புற்களின் பொருளாதாரம் மற்றும் அதன் உயிரியல் அமைப்பு புதுப்பிக்க இணையும் கைகள்


பல்வேறு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மேய்ச்சலுக்கு உதவும் பணியாளர்களின் சமூகக் குழுக்கள் உள்ளூர் எருமை இரகம் மற்றும் உயிரியல் அமைப்பை பாதுகாக்கிறது. இந்த பங்குதாரர்கள் பால் சந்தைகளுக்கு சென்று இந்த சமூகம் பயனடைந்து வருவாய் ஈட்டியது. தற்போது அவர்கள் சமூகங்களோடு இருந்து அரசு உரிமைகளை பெறுவதற்கு உறுதி செய்கிறது. அரசு, முக்கிய வல்லுநர் இருந்தாலும் இவர்கள் கூறுவதை கவனிக்கவில்லை.


சுமார் 500 வருடங்களுக்கு பின்னர், தற்போது மல்தாரிஸ்க்கு பன்னி ஒரு வீடாக இருக்கிறது. பன்னி, ஆசியாவிலேயே இரண்டாவது பொிய புல்வெளி, இது இந்தியாவில் மற்ற புல்வெளியை காட்டிலும் மிக நன்கு இருக்கக்கூடியது. இது 2500 ச.கி.மி. பரப்பளவில் விரிவடைந்துள்ளது. இது பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இருப்பிடமாக இருக்கிறது. இன்று, 7000 குடும்பங்களுக்கு மேல் பன்னியில் வாழ்ந்து விடுகின்றனர். இதில் பெரும்பாலானோர் மல்தாரிஸை சேர்ந்தவர்கள். ராஜா ஆட்சி செய்யும் காலத்திலும், பன்னியில் மேய்ச்சல் உரிமையை மல்தாரிஸ் மக்கள் பெற்றுள்ளனர். மேய்ச்சல் வரியை செலுத்துவதை பொருத்தே உரிமை குறித்து முடிவெடுப்பர். புல்வெளியின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டின் முடிவு மல்தாரிஸ் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் எடுக்கின்றனர் மற்றும் முழு சமூகமும் சட்டதிட்டங்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர். ராஜா ஆட்சியின்போது, பன்னியில் 1856 ஆம் ஆண்டு வாங்கிய உரிமைகளின் ஆவணங்கள் இன்னும் மல்தாரிஸ் மக்கள் வைத்திருக்கின்றனர்.

1955 ஆம் ஆண்டு பன்னி என்ற இடத்தை பாதுகாக்கப்பட்ட காடாக பிரிக்கப்பட்டது. எந்த ஆய்வும் அல்லது இருப்பு செய்முறை அந்த சமயத்தில் எடுத்துகொள்ளப்பட்டது. அன்று முதல் புல்வெளியில் அரசு உரிமைகள் குழப்பத்தில் இருக்கும் சமயத்தில் வருவாய் துறையில் அலுவலக கட்டுபாடு வனத்துறைக்கு 1998 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அப்போது பன்னி உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தை ஆய்வு செய்து முடிக்கும் வரை வனத்துறை பொறுப்பேற்காது என்று தவிர்த்தது. ஆகையால் வனத்துறை மற்றும் வருவாய் துறை இரண்டும் அலுவலகக் கட்டுபாட்டை நிராகாித்ததால், மல்தாரிஸ், முறையான கட்டுபாடு இல்லாமல், புல்வெளியும் அதன் பாரம்பாிய முறைகளை தொடர்ந்து மேம்படுத்தி நிர்வகித்து வந்தனர். பன்னி மல்தாரிஸ், வீரிய விலங்கு இரகமான பன்னி எருமை, இயற்கையோடு இணைந்திருக்கும் உறவு மற்றும் முக்கிய கலாச்சாரமான மல்தாரியாத் ஆகியவற்றின் சிறப்பம்சத்தால், இன்றும் பிரபலமாக உள்ளது.

எனினும் பொருட்கள் அனைத்தும் கூடியவிரைவில் மாறும். 2008 ஆம் ஆண்டு பன்னியின் பசு மேளா, வருடாந்திர விலங்கு திருவிழா, பன்னியின் இரகங்கள், கலாச்சாரம் மற்றும் மனித உயிரியல் ஆகிய அனைத்தும் கொண்டாடப்படுவதற்கான மேடையாக இருந்து மாற்றங்களை உறுதி செய்கிறது.மல்தாரிஸ்ஸின் பொியோர்கள், அவர்களின் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், பன்னி எருமை இரகத்தின் அங்கீகாரத்திற்கு பணிசெய்யவும், புல்வெளியின் சமூக உரிமை பிரச்சனைகளை தீர்க்கவும், பன்னி புல்வெளியை பாதுகாப்பதற்கு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று உணர்ந்தனர் (அன்னிய நாட்டு சிற்றினமான ப்ரோசோபிஸ் ஜுலிபளோரா பரவலாக வளர்ந்ததால் புல்வெளிகள் வேகமாக அழிந்து வருகிறது). சுமார் 1200 மல்தாரிஸ் ஒன்று கூடி பன்னி இரகபெருக்க சங்கம் ஒன்று உருவாக்கி குஜராத் ட்ரஸ்ட் மற்றும் சொசைட்டி ஆக்ட் கீழ் பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் என்ற பெயாில் 2009 ஆம் ஆண்டு பதிவு செய்து சமூக நோக்கங்கள் அடைவதற்கு பணி செய்ய துவங்கினர். இந்த சங்கம் முறையான விதிகளை வடிவமைத்து, 21 செயல் உறுப்பினர்கள் குழு தேர்வு செய்து, அவர்கள் மூன்று வருட காலத்திற்கு மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும். செயற் குழுவில், 19 பஞ்சாயத்துகளிலிருந்து ஒரு பிரதிநிதி மற்றும் இரண்டு பழங்குடியின உறுப்பினர்கள் இருப்பர். இந்த சங்கம், சஞ்ஜுவன், உள்ளூர் தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து, பன்னி எருமையை பதிவு செய்வதற்கும், தேசிய பால்வள வளர்ச்சி குழுவுடன் பால் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர்.அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாரம்பாிய அரசு மாதிரிகள் மூலம் பன்னியை பாதுகாத்தல் மற்றும் நிலத்தின் மேல் அவர்களின் முறையான உரிமையை மீட்டெடுத்தல் ஆகிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் துவங்கினர்.

பன்னி எருமை – கிடைக்கும் அங்கீகாரம்
பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன், தொடங்கியதிலிருந்து வாழ்வாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எடுத்த முயற்சியில் தரமற்ற வெற்றியை சந்தித்தது. பன்னி எருமை என்ற இரக மற்றும் அதனை உருவாக்கிய புற்கள்-இரகப் பாதுகாவலர், பன்னியில் பல தலைமுறைகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சி எதிர்ப்புத் திறன், நோய்கள் எதிர்ப்புத்திறன், அழுத்தமான சூழ்நிலையிலும் அதிக மகசூல், அமைதியான பண்பு, மற்றும் இரவில் தானாவே மேயும் திறன் ஆகிய தனித்துவமிக்க பண்புகளால், வறட்சி மற்றும் மித-வறட்சி சீதோஷனத்திற்கு உகந்ததாக இருக்கிறது. இந்த சங்கம், சஞ்ஜுவன் உதவியோடு, சர்தார் க்ருஷிநகர் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மாநில கால்நடைத் துறையில் 2010 ஆம் ஆண்டு இந்த இரகத்தை பதிவு செய்தனர்.இந்தப் பதிவு பன்னி இரகத்திற்கும், இதனை வளர்ப்பவருக்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. தேசிய உயிர் பல்வகைமை அதிகாரம் மற்றும் உயிர் வலை இரக பாதுகாவலர் என்ற விருதை ஹாஜி மூசா என்ற மல்தாரிக்கும், பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் அமைப்புக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. சலீமமத் ஹல்போத்ரா, பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் தலைவர், என்.பி.ஏ.ஜீ.ஆர் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராக அமர்த்தபட்டார். பன்னி எருமைகளின் தேவை அதிகாித்தது. பதிவு செய்யும்போது இருந்த விலையைவிட பன்னி எருமைகளின் சராசாி விலை இரண்டு மடங்காக அதிகாித்துள்ளது.
சுதந்திரம் அடைந்தப்பின்னர் இந்தியாவில் அங்கீகாிக்கப்பட்ட முதல் எருமை இரகம், பன்னி எருமை இரகமாகும் அதன் பிறகு, 29 புதிய கால்நடை இரகங்கள் , என்.பி.ஏ.ஜீ.ஆர் என்ற அமைப்பினால் பதிவு செய்யப்பட்டன.

பால் பொருளாதாரம் அதிகாித்தது.
பன்னியில் உள்ள புல்வெளியின் பாதுகாவலர்கள், உள்ளூர் தேவையைவிட, பால் உற்பத்தி அதிகமாக செய்வதால், அதன் விலை 2008 ஆம் ஆண்டு வரை குறைந்துகொண்டே சென்றது. இந்த நேரத்தின் தேவையாக கச் பகுதியின் வெளியில் பால் விற்பதற்கு பால் பண்ணையை அமைப்பதேயாகும். பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன், தேசிய பால்வள வளர்ச்சி குழுவுடன் கலந்துரையாடலை துவக்கினர். இந்த வளர்ச்சிக் குழு, பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் அமைப்புடன் இணைந்து மொத்த பால் குளிரூட்டும் மையம், பன்னியில் உள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டது. இதன் முடிவாக கடந்த பத்து ஆண்டுகளில் பால் விலை மூன்று மடங்காக அதிகாித்துள்ளது. இதனால் மேலும் பால் உற்பத்தி அதிகாித்தது. தற்போது பன்னியில் 2008 ஆம் ஆண்டு 60,000 லிட்டர் பால் உற்பத்தியிலிருந்து , தற்போது தினமும் 1,00,000 லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

பாரம்பாிய அரசு திட்டங்களை மீட்டெடுத்தல்.
இந்தியாவில், வன உருவாக்கத்திற்கான நில வடிவமைப்பு போட்டி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சமீப காலத்தில் இந்த போட்டி தீவிரமடைந்துள்ளது. பாரம்பாிய மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் வாழ்வதற்கு தேவையான, அழிவின் விளிம்பில் உள்ள வன நிலப்பரப்பு, பாதுகாப்பு என்ற அடிப்படையில் மாநில அரசால் ஒருமித்து பொறுப்பேற்கிறது. இது பொதுவான மற்றும் உள்ளூர் சமூகங்கள் இந்த ஆதாரங்கள் மேல் உள்ள உரிமைகளுக்கும் சேர்த்து முழுக்கு போட்டுவிட்டது. பாரம்பாிய மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள், பெரும்பாலும் பொதுநல நிறுவனங்கள் உதவியோடு சமூக ஆதாரங்களில் தங்களின் சார்புத்தன்மையை விவரித்து பொது மற்றும் சமூக ஆதாரங்கள் மேல் உள்ள உரிமைகளை மீண்டும் பெற முயற்சித்தது.இந்த முயற்சிகளின் விளைவாக பழங்குடியின மக்கள் மற்றும் இதர பாரம்பாிய வனவாழ்வு (வன உரிமையை அங்கீகாிப்பது) சட்டம் 2006 ஒன்று பிறப்பித்தது (எப்.ஆர்.எ) வன உரிமை சட்டம், முன்னோர்கள் நிலம், சமூக வன ஆதாரங்கள் மற்றும் பாரம்பாிய பிரதேசங்கள் மேல் உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் அங்கீகாிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக, குழுக்கள் மற்றும் தனிமனிதனின் ஆர்வத்தினால் வன உரிமை சட்டம் செயல்படுத்துவதில் வழித்தடைகள் சந்தித்தனர். இதனால் வனஉரிமை சட்டத்தின் நோக்கமான வாழ்வாதார பாதுகாப்பு, வன பாதுகாப்பை விரிவடைதல், உள்ளூர் சுய ஆட்சியை வலுபடுத்துதல் மற்றும் இதை செயல்படுத்தியது முதல் வெற்றியின் வாய்ப்பு குறைந்துள்ளது.

குஜராத் மற்றும் கச் பகுதியில் உள்ள சூழ்நிலையில் எந்த வித்தியாசமும் இல்லை. பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன், அரசுடன், அவர்களின் உரிமையை முறையாக கலந்தாலோசித்ததன் மூலம், உயரத்திற்கு முன்னேறியதை உறுதி செய்கிறது. மேலும் இந்த சங்கம் அதன் குறிகோளை இன்னும் அடையவில்லை. பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் நகோயா ப்ரொடோகால் 8ஜெ என்ற பிரிவின் கீழ் உள்ள பி.சி.பி.யில் உருவாக்கிய சமூக உரிமைகள் மற்றும் வழிகளை முதலில் ஆவணம் செய்வதில் துவக்கியது. 2009 ஆம் ஆண்டு வனத்துறை, பன்னியில் பரவலான பகுதியை வேலி போடுவதாக ஒரு செயல் திட்டத்தை கொண்டுவந்தது. இந்த செயல் திட்டம் சமூகத்தின் ஆலோசனையில்லாமல் எடுக்கப்பட்டது. பன்னிக்குள் இருக்கும் நஞ்சை நிலங்களை, புல்வெளி பாதுகாவலர்கள் பயன்படுத்துவதை தடுப்பதுமட்டுமில்லாமல், ஒரு வருட காலத்தில் புல்வெளி பாதுகாவலர் தேவையான பல்வேறு உயிரியல் அமைப்புகளுக்கு செல்வதை தடுத்து அவர்களை குருடர்களாக்கியது. பன்னி பெருக்க சங்கம் தங்களின் உரிமையை கோர வேண்டும் என முடிவு செய்தனர். ஏனென்றால், செயல் திட்டத்தை செயல்படுத்துவதில் உயிரியல் அமைப்பு அவர்களை நிலைக்கசெய்வதில் அச்சுறுத்தலாக இருக்கும் என உறுதி தொிகிறது. இது மேலும், அவர்களுடைய வாழ்வாதாரம், இரகங்கள், மற்றும் கலாச்சாரத்தில் தாக்கம் ஏற்படும்.

இனப் பெருக்க அலுவலர் சங்கம் வன உரிமை சட்டம், பன்னியில் புல்வேலி நிலத்தின் உரிமையை முறையாக செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தனர். பாரம்பாிய ஆட்சி அமைப்புகள் மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு இது, ஆனால் உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்தே இது சாத்தியம்.
பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன், பன்னியிலுள்ள 54 கிராமங்களில் முகாம்கள் நடத்தியது. இந்த முகாம் தற்போது ‘பன்னி கொ பன்னி ராஹனே தோ” என்றால் ‘பன்னி பொதுவாகவே இருக்கட்டும்” என பிரபலமடைந்துள்ளது. மேலும் புல்வெலியை பாதுகாவலரால் பாரம்பாியமாக பயன்படுத்தி, பாதுகாத்து மற்றும் மேம்படுத்திய வழியை மீண்டும் அமைக்கும் பணி செய்து வருகிறது.
பன்னியில் உள்ள கிராமங்களில், மொத்த பால் குளிரூட்டபட்ட மையங்கள் மூலம் பால் உற்பத்தி 1,00,000 லிட்டர் அதிகாித்துள்ளது, அந்த வகையில் கால்நடை மதிப்பீட்டு பொருளாதாரம் வருடத்திற்கு இந்திய ரூபாயில் 110 கோடியாக இருக்கிறது. பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன், கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் பல கூட்டங்கள் நடத்தியதற்கு பின்பு அவர்களை அங்கீகாிக்காமல் நிராகாித்ததையும், அவர்களுடைய உரிமைகளின் விழிப்புணர்வு குறித்து பரப்பவும், விரைவில் பன்னியில் வன உரிமை சட்டம் செயல்படுத்துவதை கூட்டாக கோர வேண்டும் என்று முடிவு செய்தனர். மல்தாரிஸ் சமூகத்தின் பொியவர்கள் மற்றும் பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் பிரதிநிதிகள் தொடர்ந்து பழங்குடியின் நல அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தை சந்தித்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர். பழங்குடியின நல அமைச்சகம், சங்க பிரதிநதிகளிடம், வன உரிமை சட்டம் மாநிலத்தில் செயல்படுத்த துவங்கியது. பிற்படுத்தப்பட்ட பகுதி அல்லாத இடத்தில்(கச் குறைந்த பழங்குடியின மக்கள் உள்ளதால்) வன உரிமை சட்டம் செயல்படுத்துவதற்கான மத்திய முகமையில் இறுதி செய்யப்படவில்லை,ஆகையால் கச் பகுதியில் இதை இன்னும் நடைமுறைபடுத்த வேண்டும்.2012 ஆம் ஆண்டு, பணித்திட்டத்தை செயல்படுத்த துவக்கியது வனத் துறை. மல்தாரிஸ் மக்கள் புஜ் பகுதியில் ஊர்வலம் ஏற்பாடு செய்து, கச் பகுதி கலெக்டர் மற்றும் மாநில அளவு கண்காணிப்புக் குழுவிற்கும், வன உரிமை சட்டத்தின் கீழ் தங்களின் உரிமையை நீண்ட காலமாக அங்கீகாிக்கப்படவில்லை என்பதால், அதனை எதிர்த்து அமைதி ஊர்வலம் நடத்தபோவதாக மனு அளித்தனர். 2012 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் நாள், பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன், ஊடகத்தை அழைத்து, தாங்கள் புல்வெளியை பாதுகாப்பதை செய்துகாட்டி, போராட்டத்திற்கான உதவியை ஊடகத்திலிருந்து பெற்றனர்.

மாநில அரசோடு பேச்சுவார்த்தை
பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் வேண்டுகோளின் படி, பன்னியில் உள்ள கிராம சபாக்கள் வன உரிமை குழுக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கி பன்னியின்மேல் உள்ள உரிமையை கோர துவங்கியது. இந்த முயற்சிகள் குஜராத் மாநில அரசு பார்வைக்கு சென்றதால், மாநிலத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்டோர் அல்லாத மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வன உரிமை சட்டத்தை செயல்படுத்துமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டது. மாவட்ட நிர்வாகம், ஒவ்வொரு கிராமத்திலும் முறையாக வன உரிமை குழுமங்களை உருவாக்குவதற்காக, கிராம சபாக்களுக்கு அழைப்பு விடுத்தது. பாரம்பாிய மேய்ச்சல் தொழில்நுட்பங்கள், உயிர்ச்சூழ்நிலைகள், கால்நடையை சார்ந்திருத்தல், தாவரம் மற்றும் விலங்குகள் உயிர் பல்வகைமை ஆகியவற்றை பங்கேற்புடன் கூடிய பயிற்சியின் மூலம் ஆதார வரைப்பட திட்டம் உருவாக்கப்பட்டது.இந்த சமூக கோரிக்கைகளை எஸ்.டி.எல்.சி என்ற அமைப்பினால் ஒப்புதல் பெற்று, டி.எல்.சி.என்ற அமைப்பு இந்த ஒப்புதலை ஏற்றுகொண்டது.உருவாக்கப்பட்ட 54 வன உரிமை குழுமங்களில், 48 குழுமங்கள் பன்னியில் உள்ள பொது உரிமைகள் பெறுவதற்கு வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இது, பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் அமைப்பிற்கு பொியளவில் சாதனை.பன்னியில் உள்ள பகுதிகளை பயன்படுத்துவதற்காக, புல்வெளி பாதுகாவலர்களின் தேவை பிரதிபலிக்கிறது.இம்மாதிரியான பொிய சமூகம் ஒன்று சேர்ந்து முழு காட்டின் உரிமையை பொதுவான கோரிக்கையாக சமர்பிப்பது இதுவே முதல்முறை.

பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கான ஏ.டி.ஆர்.ஈ.ஈ (ATREE) இ என்.சி.பி.எஸ் (NCPS)இ மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகம் சேர்ந்து பணிபுரிந்து, ஆர்.ஏ.எம்.பி.எல்.இ (பன்னி நிலஅமைப்பில் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு) என்ற நிறுவனத்தை, புல்வெளி நிலங்கள் ஆய்வு, அதனை பாதுகாத்து மற்றும் மேம்படுத்துவதற்கு ஆராய்ச்சியின் மூலம் இடுபொருள் வழங்குதல் ஆகிய இரு நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது.

பன்னி மல்தாரிஸ் முயற்சிகள், அவர்களின் கோரிக்கையை முறைப்படுத்துவதற்கு கதவுகள் திறக்கப்படுவது மட்டுமல்லாமல் இதர சமூகங்கள், குஜராத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அல்லாத பகுதிகளில் இருக்கும் பொது நிலத்தின் உரிமைகளை கோருவதற்கும் வழிவகுத்தது. பன்னியில் சமூக உரிமைகளை முறைப்படுத்தும் முயற்சிகள் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் புஜ் மாவட்ட ஆட்சியர் மற்றும் குஜராத் முதலமைச்சர் ஆகியோரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பாிசோதனைகள் மற்றும் அதிர்வுகளை கொண்ட பயணத்தில் , மல்தாரிஸ்ஸின் ஒருங்கிணைந்த சக்தியோடு இப்போதுவரை அனைவரையும் சந்தித்துவருகிறது. பொது உரிமைக்காக அனைவரையும் ஒன்று சேர்த்த இந்தியாவின் ஒரே புல்வெளி குழு பன்னி மல்தாரிஸ் மட்டுமே. பன்னி என்ற பொிய புல்வெளி பகுதியின் நில உரிமைக்காக சமூகம் மற்றும் அரசுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பொதுவான சொத்துகளுக்கு, முறையான நிர்வாகமில்லாததால், நீண்ட நாட்களுக்கு சேதமடைந்துள்ளதை உறுதியாக தொிகிறது. மல்தாரிஸ், பன்னி பசு உச்சரக் மல்தாரிஸ் சங்காத்தன் மூலம், பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு முறையை முன்வைத்தது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பிரதிபலிக்கும். உரிமைகளின் அங்கீகாரத்தை பெறுவது , இந்தியாவில் புல்வெளி பாதுகாவலர்களுக்கு மட்டுமல்லாமல் ஜனநாயகத்துக்கும் மிகப்பொிய வெற்றியாக கருதப்படுகிறது. பன்னியின் உரிமைகளை அங்கீகாரம் பெற்றது, இந்தியாவில் உள்ள மற்ற புல்வெளி சமூகங்களுக்கு முன்னுதாரணமாக வைத்து அவர்களின் பொது நிலங்கள் பயன்படுத்தும் கோரிக்கையை பதிவு செய்ய துவங்க வேண்டும்.

ரமேஷ் பட்டி மற்றும் ஷௌர்யமாய் தாஸ்


Ramesh Bhatti
Programme Driector, Sahjeevan
Bhuj, Kutch – 370001
www.sahjeevan.org
E-mail: Rkb335@gmail.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...