுபடி யுக்தி முறைகளிலிருந்து கற்ற பாடத்தை இது போன்ற பயிர்கள் மற்றும் கோட்பாடுகளை பின்பற்றினால் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான மாதிரியாக உறுதிபடுத்த முடியும்.
அடிப்படையில் விரிவாக்கம், ஆாரய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கத்தின் அறிவு முக்கோணத்தின் அங்கமாக இருக்கும் ஒன்றை உடைத்து, விவசாயிகள் அவர்களே ஒருங்கிணைப்பதற்கும், விவசாயிகள் சந்தையுடன் இணைப்பதற்கும் மேலும் சில கூடுதல் அங்கங்களான சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய தகவல் சேவைகளோடு இணைப்பதற்கும் உதவுகிறது. யுக்தி முறைகளின் செயல்பாடு, வளர்ச்சி, பரப்புதல் மற்றும் அறிவு பயன்பாடு ஆகிய காரணிகளை பொறுத்தே இருக்கிறது. அதே சமயம் வல்லுநர்கள் உறவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 1970 மற்றும் 1980 களில் வளர்ச்சி நாடுகளில் கொள்கை விவாதங்கள் மூலம் வேளாண் யுக்தி முறையின் புதிய தலைமுறை வளர்ச்சி மாதிரி உருவாகிறது. இது அறிவு மற்றும் இதர ஆதாரங்களை தானாக அளிக்கும் பல வல்லுநர்களை கொண்ட இணைப்புக்குழு, இதன் மூலம் இவர்கள் இணைத்து சமூக அல்லது பொருளாதார முறை அல்லது விளைப்பொருளை வளர்கிறது அல்லது உயர்த்துகிறது.
சமீபகாலமாக செம்மை நெல் சாகுபடி யுக்திகள் என்பது ஆராய்ச்சி முறையிலிருந்து, வல்லுநர்கள் மத்தியில் பரவலான செயல்பாடுகளோடு கலந்துரையாடல் முறைக்கு மாற்றப்பட்டது. வல்லுநர்கள் தனியாகவோ அல்லது நிறுவனமாகவோ அவர்களின் ஆர்வமுள்ள அனுபவமிக்க துறைகளில் உள்ளவர்கள் ஆவர்.
திட்டத்தால் பாதிக்கப்பட்ட இவர்கள் அச்சுறுத்துவதற்கும் அல்லது பலனுள்ளதாக திட்டத்தை ஆக்குவதற்கும் ஆற்றல் இருக்கிறது. அவர்கள் நிதியை பெற்றிருக்கலாம் சில நேரங்களில், வெளிபாடுகளை ஈடுபடுத்தும் விவாதமற்ற உரிமையும் அல்லது திட்டத்தில் ஈடுபடும் ஜனநாயக உரிமையும் இருக்கிறது. செம்மை நெல் சாகுபடி – ஒரு சமுதாய மற்றும் பொருளாதார ரீதியாக பார்க்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளை போல புதிது அல்ல. இதற்கு செம்மை நெல் சாகுபடியே ஒரு நல்ல உதாரணம். ஒன்றுக்கு மேற்பட்ட ரீதியில் வேளாண் யுக்தி முறைகளில் இது தனித்துவம் வாய்ந்ததாகும். ஜெசூட் ப்ரீஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்டு, வேளாண் மற்றும் வேளாண் சாராத பின்னணியில் பணிபுரியும் தனிமனிதன் மற்றும் நிறுவனங்கள் மூலம் பரப்பப்பட்டது. தொழில்நுட்பம் உருவாக்கிய பின்னர் செம்மை நெல் சாகுபடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மை பின்பற்றுபவர்கள், விரிவாக்க அலுவலர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு இதர செயல்புரிபவர்கள் செம்மை நெல் சாகுபடிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் இருப்பவர்கள் ஆகியவர்களின் மத்தியில் முழுமையாக கலந்துரையாடல் செய்முறையாக இருக்கிறது. இவை அனைத்திலும் வல்லுநர்கள், மொத்த செய்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இது பெரும்பாலும், பல்வேறு மட்டங்களிலும் மற்றும் விகிதாச்சாரத்திலும் உலகளவில் வெற்றிபெற்ற செம்மை நெல் சாகுபடி, இந்த வல்லுநர்களின் கலந்துரையாடல் மற்றும் பங்கேற்பும்தான்.
1999 ஆம் ஆண்டு இந்தியாவின் தெற்கு பகுதியான பாண்டிசோியில் உள்ள ஆரோவில் அன்னபூர்ணா பண்ணைகள் என்ற மக்கள் நல சமுதாய நிறுவனத்தில்தான் செம்மை நெல் சாகுபடி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு முகமைகளாக பரப்பப்படும் லீசா இந்தியா இதழில் இந்தத் தலைப்பு குறித்து வெளியிடப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் இயற்கை விவசாயக் குழு மற்றும் மக்கள் நல சமூகங்கள் செம்மை நெல் சாகுபடி பரப்பப்பட்டது. ஆந்திரா மாநிலத்தில் இந்தப் பணியை ஒருவரால் மட்டுமே செய்யப்பட்டது. மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில், மக்கள் நல சமூகம் மூலம் செம்மை நெல் சாகுபடி பிரபலப்படுத்தியது. தனித்துவம் வாய்ந்த திரிபுரா மாவட்டத்தில் மாநில விரிவாக்க அமைப்பு செம்மை நெல் சாகுபடியை கிராம குடும்பங்களில் கருவிற்கும் கொள்கை உருவாக்கம் வேலையிலும் எடுத்துசெல்லப்பட்டது.
திரிபுராவில் செம்மை நெல் சாகுபடி வேளாண் யுக்தி முறைகள்
10,492 ச.கி. பரப்பளவை கொண்ட சிறிய மாநிலத்தில் மொத்த பரப்பளவில் 27% பகுதி மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது அதில் 4% பகுதியில் மட்டுமே பாசனம் செய்யப்படுகிறது. மாநிலத்தின் உற்பத்தி மற்றும் நுகர்தல் என்ற ரீதியில் முக்கியப் பயிராக இருப்பது நெல். பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதார உத்திரவாதம் இதை நம்பியே இருக்கிறது. செம்மை நெல் சாகுபடி திரிபுரா மாநிலம் பொிய மாற்றத்தை உருவாக்கியதால், தற்போது செம்மை நெல் சாகுபடியை மக்கள் இயக்கமாக மாற்றிய பல்வேறு வல்லுநர்களின் ஈடுபாடு மற்றும் பங்கு புரிந்துகொள்ள ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மாநிலத்தில் பரப்புவதற்காக புழக்கத்தில் உள்ள உதவி அமைப்புகள் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்கிறது. மேலும் வல்லுநர்களின் யுக்திகளை அதிகாிக்க உதவுகிறது.
ஆய்வுக்காக, மாநிலத்தின் 4 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களை தேர்ந்தெடுத்து – மேற்கு திரிபுரா மாவட்டம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் தலைமை அலுவலகம் மற்றும் மாநில தலைநகரம் அகர்தாலாவில் அதிக பரப்பளவு, நெல் மற்றும் செம்மை நெல் சாகுபடி கீழ் உள்ளது. தலாய் திரிபுரா, நாட்டின் 250 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. அரிசி, மாநிலத்தின் முக்கியப்பயிர் என்பதால் மூன்று பட்டங்களுக்கும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆஷ் (ஏப்ரல் – ஜூன்), ஆமன் (ஜூலை – நவம்பர்) மற்றும் போரோ (டிசம்பர் – மார்ச்) மேற்கு திரிபுராவில் அரிசியை ஆமன் மற்றும் போரோ பட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தலாய் திரிபுராவில் ஆஷ் மற்றும் ஆமன் பட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனென்றால் போரோ பட்டத்தில் தண்ணீர் பற்றாகுறை இருக்கிறது.
ஆறு வல்லுனர் நிறுவனங்கள் , ஒவ்வொரு மாவட்டத்தில் 66 விவசாயிகளோடு ஆய்வு செய்யப்பட்டது.
பல்வேறு வல்லுநர்களுடன் பணிசெய்தல்
பொது நிறுவனங்கள் விவசாயிகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஆகியோர் மாநில செம்மை நெல் சாகுபடி யுக்தி முறைகளில் முக்கிய பங்கு வகிப்பது வல்லுநர்கள் ஆவர். வேளாண்மைத் துறை, திரிபுரா அரசு இந்த முறையின் தலைமை வல்லுநராக செயல்படுகிறது.தொழில்நுட்ப உதவி இந்திய நெல் ஆராய்ச்சி மையம், தெலுங்கானா, இந்தியா, மற்றும் நிதி மற்றும் கொள்கை உதவி வேளாண் அமைச்சகம், இந்திய அரசு வழங்குகிறது. மாநிலம் அரிசியில் சுயசார்புத்தன்மை அடைய செம்மை நெல் சாகுபடி ஒரு கருவியாக அறிமுகப்படுத்திய பின்னர், வேளாண்மை துறை அதிக ஆர்வம் கொண்டு பல ஆதாரங்களை மாற்றி மாநிலத்தில் செம்மை நெல் சாகுபடியை முன்னேற்றத்திற்காக செயல்பட துவங்கியது.
வேளாண்மைத் துறை, மாநிலத்தின் பெரும்பான்மை செம்மை நெல் சாகுபடி ஊக்குவிப்பாளராக, மிகவும் இன்றியமையாத நிறுவன இணைப்பு பெற்றுள்ளது. இது ஆராய்ச்சி கிளையோடும் நல்ல உறவை பகிர்ந்துக்கொண்டுள்ளது. மாநிலத்தின் வேளாண் ஆராயச்சி மையம், திரிபுரா அரசு, மாநிலத்தில் கள பாிசோதனைகள் செய்து, செய்முறை விளக்கங்கள், விரிவாக்க அமைப்போடு செய்து பெரும்பாலானவைகளை ஆராய்ச்சி ஈடுபடுத்தி, விரிவாக்க பணியாளர்களுக்கு தொழில்நுட்ப உதவியை அளிக்கிறது. இந்த மையம் செம்மை நெல் சாகுபடி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை பார்த்துகொள்கிறது. விரிவாக்கப்பணியாளர்கள் இந்த மையத்திலிருந்து தொடர்ந்து கூடுதல் தகவல்களை பெற்று தங்கள் பணிகளை முன்னேற்றப் பாதையில் செலுத்துகின்றனர். ஆராய்ச்சி மையத்தின் , ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை தாண்டி செம்மை நெல் சாகுபடி யுக்திமுறையில் தேவையான கொள்கை மாற்றங்களை செய்வதற்கு உதவியாக இருந்து நிலைத்திருக்க இந்த மையம் ஒரு வக்கீலாக மாறியது. எந்த கொள்கை அல்லது நிகழ்ச்சியை செயல்படுத்துவதற்கு, தேவைப்படும்போது வேளாண் துறை பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஈடுபடுத்தி கொள்கிறது, ஏனென்றால் கிராம மக்கள் இவர்களுடன் நெருக்கமாக இருப்பதால்தான். மத்தியுடைமையாக்கபடாத ஜனநாயக அமைப்பான பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செம்மை நெல் சாகுபடியில் முக்கிய ஆர்வம் எடுத்துகொண்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, வேளாண்மை துறையுடன் நல்ல நட்பு பகிர்ந்துகொள்கிறது ஏனென்றால் பல்வேறு திட்டம் செயல்படுத்தும் பயனீட்டாளர்களை தேர்ந்தெடுக்கின்றது. இந்த அமைப்புடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பது கிராம உள்கட்டமைப்பின் அங்கமாக இருக்கும் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் கிராமங்களில் செம்மை நெல் சாகுபடி பயனீட்டாளர்களை வேளாண்மைத் துறையை காட்டிலும் கிராம பஞ்சாயத்துகளால் தேர்வு செய்கிறது. சமூக விரிவாக்கப் பணியாளர்களையும் பஞ்சாயத்துகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மானியத்தில் கருவிகள்/இயந்திரங்கள், பாசனத்திற்கு தேவையான வசதிகள் போன்றவை பஞ்சாயத்து ராஜ் மையம் மூலம் நிதியுதவி அளிக்கிறது. இந்த மையம் கிராம அளவில் உள்ள அமைப்பாதலால் விவசாயிகளின் சூழ்நிலை மற்றும் தேவைகளை நன்கு புரிந்து சிறப்பாக முடிவு எடுக்க முடியும். இந்த மையத்தின் அறிவுரைகளை, வேளாண்மை துறையின் திட்டப்பிரிவு ஏற்றுகொண்டு கிராம அளவில் அவர்கள் செயல்படுத்துகின்றனர்.
வேளாண்மை துறையின் விரிவாக்க பணியாளர்கள், செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுடன் நல்ல உறவு மேம்படுத்தி வருகிறது. இது அவர்களுக்கு தேவையான தகவல் மற்றும் ஆதாரங்களை காக்கிறது. மேற்கில் வேளாண்மை துறையுடன் சுய உதவி குழு நல்ல உறவை வைத்திருக்கிறது. தலாய்யில் இது குறைவாக உள்ளது. தலாய் மாவட்டத்தை காட்டிலும் மேற்கு மாவட்டத்தில் சுய உதவிக் குழு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.
திரிபுரா அரசு, வேளாண் இயக்குநரகம் என்ற தலைமை நிறுவனத்தின் கீழ் உள்ள பண்ணை அறிவியல் மையம், தலாய் திரிபுரா தொழில்நுட்ப பரவலாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்மை நெல் சாகுபடி யுக்தி அமைப்புகள் சமீபத்தில் அறிமுகபடுத்தியதால், இதன் அதிக ஆர்வம் மாநிலத்தில் ஏற்கனவே முக்கிய வல்லுநர்களாக மாறிவிட்டன. மையத்தின் தேவைக்கு ஏற்ப பண்ணை அறிவியல் மையத்திற்கு ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டது.இது முழு கட்டுபாட்டின் கீழ் முடிவு எடுக்கப்படுகிறது. இது தலாய் செம்மை நெல் சாகுபடி யுக்தி முறைகளில் முக்கிய வல்லுநராக மாறின.
தொடர்பு சாதனம் அவர்களின் சொந்த பொது ஆர்வம், விரிவான வெளியீடுகள் மற்றும் ஒளிபரப்பாளர் மூலம் பணி செய்கிறது. தொடர் சாதனம் (செய்தித்தாள்கள், தொலைகாட்சி, ஆகாஷவானி, அகா;தாலா வானொலி நிலையம்), செம்மை நெல் சாகுபடி யுக்தி முறை வல்லுநர்களின் ஒருவராக இருந்து, அதனை விரிவாக எடுத்துசெல்லப்பட்டது (ஒவ்வொரு மாதமும் செம்மை நெல் சாகுபடியில் 2-3 கட்டுரைகள், வெளியீடுகள் மற்றும் வெற்றிபெற்ற விவசாயிகள் மற்றும் விரிவாக்க பணியாளரின் பேட்டியை ஒளிபரப்புதல்). மாநிலத்தில் விவசாயிகளின் வெற்றி கதைகள் செம்மை நெல் சாகுபடியின் தொழில்நுட்ப மற்றும் நிலைத்தத்தன்மை குறித்த நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரைகள் ஒளிபரப்பப்படுகிறது. இது கிராம மற்றும் வேளாண் வளர்ச்சி அதிகாரிகள், கொள்கை உருவாக்குபவர், அரசியல்வாதிகள், விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வடகிழக்கு இமயமலை பகுதியின் ஆராய்ச்சி மையம், திரிபுரா மாநிலத்தில் ஆராய்ச்சி மற்றும் பரப்பும் செயலில் தொடக்கத்தில் ஈடுபட்டது, தற்போது விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி சுய சார்பு நிலை அடைந்துவிட்டதால் மற்ற ஆராய்ச்சிக்கு மாறியது.
விவசாயிகள், இதர வல்லுநர்களுடன் அவர்கள் உறவு
மாநிலத்தில், விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி மிக முக்கிய வல்லுநர்கள் ஆவர். அடிப்படையில் அவர்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுகொள்ளும் நிலையில் இருந்தாலும் முழுமையான யுக்தி முறையில் அவர்களின் அனுபவம், ஊக்கம், உடனடியாக ஏற்றுகொள்ளும் தன்மை இவை அனைத்தும் செம்மை நெல் சாகுபடி முறையை மாநிலத்தில் பொிய வெற்றிபெற்றது. மேலும் விவசாயியிடமிருந்து விவசாயிக்கு விரிவாக்கம் என்ற முறை திரிபுராவில் செம்மை நெல் சாகுபடியில் இயக்கத்தை பொியளவில் கொண்டு செல்லும் உந்துசக்தியாக இருந்து சமூக யுக்தியை மாநிலத்தில் பரப்புவதற்கு உதவியது.
வேளாண்மை துறை, இதர விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, சுய உதவி குழுவின் உதவி ஆகியோரின் திடமான தகவல் உதவி விவசாயிகளுக்கு கிடைக்கிறது. விவசாயிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி இயக்கம் – வட கிழக்கு பகுதியின் ஆராய்ச்சி மையம், திரிபுரா மையம், மற்றும் மாநில வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுடன் குறைந்த உறவே வைத்திருக்கிறது. கிராமத்தில், கிராம அளவு பணியாளர்கள், செம்மை நெல் சாகுபடி தகவல் ஆதாரத்தின் நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்கின்றனர். விவசாயிகள் அவர்களுக்கு தேவையான தகவல் பெற்றுகொள்ள இந்தப் பணியாளர்களையே நம்பியிருக்கின்றனர். இதை தவிர வேளாண் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் க்ரிஷாக் பந்து ஆகிய அமைப்புகளிடமிருந்தும் அவர்கள் பெறுகின்றனர். செம்மை நெல் சாகுபடி பயனீட்டாளர்களை பஞ்சாயத்து தேர்வு செய்வதால், விவசாயிகள் எந்த உதவிக்கும் பஞ்சாயத்திடம் நெருக்கமாக இருப்பர். மேலும் இதர தேவைகளான மானிய இயந்திரங்கள், பாசனத்திற்கான பம்புசெட்டுகள் போன்றவையும் விவசாயிகள் பெறுகின்றனர். இதை தவிர, ஒரு வாரத்தில் ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகள் அமர்ந்து கிராமங்களில் சாதாரணமாக கூடி தகவல்களை பாிமாறிகொள்வர். விவசாய அறிவியல் மைய பணியாளர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை விவசாய வயல்களை பார்வையிடுவதால் தலாய் விவசாயிகள் கே.வி.வே வுடன் நல்ல நட்புறவு வைத்திருக்கின்றனர். வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மாநில வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் விரிவாக்க பணியாளரிடம் அதிக நெருக்கத்தோடு ஈடுபட்டிருப்பினும் நேரடி இணைப்பு இல்லை.
நன்கு கற்ற விவசாயிகள், கிராம அளவிலான பணியாளர் அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம், தெ.நெ.சா மற்றும் இதர பண்ணை விபரங்களை சேகாிக்க வாரம் ஒரு முறை பார்வையிடுகின்றனர். கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் இதர விவசாயிகளோடு மாலையில் சந்தித்து பண்ணை சார்ந்த கேள்விகளை கலந்துரையாடுவர். தொடர்ந்து தண்ணீர் ஆதாரம் இருக்கும் விவசாயிகள் செ.நெ. சாகுபடியோடு கலந்திருப்பர். ஆகையால் இதர விவசாயிகள், விரிவாக்க பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய தகவல்களை சார்ந்திருப்பர். விவசாயிகளை நோக்கமாக கொண்ட புதிய தொழில்நுட்பங்கள், மற்றும் அரசு திட்டங்கள் மானியங்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களின் இணைப்புகள் மூலம் விவசாயிகள் தகவல் பெறுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.பெரும்பாலான விவசாயிகள் வேளாண்மையை மட்டும் நம்பியிருக்கின்றனர்.அதனால் விரிவாக்க பணியாளர்கள் மற்றும் சக செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுடன் நல்லுறவு மேம்படுத்தி செ.நெ.சா. குறித்து தகவல்களை பெறுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
கொள்கை மற்றும் உதவி உள்கட்டமைப்பு
செம்மை நெல் சாகுபடி அறிமுகப்படுத்திய நாளிலிருந்து மாநிலத்தில் இருக்கும் கொள்கை மற்றும் உதவி உள்கட்டமைப்புகள் வைத்து விவசாயிகள் செம்மை நெல் சாகுபடியை தையமாக பின்பற்றினர். ஆரம்பத்தில் செம்மை நெல் சாகுபடியை செய்வது பொிய சிரமமாக இருக்கும் என எண்ணினர். செ.நெ. சாகுபடிக்கு அரசு அதிகளவில் உதவி செய்ததன் மூலம் நெல் சாகுபடியில் அதிக வருமானம் பெற்றதால் விவசாயிகள் செ.நெ.சா. முறைக்கு மாறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். திரிபுரா அரசின் முன்னேற்றத் திட்டம், வேளாண் விரிவாக்க மேலாண்மை, ராஷ்டீரியா க்ரிஷி விகாஸ் யோஜனா மற்றும் சமீப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய உணவு உத்திரவாத அமைப்பு, மாநிலத்தில் செம்மை நெ.சா. யின் ஆரம்ப நிலையின்போது, ஆராய்ச்சி மற்றும் பாிந்துரைப்பதற்கு வேளாண் விரிவாக்க மேலாண்மை முதல் ராஷ்டீரிய க்ரிஷி விகாஸ் யோஜனா வரை நிதிகள் 2008-2009 ஆம் வருடம் ஒதுக்கப்படுத்தப்பட்டது. தேசிய உணவு உத்திரவாத அமைப்பு நிதி செம்மை நெல் சாகுபடிக்கு 2011-2012 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
செம்மை நெல் சாகுபடி மாநில விவசாயிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது. 2006 ஆம் ஆண்டு 1000 விவசாயிகளுடன் பொியளவில் ஆரம்பித்து, இரண்டு வருடங்களில் 70000 விவசாயிகளுக்கு அதிகாித்தது. 2014 – 2015 ஆம் ஆண்டு 92341 ஹெக்டர் பரப்பளவில் செம்மை நெல் சாகுபடிக்கு கீழ் வந்தது. மேலும் 2020 ஆம் ஆண்டிற்குள் 100000 ஹெக்டர் பரப்பளவு அடைய வேண்டும். சாதாரண நெல் சாகுபடியிலிருந்து செம்மை நெல் சாகுபடியை மாநிலம் முழுவதும் பின்பற்றபட்டது. விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் பொதுவுடைமையில்லாத அடிமட்ட அளவில் உள்ள அரசு அமைப்புகள் போன்ற பல்வேறு அமைப்புகளின் முயற்சி மொத்த செயல்முறையில் ஈடுபட்டுள்ளது.
எந்த யுக்தி முறைகள் மற்றும் அவர்களின் செயல்களுக்கு மத்தியில் இருக்கும் வல்லுநர்கள் முக்கியமாக வெற்றி அல்லது தோல்விகளை நிர்ணயிப்பர். திரிபுரா செம்மை நெல் சாகுபடியை பொறுத்தவரையில், விரிவாக்க செயல்பாடு, அடிமட்ட அளவில் இருக்கும் அரசு அமைப்பு மற்றும் ஊடகம் ஆகியவை செம்மை நெல் சாகுபடி, மாநிலத்தில் வெற்றியான யுக்தியாக ஆக்குவதற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அரிசி தானியங்களில் சுய சார்புத்தன்மை அடைவதற்கு முக்கியமாக உதவியது.
சுசிராதிப்தா பட்டசார்ஜி மற்றும் சரவணன் ராஜ்
Suchiradipta Bhattacharjee MANAGE Fellow at Centre for Agricultural Extension Innovations and Reforms, National Institute of Agricultural Extension Management(MANAGE) Hyderabad, India. E-mail: suchiradipta@hotmail.com Saravanan Raj Director (Agricultural Extension), National Institute of Agricultural Extension Management(MANAGE) Hyderabad, India. E-mail: saravananraj@hotmail.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 4



