காிம முறையில் மீள்திறன் உருவாக்குதல்


ஒரு சிறிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி, வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள திறன் அடைகிறார்கள் . WOTR இன் ஆதரவுடன் ஒரு பழங்குடி விவசாயி, அவர் விவசாயம் செய்யும் முறையை மாற்றி, வருமான நிலைகளை எவ்வாறு மேம்படுத்தினார், அது மட்டுமன்றி தனது பகுதியில் ஒரு வள நபராக ஆனார் என்பதை பிடார் சாபாின் அனுபவம் காட்டுகிறது.


ஓடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள குனுபூரின் தர்கிசிங் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பிடார் சாபர். சிறு விவசாயியான இவர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகளையே தனது வாழ்வாதாரமாக நம்பி உள்ளார். இவர் தனது மனைவி சஞ்சனிதா சபருடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் காரீப் காலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஆறு ஏக்கர் மேய்ச்சல் நிலமாக உள்ளது. அங்கு அவர் காட்டுஇனமான முந்திரியை பயிரிட்டார், அதில் குறைவான விளைச்சல் பெற்றார்.

திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல்லுக்கான பயோமெட்ரிக் தரவுகளை சேகாித்தல்:

அவர் ஆண்டுக்கு ஒரு பயிரை மட்டுமே பயிரிடுகிறார், குளிர்காலத்தில் நிலத்தை தாிசாக விடுகிறார். காரீப் காலத்தில் நெல் பயிரிடப்படுகிறது மற்றும் தானியங்கள் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. முந்திரி விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை மற்றும் உள்ளூர் கூலி வேலை மூலம் பிற வீட்டுச் செலவுகள் பார்த்துக் கொள்ளப்படுகின்றன.

கிராமத்தில் உள்ள பலருடன் சேர்ந்து, அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புனே போன்ற மாநிலங்களுக்கு கூலி வேலை தேடி பிடார் சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் இடம் பெயர்கிறார்.

முன் முயற்சி:

ஆகஸ்ட் 2018 ல், பழங்குடியின சமூகங்களின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் றுழுவுசு குனுபூர் தொகுதியில் உள்ள 11 கிராமங்களில் ஒரு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. தகவமைப்பு திறன்களை உருவாக்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் திறன் ஆகியவை பிரட் பார் தி வேர்ல்டு அமைப்பின் ஆதரவோடு செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

காலநிலையை தாங்கும் விவசாயம் என்பது திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட கூறுகளில் ஒன்றாகும். இந்த கூறு, பயிரை தீவிரப்படுத்துதல் அமைப்பு, திருந்திய பயிர் சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள் போன்ற தகவமைப்பு, நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்கானிக் கலவைகளை ஊக்குவித்தல், காய்கறிகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் விவசாய இடுபொருள் செலவுகளைக் குறைத்தல் ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய நடவடிக்கைகளாகும்.

WOTR ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு விவசாயப் பயிற்சிகளில் பிடார் பங்கேற்றார். இது விதை தேர்வு முதல் பயிர் அறுவடை வரை மேம்படுத்தப்பட்ட விவசாய நுட்பங்களை உள்ளடக்கியது. இது குறித்து பிடார் கூறுகையில், ’முதல் பயிற்சியில், விதைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி, விதை நேர்த்தி செய்வது மற்றும் விதைப் பாத்திகளைத் தயாரிப்பது எப்படி என்று எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. இரண்டாவது பயிற்சியில், திருந்திய பயிர் சாகுபடி முறை பற்றியும், அதிகபட்ச பயிர் விளைச்சலுக்கு உகந்த சூரிய ஒளி மற்றும் பயிர்களுக்கு இதர சத்துக்களை உறுதி செய்வதற்காக வரிசை நடவு முறையைப் பயன்படுத்தி எப்படி நடவு செய்வது என்பது பற்றியும் கூறப்பட்டது. மூன்றாவது பயிற்சியில், ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் தாஷ்பாணி பேழை, ஜீவாம்ருத், நீமஸ்த்ரா போன்ற காிம கலவைகளை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றிய செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நான்காவது பயிற்சி அறுவடை மற்றும் அறுவடைக்குப் பின் மேலாண்மை போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது”.

மீள்தன்மையை உருவாக்குதல்

இந்த பயிற்சியில் கற்பிக்கப்படும் சில செய்பாடுகளை பிடார் ஆர்வத்துடன் தொடர்ந்து செய்தார். இது பயனுள்ளதாக இருந்தது. வசுந்தரா சேவக் மற்றும் WTOR பணியாளர்கள் இந்தப் பயிற்சித் திட்டங்களை ஒழுங்கமைப்பதிலும், பயிர் பருவம் முழுவதும் ஒவ்வொரு விவசாயியையும் கைப்பிடிப்பதிலும் முக்கியப் பங்காற்றினர்.

அனைத்து பாிந்துரைக்கப்பட்ட முறைகளும் பயன்படுத்தப்படும் செய்முறை வயல்பகுதியை வைத்திருப்பதற்கு WOTR, விவசாயிகளுக்கு ஆதரவளித்தது. பாரம்பாிய விவசாய முறைகள் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுத் நிலத்துடன் இது ஒப்பிடப்படுகிறது. இரண்டு அடுக்குகளுக்கும் இடையிலான வேறுபாடு சுயமாகத் தொிகிறது. WOTR தாவர வளர்ச்சி, முதிர்ச்சி, உச்சநிலை உருவாக்கம் போன்றவற்றைப் பற்றிய விரிவான பதிவுகளை பராமாிக்க உதவியது மற்றும் விளைச்சலை எவ்வாறு கணக்கிடுவது என்பதைக் காட்டுகிறது. பிடார் கூறுகையில், விரிவான பதிவை வைத்திருப்பது பயிரின் ஒவ்வொரு நிலையிலும் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. செய்முறை வயல் பகுதியில் வரும் தரவுகளை ஒப்பீட்டு பகுதி மூலம் பகுப்பாய்வு செய்வது, பாரம்பாிய முறைகளை விட நாங்கள் பயன்படுத்தும் முறைகளின் அளவு நன்மைகளை உணர உதவுகிறது.

பெறப்பட்ட வழிகாட்டுதலுடன், பிடார் 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக தக்காளியை பயிரிட்டார். அவர் தனது தக்காளி பயிர்களுக்கு அடுக்கு வைக்கும் முறையைப் பயன்படுத்தினார், அதில் தனித்தனி செடிகள் குச்சிகளால் கட்டப்பட்டிருக்கும். ஸ்டாக்கிங் தாவரங்கள் மண்ணுடன் நேரடி தொடர்பு இல்லாமல் செங்குத்தாக வளர உதவுகிறது. பழ அழுகலில் இருந்து இழப்பைக் குறைக்கிறது. அவர் தக்காளி விற்பனை மூலம் ரூ.8000 பெற்றார். இயற்கை முறையில் வளர்க்கப்படும் இந்த தக்காளி, டாஷ்பாணி பேழை, நீமஸ்த்ரா மற்றும் அமிர்தபாணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இரசாயனங்கள் இல்லாத மற்றும் சுவையானதாக இருக்கிறது.

2020 ஆம் ஆண்டில், முழு மாவட்டமும் கோவிட் 19 இன் தொற்றால் பாதிக்கப்பட்;டபோது, பிடார் தனது வயலில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற தனது தயாரிப்புகளை விற்பதில் மும்முரமாக இருந்தார்.

பிடார் 2020-21 ஆம் ஆண்டின் காரிப் பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையை மேற்கொண்டார். ராபி பருவத்தில், கிடைக்கக்கூடிய நீர்ப்பாசனம் போதுமானதாக இல்லை என்பதைக் கண்டறிந்ததால், பிடார் ஒரு செட் ஸ்பிரிங்லர்களால் கொடுத்து உதவப்பட்டார். அதில் ஸ்பிரிங்லர் செட்டுக்காக பிடார் ரூ. 2000 பங்களிப்பு செய்தார். அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியாக கிடைத்த முடிவு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்து. ஏனெனில் அவரது கட்டுப்பாட்டு நிலப்பகுதியில், மகசூல் ஏக்கருக்கு 1700 கிலோ மற்றும் செய்முறை பகுதியில் மகசூல் 2000 கிலோவாக இருந்தது. இது கட்டுப்பாட்டுப் பகுதியின் விளைச்சலைக் காட்டிலும் 18 விழுக்காடு அதிகாிப்பை பதிவு செய்தது. பின்னர் வெங்காயம், தக்காளி சாகுபடி செய்து ரூ. 8530 லாபம் ஈட்டினார். இதனால், ரபியில் இதுவரை எந்தப் பயிரையும் பயிரிடாத விவசாயி, தற்போது சராசாியாக ரூ.8000 வரை ரபி பருவத்தில் வருமானம் பெறுகிறார்.

சூரியகாந்தி, ஸ்வீட் கார்ன் போன்ற இரண்டாவது பயிரையும், மிளகாய், காலிபிளவர், பிரிஞ்சி, பாகற்காய், பாக்கு, வெங்காயம் போன்ற காய்கறிகளையும் பயிரிட பிடார் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் இனி எனது வாழ்வாதாரத்திற்காக நகரங்களை தேடி போகமாட்டேன். நான் தக்காளி, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளை வளர்க்கிறேன். நான் என் நெல் வயலில் வேலை செய்கிறேன். மஹூவா விதைகள் மற்றும் முந்திரி சேகாிக்கிறேன். நான் மற்ற விவசாயிகளுக்கு உபாி ஆர்கானிக் கலவைகளை விற்பனை செய்கிறேன்.

தான் கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்வதில் பிடார் நம்பிக்கை கொண்டுள்ளார். கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு அவர் செய்முறையாக செய்து காண்பிக்கிறார். இயற்கை வேளாண் முறையில் தயாரிக்கும் நுட்பத்தை அருகில் உள்ள கிராமங்களில் உள்ள தனக்கு தொிந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார். இயற்கை கலவைகளை மற்றவர்களுக்குப் பயிற்றுவிக்க அருகிலுள்ள கிராமங்களில் பெரும் தேவை இருப்பதால், மற்ற பழங்குடி கிராமங்களில் பிடாரை ஒரு பயிற்சியாளராக மேம்படுத்துவதற்கு WOTR ஆதரவு தருகிறது. புலம்பெயரும் கூலியாக இருந்து பயிற்சியாளராக மாறியது பிடாருக்கு ஒரு பொிய சாதனை.

ஹர்ஷல் காடே


Harshal Khade
Communications Officer
Watershed Organisation Trust (WOTR)
The Forum, 2nd Floor,
Pune – Satara Road, Padmavati Corner,
above Ranka Jewellers,
Pune – 411009, Maharashtra
M: +91 95820 41352
E-mail: harshal.khade@wotr.org.in

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2022, வால்யூம் 24, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...