தாங்கும் திறன் கொண்ட தார் உழவர்கள்


ஊரடங்கின்போது போக்குவரத்து நொிசல், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பிற சவால்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் நெகிழ்ச்சியுடன் இருந்தனர்.


“2020 எங்களுக்கு அவ்வளவு மோசமாக இல்லை” என்று பிகானோின் கோடு கிராமத்தைச் சேர்ந்த சதாசுக் பெனிவால் கூறுகிறார். கோவிட்-19 பெருந்தொற்றால் நாடு கொந்தளிப்பில் இருந்தபோது, இந்தோ-பாக் எல்லைக்கு அருகிலுள்ள கிராமங்களின் உழவர்களுக்கும் விஷயங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தது. வறண்ட மாநிலமான ராஜஸ்தானின் கிராமங்களில் இந்த ஆண்டு நல்ல மழைபெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, ஜெய்சால்மர் மாவட்டத்தில் சாதாரண ஆண்டில் பெய்வதைவிட உபாி மழை பெய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட முதல் கட்ட ஊரடங்கான மார்ச் மாதத்தில் ஜெய்சால்மர் மாவட்டம் மற்றும் பிகானோின் பிற எல்லையோர மாவட்டங்களில் உள்ள உழவர்கள் குழப்பமான நிலையில் இருந்தனர். ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒதானியா கிராமத்தைச் சேர்ந்த உழவர் லட்சுமிதேவி , “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே, உள்ளூர் மண்டிகள் முற்றிலுமாக மூடப்பட்டன. காரிப் பருவத்திற்கான விதைகளை பிகானேர் அல்லது ஜெய்சால்மர் மண்டிகளில் விற்கவோ வாங்கவோ எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் எங்களை அருகிலுள்ள கிராமங்களுக்கும், பொக்ரான் சந்தைக்கும் மட்டுப்படுத்திக் கொண்டோம்.

லட்சுமி தேவி போன்ற உழவர்கள் தனது வயலில் வரிசையாக பயிர் செய்து வருகின்றனர். இந்த நடைமுறைகள் இந்த ஆண்டு அதிர்ஷ்டமாக மாறியது. “லாக் டவுன் வரை எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் எல்லைக் கிராமங்களில் பூச்சி தாக்குதல் (வெட்டுக்கிளி தாக்குதலைக் குறிக்கிறது) பற்றி கேள்விப்பட்டேன். நாங்கள் அனைவரும் கவலைப்பட்டோம். அது காரிப் பருவத்தில் ஆரம்பம். நான் எனது வயலில் நிறைய உழைத்தேன். எனது பயிர்கள் அழிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, லட்சுமிதேவியின் வயல் மற்றும் அவரது கிராமம் மற்ற கிராமங்களை தாக்கியதுபோல் வெட்டுக்கிளியால் பாதிக்கப்படவில்லை. இதற்காக அவர் தன் மீள் பயிர் முறையைப் பாராட்டினாள். முன்பு இந்த தாக்குதல்கள் குறைவாக இருந்தன. நம் முன்னோர்களை பின்பற்றி, வயல்களில் பல பயிர்களை பயிரிடக் கற்றுக் கொடுத்ததால், பூச்சித் தாக்குதல் ஏற்படும் போதெல்லாம் ஒரு சில பயிர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டன. பூச்சிகள் சில பயிர்களால் ஈர்க்கப்படுகின்றன மற்றும் சிலவற்றை விரும்புவதில்லை, அவை விரட்டியாக செயல்படுகின்றன. இறுதியில் சில நமக்குப் பாதுகாப்பாகவே இருக்கின்றன” என்று விளக்குகிறார் லட்சுமி. இந்த வாதத்தை பெரும்பாலான வயதான உழவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டு வெட்டுக்கிளிகள், ஒற்றைப்பயிர் முறையைப் பின்பற்றி நிறைய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய உழவர்களின் பயிர்களை சேதப்படுத்தின. பிகானேர் மாவட்டத்தில் உள்ள புலாசர் கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான பிரேமா ராம், “நாங்கள் பல பூச்சி பருவங்களைக் கண்டிருக்கிறோம். இந்தப் பாலைவனத்தில் எந்தப் பயிர்களை விளைவித்தோமோ அந்த பயிர்களை திறம்பட நிர்வகித்துள்ளோம். ஆனால் பல பயிர்கள் செய்யும்போது பூச்சிதாக்குதல் குறைவாக இருக்கும். சந்தை சார்ந்த விதைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. நிம்போடி (வேம்பு விதைகள்) மற்றும் மாட்டு கோமியத்தில் உருவாக்கப்பட்ட நீமாஸ்திராவை எங்கள் பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளாக பயன்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இவை பாதுகாப்பானவை.

25 பிகா தாிசுநிலத்தில் வேளாண்மை செய்யும் லட்சுமி போன்ற பெண் உழவர்கள் ஊடரங்கின் விளைவுகளைப் பற்றி மிகவும் பயந்தனர். “எனது குடும்பம் முழுவதுமாக வேளாண்மை மற்றும் சில் உடல் உழைப்பை நம்பியிருக்கிறது. ஆனால் கொரோனா எங்களை பாதிக்கவில்லை என்று நான் கூறுவேன். எங்களுடைய விளைபொருட்களை உள்ளூர் சந்தையில் விற்கவோ அல்லது சந்தையில் இருந்து விதைகளை வாங்கவோ முடியாததால், சந்தைகளை அணுகுவதில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது.
உலகம் முழுவதுமாக குழப்பத்தில் இருந்தபோது ராஜஸ்தானில் உள்ள இந்த உழவர்கள் தங்கள் பாரம்பாிய அறிவுமுறைகளைப் பயன்படுத்தி தங்களைத் திறம்பட நிர்வகித்து, தங்கள் சொந்த விதைகளைப் பயன்படுத்தி, பாரம்பாிய உரங்களான நீமாஸ்திரா, கீட்னாஷாக் போன்றவற்றை பயன்படுத்தினர். மேலும் உள்ளூர் கிராம அளவிலான மண்டிகளை விற்பனை செய்து வந்தனர். உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் பஜ்ஜு தேஜாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்ற இளைஞர் கூறுகிறார். “நகரங்களில் வேலை இல்லாதபோது கிராமங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்களை போல உழவர்களின் வாழ்க்கை கடினமாக இல்லை. அவர்களில் சிலர் உடனடியாக வேளாண் பணிகளைப் பெற்றனர். அவர்களில் சிலர் வேளாண்மைக்கு வெளியே நடவடிக்கைகள் தொடங்குவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது. பிகானேர் மாவட்டத்தின் கோலயாத் தெஹ்சில் அல்லது பொக்ராம் தாலூக்காவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பண்ணை பணிகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர். ஒரு காலத்தில் மேய் கிராமங்களாக மாறிய கிராமங்கள் இந்த ஆண்டும் வேளாண்மை செய்யத் தொடங்கின. இந்த தொழிலாளர்கள் பாசிப்பயறு, நிலக்கடலை போன்ற பயிர்களை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளனர். சதாசுக் பெனிவால் , “கம்பெனிகள் வெளியேறச் சொன்னபோது கிராமப்புற இந்தியா வேலைகளை வழங்கியது. இயற்கை பூமியில் அனைவருக்கும் வேலை இருக்கிறது. இன்னும் மக்கள் வேலைக்காக நகரங்ககளுக்கு செல்கிறார்கள் உறுதிபட கூறுகிறார். திரும்பிவந்த சில இளைஞர்களையும் அவர் பாராட்டுகிறார். “இணையத்தில் புதிய விற்பனை இடங்களுக்கு அவர்கள் எங்களுக்கு உதவ விரும்பினர். நாங்கள் விரைவில் அதைச் செய்வோம்”. ஓம் பிரகாஷ் உழவர்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, “கோவிட் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தார் உழவர்க் காரிப் பயிர்களை எரிக்கவிடாமல் வளர்த்தனர்” என்று கூறுகிறார். இவை தவிர,பெருந்தொற்றின்போது குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு சவாலாக இருந்தது என்கிறார் கோடு கிராமத்தை சேர்ந்த துர்ஜன் சிங். “வேளாண் துறை எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்த நோயை எப்போதும் குறை சொல்ல முடியாது. எல்லோரும் இதை ஒரு சாக்காக எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான உழவர்கள் தங்கள் விளைபொருட்களை அரசிடம் விற்கமுடியவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் ஆன்லைன் போர்டல்கள் மூடப்பட்டன” என்று ஓம் பிரகாஷ் தொிவிக்கிறார். உழவர்களுக்கு உதவிய ஓரே விஷயம், விளைபொருட்களின் கிராமப் பாிமாற்றம் மற்றும் வட்டார தலைமையிடத்தில் உள்ள சிறிய மண்டிகள் மட்டுமே என்றும் அவர் கூறுகிறார்.

பொதுவாக இந்த ஆண்டு கடினமாக இருந்தாலும், அக்டோபாில் இந்த ஆண்டு பஞ்சாயத்து தேதர்தலுக்குப் பிறகு நிச்சயம் வரும் புதிய மாற்றங்களைப் பற்றி உழவர்கள் ஆர்வமாக இருந்தனர் என சதாசுக் கூறுகிறார். “விவசாயிகளின் தலைப்பு எடுக்கப்பட்டது மற்றும் போட்டியிடும் பங்கேற்பாளர்களில் சிலர் புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை போராட்டம், அமேசான் மற்றும் பிற ஆன்லைன் போராடல்களில் எங்கள் தயாரிப்புகளை கொண்டு வருவதற்கான வழிகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
தார் உழவர்களின் கதை விரக்தி மற்றும் மகிழ்ச்சியின் கலவையான உணர்ச்சிகளைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் தலைமுறைகளாக கொண்டு வந்த தங்கள் சொந்த வழிமுறையில் அவற்றைக் கையாள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பயந்தனர்.

இயற்கை அன்னையானது அனைவருக்கும் வேலையை வைத்திருக்கிறது, இருப்பினும் மக்கள் வேலைக்காக நகரங்களுக்கு செல்கிறார்கள்.

ரிதுஜா மித்ரா


Rituja Mitra
Research Consultant, Urmul Trust, Urmul
Bhawan, Bikaner-334 001, Rajasthan
E-mail: rituja.mitra18_dev@apu.edu.in

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...