சுய உபயோகத்திற்காக காய்கறிகள், உயிர் உரங்களை பயன்படுத்தி துவக்கத்தில் வளர்த்த ஒடிசா மாநிலத்தில் உள்ள அலாதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள், சந்தையில் விற்பதற்காக இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் உணவில் தரத்தில் பலனடைவதையும் தாண்டி, இயற்கை முறைகளுக்கு மாறியதால் சுய-நிறைவு பெறுவதற்கும், அவர்களின் வேளாண்மை செலவு குறைவதற்கும் உதவுகிறது.
ஒடிசாவை சேர்ந்த 55 வயது விவசாயியான பி.ரெட்டி’பத்து உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு உணவு வழங்க வேண்டிய நிலையில் இருந்ததால், குறைந்த காலத்தில் அதிக உற்பத்தி பெறுவதற்கு இரசாயன உரமே ஒரே தேர்வாக எனக்கு இருந்தது” என்று கூறினார். ரெட்டியை போல, கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளும் உணவு உற்பத்தியை அதிகாிக்க, ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்து இரசாயன உரத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். துவக்கத்தில் இந்த முறை நல்ல வருமானத்தை பெற்றுத் தந்தது. எனினும் காலம் செல்ல செல்ல, தொடர்ந்து இரசாயன உரத்தை பயன்படுத்தியதால், முன்பு இருந்த அளவிற்கு மண்ணின் தரம் இல்லை என்று இவரை போல மற்ற விவசாயிகளும் உணர ஆரம்பித்தனர். இரசாயன உரத்தை பயன்படுத்தியதால் அவர்களின் சாகுபடி மகசூல் குறைவது மட்டுமில்லாமல், மண்ணின் தரம் சேதமடைந்தது.
ஒடிசாவில் உள்ள வியுஸ், என்ற அரசு சாரா நிறுவனம் குறு விவசாயிகளின் உணவு உத்திரவாதத்தை மேம்படுத்த களத்தில் சிறப்பாக பணி செய்து வருகிறது. சிக்கிடி வட்டத்தில் உள்ள, ரெட்டி உட்பட பெரும்பாலான விவசாயிகள் ஓரினப்பயிராக காய்கறிகளை இரசாயன உரத்தை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட சேதம் அவர்களின் வாழ்வாதாரத்தில் நிலைத்தத்தன்மை ஏற்படுவதில் அச்சுறுத்தலாக இருக்கிறது.
விவசாய சமூகத்தின் தேவையை அறிந்து, ஜனவரி மற்றும் ஜுன் மாதம் 2014 ஆம் ஆண்டு, அலாதிபபூர் கிராம மக்களுக்கு, இயற்கை உரம் மற்றும் அதன் பயன்கள் குறித்து, வியுஸ் நிறுவனம் தொடர் பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்தது. ரெட்டியுடன் மற்ற 24 விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பங்கெடுத்தனர். ஆலாதிபூர் கிராமத்தை தவிர்த்து, கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள மற்ற 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில், இக்கோ நிறுவனத்தின் உதவியோடு ‘ ஒடிசாவில் நிலைத்த வாழ்வாதார முயற்சி “ திட்டத்தின் ஒரு பங்குதான் இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், வியுஸ் நிறுவனம் கிராமத்தினருக்கு, துவக்கத்தில் சுய பயன்பாட்டிற்காக வளர்க்கப்படும் காய்கறிகள் உயிர் உரங்கள் சாகுபடி செய்வதற்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு பின்னர், பல குடும்பங்களுக்கு தக்காளி, வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் போன்ற காய்கறி விதைகள் வழங்கப்பட்டது. ரெட்டியுடன் மற்ற விவசாயிகளும் இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்ய துவங்கினர்.
இதன் முடிவு ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. இரசாயன உரங்கள் பயன்படுத்தாமல், காய்கறிகள் நன்கு வளர்வதை கண்ட அனைத்து விவசாயிகளும் மகிழ்ந்தனர். சுய-பயன்பாட்டிலிருந்து, இவர்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை உள்ளூர் சந்தையில் விற்க துவங்கியுள்ளனர். நுகர்வோரிடம் ஏற்பட்ட மாற்றம், இயற்கை உர பயன்பாட்டின் பயன்கள் இவர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. சந்தையில் கிடைக்கும் இரசாயனத்தை பயன்படுத்தி வளர்க்கப்படும் காய்கறிகளை விட இந்த காய்கறிகளின் சுவை மிகுதியாக இருக்கிறது என்று நுகர்வோர் உணர்ந்தனர்.
விரைவில், இவர்களின் இயற்கை விளைபொருட்கள் சந்தையில் மிகுந்த வரவேற்பை பெறும். மற்ற விவசாயிகள் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.25 க்கு விற்கப்படும் அதே சமயத்தில் இந்த விவசாயிகள் அதே அளவைக் கொண்ட இயற்கை விளைபொருள் ரூ.35ற்கு விற்க முடிகிறது. இயற்கை சாகுபடி சுற்றுச்சூழல் மற்றும் உணவு தரத்தில் ஏற்பட்ட உடனடி மற்றும் நல்ல தாக்கங்களையும் தாண்டி, ரெட்டி மற்றும் அவரது விவசாய நண்பர்களின் சாகுபடி செலவை குறைத்து, சுய தேவையை பூர்த்தி அடைவதற்கும், இந்தத் தொழில்நுட்பம் சிறந்த முறையில் உதவியது.
Source: http://iccoindia.org/story/farmers-inodishareplenish-soil-fertility-the-natural-way/
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2018, வால்யூம் 20, இதழ் 2



