இயற்கை நமக்கு பரிசளித்த சுற்றுச்சூழலை சேமிப்பதற்கு முன் தேவைப்படுவது, உயிர்ச்சூழல் நலன் .வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பின் ஒரு காரணியான மண்ணை உயிரியல்தன்மையோடு பாதுகாப்பது. மண்ணின் தரத்தை பாதுகாத்து, வேளாண்மையில் ஏற்படும் சீதோஷன மாற்ற சவால்களுக்கு தீர்வுகாணும் நிலைத்த வேளாண்-உயிர்ச்சூழல் பாரம்பாிய சாகுபடி அணுகுமுறையாக, இயற்கை வேளாண்மை திகழ்கிறது.
உயிர்ச்சூழல் சமன்பாட்டை கருதாமல், உணவு உற்பத்தியை அதிகாிக்க செய்வது, பெரும்பாலும் நமது சுற்றுச்சூழலை அழிவின் போக்கை நோக்கியே செல்லும். பாரம்பாிய வேளாண்மையில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்திய வேளாண் சார்ந்த இரசாயனங்கள் உணவு தரத்தை பாதிக்கிறது, சுற்றுச்சூழல் மாசுப்பட்டுள்ளது, புவி வெப்பமயமாக காரணமாக இருக்கிறது. மேலும் மனிதன் மற்றும் விலங்கு ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கமும் ஏற்படுகிறது. எப்.ஏ.ஐ (2020) பொறுத்தவரையில், நம் நாட்டின் இரசாயன உரப்பயன்பாடு (1970 மற்றும் 2020 மத்தியில் 13 முறைகள்) அதிகாித்து மண்ணில் ஊட்டச்சத்து சமன்பாடு இல்லாமல் போகிறது.மேலும் செலவுகளின் பாரத்தோடு பயிர் பிரதிபலிப்பு விகிதாச்சாரமும் நோ;மறையாக பாதித்தது. அதைத்தாண்டி சீதோஷன மாற்றங்கள் உற்பத்தி மற்றும் தானிய நிறைவதுகுறிப்பாக வெப்ப அழுத்தத்தை வழிநடத்தும்போது, வளர்ச்சி காலம் குறைதல், நிலத்தடி நீர் குறைதல், சீரற்ற மழைப்பொழிவு, நீண்ட வறட்சி நிலவுதல், பூச்சி எண்ணிக்கை பெருகுதல், வறட்சி மற்றும் உயிர் பல்வகைமை அழிதல் ஆகியவை காரணங்களாக இருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் நிலைத்தத்தன்மைக்கு எதிராக நாட்டில் இம்மாதிரியான பிரச்சனைகள், விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை அமைப்பாளர்கள் பல்வேறு செலவு குறைவான சீதோஷன மீள்திறன் அணுகுமுறைகள் பின்பற்றுவதை ஊக்கப்படுத்தி அதிக உணவு உற்பத்தி குறைந்த கார்பன் அளவோடு, செலவு குறைந்து மற்றும் மாசு இல்லாத நிலைத்த சுற்றுச்சூழல் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.
இயற்கை விவசாயம், 1935 ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த மாசனோபு புகோகா அறிமுகப்படுத்தினார்.இவர் இயற்கையின் சட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். அதாவது இரசாயனம் இல்லாத தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை ஆதாரங்கள் பயன்படுத்தி, சிறந்த பொருளாதாரம் மற்றும் மண்ணின் தன்மையை பாதுகாத்தல்.வேளாண்மையில் அபாய ஒலியை ஒலிக்கும் சீதோஷன மாற்றங்கள், இயற்கை சாகுபடியை ஒரு சீதோஷன மீள்திறன் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.பல மாநிலங்களான ஆந்திர பிரதேசம், சட்டீஷ்கர், கேரளா, குஜராத், ஹமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மற்றும் தமிழ் நாட்டில் இயற்கை வேளாண்மையை சுமார் 6.5 மில்லியன் ஹெக்டர் நிலத்தில் தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையை தற்போது தேசிய இயக்கம் மூலமும், அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களின் முயற்சியிலும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
மண் மற்றும் உயிர்ச்சூழல் ஆரோக்கியத்தை உயர்த்துவதில் இயற்கை வேளாண்மையின் பங்கு. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்து சுழற்சி முறையில் பொறுப்பான ஓட்டுநர் போல் செயல்படுகிறது. அங்கக உருவத்தில் உள்ள பொிய மூலக்கூறு சிறிதாக்கவும்,கனிமமாக்கவும், பெரும்பாலும் மறுப்பு நிலையில் இணைந்திருப்பதை, மாற்றி உயிர்பொருள் வடிவில் தாவரத்திற்கு அளிக்கிறது. இயற்கை வேளாண்மையில், ஊட்டச்சத்து திரவம் கொண்டு தனித்தவமான மற்றும் நுண்ணுயிர் நிறைந்த பல்வேறு பாக்டீரியா, பூஞ்சாணம்,மற்றும் நுண்ணுயிர்கள் மண்ணின் ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கான திடமான பங்களிக்கிறது. மண்ணில் இந்த இயற்கை இடுபொருட்களை இடுவதால், குறிப்பாக அடர்த்தி, மற்றும் பல்வகையான மண் நுண்ணுயிர் உயிர்ச்சூழல் அமைப்பு, நொதி ஈடுபடும் கனிமனமாக்கும் அமைப்பு, கனிம சேமிப்பு, அங்கக பொருளை மட்கவைத்து கார்பன் அளவை குறைத்த ஊட்டச்சத்துக்கள் தாவரங்கள் நேரடியாக கிடைக்க செய்யும். இந்த முறை இராசாயன உரத்தேவையை குறைத்து, உயிர்தாவர வேர் சங்கமடைந்து, வேர் சுற்றியுள்ள பகுதி குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது இயற்கை உயிரியல் அடர்திரவங்களான பஞசகவ்யா, சஷ்யகவ்யா, ஜீவாமிர்தம், கஞ்சீவாமிர்தம், பீஜாமிர்தம் மற்றும் குணாபஜலா மண் நுண்ணுயிர் வளர்ச்சியடைகிறது. இந்த பாரம்பாிய அடர்திரவங்கள் மண் நுண்ணுயிர்களின் குறிப்பிட்ட நொதி செயல்பாட்டை அதிகாிக்கிறது. அதைத்தாண்டி இந்த அடர்திரவங்களில் தாவர வளர்ச்சி ஊக்கிகளான, ரைசோபாக்டீரியா, சைனோபாக்டீரியா, மைக்கோரைசா, அசட்டோபாக்டர், அசோஸ்பாில்லம், சூடோமோனஸ், பேஸில்லஸ், ஒளிசேர்ககை மற்றும் இலைமண்டலம் சார்ந்த பாக்டீரியாக்கள், வைட்டமின்கள், பொிய மற்றும் சிறிய கனிமங்கள், ஹார்மோன்கள், தாவர வளர்ச்சி ஊக்கி கட்டுபாட்டு பொருட்கள், உயிர் பூச்சிக்கொல்லி பொருட்கள் போன்றவைகள், ஊட்டச்சத்து இருப்பு அதிகாிக்கிறது (தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவது, பாஸ்பரஸ் மற்றும் பொடாஷியம் கறையும்முறை) இயற்கை பொருட்கள் மக்கசெய்வது, மக்கு உர உற்பத்தி , விதை முளைப்பு அறிகுறி, தாவர வளர்ச்சி, மற்றும் பூஞ்சாண தாக்குதல் குறைந்துள்ளது. இந்த அடர்திரவங்கள், மண்ணிற்கு செயற்கை வெளியிடு பொருட்களை ஈடுபடுத்தாமல், முதல்நிலை ஊட்டச்சத்தாக பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
இயற்கை சாகுபடியின் கூறுகள்
இயற்கை சாகுபடியில், அதே நிலத்திலிருந்து இயற்கை இடுபொருட்கள் சேர்க்க வேண்டும் என்பதை விவசாயிகளிடம் எதிர்ப்பார்க்கபடுகிறது. ஏனென்றால் நுண்ணுயிர் அடர்திரவங்கள் பயன்படுத்தினால் மண்ணின் உயிர்ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். இயற்கை வேளாண்மையில் நான்கு முக்கிய கூறுகள் இருக்கின்றன. அவை
பீஜாமிர்தம்
இது நொதிக்கப்பட்ட நுண்ணுயிர் அடர்திரவமாகும். இதில் நன்மைசெய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாக இருக்கும் மேலும் இதை விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம். விதையின் வீரியத்தன்மையை ஊக்குவத்து விதை சார்ந்த நோய்களுக்கு எதிராக தற்காப்பு முறையை வழங்குகிறது. முளைப்புத் தன்மையை உயர்த்துதல் மற்றும் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஜீவாமிர்தம்
இது ஒரு நொதிக்கப்பட்ட நுண்ணுயிர் அடர்திரவமாகும். இது பகுதிக்கு உகந்த நுண்ணுயிரை மண்ணில் அதிகாிக்கிறது. நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மற்றும் இலைமண்டலத்தின் நுண்ணுயிர்கள் முதல்நிலை தாக்கத்தோடு நொதிக்கும் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
ஆச்சாதனா/மூடாக்கு
மூடாக்கு, பயிர்களை நிலத்திலேயே உழவு செய்வது, (பரஸ்பர ஊடுபயிர் மற்றும் கலப்பு பயிர்கள்), சணல் கழிவு அல்லது வேளாண் கழிவுகள் மேல் மண்ணை மறைசெய்கிறது. மேலும் மண்ணின் ஈரப்பதம், வெப்பம் மற்றும் மண்ணின் உயிரியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதைதாண்டி மூடாக்கு அங்கக பொருளை சதைத்து மக்கு உருவாகிறது, மண்புழுவின் எண்ணிக்கை அதிகாிக்கிறது, உயிர்ச்சூழல் உயிர்பல்வகைமை, மீண்டும் மண்ணின் ஊட்டச்சத்து அளவை கூட்டுகிறது, காற்றோட்டம் மற்றும் தண்ணீர் படிப்புத்தன்மை ஊக்குவிக்கிறது. ஆவியாதல் மூலம் ஏற்படும் நஷ்டம் குறையும், உழுவதின் தேவை குறைத்து, களை பெருக்கத்தை குறைக்கிறது.
வாபாசா
வாபாசா என்பது காற்று மற்றும் ஈரப்பதம் மண் இடுக்குகளில் சமன்படுத்தி, மண் உயிர்கள் மற்றும் தாவர வேர்களுக்கு ஆக்ஸிஜன், ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்து அளிக்கிறது. தண்ணீர் சேமிப்பு மற்றும் பயிர்த்தேவைக்கு ஏற்ப தண்ணீர் பயன்பாட்டை குறைக்க வேண்டும் போன்றவைகள் இயற்கை சாகுபடியின் காரணியாக செயல்படுகிறது. இல்லையேல் அதிக தண்ணீர் ஆக்ஸிஜன் குறைபாட்டை வழிநடத்தி தாவரங்களை காயப்படுத்தும். காற்று மற்றும் ஈரப்பதம் மண்ணின் அமைப்பில் வாபாசா மூலம் நுண்ணுயிர் செயல்பாட்டை சிறப்பாக செயல்படவும், தண்ணீர் பயன்பாட்டு சிறப்பாக அதிகாித்து தண்ணீர் பாசனத் தேவை குறைகிறது.மேலும் தாவர வளர்ச்சி அதிகாிக்கிறது.
பயிர் பாதுகாப்பு
இயற்கை வேளாண்மை செயல்பாட்டில் உயிர் அடர்திரங்களான அக்னிஆஸ்தரா, வேம்பாஸ்தரா, பரம்மாஸ்தரா, தாஷ்பார்னி, ஷன்தி ஆஸ்திரா, புளிப்பான நீர்மோர் போன்றவைகளால் பயிர்களின் பூச்சி மற்றும் நோய்களின் குறைந்தது. இந்த அடர்திரவங்கள் உயிர்சூழலில் பயன்தரும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படாது.
ஆராய்ச்சி முடிவுகள்
ஆசிரியர்கள் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் இயற்கை வேளாண்மை இடுபொருட்களின் பண்புகளான நுண்ணுயிர் கூட்டு மற்றும் நொதிகளின் ஆதாரம் என்று கருதப்பட்டது. பயனுள்ள மண்ணின் நுண்ணுயிர்கள் குறிப்பிட்ட அளவு அதிகம் இருப்பதை பதிவு செய்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து சுழற்சியை சார்ந்த நொதிகளுக்கு இந்த அடர்திரவங்கள் நுண்ணுயிர் தேக்கமாக இருக்கிறது. இது மண்ணின் உயிரியல் ஆரோக்கியத்தை உயர்த்துகிறது, தழை, மணி, சாம்பல் சத்தை கனிம செயல்பாட்டை சலபமாக்குகிறது மற்றும் செயற்கை உரங்களின் தேவையை குறைக்கிறது.
மூடாக்கு தொழில்நுட்பம் மண்ணின் உயிர்களில் குறிப்பிட்ட வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துகிறது. இது தேவையான மண் காற்று – ஈரப்பதம் – வெப்பத்தை பாதுகாக்கிறது, அங்கக பொருள் மக்கும் செய்முறை விரைவுபடுத்துகிறது, தண்ணீர் தேக்கத்தன்மை 22-30% வரையும் மற்றும் பரவும் தன்மையும் அதிகாிக்ிறது. மண்ணில் தண்ணீர்-வெப்ப நிலைமை மதிமாக இருக்கிறது. மண்ணின் இருகும் தன்மை குறைகிறது, களை வளர்ச்சி கட்டுபடுத்துகிறது, ஆவியாவதையும், தண்ணீர் பாசனத்தையும் (35-45%) குறைக்கிறது நிலத்தடிநீர் அளவு மேம்படுத்துகிறது (இயற்கை வேளாண்மையில் -8 செ.மீ/வருடம் மற்றும் பாரம்பாிய தொழில்நுட்பத்தில் -22 செ.மீ), நிலத்தடி நீர் நிரப்புவது அதிகாிக்கிறது, தாவர வேர்ப்பகுதியில் உப்புத்தன்மை தடுக்கிறது, மண் அரிமானம் குறைகிறது (32-40%), மேலும் பயிர் கழிவுகள், சாகுபடி செலவுகளும் குறைகிறது. படர் பயிர்களை கொண்டு மூடாக்கு பின்பற்றினால் அதே பயன்களை அளிக்கிறது. கூடுதலாக கார்பன் சேமிப்பு (0.20-0.45 மி.கி கார்பன்/ஹெ/வருடம்), அதிக மகசூல் மற்றும் பொருளாதார பயன்கள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும் பயிர் சுழற்சி, பயிர் பல்வகைமை, ஊடுபயிர், மக்குஉரம், மற்றும் வேளாண் – காடுகள் பசுமை வீட்டு வாயுவை குறைக்கிறது (38-50%), கார்பன் சேமிப்பு (1.6-2.0 டன் கார்பன் டை ஆக்சைடு/ஹெ/வருடம்), பு+ச்சி மற்றம் நோய் தாக்கத்திற்கு உயிரியல் கட்டுபாட்டை ஊக்குவிக்கிறது. மரபணு சேமிப்பை உயர்த்தி சீதோஷன மாற்றங்களால் ஏற்படும் தாக்கத்தை முறியடிக்க உதவுகிறது. குறைந்த இல்லது உழவு அல்லாத சுழல் மண்ணின் முழுமைத்தன்மை வடிவத்தை உயர்த்துகிறது , மண்ணின் இடைவெளியை மேம்படுத்துகிறது, மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கிறது, மண்ணின் கார;பன் சேமிக்கிறது (57+14கி கார்பன் /ச.மீ/ வருடம்), தண்ணீர் சேகாிப்பு (20-30 %), மற்றும் ஆற்றல் சேமிப்பு. ஆந்திர பிரதேசத்தில், இயற்கை வேளாண்மை 45-70% இடுபொருள் ஆற்றல் குறைவாக தேவைப்படுகிறது (1250 கிகாஜூல்ஸ்/ஏக்கர்) அதனால் முடிவில் 55-85 % வரை குறைந்த வாயுக்கள் வெளியிடுகிறது (1.4-6.6 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைட்/ஏக்கர்).
மண்ணின் இடைவெளியில் காற்று மற்றும் தண்ணீர் மூலக்கூற்றின் சராசாி விகிதாச்சாரம் மேம்படுத்தினால் மண்ணின் ஆரோக்கியம் உயர்த்துகிறது, ஆதாவது வாபாசா, மண்ணின் உற்பத்தித்திறனை உயர்த்தி குறிப்பிட்ட தாக்கம் ஏற்படுகிறது. இந்த நிலை சிறந்த முறையில் தண்ணீர் இருப்பு மற்றும் தண்ணீர் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. இது மண்ணின் மெல்லிய துளை செயல்பாடுகள், குறைந்த பாசனத் தேவைகள், வேர்களுக்கான ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் வறட்சியின் தாங்குதிறன் ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகிறது.
கூடுதலாக, இயற்கை வேளாண்மையில் கால்நடை ஒருங்கிணைப்பில், கால்நடை மேய்ச்சல் களைக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்கிறது.இது நிலத்திலேயே அங்ககப்பொருளை கூடுதலாக சேர்க்கிறது. கால்நடை கழிவுகள் இருப்பு அதிகாிக்கிறது.இதனால் மண் ஆரோக்கியத்தின் உயர்வு ஊக்குவிக்கிறது.
ஆகையால், இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்கள் மண் ஆரோக்கியத்தை உயர்த்தி மண்ணின் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான நல்ல சுற்றுசூழல் வழங்குகிறது, மண்ணின் உயிரியல் பல்வகைமை உயா;த்துகிறது, மேலும் பயிர் உற்பத்தி நிலைக்கிறது. இயற்கை வேளாண்மையில் சிறப்பாக இடுபொருள் பயன்பாட்டை அதிகாித்து, சமூக-பொருளாதார உயர்வுகள் உருவாகிறது. இதில் சிறு மற்றும் குறு விவசாயிகளும் உட்பட்டவர்களாவர். இதனால் சீதோஷன மாற்றத்தை எதிர்கொள்வது, மற்றும் சீதோஷனத்திற்கு உகந்த தாங்குதிறன் வேளாண்தொழில்நுட்பங்களை பின்பற்றுவது, குறிப்பாக பன்பற்றக்கூடிய கட்டுபாட்டு முறையும் ஊக்கப்படுத்துகிறது.
முடிவு
இயற்கை வேளாண்மை என்பது வேளாண்-உயிர்சசூழலை அடிப்படையாக கொண்ட பயிர் மகசூல், சாகுபடி செலவுகள் குறைத்து, வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பில் குறைந்த தாக்கம் ஏற்படுத்தி, இரசாயன உரங்களை தடுத்து, சீதோஷன மீள்திறன் தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும். அவை எரிபொருளை பயன்படுத்துவதை குறைத்தல், உழவு செய்வதை குறைத்தல், இயற்கை ஆதார சேமிப்பு மற்றும் பயன்பாடு, பயிர் பல்வகைமை மற்றும் உயிர்ச்சூழல் ஒருங்கிணைப்பு ஆகிய மீள்திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.இயற்கை விவசாயத்தில், செயற்கை இடுபொருள் பயன்படுத்தாமல், கார்பன் சேமிப்பு மற்றும் பசுமை குடில் வாயுக்கள் வெளியிடுவது குறைகிறது. மேலும் இயற்கை விவசாயத் கண்டிப்பாக சிறுவிவசாயிகளின் நிதிநிலைமையை நிம்மதியாக்குகிறது, விதை தர்சார்புத்தன்மை, வளர்சிதை பொருட்கள் உருவாக்குகிறது மற்றும் எதிர்காலத்தில் கார்பன் சாகுபடிக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புள்ளது. நமது நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு, இயற்கை வேளாண்மை வெற்றிபெரும் அணுகுமுறையாக இருக்கலாம். இது மண் ஆரோக்கிய அழிவை மீட்கவும், சீதோஷன மீள்திறனை ஊக்கப்படுத்தவும், உற்பத்தி மற்றும் விளைபொருளின் பொருளாதார இலாபம் நிலைக்க செய்கிறது.
அட்டவணை 1: இயற்கை வேளாண்மையின் அடர்திரவங்களில் உள்ள நொதிகளின் செயல்பாடுகள் (பஞ்சகவ்யா, சஷ்யகவ்யா, ஜீவாமிர்தம் மற்றும் பீஜாமிர்தம்)
| பி-க்ளுகோசிடேஸ் | ஆமில பாஸ்படேஸ் | கார பாஸ்படேஸ் | டீஹைட்ரோஜினேஸ் | |
| (மி.கி. பி-நைட்ரோபினால் வெளியிடு /மி.லி/மணி | மை.கி டி.பி.எப்/மி.லி/மணி | |||
| பஞ்சகவ்யா | 0.96 | 6.38 | 2.45 | 8.16 |
| சஷ்யகவ்யா | 1.05 | 6.51 | 2.45 | 9.69 |
| ஜீவாமிர்தம் | 0.85 | 6.71 | 2.15 | 9.26 |
| பீஜாமிர்தம் | 0.63 | 5.98 | 3.37 | 6.58 |
பெட்டி செய்தி 1 : இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை என்பது இரசாயன அல்லாத, பகுதிக்கு உகந்த, சீதோஷன மீள்திறன் மற்றும் பின்பற்றக்கூடிய வேளாண்உயிர்ச்சூழல் இந்திய பாரம்பாிய சாகுபடி அணுகுமுறையாகும். இது உணவு உத்திரவாதமின்மை, விவசாயிகளின் அழுத்தம், ஆரோக்கிய பிரச்சனைகள், அதிக பட்ஜெட், பசுமைகுடில் வாயுக்களின் வெளியீடுகள், கார்பன் பட்ஜெட் மற்றும் சீதோஷன மாற்றம் ஆகியவற்றிற்கான தீர்வுகள் வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை என்பது தொழில்நுட்பம் அல்ல இது ஒரு செய்முறை, நாம் இயற்கையோடு இணையும் ஒரு வழியாகும். கூடுதலாக உயிர்ச்சூழல் மற்றும் பண்ணையிலேயே ஆதாரங்களை பயன்படுத்தும் சிறப்பான புரிதலாகும். இது பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளை ஒருங்கிணைத்து, செயல்படக்கூடிய உயிர்பல்வகைமையை உகந்த முறையில் பயன்படுத்துவதேயாகும்.
பெட்டி செய்தி 2
அடர்திரவங்களின் தயாரிப்பு
அ) பீஜாமிர்தம்
பொருட்கள்
பசுஞ்சாணம் – 5 கி
பசுங்கோமியம் – 5 லிட்டர்
சுட்ட சுண்ணாம்பு/கால்சியம் ஆக்ஸைட் – 50கி
கை நிறைய கலையாத மண்
தண்ணீர் – 20 லிட்டர்
அனைத்து பொருட்களையும் கலந்து, 24 மணி நேரத்தில் இரண்டுமுறை கலக்க வேண்டும் மேலும் இது பயன்படுத்துவதற்கு தயார்நிலையில் இருக்கும்.
பீஜதமிர்தம் கலவையை விதைகள் மேல் தௌிக்க வேண்டும் (100 கிலோ), கலந்து மற்றும் விதைப்பதற்கு முன் நிழலின்கீழ் விதைகளை உலர்த்த வேண்டும்
நாற்றுகளை நேர்த்தி செய்வதற்கு, நாற்றின் வேர்களை 5 நிமிடத்திற்கு முக்கி எடுக்க வேண்டும். வேர்கள் உலர்த்தி பிறகு நடவு செய்ய வேண்டும்
கிழங்குகள்/கரனைகள்/தண்டுகள் பீஜாமிர்தத்தில் 10-20 நிமிடத்திற்கு விதைப்பதற்கு முன் முக்கி எடுக்க வேண்டும்.
ஆ) ஜீவாமிர்தம்
பொருட்கள்
பசுஞ்சாணம் – 5 கிலோ
பசுங்கோமியம் – 5 லிட்டர்கள்
வெல்லம் – 2 கிலோ
கடலை மாவு – 2 கிலோ
கை நிறைய கலையாத மண்
தண்ணீர் – 200 லிட்டர்
பொருட்களை கலந்து, 48 மணி நேரத்தில் நிழலின் கீழ் வைத்து கட்டையால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கலக்க வேண்டும்
இதை 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஹெக்டர் 500 லிட்டர் தௌிக்க வேண்டும். (மண்/பாசன நீருடன் நேரடியாக பயன்படுத்தலாம்) அல்லது தாவரங்களுக்கு தண்ணீரில் கலந்து தௌிக்க வேண்டும் (2-10ம% பயிர் மற்றும் பயிர் நிலைகள்)
மோனிதிப்தா சாஹா, ரித்தி சாட்டர்ஜி மற்றும் கிருஷ்ணெந்து ரே
Monidipta Saha and Krishnendu Ray Sasya Shyamala Krishi Vigyan Kendra, RKMVERI, Arapanch, Sonarpur, Kolkata-150 E-mail: moni.rkmvukvk@gmail.com Riddhi Chatterjee IRDM Faculty Centre, Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute (RKMVERI), Narendrapur, Kolkata-103
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2025, வால்யூம் 27, இதழ் 2



