நுண்ணுயிர்கள் – ஆதார மறுசுழற்சியை வழிநடத்துதல்


சாத்தியமான உயிரியல் தேர்வுகள், பண்ணையிலேயே ஆதார மறுசுழற்சி செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மையை ஊக்கப்படுத்தி, பயிர்களுக்கு சீதோஷன மாற்றங்களால் ஏற்படும் சவால்களை குறைத்தல், அதிகமாக இரசாயனம் பயன்படுத்துவது குறைதல் மற்றும் கனிம உலோக மாசுபொருட்களினால் மண்ணில் கலப்படம் ஆகியவை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது.


இயற்கையை சுரண்டப்படும் தற்போதைய வேளாண்மை இன்று மண்ணின் அதிகளவு உற்பத்தித்திறனை பெறுவதற்கு, முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்ய இயலாத இரசாயன பண்ணை இடுபொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பாிந்துரைப்பதன் அடிப்படையிலே செயல்படுகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள், புவியியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகளை மையமாக வைத்தே கருதப்படுகிறது. பொியளவில் மிகவும் முக்கியமான, அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய தற்போதைய வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணக்கூடிய சக்திவாய்ந்த உயிரியல் கூறுகள் தவிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக, எந்த வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பிலும் பயிரின் உற்பத்தித்திறனை உறுதி செய்வது, வெளி சுற்றுச்சூழல் காரணிகளின் உதவியோடு,வேதியியல் மற்றும் பூமிக்கு கீழும், மேலும் உள்ள உயிரியல் மண் அமைப்பை சமன் செய்வது குறித்து, நாம் வாதாடுவதற்கான தேவை இருக்கிறது.

அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களால் ஏற்பட்ட பாதகமான நிகழ்வுகள் விவசாயிகளை மாற்று தேர்வுகள் மூலம் மண்ணை உயிரோட்டமாகவும், பொருப்புள்ளதாகவும் மேம்படுத்துவதற்கு, ஆராயும் நிலைக்கு தள்ளப்பட்டு, சமமான வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பை இயல்பு நிலைக்கு திரும்புவது கடினமாக இருக்கிறது. நுண்ணுயிர்களுடன் கடக்கும் வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள், சாகுபடிப் பகுதியில் உயிர் பல்வகைமை புத்துயிர் பெற்ற அதன் முக்கிய மையமாக இருப்பதால் உற்பத்தி பண்ணைகளின் நிலைத்தத்தன்மை வலுவடைந்துள்ளது.

நுண்ணுயிர்கள் மற்றும் அதன் செயல்பாடுகளின் பயன்கள்
இயல்பு, இயல்பு குறைந்த மற்றும் அதிக வாழ்விடம் கொண்ட பெரும்பாலான உயிர்கள் வாழும்/ இருக்கும் இடத்தின் அங்கமாக, நுண்ணுயிர்கள் பாிணாமம் பெற்று, உள்ளிருக்கும் மறுசுழற்சி, மறுவாழ்வளிக்கும், மேம்படுத்தும் மற்றும் தங்களை தாங்களே குணப்படுத்தும் தன்மைகள் உருவாக்குகிறது. இவ்வாறு செய்வதனால், மண் மற்றும் பயிர் ஆரோக்கியத்திற்கு மறுவாழ்வு, சாியான சூழலில் பயிர் உற்பத்தி அதிகாிப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது. குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் அதிக உயிர்ச்சூழல் வலிமையுடன், நுண்ணுயிர்கள் பெருகி (உயிர் உரம், உயிர்க் கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள்) மண் உயிர்ச்சூழல் அமைப்பு, வேர்ப்பகுதியின் உயிரியல் மற்றும் செடியின் செயல்பாடு மேம்படுத்துவதால், இயல்பு அல்லது அச்சுறுத்தும் வளர்ச்சி சூழ்நிலையிலும் பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் நிரூபிக்கக்கூடிய தாக்கம் அடைந்துள்ளது. ஆதலால் பல்வகை நுண்ணுயிர்கள் எண்ணிக்கையிலிருந்து வளரும் நுண்ணுயிர் ஆதாரங்கள் பன்முகத்தன்மையை கொண்டு தொடர்ந்து வாழ்வதால் விவசாயிகள் மற்றும் வேளாண்மைக்கு உதவுகிறது.

நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு தழைச்சத்து, கரைந்து மற்றும் நகர உதவும் மணிச்சத்து, பாஸ்பரஸ் துத்தநாகம் மற்றும் இரும்பு, கனிமப்பொருள்களை ஈர்க்கும், பயிர் ஹார்மோன்கள் உற்பத்தி, சுற்றுச்சூழலில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடுவதை தடுத்தல், சத்துக்கள் வெளியிடுவது பயிர்க்கழிவுகள் மக்க வைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்தல் மற்றும் மண்ணில் மாசுப்பொருட்களை முக்கியமான வகையில், அமைதியாக மற்றும் தொடர்ந்து வளமாக்குதல். நுண்ணுயிர்களின் பயன்கள் பயிரின் வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதால் அல்லது அழுத்தம், உள்ளார்ந்த எதிர்ப்புசக்தியை தூண்டுதல், வேர்பகுதியில் இரசாயன உயிரியல் மாற்றங்கள் ஏற்படுத்துதல் (மண்ணுடன் மிக நெருக்கமாக வாழும் வேர்ப் பகுதி) ஆகியவை, எதிர்ப்புத்திறன் மற்றும் சகிப்புத்தன்மைக்கு எதிராக உருவாக்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ள நுண்ணுயிர்களுடன், அதன் வேளாண் உயிர்ச்சூழல் இணைப்புகள் மற்றும் விவசாய சமூகத்தின் மத்தியில் ஏற்படும் பயன்கள், நுண்ணுயிர்களின் செயல்பாடுகள், பயிர்களின் எதிர்வினை மற்றும் மண் ஆரோக்கியம் குறித்து அவர்களின் புரிதல் அதிகாிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், வெளியிடு பொருட்கள் அடிப்படை சாகுபடி அமைப்பிற்கு பதிலாக நுண்ணுயிர்கள் அடிப்படை தொழில்நுட்பங்களை தங்களுடைய சொந்த பண்ணையில், கூடுதல் மாற்றாக செயல்படுத்துவதற்கு ஈர்க்க வேண்டும். பயிர்களுடன் நுண்ணுயிர்கள் கலந்து பல்வேறு மண், சீதோஷண நிலை மற்றும் உயிர் இயற்பியல் காரணிகளின் கீழ் பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி மண் செயல்பாடு மற்றும் பயிர்த்திறனை பாதிக்கிறது. நுண்ணுயிர்கள், பயிரோடு இணைந்திருக்கும் செயல்பாடுகளின் புரிதல், அழுத்தம் கொண்ட சூழ்நிலையில் மண்ணில் இதன் சாதகமான செயல்பாடுகள் குறித்து விவசாயிகள் கற்றல் மற்றும் விழிப்புணர்வு அதிகாிக்கிறது. இதனால் இதுவரை நடக்காத வகையில் பூமியில் நுண்ணுயிர்கள் தொழில்நுட்பம் பயன்படுத்துவது விரிவடைவதற்கு வழிவகுக்கும். விவசாயிகள் செயல்பாடுகளுக்குள் இருக்கும் செயல்முறை குறித்து விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் அவர்கள் இந்த செயல்முறையின் இறுதி முடிவான பயிர் மகசூல் குறித்து தொிந்துகொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர். இதனால்தான் அவர்களை சுற்றியுள்ள சாத்தியமான உயிரியல் தேர்வுகள் குறித்து பயிற்சிகள் அளிக்க வேண்டும். பயிர் மற்றும் மண்ணின் பயன்பாடுகள்,தரம் ரீதியாக, சாதகமான பிரச்சனைகள், வருமுன் காப்பது மற்றும் தொழில்நுட்ப சாதகத்தன்மை ஆகியவை எப்பொழுதும் மக்களுக்கு புத்துயிராக இருக்கும்.

1200 க்குமேல் உள்ள விவசாயிகளுக்கு மத்தியில் நுண்ணுயிர் கொண்ட தொழில்நுட்பங்களை நாங்கள் நிரூபித்துள்ளோம். விதைபூச்சு, நாற்றங்காலின் வேரில் பயன்படுத்துதல் மற்றும் மண்ணில் இடுதல் (பயிர் விதைப்பின் முன், பயிர் வயதின் மத்தியில் மற்றும் பூப்பருவத்திற்கு 10 நாட்களுக்குமுன்) ஆகிய முறைகளில் நுண்ணுயிர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி பயிற்சியளிக்கின்றனர்.

முடிவுகள்
இது ஒருங்கிணைந்த வெளிப்பாட்டு முறையில் அரிசி, கோதுமை மற்றும் காய்கறிகள் யாவும் பயிர் மகசூலில் தரம் மற்றும் அளவில் மாற்றங்கள் காணப்பட்டது. மேலும் தரமும் உற்பத்தியாகிறது. பல விவசாயிகள் தற்போது தொடர்ந்து உயிர்-தழை, மணி, சாம்பல் மற்றும் துத்தநாக சத்துக்கள் கொண்ட நுண்ணுயிர் கலவையை உற்பத்தி செய்து அரிசி, கோதுமை மற்றும் காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா கலவையை பயன்படுத்துவதால் அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் உள்ள பண்ணையில் 30 விழுக்காடு உற்பத்தியாவதால், தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கான இரசாயன உரத்தின் அளவு குறைகிறது. அதேபோல், விதை, நாற்றங்கால் மற்றும் மண்ணின் மூலம் டிரைகோடர்மா மற்றும் சூடோமோனாஸ் போன்ற உயிர் பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவதால், கொண்டைக்கடலை மற்றும் பல்வேறு காய்கறிப் பயிர்களைத் தாக்கும் மண் சார் நோய்கள் பெருமளவில் நாற்றங்காலிலும், விவசாய பண்ணைகளிலும் குறைந்துள்ளது.

நுண்ணுயிர்கனை இடுவதன் மூலம் காய்கறிகளில் மண் சார் நோய்கள் குறைந்த நிலையில், ஆரோக்கிய நாற்றுகளின் கிட்டதட்ட 40 விழுக்காடு விரிவடைந்துள்ளது. கூடுதலாக பயிர் உற்பத்தி 7-10விழுக்காடு விரிவடைந்துள்ளது. ஒரு முறை உயிர் விளைபொருட்களை பயன்படுத்தியபின், எங்களிடம் இந்த விளைபொருட்களை தேடி வருகின்றனர் மற்றும் மண்ணில் நுண்ணுயிர்கள் அறிவியல் ரீதியாக எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பல விவசாயிகள் கலந்துரையாடுவது ஆச்சாியமான ஒன்று. இந்திய அரசின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியோடு ஊக்கப்படுத்தும் திட்டத்தில் புத்தகம், குறுஞ்செய்தி மற்றும் நுண்ணுயிர்கள் கலவை (திரவம் மற்றும் பவுடர் முறையில்) உள்ளடக்கிய தொழில்நுட்ப பெட்டிகள் வினியோகம் செய்து அதன்மூலம் அவர்களை செயல்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தியது. பின்னர் விவசாயிகள் தாங்களாகவே உயிர் விளைபொருட்களை அந்தப் பகுதியில் உள்ள மாநில வேளாண் துறை அல்லது தொழில்நுட்ப முகமைகளிடமிருந்து பெறத் துவங்கினர். விவசாயிகளின் கற்றல் ஆர்வம், பயிர்களில் நுண்ணுயிர்களின் பயனுள்ள தாக்கம், பன்முகத் தன்மை மற்றும் பல்வேறு பிரச்சனைகளின் ஒட்டுமொத்த புரிதலுக்கு வழி வகுத்தது . நிலைத்தத்தன்மை, சாதகமான செயல்பாடு, அணுகுமுறை பயன்பாடுகள், தொழில்நுட்ப நவீன பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை, மண் மற்றும் பயிர்களின் நன்மைக்கு, நுண்ணுயிர் அடிப்படை தொழில்நுட்பங்களை பண்ணையில் செயல்படுத்துவதற்காக செய்துகாட்டப்பட்டது. தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், கரும்பு மற்றும் காய்கறிகள் ஆகிய பயிர்களுக்கு இடப்படும் இரசாயன இடுபொருட்களுக்கு பதிலாக அதிகளவில் நுண்ணுயிர்கள் பயன்படுத்துவதில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

உயிர் மக்குஉரம்
முழுமையான பயிர் சாகுபடி முறைகளால் மண் கனிமபொருள், அதனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது மிகக் கடினமான ஒன்று. இந்த நிலை, கனிமபொருள் நமக்கு கிடைக்கும்வரை நீடிக்கும். நீண்ட காலம் கனிமப் பொருள் இல்லாத மண்வகையில் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. ஆகையால் நல்ல வேளாண் தொழில்நுட்பங்களுக்கு உகந்த இயற்கை பயன்களின் பண்புகள் அழிகின்றது. ஆதலால், தொடர்ந்து கனிமப் பொருள் இடுவதால் மண்ணின் செயல்பாடு நன்றாக வெளிப்படும். வெளியிடு தொழுஉரம் இடுவதால் அல்லது பசுந்தாள் உரங்களான கொழிஞ்சி மற்றும் சணப்பை சாகுபடி மண்ணில் கனிம வளம் சேரும். அதற்கு பிறகும், இரசாயன இடுபொருள் அடிப்படையிலான பயிர் சாகுபடி, கனிமப்பொருள் குறைந்த மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. நாடு முழுவதும், இரசாயன இடுபொருள் அடிப்படையிலான சாகுபடி எல்லாப் பயிர் பட்டங்களிலும் அதிகளவில் வேளாண் கழிவுகள் உற்பத்தியாகிறது. இந்தக் கழிவுகளின் பெரும்பகுதி வீணாக செல்கிறது. இந்த நுண்ணுயிர் செயல்முறை மூலம் மறுசுழற்சி செய்யும்போது அதிகளவில் இயற்கை கனிமப்பொருள் மண்ணில் சேர்கிறது. ஆகையால் பண்ணைக் கழிவுகள், நுண்ணுயிர்கள் கொண்ட உயிர்மாற்று தொழில்நுட்பங்கள் மூலம் வேகமாக மக்குஉரமாக மாற்றுகிறது. இதுமட்டுமில்லாமல் மக்குஉரத்தை நன்மை செய்யும் நுண்ணுயிர்களுடன், அதாவது தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும் நுண்ணுயிரி, மணிச்சத்தை கரைக்கும் நுண்ணுயிரி, சாம்பல் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை நகரவைக்கும் நுண்ணுயிரி, இரும்பு செலேட்டுகள் மற்றும் தாவர ஹார்மோன் உற்பத்தியாளர்கள் கொண்டு 15 முதல் 20 நாட்கள் வரை வயல்களில் மூடி வைத்து ஊட்டமேற்ற வேண்டும். தற்போது இந்த உயிரி மூலம் செறிவூட்டப்பட்ட மக்குஉரத்தில், சாதகமான பண்புகளோடு தனிப்பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டது.

இந்த உயிரிமாற்றுமுறை, கிழக்கு உத்திரபிரதேசத்தில் உள்ள மாவ், அசம்கார், காசிபூர் மற்றும் பாலியா ஆகிய நான்கு மாவட்டங்களில், 30 கிராமத்தை சேர்ந்த 3500 விவசாயிகளுக்கு மத்தியில் செய்துகாட்டப்பட்டது. தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தும் நுண்ணுயிரி மற்றும் துத்தநாகம் நிறைந்த நுண்ணுயிரிகள் கொண்ட உயிர் மக்குஉரம், நெல் பயிரில் பயன்படுத்தப்படுகிறது.மேலும் இரும்புச்சத்து நிறைந்த நுண்ணுயிரிகள் கொண்ட மக்குஉரம் காய்கறிகள், மலர்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த உதவியாக இருக்கிறது. மக்குஉரத்தில் ட்ரைகோடர்மா (பூஞ்சாணம்) சூடோமோனாஸ் மற்றும் பேசில்லஸ் (பாக்டீரியா) ஆகிய நோய் கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகளை சேர்த்து மீண்டும் ஊட்டமேற்றப்பட்டது. விதை மற்றும் மண் வாழ் நோய்கள் இல்லாத காய்கறி மற்றும் வன மரங்களின் நாற்றுகளில் தற்போது உயிர் மக்கு உர உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறது. மாற்றாக, விவசாயக் குழுக்கள் அல்லது சுய உதவி குழுக்கள் (SHGs) பின்பற்றினால், தனி பயனுக்காக மற்றும் நுண்ணுயிர் ஊட்டமேற்றபட்ட மக்குஉரத் தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்தால், விவசாயிகள் மத்தியில் தொழில் முனைவோருக்கானத் திறன் பெற்று கூடுதல் பொருளாதார பயன்கள் பெறும் நிலையை அடைகின்றனர்.

முடிவு
பண்ணை சார்ந்த நுண்ணுயிர் தலையீட்டு அணுகுமுறைகள், விவசாயிகள் நேரடியாக வேளாண் இரசாயனங்களை சார்ந்திருந்த நிலை குறைந்து, திறன் வாய்ந்த உயிர்ச்சூழல் பயன்களான, வெளியிடு பொருட்களின் செலவு குறைதல், அதிக நுண்ணுயிர்கள் கொண்ட செழிப்பான மண், பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி ஆகிய பயன்கள் பெறலாம். இது, பயன்கள் அளிக்கும் நுண்ணுயிர்கள் விவசாயிகளுக்கு வெற்றி அணுகுமுறையாகும், ஒரு முறை வயல்களில் அறிமுகப் படுத்தியபின் இயற்கை கனிமம், தாதுஉப்புக்கள்; மற்றும் சாதகமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை சார்ந்தே நுண்ணுயிர்கள் நீண்டநாட்கள் வாழும். ஆகையால், சாதகமான மண் சூழலில், நுண்ணுயிர்கள், அவற்றின் பன்மடங்கு மறுசுழற்சி திறன், மண் மற்றும் பயிர் ஆரோக்கியம் மற்றும் முழுமையான பண்ணை முறையில் வேளாண் உயிர்ச்சூழலை மேம்படுத்துவதற்கு சாதகமாக அமைந்திருப்பதை செய்துகாட்டப்பட்டது.

தனஞ்ஜெயன் பிசிங் மற்றும் ரேணு


Dhananjaya P Singh
Principal Scientist (Biotechnology)
E-mail: Dhananjaya.Singh@icar.gov.in;
psfarm@rediffmail.com

Renu
Principal Scientist (Agricultural Biotechnology)
ICAR-National Bureau of Agriculturally Important Microorganisms,
(Indian Council of Agricultural Research, Ministry of Agriculture, Government of India)
Mau, 275101 Uttar Pradesh, India
E-mail: Renu1@icar.gov.in; renuiari@rediffmail.com

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2019, வால்யூம் 21, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...