வேளாண் உயிர்ச்சூழல் முறையில் பயிற்சி காணொளிகள் – விவசாயிகள் கையில் கற்றல் சக்தியை அளிப்பது


வேளாண் அறிவுரை மையங்களை திடப்படுத்தி, வேளாண் உயிர்ச்சூழல் அறிவு மற்றும் தொழில்நுட்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளை , வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை சாகுபடிக்கு மாற்றுவது நெருக்கடியாக இருக்கிறது. டிஜிட்டல் கற்றல் கருவிகள், வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள், விவசாயிகள் நடத்தும் பாிசோதனைகளுக்கும், உள்ளூர் கண்டுபிடிப்புகளும் ஊக்கப்படுத்துதல் மற்றும் வேளாண் உயிர்ச்சூழலை பரப்புதல் ஆகியவை விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பதற்கான செலவு குறைந்த வழியாகும்.


உயிர்ச்சூழல் சாகுபடி அறிவு தீவிரமான, சிக்கல் நிறைந்த, பகிர்வதற்கு கடினமாகும். சிறு மற்றும் குறு விவசாயிகள், குறிப்பாக கிராம பெண்கள் மற்றும் இளைஞர்கள் சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு தாய்மொழியில் உகந்த வேளாண் தகவல் மற்றும் அறிவு கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்த ஆதாரங்கள் நம்பிக்கையற்றதாக இருக்கிறது. உள்ளூர் உணவு அமைப்பு குறித்து விவசாயிகளின் அறிவு மற்றும் திறன்களை திடப்படுத்துவது சிக்கலாக உள்ளது.

எனினும், விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகளின் விகிதாச்சாரம் (உதாரணமாக இந்தியாவில் 1:1162 ) குறைவாக இருப்பதால், குறைந்த சதவிகித விவசாயிகள் மட்டுமே, விரிவாக்கத் சேவையிலிருந்து நேரடி பயன்கள் பெறுகின்றனர். பத்து வருடங்களுக்குமுன், ஆராய்ச்சியாளர்கள் விரிவாக்க மையங்களுக்கு அளிக்கப்பட்ட தகவல் என்னவென்றால் வேளாண்மை வளர்ச்சியில் பசுமைபுரட்சி மாதிரிக்கு உதவிபுரிதல் ஏற்புடையதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனால் வேளாண் உயிர்ச்சூழல் மாற்றங்களுக்கு அறிவு மற்றும் திறன்களுக்கு உதவும் வகையில் எந்த ஒரு சாியான மனநிலையும் இல்லை. அதேசமயத்தில், சில வளர்ச்சித் திட்டங்கள் வேளாண் உயிர்ச்சூழல் குறித்து விவசாயப் பயிற்சிகள் இருந்தாலும் அவர்களின் அணுகல் குறைவாகவே உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வேளாண் உயிர்ச்சூழல் அறிவு மற்றும் செயல்பாடுகளை கிடைக்கச் செய்வதற்கு வேளாண் ஆலோசனை சேவை மையங்களை திடப்படுத்துவது மிகப்பொிய சவாலாக இருக்கிறது.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் வேகமாக அனைவருக்கும் கிடைப்பதால், தரமான டிஜிட்டல் கற்றல் கருவிகள் பயன்படுத்தி வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை சாகுபடிக்கு அதிக விவசாயிகளை மாற்றுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டும் என்று உணர்ந்தனர். வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகள், விவசாயிகள் நடத்தும் பாிசோதனைகள் மற்றும் உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவது, மற்றும் வேளாண் உயிர்ச்சுழல் பரப்பப்படுகிறது’’.

காணொளி மூலம் கற்பித்தலின் சக்தி:
அக்ஸஸ் அக்ரிகல்சர் (என்றால் – வேளாண்மையை அணுகுதல் என்று பொருள்), என்ற தொண்டு நிறுவனம், வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை சாகுபடிக்கு சாதகமாக இருக்கிறது. வேளாண் உயிர்ச்சூழல் அறிவை வளர்த்தல், நாடு முழுவதும் கற்பதையும் கலாச்சாரத்தையும் வளர்த்தல். மேலும் விவசாயிகளை பாிசோதனை செய்யத் தூண்டுதல், அவர்களது நடவடிக்கையைத் தாண்டி, விரிவாக்க பணியாளர்கள் மூலம் விவசாயி–விவசாயிடம் விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.
அக்ஸஸ் அக்ரிகல்சர், உள்ளூர் மொழிகளில் உள்ள தெற்கு தெற்கு பாிமாற்றம் குறித்து விவசாயி –விவசாயிடம் பயிற்சி காணொளிகளை உருவாக்க முடிந்தது. அக்ஸஸ் அக்ரிகல்சர், தனது தலைமையில் 225 காணொளிகளை 90- க்கும் அதிகமான மொழியில் பதிவேற்றி அதற்கு வெளிப்படையான மேடையை உருவாக்கி அணுகியது. விவசாயிகள் மற்றவர்களிடமிருந்து கற்பதற்கு விரும்புவர். மேலும் புது கருத்துக்களை செய்து பார்க்கும் இயல்பை அடிப்படை கோட்பாடாக வைத்துகொண்டு, அக்ஸஸ் அக்ரிகல்சர், சாதாரண விவசாயிகள் சந்தித்த சவால்களையும், அதற்கு மேற்கொண்ட தீர்வுகளையும் காணொளி மூலம் காண்பித்தனர். பெரும்பாலும் சமூக ஒற்றுமை மற்றும் நிறுவன தொழில்நுட்பங்களின் தலையீடுகளை உட்படுத்தி காண்பிக்கப்பட்டது. சுலபமான மொழியில் கிராம விவசாயிகள் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் கவனம் செலுத்தி காணொளி தயாரித்தனர்.

விஞ்ஞான மற்றும் விவசாய அறிவை இணைத்து, பொருத்தமான வரிசையில் பின்பற்றி முன்னோடி விவசாயிகளை காண்பித்து செய்முறை விளக்கம் மூலம் தகவல் அளித்து, நிலைத்த வேளாண்மை கண்டுபிடிப்புகளில் அறிவுரை கூறவும் செய்வர். இந்தக் காணொளி என்ன செய்வது என்று கூறுவது மட்டுமில்லாமல் இதற்கு பின் அடங்கியுள்ள அறிவியல் மற்றும் பாகங்களின் செயல்முறைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்தும், ஏன் இந்த முறையில் செய்யப்படுகிறது என்ற விளக்கத்துடன் இருப்பதால், விவசாயிகள் அவர்களுடைய சொந்த நிலைக்கு ஏற்றவாரு கற்றுகொண்டவற்றை செயல்படுத்துவர்.
உள்ளூர் தேவைகளுக்கு அடிப்படையில் உள்ளூர் பங்குதாரர்கள் கூரும் பல்வேறு தலைப்புகளை காணொளிகளில் எடுக்கப்படுகிறது. நிலைத்த வேளாண் தொழில்நுட்பங்களைத் தாண்டி, அறுவடைக்குபின் எடுக்கும் தொழில்நுட்பங்கள், சந்தைபடுத்துதல், பதப்படுத்துதல் ஆகிய தலைப்புகளிலும் காணொளி எடுத்து அதன்மூலம்,பண்ணை குடும்பத்தினர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும் மனித ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய தலைப்புகளும் உட்படுத்தி, பாரம்பாிய கால்நடை ஆரோக்கிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வழிகளை, ஏழை விவசாயிகளுக்கு கிடைக்கும் வண்ணமும், சீதோஷன மாற்றங்கள் ஏற்றவாறு உட்படுத்தியும் இருக்கும்.
உறுதிபடுத்தப்பட்ட பாரம்பாிய கால்நடை ஆரோக்கிய அறிவு மற்றும் தொழில்நுட்பங்கள் காணொளிகள் மூலம் பகிரப்படுகிறது.

அக்ஸஸ் அக்ரிகல்சர், புனே, மஹாராஷ்டிரா, இந்தியா, பெண் கால்நடை மருத்துவர்கள் நடத்தும் அந்தரா என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து, கால்நடை ஆரோக்கிய பாதுகாப்பிற்கு மூலிகை மருத்துவம் குறித்து பல்வேறு தொடர் விவசாய பயிற்சி காணொளிகள் உருவாக்கினர். அக்ஸஸ் அக்ரிகல்சர் நிறுவனத்தின் பயிற்சிபெற்ற பங்குதாரர்களின் ஒரு காணொளி நிறுவனம் மூலம், உள்ளூரிலேயே காணொளிகள் தயாரிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிரிகளை எதிர்க்கும் பாக்டீரியா கால்நடை ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தும் மருந்துகளுக்கு எதிராக பொிதளவு தாக்கத்தை மக்களின் ஆரோக்கித்திற்கு ஏற்படுகிறது. எதிரிநுண்ணுயிரை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு கற்பிப்பதின் முக்கிய வழி காணொளியாகும் என்பது டாக்டர். நித்தியாகாட்கே, அந்திராவின் நிறுவனர் மற்றும் இயக்குநர் அவர்களின் பார்வையாகும்.

டாக்டர். காட்கே நேரடியாக ஆயிரக்கணக்கான கால்நடை ஆரோக்கிய பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மிக குறைந்த அளவே அவர்களிடம் சென்று சேர்கிறது. அதனால் அக்ஸஸ் அக்ரிகல்சர்; நிறுவனத்தோடு இணைந்து மூலிகை மருந்துகள் மற்றும் இயற்கை கால்நடை ஆரோக்கிய பாதுகாப்பு குறித்து காணொளிகள் உருவாக்கப்பட்டது.

இந்த காணொளிகள் மாஹாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்கள் உள்ள கால்நடை சொந்தகாரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. விவசாயிகள் இந்தக் காணொளிகளை மறுமுறை பார்த்து மருந்துகளை தேவைபடும்போது தயாரிக்கின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் காணொளி தயாரிக்கும் செயல்முறையில் சிறந்த பங்கு வகிக்கின்றனர். இது பங்கேற்புடன் கூடிய அணுகுமுறையாகும். எங்களுடைய பயிற்சித் திட்டத்தில் காணொளிகளும் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது” என்று டாக்டர்.காட்கே கூறினார்.

மஹாராஷ்டிராவில் நாங்கள் கால்நடை உரிமையாளர்களை, நடமாடும் கால்நடை வளர்ப்பை செய்பவர் உட்பட சுமார் 20000 பேரை எங்கள் பங்கீட்டாளர்கள் மூலம் அடைந்துள்ளோம். அதே எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களிலும் கொண்டு சென்றோம். தற்போது இந்த காணொளிகளை மாஹாராஷ்டிராவில் கால்நடை வளர்ப்புத் துறையோடு பகிர்ந்திருக்கிறோம். இது அவர்களுக்கு இயற்கை கால்நடை வளர்ப்புத் திட்டத்தை சிறப்பாக துவங்குவதற்கு உதவியது என்று அவர் கூறினார்.

அக்ஸஸ் அக்ரிகல்சர் , இந்தியாவில் உள்ள தனது பங்கு நிறுவனங்களிடம் உள்ள அனுபவங்கள் மற்றும் ஆதாரங்கள் பயன்படுத்தி இயற்கை சாகுபடியை இந்தியா முழுவதும் பரப்புவதற்கு பலவழிகளை ஏற்படுத்தியது. இது பல்வேறு பங்கு நிறுவனங்களுடன் பணிசெய்து உகந்த இந்திய மொழியில் மொழிபெயர்த்து அதிக காணொளிகளை தயாரிக்க விரும்புகிறது . மேலும் விவசாயிகளுக்கும், சமுதாயத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் தரமான கற்றல் அனுபவங்களை பெற உதவி செய்கிறது. இதனால் ஆரோக்கிய நிலைத்த உணவு அமைப்பை உருவாக்குவதற்கு உதவி புரிகிறது.

இயற்கை சாகுபடி முறைக்கு மாற்றுவதில் இந்திய அரசு பொிதும் உதவிபுரிகிறது. உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை விளைபொருட்கள் சர்வதேச சந்தை நிலைக்கு கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். அக்ஸஸ் அக்ரிகல்சர் காணொளிகள் இதற்கு சிறப்பாக உதவிபுரிகிறது என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மன்றம், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவாக்க கல்வியாளர். பிரிவின் தலைவரான, டாக்டர். மகேஷ் சந்தர் கூறினார்.

விவசாயிகள் மற்றும் விரிவாக்க முகவர்கள் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்றிருந்தாலும் அது சாதாரண வேளாண் சாகுபடி குறித்தே இருக்கிறது. வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை சாகுபடி அணுகுமுறைகள் குறித்த அறிவு மற்றும் திறன்களை மாற்றுவது அவசியம். இதற்கு அக்ஸஸ் அக்ரிகல்சர் என்ற நிறுவனம் காணொளிகள் மூலம் அதன் மதிப்பை உறுதிப்படுத்துகிறது என்று அவர் விளக்கினார்.

பரப்புதல்:
அக்ஸஸ் அக்ரிகல்சாின் இறுதி மைல் பரப்பும் மாதிரியில் வளரும் இணைப்பு இளம் கிராம இளைஞர்களின் பெரும் ஆர்வத்தை ஈடுபடுத்தினர். ‘கிராம அணுகலுக்கான தொழில்முனைவோர்” என்று இவர்களை அழைப்பர். இந்த இளைஞர்களுக்கு டிஜிட்டல் திறன்கள் மற்றும் கருவிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு விவசாய பயிற்சி காணொளிகளை திரையிடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. இதனை கிராம சமூகங்களுக்கு கிடைக்கசெய்து விவசாயிகளின் வாழ்க்கையில் குறிப்பாக பெண் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கையில் சாதக மாற்றங்களை கொண்டுவரும்.

“கிராம அணுகலுக்கான தொழில்முனைவோர்”, சூரிய சக்திகொண்ட மென் புரஜக்டர் (அனைத்து அக்ஸஸ் அக்ரிகல்சர் விவசாய பயிற்சி காணொளிகள்) கொண்டு தொழில்நுட்பம், சக்தி மற்றும் இணையதளம் குறைவாக இருக்கும் தொலைதூர கிராமபகுதிகளாக இருந்தாலும் அங்கு பயன்படுத்த முடியும். இவை தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமில்லாமல் உள்ளூர் விவசாயிகளுக்கும் அளிக்கப்படுகிறது. உலகம் சுற்றியுள்ள வேளாண் உயிர்ச்சூழல் குறித்து புதிய கருத்துக்களை சொத்தாக கொண்டு அவர்களின் வாழ்க்கையை உயர்த்துகிறது.

உலகளாவிய தெற்கு பகுதியில் ஏற்பட்ட தாக்கம்

உலகளாவிய தெற்கு பகுதியில் உள்ள ஊடகம், ஆராய்ச்சியாளர், விரிவாக்க பணியாளர், கல்வி மற்றும் கடைநிலை நிறுவனங்கள் உட்பட 5000 பேர் அக்ஸஸ் அக்ரிகல்சர் தயாரித்த காணொளிகளை பயன்படுத்தியுள்ளனர் என்று 2015, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடத்திய ஆய்வில் தொிகிறது.
அக்ஸஸ் அக்ரிகல்சாின் காணொளி கற்றல் அணுகுமுறை, துவங்கிய ஆண்டான 2012 ஆம் ஆண்டிலிருந்து 100 நாடுகளில் உள்ள 90 மில்லியன் சிறு விவசாயிகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. இதனால் வேளாண் உயிர்சூழல் கோட்பாடுகள் மற்றும் கிராம தொழில்முனைவோர் ஆகியவை உயர்ந்த கிராம வாழ்வாதாரம் மற்றும் நிலைத்த உணவு அமைப்புகள் குறித்து கற்கும் வாய்ப்பு உருவாகிறது.
இணையதள ஆய்வு 2021 – லிருந்து பல்வேறு வல்லுநர்கள் காண்பித்த உலகளாவிய தாக்கம் மிக முக்கியமானது. கிட்டதட்ட 50 சதவிகித விவசாயிகள் குறிப்பிட்ட காணொளிகளால் அவர்களது மகசூல் அதிகாித்துள்ளது. உயர்ந்த பூச்சி மேலாண்மை, சிறந்த மண் ஆரோக்கியம், மற்றும் நல்ல உற்பத்தி ஆகியவை 40 சதவிகித விவசாயிகள் கண்டனர். 30 சதவிகிதத்திற்கு அதிகமான நபர்கள் உள்ளூர் மொழியில் அதிக பாராட்டு, இளைஞர்களின் ஈடுபாடு, நல்ல உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள், அதிக இலாபம், பெண்ணின் தலைமை பொறுப்பு, மற்றும் உயர்ந்த குழு உருவாக்குதல்.

அக்ஸஸ் அக்ரிகல்சாின், செலவு குறைந்த மற்றும் நிலைத்ததன்மை மாதிரி மற்றும் அதன் பரவலின் தாக்கம் ஆகிய இரண்டு முக்கிய காரணங்களே, இந்த நிறுவனத்துக்கு 2021 ஆம் ஆண்டு சுவிஸ் அரசு மற்றும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் நிலைத்த உணவு அமைப்புகளின் சர்வதேச புதிய கண்டுபிடிப்பு விருது வழங்கி கௌரவித்தது. மேலும் சமீபத்தில் 2022 ஆம் ஆண்டு சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியதற்கான ஆரல் உலகளாவிய உணவு கண்டுபிடிப்பிற்கான விருது அளித்து கவுரவித்தது.

சாவித்ரி மொஹபத்ரா


Savitri Mohapatra
Mass Media Officer
Access Agriculture
No.3 Kumaran Street, Puducherry 605001, India.
E-mail: savitri@accessagriculture.org

மூலம்; லீசா இந்தியா, ஜூன் 2022, வால்யூம் 24, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...