விதைகளை அணுகும் முறையின் மூலம் சுயநம்பிக்கை வளர்க்கும்


உத்தரகண்ட், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விவசாயம் மற்றும் சிறு குறு மற்றும் பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் அச்சுறுத்தம் நிலை உள்ளது. வெள்ளம் எதிர்க்கும் தன்மை கொண்ட இரகங்கள் இல்லாததால் பெரும்பாலும் உணவு உத்திரவாதமின்மை என்ற விளிம்பிற்குள் தள்ளப்படுகின்றனர். இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு, வருடம் முழுவதும் உணவு உத்திரவாதத்தை உறுதிபடுத்த சன்ட் கபிர் நகர், மேதவால் வட்டத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் வெள்ளம் எதிர்க்கும் விதைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை பின்பற்றினர்.


சிகனியாதியில் உள்ள விவசாயிகளிடம் சமமற்ற மற்றும் தொடர்ந்து வெள்ளம் ஏற்படும், சிறியளவு நிலம் சொந்தமாக பெற்றிருக்கின்றனர். சிகனியாதி, சன்ட் கபிர் நகர் மாவட்டம் மேதவால் வட்டத்தில் உள்ளது. தூதியாதாள் என்ற பகுதி பாகிரா ஏரியோடு ஒட்டி இருக்கிறது. ஆகையால் பெரும்பாலும் வெள்ளம் பெருகி வயல்களும் முழ்கி காரீப் பயிர்கள் சேதமடையும். சில நேரங்களில் ரபி பயிர்களும் பாதிப்படையும். சிவான் பகுதியில் கிட்டதட்ட 25 சதவிகிதம் தாழ்வான நிலங்கள் ஏப்ரல்-மே மாதங்கள் வரை வெள்ளத்தில் முழ்கியிருக்கும். இது மிக மோசமாக விவசாய வாழ்வாதாரத்தில் தாக்கம் ஏற்படுகிறது. விவசாயிகள் பொதுவாக கோதுமை மற்றும் நெல்லின் வீரிய ஒட்டு இரகங்களையே வளர்ப்பர். இது வெள்ளத்தை எதிர்க்கும் திறன் கொண்டவையல்ல. இதனால் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் மிக மோசமாக பயிர் இழப்பு ஏற்படும்.

இந்த விதைகள் விலையுயர்ந்ததாக இருந்தாலும், பூச்சி தாக்குதல் ஏற்படும் என்றாலும், உள்ளூர் சந்தை மற்றும் அரசு வேளாண் மையத்தில் சுலபமாக கிடைப்பதால், வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் இந்த விதையையே விதைக்கின்றனர். பயிர் இழப்புகள் ஏற்படுவதால், குடும்பத்திற்கு வருடத்தில் 6-7 மாதங்கள் வரை உணவு கிடைக்கிறது. விவசாயிகள் அவர்களின் குடும்பத்திற்கு உணவளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும், ஆண்கள், குடும்பங்கள் மற்றும் வயல்கள் பெண்களின் கண்காணிப்பில் விட்டு, வேலை தேடுவதற்கு இடம்பெயர்ந்து செல்வர்.

முயற்சி
2012 ஆம் ஆண்டு கோரக்பூர் சுற்றுச்சூழல் செயற்குழு என்ற தொண்டு நிறுவனம், விவசாய வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த விவசாயிகளை ஊக்கப்படுத்தி வெள்ளம் எதிர்க்கும் விதைகளை தயாரிக்கும் நோக்கத்தோடு, சிக்கனியாகி உட்பட19 கிராமங்களில் இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.
தாழ்ந்த சமூகங்களை சேர்ந்த பெண் விவசாயிகள் இவர்களின் மைய பார்வையாக இருந்தது. சுமார் 35 பெண் விவசாயிகள் இரண்டு குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டது. இவை-மாித்தியன்ஜை பெண்கள் விவசாய குழு மற்றும் துர்கா பெண்கள் விவசாயக்குழு. மேலும் 100 விவசாயிகளை (80 பெண்கள் மற்றும் 20 ஆண்கள்) ஒருங்கிணைத்து சிறு குறு விவசாய முன்னிலைக் குழுவாக மாறி, சிறு, குறு மற்றும் பெண்கள் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது. இந்த அமைப்பு விவசாயம் மற்றும் வாழ்வாதார சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகான ஒவ்வொரு மாதமும் சந்திப்பர். தேவைப்படும் நேரத்தில் சாியான விதைகள் கிடைத்ததே, பிரச்சனைகளில் மிக முக்கியமானதாக இந்தக் குழு கண்டறிந்தது. கிராமத்தில் அருகாமையில் அதாவது 15கி.மீ தொலைவில் பிபிகஞ் என்ற இடத்தில் சந்தை இருக்கிறது. அரசு விதை மையம் கிட்டதட்ட 30 கி.மீ தொலைவில் உள்ளது. சாியான விதைகளை கொள்முதல் செய்வதற்கு பெண் விவசாயிகளுக்கு கடினமாக இருந்தது. உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உகந்த விதைகள் குறித்த தகவல்கள் அவர்களுக்கு தொியவில்லை.

சந்தித்த பிரச்சனைகளை மனதில் வைத்துக்கொண்டு, காரீப் பட்டத்தில் குழு விவசாயிகள் விவசாய பள்ளியில் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர். இதில் சுவர்ண சுப் -1 நெல் இரகத்தின் பயன்களால் வெள்ளம் எதிர்க்கும் தன்மை போன்றவற்றை விளக்கும் செய்முறைகள் இடம் பெற்றிருந்தது. சுவர்ண சுப்-1 இரக விதை, 15-18 நாட்கள் தண்ணீரில் முழ்கியிருந்தாலும் நல்ல உற்பத்தியை அளிக்கும். விவசாய பயிற்சி மையம் மற்றும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தின் விஞ்ஞானிகளோடு இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பெண் விவசாயக் குழுக்கள் மற்றும் சிறு குறு விவசாய முன்னிலைக் குழு போன்ற பல்வேறு குழுக்களைச் சேர்ந்த 54 விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டது.

விதை உற்பத்தி
ம்ரித்தியன்ஜை பெண் விவசாயக் குழுவின் தலைவரான திருமதி ஷகுந்தலா தேவி, இந்த இரகத்தை விதை உற்பத்திக்காக தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் நட்டார். 15 கி.கிராம் ஆதார விதையை கொண்டு நாற்றங்கால் தயாரித்தல். இதனை குளத்திற்கு அருகாமையில் உள்ள தனது வயலில் நடவு செய்தார்.ஜியாஜ் என்ற தொண்டு நிறுவனம் விதை உற்பத்தி குறித்த தொழில்நுட்ப அறிவை அளித்தது. க்ரிப்கோ என்ற அமைப்பிலிருந்து டாக்டர்.ஜெ.பி.சிங் என்ற விஞ்ஞான பயிற்சியளித்தார். ஒட்டுமொத்த விதை உற்பத்தி செயல்பாடுகள் க்ரிப்கோ அமைப்பின் வழிகாட்டுதலின்படியே மேற்கொள்ளப்பட்டது. ஷகுந்தலா தேவி, சாண எரு, மண்புழு உரம் மற்றும் உயிர் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றவை பயன்படுத்தினார். சுமார் 22 க்விண்டால் நெல் ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்யப்பட்டது.
இந்த இரகத்தின் தரம் மற்றும் வெள்ளம் எதிர்க்கும் தன்மையை பார்த்து, மே 2014 ஆம் ஆண்டு, கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு இந்த விதையின் தேவை அதிகாித்தது. ஷகுந்தலா தேவி 135 விவசாயிகளுக்கு ஒரு கிலோ ரூ.18 என்ற ரீதியில விதையை விற்றார். இவர் மற்றொரு முறையில் விதை உற்பத்தியையே மேற்கொண்டார். பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இவரோடு சோ;ந்து விதை உற்பத்தி செய்தனர். தற்போது சுவர்ண சுப் – 1 இரகம் சிக்கியாகி கிராமத்தை தாண்டி பிரபலமடைந்தது. குற்றப்பலி, பத்திய தாதார், பிடாரி கலன் போன்ற அருகே உள்ள கிராமங்களுக்கும் பரவி விதையின் தேவை அதிகாித்தது.

முடிவு
நேரத்திற்கு சாியான விதைகள் கிடைப்பதால் கிராமத்தில் உள்ள பெண் விவசாயிகள் முன்மாதிரியல்லாமல், காரீப் பட்டத்தில் பயிர் உற்பத்தி செய்தனர். இயற்கை போிடர் ஏற்படும்போது வெற்றிகரமாக பயிர் சேதமில்லாமல் சாகுபடி செய்கின்றனர். வெள்ளம் எதிர்க்கும்தன்மை கொண்ட இரக விதையை பயன்படுத்த துவங்கியதால் , உற்பத்தி அதிகாித்தது. வருடம் முழுவதும் உணவும் கிடைத்தது. ஷகுந்தலா தேவியின் பொருளாதார விரி திறன் இதர பெண் விவசாயிகள் அவருடைய செயல்முறையை பின்பற்ற ஊக்கமடைந்தனர்.

அர்ச்சனா ஸ்ரீவஸ்தாவா மற்றும் சுபியா அஹமத்


Archana Srivastava
Documentation Coordinator
Gorakhpur Environmental Action Group
Post Box # 60, Gorakhpur
E-mail: pacs@geagindia.org

Subia Ahmad
Researcher
Gorakhpur Environmental Action Group
Post Box # 60, Gorakhpur
E-mail: geag@geagindia.org

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2017, வால்யூம் 19, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...