லிட்சி பதப்படுத்தும் முறை – ஒரு நம்பகமான மதிப்பு கூட்டுதல் முறை


பழ பதப்படுத்தும் முறை, அதிக முதலீட்டை நம்பியிருப்பதால், சிறு விவசாயிகள் மதிப்பு கூட்டும் தொழிலை செயல்படுத்துவதற்கு தயங்குகின்றனஆலம்வாடி பாங்கனீர், எஸ். கே. பர்பே, வினோத் குமார், விஷால் நாத், எஸ். டீ. பாண்டே மற்றும் அபேகுமார். ஐ.சி.ஏ.ஆர். சுலபமான தொழில்நுட்பம் மற்றும் துவக்க செயல்பாடுகளுக்கான உதவியுடன் பீகாரில் உள்ள லிட்சி விவசாயிகளின் பொிய கனவை அடைய உதவியது.


எந்த லிட்சி விற்பனையாளரோ அல்லது சில்லரை விற்பனையாளரிடமோ உரையாடினால், அவர்கள் லிட்சி விவசாயிகளாக இருக்க வாய்ப்பில்லை. லிட்சியின் இதய பூமியாக கருதப்படும் பீகாரில், முன் அறுவடைஒப்பந்தாரா;களிடம் ஒட்டுமொத்தபயிரையும் விற்றதால்,அவர்கள் லிட்சி பழத்தை பெரும்பாலும் அறுவடை செய்து, நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இலாபத்திற்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் விற்பனை செய்வதற்கு கவலைப்பட தேவையில்லை என்று சிலர் கூறுவர். ஆனால், சில வலுவான காரணங்களால் பெரும்பாலும் ஒவ்வொரு லிட்சி விவசாயிகளும் இடைதரகாிடம் விற்பதற்கு, பழங்கள் அறுவடை செய்வதற்கு முன்கூட்டியே தேர்வு செய்கின்றன.

மற்ற பழங்களைப்போல் அல்லாமல், லிட்சி அறுவடை என்பது சாதாரணமாக ஒரே நேர செயல்பாடாகும். மொத்த தோட்டமும் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்படுகிறது. லிட்சிபழம் குறைந்த காலத்தில் அதாவது அதிகபட்சமாக 15-20 நாட்கள் செய்யப்படுகிறது. பிறகு, பழத்தோல் சிவப்பு நிறத்திலிருந்து காப்பி நிறமாக மாறுக்கூடிய பிரச்சனை நிலவுகிறது – பழத்தின் நிறம் சிவப்பிலிருந்து காப்பி நிறமாக விரைவாக மாறுகிறது. அறுவடை செய்யப்பட்ட பழம் சாதாரண சுற்றுச்சூழல் நிலையில், 24-48 மணி நேரத்திற்குள் காப்பி நிறமாக மாறிவிடுகிறது. லிட்சி, உந்துதல் மூலம் வாங்கும் பழம் என்பதால், காப்பி நிறமாக மாறிய பழத்தை யாரும் வாங்குவதற்கு முன்வருவதில்லை. உள்ளூர் சந்தனையில், அதிக பழங்கள் குவிவதால், பெரும்பாலும், மிதமிஞ்சிய அளவை கொண்டு விற்பனை செய்வது துன்பமான நிலை ஏற்படுகிறது. அதேசமயத்தில், அறுவடைக்குப்பின் தேவையான வசதிகள் இந்த இடத்தில் இல்லையென்பதாலும், இந்தப்பழம் இயற்கையாகவே அதிக நீர்ச்சத்துகொண்டுள்ளதாலும், தொலைவில் உள்ள சந்தையில் விற்பது கடினமாக இருக்கிறது. ஆகையால், பெரும்பாலான லிட்சி விவசாயிகள் அதிக செலவு செய்து – குறைந்த வருமானம் கிடைக்கும் என்று தொிந்தும் ,முன் அறுவடை ஒப்பந்ததாரர்களுடன் சுலபமாக விற்பனை செய்வதற்கு முடிவுசெய்கின்றனர்.

மதிப்பு கூட்டுதல் மூலம் பதப்படுத்துதல் – ஐ.சி.ஏ.ஆர்-என்ஆர்சிஎல் அமைப்பின் தலையீடு
பதப்படுத்துதல் என்பது அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பீடுகளை குறைப்பதற்கும், பழப்பயிர்களுக்கு மதிப்பு கூட்டுவதும் ஆகும்.அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளதோடு, பதப்படுத்தும் பொருட்கள் சுயநிலை அடைகிறது. அவை சேமித்துவைத்தும்,காலத்திற்கேற்ப விற்பனை செய்துகொள்ளலாம். இதன் காரணத்தால், பதப்படுத்துபவர்களுக்கு மதிப்புமிக்க நேரம் அளிக்கப்படுகிறது. மேலும், தேவை அதிகாிக்கும்போது பொருட்களை விற்பனை செய்வதற்கு வசதியாக இருக்கும்.
ஐசிஏஆர்-லிட்சிதேசிய ஆராய்ச்சி மையம், முசாபா;பு+ர், பீஹார், லிட்சி பழ பானங்களை பதப்படுத்துவது மற்றும் சேமிப்பதற்கான தொழில்நுட்பங்களை வரையறுத்து உருவாக்கியுள்ளது. எனினும், தொழில்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் துவக்கத்தில் அதிக முதலீடு செய்வதற்கான தேவை மற்றும் கொள்கை மற்றும் நிதிஉதவிகள் இல்லாமல் இருப்பது, தொழில்நுட்பத்தை பயனீட்டாளர்கள் மத்தியில் செயல்படுத்துவது கிட்டதட்ட அரிதாக இருக்கிறது. 2014 முதல் 2017 ஆம் ஆண்டுவரைபல்வேறுநிகழ்ச்சிகளானபயிற்சித் திட்டங்கள்,விவசாயமேளாக்கள் மற்றும் விழாக்களில் இந்ததொழில்நுட்ங்களின் நன்மைகளைஅறிமுகப்படுத்திவருகிறது.பழ பானங்களை, இந்தமையம்,சிறியஅளவில் உற்பத்திசெய்யதுவக்கி,அதனைவிற்பனைசெய்து இந்ததொழில்நுட்பத்தின் சாத்தியங்கள்;,அதன்மூலம் சாத்தியப்படும் தொழில் வாய்ப்புகள் விளக்குகிறது. விவசாயிகளின் ஆர்வத்தை அறிந்து,லிட்சி பானம் நுண் பதப்படுத்துவதற்கான தொழில்முனைவோர் வளர்ச்சி திட்டம் துவக்கியது இந்த மையம்.

பதிவு செய்த பயனீட்டாளருக்கு பானத்தை சேமித்தல், உணவு பாதுகாப்பு ஒழுங்குபடுத்தி, உரிமம் வழங்குதல், சேமித்து, விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு உள்ள அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பயிற்சியாளர்கள் பானத்தை ஒரு சமையலறையிலேயே குறைந்த முதலீட்டில் வசதியாக தயாரிக்கலாம் என்பதை கற்றுக்கொண்டு, 2018 ஆம் ஆண்டு இறுதியில் பேரவை ஏற்படத் துவங்கியது.

தீபமேற்றிய சில விவசாயிகள்
ராம் சரோவர், 55 வயது நிரம்பிய விவசாயி, முசாபர்பூரில் உள்ள குர்ரானி வட்டத்தில் வசித்து வருகிறார். இவர் தன்னிடமுள்ள 10 மா செடிகளிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்ப செலவுகளை பார்த்து வருகிறார். பதப்படுத்தும் முறையில் ஏற்பட்ட நம்பிக்கையால், தன் குடும்பத்தின் அவல நிலையிலிருந்து வெளி வருவதற்கு பொிதும் உதவும் என்று லிட்சி தேசிய ஆராய்ச்சி மையத்தில் பழம் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டார்.துவக்கத்தில் மாம்பழத்தை வைத்து பழச்சாற்றையும், உடனடியாக உண்ணும் சிற்றுண்டி பொருட்களையும் தயாரித்தார். பின்னர், அருகாமையிலுள்ள விவசாயிகளிடமிருந்து லிட்சி பழங்களை கொள்முதல் செய்து பழச்சாற்றை பதப்படுத்தி, விற்பனை செய்ய தொடங்கினார். நாட்டில் மற்ற இடங்களைப்போல, வெறும் உழுவதும், உழைப்பது மட்டுமே நமது பணியல்ல. இன்று இளைஞர்கள் தானே எடுத்துகொள்ள முன் வருகின்றனர். அதில் சரோவர் மகன் விதிவிலக்கல்ல. படித்து பணியில்லாமல் இருப்பது என்னை பொிதும்பாதித்தது.,வேளாண்மையை எனது மகன் பணியாக ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை. ஆனால் லிட்சி பதப்படுத்தும் தொழிலை துவக்கி, வருமானம் ஈட்டத்தொடங்கிய பின்னர் அவரும் முழுநேரம் பணி செய்வதற்கு தன்னை இணைத்துக் கொண்டார் என தனது 24 வயது மகனான, திரு. பாரத் பு+ஷன் குறித்து திரு. சரோவர் அவர்கள் குறிப்பிட்டார். அவர் பணி துவக்கிய நாளிலிருந்து லிட்சி பதப்படுத்தும் தொழில் முனைவோராக அங்கீகாிக்கப்பட்டு, விற்பனையாளராகவும் பெருமிதம் கொள்கிறார். 2018 ஆம் ஆண்டு அவர்களுடைய இலாபத்தை பழச்சாறுகளை அதிகளவில் கொணர்வதற்கு மீண்டும் முதலீடு செய்தனர்.தற்போது அவர்களது நிறுவனம், ராம் சரோவர் வேளாண் உணவுகள், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு விருகிறது. சரோவர்கள் லிட்சி ஸ்குவாஷ் மற்றும் உண்ணுவதற்கு தயாராக உள்ள உணவுகளும் தயாரித்து, சில்லறை வணிகர்கள், உணவகங்கள், தாபாக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அவர்களின் வாசனை நிறைந்த உற்சாகமளிக்கும் குளிர்பானத்தை, முசாபர்பூர் முதல் பாட்னா செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சில்லறை வணிக அங்காடிகளில் கிடைக்கின்றன. இந்த வழியில் திரளாக பயணித்து செல்லும் மக்கள் இதையே விரும்பி வாங்குகின்றனர். மூன்று வருடங்களில், சரோவர்கள் முதல்முறை பதப்படுத்தும் தொழிலை செய்யத் தொடங்கி, அவர்களின் வளர்ச்சி மற்றும் குறிக்கோளை ஈடுசெய்வதற்கு, அருகேயுள்ள லிட்சி விவசாயிகளிடம் பழங்களை கொள்முதல் செய்யும் நிலையை அடைந்துள்ளனர்.
மற்ற பழங்களை ஒப்பிடுகையில், லிட்சி ஒரே ஒரு பண்பில் தனித்து நிற்குமானால், அது அதன் வாசனை – வெப்பமணடத்தில் வசீகாிக்கும் பண்பாகும். நுகர்வோர் மத்தியில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டதை, அதன் பிரபலத்தன்மை கொண்டு சுலபமாக எடைபோடலாம். இதற்கு முக்கிய காரணம், பல்வேறு பொருட்களான குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்புகள், வீட்டுபொருட்களை கொண்டு நறுமண அகர்பத்தியிலிருந்து அழகுபொருட்களான உதட்டு சாயம் ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது.

திரு.அனோஜ் குமார் வாய், 50, சமஸ்திபூர் என்ற இடத்தை சேர்ந்த மற்றோரு விவசாயி, அவருடைய சிறு வயது கனவை வெளிப்படுத்தி, அதன் மூலம் லிட்சியில் உள்ள பல்வேறு பொருட்களை பதப்படுத்தி, அதிக வருமானம் ஈட்டுவதே ஆகும் என்று கற்றுக்கொண்டார். லிட்சி அதிகபட்சமாக ஒரு மாதம் மட்டுமே கிடைக்கிறது. இவ்வாறு புத்துணர்ச்சி அளிக்கும் நறுமணத்தையும், லிட்சியின் ஆரோக்கிய பயன்களையும் வருடம் முழுவதும் நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக நான் லிட்சியை பதப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன் என அனோஜ் கூறினார். சமஸ்திபூரில் உட்புறம் உள்ள மளிகோர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் இந்த குடும்பத்திற்கு சொந்தமானதாகும். ஆனால் குறைந்த அணுகும் தன்மை அவரது நம்பிக்கையை குறையவில்லை. 2020 ஆம் ஆண்டு, கோவிட் 19 முழுமையாக பரவியுள்ள நிலையில்,புதிய லிட்சி விற்பனை செய்வது பிரச்சனைக்குரிய மற்றும் ஆபத்தான ஒன்றாகும். இந்த பிரச்சனையை வாய்ப்பாக மாற்ற தீர்மானித்தார். லிட்சி சுலபமாக அழுகக்கூடிய பழம் என்று ஒரு புறமும், தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு சார்ந்த கட்டுபாடுகள் துயரங்களை மேலும் அதிகாித்தன. இந்த முயற்சியை கைவிட்டு நஷ்டத்தை பார்ப்பதற்கு பதிலாக பழங்களை பதப்படுத்தி, பழச்சாறாக சேமித்து வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.லிட்சி தேசிய ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன், திரு. அனோஜ். பயிரை மட்டும் பாதுகாப்பது மட்டுமல்லாமல்,பழம் பதப்படுத்துவதற்கும் முயற்சி செய்ய துவங்கினார். இவரது 60 லிட்சி மரங்கள், இடைதரகர்கள் மூலம் ரூ.40,000 மட்டுமே ஈட்ட முடியும். 2020 ஆம் ஆண்டு கோடை காலத்தில் , இவர் பத்து மரங்களிலிருந்து அறுவடை செய்து 500 கி.கி. பதப்படுத்தப்பட்ட பழச்சாறாக மாற்றி அதன் மூலம் ரூ.79,200 ஈட்ட முடிந்தது. இதன் வெற்றியைக் கொண்டு மல்லிகா இரக மாம்பழத்தை பதப்படுத்தினார். தற்போது  அவரது பொருட்கள் உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படுகிறது. திரு. சரோவர் போல, இவரும் மற்றும் பூசா மற்றும் சமஸ்திபூரில் உள்ள உணவகங்கள், சில்லறை வணிக அங்காடிகள் விருந்தோம்பல் அமைப்புகளுக்கு விநியோகம் செய்ய முயற்சித்து வருகிறார்.திரு. அனோஜின் புதுமை படுத்தப்பட்ட வேளாண்மையில் உள்ள ஆசையை குறிப்பிடுவது மிக தகுதியான ஒன்று. முயற்சி செய்யும் தருவாயில் இந்த வெற்றியின் உதாரணம் மிக முக்கியமாகும். இவரது 5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பழ மரங்களான லிட்சி, மா, ஆப்பிள், போிக்காய், பிளம், கினோவ், மாண்ட்ரின், எலுமிச்சை, திராட்சை, ஜாமூன், நெல்லி மற்றும் பல மரங்கள், இவர் பார்வையிட்ட, நாட்டில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் வேளாண்மை பல்கலை கழகங்களிலிருந்து சேகாிக்கப்பட்டது. பதப்படுத்தும் முறையை  பல்வேறு விளைபொருட்களாக விரிபடுத்த திரு. அனோஜ் திட்டமிட்டுள்ளார். இவருடைய வெற்றியை கண்டு, அருகே உள்ள விவசாயிகளுடன் திரு.அனோஜ் அவர்கள் ஒன்று சேர்ந்து பூசா விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

சமர்பன் ஜுவிகா மஹிலா கிசான் உற்பத்தியாளர் நிறுவனம், பீஹார், முஸாபர்பூர், ஜாபஹாவில் உள்ள ஒரு குழு. இந்தக் குழு ,பெண் விவசாயிகள் மத்தியில்,குறிப்பாக,தொழில்நுட்பம் மற்றும் விற்பனை பணிகளின் மூலம் அவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதே இதன் பார்வையாகும். பழம் மற்றும் காய்கறி பதப்படுத்துவது, இந்தக் குழுவின் வருமானத்தை அதிகாிக்கும் பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐசிஏஆர்-ன் ஆர்சிஎல் அமைப்பின் தொழில் முனைவோருக்கான வளர்ச்சித் திட்டத்தில், இந்த நிறுவனம் முன் வந்து பங்கேற்றது. மே-ஜுன் மாதத்தில் லிட்சி பருவம் என்பதால்,  சுமார் 20 டன்கள் லிட்சி  பழச்சாற்றை பதப்படுத்தினர். தொழில்முனைவோருக்கான வளர்ச்சித் திட்டத்திலிருந்து தொழில்நுட்பத்தை தொிந்து கொண்டு, இந்த நிறுவனம் மெதுவாக லிட்சி ஸ்குவாஷ் மற்றும் உடனடியாக உண்ணும் சிற்றுண்டிகள் தயாரிக்க துவக்கியது. இந்தக் குழு வருங்காலத்தில் விளைபொருட்களை விரிவாக்கவும், வரும் பருவங்களில் லிட்சி மதிப்பு சங்கிலியை உயர்த்துவதற்கு அதன் பதப்படுத்தும் அளவை அதிகாிக்கவும், மேலும் இதன் வாயிலாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதுபோன்ற வெற்றி கதைகள்,குழந்தை எடுத்து வைக்கும் அடி அல்லது ஒரு பொிய உணவு பதப்படுத்தும் தொழிலில் ஒரு சிறிய அளவு உணவு போல் கருதப்படுகிறது. இந்த மாற்றத்தின் தென்றல் உண்மை மற்றும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் மத்தியில் பழம் பதப்படுத்துதல் குறித்து நல்ல வரவேற்பும், ஆர்வமும் இருக்கிறது. பீஹாரில் உள்ள சாஹி லிட்சி புவியியல் குறியீடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தரமும், உயர்த்தன்மையும், கொண்டு பகுதியில் உள்ள உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது பிஹாரில் உள்ள மூன்று மாவட்டங்களில் லிட்சி தேர்வு செய்வதை கடைப்பிடித்து வருகிறது. உதாரணமாக, முசாபர்பூர், கிழக்கு சம்பாரன் மற்றும் சிதாமர்ஹி ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது எம்ஓஎப்பிஐ – யின் அமைப்பு, பிஎம்எப்எம்இ திட்டத்தின் கீழ், ஒரு மாவட்டம் ஒரு பொருள் நிகழ்ச்சி செயல்படுத்தவுள்ளது. இந்த காரணிகள் மிக முக்கியத் தேவையை நிரப்ப செய்யும் நோக்கத்தில் லிட்சி பதப்படுத்தும் அளவை அதிகாிக்க வேண்டும்.

தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்
சில காரணங்களால், திரு. ராம் சரோவர் மற்றும் திரு.அனோஜ் ராய் அவர்களின் வெற்றியை போல தாக்கம் ஏற்படுத்தும் கருவியாக இருக்கிறது.ஒருவருடைய சொந்த சமையலறையை பதப்படுத்துதல்
பதப்டுத்துதல் என்றால் அதிக முதலீடு தேவை என்ற ஒரு தவறான கருத்து நிலவி வருவதால்,தொழில்நுட்பம் பின்பற்றுவது குறைந்து விடுகிறது.இந்த ஒரே காரணத்தால் மட்டுமே பண்ணையில் பதப்படுத்தும் தொழிலை விவசாயிகள் தவிர்க்கின்றனர். தொழில்முனைவோராக மாற்றுவதற்கு, சிறு மற்றும் குறு விவசாயிகளை சீர்படுத்துவதில் வெற்றி பெற்றப்பின், மேலும் முதல்முறை செயல்படுத்துபவர்களுக்கு, தங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு, தங்கள் சமையலறையே செய்முறைக் கூடமாக இருக்கிறது. இதை அடைவதற்கு நுண் பதப்படுத்துதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு முக்கியமானதாகும். அதாவது, உணவு பதப்படுத்துதல் குறித்து நேரடி செயல்முறை விளக்கம் / பயிற்சியை அறிவியல் ரீதியாக அளித்து, அதனை பயிற்சி பெற்றவர்கள் தங்கள் வீடுகளில் பிரதிபலிக்க செய்யலாம். அகிலேஷ் போன்று, முசாபர்பூரை சேர்ந்த மற்றொரு வளர்ந்துவரும் தொழில்முனைவோர், ‘ பல்வேறு பழங்களை கொண்ட தோப்பும், பொிய கனவும் எனக்கு உள்ளது, ஆனால் பொிய செயலை அவசரமாக செய்வதற்குமுன் பழம் பாதுகாப்பதற்கு தேவையான அடிப்படை கோட்பாடுகள் குறித்து அறிய வேண்டும், மேலும் விற்கப்படுகின்ற மற்றும் தயாரிக்க முடியும் பொருளை செய்ய வேண்டும் என்று கூறினார்.

நிறுவன உதவிகள்
சிறுதொழில் ஒவ்வொரு படி எடுத்துவைக்கும்போது, தொழில்நுட்ப திறன் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த உதவிகள் வழங்கி நீண்ட தூரம் செல்வதற்கான வழிகாட்டியாக இருக்கிறது. ஐசிஏஆர்,விவசாய பயிற்சி மையம், வேளாண்மை பல்கலைக் கழகங்கள் போன்ற பொது மையங்களில் உள்ள வேளாண் தொழில் வளர்ச்சி மையம் மற்றும் தொழில்நுட்ப பாிமாற்ற பிரிவு சிறிய தொழில்களை வளர்க்கவும், உணவு பதப்படுத்துதல் உட்பட வேளாண்மையில் சில தொடக்கங்களை வளர்ப்பதற்கும் துணை நிற்கிறது. ஐசிஏஆர்-ன் ஆர்சிஎல் அமைப்பில் தொழில்முனைவோர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிற்சிக்குப்பின் பங்கேற்ப்பாளர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதலோடு பொருட்களை உருவாக்குவதற்கான பாிசோதனை கருவிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மையத்தின் அறுவடைக்குப்பின் கருந்தரங்கும் மற்றும் பதப்படுத்துதல் வசதிகள் வழக்கத்தின் அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகிறது. வளர்ச்சியாளர்களும் அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதிலும் எப்எஸ்எஸ்ஏஐ உரிமத்தோடு உள்ளடக்கிய இதர முக்கிய சான்றிதழ்கள் பெறுவதற்காக வழிகாட்டப்படுகிறது. இவை அனைத்தும் பதப்படுத்துவதில் ஏற்படும் ஆபத்தை தடுக்க தொழில் செய்துவரும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது.

பொியளவு கனவை, சிறியளவில் துவங்குதல்
கனவு காண்பது வேறு, அந்த கனவை யதார்த்தமாக மாற்றுவது மற்றொன்று. உணவுத் தொழில், பல்வேறு பொிய பன்னாட்டு நிறுவனங்களால் ஆதீக்கம் செலுத்தப்படுகிறது. போட்டி போட்டு, வெற்றி பெறுவது சாதாரண பணி அல்ல. பொியளவில் முதலீடு செய்வதென்று முடிவு செய்துவிட்டால், எந்த நுண்-செயல்பாட்டாளரும் முதலில் பொருளை தயாரித்து, விற்பனை செய்து பாிசோதித்து,பின்னர் நுகர்வோரின் ஏற்கும்தன்மை அறிந்துகொள்வது மிக முக்கியம். செயல்பாட்டாளருக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், இந்த பொருள் சந்தையில் விற்கும் என்று உறுதி செய்தபின்னரே முதலீடு செய்ய வேண்டும். பொருட்கள் விற்பனையில்லாத நிலையில்,பொிய முதலீடு தொழிலை ஆபத்தில் கொண்டு சேர்க்கும், மேலும் இது பொிய நஷ்டத்தில் முடியும். ‘உள்ளூர் சந்தையில் நிலவும் தேவைகளுக்கேற்ப முதலில் சிறியதாக பழ பதப்படுத்துதலை துவங்குவதே எனது திட்டம். எனது பொருட்களை பிரபலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு, சந்தைபடுத்துதலை விரிவாக்குவேன். எனது தொழிலின் வளர்ச்சிக்கு பொருந்தகூடிய வகையில் முதலீடு செய்து விரிவாக்கும் திட்டத்தை பெற்றுள்ளேன் என்று கூறினார்

முடிவுகள்
சாத்தியமான தொழில் மற்றும் உறுதியான வாய்ப்புகள் இந்த லிட்சி பதப்படுத்துதலில் உள்ளது. இந்த பதப்படுத்துதல் முறை புதிய லிட்சி விற்பனை செய்யும்போது ஏற்படும் ஆபத்து மற்றும் அச்சுறுத்தலை தடுப்பதற்கான முக்கிய கருவியாக இருக்கிறது. பழம் பதப்படுத்துதல் மூலம் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வளர்ச்சி, இதர தொடர்புடைய தொழில்துறைகளான, பொட்டலம் செய்வது, தேவையான உணவுபொருட்கள், தண்ணீர் துாய்மை செய்தல், செயல்பாட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள், இ-வர்த்தகம் போன்றவைகளும் சேர்ந்து வளரும். சமீபகாலமாக முஸாபர்பூரிலும் அதை சுற்றியும் லிட்சியில் சில நுண் செயல்பாட்டாளர்கள் உருவாகியுள்ளனர். ஸாஹி லிட்சி என்று புவியியல் குறியீட்டில் பதிவு மற்றும் பிஎம்எப்எம்இ திட்டத்தின் கீழ் தற்போது உள்ள நிறுவனத்தின் உதவியும், இந்த பதப்படுத்துதல் துறைக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இதற்கு அப்பாற்பட்டு, இதே பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை மற்ற பழம் மற்றும் காய்கறிகளில் செயல்படுத்தி வருடம் முழுவதும் ஒவ்வொரு பட்டத்திலும் விளையும் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்டவணை: திரு.அனோஜ் குமார் ராய் லிட்சி தோப்பிலிருந்து லிட்சி பதப்படுத்துதல் மூலம் அதிகாித்துவரும் பண்ணை வருமானம்

விற்பனை வகை புதிய பொருளை விற்பனை செய்தல் பதப்படுத்துதல் மொத்த வருமானம்
மொத்தமகசூலும் இடைத்தரகாிடம் விற்கபடுகிறது (பாரம்பாிய முறை) 3000கி.கி ரூ.40,000/-
பாதிமகசூல் பதப்படுத்துதல் (2020 அனுபவம்) 2500 கி.கி 500கி.கி  ரூ.1,12,500/-
மொத்தமகசூல் பதப்படுத்துதல்  3000கி.கி. ரூ.4,75,000/-

 

 

 

 

 

 

ஆலம்வாடி பாங்கனீர், எஸ். கே. பர்பே, வினோத் குமார், விஷால் நாத், எஸ். டீ. பாண்டே மற்றும் அபேகுமார்.


Alemwati Pongener
Scientist (Fruit Science)
ICAR-National Research Centre on Litchi
Muzaffarpur, Bihar.
E-mail: alemwati@gmail.com

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2021, வால்யூம் 23, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...