மீன் வளர்ப்பிற்கு டிஜிட்டல் தீர்வு


பண்ணை மோஜோ என்று பொருள்படும் பார்ம்மோஜோ மீன் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு டிஜிட்டல் தீர்வாக இருக்கிறது. பண்ணை தகவல்கள் அடிப்படையில், இந்த சுலபமான கைபேசி செயலி, தண்ணீர் தரம், தீவன பயன்பாடு மற்றும் குளத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கிய அறிகுறி ஆகிய தகவல்களை அளிக்கிறது.


மீன் வளர்ப்பு தொழில்நுட்பம், கடந்த பத்தாண்டுகளாக ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில், 208.9 பில்லியன் அமொிக்க டாலர்கள் அடைய தயாராக இருக்கும் நிலையில், மீன் வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைப்பது, உலக வளர்ச்சியில் கூடுதலான முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஐக்கியநாடுகள் சபையின்,உணவு மற்றும் வேளாண் நிறுவனம் பொருத்தவரையில், 2030 ஆம் ஆண்டிற்குள், இந்தமீன் வளர்ப்பு உலக உணவு மீன் நுகர்தலில் மூன்றில் இரண்டு பங்கை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீன் வளர்ப்பில் உள்ள பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண, டிஜிட்டல் மாற்றம் தற்போது கட்டாயமாகும். இந்த மாற்றத்திற்கு, பண்ணைகள்,அரசு முகமைகள், நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆகிய அனைவரின் இணைந்த முயற்சிகள் தேவை. இவர்கள் ஒன்று கூடி பணி செய்தால், விவசாயிகளுக்கான சாியான தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்பதை உறுதியாக கூறலாம். டிஜிட்டல் மாற்றம் மீன் வளர்ப்பில், வெறும் தொழில்நுட்பத்தை சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தாமல் தொழில் வளர்ச்சி சார்ந்த மாற்றத்தையும் உட்படுத்தியுள்ளது. உதாரணமாக, இ-மீன் வளர்ப்பு என்ற தொழில்நுட்பம் , இணைய வழியில் பிரச்சனைகளுக்கு தீர்வு குறிகோளாகக் கொண்டு, மீன்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில் , அதற்கு தேவையான தீவனத்தை கண்காணித்து, கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

டிஜிட்டல் தீர்வுகளின் சக்தி

மீன் வளர்ப்பு தொழிற்சாலையில் ஒவ்வொருவரும் தொடர்புகொள்வது, மத்திய உத்தரவு மையத்திற்கு முக்கிய புள்ளி விவரங்களை அனுப்பி அவற்றின் தகவலை இணைய பக்கத்தில் ஏற்றுதல். தற்போது இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆப்ரேட்டருக்கு அளித்து முழுமையான விளக்கத்தை காணும் வசதி உருவாகிறது. பொருட்களின் இணையம் என பொருள்படும் ஐ.ஒ.டி தளத்தின் கருவி, குளம் மேம்படுத்தும் முறையை உருவாக்குகிறது. பொருட்களின் இணையத்தில் அறிவுசார் அமைப்பை வடிவமைத்து சென்சார்களை பயன்படுத்தி, குளத்தில் உள்ள தண்ணீரின் வெப்பம், அமிலம் மற்றும் உவர்த்தன்மை அறிதல், கரைந்த ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீரின் அளவு போன்ற விபரங்கள் எடுக்க முடிகிறது. சூரிய சக்தி மற்றும் சூரிய சக்தியில்லாத சென்சார்கள் இருக்கின்றன. இந்த அமைப்பு 24 மணிநேரமும் மீன் மற்றும் இறால் வளர்ப்பை, சுலபமாக கண்காணிக்க முடிகிறது. குளத்தில் வளர்க்கக்கூடிய அனைத்து உயிரின் நிலையை கைபேசி அல்லது கணினி மூலம் எந்நேரமும் கண்காணிக்கமுடியும். அதனால் விவசாயிகள் ஓய்வெடுப்பதற்கு நேரம் கிடைக்கிறது. மேலும், கூலியாட்களின் செலவும் குறைகிறது. இந்த அமைப்பு மனிதனுக்கும், இயந்திரத்திற்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் தொலையியக்கி, மேகம் மற்றும் பொிய தரவுகள் களஞ்சியமாக பார்வைக்கு வைக்கப்படுகிறது. தினமும் பதிவு செய்வதும், மேம்படுத்தியும் வருவதை வரைபடமாக மாற்றி வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தினசாி மாற்றங்களை சுலபமாக புரிந்துகொள்கின்றனர்.

நுண்ணறிவு கட்டுபாட்டு மையம், காற்று அறியும் கருவி, உண்ணும் கருவி, தண்ணீர் வெப்பத்தை அறியும் கருவி, உப்புத் தன்மை கருவி, அமிலத் தன்மை அறியும் கருவி, அமோனியா நைட்ரஜன் அறியும் கருவி, நைட்ரேட் அறியும் கருவி, தண்ணீர் பம்ப், ஜெனரேட்டர் இணைப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம். மீன் வளர்ப்பு குளத்தில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், இந்த நுண்ணறிவு கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தகவல் அளிக்கிறது. காற்று அறியும் கருவி, கரையப்பட்ட ஆக்ஸிஜன் அளவின் அடிப்படையில் நுண்கட்டுப்பாட்டு கருவி மூலம் , தானாகவே மின்சாரம் இயங்கும் அல்லது அணையும்.
மீன் மற்றும் இறால்களுக்கு தீவனம் வழங்கும் கருவியில் நிகழ்வு திட்டத்தை உள்ளீடு செய்து தீவனம் உண்ணும் நேரம் மற்றும் தீவனப் பயன்பாடு ஆகியவற்றை மாற்றலாம். 12 வோல்ட் மின் சக்தி கொண்ட பேட்டாி, மோடம் மற்றும் வழிகாட்டி ஆகியவை உள்ளடக்கிய உள்ளூர் இணைய அமைப்பு தரவுகள் அனைத்தையும் அனுப்பும், பெற்றுகொள்ளும் பணியை சென்சாரிடமிருந்து க்லௌட் சர்வருக்கும் அல்லது க்லௌட் சர்வரிடமிருந்து காற்று அறியும் கருவி அனுப்பப்படுகிறது. இது குறுந்தகவல் வரிசைப்படுத்தும் தொலைபேசி போக்குவரத்து கருவியின் பயன்பாட்டு வரைமுறைகள் அடிப்படையில் பணி செய்கிறது.
க்லௌட் கணினி மயமாக்குதல் , கணினி அமைப்பு ஆதாரங்களில் கிடைக்கும் இது, மிகவும் தேவையான ஒன்றாகும். குறிப்பாக, தரவுகள் சேமிப்பதற்கும் (க்லௌட் சேமிப்பு செயலி), மற்றும் தரவுகள் கிடைக்க செய்வதேயாகும். இது நமது வன்பொருள் போலவோ அல்லது உள்ளூர் இணைய சேமிப்பு அமைப்போ கிடையாது. இருவாகா தொழில்நுட்ப தனியார் நிறுவனம், விஜயவாடா, ஆந்திர பிரதேசம் , நுண்ணறிவு கட்டுபாட்டோடு உள்ள காற்று அறியும் மற்றும் தீவனம் வழங்கும் கருவியோடு, குளத்தில் உண்மை நேரத்தை கண்காணிப்பதற்காக, மீன் வளர்ப்பு குள மேலாண்மை தீர்வுகள் அடிப்படையாகக் கொண்ட செயலியை உருவாக்கியுள்ளன. கரைந்த ஆக்ஸிஜன் குளத்தில் குறைந்தால் இந்த அமைப்பு அபாய ஒலியெழுப்பும் திறன் கொண்டது.

தொழிலின் புதிய கண்டுபிடிப்பாளர்கள், எதிர்காலத்தில் பொிய தரவுகளை (Big data), கணியம் (Hadoop) என்ற இணைய தளத்தில் சேமித்து வைக்கப்படும் என்று நம்புகின்றனர், இது தொழில் வளர்ச்சியின் ஒரு முக்கிய கூறாக மாறும் ,மேலும் உற்பத்தி மகசூலில் தாக்கமும் ஏற்படுத்தும்.

பொிய தரவுகள், எந்த ஒரு தனி மனிதனும் தானியங்கி அமைப்புகளின் உதவியோடு அதிகளவிலான தரவுகளில் பணிசெய்வது, சாத்தியமில்லாத ஒன்று. தரவுகளானது, நுகர்வோரின் பணபாிவர்த்தனை பதிவேடாக இருக்கலாம். உற்பத்தி தரவுகள், இணைய போக்குவரத்து பதிவேடுகள், தானியங்கி, செயற்கைக்கோள்கள், சென்சார்கள் மற்றும் பொருட்களின் இணையம் ((IoT) ஆகியவைகளாக இருக்கலாம்.

சில டிஜிட்டல் இணையதளத்தின் முக்கியமானவைகளில் ஒன்று, ஐகோவாட்டிக். இது இறால் அளவு, தண்ணீர் தரம், தீவனமுறைகள், ஆரோக்கிய மற்றும் வானிலை சூழ்நிலைகள் ஆகியவற்றின் தரவுகளை ஆய்வு செய்யும் டிஜிட்டல் இணையதளம், விவசாயிகள், தங்களின் தொழில் நுட்பத்தில் முடிவு எடுக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. அக்வாநெட்டிக்ஸ் (Aquanetix), அக்வா மேனேஜர் (Aqua Manager), அக்வாட்ராக்கர் (Aquatracker), ஸ்மார்ட் வாட்டர் ப்ளானட் (Smart Water Planet) ஆகிய தளங்கள் மீன் வளர்ப்பு மேலாண்மையில் ஒருங்கிணைந்த தீர்வுகள், ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு மற்றும் மீன் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அளிக்கிறது. கேஜ் ஐ (Cage eye) தளம், மீனின் இயல்புத்தன்மையை கண்காணிப்பதற்கும், உணவுச்சக்கரத்தை தடையில்லாமல் பார்த்துகொள்ளவும் உதவுகிறது. ஆக்வா விஸ்டா (Aquavista) என்பது பொருட்களின் இணையதளம், இது நிறுவனத்தின் பார்வையில் மீன் வளர்ப்பு உற்பத்தி செயல்பாடு குறித்து விளக்கப்படுகிறது.

பார்ம் மோஜோ, செயற்கை நுண்ணறிவு சக்தி கொண்ட தளம்
இந்தியன் இறால் மற்றும் மீன் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு, டிஜிட்டல் தீர்வாக, பார்ம்மோஜோ என்ற செயலி மார்ச் 2018 ஆம் ஆண்டு பிரபலமாக இருந்தது. கைபேசி செயலி, விவசாயிகளுக்கு, குளத்தில் தண்ணீர் தரம், தீவனப் பயன்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய அறிகுறிகளில் அறிவுரை கூறப்படுகிறது. விவசாயிகள் பண்ணை அளவிலான தகவல்கள் செயலியில் உள்ளீடு செய்வதன் அடிப்படையில் அறிவுரை வழங்கும் ஒரு சுலபமான கைபேசி செயலியாகும்.

பார்ம்மோஜோ, பொிய தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பண்ணை அறிவுரை கருவியை இயக்க செய்கிறது. கைபேசி செயலி மூலம் கலந்துரையாடப்பட்டு பண்ணைகளிலிருந்து உண்மைநிலை உற்பத்தி தரவுகளை சேகாித்து அவற்றை கண்காணிக்கப்படுகிறது. பொருட்களின் தரவுகள் அல்லது பண்ணை மேம்பாட்டு கருவி மூலம் சேகாிக்கப்பட்ட தரவுகளையும் இந்த செயலி பயன்படுத்துகிறது. குள அளவிலான உற்பத்தி தரவுகள் அடிப்படையில், எதிர்நோக்கும் மாதிரியை அல்காரிதம் (Algorithm – வரையறைகளை பின்பற்றி கணக்குபோடுதல் அல்லது இதர பிரச்சனை தீர்க்கும் செயல்பாடுகள்) என்ற முறையை பயன்படுத்தி, தண்ணீர் தரத்தின் காரணிகள், தீவனம் உண்ணும் முறை மற்றும் ஆரோக்கிய மேலாண்மை ஆகியவற்றை உயர்த்துவதற்காக பிரச்சனைகளுக்கு உகந்ததீர்வுகள் மற்றும் அபாய எச்சாிக்கைகள் அளிக்கிறது.

ஸிப் என்ற செயலி, இதன் சேவைகளை இந்தோனேஷியா மற்றும் தென்கிழக்கு ஆசிய இறால் உற்பத்தி நாடுகளுக்கு விரிவாக்கம் செய்வதற்கு சிறந்த மேடையை அளித்து, விரைவுபடுத்தும் செயலி. இந்த செயலி, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு மற்றும் வளர்ச்சி முறையை மீன் ஆரோக்கியத்தை சார்ந்த ஆய்வு செய்கிறது. சாியான அளவில் இல்லாத காரணிகள் குறித்து விவசாயிகளுக்கு அபாய எச்சாிக்கை விடுக்கப்படுகிறது. தண்ணீர் தரம், உட்கொள்ளும் உணவின் அளவு, நோயின் அறிகுறிகள் மற்றும் உயிர்பொருள் மாற்றம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிப்பதை உறுதிபடுத்தி, அதன்மூலம் பண்ணை தீவன அணுகுமுறை சிறந்த செயல்திறன் கொண்டதாக தொிகிறது. பார்ம் மோஜோ நலிவான தீவனமாற்று விகிதாச்சாரத்தை கவனித்து, செயல்பாடுகள் மற்றும் உகந்த விளைபொருட்கள், விவசாயிகளுக்கு பாிந்துரைக்கப்பட்டு, குளத்தின் சுற்றுச்சூழல் இயல்பாக்க பயன்படுகிறது. இந்த அணுகுமுறை, நோயினை சாியாக அனுமானிக்கும் விகிதம், உற்பத்தி செயல்திறன் அதிகாிப்பது, உயர்தர இறால் உற்பத்தி, லாபத்தை அதிகாிப்பது, அன்றாட செயல்பாடுகளுக்காக வெளிப்பொருட்களை சார்ந்திருப்பது குறைக்கவும் இறால் விவசாயிகளுக்கு உதவி செய்கிறது.

தின சாகுபடி செயல்பாடுகளுக்கு தொழில்நுட்பவியராக சார்ந்திருப்பதை குறைக்கிறது மற்றும் செயல்பாட்டு செலவுகளை குறைக்கிறது. செயலியை பயன்படுத்துவது, மாத தவனை செலுத்தி விவசாயிகள் இருக்கும் மாதிரியின் அடிப்படைத் தன்மை கொண்டு விவசாயிகள் ஒரு குளத்துக்கு ரூபாய் 500 செலுத்தி, பார்ம் மோஜோ என்ற அடிப்படை திட்டத்தில் சேரலாம். இறால் சாகுபடியில், விவசாயிகளுக்கு உதவி செய்வதோடு, நிறுவனம் பலதரப்பட்ட இரண்டாம் நிலை வருவாய் ஆதாரங்களான முட்டை பொறிக்கும் கருவி, உணவு பதப்படுத்துதல், தீவன நிறுவனங்கள் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விளைப்பொருள்கள் உற்பத்தி செய்வது ஆகியவற்றில் பணிசெய்து வருகிறது. இந்த நிறுவனம், தண்ணீர் வாழ் உயிரினங்கள் வளர்க்கும் தொழிலில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, எதிர்காலத்தில் கடன் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
பார்ம் மோஜோ நிறுவனம், புதிய தலைமுறை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப செயல்பாடுகளின் பயன்பாடு குறித்து தொடர்ச்சியான இடைவெளியில் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தற்போது 1350 ற்கும் கூடுதலான பண்ணைகளை சிறந்த பண்ணையாக, பார்ம்மோஜோ செயல்படுத்தியதன் மூலம் உருவாக்கினோம் என்று இந்த நிறுவனத்திற்கு பின்னால் இருக்கும் மனிதனான ராஜா மனோஹர் சோமசுந்தரம் கூறுகிறார். இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறன் அதிகாித்து, தீவனங்கள் வீணாவது குறைகிறது என்ற விவசாயிகள் கருத்து கூறும்போது மிகவும் ஊக்கமாக இருக்கிறது.

எனினும், டிஜிட்டல் தீர்வுகள் பரப்புவதிலும் பாதகங்கள் இருக்கிறது. கல்வியறிவில்லாமை மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை பொது காரணங்களாக கருதப்படுகிறது . தொழில்நுட்ப விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் பரப்புவது ஒரு பொிய பிரச்சனை. ஏனென்றால் பெரும்பாலான விவசாயிகள், முன்னோர்கள் பாரம்பாியமாக பின்பற்றிவரும் சாகுபடி முறைக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். கைபேசியை தேவையற்ற முதலீடு என்று விவசாயிகள் கருதுவதால், அவர்களிடத்தில் கைபேசியோடு கொண்டு செல்லுதல் கடினமாக இருக்கிறது. மேலும் கலாச்சார மற்றும் மொழி தடங்களை சந்திப்பது கடினமாக இருக்கிறது.

தண்ணீர் தரம், உட்கொள்ளும் உணவின் அளவு, நோயின் அறிகுறிகள் மற்றும் உயிர்பொருள் மாற்றம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிப்பதை உறுதிபடுத்தி, அதன்மூலம் பண்ணை தீவன அணுகுமுறை சிறந்த செயல்திறன் கொண்டதாக தொிகிறது.

பார்த்தா பி பிஸ்வாஸ்


Partha P Biswas
Incharge-Fisheries Training & Culture Unit
Simurali Krishi Kendra
Simurali, Dist.-Nadia, West Bengal
E-mail: parthapbis2006@yahoo.co.in

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2020, வால்யூம் 22, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...