உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கேரளத்தில் உள்ள விவசாயிகள் பனைகளை தாக்கும் பெரும்பாலான பூச்சிகளை உயிர்ச்சூழலுக்கு உகந்த வழிமுறையில் திறன்பட கட்டுப்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேளையில், இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகள் விவசாயிகள் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தொடர் வருமானத்தையும் பெற முடிகிறது.
கல்பவிருச்ச மரமான தென்னை மரம் இந்த தேசத்தில் 12 மில்லியன் பண்ணை குடும்பங்களின் பண்ணை வாழ்வாதாரங்களை அளித்து வருகிறது. இது மிகவும் அரிதான மரங்களில் ஒன்றாக இருந்து மனித குலத்திற்கு பல்வகையான பயன்களை அளிக்கிறது. இது ஆரோக்கிய பானத்தையும், ஊட்டச்சத்து மிக்க உணவிற்கு ஆதாரமாகவும், மிகவும் விலை மதிப்புமிக்க எண்ணெய்யையும் அளிக்கிறது. உண்மையில், இந்த தாவரத்தின் ஒவ்வொரு பாகங்களும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு வகையான பொருட்களை அளிக்கிறது.
பல்வகையான பூச்சிகளுக்கு இல்லமாக விளங்கும் தென்னை அதன் மஞ்சாி வெளிப்படும் தருணங்களில் இந்த உயிரினங்கள் அதன் காய்களின் மகசூல் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், நெக்டார் நிலையிலும், மகரந்தங்கள் மூலமாவும் உணவளித்து, சூழல் நிலைகளுக்கும் பயனளிக்கக்கூடியதாக அமைகிறது. எந்த அளவிற்கு மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் எண்ணிக்கை அதிகளவு உள்ளதோ, அந்த அளவிற்கு தென்னையில் அதிக மகசூல் கிடைக்கும். உயரமான தென்னை ரகங்களில் தேனீக்கள் மற்றும் கொடுக்கு இல்லாத தேனீக்கள் உயரமான தென்னை மர ரகங்களை தாக்கும் பூச்சிகளை ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் குட்டையான ரகங்களை எறும்புகள் ஆதிக்கம் செலுத்தும். இந்த பூச்சிகளின் எண்ணிக்கையானது தென்னை உயிர்ச்சூழல் ஆரோக்கியத்தையும், மகரந்தச் சேர்க்கை ஊக்குவிப்பதையும், பனை மரக் குடும்பங்களில் உள்ள பூச்சிகளின் தாக்குதலையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த கூட்டு செயல்பாடுகளில் அறிவியல் பூர்வமற்ற வகையில் நடைபெறும் இரசாயன செயல்பாடுகளினால் ஏற்படும் எந்த ஒரு இடர்பாடும் கடுமையான உயிர்ச்சூழல் கேடுகளை விளைவிக்கும். இலைகளை, பூங்கொத்துகளை மற்றும் இளம் மொட்டுகளை, முதிர்ச்சியற்ற மற்றும் முதிர்ச்சியான பருப்புகள் மற்றும் உள் துளைகளை பல்வகையான பூச்சி வகைகள் தாக்கி பனை மரக் குடும்பங்களில் கடும் சேதத்தை விளைவிக்கிறது.
பூச்சி மேலாண்மைக்கான உயிர்ச்சூழல் பொறியியல் தொழில் நுட்பங்கள்:
தென்னையில் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதல்களை குறைப்பதற்கு உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறைகள் முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளன. கல்பாசங்கரா உடன் ஐ. சி. ஏ. ஆர் – சி.பி.சி.ஆர்.ஐ இணைந்து பயிர் வாழ்விடத்தை அடிப்படையாக கொண்ட பூச்சிகளை பலவீனப்படுத்தும் மாதிரிகள் கலப்பின தென்னை மற்றும் ஊடுபயிர்களாக ஜாதிக்காய், ரம்புதான், வாழை, பலா மற்றும் சாமந்தி, சீத்தாபழம் போன்றவற்றை இணைத்து ஒரு மாதிரி உருவாக்கப்பட்டது. உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்ட வயலுக்கும், ஓரினப்பயிராக பயிரிடப்பட்டிருந்து தென்னந்த ஒப்பிட்டு பார்க்கையில் உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறையில் பூச்சிகளின் தாக்குதல்கள் இரண்டில் இருந்து நான்கு மடங்கு குறைந்துள்ளது உணரப்பட்டது. பயிர்களில் பல்வகைத்தன்மையானது உயிரியல் பொறியியல் அணுகுமுறைகள் மேற்கொண்ட தோப்பில் பூச்சிகளை வெளியேற்றி விட்டதையும், பூச்சிகளை எதிர்க்கும் எதிரிப்பூச்சிகள் மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகாித்திருப்பதையும் காண முடிந்தது. மேலும் தென்னை மற்றும் பவள வைன் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவு தேனீக்களின் எண்ணிக்கை அதிகாித்திருந்தது. இவை அனைத்தும் தென்னையில் மகசூலை அதிகப்படுத்துவதற்கு உதவி, நட்ட 5 வருடம் கழித்து, ஒரு மரத்தில 161 காய்கள் ஒரு வருடத்திற்கு என்ற வகையில் காய்பை அதிகப்படுத்தியது. கூடுதலாக பூச்சிகளின் தொல்லையும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு நிலையான வருமானத்தை பெறவும், வள ஆதாரங்களை ஒன்றுக்கொன்று உதவும் வகையில் பயன்படுத்தியதன் வழியாக வேலைவாய்ப்புகளையும் அதிகப்படுத்தியது.
ரைனோசிரஸ் குளவிகளுக்கு எதிரான பசுமை போராளிகள்:
ரைனோசிரஸ் குளவி (ஓரைசிடஸ் ரைனோசிரஸ் லின்) என்பது தென்னங்கீற்றுகளை, பூங்கொத்துகளை மற்றும் காய்களை தாக்கும் ஒரு பூச்சியாகும். இது இளம் குருத்துகளின் கழுத்துப் பகுதிகளில் உட்புகுந்து 8-9 விழுக்காடு பயிர் இழப்பை ஏற்படுத்துகிறது. முதிர்ச்சியடைந்த வண்டுகள் தென்னையில் இருந்து கொண்டு இறந்து போன மற்றும் அழுகிப்போன இயற்கை குப்பைகள் மட்கும் பசுஞ்சாண குழிகளில் உயிரினங்களாக வெவ்வேறு நிலைகளில் முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழு போன்றவற்றில் வாழும்.
ஐ.சி.ஏ.ஆர் – சி.பி.சி.ஆர். ஐ ஒரு திறன்மிக்க பச்சை மஸ்கார்டின் காளானான மெட்டாரைசியம் அனிசோபிலியேவை வண்டுகளை கட்டுப்படுத்தும் வகையாக கண்டறிந்தது. இந்த எம். அனிசோபிலியா குட்டிகுலர் தொடர்பில் உள்நுழைந்து இரண்டு வாரங்களில் கிரப்ஸ்களை கொன்றுவிடுகிறது. ஒரு க்யூப்பிக் மீட்டருக்கு 5 க்கும் 1011 ஸ்போர்கள் என்ற அளவில் களத்தில் தௌிப்பதற்கான டோஸ் பாிந்துரைக்கப்படுகிறது. ஐ.சி.ஏ. ஆர் – சி.பி.சி.ஆர். ஐ அமைப்புகள் பொிய அளவில் எம். அனிசோபிலியா பெருக்குவதற்கான உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களான இளநீர், அரை வேக்காடு சமைக்கப்பட்ட அரிசி மற்றும் கசாவா சிப்ஸ் – களின் துணைகொண்டு பெருக்கப்படுகிறது
கேரள மாநிலத்தில் தென்னை விவசாயிகள் மத்தியில் நடத்தப்பட்ட அடிப்படை தகவல்கள் சேகாிப்பில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் ரைனோசிரஸ் வண்டை கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் இல்லாதது முதன்மையான பிரச்சனையாக வெளிவந்தது. விவசாயிகள் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு வயல் வெளிப் பள்ளிகள் மூலம் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளில் அறிவையும், திறன்களையும் பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. வயல்வெளிப் பள்ளியானது ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கி கொடுத்தும், குறைந்த கால அளவில் எப்படி இது போன்ற செயல்பாடுகளை பொிய அளவு இடங்களில் செயல்படுத்த முடியும் என்பதையும் கற்றுக்கொடுத்தது. இந்த திட்டமானது கேரளா மாநிலத்தின், ஆளப்புழா மாவட்டத்தில் (1500 ஹெக்டோில்) கண்டல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் தேவிகுளங்கரா பஞ்சாயத்துக்களிலும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் (520 ஹெக்டோில்) நடைமுறைப்படுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளில் உள்ள தென்னை விவசாயிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் துடிப்புடன் இந்த திட்டத்தில் பங்கு பெற்றனர். ஐ.சி.ஏ. ஆர் – சி.பி.சி.ஆர். ஐ. அமைப்புகளின் விஞ்ஞானிகள் இந்த பயிற்சிகளை வழிநடத்தினர்.
எடவா பஞ்சாயத்தில் உள்ள பெண்கள், எடவா என்ற பெயாில் பெண்கள் குழுவாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவர்கள் ஐ.சி.ஏ.ஆர். – சி.பி.சி.ஆர்.ஐ விஞ்ஞானிகளால் பொிய அளவில் எம். அனிசோபிலியை அரை வேக்காட்டு அரிசி கஞ்சியை பயன்படுத்தி உற்பத்தி செய்ய பயிற்றுவிக்கப்பட்டனர். பங்கேற்பாளர்களின் வீட்டுப்புறமே உற்பத்தி செய்யும் பகுதியாக பயன்பட்டது. பொிய அளவில் உற்பத்தி செய்வதற்கு குழு உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு சராசாியாக 1-2 மணி நேரம் செலவிட்டனர். கலப்பு ஏற்படாமல் இருக்க, உற்பத்தி செய்யும் இடத்தைச் சுற்றி கிருமிகள் இல்லாத வகையில் மெழுகு பொருத்தி பச்சை மஸ்கார்டலின் காளானை பொருத்திவிடுவர்.
வயல்வெளி பள்ளிகளில் கலந்து கொண்ட விவசாயிகளின் சராசாி அறிவு அளவீடு (51.31), வயல்வெளி பள்ளிகளில் கலந்து கொள்ளாத விவசாயிகளை (31.10) விட அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு, வயல்வெளி பள்ளி அறிவு மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கும், தொழிற்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு பொருத்தமான அணுகுமுறை என்பது நிரூபிக்கப்பட்டது. விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் துடிப்புமிக்க பங்கெடுப்பும், வழிகாட்டுதல்களும், இந்த முயற்சி தொடரவும், நிலைத்திருக்கச் செய்வதையும் உறுதிப்படுத்தின.
பெண்கள் குழுக்கள் இந்த தொழில்நுட்பங்களை மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவலாக்கம் செய்வதற்கு முதன்மை பயிற்சியாளர்களாக செயல்பட தொடங்கினர். குறிப்பிட்ட நேரத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு பொருட்களை அளிப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். ஒட்டுமொத்த வேளாண் சமூகங்களும் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்து புரிதல் கொண்டுள்ளனர். கால்நடைகளை பராமாிக்கும் விவசாயிகளும் இந்த பெண்கள் குழுக்களால் இலக்காக வைக்கப்பட்டு உள்ளூரில் எம். அனிசோபிலியே வண்டுகள் இனப்பெருக்கத்திற்கான முதன்மை காரணமாக உள்ள பசுஞ்சானி குழிகளுக்கு கொண்டு சேர்த்து பெருக்குவதற்கு பயிற்றுவிக்கப்பட்டனர். வருமானத்தை பெருக்குவதற்கு பொிய அளவில் உற்பத்தி செய்வதுதான் சிறந்த அணுகுமுறையாக அங்கீகாிக்கப்பட்டது. அநேக குடும்பஸ்ரீ அமைப்புகள் ( எடவா பெண்கள் அமைப்புகள்) இந்த தொழிலை செய்து அவர்களின் தென்னை விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வருமானத்தை நிலைத்திருக்க செய்வதற்கு சேவை புரிந்து வருகின்றன.
விவசாயி பங்கேற்பு சமூக அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டது, இந்த திட்டத்தின் வெற்றிக்கும், ஒரு வருட காலத்தில் கிராமம் முழுக்க பரவலாக்கப்பட்டு அதன்மூலம் பூச்சி தொல்லைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டது. ரைனோசிரஸ் வண்டின் தாக்குதல் வயல்வெளி பள்ளிகள் நடத்தப்பட்ட பகுதிகளில் 76-85 விழுக்காடு வரை குறைக்கப்பட்டது பகுதி முழுக்க சமூகங்கள் திறன்பட கடைபிடித்ததன் அறிகுறியாக உணரப்பட்டது. பூச்சித் தொல்லைகள் குறைவானதோடு கூடுதலாக தென்னையில் ஒட்டு மொத்த அளவில் மகசூல் மேம்பாடு, உயிர்ச்சூழலுக்கு உகந்த வழிமுறையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டதும் இந்த அணுகுமுறையில் முக்கியமான வெற்றிக்கான ஆதாரமாக விளங்கியது.
எம். அனிசோபிலியே தொழிற்நுட்பம் குறித்து நாட்டின் அனைத்து தென்னை பயிரிடப்படும் இடங்களில் பகுதி வாரியாக நடத்தப்பட்ட செயல்முறை விளக்கங்கள், ரைனோசிரஸ் வண்டின் பாதிப்பை கட்டுப்படுத்தியது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும். பாிசோதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும், இந்த தொழிற்நுட்பத்தை பின்பற்றியதால், இரண்டு வருட காலத்தில் பூச்சிகளின் பாதிப்பானது மிகப்பொிய அளவில் குறைக்கப்பட்டது.
பூச்சிகளை அழித்தொழிக்கும் ஒட்டுண்ணிகள்:
நாட்டில் தென்னை சாகுபடி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும், ஓபிசினா அரினோசெல்லா என்பது மிகவும் ஒரு பிரதான பூச்சியாக, தென்னை இலைகளை தின்னும் ஒரு வகையான வெட்டுக்கிளியாகும். பாதிக்கப்பட்ட பகுதிகள் காய்ந்தும், அடி மட்டைகளின் மேற்புறத்தில் சாம்பல் நிற வட்டங்கள் அமைந்து காணப்படும். அதிகளவு பூச்சித் தாக்குதல், மட்டையின் நடுப்பகுதியில் இருந்து உள் வரை முழுவதுமாக காய்ந்து, எரிந்து போன ஒரு தோற்றத்தை அளிக்கும். இதன் பாதிப்புகள் ஒளிச்சோ;க்கை நடைபெறும் பகுதிகளை அதிக அளவில் குறைத்தும், பாலை உற்பத்தியாகும் விகிதத்தை குறைத்தும், வளர்ச்சி குன்றியும், அதிகளவு முன்கூட்டியே முதிர்ச்சி பெற்று காய்கள் விழுவதும் நிகழும். வெட்டுக்கிளிகள் அதிகளவு உண்ணுவதால் காய்களின் மகசூல் 45.4 விழுக்காடு குறைவான மகசூலை கொடுத்து, கூடுதலாக மட்டைகள் கூரை மேய்வதற்கும் மற்ற உபயோகங்களுக்கும் பொருத்தமில்லாததாகிவிடும்.
ஓ. ஆரினோசெல்லா உயிரி மேலாண்மை உயிரியல் கட்டுப்பாடு முறைகளில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. பகுதிவாரியாக நடத்தப்பட்ட கள ஆய்வு முடிவுகள், உயிரியல் ரீதியாக தென்னையில் உள்ள கருப்பு தலை கொண்ட வெட்டுக்கிளியை கட்டுப்படுத்துவது, ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிடத்தக்க ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் ஐ.சி.ஏ. ஆர் – சி.பி.சி.ஆர். ஐ –ன் 1500 ஹெக்டர் கடலோர கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் பல பகுதிகளில் வெற்றி கண்டுள்ளது.
கர்நாடகாவின் அர்சிகிரேவின் ஜயூர் கிராமத்தில் 15 ஏக்கர் தென்னை தோட்டம் 2013 ஆம் ஆண்டு இந்த பூச்சியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் பங்கேற்புடன் இங்கு ஒரு செயல்முறை விளக்கம் மிகவும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளான திரு. பி. ரூத்ரப்பாவிற்கு சொந்தமான பண்ணையில் நடத்தப்பட்டது. குறித்த நேரத்தில் வெளியிடப்பட்ட ஒட்டுண்ணிகளினால்,தென்னை தோட்டம் மறுபடியும் மீட்டெடுக்கப்பட்டு 12 மாதத்தில் புதிய பசுமையோடு காட்சியளித்தது. தொழிற்நுட்ப வாய்ப்புகளாக அதிகளவு பாதிக்கப்பட்ட வெளிப்புற மட்டைகளை எடுத்துவிட்டு எரித்ததும், வெவ்வெறு நிலைகளில் வெளியிடப்பட்ட ஒட்டுண்ணிகளான கோனியேசஸ் நெப்பன்டிடிஸ் மற்றும் பிரகான் பிரேவிகோர்னிஸ் மற்றும் தென்னை சாகுபடியில் மண் நல மேம்பாட்டு அணுகுமுறைகள் வெற்றிகரமாக பின்பற்றப்பட்டு இணைக்கப்பட்டது. தொழிற்நுட்ப செயல்பாடுகள் பின்பற்றப்பட்ட பிறகு மிகவும் குறுகிய காலத்தில் புதிய மட்டைகள் உருவாகியது, அருகாமையில் உள்ள விவசாயிகளை இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறைக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. பங்கெடுத்த விவசாயிகள் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒட்டுண்ணிகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு, அந்த பகுதி முழுக்க பூச்சிகள் இல்லாத பகுதிகளாக உருவாக்கப்பட்டது.
ருகோஸ் ஸ்மைரல்லிங் – வெள்ளை ஈ – யை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் பழமையான முறை
உடலில் ஊடுருவும் பூச்சி வகையான ருகோஸ் ஸமைரல்லிங் வெள்ளை ஈ (ஆர். எஸ். டபுள்யு) அலுரொடிகஸ் ரூஜீயோபர்குலேடஸ் நமது நாட்டில் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் தென் இந்தியாவில் தென்னை பயிரிடும் பகுதிகள் அனைத்திலும் ஊடுருவியது. இந்த பூச்சியானது இலையின் கீழ்ப் பகுதியில் இருந்து கொண்டு பொிய அளவில் தேன் துளிகளை சுரந்து அதன் மூலம் சூட்டி மோல்ட் ஐ கவர்ந்திழுக்கும். இந்த நிலையில் தென்னை முழுக்க கருப்படித்துவிடும்.
பூச்சிகளின் எண்ணிக்கையானது எபிலினிட் ஒட்டுண்ணியான என்கார்சியா காடிலிபேயினால் நான்கிலிருந்து ஐந்து மாதங்களில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதனால் கிட்டத்தட்ட 85 விழுக்காடு பூச்சிகளின் எண்ணிக்கை திறன்பட ஒட்டுண்ணி கட்டப்பட்டது. ஒட்டுண்ணி கட்டப்பட்ட இளம் புழுக்கள் பொதுவாக கருப்பாகவும், நன்கு ஆரோக்கியமாக உள்ள இளம் புழுக்களிலிருந்து வேறுபடுத்த அடையாளம் கண்டு கொள்ளும் வகையிலும் இருக்கும்.
ஐ.சி.ஏ.ஆர் – சி.பி.சி.ஆர். ஐ ஒரு பல்கி பெருகும் அணுகுமுறையை உருவாக்கி அதன் மூலம் இளம் புழுக்களில் ஒட்டுண்ணி கட்டப்பட்டது. தென்னை மட்டையை 10 செ.மீ க்கு அறுத்து அதில் ஒட்டுக்கட்டப்பட்ட ஆர். எஸ். டபுள்யு இளம் புழுக்களை வைத்து தயார் செய்து வெள்ளை ஈக்கள் அதிகம் பரவியுள்ள புதிய பகுதிகளில் வினியோகிக்கப்பட்டது. இப்படியாக தென்னை மட்டையில் வெட்டி அதில் ஒட்டுண்ணி கட்டிய பகுதிகளில் வேகமாக ஒட்டுண்ணிகள் பரவி அவை பூச்சிகள் புதிதாக வரும் பகுதிகளாக உருவெடுத்தன. ஜனவரி 2018 ல் ஆந்திர பிரதேசம் கோதாவரி பகுதிகளில் 500 தென்னை இலை மட்டைகள் (10 செ.மீ) க்கும் ஆர். எஸ். டபுள்யு இளம் புழுக்கள் ஒட்டுண்ணி கட்டி வெளியிடப்பட்டது.
ஐ. சி. ஏ. ஆர் – சி.பி.சி. ஆர். ஐ அமைப்புகள் லியோசிர்னி வண்டு வகையான லியோசிர்னி நில்கிரியானஸ் என்னும் தூய்மைப்படுத்தும் பணி தொடர்புடையவை தென்னையில் தேன் துளி. முதிர்ந்த வண்டுகள் மற்றும் முதிர்ச்சியற்ற நிலைகள் பொதுவாக தென்னை இலைகளின் கீழ் பகுதியில் பகல் நேரத்தில் காணப்படும். ஆனால் அவை சூட்டி மோல்ட் காலை நேரங்களில் ஈரமான நிலையில் இருக்கும். சராசாியாக ஒரு முதிர்ச்சியடைந்த வண்டு 1-2 மி.மி 2 சூட்டி மோல்ட் 1 நிமிடத்தில் காலி செய்துவிடும். தென்னை கீற்றுகளில் சூட்டி மோல்டு நுகரப்படுவதால் அது ஒளிச் சேர்க்கைக்கு தடை ஏற்படுத்தி அதன் மூலம் தென்னையின் ஆரோக்கியத்தை புத்தாக்கம் செய்வது, இது வரை எந்த ஒரு பொருளாதார பயிரிலும் பதிவு செய்யப்படாத நன்மை பயக்கக்கூடிய தூய்மைப்படுத்தும் செயல்பாடாகும். ஐ. சி. ஏ. ஆர் – சி.பி.சி. ஆர். ஐ – யினால் வளர்த்தெடுக்கப்பட்ட பூச்சிக்கொல்லி விடுமுறை அணுகுமுறையானது ஆர். எஸ். டபுள்யு வின் பூச்சி தாக்கும் திறனை குறைத்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அமலாபுரம், காடியம் (கிழக்கு கோதாவரி, ஆந்திரப் பிரதேசம்) பொள்ளாச்சி, திருப்பூர் (தமிழ்நாடு) கொல்லம், கண்ணூர், பாலக்காடு (கேரளா) பகுதிகளில் ஐ.சி.ஏ.ஆர் – சி.பி.சி.ஆர். ஐ யினால் நடத்தப்பட்டது. இது பூச்சிக்கொல்லிகளுக்கு விடுமுறை அளிக்கும் அணுகுமுறையாக ஒரு ஒட்டுமொத்த பாதிப்பை அடைவதை நோக்கி எடுத்துச் சென்றது. விவசாயிகளுக்கு இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு விடுமுறை அளிக்கும் அணுகுமுறையானது ஓட்டுண்ணிகள் மற்றும் தூய்மைபணியை செய்யும் வண்டுகளை பாதுகாப்பதாலும், இந்த பகுதியின் உயிர்ச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் உத்திரவாதத்திற்கு பொிதும் உறுதுணையாக இருப்பதால் மிகுந்த நம்பிக்கையை அளித்தது.
உயிர்ச்சூழல் பொறியியல், பசுமை போராளிகள், ஒவ்வொரு நிலைக்கு பொருத்தமான ஒட்டுண்ணிகளை அறிமுகப்படுத்தியது, உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் போன்றவை தென்னையை தாக்கும் பூச்சிகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறையில் கட்டுப்படுத்த வல்லவை. அவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேளையில், இந்த உயிர்ச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகள் விவசாயிகளுக்கு நிலைத்த வாழ்வாதாரத்தையும், நிலையான வருமானத்தையும் அளித்து உதவுகிறது.
ஏ. ஜோசப் ராஜ் குமார், சந்திரிகா மோகன் மற்றும் வி. கிருஷ்ணகுமார்
A Josephrajkumar ICAR-Central Plantation Crops Research Institute, Regional Station, Kayamkulam – 690 533, Alappuzha district, Kerala, India. E-mail: joecpcri@gmail.com
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2018, வால்யூம் 20, இதழ் 2



