வாடி – வாழ்வாதாரங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிர்ச்சூழல்


பைப்-ன் ‘வேளாண் – தோட்டக்கலை – காடு வளர்ப்பு (வாடி)”  – ன் புதுமையான மாதிரி திட்டம், நிலைத்த வாழ்வாதாரங்கள் அடைய சீதோஷனம் சார்ந்த துரிதமான தொழில்நுட்பங்கள், பயனற்ற நிலங்களை உற்பத்திக்கான சாகுபடியை செய்ய வைப்பது, உள்ளூர் ஆதாரங்களை பயனுள்ள முறையில் செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலம், சாகுபடி முறையில் தோட்டக்கலையை ஒருங்கிணைக்க வேண்டும் தோட்டக்கலையை முக்கிய கூறாக, இந்த மாதிரியில் சேர்ப்பது மூலம்,பருவமற்ற காலங்களிலும் வருடம் முழுவதும் பல்வேறு வருமானங்கள் கிடைப்பது உறுதிபடுத்தப்படுகிறது. மித சாகுபடி காலம் – அதிக விரிதிறன் மற்றும் குறைவான காலம் – அதிக வருமானம் கொண்ட பயிர் சாகுபடி முறைகள் மிக்க இணைப்புகளை கொண்டே இது சாத்தியமானது.

வேளாண்மை மற்றும் அதன் இதர பிரிவுகளும், இந்தியாவில் வாழ்வாதாரத்திற்கான பொிய ஆதாரமாகும். எழுபது சதவிகித கிராம குடும்பத்தினர் இன்னமும் வேளாண்மையை நம்பியே தங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இதில் 82 சதவிகிதம் சிறு மற்றும் குறு விவசாயிகளாகும்.உணவு தேவையின் உற்பத்தியை பூர்த்தி செய்யும் அதேநேரத்தில் , கால் பங்கு உலக மக்களின் பசியை போக்குவதற்கு காரணமாக இருந்தாலும், இந்தியா ஊட்டச்சத்து குறைந்த சுமார் 190 மில்லியன் மக்களின் வீடாக இருக்கிறது (உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிக்கை). இந்தியாவில் உள்ள பழங்குடியின சமூகங்கள், சமுதாய பிரிவில், மிகவும் ஏழை மற்றும் பின் தங்கிய பிரிவினராக கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு, இந்தியாவில் உள்ள பழங்குடியினர், தேசிய தகவல்களின் அடிப்படையில் மக்கள் தொகையில் மிக ஏழ்மையானவர்கள்.
பெரும்பாலான விவசாயிகள் சிறு மற்றும் குறு நிலத்தவர்களாகவும், மானாவாரி வாழ்வாதார வேளாண்மையை செயல்படுத்தி வருகின்றனர். வேளாண்மையிலிருந்து குறைந்த வருமானமே கிடைப்பதால், மற்ற சவால்களான பாரம்பாிய ஆதாரங்கள் வேகமாக குறைந்துவருதல், குறைந்து வரும் மண் ஆரோக்கியம் மற்றும் தேவைக்கேற்ப சேவைகள் கிடைப்பதில்லை. இதனால் வாழ்வதற்கு வேறு இடம் பெயரும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்று இடம் பெயர்தல் ஏழ்மையான வாழும் நிலையோடு, குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் கல்வியில் தாக்கம் ஏற்படுகிறது. மாற்று சாகுபடி முறைகள் உருவாக்குவது, தற்போது ஒரு அவசர தேவையாக இருக்கிறது. இது நிலைத்த வாழ்வாதாரங்கள் மற்றும் இயற்கை ஆதாரங்கள் நிலைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும். தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்ற சிறந்த ஆற்றல் கொண்டு அடைய வேண்டும். இந்த பின்னணிக்கு எதிராக, பைப் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் வாடி திட்டத்தை அறிமுகம் செய்து, பரவலாக்கம் செய்தது. பழ மரங்கள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காடு வளர்ப்பு ஆகியவை இந்த சாகுபடி முறையில் சேர்க்கப்பட்டது.  இந்த தலைப்பில் ஒரு பழங்குடியின குடும்பத்தின் வெற்றிகதையை பகிர வேண்டும் என்ற நோக்கம் கொண்டு, ஏழ்மையிலிருந்து செழிப்பான வாழ்க்கைக்கு முன்னேற்றிய வாடி மாதிரியின் செயல்பாடு குறத்து பகிரப்பட்டுள்ளது. இந்தக் வெற்றிக் கதை, வாடி திட்டத்தின் பிரதிநிதியாக அடி கோடிட்டு காட்டப்படுகிறது. இது நாட்டின் பல்வேறு பகுதியில் வாழும் 2 இலட்சம் பங்குபெற்ற குடும்பங்கள் வாழ்வாதாரம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வின் தரம் ஆகியவை குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றுள்ளதை காணலாம்.
திரு.சீதாராம்பாய் சோன்ஜி கட்கா,தெற்கு குஜராத்தில் பழங்குடியின பகுதியில் உள்ளே இருக்கும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். வுல்சத் மாவட்டம், கப்ரதா வட்டத்தில் சீதாராம்பாய், தன்னுடைய ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்கிறார். இவர்களுக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஒரு பங்கு சமவெளி பகுதியோடு சேர்ந்துள்ளது. கிட்டத்தட்ட பாதிநிலம் சாிவை நோக்கி இருப்பதால், அது மிக மோசமாக அழிந்துவிட்டது. வேளாண்மை, இந்த குடும்பத்தின் முதல்நிலை வாழ்வாதார ஆதாரமாக நம்பியிருக்கின்றனர்.முக்கியப் பயிர்களான அரிசி, கேழ்வரகு மற்றும் உளுந்து சாகுபடியோடு, வேளாண்மை முக்கிய ஆதாரமாக இருக்கிறது. பயிர் சாகுபடி, பருவ காலத்தில் மட்டுமே செய்யக்கூடியதாக வரையறுத்துக்கொண்டனர் காரீப் பயிர் அறுவடை செய்த பின்னர்,வாழ்வாதாரத்திற்கான மாற்று ஆதாரம், கிராமத்திற்குள்ளே சீதாராம் பாய் அவர்களிடம் இல்லாததால் கூலிவேலை செய்வதற்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.பருவக் காலத்திற்கு பின்னர்,வருடந்தோரும் 3-4 முறை வாபி, சில்வாசா அல்லது நாசிக் போன்ற இடங்களுக்கு வேலையை தேடி செல்கின்றனர். ஒவ்வொரு பயணத்திலும் சுமார் 15 முதல் 20 நாட்கள் அடங்கியுள்ளது. வயல்கள் தரிசாக விடுவதால் மண் அரிமானம் ஆகி, மண் வளம் அழிந்து விடுகிறது. சில சமயங்களில் மொத்த குடும்பமும் பருவக்கால இடம் பெயர்தலுக்காக காத்திருக்கின்றனர். இதனால் குடும்ப உறுப்பினர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பாதித்து, மேலும் குழந்தைகளின் கல்வியும் தடைப்படுகிறது. சவால்களைத் தாண்டி வாழ்வாதாரத்திற்கு மட்டுமே இடம் பெயர்ந்து செல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் இதே முறையையே பின்பற்றும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதுமிகவும் ஆபத்தானவை.
இந்தப் பின்னணிக்கு எதிரான நிலையில், பைப் நிறுவனம் வாடி திட்டம் இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தியது. துவக்கத்தில் நபார்ட் மற்றும் சுப்ரஜா நிறுவனம் திட்டத்தை துவக்க , உதவி செய்தனர். இது வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் காடுவளர்ப்பு புதுமைகள் உள்ளடக்கிய உகந்த சாகுபடி அமைப்பின் மாதிரிகளை உருவாக்குவதற்கு உதவியாக இருந்தனர். பைப் நிறுவனம், சுப்ரதா நிறுவனமோடு சேர்ந்து ‘ முழுமையான கிராம வளர்ச்சி திட்டம் “ அறிமுகப்படுத்தினர். இதன் கீழ் வாடி மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் மற்றும் மதிப்பு சங்கிலி முயற்சியோடு அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பங்களின் வாழ்வாதாரங்களை குறிப்பட்ட வளர்ச்சி பெற்றது. சீதாராம் பாய், வாடி மாதிரியிலிருந்து பயனடைந்த சில நண்பர்கள் மற்றும் உறவினர்களை கண்டு முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தார்.
துவக்கத்தில் இவருக்கு நம்பிக்கை இல்லை இவர் நட்ட மரங்கள் சரிவை ஒட்டியிருந்ததால், நிலம் அதிகமாக பாதிக்கப்பட்டது. இவரது கோரிக்கையால், பைப் குழு வருகை தந்து, ஆதாரங்களை ஆய்வு செய்து, இணைந்து சாகுபடி முறையை உயர்த்தும் திட்டம் தயாரிக்கப்பட்டது. இவர் தேவையான கூலியாட்கள் பணிகள் மற்றும் பயிற்சிகள் எடுத்துகொள்ள போவதாக உறுதிப்படுத்தினார். நடவு பொருள், அடி உரங்கள், பயிற்சிகள் மற்றும் தொடர்ந்து தொழில்நுட்ப உதவிகள் அளிக்கப்பட்டது. பல்வேறு நடவுக்கு முன் உள்ள செயல்பாடுகளான குழி தோண்டுதல், குழியை நிரப்புதல், இயற்கை உரம் இடுதல் ஆகியவை வயல்களில் செய்யப்படுகிறது. வயல் ஓரங்களில், சீதாராம் பாய், 20 மா மரங்கள், 40 முந்திரி மரங்களோடு 250 காட்டு மரங்களின் நாற்றுகள் நட்டார். பழ மரங்களின் நடுவே பருப்பு வகைகளை ஊடுபயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. காரீப் பயிரின் அறுவடைக்குப்பின்,இருக்கும் ஈரப்பதத்தைக் கொண்டு சணப்பையை ஊடுபயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஊடுபயிர்கள் கூடுதல் வருமானம் கிடைப்பதற்கு உதவுகிறது. அதேவேளையில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் திறன் கொண்டதால், மண்ணின் வளமும் உயர்கிறது. கோடை காலத்தின்போது, வயலிற்கு தகுந்தமண் பாதுகாப்பு செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டது. மேலும் அவர் பல்வேறு இயற்கை தொழில்நுட்பங்களான பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்தல், பசுந்தாள் உரங்கள், தர்ஷ்பார்னி ஆர்க் போன்றவைகளை செயல்படுத்தபடுகின்றனது. இந்த செயல்பாடுகள், மண் பாதுகாப்புடன் மண்ணின் தன்மையை உயர்த்துகிறது.
பின்னர், இவர் கொடிகளை தாங்கும் தட்டிகளை அடிப்படையாக கொண்ட பயிர்களுடன், காய்கறி பயிர்களின் சாகுபடி குறித்த பயிற்சிகளும் பெற்றார். சீதாராம்பாய் வணிக அடிப்படையிலான காய்கறி சாகுபடியை செய்தது கிடையாது. தட்டிகள் அடிப்படையில் காய்கறி சாகுபடியை சிறிய நிலத்தில் துவக்கினார். தட்டிகளுக்கு அடியில் சில கீரைவகைகளும்  சாகுபடி செய்தார், அதேவேளையில் சுரைக்காயை தட்டிகள் முறையை பின்பற்றி சாகுபடி செய்தார். ஓரேநேரத்தில் 2 – 3 பயிர்கள் சாகுபடி செய்வதற்கு இது உதவுகிறது. முதல் பருவக்காலத்தின்போது ,காய்கறி பயிர்கள் மூலம் மதிப்பான வருமானத்தையே பெற்றார். அவருடைய சேமிப்பை பயன்படுத்தி, காய்கறி சாகுபடியில் நிலப்பகுதியை மேலும் அதிகாித்தார். சில வருடங்களுக்கு பின், மரங்கள் வளர்ந்து மண்ணின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
துவக்க வருடங்களின்போது, சீதாராம் பாய் பயறு வகைகளை ஊடுபயிராக செயல்படுத்தியதால் கூடுதல் வருமானம் பெற்றார். தொடர்ந்து வரும் காலங்களில், காய்கறி நிலத்திலிருந்து குறிப்பிட்ட அளவில் வருமானம் அதிகாித்துள்ளது. நான்கு வருடத்தில் பழ மரங்கள் உற்பத்தி துவங்கிவிட்டது. பழ உற்பத்தி, ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அதிகாித்து வருகிறது. தற்போது சீதாராம்பாய் பல்வேறு பயிர்களான தானியங்கள், வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற மரங்களிலிருந்து, ஒவ்வொரு வருடமும், முழுவதுமாக உற்பத்தியை பெற்று வருகிறார். இவரது பண்ணையில், இந்த புதிய முயற்சிக்கு முன்னும், பின்னும் கிடைத்த உற்பத்தியும் மற்றும் பொருளின் மதிப்பு குறித்த அட்டவணையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பண்ணை உற்பத்தி விரிவடைவதால், பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், வீட்டில் அதிகமாக  நுகரும் நிலை அதிகாித்துள்ளது. இதனால் குடும்பத்தில் ஊட்டச்சத்துகள் உயர்வதற்கு உதவுகிறது. கிடைக்கும் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் குடும்ப வருமானத்தை குறிப்பிட்ட அளவு அதிகாித்து வருகிறது. வாழ்வாதாரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதை சார்ந்திருப்பது இனி தேவையில்லை. தற்போது குடும்பம் ஒரு கவுரவமான வாழ்க்கை வாழ்கின்றனர். மேலும் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்கின்றனர். தோட்டகலை பயிர்கள் மற்றும் மரங்கள், மற்ற முயற்சிகளோடு மண்ணின் தரமும் உயர்ந்துள்ளது. குடும்பம் உயிர் பல்வகைமையை அதிகாித்து வருவதை, பண்ணையில் பயிர்கள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கை மூலம் காண்கின்றனர்.
கூட்டுமுயற்சிகள்
இந்தப் பகுதியில் பல்வேறு இதர விவசாயிகளும் வாடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். அதாவது வேளாண்மை-தோட்டக்கலை-காடு வளர்ப்பு அடிப்படையிலான சாகுபடி முறையை செயல்படுத்தினர். இது ஒட்டுமொத்த வளர்ச்சி மாற்றங்களை சாகுபடியில் காண முடிந்தது, மேலும் பண்ணை வருமானம் அதிகாிக்கும் அதேசமயத்தில் இந்தப் பகுதியின் இயற்கை ஆதாரங்கள் உயர்ந்துள்ளன. மதிப்பு சங்கிலி முயற்சிகளில் விவசாயிகளுக்கு இடுபொருள் விநியோகம் செய்வதற்கு, பண்ணை விளைபொருளை ஒருங்கிணைத்தல், மா மற்றும் முந்திரி பதப்படுத்துதல் மேலும் பதப்படுத்தபட்ட பொருட்களை விற்பனை செய்தல் போன்றவைகளை செயல்படுத்த விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (விவசாய கூட்டுறவு) உருவாக்கினர். விவசாய கூட்டுறவுகள் எடுத்துகொண்ட, இந்தசெயல்பாடுகள்  உற்பத்திசெலவுகுறைவதுமட்டுமில்லாமல் அவர்களின் விளைபொருளுக்கு சிறப்பான விலையையும் உறுதிபடுத்துகிறது. வேளாண்மை இடுபொருள் விநியோகம் , ஒருங்கிணைத்தல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை போன்ற செயல்பாடுகளுக்கு, இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு புதிய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. பல குடும்பங்கள் இரண்டாம் நிலை தொழில் நுட்பங்களான பழ செடிகள் / ஒட்டுசெடிகள் உற்பத்தி, காய்கறி நாற்றுகள், மண்புழுஉரம், காளான் வளர்ப்பு போன்ற பல்வேறு பல்வகைமையை உருவாக்கினர்.
வேளாண்-தோட்டக்கலை முயற்சிகள் குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், சமூக அளவில் வேலைவாய்ப்புகளும் உருவாக்குகிறது. குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலை மட்டுமில்லாமல், சுற்றுச்சூழலும் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. வாடித் திட்டம், கனிம வாயு வெளியிடுவது குறைந்ததினால், சீதோஷன மாற்றங்களை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முக்கிய நிகழ்வுகள் மற்றும் தாக்கம்
  • முழுமையான தனிமயமாக்கப்பட்;ட அணுகுமுறை மூலம் அதிக பட்சமாக உள்ளூர் ஆதாரங்களை பயன்படுத்துவது, மேலும் உற்பத்தியில் உறுதி கொள்ளுதல்.
  • 12 மாவட்டங்களில் உள்ள 2 இலட்ச குடும்பங்கள் பைப் நிறுவனத்தால் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கப்பட்டது. நபார்ட் மூலம் 5 இலட்சம் குடும்பங்களுக்கு பரவலாக்கம் செய்யப்பட்டது.
  • வீட்டு வருமானம் கூடுதலாக ரூ.80,000 -90,000. வருடம் முழுவதும் வருமானம் வரும்.
  • இடம்பெயரும் வேதனை இல்லை, உயர்ந்த ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் கல்வி.
  • உயர்த்தப்பட்ட சமூக இயக்கம்,அதிகாரம்.
  • மதிப்பு சங்கிலி வளர்ச்சி: 41,000 விவசாயஉறுப்பினர்களோடு, 48 விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள். மா, முந்திரி, நெல்லி பதப்படுத்துதல்.
  • கனிமத்தை வெளியேற்றும் திறன் : 24 டன்/ஹெக்டர்.
  • 1,2, 3, 10, 12, 13 வது நிலைத்த வளர்ச்சி கொள்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அட்டவணை: 1 
பல்வேறு பயிர்களின் உற்பத்தி மற்றும் மதிப்பு
 
வாடித் திட்டத்திற்கு முன்  வாடித் திட்டத்திற்கு பின்
சாகுபடி செய்தப் பயிர்கள் மகசூல் (கி.கி) மதிப்பு  (ரூ) மகசூல் (கி.கி) மதிப்பு (ரூ)
தானியங்கள் (அரிசி,கேழ்வரகு) 1,400 35,000 1,100  27,500
பயறு வகைகள் (உளுந்து,துவரை)  70  4,900  150  10,500
சுரைக்காய் 15,540 2,17,560
வெள்ளரி 1,000 16,000
மா 805 21,735
முந்திரி 180 18,900
உற்பத்தியின் மொத்தமதிப்பு 39,900 3,12,195
யோகேஷ் ஜி.சாவந்த், ராகேஷ் கே. வாரியர் மற்றும் ராஜேஷ் பி.கோட்கார்.

Yogesh G. Sawant
Sr. Thematic Programme Executive
E-mail: ygsawant@baif.org.in

Rakesh K. Warrier
Chief Programme Executive
E-mail: rakeshkwarrier@baif.org.in

Rajesh B. Kothar
Sr. Project Officer
E-mail: rajesh.kotkar@baif.org.in
BAIF Development Research Foundation
BAIF Bhavan, Dr. Manibhai Desai Nagar
NH4, Warje, Pune – 411058

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 3
அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...