மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான டிஜிட்டல் தளம்


மொபைல் போன்,அதன் மலிவான விலை,அணுகக்கூடிய வசதி மற்றும் பரவலான நெட்வொர்க் ஆகியவற்றின் காரணமாக சிறு உழவர்களுக்கு தகவல் பரப்புவதற்கான விருப்பமான டிஜிட்டல் கருவியாக உருவாகிவருகிறது. இருப்பினும், அவற்றை பயன்படுத்தும் விகிதங்கள் டிஜிட்டல் அல்லாத அணுகுமுறைகளுடன் இணைக்கும் போது அதிகமாக உள்ளது.


வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் உழவர்களை இணைப்பதில் அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் விரிவாக்க சேவைகள் முக்கியமானவை. பண்ணை ஆலோசகராக செயல்படுவதால், நல்ல வேளாண்மையும் மற்றும் பயிர் மேலாண்மை நடைமுறைகள் குறித்து உழவர்களுக்கு கற்பிப்பதோடு மாறிவரும் தட்பவெப்ப நிலையைச் சமாளிக்க உழவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் வெளியேறும் விரிவாக்க இயந்திரங்கள் போதுமானதாகவோ அல்லது அணுகக்கூடியதாகவோ இல்லை. குறிப்பாக தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மேலும் இந்த அமைப்பு பெரும்பாலும் உற்பத்தி மேம்பாட்டை கையாளுகிறது. அதேநேரத்தில் சந்தைப்படுத்துதல் அம்சத்தை புறக்கணிக்கிறது.

டிஜிட்டல் வேளாண்மை நேரடியாக உழவர்களின் சாியான நேரத்தில் மற்றும் பொருத்தமான தகவல்களை அணுகுவதை ஆதாிக்கும். அத்துடன் அறிவை உருவாக்குதல் மற்றும் பகிர்தல் மூலம் வேளாண் சமூகத்தை மேம்படுத்துகிறது. கடந்த காலத்தில்,தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவை கிராமப்புற சமூகங்களைச் சென்றடைய பயன்படுத்தப்பட்ட முக்கிய மின்னணு ஒலிபரப்புத் தொழில்நுட்பங்களாக இருந்தன. இருப்பினும், கடந்த இரண்டு தசாப்தங்களில், இணையம் மற்றும் மொபைல் அடிப்படையிலான சேனல்கள் உருவாகியுள்ளன. தகவல் மற்றும் தொடர்புபடுத்தும் கருவிகளில் இப்போது கணினி அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தகவல் களஞ்சியங்கள் (ஆன்லைன் மற்றும் ஆப்லைன்) மற்றும் டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ, மொபைல் போன்கள் போன்ற தகவல் தொடர்பு கருவிகள் உள்ளன.

மொபைல் போன், அதன் மலிவான விலை, அணுகக்கூடிய வசதி, குறைந்தபட்ச திறன் தேவை, பரவலான நெட்வொர்க் போன்றவற்றின் காரணமாக, சிறு உழவர்களுக்கு முக்கியமான டிஜிட்டல் கருவியாக உருவெடுத்துள்ளது. உழவர்களுக்கு நேரடியாக தகவல்களைத் தொிவிக்க மொபைல்களை பயன்படுத்தி பல முயற்சிகள் உள்ளன. இதில் ஐ.கே.எஸ்.எல் (இப்கோ கிசான் சஞ்சார் லிமிடெட், ஏர்டெல் உடன் இணைந்து), மொபைலில் மண்டி (பி.எஸ்.என்.எல் மற்றும் உத்திர பிரதேச சந்தைப்படுத்துதல் வாரியம்) ராய்ட்டர்ஸ் மார்க்கெட் லைட் மற்றும் நோக்கியா லைப்டுல்ஸ் மற்றும் mKRISHI® ஆகியவை அடங்கும்.

தகவல் தேவை மதிப்பீடு
உழவர்களின் தகவல் தேவைகளை நிவர்த்தி செய்ய, தொடர்புடைய உள்ளடக்கம் ஐ.டி.சி திட்டங்களின் முக்கிய அங்கமாகும். ஒரு உழவரின் நிலைக்கு எந்த அளவிற்கு உள்ளடக்கம் தனிப்பயனாக்கப்பட்டு உள்ளூர் மயமாக்கப்படுகிறது என்பது அதன் பொருத்தத்தை பாதிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு தளத்தை உருவாக்க, முதலில் உழவர்களின் தகவல் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
டேராடூன் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் உள்ள 21 கிராமங்களில் 2016-17ல் அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. விகாஸ் நகர், கல்சி மற்றும் ராய்ப்பூர் போன்ற பல்வேறு கிராமங்களின் முக்கிய பயிர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. மக்காச்சோளம், மண்டுவா,புறாப் பட்டாணி,நெல்,லோபியா போன்றவை காரீப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. கோதுமை, பார்லி, பருப்பு, கடுகு, தோரியா போன்றவை ராபி பருவத்தில் ஆதிக்கம் செலுத்தும் பயிர்களாக இருந்தன.

தோட்டக்கலைப் பயிர்களை பொருத்தவரை, மா, கொய்யா, பலா,  லிச்சி, எலுமிச்சை போன்ற பழங்களும், தக்காளி, இஞ்சி, கொலகேசியா, மிளகாய், பட்டாணி, மஞ்சள் போன்ற காய்கறிகளும் மானாவாரி சூழ்நிலையில் அப்பகுதி உழவர்களால் பயிரிடப்பட்டன. திட்டத்தின் பகுதியில் நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரங்கள் குளம், ஆறு போன்றவையாகும்.

அரசின் துறைகளின் விரிவாக்கச் சேவைகளுக்கு உழவர்கள் மத்தியில் குறைந்த அணுகல் உள்ளது என்று ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் தகவல்களின் ஆதாரம் செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் வானொலியாக இருந்தது. 85 சதவீத உழவர்கள் மொபைல் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தொியவந்துள்ளது. அவர்களின் மொபைல் வகை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.வி.ஆர் ஆகவும், பெரும்பாலான விவசாயிகள் ஐவிஆர் வகை செல்பேசிகளை பயன்படுத்துகின்றனர்.

தகவல் தேவைகளைப் பொருத்தவரை, திட்டத்தின் பகுதியின் அனைத்து உழவர்களும் பயிர் தொடர்பான தகவல்கள் (தானியங்கள் மற்றும் பயறு வகைகள்) மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து ஆர்வமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 83 சதவீதத்திற்கும் அதிகமானோர் இயற்கை வள மேலாண்மை பற்றி தொிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். அவர்களில் ¾ பேர்; தோட்டக்கலைப் பயிர்கள் பற்றிய தகவல்களையும், அதைத் தொடர்ந்து மண் ஆரோக்கியம் தொடர்பான தொழில்நுட்பங்களைப் பற்றியும் தொிந்துகொள்ள தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினர். 50 சதவீதத்திற்கும் அதிகமான உழவர்கள் சந்தை, கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு வேளாண் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றிய தகவல் தேவையையும்,வானிலை தொடர்பான தகவல்களின் தேவைகளையும் கலந்துரையாடலின்போது வெளிப்படுத்தினர்.

எம்.கிரிஷ்ஷி ஆர்.பி.ஏ.டபுள்யு.எஸ்
அடிப்படைத் தகவல்கள் கணக்கெடுப்புக்குப் பிறகு, டேஹ்ராடூனில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்-ஐ.ஐ.எஸ்.டபுள்யு.சி -யில் நீர் மற்றும் மண் மீதான தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளுக்கான ஐ.சி.டி -நெட்வோர்க் (பி.ஏ.டபுள்யு.எஸ்) உருவாக்கப்பட்டது. இதில் உழவர்கள், உள்ளீட்டு விநியோகஸ்தர்கள்,விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்கள் குறிப்பாக தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் பணிபுரிகின்றனர். மண் மற்றும் நீர் பாதுகாப்பு பற்றிய அறிவை முதன்மையாக பகிர்ந்துகொள்வதற்காக இது உருவாக்கப்பட்டது.

mKRISHI® PAWS ஆனது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்டின் தொழில்நுட்ப ஆதரவுடன் வேளாண்மை மற்றும் மண் மற்றும நீர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை/நடைமுறைகளை வடமேற்கு இமயமலைப் பகுதி உழவர்களிடையே பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் வெவ்வேறு பங்குதாரர்களால் பயன்படுத்தப்படும் தளம் அட்டவணை 1 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளடக்க மேம்பாடு தற்போதைய வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பின் அடிப்படையில் உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலையான செய்திகள் உருவாக்கப்பட்டு, சுத்திகாிக்கப்பட்டு, நிறுவனத் திட்டக்குழுவால் அனுப்பப்பட்டன. பருவம் மற்றும் பயிர் வளரும் நிலைகளின் அடிப்படையில் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு செய்திகள் அனுப்பப்படுகின்றன. மொத்தம், பல்வேறு வேளாண் அம்சங்கள் தொடர்பான 136 குறிப்பிட்ட செய்திகள் பதிவு செய்யப்பட்ட உழவர்கள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்கள், உள்ளீட்டு விநியோகஸ்தர்கள் மற்றும் மேம்பாட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்டன.

உள்ளடக்கம் வெவ்வேறு கூறுகள்/கருப்பொருள்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் (35 செய்திகள்) மற்றும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு அம்சங்கள் (21 செய்திகள்) ஆகியவற்றை தொடர்ந்துபயிர் பாதுகாப்பு தொடர்பான 44 செய்திகள் உருவாக்கப்பட்டு மொபைல் மூலம் உழவர்களுக்கு அனுப்பப்பட்டன.

பயன்படுத்த மற்றும் பரவாலக்கம் செய்ய:
பயன்பாட்டின் மூலம் வழங்கப்படும் சேவையானது உழவர்களின் தனிப்பட்ட தகவல்கள்,கிராமங்களின் இருப்பிடம், விளைந்த பயிர்கள், மண்ணின் நிலை மற்றும் உழவர்களின் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மூலம் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பிறகு ஆண்டராய்டு பயனர்கள் மட்டுமே பயன்பாட்டை பதிவிறக்கி அணுக முடியும். ஐ.வி.ஆர் பயனர்கள் செய்திகளையும், விழிப்புட்டல்களையும் மட்டுமே பெற முடியும். மண் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பொருத்தமான எஸ்.எம்.எஸ் மற்றும் அவ்வப்போது குரல் பதிவு செய்த விழப்புட்டல்களை அவர்கள் பெற்றனர். (பயிர் சார்ந்தது)

உழவர்கள் கேள்விகளை எழுப்பலாம். பாதிக்கப்பட்ட பயிர்களின் படங்கள், ஆடியோ செய்திகளை mKRISHI® PAWS மொபைல் ஆப் மூலம் அனுப்பலாம் மற்றும் கேள்விகளுக்கு இணையதள வலை கன்சோல் சேவைகள் மூலம் நிபுணர்களால் பதிலளிக்கலாம். மேலும் குரல் மற்றும் உரை விழிப்புட்டல்கள் அனைத்து உழவர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த தளம் உழவர்களுக்கு புகைப்படதொகுப்பு, வானிலை தகவல், மண் சுகாதார அட்டைகள் ஆகியவற்றை அணுகுவதற்கு வழி செய்கிறது.

விவசாயிகள் தங்கள் கருத்துக்களை அனுப்பி பதில்களைப் பெறலாம். பயன்பாடு இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளிலும கிடைக்கிறது. பயனர்கள் mKRISHI® PAWS செயலியை கீழ் வரும் இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்யலாம். https://www.tcsmkrishi.com/app/mpaws/  தற்போது மலைப்பகுதியைச் சேர்ந்த 400க்கும் அதிகமான உழவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கருத்து மற்றும் தாக்கம்:
தேவை அடிப்படையிலான உள்ளடக்கம், பொருத்தம், நடைமுறைத்தன்மை, புரிந்துகொள்ளக்கூடிய தன்மை, நீளம் மற்றும் செய்திகளின் தரம் போன்ற பின்வரும் அளவுருக்கள் மூலம் செய்திகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அனுப்பப்பட்ட தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் உழவர்களுக்கு அவற்றின் தௌிவு ஆகியவை குறித்து 240 உழவர்களுடன் தொடர்புகொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. பெரும்பாலான விவசாயிகள் (80.41 சதவீதம்) அனுப்பிய செய்திகள் தேவையின் அடிப்படையில் இருப்பதாகத் தொிவித்தனன். சுமார் 85 சதவீத உழவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப செய்திகள் இருப்பதாக தொிவித்தனர். பெரும்பான்மையான உழவர்கள் (77.50 சதவீதம்) இந்தச் செய்திகள் நடைமுறைக்குரியவை என்றும், அவர்களின் பண்ணை தேவைகளுக்குப் பொருந்தும் என்றும் தொிவித்தனர். பெரும்பாலான உழவர்கள் தங்கள் மொபைலில் பெறப்பட்ட உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வது எளிது என்றம்,தொழில்நுட்பச் சொற்களை எளிமையாக பயன்படுத்துவதன் மூலம் செய்திகளின் தரம் நன்றாக இருப்பதாகவும் தொிவித்தனர்.

உழவர்கள் வயல்களில் தொழில்நுட்ப பயன்பாட்டின் அடிப்படையில் mKRISHI® PAWS சேவையின் தாக்கும் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதைச் செய்வதற்காக, வெவ்வேறு தகவல் அணுகல் உள்ள இரண்டு தொகுதிகளில் உள்ள உழவர்கள் ஒப்பீடு செய்யப்பட்டனர். டேராடூனில் உள்ள கல்சி பிளாக்கில் உள்ள உழவர்களுக்கு குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பப்பட்டன. அதேசமயம் ராய்ப்பூர் தொகுதியில் உள்ள உழவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதைத் தவிர, திறன் மேம்பாட்டிற்கான பிற முறைகள் கூடுதலாக வழங்கப்பட்டன.

டேராடூனில் உள்ள கல்சி பிளாக்கில் உள்ள கிராமங்களின் முதல் தொகுப்பில் பதிலளித்தவர்களுக்கு குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பப்பட்டன. தத்தெடுப்பின் அதிகபட்ச விகிதம் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று கண்டறியப்பட்டது. சுமார் 45 சதவீத உழவர்கள் செய்திகளாக பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தினர். சுமார் 25 சதவீத உழவர்கள் மண்ணின் ஊட்டச்சத்து தகவலைப் பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து 20 சதவீத உழவர்கள் குறுஞ்செய்தி மூலம்; பெறப்பட்ட வேளாண்மைத் தொகுப்பை பின்பற்றினர்.

மண் மற்றும் நீர் பாதுகாப்பில் இயற்கைவள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் தொழில்நுட்பங்கள் குறைவாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. செயலி மூலம் பகிரப்பட்ட இயற்கை வளஆதாரங்களின் மேலாண்மை குறித்த நடைமுறைகளை 10 சதவீத விவசாயிகள் மட்டுமே பின்பற்ற முடிந்தது.
டெஹ்ராடூனின் ராய்ப்பூர் தொகுதி கிராமங்களின் இரண்டாவது தொகுப்பில், குறுஞ்செய்திகள், வெளிப்பாடு வருகைகள், கூட்டங்கள், குழு விவாதங்கள், மண் மற்றும் நீர் பாதுகாப்பு, பிற கூறுகள் பற்றிய பயிற்சிகள் மற்றும் அவர்களின் அறிவை வளப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருந்தது. 91 சதவீதத்திற்கும் அதிகமான உழவர்கள் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும், 83 சதவீதம் வானிலை தகவல்களையும், 66 சதவீதம் மண் ஊட்டச்சத்து தகவலையும், 45 சதவீதம் பேர் தங்கள் வயல்களில் சமீபத்திய வேளாண் நடைமுறைகளையும் பின்பற்றினர்.

டிஜிட்டல் கருவிகள் பரவலான அணுகல் மற்றும் அணுகளை எளிதாக்க உதவினாலும், படித்த மற்றும் வளம் நிறைந்த உழவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதை ஆய்வு தௌிவாகக் காட்டுகிறது. வளம் குறைந்த மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான கல்வியறிவு செய்ய விவசாயிகளுக்கு, தகவல்களுடன், வேளாண்மை மற்றும் கிராமப்புற கண்டுபிடிப்புகளை பின்பற்றுவதற்கு உள்ளீடுகள், தொழில்நுட்ப வழிகாட்டுதல், ஊக்கம், ஆதரவு, பயிற்சிகள் மற்றும் பிற ஆதரவு ஆகியவை தேவைப்படுகின்றன. மேலும், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் அதிக இடம் மற்றும் தளம் சார்ந்தவை. அவை செய்திகள் மூலம் மட்டும் விளக்கமுடியாது. எனவே, செய்திகள் மட்டுமே நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள உதவாது. தொழில்நுட்பத்தைப் பரப்புவதற்கும் பின்பற்றுவதற்கும் டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் அல்லாத அணுகுமுறையின் கலவை தேவையாக உள்ளது.

அட்டவணை 1:   சேவை மெட்ரிக்ஸ் – பல்வேறு வகையான பயனர்கள்

பங்குதாரர்/பயனர் தளம் முதல்கட்ட திட்டத்திற்கு கிடைக்க பெற்ற சேவைகள்
1. வேளாண் நிபுணர் இணையதள கன்சோல  இணையதள கன்சோல் சேவைகள்:

1. உழவர் பதிவு (தனிப்பட்ட தகவல், நிலம் தொடர்பான தகவல், பயிர் தகவல், மண் தகவல்)

2. மண் மற்றும் நீர் மேலாண்மை அளவிடப்படுகிறது. (டிஜிட்டல் தரவுத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டு உழவர்களுக்காக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை சேர்க்கவும், நீக்கவும்,மாற்றவும்)

3. புகைப்பட தொகுப்பு – (மொபைல் பயன்பாட்டு உழவர்களுக்கு)

4. ஆலோசனை: (உள்ளூர் மொழி குறுஞ்செய்திகளில் மொபைல் பயன்பாட்டு உழவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிக்கும்)

5. உரை மற்றும் குரல் விழிப்பூட்டல்கள்

6. அறிக்கைகள்

2.  மொபைல் ஆப் உழவர்கள் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் ஜாவா ஆப் (இணையம் வழியாக) 1. மொபைல் பயன்பாட்டின் அம்சங்கள்

2. மொபைல் பயன்பாட்டிலிருந்து பதிவு செய்வதன் மூலம் கேள்விகளை எழுப்பலாம், மேலும் கேள்விகளுடன் புகைப்படங்களையும் பகிரலாம்.

3. வானிலை தகவல்

4. மண் சுகாதார அட்டை (மண் பாிசோதனைக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையிலான உழவர்களுக்கு)

5. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் புகைப்பட தொகுப்பு6. கருத்து.

3, மொபைல் ஆப் இல்லாத உழவர்கள்  சாதாரண மொபைல் செல்பேசிகள் (இணையதள வசதி அற்றது)  சாதாரண தொலைபேசி பயனர்கள்:

1. மண் மற்றும் நீர் பாதுகாப்பு (குறிப்பிட்ட பயிருக்கு) தொடர்பான குறுஞ்செய்தியை அவ்வப்போது பெறலாம்.

2. மண் மற்றும் நீர் பாதுகாப்பு (பயிர் குறிப்பிட்டது) தொடர்பான குரல் எச்சாிக்கைகள் அவ்வப்போது பெறப்படும்.

பாங்கி பிஹாரி, ராஜேஷ் பிஷ்னோய், லகான் சிங் மற்றும் சுரேஷ் குமார்


Bankey Bihari 
Principal Scientist (Agricultural Extension) and I/c Head (HRD&SS),
E-mail: biharibankey_bankey@yahoo.co.in

Rajesh Bishnoi 
Scientist (Agricultural Extension),
E-mail: rajesh3017@gmail.com

Shri Suresh Kumar 
ACTO (Agricultural Extension)
ICAR-IISWC,
Dehradun
E-mail: sureshiiswc@gmail.com

Lakhan Singh 
Director,
ICAR-Agricultural Technology Application Research Institute (ATARI)
(Zone-VIII), Pune,
Maharashtra.
E-mail: lakhanextn@gmail.com 


மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2020, வால்யூம் 22, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...