வேளாண் – உயிர்ச்சூழல் அணுகுமுறையை மீட்டெடுக்கும் வழிமுறைகள்


எந்த ஒரு கல்வி அமைப்பிலும் மையமாக திகழ்வது அறிவேயாகும். இந்தத் தலைப்பில், சிறுதானியங்களின் பாரம்பாிய அறிவு, விவசாயிகளிடமிருந்து எப்படி வெளிக் கொண்டு வரப்பட்டது, மீட்டெடுத்து ஆவணப்படுத்தப்பட்டது குறித்து விளக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை மையமாக வைத்து ஆராய்ச்சி செய்முறையை,பங்கேற்புடன் கூடிய இரகப் பாிசோதனைகள் எப்படி செயல்படுத்தினர். மேலும் சமூக அடிப்படையிலான அறிவு மையம் உருவாக்கி, அதன் மூலம் பாிசோதனை, தகவல் கிடைப்பது, மேலும் அவற்றை பரப்புவது ஆகிய பணிகளை செய்து வருகிறது.


வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பு, தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்துவதில்லை ஆனால் கோட்பாடுகளை ஊக்குப்படுத்துகிறது. இது இடுபொருள்களுக்கான வேளாண்மை இல்லை, ஆனால் செய்முறைகளுக்கான தொழில்நுட்பம் சார்ந்த தலைமுறையோடு கூடிய செய்முறைகள். பங்கேற்பாளரிடம் அல்லது விவசாயியை முன்வைத்து ஆராய்ச்சி செயல்முறையிலிருந்து முடிவுகள் வர வேண்டும். இதில் விவசாயிகள் ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து ஆராய்ச்சி குறித்த கேள்விகள் மற்றும் வடிவமைப்புகள், களப் பாிசோதனையை ஆய்வு செய்வதற்கு தகவல்கள் அளிக்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், தனது சுற்றுச்சூழலில் உள்ள நெருக்கமான அறிவை பெற்றிருக்கின்றனர். குறிப்பாக உள்ளூர் புவியியல் மற்றும் கலாச்சார வட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கிறது.

ஓடிசாவில் உள்ள தெற்கு மாவட்டத்தில் மவ்கங்கிரி என்ற இடம் உள்ளது. மாவட்டத்தில் போண்டா, கோயாஸ், போராஜாஸ் மற்றும் திதாயிஸ் ஆகிய இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். பாரம்பாிய சிறுதானிய இரகங்கள், மல்கங்கிரியில் பழங்குடியின சமூகத்தினர் பாரம்பாியாக வளர்ந்து வந்தனர். அரசு ஊக்கப்படுத்தும் அதிக மகசூல் அளிக்கும் இரகங்களை கொண்டு சாகுபடி செய்து சிறுதானியத்திலிருந்து மாறினார். பல்வேறு பயிர்களின் மதிப்புமிக்க மரபியல் ஆதாரங்களை மீட்டெடுப்பதற்கு, அரசு துறை அல்லது இதர முகமைகள் சிறியளவில் ஆராய்ச்சி மற்றும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். சீதோஷன மாற்றம், உயர் மகசூல் இரகங்கள் நிலைத்து வாழ்வது மிக மோசமாக பாதிக்கப்படுவதால், மகசூல் குறைத்து, பழங்குடியின சமூகங்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்தத் தலைப்பு, பாரம்பாிய பயிர்கள் வேளாண்மை உயிர்ச்சூழல் அணுகுமுறையை பயன்படுத்தி மீட்டெடுக்கவும், அவர்களின் வாழ்வதாரத்திற்கு உதவிபுரியவும், ஒடிசா சிறுதானிய குழு அமைப்பு பின்பற்றி செயல்திட்டம் குறித்து விளக்குகிறது. நீர்பிடிப்பு உதவி சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் இணைப்புகளின் அமைப்பு ஒடிசா சிறுதானிய குழு என்ற சிறு திட்டத்தை செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தை, புவனேஷ்வரில் உள்ள நபக்குருஷ்னா சொத்ரி வளர்ச்சி மையம் மற்றும் ஒடிசா அரசின் கீழ் உள்ள வேளாண் மற்றும் உணவு உற்பத்தியின் இயக்குநாின் உதவியுடன் செயல்படுத்தியது. வாசன் நிறுவனம் ஒடிசா சிறுதானியக் குழு செயல்பாடுகள், சிடி வட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகம் மேம்படுத்தும் நிறுவனம் மூலம் செயல்படுத்துகிறது. இந்த அமைப்பின் ஒட்டுமொத்த முயற்சியும் மாநில அளவில் உற்பத்தி முறைகள் (சிறுதானிய ஒற்றை சாகுபடி, நேர் வரிசை நாற்று நடவு) செயல்படுத்துவதன் மூலம் திட்ட கிராமங்களில் உயர்த்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

இதில் பின்பற்றிய முக்கிய செயல்பாடுகள்
அ) பாரம்பாிய பயிர்களை வெளி கொணர்ந்து, ஆவணப்படுத்தி வயலிலேயே பாதுகாத்தல்.
ஆ) பரவலாக தொிவிக்கும் நோக்கில், மல்கங்காி, சித்ரகொண்டா என்ற இடத்தில் சமூக அடிப்படையில் வேளாண் உயிர்ச்சூழல் மையத்தை உருவாக்கியது.
இ) விவசாயிகளின் பங்கேற்புடன், இரகத்தை பாிசோதனை செய்வதற்கு, எந்த இரகத்தில் அதிக நன்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்தல்
ஈ) வேளாண் உயிர் பல்வகைமையின் பதிவை உருவாக்குதல்
பாரம்பாிய பயிர்கள் வெளி கொணர்ந்து, ஆவணம் செய்து வயலிலேயே பாதுகாத்தல்
ஒடிசா சிறுதானியக் குழு, மாவட்டத்தில் இன்னமும் சில இடங்களில் சாகுபடி செய்து வரும் நிலத்தின் அரிசி, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் இனங்கள் வெளிகொணர்ந்தது. இந்த இரகங்கள் ஒடிசா சிறுதானியக் குழுவின் கீழ் செயல்படும் சமூக மேலாண்மை விதை அமைப்புத் திட்டத்தோடு வட்ட அளவில் உருவாக்கிய நில மரபணு வங்கியிலும், குளிரூட்டபட்ட அமைப்பில், புவனேஷ்வர், மாநில விதை பாிசோதனை மையத்திலும் சேமிக்கப்படுகிறது. தற்போது, இந்த மாநில விதை பாிசோதனை மையத்தில், 97 பாரம்பாிய சிறுதானிய இரகங்கள் சேமிக்கப்படுகிறது. நில மரபணு வங்கியில், நில இனங்கள் ஒவ்வொரு வருடமும் விவசாய நிலத்தில் வளர்க்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் சிறந்த இரகங்களை தேர்வு செய்து, அதை பெருக்கம் செய்கிறார்கள். எந்த இயற்கை சீற்றங்களினாலும், நில இனங்கள் தொலைந்துபோனால், மாநில விதை பாிசோதனை மையத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நில இனங்களிலிருந்து விவசாயிகள் விதைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரையறுக்கப்பட்ட படிவத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து முதன்மை பாதுகாவலர்களிடமிருந்து பாரம்பாிய சிறுதானிய இரகங்கள் சேகாிக்கப்படுகிறது. வேளாண் உயிர்ச்சூழல் மையத்தில் பாதுகாப்பு செயல்பாடுகள் விவசாயிகளை ஈடுபாட்டுடன் நடத்தப்படுகிறது. பயிர் வாழ்நாளின் இரண்டு வேறுபட்ட நிலைகளான, பின் தாவர வளர்ச்சி நிலை மற்றும் விதை முற்றும் நிலையில் பாதுகாப்பு நிலத்தில் விதைபொருட்கள் சேகாிக்கப்படுகிறது. விதை பாதுகாவலர்கள், சூழல் சார்ந்த, பல்வகை பயன்கள் மற்றும் கலாச்சார அறிவின் அடிப்படையில் குறிப்பிட்ட இரகங்களின் பண்புகளை அங்கீகாிப்பது முக்கியம். உள்ளூர் சமூகங்களின் விருப்பத்திற்கேற்ப கள அளவில் பாரம்பாிய அறிவை கொண்டு வேளாண் ஞானத்தை விரிவுபடுத்தும் இடமாக இருக்கிறது.

வேளாண் உயிர்ச்சூழல் மையம், சித்ரகொண்டா, மல்கங்காி:
ஓடிசா மாநில அரசு, மல்கங்கிரியில் சமூகம் நடத்தும் வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் வேளாண் உயிர் பல்வகைமை சிறப்பு மையம் உருவாக்கியது. உள்ளூர் உயிர் பல்வகைமையை பாதுகாப்பது மற்றும் புதுப்பிப்பது குறித்து பங்கேற்புடன் கூடிய ஆராய்ச்சியில் இந்த மையம் ஈடுபட்டுவருகிறது. இந்த ஆராய்ச்சி, சமூகங்களின் துணையோடு குறிப்பாக பெண்கள் சுய உதவிக் குழவின் மூலம், நில இரகங்களின் மரபணுத் துாய்மையை மேம்படுத்தி நிலத்திலேயே பாதுகாக்கப்படுகிறது. உள்ளூர் இரகங்களை விவசாயிகளின் தேவைக்கேற்ப விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விதைகள் பெண்கள் சுய உதவிக்குழு / சுய உதவிக் குழுவின் கூட்டமைப்பு /விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. மேலும், உயிர் பல்வகைமை மேலாண்மை குழுவின் உதவியுடன் பல்வகைமை பதிவுகள் பராமாிப்பதை முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஒடிசாவிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறுதானிய நிலஇனங்களை, வேளாண்-உயிர்ச்சூழல் மையத்தில் வளர்க்கப்படுகிறது. ஐ.சி.ஏஆர்-ஐ.ஐ.எம்.ஆர் தனித்தன்மை, சீரானதன்மை மற்றும் நிலைத்தத்தன்மை மற்றும் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம் ஆகிய அமைப்பின் உருவாக்கிய பாிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பண்புகளை ஆவணப்படுத்தப்படுகிறது. 60 விவசாயிகள் மத்தியில் 12 கேழ்வரகு நில இனங்களை ஊக்கப்படுத்தப்பட்டது. தினை, குதிரைவாலி, குலசாமை மற்றும் டெஃப் தானியத்தின் இரகங்கள் பாதுகாக்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களிலிருந்து வல்லுநர்கள் இந்த நிலங்களுக்கு பார்வையாளர்களாக வந்து விதை பொருட்களை வாங்குகின்றனர். பொருட்கள் மாற்றும் ஒப்புதல் படிவத்தை பயன்படுத்தி பல்வேறு பங்குதாரர்களுக்கு விதை பொருட்கள் வழங்கப்படுகிறது. முதன்மை ஆராய்ச்சி நிறுவனங்கள், ஒடிசாவின் தலைமை செயலர்,பொது சமூகங்களிலிருந்து வளர்ச்சி பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட சுமார் 68 பேர் 2021 -22 ஆம் ஆண்டில் இந்த மையத்திற்கு பார்வையிட வந்தனர்.

வேளாண்-உயிர்பல்வகைமை பதிவேடுகள் தயாரிப்பு
வாசன் நிறுவனம், வேளாண் துறை மற்றும் ஒடிசா உயிர்பல்வகைமை மன்றத்தோடு சேர்ந்து, மல்கங்கிரி மாவட்டத்தில் ஐந்து கூட்டு கிராமங்களில், பல்வேறு பாரம்பாிய பயிர்களின் பாரம்பாிய அறிவை ஆவணம் செய்யத் துவக்கியது. இந்தப் பகுதியில் போன்டா, திதியா, கோயா மற்றும் கோன்டா ஆகிய சமூகங்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். தேசிய உயிர்ச்சூழல் அதிகார அமைப்பின் பாிந்துரைப்படி ஆவணப் படிவம் பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும், ஆவணத்தை வலுவாக்குவதற்கு உயிர்ச்சூழல் மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது. கூட்டு கிராமங்களிலிருந்து முக்கிய தகவல் அளிப்பவர்கள் மற்றும் அறிவாற்றல் மிக்க நபர்களை வைத்து உயிர் பல்வகைமை மேலாண் குழுவின் உதவியுடன் ஆவணம் செய்வதற்கு ஏற்பாடு செய்கின்றது. மல்கங்கிரி மாவட்டத்தில் ஐந்து கூட்டு கிராமங்களிலிருந்து வேளாண் உயிர் பல்வகைமை பதிவேடுகளை ஒருங்கிணைத்து பஞ்சாயத்து அளவிலான பதிவுகள் உருவாக்கும் பணியில் உள்ளனர். ஐந்து உயிர் பல்வகைமை பதிவேடுகள் இந்தத் திட்டத்தின் இறுதியில் கிடைக்கும். பாரம்பாியப் பயிர்களின் மாதிரிப்பொருள் சேகாித்து மற்றும் உலர் தாவர தொகுப்பில் பாதுகாத்து வருகிறது.

பங்கேற்புடன் கூடிய கல்வி – விவசாயிகளின் பங்கேற்ப்பை மையமாக வைத்து இரகத்தேர்வு ஆராய்ச்சி:
சிறிய வேளாண் உயிர்ச்சூழல் பகுதிக்கு உகந்த பல்வேறு நிலஇனங்களிலிருந்து சிறந்த இரகங்களை தேர்ந்தெடுக்க பங்கேற்புடன் கூடிய இரகப் பாிசோதனை என்ற விரிவாக்க ஆராய்ச்சி கருவியை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கற்கும் முறையானது, இனப்பெருக்கவியல் வல்லுநர்,வேளாண் விஞ்ஞானி மற்றும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து கற்கும் முறையை சுலபமாகப்பட்டது. இதனால் விவசாயிகள் முக்கியத்துவமளிக்கும், நிலத்திலேயே நன்கு வளரக்கூடிய இரகங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

சிறிய வேளாண் உயிர்ச்சூழல் சீதோஷன நிலைக்கு ஏற்ப, விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து கேழ்வரகு இரகத்தை தேர்வு செய்வதற்கு பாிசோதனை நடத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் நடத்தப்படும் கூட்டு பாிசோதனையில் பல்வேறு பயிர் நிலைகளில் விவசாயிகளை ஈடுபடுத்துகின்றனர். பங்கேற்புடன் கூடிய இரகப் பாிசோதனையின் வடிவமைப்பை தயார் செய்து,பொியஅளவில் பெருக்கம் செய்து விதைகள் கிடைக்கக்கூடிய அளவிற்கு செலவு குறைந்த, விறைவாக தயாரிக்கும் முறையை இறுதி செய்யப்படுகிறது.
• ஒவ்வொரு வட்டத்திலும், விவசாயிகள், ஒடிசா சிறுதானிய மேலாண்மை அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வாசன் பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் சேர்ந்து திட்டக்குழு நடத்தினர். இதில் உள்ளூர் கேழ்வரகு இரகங்கள் தேர்வு, நிலம் மற்றும் விவசாயிகள் தேர்வு, பாசனத்தின் ஆதாரம், அமைப்புத் திட்டம் வடிவமைத்தல் போன்றவற்றைக் குறித்து திட்டமிடப்பட்டது.
• சில உள்ளூர் கேழ்வரகு இரகங்களை வட்டம் அல்லது மாவட்டங்களிலிருந்து சேகாித்து, அதனோடு வாசன் நிறுவனமும் பாிசோதனைக்கு உதவும் வகையில் சில உள்ளூர் இரகங்களும் சேகாித்தது.
• பங்கேற்புடன் கூடிய பாிசோதனையை, சீரற்ற நில வடிவமைப்பு முறையில் மூன்று மறுபதிப்புகள் வடிவமைத்து, அரசு பாிந்துரைக்கும் இரகங்கள் சோதனை நிலமாக பயன்படுத்தலாம்.
• ஒரு இரகம், ஒரு மறுபதிப்பிற்கான, சிறிய நிலப்பிரிவின் அளவு 25 சதுர மீட்டர்.
• ஒரு மறுபதிப்பிற்கும் மற்றொரு மறுபதிப்பிற்கும் இடைவெளி 100 செ.மீ ஆகும். ஒரு மறுபதிப்பில் உள்ள இரண்டு வெவ்வேறு இரகங்களின் இடைவெளி 60 செ.மீ ஆகும்.
• விவசாயிகள் மற்றும் அடிமட்ட பணியாளர்கள் , இந்த பாிசோதனை நிலங்களை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். இவர்கள் விதைக்கப்பட்ட தேதி, நடுதல், களையெடுத்தல் மற்றும் பூ பூத்தல் தேதிகளையும் ஆவணம் செய்கின்றனர்.
• விதை முற்றிய நிலையின்போது விவசாயிகள் வயல் தின விழாவை ஏற்பாடு செய்வர்.
விவசாயக் குழுக்கள் சமூக ஆதார நபர்களோடு கலந்துரையாடிய பின்னர் உகந்த இரகங்களை தேர்வு செய்து அவற்றிற்கு வண்ண அட்டையை இணைக்கின்றனர். சமூக ஆதார நபர் தரவரிசையின் அடிப்படையிலும், அவர்கள் தேர்வு செய்த இரகத்தின் பண்புகள் குறித்த தகவல்களை சேகாித்தனர். ஆராய்ச்சியாளர்கள் வளர்ச்சி பருவத்தில், வேளாண் வளர்ச்சிக் காரணிகளான பார்க்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய இரகங்களின் பண்புகளை பாிந்துரைக்கப்பட்ட படிவத்தில் ஒவ்வொரு மறுபதிப்பு நிலத்திற்கும் ஆவணம் செய்து, மதிப்பிடப்படுகிறது.

விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சேகாித்த தேர்வு செய்யப்பட்ட இரகங்களின் தரவுகளை ஒன்று சேர்த்து வட்டத்திற்கு உகந்த இரண்டு சிறந்த இரகங்களை முடிவுசெய்து, அடுத்த வருடத்திற்கு இந்த இரகங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தையும் இறுதியாக முடிவு செய்யப்படுகிறது. பட்டிமாண்டியா, லட்டுமாண்டியா, சர்கிமாண்டியா, படாமாண்டியா, கலாகந்தி மற்றும் மாமிமாண்டியா ஆகியவை சில தேர்ந்தெடுக்கப்பட்ட  இரகங்களாகும்.

கிராம சமூகங்களுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்து அதன் மூலம் மையத்தில் வளர்க்கப்பட்ட பல்வேறு பயிர்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயக் குழுக்கள் மையத்தை பார்வையிட்டு பயிர் மேலாண்மை, சத்துக்கள் மேலாண்மை, நோய் மற்றும் பூச்சிகள் மேலாண்மை குறித்த செய்முறை அறிவை பெறுகின்றனர். வகுப்பில் கற்பதற்கு பதிலாக செய்முறை மூலம் வேளாண்மைத் துறை மற்றும் வாசன் நிறுவனத்திலிருந்து வல்லுநர்களால் கற்பிக்கப்படுகிறது. தங்களது வயல்களில் குறிப்பிட்ட சிறுதானிய நில இனங்கள் பெருக்குவதற்குத் தேவையான மாதிரி விதைபொருட்களையும் வழங்கி விவசாயிகளுக்கு உதவிபுரிகின்றனர். விவசாயிகளை வலுபடுத்துவதற்கு வேளாண் வயல்வெளிப் பள்ளியை இன்னும் தொடங்கவில்லை. மேலும் தங்குவதற்கு தேவையான இடவசதி ஏற்படுத்தி 2022 -23 ஆம் ஆண்டு மையத்தை செயல்படுத்தவது அவசியம்.

முடிவு
ஓடிசா சிறுதானிய குழு, ஆதாரம் பாதுகாத்தல் மற்றும் வேளாண் உயிர்ச்சூழல் முன்னோக்குகள் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. வேளாண் உயிர்ச்சூழல் மையம் அறிவு, முக்கிய முகமைகளோடு இணைந்து பணிபுரிதல், ஊக்கப்படுத்தும் வகையில் பரவலாக்கம் செய்தல் குறித்து விவசாயிகளுக்கு உதவிப்புரிகிறது. வேளாண் உயிர்பல்வகைமை பதிவேடுகள், விவசாய சமூகங்களை வலுபெருதல். இந்த நில இனங்கள் பொதுவட்டத்திற்கு விவசாய இரகமாக உகந்த பதிவுமுறைகள் மூலமாக தாவர இரகங்கள் மற்றும் விவசாய உரிமை சட்டத்தின் கீழ் செய்யப்படும்.
மல்கங்கிரி மாவட்டம், கோர்குன்டா, ஜி.பி கோபிநாத்பூர் வட்டம், துதுமகுடா கிராமத்தில், தர்மேந்திர காராபரோஜா இனக்குழவை சேர்ந்த பழங்குடியின விவசாயி. இவர் 5 பாரம்பாிய கேழ்வரகு இரகங்கள், 2 சிறுதானிய இரகங்கள், 5 பயறுவகை இரகங்களை தனது வயலில் சாகுபடி செய்து பல விவசாயிகளுக்கு முக்கிய தகவல் அளிக்கும் நபராக இருக்கிறார். இவர் 3 ஏக்கர் மேட்டு நிலம் மற்றும் 2 ஏக்கர் தாழ்வான நிலம் சொந்தமாக வைத்திருக்கிறார். பல்வேறு பாரம்பாிய இரகங்களின் வகைகளான கேழ்வரகு, சாமை, சோளம், உளுந்து, துவரை, கொள்ளு, எள்ளு, பேயெள் ஆகியவற்றை ஊடுபயிர், கலப்புப்பயிர், தொடர்பயிர் மற்றும் பயிர் சுழற்சிமுறையை பின்பற்றி தனது மேட்டு நிலத்தில் சாகுபடி செய்கிறார். விதைத் தேர்வு, கலப்பு நீக்குதல், பாரம்பாிய விதை பாதுகாப்பு ஆகிய தொழில்நுட்பங்களில் இவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அவருடைய கிராமம் மற்றும் பக்கத்து கிராமத்திலிருந்து விவசாயிகள், இவரிடமிருந்து விதையை வாங்குகின்றனர். பாரம்பாிய விதைகளின் முக்கியத்துவம் மற்றும் எதற்காக பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

சுஷாந்த் சேகர் சௌத்ரி, பிஸ்வா சங்கர்தாஸ், புலக் நஞ்சன் நாயக்


References:
Rosset, P.M. and Altieri, M. A., Agroecology : Science
and Politics (Agrarian change and peasant studies
series), 2017. North America: Fernwood Publisher,
32 Oceanvista Lane.
Brokenshaw, D.W., D.M. Warren, and O. Werner.
Indigenous Knowledge Systems and Development.
1980, Lanham, University Press of America.
Balam, D. (2021, January 27). https://milletmission.
wordpress.com/. Retrieved from www.milletsodisha.
com: https://milletmission.wordpress.com/2021/01/28/
community-led-centre-for-excellence-for-agroecologyand-agro-biodiversity-launched-in-malkangiridistrictby-government-of-odisha/

Susanta Sekhar Chaudhury
Regional Coordinator, WASSAN
Nilakantha Nagar, Nayapalli
Bhubaneswar – 751012
E-mail: sushantasekhar@rediffmail.com
susant@wassan.org

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2022, வால்யூம் 24, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...