நிலைத்த முறையில் இடுபொருள் செலவுகளை குறைத்து பண்ணை உற்பத்தித் திறனை உயர்த்துவது தற்போதைய மிக முக்கியமான தேவையாகும். இந்தக் குறிக்கோளை பூர்த்தி செய்வதற்கு 20-20 மாதிரியில் புதிய தலைமுறை வேளாண் உயிரி இடுபொருட்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் கையாளப்பட்டது. நுண்ணுயிர் உரம் மற்றும் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளுடன் இணைந்து வேளாண் கழிவுகளிடமிருந்து பெறப்பட்ட விஞ்ஞான உயிரி உரம், இயற்கைக்கு உகந்த, குறைந்த செலவில் பண்ணை உற்பத்தித்திறன் முறை குறித்த செய்முறை விளக்கத்தின் மூலம் சிறந்த திறனை வெளிப்படுத்தியது.
ஐக்கிய நாடுகளின் நிலைத்த வளர்ச்சி குறித்த குறிக்கோள்களை அதிக இடுபொருட்கள் பயன்படுத்தி செய்யும் நமது வேளாண் முறைகளிலிருந்து நிலைத்த தன்மைக் கொண்ட முறைக்கு மாற்றுவதையே முக்கியமான தேவையாக கருதப்படுகிறது. இன்னும் வேளாண்மையை சார்ந்திருக்கும் பெரும்பாலான மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் இயற்கை வேளாண்மை முறைகள் மூலம் சாகுபடி செய்வது முன்னேற்ற வழியாக கருதப்படுகிறது. பசி, சத்துக்குறைபாடு, ஏழ்மை, சுற்றுச்சூழல் அழிவு மற்றும் சீதோஷன மாற்றம் ஆகிய சவால்களுக்கு இயற்கை வேளாண்மை சாகுபடியே சிறந்த வழியாக கருதப்படுகிறது. உயிர்ச்சூழல் வேளாண் முறை இன்னும் வளர்ந்து வருகிறது. அடுத்த சிலவருடங்களில், புதிய தலைமுறை நுண்ணுயிர் இடுபொருட்களான நுண்ணுயிர் உரம், நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகள் உயிர்உரம் அனைத்தும் வேளாண் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
எட்டு முக்கிய குறிக்கோள்களில், வறுமை மற்றும் பசியை முற்றிலும் ஒழித்தல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தத்தன்மை ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. பசுமைப் புரட்சியானது, இந்தியா மற்றும் பல இதர நாடுகள், உணவு பற்றாக்குறையிலிருந்து உணவு மிகுதியான நிலைக்கு மாறியது. அடுத்த சில ஆண்டுகளுக்கு நாம் சந்திக்கபோகும் சவால்களை கண்டோமானால், குறைந்த தண்ணீர் மற்றும் சவாலாக இருக்கும் சுற்றுச்சூழல் நிலையோடு நாம் 2025 ஆம் ஆண்டில் உணவு உற்பத்தியை இரட்டிப்பாக வேண்டும், மேலும் 2050 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகாிக்க வேண்டும் என்பது தௌிவாக தொிகிறது. எனினும், தற்போது உள்ள நிலையில் வேளாண்மைக்கு வரவேற்கத்தக்க எதிர்காலம் இல்லை என புலப்படுகிறது. இந்திய விவசாயிகள் கிட்டதட்ட ரூபாய் இரண்டு லட்சம் கோடிக்கு விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருட்களுக்கு செலவழிக்கின்றனர். ரூபாய் 50000 கோடி உர மானியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அதிக இரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் மண் வளம் குறைந்துள்ளது. மேலும், நம் மண்ணில் இயற்கை கனிம குறைபாடு ஏற்பட்டுள்ளது. இது உயிர்ச்சூழல் வேளாண்மை புரட்சிக்கான நேரம் – இந்தப் புரட்சி நிலையான, சமமான மற்றும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.
மாற்று மாதிரித் திட்டம்
சில வருடங்களுக்கு முன்பு, அறிவியல் ஆசிரமம், என்ற எங்கள் தொண்டு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானிகள் கொண்ட குழு, விவசாயிகளோடு கலந்துரையாடும்போது, சில எதிர்பாராத கருத்துக்களை பெற்றனர். பல பகுதிகளில், அதிக பூச்சிகொல்லிகள் மற்றும் உரங்கள் பயன்படுத்தும் விவசாயிகள், இதன் தீய பாதிப்புகள் மற்றும் குறையும் நிகர வருமானம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த உரையாடல்களை கேட்க தயாராக உள்ளனர். எனினும், இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா? என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். புதிய தலைமுறை வேளாண் உயிர் இடுபொருட்கள் குறித்து விளக்கும்போது, ‘நீங்கள் தயாரித்து எங்களிடம் கொடுங்கள். நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்” என்று கூறினர். இந்த உந்துதலின் காரணமாக எங்கள் குழுவினால் குஜராத் உயிர் அறிவியல் என்ற வேளாண்மை உயிர் இடுபொருட்கள் தயாரிக்கும் கூடம் ஒன்று துவக்கப்பட்டது.
தற்போது பல நுண்ணுயிர் ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பம் குறித்து புரிதல் ஏற்பட்டுள்ளதால், பயிர் உற்பத்தித்திறன் உயர்த்தும் அதே நேரத்தில் வேளாண் இரசாயன இடுபொருள் செலவு குறைகிறது. மேலும் வேளாண்மை கழிவுகள் கொண்டு புதிய முறையில் உயர்தர உயிர்உரம், தொழுஉரம் போன்றவைகள் தயாரிக்கப்படுவதால், மண்ணிற்கு அதிகம் தேவைப்படும் கனிமம் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தரத்தில், தரமிக்க சத்துக்கள் கிடைப்பதும் சிறப்பாக அதிகாிக்கும். உயிர் பூச்சிக்கொல்லிகள் பிரிவில் சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில், ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு நாடுகளில் பண்ணை செயல்முறை பாிசோதனைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 20:20 மாதிரி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாதிரியில் இடுபொருள் செலவு 20 சதவிகிதம் குறைகிறது, அதேநேரத்தில் பயிர் உற்பத்தி 20 சதவிகிதம் அதிகாிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு வரமாக இருக்கிறது. வளர்ச்சி பாதையில் இந்த மாதிரியை சுலபமாக பின்பற்றலாம்.
கடந்த சில காலமாக, விவசாயிகள் மத்தியில், மிக சுலபமாக செயல்படுத்தக்கூடிய நிலையில் 20:20 மாதிரி திட்டம் பிரபலமடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் அதிக செலவுடைய இரசாயன சாகுபடி குறித்து உணர்ந்திருந்தாலும், ஒரே இரவில் அனைத்தையும் ஒழித்துவிடவோ அல்லது நிறுத்தவோ முடியாது. மற்றொரு புறத்தில், விவசாயிகள் திடீரென இயற்கை சாகுபடிக்கு மாறியபோது, அதன் எதிர்மறை தாக்கத்தால், அவர்கள் பெரும்பாலும் பிரச்சனைகள் மற்றும் மனசோர்வையும் சந்தித்தனர். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கு மத்தியில், நடைமுறைக்கு சாதகமான வழியிலும், சுலபமாக செயல்படுத்தக்கூடியதாகவும், 20:20 மாதிரி உள்ளது. 20:20 மாதிரி பின்பற்றிய முதல் வருடத்தில் , முன்னோடி விவசாயிகளை கொண்டு அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உயிர்இயற்கை இடுபொருட்களை இரட்டிப்பாக்கலாம் என்பது தௌிவாக புலப்படுகிறது. மேலும் 100% இயற்கை விளைபொருட்களாக மாற்றலாம். இந்த விவசாயிகள் பல்வேறு வேளாண் சீதோஷன நிலையில், பல்வேறு பயிர்களை வைத்து சாகுபடி செய்யலாம்.
பண்ணை விளக்கத் திடல்
பரவலாக, உயிர் இடுபொருட்கள் மூன்று முக்கிய பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. சத்துக்கள் மேலாண்மை (உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய உயிர் உரங்கள், மண்ணில் பல்வேறு நுண்ணுயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சாணங்கள்), உயிர் பூச்சிக்கொல்லிகள் (பல்வேறு நுண்ணுயிர் பூச்சிகொல்லிகள், இலை கரைசல்கள், இனகவர்ச்சிப் பொறிகள் போன்றவை) மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் (அமினோ அமிலங்கள், நுண்ணுயிர் சத்துக்கள், கடல் தாவர கரைசல், வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் ஹார்மோன்கள் போன்றவை). வேளாண் உயிர் விளைபொருட்களை பயன்படுத்துவதால் பண்ணை உற்பத்தி அதிகாிப்பதும், இடுபொருள் செலவு குறைவதும் சாத்தியமாகும்.
வேளாண் பல்கலைக்கழகம், தனியார் நுன்தொழில்நுட்ப நிறுவனம் மற்றம் ஒரு தொண்டு நிறுவனத்தை ஈடுபடுத்தி மூன்று செய்முறை விளக்கத் திடலை உருவாக்கியிருந்தனர். தென் குஜராத்தில் உள்ள நவ்சாரி வேளாண்மை பல்கலைக்கழகம், புதிய தலைமுறை வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்தொழில்நட்ப நிறுவனமான குஜராத் உயிர் அறிவியல் தனியார் நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனமான,அறிவியல் ஆசிரமம் ஆகியவற்றோடு பல்வேறு தரப்பு விவசாயிகளும் ஈடுப்பட்டபனர். பல்வேறு விளைபொருட்கள் பண்ணை செயல்முறை விளக்கம் மூலம் எடுக்கப்பட்டது. ஊட்டமேற்றிய உயிர் உரம், உயிர் பூச்சிக்கொல்லிகள், உயிர் மக்கு உரம் போன்ற குறிப்பிட்ட பொருட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பயிர் உற்பத்தி அதிகாிப்பதும், வேளாண் இரசாயன உரங்களின் இடுபொருள் செலவு குறைந்ததும் இந்த புள்ளி விவரங்கள் தௌிவாக காட்டுகிறது. இந்த மாதிரி திட்டத்தை விவசாயிகளை பின்பற்றச் செய்து, அதன்மூலம் இடுபொருள் செலவு குறைக்கும் அதேநேரத்தில் உற்பத்தியும் அதிகாிக்கும். இயற்கை சார்ந்த இடுபொருட்கள் மூலம் இவற்றை செய்வது, நிலைத்த வேளாண்மை தொழில்நுட்பத்தின் முக்கிய சாதகமாகும். இந்த மாதிரியை விளக்கும்போது, சில குறிப்பிட்ட உயிர்பொருட்களின் புள்ளிவிவரங்களின் மூலம் தௌிவுபடுத்தியது. தரமான வினியோகஸ்தரிடமிருந்து பெரும் சாியான சேர்க்கை உரத்தை பயன்படுத்தலாம். தரமான நுண்ணுயிர் ஆதாரத்தை வைத்து பண்ணை கழிவுகள், தொழு உரம் போன்றவற்றிலிருந்து, விவசாயிகள் தங்களுடைய சொந்த உயிர் மக்கு உரத்தை தயாரிக்கலாம்.
பயிர் கழிவுகளை வைத்து நிலத்திலேயே உயிர் மக்கு உரத்தை தயாரித்தல்
பயிர் கழிவுகள் எரிப்பது மற்றும் மண்ணில் இயற்கை கனிமம் குறைந்திருப்பதும் உலகளாவிய பிரச்சனையாகும். இந்தியாவில் வடமாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால், மண்ணின் தரம் குறைந்து வருகிறது, காற்று மாசு ஏற்படுகிறது மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகிறது. அடுத்த விதைப்பு செய்வதற்கு அவசரப்படும் விவசாயிகள், அறுவடை செய்து 20 நாட்களே ஆன நிலையில் இந்த முறையை பின்பற்றுகின்றனார்.
பயிர் கழிவுகளை சார்ந்த இந்தப் பிரச்சனைக்கு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் பல வருடங்கள் களப்பணி செய்து, பல்வேறு நுண்ணுயிர் கலப்பை கொண்டு நிலத்திலேயே உயிர் மக்குஉரத்தை பின்பற்றுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. ஹாியானாவில் உள்ள ஒரு நிலத்தில் பல்வேறு நுண்ணுயிர் ஆதாரங்களை கொண்டு நெல் சருகுகளை நிலத்திலேயே வைத்து பாிசோதனை முயற்சியை, கள செய்முறை விளக்கம் செய்யப்பட்டது.
அதேமாதிரி வாழைப்பயிரில் வரும் கழிவுகள் மற்றும் இதர பயிர் கழிவுகள் அதிகாிப்பதும் பிரச்சனையாகும். வாழை அறுவடைக்குப்பின் ஏற்படும் பயிர் கழிவுகள் மிகப் பொிய பிரச்சனையாகும் . இதனைப் பற்றி, அதிக பிரச்சனையுள்ள பகுதியான, குஜராத்தில் ஆனந்த் மற்றும் தமிழ் நாட்டில் திருச்சி போன்ற இடங்களில் பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதிக்கப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் வாழைப்பயிரை அடாத்தியாக சாகுபடி செய்வதில் பெயர் போனவை. வாழை அறுவடை முடிந்ததும், தண்டு மற்றும் இதர பொருட்கள் சாலைகளில் வீசப்படுகிறது. பின்பு, கூலியாட்கள் குறைபாட்டால் இதுவும் கடினமாக இருக்கிறது.
விவசாயிகளோடு கலந்துரையாடும்போது அறுவடைக்குப்பின் ஏற்படும் கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு ஒரு வரைமுறையை கையாளுவது தற்போதைய தேவை என வலியுறுத்தப்பட்டது. வாழையின் கழிவுகளை (தண்டுகளில் அதிக தண்ணீர் இருக்கும்போது) நிலத்திலேயே பயன்படுத்தி மண்ணின் வளத்தை அதிகாிக்க செய்வதை பரவலாக வலியுறுத்தியது. பல்வேறு நுண்ணுயிர் கலவையை பயன்படுத்தி வதோதரா-ஆனந்த் பகுதியின் மத்தியில் ஒரு பண்ணையில் கள செயல் விளக்கம் செய்யப்பட்டது.
இதில் வெளிப்பாடு தௌிவாக இருந்தது. இருபது நாட்களில் பாதி கழிவுகள் (நெல் வைக்கோல், வாழை கழிவுகள்) மக்கியிருந்தன. கனிம-தழைச்சத்து விகிதாரச்சாரம் குறைந்து, மண்ணின் தண்ணீர் தக்கவைக்கும் தன்மை அதிகாித்துள்ளது. இவற்றை தாண்டி, நிலத்திலேயே செய்யப்பட்ட பாிசோதனை, கூலியாட்கள் மற்றும் இடுபொருள் செலவு குறைதல், நுண்ணூட்டச்சத்து அதிகாித்தல் போன்ற பயன்கள் கிடைக்கிறது.
முடிவு
பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு வேளாண் சீதோஷன நிலைகளின் கீழ், சாியாக மற்றும் நல்ல தரமான உயிர் மக்கு உரத்தை பயன்படுத்துவது சாதாரண மற்றும் இயற்கை சாகுபடி முறைக்கு ஆகிய இரண்டிற்கும், பலவிதமான பயிர்களின் உயர்ந்த மற்றும் நிலைத்த உற்பத்திக்கு முதன்மையான மற்றும் முக்கியமான இடுபொருளாக மாறிவிட்டது தொிகிறது. சாியான மேலாண்மை மற்றும் உயிர் மக்கு உரம் இல்லாமல் இயற்கை சாகுபடி சாத்தியமில்லை. விஞ்ஞான உயிர் மக்கு உரத்தோடு பல்வேறு நுண்ணுயிர் சேர்க்கை தொழில்நுட்பம், நிலைத்த வேளாண்மைக்கு தரமான தொழில்நுட்பமாக மிகவும் முக்கியமான வேளாண் இடுபொருளாக மாற வேண்டும்.
அசடோபாக்டர், அசோஸ்பைல்லம், டோருலோஸ் போராக்ளோபோசா, பேசில்லஸ் கொயாகுலன்ஸ், செல்லுலோமொனாஸ் சிற்றனங்கள், ப்ளூரோட்டஸ் சிற்றனங்கள் போன்றவை உள்ளடக்கிய பல்வேறு சேர்க்கை கொண்ட நுண்ணுயிர் ஆதாரத்தை வளர்த்து, செயல் விளக்கம் செய்து, நிலைத்த முறையில் மகசூலை விரிவடைவதற்கு பயன்படுத்தப்படுகிறது. தழைச்சத்து, மணிச்சத்து கரைசல், தாவர வளர்ச்சியை விரிவுப்படுத்துதல், மேலும் எதிர் பூஞ்சாண செயல்பாடு ஆகியவற்றை அதிகாிப்பதற்கு வேளாண் கழிவுகளில் நுண்ணுயிர் ஆதாரத்தை இடுவது, முக்கிய செயல்பாடாக இருக்கிறது.
உயிர் இடுபொருட்கள், குறைந்த செலவு, விவசாய நண்பனாகவும், சுற்றுச்சூழலின் நண்பனாகவும், நிலைத்த வேளாண்மையின் வரப்பிரசாதமாகவும் திகழ்கிறது. பல்வேறு சூழ்நிலைகளான பீகார், ராஜஸ்தான், தமிழ்நாடு, கச்-குஜராத் போன்ற இடங்களில், முன்பிருந்த நம்பிக்கைக்கு எதிராக, அதிக உற்பத்தித்திறன் காணமுடிகிறது . பிரச்சனை ஏற்படும் தருவாயிலும், சிறு குறு விவசாயிகள் விரைவாக இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றுவதன் மூலம் உறுதிப்படுத்துகிறது. முழுமையான தண்ணீர் பாசன இல்லாத வயல்களில், சுற்றுச்சூழலின் நண்பனாகவும், சிறப்பாக செலவுகளை கட்டுப்படுத்தவும் இந்த மாதிரிகள் உருவாகிவருகிறது.
அட்டவணை 1- பல்வேறு நுண்ணுயிர் விளைபொருட்கள், உயிர் உரம் மற்றும் உயிர் மக்குஉரத்தை பயன்படுத்தி முக்கிய உற்பத்தித்திறன் விரிவாக்கப் புள்ளிவிவரம்
| பயிர்கள் | இடம் | முடிவு |
| வாழை | வேளாண்மை பல்கலைக்கழகம் – நவ்சாரி, திருச்சி-தமிழ்நாடு | 20 % யூரியா சத்தை குறைப்பதோடு 25% அதிக உற்பத்தி கிடைக்கிறது. |
| அரிசி | பாங்காக், தாய்லாந்து, வாபி-குஜராத் | 14 முதல் 19 % உற்பத்தி அதிகாித்துள்ளது |
| மக்காச் சோளம் | கோடெங்-தென் ஆப்ரிக்கா | 25 % அதிக உற்பத்தி, 25% குறைந்த யூரியா |
| ஆமணக்கு | கச் – குஜராத் | 17-22% அதிக மகசூல் |
| பப்பாளி | வட குஜராத் | 21 % வரை மகசூல் அதிகாிக்கிறது. |
உயிர் பூச்சிகொல்லிகள் மற்றும் உயிர் பூஞ்சாணங்களை பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்துதல்
| பயிர்கள் | இடம் | முடிவு |
| கத்திரி | சௌராஷ்டிரா/திருச்சி – தமிழ் நாடு | கரையான் இல்லை கரையான் – பயன்படுத்தி கரையானை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் 15 நாட்கள் வரை எதுவும் தௌிக்க வேண்டியதில்லை |
| பருத்தி | மத்திய குஜராத், அல்வார்-ராஜஸ்தான் | வேம்பு ஒரு வாழ்க்கை – பயன்படுத்தி 80-85 % வரை பல்வேறு பூச்சிகளை கட்டுக்குள் வைத்தது. |
| நிலக்கடலை | சௌராஷ்டிரா | ட்ரைக்கோலைப் + சூப்பா;லைப் வைத்து 90% பூஞ்சாண நோய்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. |
| ரோஜாக்கள் | மொரீசியஸ், மத்திய திருச்சி-தமிழ்நாடு | கரையான் பிரச்சனைக்கு மைட் நோ மைட் -ஐ பயன்படுத்தி 90 % கட்டுக்குள் வந்துள்ளது. சிறப்பான வளர்ச்சி |
| உருளைக்கிழங்கு | மத்திய குஜராத், பிகார் | மண்ணில் வொண்டா;லைப் – ஜி பயன்படுத்தி 94 மூ கட்டுக்குள் வந்துள்ளது, மேலும் 22% மகசூல் அதிகாித்துள்ளது. |
எம்.எச். மேத்தா
M H Mehta Chairman – Working Group on Eco Agriculture – ICFA – New Delhi Ex. Vice Chancellor – Gujarat Agricultural University The Science Ashram / Gujarat Life Sciences – Vadodara (Gujarat) E-mail: chairman@glsbiotech.com www.glsbiotech.com
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2018, வால்யூம் 20, இதழ் 2



