பல்வேறு காரணங்களால் உள்ளூர் கால்நடை இனங்கள் பெருமளவில் அழிந்து வருகிறது. எனினும், உள்ளூர் சமூகங்களில் கால்நடைகளை சார்ந்து இருக்கும் பல சாம்பியன்கள் உள்ளூர் இனங்களை பாதுகாத்து வாழ்ந்து வருகின்றனர். அரசும், கொள்கை அமைப்பாளர்களும் இம்மாதிரியான முயற்சிகளை அங்கீகாித்து, நிலையான கால்நடை வளர்ச்சியை பெறுவதற்கான பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கு இதுவே சாியான தருணம்.
அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் கால்நடை இனங்களை மேய்ச்சல் சமூகத்தினர் பராமாித்துவரும் இல்லமாக இந்தியா இருக்கிறது – அவை பக்கர்வால், காஷ்மீர், உத்திரகாந்தில் உள்ள வான் குஜ்ஜார், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கட்டி, ராஜஸ்தானில் உள்ள ரைக்கா, குஜ்ஜார், சிந்தி, முஸ்லிம் மற்றும் ரஜபுத், குஜராத்தில் உள்ள மல்தாரி. மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள கௌலி மற்றும் தன்கர். தமிழ்நாட்டில் உள்ள தோடர், குரும்பர், கோணர் மற்றும் பர்கர் லிங்கயாத் ஆகியவை அவர்களில் சில. 151 பதிவு செய்யப்பட்ட இனங்கள் நமது நாட்டில் இருக்கிறது. இன்னும் பல கால்நடை இனங்களை விவரிக்கும் தேவை இருக்கிறது.
இந்தியாவின் பொது நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் குட்டைகள் மற்றும் காடுகள், அழிந்து வருவதால், உள்ளூர் கால்நடை இனங்கள் ஆபத்தான விகிதத்தில் அழிந்து வருகிறது. பொதுவாக, கால்நடைகளும், குறிப்பாக உள்ளூர் இனங்களும் அழிந்து வருவதற்கு பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. தொழில்நுட்ப புரட்சி வந்தபிறகு கால்நடை உழவு ஆற்றலுக்கு பதிலாக டிராக்டர், மின் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கால்நடைகள் தேவைக்கதிகமாக வைத்திருக்கும் பொருளாகக் கருதப்பட்டது. மற்றொருபுறத்தில், விவசாயம் குறைந்த இலாபம் ஈட்டும் வாழ்வாதாரமாக இருப்பதால், விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை விடுத்து, கிராம இளைஞர்கள் இதர வாழ்வாதார தேர்வுகளை தேடி சென்றனர். இந்த கிராம நெருக்கடிக்கு அரசும் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக கிராம வேலை வாய்ப்பு திட்டங்கள் மூலம், கிராமங்களில் நிலவியிருக்கும் கூலியால் பற்றாகுறையோடு சேர்ந்து அதனால் சிறு விவசாயிகள் மற்றும் கால்நடை பாரமாிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலைகளையும் தாண்டி, சில உள்ளூர் சமூகங்கள் மற்றும் அடிதட்டு நிறுவனங்களால் பல நல்ல முயற்சிகள் செய்து நிலையான கால்நடை வளர்த்தெடுக்கப்பட்டு உள்ளூர் இனங்கள் பாதுகாக்கப்படுகிறது. சேவா என்ற ஒரு அடிதட்டு நிறுவனம் பாரம்பாிய கால்நடை இனங்களை பாதுகாப்பதில் சிறப்பாக ஈடுபடுகின்றனர். உள்ளூர் இனங்களை பாதுகாக்கும் தனிநபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் முயற்சிகளை ஆவணப்படுத்தி மேலும் இனப் பாதுகாவலர் விருதுகளை வழங்கி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்தது. உள்ளூர் இனப்பாதுகாவலர் விருது வழங்கி கவுரவிக்கும் முயற்சி 2009 ஆம் ஆண்டு தேசிய உயிர் பல்வகைமை அதிகார அமைப்பின் உதவியுடனும், தேசிய விலங்குகள் மரபின வள ஆதாரங்களுக்கான பணியகம் மற்றும் ஹனீ பீ (தேனீக்கள்) கூட்டமைப்பு போன்ற அமைப்புகளோடு இணைந்து கடந்த 7 வருடங்களில் 150க்கும் மேல் வெற்றிக்கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு இனப்பாதுகாவலர் விருது பெற்ற திரு.ராமசாமி உள்ளூர் கால்நடை இனமான உம்பலாச்சாரியை பாதுகாத்த விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் கால்நடைகள் பல பயன்கள்
திரு.ஜி. ராமசாமி, வயது 74, பாரம்பாிய கால்நடை வளர்க்கும் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுமையாக கால்நடை வளர்ப்பை நம்பியே இருக்கிறது. இவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே, கால்நடை வளர்ப்பில் தந்தைக்கு உதவி செய்வதில் ஈடுப்பட்டுள்ர்.
கடந்த 75 வருடங்களாக ராமசாமி குடும்பம் உம்பலாச்சாரி இனத்தை பாதுகாப்பதில் ஈடுபட்டு வருகிறது. இவரது தாத்தா திரு. சுப்பையா பிள்ளை ஆட்டுகாிமாடு என்ற உம்பலாச்சாரி இனத்தின் உபவகை ரூ. 80க்கு மேய்ச்சல் பெண்ணிடம் கொணர்ந்தனர். உம்பலாச்சாரி இனம் நெற்றியில் வெள்ளை நிற கோடுகள் இருக்கும், உடம்பில் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும், பாதம் மற்றும் வாலில் கூட வெள்ளை அடையாளம் இருக்கும்
வெளித்தோற்றம் பண்புகள் அடிப்படையில் இனத்திற்குள்ளேயே 4 வித்தியாசமான வகைகள் இருக்கின்றன. அவை ஆட்டுகறி, சூரியகுலத்து மாடு, கணபதியான் மாடு, வண்ணமாடு எருதுகளின் தூயத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் இந்த உபஇனங்களின் தூய்மையையும் பராமாிக்கப்படுகிறது.
உம்பலாச்சாரி இனம் 9-12 கன்றுகுட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மையுடையது. கன்று ஈன்று 4 மாதத்திற்கு பிறகு பசுவை இனப்பெருக்கம் செய்ய அனுமதிப்பர். பால் மஞ்சளாக மாறும்போது பால் கறப்பதை நிறுத்துவர். அதிகபட்ச பாலை உறிஞ்சுவதற்கு அனுமதிப்பர்.
ஆண் கன்றுகுட்டி மூன்று வருடங்களில் (4 பற்கள் உருவாகியிருக்கும்) எருதாக வளர்ந்துவிடும் மேலும் அவற்றை 10-12 ஆண்டுகளுக்கு இனப்பெருக்கம் செய்வதற்கு மேம்படுத்துவர். முன்பு, நன்செய் நிலங்களில் உழவு செய்வதற்கு உழவு மாடுகளாக பயிற்சி அளிக்கும்போது எருதுகளுக்கு அதிக மவுசு இருந்தது.
தற்போது, இவரது குடும்பத்தில் 51 கால்நடைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது (34 பசுக்கள், 14 கன்றுகள், 3 எருதுகள்). கால்நடை பராமாிப்பதில் குடும்பத்தின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஒரு நாளிற்கு உற்பத்தியாகும் சுமார் 1.5-4 லிட்டர் பால் விற்காமல் குடும்பத் தேவைக்கு பயன்படுகிறது. இவர்கள் முக்கியமாக கன்றுகுட்டிகளை விற்பதன் மூலமே வருமானம் பெறுகின்றனர். ஒரு வருடத்திற்கு 5-6 ஜோடி கன்றுகுட்டிகளை, ஒரு கன்று குட்டி ரூ.12000 – 15000 வரை விற்கின்றனர். கால்நடைகளின் உரத்தை தங்களின் விவசாய நிலத்திற்கே பயன்படுத்துகின்றனர். ஒரு ஏக்கருக்கு 30 மாட்டு வண்டி உரம் இடப்படுகிறது. இது சாதாரண முறையில் பயன்படுத்துவதைவிட மூன்று மடங்கு அதிகம். இதனால் இரசாயன உரங்கள் பாதியளவு குறைக்கப்பட்டது. இயற்கை உரம் பயன்படுத்தியதால் மகசூல் அதிகாித்தது. ஒரு ஏக்கருக்கு சராசாியாக 45 மூட்டைகள் மகசூல் பெற்றார். மற்றவர்கள் ஏக்கருக்கு 30 மூட்டைகளே பெற்றனர். இந்த பயன்களையும் தாண்டி, கால்நடைகள் சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தன் மகளின் திருமணத்திற்கு பிறகு, அவளின் வீட்டிற்கு கறவை மாடுகளை அனுப்புவது, இவரது குடும்பத்தின் வழக்கம், ஏனென்றால் தன் மகளின் குழந்தைகளுக்கான பால் தேவையை பூர்த்தி செய்யும் காரணத்தால் அளிக்கப்படுகிறது.
மேலும் சில வெற்றியாளர்கள்
1. பௌாஹி இனம் கால்நடை வளர்ப்பவர்கள், குறிப்பட்ட குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர்கள். நிலமற்றவர்களாக இருக்கும் இவர்கள் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியிருக்கின்றனர். பௌாஹி, இடமாற்றும் இனத்தை சேர்ந்த கால்நடை. இது இமயமலை அடிவாரத்தில் முழுக்க முழுக்க மேய்ச்சல் மூலமாகவே பராமாிக்கப்படுகிறது. குறைந்த இடுபொருள் மற்றும் மித வெளியிடு மேம்படுத்தும் முறையின் மூலம் பராமாிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு குடும்பத்தில் உள்ள கால்நடை மந்தையில் 4-5 கறவை மாடுகள் வைத்திருப்பர். இந்த கால்நடைகளை வளர்ப்பதற்கு, குடும்பத்தில் ஒருவர் முழுநேர கூலியாளாய் செயல்படுவர். சராசாி தினம் பால் உற்பத்தி 4-5 லிட்டர். கலப்பின கால்நடையின் பால் சுமார் 4 சதவிகிதம் கொழுப்புச்சத்து இருக்கிறது. இதை ஒப்பிடுகையில் இந்த இனத்தில் 5.5 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கிறது. ஒரு லிட்டர் பால் ரூ.30-க்கு விற்கப்பட்டது. மலையடிவாரத்தில் உழவுக்கும், இதர விவசாய தொழில்நுட்பங்கள் செய்வதற்கும், பிலாஹி இனம் எருதுகள் மற்றும் உழவு மாடுகள் வாடகைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் சந்தர் நகர் பகுதியில் நடத்தப்படும் கால்நடை சந்தையில் ஒரு வருடம் ஆன ஒரு ஜோடி பிலாஹி இன காளை மாடுகள் ரூ.25000-30000 வரை பெறுகின்றனர். வெட்டவெளி வயலில் 2-3 மாதங்களுக்கு பராமாிக்கப்பட்ட கால்நடை எண்ணிக்கையை நம்பியே அவர்களின் வருமானம் இருக்கிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதால் இதன் பராமாிப்பு செலவு குறைந்தது. கூடுதலாக எந்த தீவனமும் அளிப்பதில்லை, கால்நடை மருந்துகளுக்கு எந்த செலவும் ஏற்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ஒரு கால்நடைக்கு அதிகபட்சமாக ரூ.10 கூட செலவு செய்வதில்லை. ஒவ்வொரு வருடமும் இடம்பெயரும்போது எப்பொழுதும், தொியாத காரணத்தால் இறக்கும் பசுக்களால் 1-2 விலங்குகளை இழக்கின்றனர்.
2. கேரளாவில் உள்ள தலசோி கிராமத்தில் திருமதி ரோஜா என்ற விவசாய கூலி தொழிலாளி 50 மலபாரி ஆடுகள் பராமாித்து வருகிறார். ஆட்டின் பால், எரு, ஆட்டுக்குட்டி ஆகியவற்றை விற்பதன் மூலம் மாதம் ரூ.15000 வருமானம் பெறுகிறார்.
3. தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலவந்தான்குளம் கிராமத்தில் 170 செம்மாி ஆடுகளை, (சிவப்பு நிறம்) செவ்வாடுகளை பராமாித்து வருகிறது. திரு.வி.ஜான், கிடா ஆடுகள் மத சம்பரதாயங்களுக்கு பயன்படுவதால், செவ்வாடு விற்பதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் பெறுகின்றனர்.
4.தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம் மித வறண்ட கரும் பருத்திமண் பகுதியில் வேகமாக வளரும் 60 வேம்பூர் செம்மாி ஆடு இனத்தை திரு.பால்ராஜ் பராமாித்து வருகிறார்.
5. தமிழ்நாட்டில் நீலகிரியில் உள்ள தோடர் பழங்குடியினாின் வாழ்வாதார உத்திரவாதம் அளிக்கிறது, 1500 மீட்டர் உயரத்தில் வாழும் தோடர் எருமைகள், நீலகிரியில் கட்டிமண் என்ற இடத்தில் பழங்குடியின விவசாயியான திரு. ரஞ்சித் இந்த எருமைகளை பராமாித்து, பாலை விற்பதன் மூலம் வருமானம் பெறுகிறார். இந்த வெற்றிக்கதைகள் நல்லெண்ண மாற்றம் உருவாக்கிய கதைகள். அதனால் நாட்டின் மற்ற பகுதியில் பிரதிபலிக்கும் வழிகாட்டியாக பயன்படுகிறது. உள்ளூர் இனங்கள் பாதுகாப்பதற்கு ஈடுபட்டுவரும் மற்ற விவசாயிகளுக்கு இந்த நல்ல அனுபவங்களை பகிர வேண்டும். இது எனினும் ஒரு துவக்கமே. மேலும் அரசு விஞ்ஞானிகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குபவர்கள் வழிநடத்துதலின் வழியாக, திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வரையறுத்து உள்ளூர் சமூகங்கள்/ கால்நடை பராமாிப்பவர்கள் ஈடுபடுத்தி, அவர்களின் தொழில்நுட்பங்களை உள்ளூர் கால்நடை பல்வகைமைக்கு காப்பாளர்களாக அங்கீகாிக்க வேண்டும்.
பெட்டி செய்தி
இனபெருக்கத்தில் நிலைத்தன்மையை உருவாக்கும் காரணிகள்
1. தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் மற்றும் மேம்பாடுகள் கால்நடைகளின் மகசூலை அதிகாிக்கிறது.
2. கால்நடை பொருட்கள் (பால், எரு, இறைச்சி) மற்றும் கன்றுகுட்டிகளை விற்பதன் மூலம் வருமானம் அதிகாிக்கும்
3. விரிவான உற்பத்தி முறையோடு இடுபொருள் செலவு இல்லாமல் கால்நடைகளை குறைந்த செலவில் பராமாித்தல்
4. கலப்பு சாகுபடி முறையில் கால்நடையை ஒருங்கிணைப்பதால் வெளியிடு பொருட்களின் செலவு குறைந்து, விவசாயிகளுக்கு வருமானம் உத்திரவாதம் அதிகாிக்கும்.
பி.விவேகானந்தன்
References 1. E-mail note about Belahi cattle keepers by Dr Vikas Vohra, Senior Scientist (Animal Genetics & Breeding) ICAR-National Bureau of Animal Genetic Resources, Karnal - 132001 (Haryana) – India 2. Breed savior awards (2009-2016): Livestock keepers profile - 7 books published by SEVA, Madurai, Tamil Nadu, India (Also refer www.sevango.in) P Vivekanandan SEVA 45, T.P.M.Nagar, Virattipathu, Madurai - 625 010 Tamil Nadu, India. E-mail: vivekseva@gmail.com
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2017, வால்யூம் 19, இதழ் 3



