மக்களின் அறிவு – தகவமைத்துக் கொள்வதற்கு முக்கியமானது


பருவ நிலை மாற்றம் குறித்த கருத்தும், மலையகப் பகுதி சூழ்நிலை மண்டலங்களில் அதனை தகவமைத்துக் கொள்வதில் விவசாயிகளுக்கு உள்ள அறிவும், அனுபவமும் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பொிய அளவிலான வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களோடு சமாளிக்க உதவி வருகிறது. மக்களின் கருத்துக்கள் மற்றும் பாரம்பாிய அறிவும், பருவநிலை மாற்றம் குறித்து நம்மிடம் உள்ள அறிவியல் அறிவோடு ஒருங்கிணைப்பது, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான நமது திறமையை கட்டமைப்பதற்கான ஒரு வழியாக எடுத்துக் கொள்ளலாம்.


ஹிமாலய மலைத்தொடர் சுற்றுச்சூழல் என்பது பருவநிலை மாற்றத்திற்கு மிகவும் உணர்வுமிக்கது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பருவநிலை மாற்றத்தை சார்ந்து இருக்கும் துறைகளான வேளாண்மை, கால்நடைகள் மற்றும் காடு வளர்ப்பு நம்பியுள்ளனர். ஏனெனில் அவை உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்தையும் வாழ்வாதார ஆதரவு முறைகளை உடைக்கும் திறனை பெற்றுள்ளனர்.

மலைப்பகுதி வேளாண்மை என்பது அதிகளவிற்கு வானிலை மற்றும் பருவத்தில் பெய்யும் மழையை நம்பியே உள்ளன. பருவ நிலையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் பயிர் மகசூல் மற்றும் உணவு வினியோகத்திலும் மிகப் பொிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பகுதியில் உள்ள சமுதாயத்தினர் பருவ நிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் அதற்கு ஏற்றாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்வதிலும் பொிய அளவில் பாரம்பாிய அறிவை பெற்றுள்ளனர். எனவே 2014 முதல் 2016 வரை உத்தரக்காண்டில் உள்ளூர் மக்களின் பாரம்பாிய அறிவையும், பருவநிலை மாற்றத்தின் மீதான கருத்துக்ள மற்றும் தகவமைத்துக் கொள்ளும் அணுகுமுறைகள் குறித்தும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு அவை பின்பற்றப்பட்டது.

இந்த ஆய்வானது, மைய ஹிமாலயத்தின் உத்திரகாண்ட் மாநிலத்தின் 9 மலையக மாவட்டங்களான சாமோலி, ரூத்ரப்பியாக், பவ்ரி, உத்தர்காசி, டெக்ரி, கார்வால், பகேஸ்வர், பிதோராக்கர், அல்மோரா மற்றும் சாம்பவாட்டில் தோராயமாக தேர்வு செய்யப்பட்ட 54 கிராமங்களில் நடத்தப்பட்டது. பருவநிலை மாற்றம் குறித்தும், அதனை தகவமைத்துக் கொள்வதில் மக்களுக்கு உள்ள கருத்துக்களை புரிந்துகொள்வதற்காகவும் தோராயமாக 1080 குடும்பங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டது. கிராம அளவில் குழு விவாதங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன் வழியாக சேகாிக்கப்பட்ட தகவல்கள் கள ஆய்வுகள் மற்றும் தனிநபர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் வழியாக சாிபார்க்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் அதன் மாறுபாடுகள் குறித்த சமூகத்தின் கருத்துக்கள்

மைய ஹிமாலயாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு, நல்ல பருவநிலை என்பதன் அர்த்தம் மார்ச் – மே வரை பரவலாக பெய்யும் குறைவான மழைப் பொழிவும், வெப்பநிலையானது 18 முதல 25 டிகிரி செல்சியஸ்யும், ஜுலை – ஆகஸ்டு வரை பெய்யும் உச்சபட்ச மழைப்பொழிவுடன் நிலவும் மிதமான தட்பவெப்பநிலை, மற்றும் டிசம்பர்-ஜனவரியில் நிகழும் மிதமான மழைப்பொழிவு/கடுமையான பனிப்பொழிவுடன் நிலவும் குறைந்த தட்பவெப்ப நிலையான 12 முதல் 20 டிகிரி செல்சியஸ் மற்றும் மேகங்கள் வெடிப்பு போன்றவை இல்லாது இருக்கும் சூழல் ஆகும். கடந்த காலங்களில் நடைபெற்றவைகளில் இருந்து நடக்கும் எந்த ஒரு விலகலும் பருவநிலை மாற்றம் மற்றும் மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறது.

கடந்த 3 பத்தாண்டுகளில் வானிலை வடிவங்களில் நடைபெறும் முக்கியமான மாற்றங்கள் குறித்து 80 விழுக்காடு மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். பருவநிலை மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகள் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, அதிகளவு நிகழும் வறண்ட காலங்கள் நீர் பற்றாக்குறையிலும். குறைவான வேளாண் உற்பத்தியும் பெரும்பாலான மக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. 15-20 ஆண்டுகளாக ஆல்பைன் மேய்ச்சல் நிலங்கள், காடுகள் மற்றும் மேய்ச்சல் பகுதிகளில் கால்நடைகள் நீர் ஆதாரங்களை குறைவாக பயன்படுத்துவது மிகவும் அப்பட்டமாக தொியக்கூடியதாகும். இது சாமோலி மற்றும் பிதோராக்கயர் மாவட்டங்களில் உள்ள அதிகளவு உயரமான பகுதிகளில் வசிக்கும் கால்நடை மேய்க்கும் சமூகம் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு உயரங்களில் கொண்ட கிராமங்களில் உள்ள மக்களும் குறைவான மழைப்பொழிவு மற்றும் மழைப்பொழிவில் மாற்றங்கள் இருப்பது பயிர் இழப்பையும், உணவு தானியங்கள், தீவன ஆதாரங்கள், தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் கால்நடை உற்பத்தி குறைவதை குறித்து, அது விவசாய சமூகங்களின் பொருளாதார நிலைமையை வலுவிழக்கச் செய்கிறது. மேலும் அவர்கள் அடிக்கடி நிகழும் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களும், குறிப்பாக வேளாண்-தோட்டப்பயிர்கள் (கீரைகள், கிட்னி பீன்ஸ், எலுமிச்சை மற்றும் ஆப்பிள் போன்றவை) குறிக்கிறது. உள்ளூரில் வசிக்கும் மக்கள் மருத்துவ தாவரங்கள் (அல்லியம் ஸ்டார்ச்யி, பெர்ஜீனியா லிகுலட்டா) மற்றும் உண்ணக்கூடிய காட்டி செடிகள்                                      (ரோடொனென்டிரான் ஆர்போரியம், ப்ருனஸ் சிராசொடியடஸ், பாம்பாக்ஸ் சிபா, போஹின்யா வேரியகேட்டா) போன்றவை முன்னதாகவே பூப்பதையும், காய்ப்பதையும் குறிப்பிடுகின்றனர்.

ஆய்வு செய்யப்பட்ட கிராமங்களில், ஒழுங்கற்ற மழைப்பொழிவு, பனிப் பொழிவு மற்றும் தட்பவெப்பநிலை உயர்வு போன்ற காரணங்களால் தோட்டக்கலைப் பயிர்களில் குறைவான உற்பத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவை உத்தர்காண்டில் உள்ள நைனிட்டால், சாமோலி, மற்றும் உத்தர்காசி போன்ற மாவட்டங்களில் நிலத்தை அடிப்படையாக கொண்டு வருமானம் பெறக்கூடிய வாய்ப்புகளை அதிகஅளவில் பாதித்துள்ளது. நிச்சயமற்ற பருவநிலைகளான விதைக்கும்போது குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிகளவு வளங்களான, குறிப்பாக பச்சை புற்கள் மற்றும் தீவனங்கள் ஏப்ரல் – மே மாதங்களில் பெய்த குறைவான மழைப்பொழிவு இவற்றின் காரணமாக வேளாண் மகசூலும், வருமானமும் குறைந்தது. இவை காடுகள் தீப்பற்றிக்கொள்வது போன்றவை அடிக்கடி நிகழும் சம்பவங்களாக அதிகாிக்கச் செய்து தீவன ஆதாரத்திலும், கால்நடை உற்பத்தி முறைகளிலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்பெல்லாம் கிராமங்களில் ஆண்டுதோறும் நீர் தரும் ஆதாரங்கள் நிறைய இருந்ததாக வேளாண் சமூகத்தினர் தொிவிக்கின்றனர். ஆனால், சமீப காலங்கள் பெரும்பாலான நீரோடைகள் மற்றும் ஆதாரங்கள் முழுவதுமாக வற்றி விட்டன.

உள்ளூர் சமூகங்கள் மேலும் தொிவிக்கையில் நிறைய புற்கள் கூடி பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவை குறைந்துள்ளது என்கின்றனர். இது பால் மற்றும் மாமிச உற்பத்தியில் பாதகமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதிலும், அதற்கு சமூகத்தின் எதிர்நடவடிக்கைகளும்:

பருவநிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு எதிர் நடவடிக்கையாக, உள்ளூர் சமூகங்கள் தங்களின் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையிலும், பாரம்பாிய அறிவின் அடிப்படையிலும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தகவமைப்பு அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு கால நிலை மண்டலத்திலும் விவசாயிகள் பொருத்தமான பயிர்களை தேர்வு செய்து பயிர் காலண்டரை மாற்றியமைத்து, தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களான கிட்னி பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் இதர காய்கறி பயிர்களுக்கு அவர்கள் மாறினர். பருவநிலை மாற்றத்தின் காரணமாக பணப்பயிர்களை சாகுபடி செய்தது அந்த பகுதியில் பாரம்பாிய பயிர்கள் பயிரிடுவது குறைவதற்கு காரணமாக அமைந்தது. அதன் விளைவாக மக்கள் சில முக்கிய உணவுகளான பாரில்லா ப்ருடஸ்சன்ஸ, செட்டோியா இடாலிகா, பானிக்கம் மிலியேசியம், பைசம் அர்வன்சி மற்றும் ஹைபிஸ்கஸ் கன்னாபின்னஸ் போன்ற நடுத்தர உயரத்தில் உள்ள பகுதிகளில் வளரும் பயிர்கள் குறைந்துள்ளது. உச்சபட்ச மழைப்பொழிவில் மாற்றம் ஏற்படும்போது, கடல் மட்டத்தில் இருந்து 1000-2000 மீட்டர் உயரத்தில் உள்ள பாரம்பாிய பருப்பு வகைப்பயிர்கள் (விக்னா அங்குகிலேட்டா, விக்னா அங்குலாரிஸ்), போன்றவற்றில் பூக்கள் பூக்கும் தருணத்தில் பிரச்சனைகளும் வளர்ந்துள்ளன.

நீர் பாசனத்திற்கான தண்ணீர் தேவையினை குறைப்பதற்கும், நெல் பயிரில் நல்ல முளைப்புத்திறன் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் விவசாயிகள் விதைகளை முன்பே ஊறவைத்து அவற்றை நர்சாியில் வளர்க்க ஆரம்பித்தனர். சில நேரங்களில், நிச்சயமற்ற மற்றும் கடினமான சூழ்நிலைகளில், அவர்கள் பயிர்கள் முழுமையான முதிர்ச்சி வரும் முன்பே அறுவடை செய்யும் ஆபத்தான முடிவுகளை, குறிப்பாக அதிக அளவு உயரமான பகுதிகளில் மேற்கொண்டனர்.

பாரம்பாிய பயிர்கள் திரும்பவும் புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. பாரம்பாிய பயிர்கள் மற்றும் ரகங்கள் பெரும்பாலும் கடுமையான நேரங்களில் தாங்கி வளர்பவையாகவும், பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதல்கள் மற்றும் கடுமையாக பருவநிலைகளில் எதிர்கொண்டு தப்பித்து வளர்பவையாக உள்ளன. அவற்றின் பண்புகளின் காரணமாக, விவசாயிகள் மானாவாரி பகுதிகள் அல்லது எங்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதோ அங்கும் இந்த பயிர்களை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வமுடையவர்களாக உள்ளனர். பயிர் நிலங்களில் உள்ள வரப்புகள் மழை நீரை பாதுகாத்து வைப்பதற்காக பராமாிக்கப்படுகின்றன. நடுத்தர மற்றும் தாழ்வான உயரமுள்ள பகுதிகளில், உள்ளூர் புற்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைப் பயிர்கள் பலமான வேர் அமைப்பு முறைகளை பெற்றுள்ளதால், அவை வரப்புகளில் பயிரிடப்பட்டு மண்ணை இறுகப்பிடித்துக் கொண்டு அரிமானத்தில் இருந்து காக்கின்றன.

பருவநிலை மாற்றத்தின் பயன்களை கருத்தில் கொண்டு, நிறைய மக்கள் மருத்துவ தாவரங்களான அர்நிபியா பென்தாமி, ஏஞ்சலிக்கா க்ளாக்கா, சாஸ்சுரியா கோஸ்டஸ், பிக்ரோராய்சா குர்ரா, போடோபில்லம் ஹெக்சான்ரம், அல்லியம் ஸ்டார்சியு, பிலியூரோஸ்பெர்மம் ஏஞ்சலிகோயிடஸ் போன்றவை அதிக உயரமான பகுதியில் உள்ள கிராமங்களில் வாழ்வாதார வாய்ப்புகளுக்காக சாகுபடி செய்யப்பட்டது.

பிதோராக்கர் மாவட்டத்தில் அதிக உயரத்தில் உள்ள தர்மா மற்றும் பையான்ஸ் பள்ளத்தாக்கு மற்றும் சாமோலியில் உள்ள நிட்டி பள்ளத்தாக்கிலும் கால்நடையாக நடக்கும் மேய்ச்சல் தொழில் பல விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தை உள்ளடக்கிய பல்வேறு அம்சங்களின் காரணமாக மக்கள் இடம்பெயரும் நேரங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கால்நடைகள் ஒரே மேய்ச்சல் நிலத்தில் பல நாட்கள் மேய்ந்தன. ஆனால் அவை தற்போது பல்வேறு அல்பைன் மேய்ச்சல் நிலங்களுக்கு ஊட்டச்சத்து மிக்க புற்களை தேடி செல்கின்றன.

முடிவுரை:

பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள மட்டுப்படுத்தும் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சமாளிக்கும் செயல்பாடுகள் தேவைப்படுகினற்ன. பல இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதனை சமாளிக்கும் உத்திகள்தான் நல்ல ஒரு வழியாகவும், பருவநிலை மாற்றத்தினால் உடனடியாக ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான வழியாக கண்டறியப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ற சமாளிக்கும் திறன்கள் குறித்து மக்களின் கருத்தும், பருவநிலை மாற்றத்தை புரிந்து கொள்வதும் முக்கியமானதொரு விசயம். இருப்பினும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள கொள்கை திட்டம் வகுப்போர் மற்றும் அரசாங்கங்கள் இவற்றின் மட்டுப்படுத்தல் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சமாளிக்கும் அணுகுமுறைகள் மிகவும் அரிதாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மக்களின் கருத்துக்கள் மற்றும் பாரம்பாிய அறிவும், பருவநிலை மாற்றம் குறித்து நம்மிடம் உள்ள அறிவியல் அறிவோடு ஒருங்கிணைப்பது, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான நமது திறமையை கட்டமைப்பதற்கான ஒரு வழியாக எடுத்துக் கொள்ளலாம். இன்னும் நிறைய அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தேவையான தகவல்களை நல்ல முறையில் பெறுவதற்கான தகவல் அடிப்படை அம்சங்கள், குறிப்பாக பருவநிலை மாற்றம் தொடர்பாக உள்ளூர் மக்களிடம் உள்ள அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவதற்கான அழைப்பை விடுக்கிறது.

அட்டவணை 1: உத்தர்காண்டின் மைய ஹிமாலய பிரதேசத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர் கொள்ளும் விதமாக சமூகங்கள் பின்பற்றும் உத்திகள்:
• அதிக உயரமான பகுதிகளில் வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் மூலம் பட்டாணி, காலிப் பிளவர் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை சாகுபடி செய்தல்.
• நடுத்தர உயரம் கொண்ட பகுதிகளில் ( கடல் மட்டத்தில் இருந்து 700-1200 மீட்டர் உயரத்தில் ) பப்பாளி, வாழை, மா மற்றும் லிட்சி
• பயிர் சாகுபடி முறைகளில் மாற்றங்கள், உதாரணத்திற்கு பேசியோலஸ் வல்காரிஸ் (கிட்னி பீன்ஸ்) க்கு பதிலாக மாக்ரோடைலோமா யூனிபோலியமும் (கொள்ளு), விக்னா அங்கிகுலோட்டா (சிகப்பு தட்டைப்பயிறு)க்கு பதிலாக கஜானஸ் கஜான் (துவரையும்), பேசியோலஸ் வர்காிஸ் (கிட்னி பீன்ஸ்)க்கு பதிலாக கிளைசின் மேக்ஸ் ( சோயா பீன்ஸ்) போன்ற பயிர்கள் நடுத்தர உயரம் ( கடல் மட்டத்தில் இருந்த 1000-1800 மீட்டர் உயரம்) கொண்ட கிராமங்களில் மாற்றப்பட்டது.
• தாழ்வான உயரம் கொண்ட பகுதிகளில் நெல்லுக்கு பதிலாக கிளைசின் மேக்ஸ் (சோயாபீன்ஸ்) இசினோலா ப்ருமென்டியசியஸ் (கேழ்வரகு) அல்லது இலுசின் கோராகனா (வரகு) போன்ற பயிர்கள் பயிரிடுவது.
• விதைக்கும் விதைகளில் அதிக விதைகள் முளைத்து வருவதை உறுதிசெய்யும் வகையில் அதிக தரமான விதைகளை அடர்த்தியாக வளரும் வகையில் பயிரிடுவது.
• பயிர்-கால்நடை ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்தி மண்ணில் இயற்கை சத்துக்களை அதிகாித்து அதன் வாயிலாக மண் தண்ணீரை அதிக நேரம் பிடித்து வைக்கும் தன்மையை அதிகாிப்பது.
• மாற்றுப்பயிர்களாக ஜிஞ்சர் அபிசிலானிஸ் (இஞ்சி) மற்றும் குர்குமா லாங்கா (மஞ்சள்) மலர் சாகுபடியாக ( கிளாடியோலஸ் வகைகள் மற்றும் லில்லியம் வகைகள்) மற்றும் தீவனப் பயிர்களாக பென்னிசீட்டம் புர்புரியம் (தீவன தட்டை), தைசனோலேனா மேக்ஸிமா போன்றவை வாழ்வாதார வழிகளாக கடைபிடிக்கப்பட்டன.
• குறைவான மழைப்பொழிவு மற்றும் வெப்பத்தின் காரணமாக ஒடைகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் நீர்பாசன நிலம் மானாவாரி நிலமாக மாறியது.
• அதிக அளவு மதிப்பு கொண்ட சில மருத்துவ தாவரங்களான பிக்ரோராய்சா குர்ரா, அர்நிபியா பென்தாமி, சாஸ்சுரியா கோஸ்டஸ், அல்லியம் ஸ்டார்ச்யி, அல்லியம் க்யூமிலி, ஏஞ்சலிக்கா க்ளாக்கா, கரம் கர்வி போன்றவை அதிக உயரமான பகுதியில் உள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டது.
• மண்ணுக்கு உரமளித்து அதன் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக களைகளை மறுசுழற்சி செய்தது.
• கோதுமை சாகுபடிக்கு பதிலாக சில கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட கடுகு ரகங்களை பயிரிட்டது.
• குறைவான தானியங்களை உற்பத்தி செய்யும் சில தீவனப் பயிர்களை சாகுபடி செய்தது.
• பருவ மற்றும் பருவமற்ற காலங்களில் காய்கறிகளை பாதுகாக்கப்பட்ட (பாலி ஹவுஸ், நிழல்வலை, பாலிபிட்) சாகுபடி முறையில் பயிரிட்டது.
• மேய்ச்சல் நிலங்களின் தாங்கும் திறனை கருத்தில் கொண்டு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பை மேற்கொண்டது.

ஆர்.கே. மைக்கௌரி, எல்.எஸ். ராவட், வி.எஸ். நெகி, அஜய் மலெத்தா, பி.சி. போன்டானி மற்றும் பி.பி. தயானி


Acknowledgments
Authors would like to thank the Director, G.B. Pant NationalInstitute of Himalayan Environment and
Sustainable Development (GBPNIHESD), osi- Katarmal, Almora for providing facilities.
R K Maikhuri
G B Pant National Institute of Himalayan
Environment and Sustainable Development,
Garhwal Unit, Srinagar Garhwal-246174,
Uttarakhand. E-mail: rkmaikhuri@rediffmail.com
P P Dhyani
G B Pant National Institute of Himalayan
Environment and Sustainable Development,
Kosi-Katarmal, Almora- 243643, Uttarakahand

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2017, வால்யூம் 19, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...