மண் வளத்தை அதிகாிக்க மீன் அமினோ, ஒரு சிறந்த தீர்வாக தமிழ் நாட்டில் உள்ள விவசாய குழுக்கள் கருதுகின்றனர். தழைச்சத்து அதிகமாக உள்ள மீன் அமினோ, தழைச்சத்தை அளிக்கும் உரத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல், மகசூலை அதிகாிக்கும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகளை உருவாக்கும் வீணாக்கப்பட்ட பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் அமினோ, ஒரு பகுதியிலுள்ள மாசுவை குறைக்கவும் பயன்படுகிறது.
இரசாயன இடுபொருட்களான உரம், பூச்சிகொல்லிகள், பண்ணையின் மகசூல் விரிவடைந்து ஒட்டுமொத்த உற்பத்தியும் அதிகாிக்கிறது. மேலும் உணவு உத்திரவாதம் அடைவதற்கும் உதவுகிறது. நீண்ட காலமாக இரசாயன இடுபொருட்களை பயன்படுத்தியதால் இயற்கை அமைப்புகள் தொடர்ந்து கடத்தப்பட்டது. மண்ணில் வாழும் சிறிய மற்றும் பொிய தாவரங்கள் மற்றும் விலங்குகளான நீலப்பச்சைபாசி மற்றும் அசோலா போன்ற பல்வேறு சிற்றினங்கள், ஒரு காலத்தில் தேங்கிக்கிடந்தன, மேலும் இது சாகுபடி முறைகளின் ஒரு அங்கமாக இருந்தது. ஆனால் தற்போது இவை, சால்வினியா என்ற கொடிய களைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு நீர்நிலைகள் யாவும் பெரும்பாலும் உயிரற்றதாக மாற்றிவிடுகிறது.
இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அதிகளவில் பயன்படுத்துவதால் பூச்சிகளை மட்டும் கொல்வதில்லை, நன்மை செய்யும் பூச்சிகளையும் கொல்லும், இதனால் பூச்சிகொல்லிகளை எதிர்க்கும் இரசாயனம், மீண்டும் உயிர்ப்பிக்கிறது. இந்த இரசாயனம் கால்நடை மற்றும் மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழும் காலம் குறைந்து வருகிறது. மேலும் இது பல புதிய தலைமுறை நோய்களான தொழுநோய் போன்றவைகள் தாக்குகிறது.
விலங்குகள் போல தாவரங்களுக்கும் அமினோ அமிலம் தேவை. இவை தானாக உற்பத்தி செய்யவோ அல்லது தேவையான அளவு உற்பத்தி செய்யாமலோ இருக்கலாம். தாவர வளர்ச்சி, பூக்கள் மற்றும் மகசூல் ஆகியவற்றிற்கு முக்கியமாக தேவைப்படும் அமைன்கள், மற்றும் காிமக் கூட்டுபொருட்களான இன்டோல் மற்றும் பைரோல் கூட்டுப்பொருள் போன்றவையாகும். குறைந்த அளவே தேவைப்படும் இந்த கூட்டுப்பொருட்கள், பெரும்பாலும், முக்கிய பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் கட்டுப்படுத்தும் காரணியாக இருக்கிறது. நொதியின் செயல்பாட்டினால் இந்த கூட்டுப்பொருள் உற்பத்தியாகும். மீன் மற்றும் மாமிச கழிவுகள் நொதித்தபின், இவற்றை இலைவழி ஊட்டமாக செயல்படலாம்.
பின் பருவத்தின்போது, அதிக அளவிலான மீன் கழிவுகள் மற்றும் உண்ணத்தகாத மீன் சார்ந்த கழிவுகள் தேங்கிவிடுகிறது. மீன் பதப்படுத்தும் மையமும் அதிக கழிவுகளை உருவாக்குகிறது. முறையான அழிக்கும் முறைகளை பின்பற்றாமல், அது சுற்றுச்சூழலுக்கு மாசு மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்துகிறது. மாசு பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக, இந்த கழிவுகளை சாியான தருணத்தில் முறையாக செயல்முறைப்படுத்தினால், இது ஒரு அதிசயமுள்ள வளர்ச்சியுக்கியாக பயன்படுகிறது. செயற்கை அமினோ தாவர ஊக்கியை காட்டிலும், இந்த வளர்ச்சி ஊக்கி சிறப்பாக இருக்கும். இது சந்தைகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
வி.கே.நார்டெப், என்ற தொண்டு நிறுவனம் உயிர் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. ‘ஒரு முறையிலிருந்து வரும் கழிவுகள் மற்றொரு முறைக்கு உணவாக மாறும்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமைப்புகளில் உள்ள முறைகள் சிறந்த ஆற்றல் உடையவையாக ஆயின. இந்த முழுமை பெற்ற மாதிரி இயற்கையை பாதுகாக்கிறது, உயிர்பல்வகைமையை காக்கிறது, புகைபடிவ எரிபொருளை சேமிக்கிறது, வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை குறைத்தல், உணவு மற்றும் சுற்றுச்சூழல் விஷமாக மாறுவதை தவிர்த்தல், அடிப்படையில் மனிதர்களை, பல புதிய தலைமுறை அழிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
மீன் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
மீன் கழிவுகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. ஆனால் நுண்ணுயிர்கள், ஈக்கள் போன்றவற்றை ஈர்ப்பதால், இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு பின் இதனை வைத்துகொள்ள முடியாது. காற்றுடன் சேர்ந்து நுண்ணுயிர்கள் அழுகுவதால், துர்நாற்றம் வெளியிடும். விஞ்ஞான மற்றும் கட்டுபாட்டுடன் நொதிக்க செய்தால், துர்நாற்றம் குறையலாம். மேலும் விருப்பப்பட்ட விளைபொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை தாவர வளர்ச்சி ஊக்கியாக எதிர்காலத்தில், கையாளவும், பொட்டலம் செய்தும் பயன்படுத்தலாம்.
மீன் அமினோ பின்வரும் வழியில் தயாரிக்கப்படுகிறது. மீன்அல்லது மாமிச கழிவுகளை சேகாித்து பிளாஸ்டிக் பெட்டியில் மூடியுடன் வைக்க வேண்டும். பாதியளவு தண்ணீர் அதில் சேர்க்க வேண்டும். பிறகு, ஒரு கிலோ மீன் கழிவுக்கு 0.05கிராம் முதல் 0.1 கிராம் பப்பாளி பால் சேர்க்க வேண்டும். முற்றின பப்பாளி பழத்தின் மேல்புரத்தில் சிறிய கீத்து போட்டப்பின், அதிலிருந்து கிடைப்பதே பப்பாளி சாறு. எந்த விலங்கு புரதமும் உடனடியாக பெப்டோன்ஸ் மற்றும் அமினோ அமிலங்களாக மாறும் தன்மை கொண்ட சக்திவாய்ந்த தாவர நொதியாகும். அனைத்து பொருட்களையும் பப்பாளி பாலான, பப்பாயன் நன்கு கலந்து. 5-8 மணி நேரம் வைக்க வேண்டும். சமமான கால இடைவெளியில் கிளறி பாத்திரத்தை மூடிவைத்திருக்க வேண்டும். 5-8 மணி நேரத்திற்கு பின்னர், ஒரு கிலோ மீன் கழிவில், 200கிராம் வெல்லத்தில் அரை லிட்டர் தண்ணீரில் கரைத்த திரவத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் ஸல்பர் குடும்பத்தை சேர்ந்த பாக்டீரியாக்கள் வளரவிடாமல் தடுக்கிறது. இது, சல்பர் உள்ள புரதச்சத்தை உடைக்கவும், துர்நாற்றம் வீசும் ஹைட்ரஜன் சல்பைட்டை உருவாக்குவதிலும், முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்தத்தில், வெல்லம், செகேரோமைசிட்ஸ் என்ற சிறிய பூஞ்சானை வளர ஊக்கப்படுத்தி , இதன் மூலம் புரதத்தை அமினோ அமிலங்களாகவும், கார்போஹைட்ரேட்டை, ஆல்கஹால் மற்றும் கீட்டோன்களாக உடைக்கிறது. இந்த செய்முறையில் எலும்புகள் நன்கு ஜீரணித்து, உடைத்து பாஸ்பேட் மற்றும் கால்சியம் கூட்டுப்பொருளாகவும் மாற்றுகிறது.
நுண்பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்கள் ஒன்றுசேர்ந்து முறையாக நொதித்து, 15-20 நாட்களில் இந்தப் பணியை பூர்த்தி செய்கிறது. இந்த சாற்றில், 2-5 லிட்டர் தண்ணீர் கலந்து இறுதி பொருளை தயாரித்து அதனை வடிகட்ட வேண்டும். இந்த திரவத்தை தாவரங்களுக்கு முக்கியமாக இலைவழி ஊட்டமாக தௌிக்கலாம். ஜீரணிக்காத பொருட்கள் ஏதேனும் இருந்தால், அதனை மண்ணில் உரமாக இடலாம்.
உற்பத்தி செலவு – ஒரு லிட்டருக்கு ரூ. 30/- அதே சமயத்தில் விவசாயிகள் இதனை ஒரு லிட்டருக்கு ரூ.50 /- க்கு சுலபமாக விற்கலாம்.
தொழில்நுட்பத்தை பரப்புதல்
விவேகானந்த கேந்திரா- நார்டெப் விவசாயிகளுக்கும், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும், மீன் அமினோ தயாரிப்பது குறித்து பயிற்சியளிக்கின்றது. விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டனர்.பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு, ப்ரமிளா என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் மீன் அமினோ பயிற்சியில் கலந்துகொண்டார். அவர் இதனைத் தயாரித்து, மீன் அமினோவை காய்கறி வளர்ப்பதற்கு பயன்படுத்தினார். 15 முதல் 20 சதவிகிதம் அதிக மகசூல் கிடைப்பதால் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளார் (பார்க்க பெட்டி செய்தி).
தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புது டில்லி, மற்றும் நபார்ட், சேர்ந்து இந்தத் தொழில்நுட்பத்தை அவர்களின் பிரபலமான, தொழில்நுட்ப திறனை பின்பற்றுதல் என்ற திட்டத்தின் மூலம் பரப்புகின்றது.
மீன் அமினோ கழிவிலிருந்து ஒரு உபயோகமுள்ள பொருளாக தயாரிப்பது மட்டுமில்லாமல், மாசு குறைவதற்கு உதவுகிறது, மேலும் வளர்ச்சி ஊக்கியாக இருக்கிறது. வயல்களில் நல்ல முடிவு வெளிப்படுவதால் அதிகளவு ஊக்கமடைகிறோம். 15 முதல் 20 சதவிகிதம் உற்பத்தி அதிகாிக்கிறது, மேலும் தழைச்சத்து அளிக்கும் உரத்தின் தேவை குறைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் சந்தையை சார்ந்திருக்கும் விவசாயிகள் குறைந்துள்ளனர்.
பெட்டி செய்தி
ஓய்வு பெற்ற ஆசிரியரான, ப்ரமிளா, மாடியில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் மற்றும் பழங்கள் வளர்த்து வருகிறார். பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு விவேகானந்த கேந்திரா, கன்னியாகுமாி, நடத்திய மீன் அமினோ தயாரிப்பு பயிற்சியில் கலந்துகொண்டார். பிறகு, மீன் அமினோவை தயாரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை தாவரங்களுக்கு தௌித்து வந்தார். மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது பொிய சவாலாக இருந்தது. மற்ற முறைகளை முயற்சி செய்து அதில் தோற்றேன். மீன் அமினோ தௌித்த பின்னர் இந்தப் பிரச்சனை முழுவதுமாக தீர்க்கப்பட்டது” என்று அவர் கூறினார். ஒரு முறையிலிருந்து வெளிப்படும் கழிவு, மற்றொரு முறைக்கு உணவாக மாறுகிறது” வி.கே. நார்டெப்
எஸ். ப்ரேமலதா
S Premalatha Research Assistant Vivekananda Kendra – Nardep Kanyakumari – 629702 E-mail: vknardep@gmail.com www.vknardep.org; www.greenrameswaram.org
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2018, வால்யூம் 20, இதழ் 2



