பயிர்களை நுண்ணுயிர்கள் கொண்டு நேர்த்தி செய்தல் – எதிர்கால உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம்


இயற்கை ஆதாரங்களை அழிக்காமல், உணவுத் தேவைகளை ஊட்டச்சத்துகளோடு பூர்த்தி செய்வது,  இன்று நாம் சந்திக்கும் மிகப்பொிய சவாலாகும். சுற்றுச்சூழல் தரத்தை சேதம் செய்யாமல், ஆதாரங்களின் பயன்பாட்டை விரிவடையச்செய்து, மாற்று அணுகுமுறைகளை செயல்படுத்துவதே தற்போதைய அவசியமாகும்.

மண்ணின் கனிம வளங்கள் குறைந்து வருதல், சமமற்ற இரசாயனங்கள் பயன்படுத்துவது, உருவாகிவரும், பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் குறிப்பாக இரண்டாம் நிலை  மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள், சிறப்பான ஊட்டச்சத்து பயன்பாடு நலிந்துவருதல், பாதகமான மண் ஊட்டச்சத்து சமன் போன்ற பிரச்சனைகளை சந்திப்பது, இந்திய வேளாண்மையில் பொிய சவாலாக இருக்கிறது. அனைத்து பிரச்சனைகளும் இரசாயன பயன்பாட்டோடு இணைந்திருக்கிறது. எரிபொருள் மற்றும் இரசாயன உரம் ஆகியவற்றின் ஆற்றல் சம்மந்தமான இடுபொருட்களை இரண்டு மடங்கு விலைக்கு வாங்கும்போது, இந்தப் பிரச்சனைகள் மிகவும் கடினமாக மாறியது. கிடைக்கும் அதிக ஆற்றல் மற்றும் அதிக செலவு கொண்ட சாகுபடி முறைகளுக்கு மாற்று உற்பத்தித் திட்டத்தில், புதிய ஆற்றல் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது இதுவே உச்சகட்ட நேரம். தரமான மற்றும் பல்வேறு உணவுகளின் தேவை அதிகாித்து வரும் நிலையில், நுகா;வோர் சமூகத்தினால் ஆற்றல் உற்பத்தியின் தேவையும் இருக்கிறது. அந்த ஆற்றல் பயன்பாடு நியாயமான முறையில், ஆதாரத்தை நிலைத்த முறையில் மேலாண்மை செய்வது எதிர்காலத்தில் பொிய சவாலாக இருக்கிறது.அழிந்துவரும் ஆதாரங்களை, விவசாய சமூகங்கள் உத்திரவாதம் செய்வதற்கு, மாற்று அணுகுமுறைகளை செயல்படுத்தி சிறப்பான இடுபொருள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் தரம் விரிவடைவதற்கு முயற்சிகள் எடுக்கின்றனர். நுண்ணுயிர்கள் பல்வேறு சுற்றுச்சூழல்களை ஏற்கும் தன்மை, விஞ்ஞானிகளை ஈர்க்கசெய்து, வேளாண் செய்முறைகளில் நுண்ணுயிர்கள் அறிமுகப்படுத்தினர். செய்தால் சூழல் நட்புகொண்ட பயனுள்ள நுண்ணுயிர்களை நவீன உற்பத்தி முறையோடு செயல்படுத்தி, அதன் பல்வேறு நோக்கங்களை நுண்ணுயிர்களோடு நேர்த்தி செய்வதனால் திறன் கொண்டு பூர்த்தி செய்யலாம்.
தொழில்நுட்பம்
நுண்ணுயிர்கள் நேர்த்தி என்பது உயிரியல் விதை நேர்த்தியோடு,ஒரே செய்முறையில் விதை மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்குவிப்பு சார்ந்த பல்வேறு உடலியல் மற்றும் உயிரியல் வகையில் ஒன்றாக இணைக்கும் செயலாகும் . வெப்பம் மற்றும் ஈரப்பத சூழ்நிலைகளில் பயனுள்ள நுண்ணுயிர் விதைத் தடுப்புகள் செய்வதற்கு முன் கட்டுப்படுத்தப்பட்ட விதை நீரேற்றம் மேற்கொள்ளப்பட்டது. ட்ரைகோடர்மா, சூடோமோனாஸ், பேசில்லஸ், ரைசோபியம், அசோஸ்பைரில்லம், க்ளோமஸ், அசோடோபேக்டர், அக்ரோபேக்டீரிம் போன்ற நன்மை செய்யும் பூஞ்சானம் மற்றும் பாக்டீரியாவை விதையின் மேல் நுண்ணுயிர்கள் பூச்சு தயார் செய்யலாம். விதையில் நீர் உறிஞ்சும்போது, பாதி முளைப்புத்திறன் அனுமதித்து, விதையில் பல்வேறு உடலியல் மற்றும் உயிர்வேதியியல் செய்முறைகளை (செல் பழுதுபார்ப்பு, இருப்புகளின் வளர்சிதை மாற்றம், டி.என்.ஏ. பழுதுபார்ப்பு, புரதச்சத்து உற்பத்தி, வினைபுரி உயிர்வளியினத்தின் நச்சுத்தன்மை) தூண்டுகிறது. முளைக்குருத்து மற்றும் முளைவேர் வளர்வதற்கு முன்னர், தண்ணீர் நேர்த்தி நிறுத்தப்பட்டது.
நுண்ணுயிர்கள் நேர்த்தி என்பது இந்தக் காலத்தில் தாவரங்களை எல்லா சூழலிலும் சிறப்பாக செயல்படுவதற்கான மேம்படுத்தப்பட்ட விதை நேர்த்தி முறையாகும். உயிர் செயல்பாட்டு முறை, வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் தடுக்கும் கருவியாகவும், தரத்தை மேம்படுத்தும் முறையாகவும், அதிகாிக்கும் உற்பத்தியோடு செயல்படும். உயிர் நேர்த்தி விதைகளின் செயல்திறன், பல்வேறு வேளாண் உயிர்ச்சூழல் முறைகளில் கவனிக்கப்பட்டது. இதன் வேகமான முளைப்புத்திறன், சீரான நாற்று வளர்ச்சி, குறையும் விதை உறக்கம், உயர்ந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களை (பூச்சிகள் மற்றும் நோய்கள்) சகித்துக்கொள்ளுதல் போன்ற இயல்பினால் சாத்தியமானது.
வயல் பாிசோதணை
உத்திரபிரதேசத்தில் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதி விவசாயிகள், அரிசி, கோதுமை, மக்காச் சோளம் மற்றும் பயறு வகைகள் உட்பட பல்வேறு பயிர் சிற்றினங்களை விதைப்பதற்கு முன், விதை உயிர் நேர்த்தியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், நாற்றுகளின் உயிர் நேர்த்தி காய்கறிகளுக்கு (முட்டை கோஸ், காலிபிளவர் அல்லது கத்திரி) பாிந்துரைக்கப்படுகிறது. அதிக சத்துக்கள் தேவையானப் பயிர் (தழை:மணி:சாம்பல் சத்து – 120:60:60 கிலோ / ஹெக்டர்), சிவப்பு முட்டைகோஸ், உயிர் நேர்த்தி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டது. ஆரோக்கிய நாற்றுகளை 4 x 2 சதுர மீட்டர் இடத்தில் 50 செ.மீ x 50 செ.மீ. மூன்று நேர்த்தி செய்யும் பொருளை (ட்ரைகோடர்மா ஹர்சியானம், சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ்) தனியாகவும், கலந்தும், 75 % பாிந்துரைக்கப்பட்ட அளவு உரத்தோடு பயன்படுத்தப்படுகிறது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ரபி பட்டத்தின்போது பனாரஸ் ஹின்டு பல்கலைகழகம், காய்கறி ஆராய்ச்சி பண்ணையில், வயல் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
முடிவு
உயிர் நேர்த்தி, சிவப்பு முட்டைகோஸ் பயிர் முக்கிய சத்துக்கள் (தழை, மணி மற்றும் சாம்பல்) மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் (இரும்பு, மேங்கனீஸ், துத்தநாகம் மற்றும் தாமிரம்) ஆகிய சத்துக்கள் எடுத்துகொள்ளுவது அதிகாித்துள்ளது. சத்துக்கள் அடிப்படையில், ட்ரைகோடர்மா ஹர்சியானம் மற்றும் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் இணைந்து இடும்போது தழைச்சத்து அதிகாிக்கிறது, அதேபோல் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டலிஸ் ஆகிய  இரண்டும் இணைந்து இடுவதால் பாஸ்பரஸ் மற்றும் சாம்பல் சத்தின் சதவிகிதம் அதிகாிக்கிறது (அட்டவணை 1). ஒரு சிற்றின நுண்ணுயிரின் செயல்திறனைவிட, நுண்ணுயிர் கலவை சிறப்பாக செயல்படும். எனினும் இரண்டு சிற்றினக் கலவையைவிட மூன்று சிற்றினக் கலவை சிறப்பாக செயல்படும். பொருளாதார மகசூல் மற்றும் சிறப்பான ஆற்றல் பயன்பாடு, உயிர் நேர்த்தி செய்யப்பட்ட பயிரில் அதிகாிக்கும். இந்தப் பயன்கள், மண்ணில் நொதிகள், ஹார்மோன் மற்றும் காிம அமிலம் ஆகியவை வெளியிடுவதால் நுண்ணுயிர்கள் செயல்பாடு அதிகாிப்பதனால் நிகழும். நேர்த்தி செய்யப்படாத தாவரத்தைவிட நேர்த்தி செய்யப்பட்ட தாவரம் வளர்ச்சி அதிகமாக இருக்கும். உயிர் நேர்த்தியினால் வேரோடு கலந்து பயிரின் வேர்ப்பகுதி அமைப்பு மாறும், சத்துக்கள் நகர்ந்து செல்லும் மற்றும் சிறப்பான சத்துக்கள் பயன்பாடு உயரும். மண்ணிலிருந்து, தாவரத்திற்கு மினரல்கள் எடுத்து செல்ல சத்துக்கள் மேலாண்மை அணுகுமுறையை துரிதப்படுத்தப்பட்டது.
முடிவுரை
பொதுவாக மக்களிடைய சிந்திக்கக்கூடிய அளவில் ஆரோக்கிய பாதிப்புகள், சூழல் நட்பு, பொருளாதாரம் மற்றும் நிலைத்த வேளாண்மை ஆகியவை உடனடித் தேவையாக இருக்கிறது. உயிர் நேர்த்தி என்பது குறு விவசாயிகளும் செயல்படுத்தும் வகையில் சுலபமான கருவியாகும். இந்தத் தலையீடு இரசாயன உர பயன்பாடு குறைவதோடு, பயிரின் சத்துக்கள் சிறப்பாக பயன்படுகிறது. மேலும் வேளாண் வேதியியல் பயன்பாடு பொருளாதாரத்திற்கு சாதகமாக இல்லை, அதனால் உயிர்ச்சூழலும் அழிந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில், விதைகளை நுண்ணுயிர்கள் கொண்டு நேர்த்தி செய்தால் மகத்தான திறன் கிடைக்கும். குறிப்பிட்ட காரணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நுண்ணுயிரை பயன்படுத்தியதால் மேலும் மகசூல் அதிகாிக்கலாம். வேளாண்மையில் நிலைத்த மகசூல் அடைவதற்கு, உயிர் நேர்த்தி தொழில்நுட்பத்தை, தற்போது புழக்கத்தில் ஒருங்கிணைந்த சத்துக்கள் மேளாண்மையில் இணைக்க வேண்டும்.
நாற்றுகள் உயிர் நேர்த்தியின் செயல்முறை
  • இரசாயனத்தை சுத்தம் செய்வதற்கு, குழாய் தண்ணீரில் விதையை கழுவவும்
  • 0.1 விழுக்காடு பாதரச குளோரைட் கொண்டு மேல்புரத்தை சுத்தம் செய்யவும்.
  • சுடு தண்ணீரில் மூன்று முறை கழுவ வேண்டும்
  • புதிய தண்ணீரில் 1-2 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
  • விதைகளை தட்டில் வதைத்து, முளைப்பதற்குவிட வேண்டும்
  • 5-6 இலைகள் உள்ள நாற்றுகள் எடுத்துகொள்ள வேண்டும்
  • மண்ணை கழுவ வேண்டும்
  • வேர்களை திரவ கலவையில் முக்க வேண்டும்
  • 5 மணிநேரம் வைக்க வேண்டும்
  • நடவு செய்தல்
அட்டவனை 1: உயிர் நேர்த்தி மற்றும் தழை:மணி:சாம்பல் சத்தின் உரத்தினால் சிவப்பு முட்டைகோஸில் ஊட்டச்சத்துக்கள் தரத்தில் ஏற்பட்ட தாக்கம் (2 வருடங்களின் சராசாி)
 
பாிசோதனைகள்
தழை (%)மணி(%)சாம்பல்(%)
சரியான கட்டுபாடு த:ம:சா @ 0:0:0 கிலோ / ஹெக்டர்1.890.432.36
பாிந்துரைக்கப்பட்ட உரம் த:ம:சா @120: 60:60கிலோ /ஹெக்டர் @ 2.702.700.522.63
75% மூபாிந்துரைக்கப்பட்ட உரம்+ட்ரைகோடர்மா ஹர்சியானம்3.120.532.85
75%  பாிந்துரைக்கப்பட்ட உரம் + சூடோமேனாஸ் ப்ளூரசன்ஸ்3.190.563.39
75% பாிந்துரைக்கப்பட்ட உரம்+பேசில்லஸ் சப்டிலிஸ்3.010.533.43
75% பாிந்துரைக்கப்பட்ட உரம் + ட்ரைகோடர்மா ஹர்சியானம் + சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் 3.380.573.38
75% பாிந்துரைக்கப்பட்ட உரம் + சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் + பேசில்லஸ் சப்டிலிஸ் 3.330.613.61
75% பாிந்துரைக்கப்பட்ட உரம் + ட்ரைகோடர்மா ஹர்சியானம் + பேசில்லஸ் சப்டிலிஸ் 3.260.583.50
75% பாிந்துரைக்கப்பட்ட உரம் + ட்ரைகோடர்மா ஹர்சியானம் + பேசில்லஸ் சப்டிலிஸ் 3.060.553.43
தீப்ரஞ்சன் சர்கார், சோனம் சிங், அர்தித் சங்கர் மற்றும் அமித் வாரக்ஷித்

Deepranjan Sarkar, Sonam Singh, Ardith Sankar and Amitava Rakshit
Institute of Agricultural Sciences, Banaras HinduUniversity,
Varanasi-221005, Uttar Pradesh, India
E-mail: deep.gogreen@gmail.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...