பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மையை உருவாக்குதல்


பன்டால்காண்டில் உள்ள சிறு விவசாயிகள் வளர்ச்சிக்கான மாற்றுகள் உதவியுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை சமாளிக்க வேளாண் முறைகளை கடைபிடித்து வருகின்றனர். பண்ணை அளவிலும் நில அமைப்பு முறை அளவிலும் எடுக்கப்பட்ட செயல்பாடுகள், நீண்ட கால நிலைத்த தன்மைக்கு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண் முறைகளை பன்டால்காண்டில் மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறது.


வேளாண்மையானது குறுகிய கால வானிலை மாற்றங்கள் மற்றும் நீண்ட கால பருவகால மாற்றங்கள் போன்ற இரண்டுக்குமே அதிக அளவிற்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளது. வேளாண் உற்பத்தியானது, வெப்பநிலை, மழை பொழிவு இவைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றம், கார்பன் டை ஆக்சைடின் அளவு மற்றும் பூச்சி, நோய் மற்றும் களைகளினால் தாக்கத்திற்கு உள்ளாகிறது. பொருளாதார ரீதியாக, இது லாபத்திலும், விலையிலும், வழங்குவதிலும், தேவையிலும் மற்றும் வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட காலத்தில் இந்த தாக்கம் வளர்ச்சியின் படிநிலைகளையும் உணவு உத்திரவாதத்தையும் பாதிக்கும்.

கரடுமுரடான, பெரும்பசியோடு, தொடரலையான நிலப்பரப்பின் காரணமாக பன்டால்காண்ட் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றாகும். தொடர்ச்சியான வறட்சியினால் பன்டால்காண்ட பகுதியின் வாழ்வாதாரம், வேளாண் செயல்பாடுகள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 80 விழுக்காடு வேளாண் குடும்பங்கள் 2 ஏக்கருக்கும் குறைவான நிலங்களை கொண்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தின் போக்குகளை அதிகம் நம்பியிருப்பதால் வேளாண்மை என்பது இந்த பன்டால்காண்ட பகுதிக்கு மிகவும் சிக்கலான ஒன்று.

பன்டால்காண்ட் விவசாயிகள் கடைபிடித்துவரும் பாரம்பாிய சாகுபடி முறைகள் தற்போது உள்ள உலகளாவிய சுற்றுச்சூழல் சூழ்நிலைக்கு போதுமானதாக இல்லை. முடிவெடுப்பதற்கு கூட அவர்கள் சந்தை நிலவரங்களையே நம்பியுள்ளதால் அது அவர்களை மிகவும் ஏழ்மையான பொருளாதார தேர்வுக்கு கொண்டு செல்கிறது. அரசின் முயற்சிகள் அவர்களை சென்றடையாததால் வளர்ச்சிக்கான மாற்றுக்கள் (டீ.ஏ) அமைப்பானது பருவ நிலை மாற்றத்தினால் பன்டால்காண்ட் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான செயல்பாடுகளை கொண்டு செல்கிறது.

களத்தில் இருந்து பார்க்கும் பார்வை

டீ. ஏ மேற்கொண்ட ஆய்வுகளில் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, புன்டால்காண்ட் பகுதியை சோ;ந்த விவசாயிகள் மழை பெய்யும் நாட்கள் குறைந்து வருவதையும், கோடை காலத்தில் வெப்பநிலை அதிகாித்து வருவதும் வெளிப்பட்டது. குளிர்காலத்தில் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்தது கோதுமை விளைச்சலை பாதிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். பாரம்பாிய அறிவின் அடிப்படையில் செய்யப்படும் முறைகளே பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தீர்ப்பதில் மேலோங்கி காணப்பட்டன. வேளாண்மையில் உற்பத்தி விழ்ச்சியின் காரணமாக நிறைய இளைஞர்கள் வேலைத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். விவசாயிகளும் அளவுக்கு அதிகமாக காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புக்குள் குறித்து அறிந்தும், அதனால் அவர்கள் கவலையடைந்தும் இருந்தனர். ஆனால் அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளை தீர்த்து வைக்கும் வழியினை காண முடியாமல் இருந்தனர். பன்டால்காண்டில் உள்ள மக்களிடத்தில் காடுகள் அழிப்புதான் அனைத்து விதமாக பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது ஒரு பொதுவான எண்ணமாக இருந்தது.

செயல்பாட்டிற்கான வரைவுத் திட்டம்

வேளாண்மையின் மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மூன்று அடிப்படை காரணிகள் பிரதிபலிக்கின்றன. அவைகள் நீர் பற்றாக்குறை , சீதோஷண நிலையில் ஏற்படும் காலந்தவறிய மழைபொழிவு மற்றும் அதிக அளவு வெப்ப நிலையில் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்றவை. இந்த காரணிகள் தேசத்தின் வேளாண் முறைகளில் உற்பத்தி இழப்பு மற்றும் பயிர் மகசூல் இழப்பு போன்றவற்றை அதிகாிக்கிறது. இதனை எதிர்கொள்ள டீ.ஏ அமைப்பு இரு முனை அணுகுமுறையாக, வேளாண் முறைகளில் விரிதிறனை அல்லது வழிமுறைகளை உருவாக்குவது அல்லது வேளாண் முறைகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பது.

1. பண்ணையிலும், நிலப்பரப்பிலும் நீர் பயன்பாட்டையும், மேலாண்மையும் திறமையாக கையாள்வது

இது இந்த பகுதியில் தற்போது புழக்கத்தில் உள்ள நீர் ஆதாரங்களை புணரமைப்பு செய்வது மற்றும் கட்டுமானத்திறாகான நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையில் உள்ள வழிமுறைகளையும், படிகளையும் உள்ளடக்கியது. நிலப்பரப்பில் நீர் வளஆதாரங்களை மேலாண்மை செய்வதற்கும் கூடுதலாக, இது பண்ணை அளவில் நீர் ஆதாரங்களில் கிடைக்கும் நீரை திறமையாகவும், சமமான முறையில் பங்கிட்டு கொள்வதையும் உறுதி செய்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு நேரத்தில் நீர் பாசனத்திற்காக குறைந்த அளவு நீரை பயன்படுத்துவதும், வினியோகிப்பதும், ஆனால் குறைந்த அளவு நீர் அல்லது ஒழுங்கற்ற மழைப்பொழிவால் அதிகம் தண்ணீர் கிடைக்கும் நேரம் அல்லது இந்த பகுதிக்கே உரிய கடும் வறட்சி போன்ற காலங்களில் இருக்கும் தண்ணீரை மேலாண்மை செய்வதற்கான வழிவகைகளை கொண்டதாகும்.

2. வேளாண் தொழில்நுட்ப மாதிரிகள் வருமானத்தை நம்பிய வேளாண் உற்பத்தி அச்சுறுத்தல்களை குறைக்கிறது.

டீ.ஏ அமைப்பானது வேளாண்மையில் முழுவதும் பயிர் இழப்பு மற்றும் வருமான இழப்பு என்ற நிலையை குறைக்கும் வகையிலான மாற்றுகளை உருவாக்குகிறது. இவற்றில் உற்பத்தியை பல வழிகளில் மேம்படுத்துவது மற்றும் கடும் வறட்சி மற்றும் கடுமையாக வானிலை மாற்றங்களுக்கு பொருத்தமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்ற வேளாண் மாதிரிகளை அளிப்பதாகும்.

செயல்பாடுகளின் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள்:

டீ.ஏ அமைப்பின் தலையீடுகளால் செயல்பாடுகளில் நிகழ்ந்த மாற்றங்கள்:

மேம்படுத்தப்பட்ட விதைகள்: நிலக்கடலையில் டி.ஏ.ஜீ – 37, டி.ஜீ -41 போன்ற ரகங்களையும், கோதுமையில் ஸ்வர்ணா (எச்.ஐ. 1479), பூர்ணா (எச். ஐ. 1544), நவீன் சண்டவாரி (எச்.ஐ. சிறு மற்றும் குறு விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட மற்றும் விதை ரகங்களை மாற்றி பயன்படுத்த தொடங்கினர். இவைகள் நல்ல தரமான, நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மற்றும் ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிரிடும்போது விதை தொகுப்பில் மாற்றங்களை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்ற வகையில் இருந்தன. புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியதன் விளைவாக 20 விழுக்காடு மகசூல் திறனானது 20 விழுக்காடு எதிர்பார்க்கப்பட்டதை போல பெற்றுத்தந்தது.

வரிசை மற்றும் காய்ந்த விதைப்பு: டீ.ஏ அமைப்பின் தலையீடுகளுக்கு முன், இந்த பகுதியில் வரிசை மற்றும் காய்ந்த விதைப்பு என்பது ஒரு பொதுவான செயல்பாடாக இல்லை. கோதுமையில் காய்ந்த விதைப்பு முறை என்பது புதிய முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் சிறிது தொய்வு இருந்தபோதிலும், வல்லுநர்களின் மேற்பார்வையில் விவசாயிகள் இவற்றை முயற்சித்து உற்பத்தியிலும், களைகளை கட்டுப்படுத்துவதிலும் சாதகமான முடிவுகளை பெற முடிந்தது. காய்ந்த விதைப்பின் தாக்கமானது, நீர் தேவையை குறைத்ததோடு மட்டுமல்லாது உற்பத்தியிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 29.4 விழுக்காடு உற்பத்தி அதிகாிப்பு தாக்கமாக கண்டறியப்பட்டது.

பன்டால்காண்ட் பகுதியில் உள்ள பழங்குடி சமூகங்களுக்கு நிலைத்த சிறு பண்ணையை அடிப்படையாக கொண்ட வாழ்வாதாரத்திற்கு அவர்கள் குறைவாக பயன்படுத்திய வள ஆதாரங்களை திறன்பட பயன்படுத்துவதற்கு வாடி மாதிரி உதவியது. வேளாண் காடுகள் செயல்பாடுகள் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத்தை விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டும் வழியாக மாற்றிக் கொடுத்தது. இந்த வேளாண்-தோட்டக்கலை மாதிரியில் முக்கிய செயல்பாடுகளாக தோட்டக்கலை பயிர்கள், மண் பாதுகாப்பு, நீர் ஆதாரங்கள் மேலாண்மை, பெண்கள் மற்றும் அவர்களின் பணிச்சுமையை குறைக்கும் செயல்பாடுகள் போன்றவற்றை உள்ளடக்கி அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாகும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் செயல்பாடுகளை உள்ளடக்கியிருந்தது.

”இந்த பண்ணைக்குட்டைகள் வேளாண் சமூகத்திற்கு பொிய அளவில் உதவியாக இருந்தது.” இந்த திட்டத்தில் மண் மற்றும் பாதுகாப்பு பணிகளில் குறிப்பிடத்தக்க மிக முக்கிய அம்சங்களாக 60 விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டைகள் 50 விழுக்காடு விவசாயிகளின் பங்களிப்போடு செய்யப்பட்டிருந்தது. முதல் வருடத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பணைகள் மற்றும் காபியான் போன்ற நீர் சேமிப்பு அமைப்புகள் உள்ளூர் சூழ்நிலை மற்றும் வேளாண்மையிலும் ஏற்படுத்திய சாதகமான முடிவுகளை கண்டதும், விவசாயிகள் இந்த நீர் சேமிப்பு அமைப்புகளையும், அவர்களது நிலத்தில் தண்ணீர் பயன்பாட்டை குறைப்பது மற்றும் மண் அரிமானத்தை தடுப்பது போன்ற நிலம் சம்மந்தப்பட்ட பணிகளின் அவசியத்தை உணரத் தொடங்கினர்.

இதன் சாத்தியக்கூறுகள் விவசாயக் குழுக் கூட்டங்களிலும் மற்றும் கிராம வளர்ச்சி குழுக்களிலும் விவாதிக்கப்பட்டது. திட்ட செயலாக்க குழுவானது பண்ணைக்குட்டை உருவாக்குவதற்கு 50 விழுக்காடு விவசாயிகளின் பங்களிப்பு பெறுவது குறித்து பாிந்துரைத்தது. இந்த நீர் சேகாிப்பு அமைப்புகள் மழை பெய்யும்போது பண்ணையில் உள்ள நிலங்களில் ஈரப்பதத்தை அதிகளவு பிடித்து வைப்பதை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாது, நீர் பாசன கால்வாய்களில் ஓடும் நீரை தடுத்து பயிர்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவியது.

மொத்தமாக 60 விவசாயிகள் ரூ. 64000 செலவிட்டு அவர்களின் நிலங்களில் பண்ணைக்குட்டைகள் உருவாக்கியதன் விளைவாக 30 ஏக்கர் நிலங்களுக்கு சாதகமான அம்சங்களை ஏற்படுத்தியது. விவசாயிகள் இயற்கை வளங்களின் மேல் முதலீடு செய்வதன் மதிப்பையும் தேவையையும் எடுத்துரைப்பதற்கு உதவியது இந்த திட்டத்தின் மிகப் பொிய சாதனையாகும். 60 விவசாயிகளும் தற்போது தங்களின் வேளாண்மையில் கிடைக்கும் வருவாயானது 10-20 விழுக்காடு அதிகாித்து வருவதாகவும் மற்றும் அவர்களின் நிலங்களில் மண் அரிமானம் பெருமளவு குறைந்துள்ளதாகவும் தொிவிக்கின்றனர்.

பிப்ரா கிராமத்தின் காசிராம் குஷ்வகா கூறுகையில், ”எனது பண்ணையானது நீர் போகும் வாய்காலுக்கு அருகில் இருப்பதால், பருவ மழைக்கு பிறகு பெரும்பாலும் என்னால் அடுத்த பயிர் சாகுபடி என்பது செய்யமுடியாது. ஏனெனில் வாய்க்காலில் ஓடும் தண்ணீர் எனது பயிரில் சூழ்ந்து முதலீடுகளில் இழப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு, பண்ணைக் குட்டை வெட்டியதன் காரணமாக, ஓடும் தண்ணீர் எனது பயிரை பாதிக்கவில்லை. என்னால் மற்றொரு பயிராக காய்கறிகளை கோடையில் பயிரிட்டு அதன் மூலம் ரூ. 15000 கூடுதல் வருமானம் கிடைத்தது. அவர் மேலும் கூறும் போது, ” இந்த வரப்புகள் எனக்கு மட்டும் பயனளிக்கவில்லை, மாறாக கால்வாய்க்கு அருகில் நிலம் வைத்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயனளித்தது.

இந்த மாதிரியானது பருவநிலை மாற்றங்களின் தாக்கங்களை குறைத்து, நிலத்தின் உற்பத்தி திறனை மறுஉற்பத்தி அதிகாித்தும் மற்றும் விவசாயிகள் பல்வேறு வகை உற்பத்தி முறைகளால் தொடர் வருமானம் பெற்று மகிழ்வடையவும் உதவியது. விவசாயிகளின் பண்ணை வருவாயில் 25 விழுக்காடு அதிகாித்ததோடு மட்டுமல்லாது 700 ஏக்கர் நிலங்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களின் மூலம் வருமானம் பெற்று, அதன் மூலம் இந்த திட்டத்தின் பயனாளிகளில் உள்ள மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு இடம்பெயர்வும் குறைந்துள்ளது. இதில் மிக முக்கியமான மற்றொரு பயன் வாடி ஆகும். இது பருவநிலை மாற்ற எதிர்விளைவுகளை ஒழித்து, ஆகாய மண்டலத்தில் உள்ள காியை மரங்கள் பயோமாஸ் ஆக மாற்றி, மண் காியை அதிகாித்து, நீண்ட காலப் போக்கில் மண்ணில் கார்பன் நீண்ட காலம் தங்குவதற்கு உதவி புரியும்.

பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் சில செயல்பாடுகளில் இயற்கை உரங்களை பயன்படுத்தியது, குறைந்த அளவு இரசாயனங்களை பயன்படுத்தியது, கலப்புப் பயிர் சாகுபடி செய்தது, விதை அளவை குறைவாக போதுமான பயிர் அடர்த்தியோடு வரும் வகையில் பயிரிட்டது, விதைப்பு மற்றும் வரிசை விதைப்பு, பூஞ்ஞான மற்றும் வைரஸ் நோய்கள் தாக்காத வகையில் நேர்த்தி செய்யப்பட்ட புதிய ரக விதைகள், உயர்த்தி அமைக்கப்பட்ட பாத்தி சாகுபடி முறைகள் போன்றவை நம்பிக்கை தரும் முடிவுகளையும், மகசூலில் எதிர்பார்த்த விளைவுகளையும் பெற்றுத் தந்தது.

அதிகஅளவு சென்றடைவதும், தரம் உயர்த்துதலும்

பன்டால்காண்ட் பகுதி மக்களிடத்தில் பொிய அளவில் இந்த பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் மாதிரிகளை எடுத்துச் செல்லவும், வேளாண்மையில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை சமாளித்து தகவமைத்துக் கொள்ளும் செயல்பாடுகளை நீடித்திருக்க செய்யும் வகையில் 3 விதமான அணுகுமுறைகளை டீ.ஏ. அமைப்பானது நடைமுறைப்படுத்தியது. சமூக வானொலிகள் வாயிலாக அடித்தட்டு மக்களுக்கு பருவநிலை மாற்றம் குறித்த தகவல்களை அளிப்பதும், விவசாயிகளை அடிப்படையாக கொண்ட ஹாிட் கிசான் மண்டல் போன்ற நிறுவனங்களை உருவாக்குவதும், பஞ்சாயத்து அளவில் பருவநிலை மாற்றத்தை தகவமைத்துக் கொள்ளும் திட்டங்களை தீட்டி அதன் மூலம் கிராம அளவில் சுற்றுச்சூழலை திறமையாக பாதுகாத்து மேலாண்மை செய்வதென அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடச்சியாக நடைபெற்ற முயற்சிகளின் மூலம், டீ. ஏ. அமைப்பானது ஒட்டுமொத்த கூட்டு முயற்சியாக ஒவ்வொரு வருடமும் 135 மில்லியன் லிட்டர் நீரை அறுவடை செய்வதை சாத்தியமாக்கியது. இது இந்த பகுதியில் பெய்யும் ஆண்டு மழையளவில் 30 விழுக்காடு ஆகும். இந்த கூட்டு முயற்சியின் விளைவாக நேரடியாக 11 நிர்வாக வட்டங்களில் உள்ள 250 கிராமங்களில் உள்ள 14000 விவசாயிகளின் 31.500 ஹெக்டர் நிலப்பரப்பு சென்றடைய முடிந்தது. எதிர்வரும் வருடத்தில் டீ.ஏ அமைப்பானது பன்டால்காண்ட் பகுதி உள்ள மக்கள் மத்தியில் உள்ளூர் நிறுவனங்களை உருவாக்கி அங்கு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நிலைத்த வேளாண் செயல்பாடுகளை இந்த பகுதி முழுவதும் பரவலாக்கி அதனை ஒரு ”புதிய மாதிரி” யாக உருவாக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

நன்றிக்குரியவர்கள்:
இந்த கட்டுரைக்கு உதவியாக பங்களித்த நிபெட்டிட்டா புகான், டீ.ஏ அமைப்புக்கு நன்றிகள்.

 

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...