உயிரியக் காிமம் / சாம்பல் கட்டிகளை உற்பத்தி செய்யும் தொழில் – பயிர் கழிவுகளை மேம்படுத்துவது மற்றும் மண்ணின் தன்மையை உயர்த்துவது


பயிர் கழிவுளை உயிரியக் காிமமாக மாற்றும் உயிர்ச்சூழலுக்கு உகந்தவழியை உயர்த்திக்காட்டி, மண் வளத்தை உயர்த்துகிறது. விவசாய உற்பத்தி நிறுவனம் இந்த செயல்முறையை அனைவரும் பயனடையும் வகையில் தொழில் நிறுவனமாக எப்படி உருவாக்கினர் என்பதை விளக்குகிறது.


இந்தியாவில் பயன்படுத்தாத பயிர் கழிவுகளை எரிப்பதே விவசாயிகள் மத்தியில் உள்ள வழக்கமாகும். இது உயிர்ச்சூழல் முறையல்ல. இது வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகாித்து காற்று மாசுபடுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் விவசாயிகள் இயற்கை உரங்கள் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டனர். அவர்கள் இரசாயன உரங்களை பயன்படுத்த துவங்கியதால் மண்ணின் கனிம அளவு குறைகிறது. இது மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை, ஊடுருவும் தன்மை, வடிகால் திறன், நுண்ணுயிர்கள் எண்ணிக்கை, மற்றும் மண்ணின் நொதிகளின் செயல்பாடு குறைகிறது. இந்த நிலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மால் மாவட்டத்தில், ஒவ்வொரு வருடமும் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட 4,05,000 ஹெக்டர் நிலத்திலும், துவரை சாகுபடிசெய்யப்பட்ட 1,06,000 ஹெக்டர் நிலத்திலும் மிக மோசமான சுற்றுச்சூழல் பிரச்சனையை சந்தித்து வருகிறது.

அதிகாித்துவரும் காற்று மாசுபாட்டின் இந்த இரட்டை பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, புனேவில் உள்ள பைப் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனமான, கிராம வளர்ச்சியில் பணி செய்து கொண்டிருக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனம், மண் வளம் உயர்த்துவதற்கான, உயிரியக் காிமம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாட்டை உற்பத்தி தொழிலாக அறிமுகப்படுத்தியது. இந்தத் தொழில் பயிர்க் கழிவுகளை இடுபொருளாக பயன்படுத்தி, முடிவில் கிடைக்கும் சாம்பல் கட்டிகளை விவசாயிகள் மண் வளம் உயர்த்தவும் மற்றும் பயிர் உற்பத்தி அதிகாிக்கவும் பயன்படுத்தலாம். உயிரியக் காிமம் பயன்படுத்துவதைத் தாண்டி, பைப் நிறுவனம், மண் பாிசோதனை அடிப்படையில் உரத்தை இடுவது, இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது, உயர்த்தப்பட்ட உழவியல் செயல்பாடுகள், மண் மற்றும் தண்ணீர் சேமிப்பு செயல்பாடுகள் மற்றும் மண்புழுஉரப் பயன்பாடு ஆகியவை நிலைத்த மண் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக ஊக்கப்படுத்துகிறது.

எனினும் விவசாயிகள் உயிரியக் காிமத் தொழிலை எடுத்து செய்வதற்கு சில பிரச்சனைகள் இருந்தது. காிமக்கட்டிகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்த அறிவு இல்லாதது, விவசாயிகளால் இந்தக் கருவி அமைப்பையும் மற்றும் இதர உற்பத்திக் கருவிகளையும் வாங்கமுடியாத நிலை, மேலும் கூலிகளை மேம்படுத்துவது கடினம் போன்று தனி ஒரு விவசாயிக் கொணர முடியாததாக இருக்கிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பைப் நிறுவனம் ஜி.ஐ.ஸட் டின் உதவியோடு விவசாயிகள் உற்பத்தி நிறுவனமான துல்ஜா விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் 2019 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா யவத்மால் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 220 உறுப்பினர்கள், நபருக்கு தலா ரூ.1000 த்தை தங்களது பங்காக அளித்துள்ளனர். யாவத்மால் மற்றும் அமராவதி மாவட்டங்களில் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகமாக உள்ளதால் பயிர் கழிவுகளை எரிப்பது இங்கு பொதுவான வழக்கமாக இருக்கிறது. ஆனால் பயிர் அறுவடைக்குப் பின்னர், விவசாயிகள் செயல்படுத்தும் மிகமோசமான செயலாகும். இதனை முக்கிய வாய்ப்பாக கருதி, விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் பல்வேறு கூட்டங்களை நடத்தி, விவசாய சமூகத்திற்கு, பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து உணர வைத்தனர். அதேபோல், மண் உற்பத்தியை உயர்த்துவதற்கு உயிரியக் காிமத்தின் பயன்பாடு என்பதும் எரு தலைப்பாக கையாளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் விவசாய வயல்களிலும், செய்முறை நிலத்திலும் மற்றும் விவசாய பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விவசாய உற்பத்தி நிறுவனம் ஜனவரி 2021 ஆம் ஆண்டிலிருந்து பருத்தி பயிர்க் கழிவுகளை வாங்க துவங்கியது. முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.2.5 முதல் 3 வரை ஒரு கிலோவிற்கு அளிக்க துவங்கியதால், விவசாயிகள் கழிவுகளை விவசாய உற்பத்தி நிறுவனத்திற்கு விற்க முன்வந்தனர். இல்லாவிட்டால், இவர்கள் பயிர்க்கழிவுகளை வெளியிலேயே எரித்துவிடுவர். சேகாிக்கப்பட்ட கழிவுகளை காற்றுபுகா எரியூட்டும் செயல்முறையின் மூலம் டிரம்களை பயன்படுத்தி உயிரியக் காிமக் கட்டிகளாக மாற்றுகின்றனர். காற்றுபுகா எரியூட்டும் செயல்முறைக்கு பயன்படுத்தும் டிரம்கள் (200 கிலோஅளவு) ரூ.60000 ஆகும். மேலும், இந்த உயிரிய காிமத்தை தூளாக மாற்றி சாக்குப்பையில் நிரப்பப்படுகிறது. இந்த உயிரிய காிமத்தை விவசாய உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் (ரூ. 2-3/கிலோ சந்தை விலையை விட குறைவு) அளிக்கப்படுகிறது.
2021-22 ஆம் ஆண்டு,விவசாய உற்பத்தி நிறுவனம் 100 டன் பயிர்க்கழிவுகளை, 25 டன் உயிரியக் காிமமாக வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

முடிவுகள்
உயிரியக் காிமம் உற்பத்தி கலனை நடத்திவரும் விவசாய உற்பத்தி நிறுவனம் புதிய வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நிலைகள் பல்வேறு பங்குதாரர்கள் மத்தியில் உயர்ந்த நிலையை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் – பருத்தி பயிர்க் கழிவுகளை விற்பனை செய்ய முடிகிறது, கூலியாட்கள் பயிர்கழிவுகளை சேகாிக்க தேவைப்படுகிறார்கள், போக்குவரத்து – கழிவுகளை செய்முறை கலன் அமைக்கப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்ல தேவைப்படுகிறது, இறுதியாக, விவசாயிகள் நுகர்வோராக செயல்படுகிறார்கள் அதாவது பயிர்களுக்கு பயன்படுத்த உயிரியக் காிமம் வாங்குகிறார்கள்.
விவசாயிகள் நிலம் சுத்தம் செய்யும் செயல்பாடுகளை பணம் கொடுத்து செய்வதை விடுத்து, பண்ணைக் கழிவுகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இந்தத் தொழில் திறன் மற்றும் திறனல்லாத கூலியாட்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இரண்டு வகையான திறனல்லாத கூலியாட்கள் தேவைபடுகின்றனர். வயலில் – பயிர்க் கழிவுகளை சேகாிக்க மற்றும் போக்குவரத்திற்கு, விவசாய உற்பத்தி நிறுவனத்தில் – மூட்டைகளை ஏற்றுவதற்கும் உற்பத்தியில் உதவி செய்வதற்கும் தேவைப்படுகின்றனர். திறன் கொண்ட அல்லது குறைந்த திறன் கொண்டவர்களை உயிரியக் காிம உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது இதில் கையாளும்போது, அரைக்கும்போது மற்றும் பொட்டலமிடும்போதும் எச்சாிக்கையோடு பணிபுரிய உதவுவார்கள். விவசாய உற்பத்தி நிறுவனமும் உயிரியக் காிமத்தை பொட்டலங்களில் உள்ளூர் உறுப்பினர்களுக்கு விற்பதன் மூலம் குறைந்த அளவு வருமானமும் கிடைக்கிறது.

விவசாயிகள் உயிரியக் காிமத்தை பயிர் மகசூல் உயர்வதற்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்,அதனால் உயிரிய காிமத்திற்கான தேவை அதிகாித்துள்ளது.

தொடர்ந்து விவசாய உற்பத்தி நிறுவனம் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்தியது. நவம்பர் 2022 ஆம் ஆண்டிலிருந்து, விவசாய உற்பத்தி நிறுவனம் உயிரியக்காிமம் உற்பத்தியை முன்கூட்டிய மண் திட்டத்தின் கீழ் பருப்பு பதப்படுத்தும் கலனை அமைத்தது. இவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அந்தப் பகுதியின் சுற்றுவட்டார பொருளாதாரத்தில் பெறும்பங்கு வகித்தது. விவசாயிகள் உயிரியக் காிமஉரத்தை அவர்களாகவே பயன்படுத்தத் துவங்கினர். உயிரிய காிமப் பயன்பாடு நீண்டகாலத்தை தாண்டி உணரப்படுகிறது, பல ஆண்டுகளாக இதன் பயன்பாட்டின் விலை உடைக்கப்படுகிறது. மேலும் இதன் விலை செலவாக இல்லாமல் முதலீடாக கருதப்படுகிறது. விவசாயிகள் உயிரிய காிமம் பயன்படுத்துவது குறைந்த விலை உரங்களின் பயன்பாட்டிற்கு மாற்றாக திகழ்கிறது. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் இந்த உரம் மிதமாக சத்துக்களை பயிர்களுக்கு வெளியிடுகிறது. நிலத்தின் பரப்பளவு அதிகமாக உள்ளதால் உயிரியக் காிம உரம் பயன்படுத்துவது அதிக செலவாகும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். எனினும் உதவி வழங்கினால் நாங்கள் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.
விவசாயிகள் 2.5 டன் உயிரியக் காிம உரம் சோயா பீன்ஸ், பருத்தி, துவரை மற்றும் இதர பயிர்களுக்கு இட்டதாக கூறியுள்ளனர். இந்த உரம் நிலத்தை தயார் செய்யும் நேரத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு பருவக் காலங்களில், ஆராய்ச்சிக்காக பாிசோதனைகள் செய்யப்பட்ட விவசாய வயல்களின் பயிர் மகசூல் கொடுக்கப்பட்டுள்ளது. ரபி 2020 – 12.59 % கோதுமையில் (12 பாிசோதனை நிலங்கள்), 13.44 % பயிறு வகையில் (8 பாிசோதனை நிலங்கள்). காரீப் 2021 – 12.16 % கோதுமையில் 12 (பாிசோதனை நிலங்கள்), ரபி 2021 – 13.68 % கோதுமையில் (12 பாிசோதனை நிலங்கள்), 13.07% பயறு வகையில் (8 பாிசோதனைகள்) விவசாயிகளும் அவர்களது பண்ணையில் மகசூல் அதிகாித்துள்ளதை கண்டனர். அருகில் உள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் இந்த உரத்தை பயன்படுத்திய பாிசோதனை நிலத்தை பார்வையிட்டு சென்றனர். அவர்கள் செயல்பாட்டு நிலத்தின் வெளிபாட்டை கண்கூடாக சாதாரண நிலத்தை ஒப்பிட்டும் கண்டனர்.

முன்னேற்ற பாதையில்
சில காலத்திற்கு, விவசாயிகளின் தேவைக்கு உதவி வழங்கினால் உயிரியக் காிம பயன்பாட்டின் பயன்களை அவர்கள் உணர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. விவசாய உற்பத்தி நிறுவனம் உற்பத்தி செய்யும் உயிரியக் காிம உரத்தை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில் பல்வேறு நிறுவனங்களை ஈடுபடுத்தி தேவையின் அடிப்படையில் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும். உயிரியக் காிமம் உற்பத்தி முறைகளை துரிதப்படுத்தினால், உற்பத்தி செலவை குறைக்கலாம். பலபயிர் செயல்முறை கலன்களை அமைத்து, விவசாய உற்பத்தி நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு கூடுதல் நிதி உதவி தேவைப்படுகிறது.

உயிரியக் காிமம், காிமம் அதிகம் நிறைந்த ஆதாரமாகும். இது மண்ணில் காிம அளவை அதிகாிக்கிறது. மண்ணில் தண்ணீர் மற்றும் சத்துக்கள் பிடித்து வைக்கும் தன்மையை அதிகாிக்கிறது. உயிரியக் காிமத்தை இடுவதனால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, நொதிக்கும் செயல்பாடு மற்றும் மண் வளம் அதிகாிக்கிறது. உயிரியக் காிம உரத்தை இடுவதால், பயிர்களில் நோய்கள் மற்றும் வறட்சியை எதிர்க்கும் தன்மை அதிகாிக்கிறது.

கணேஷ் பிதரே, ராவ்சாஹிப் கோட்டி, சாகர் ஜாதவ் மற்றும் சச்சின் சேட்டுலே


Ganesh R Bedare
Associate Thematic Programme Executive
BAIF Development Research Foundation
BAIF Bhavan, Dr. Manibhai Desai Nagar
Warje, Pune - 411058
E-mail: ganeshb@baif.org.in

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2023, வால்யூம் 25, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...