பாஸ்கர் சாவே – இயற்கை சாகுபடியின் காந்தி


மறைந்த பாஸ்கர் சாவே – இயற்கை சாகுபடியின் காந்தி என்று ஏற்றுகொள்ளப்பட்டவர், மூன்று தலைமுறை இயற்கை விவசாயிகளை ஈர்த்து, அவர்களுக்கு வழிகாட்டினார். இவரின் சாகுபடி மற்றும் கற்பிக்கும் முறை இயற்கையில் உள்ள பரஸ்பர உறவுகளை ஆழமாக புரிந்துகொள்ளும் திறன் வேரூன்றியிருக்கிறது. ஆர்வமாக இருக்கும் யாருடனும் , எப்பொழுதும் மகிழ்ச்சியாக சுதந்திரத்துடன் (இன்னும் மிக ஆர்வத்துடன்) பகிர்ந்துகொள்வார். 2010 ஆம் ஆண்டு இயற்கை வேளாண் இயக்கங்களின் சர்வதேச கூட்டம், உலக முழுவதிற்கும் இயற்கை விவசாயிகள் மற்றும் இயக்கங்களின் குடையாக இருக்கும் அமைப்பு, சாவே அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் ஓர் உலக விருது” அளித்து கவுரவித்தது.


பாஸ்கர் சாவே அவர்களின் 14 ஏக்கர் பண்ணை, கல்பவிருக்ஷா, தெற்கு கடலோர குஜராத்தில், வல்ஸத் மாவட்டத்தில், கடலோர நெடுஞ்சாலை அருகே உள்ள தோி என்ற கிராமமாகும். சுமார், 10 ஏக்கர் நிலத்தில் தென்னை மற்றும் சப்போட்டா மரங்களோடு சில இதர சிற்றனங்கள் உள்ளடக்கிய கலப்பு தோப்பு அமைத்துள்ளார். சுமார் 2 ஏக்கர் பாரம்பாிய முறையில் ,பருவக்கால பயிர் வகைகள் இயற்கையாக சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு நிலத்தில் அதிக தேவையையுடைய தென்னை நாற்றுகள் வளர்க்கப்படுகிறது. பண்ணை மகசூல் – எல்லாவகையான மொத்த அளவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததரம், சுவை, உயிரியல் பன்மையம், உயிர்ச்சூழல் நிலைத்தத்தன்மை, தண்ணீர் பாதுகாப்பு, ஆற்றல் திறன் மற்றும் பொருளாதார இலாபத்தன்மை ஆகிய அனைத்தும் மற்ற இரசாயனம் பயன்படுத்திய பண்ணையை காட்டிலும் உயர்ந்ததாகும். அதேசமயத்தில், (அறுவடைக்கு தேவையான கூலியாட்கள் தவிர்த்து) செலவுகள் குறைவாகவும், வெளியிடு பொருட்கள் கிட்டதட்ட பூஜ்ஜியத்தில் இருக்கிறது.

கல்பவிருக்ஷாவில் குவிந்திருக்கும் இயற்கை
பாஸ்கர் சாவே பண்ணையின் வாயிலிலிருந்து 20 அடி உள்ளே சென்றால் இயற்கையின் அடிப்படை சட்டம் ஒத்துழைப்பு ஆகும் – இயற்கை சாகுபடியின் தத்துவம் மற்றும் செயல்பாட்டின் ஒரு சுலபமான மற்றும் சுருக்கமான அறிமுகம். மேலும் உள்ளே பண்ணையில் பல்வேறு இதர அடையாளங்கள் நம்மை சுருக்கமான எண்ணத்தை தூண்டும் சூத்திரங்கள் விளக்கத்துடன் ஈர்க்கிறது. இந்த ஆற்றல்மிக்க வாசகங்களில், இயற்கை, பண்ணை, ஆரோக்கியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் தூய்மையான ஞானம் இருக்கிறது. இவை பாஸ்கர் அவர்கள் அசாதாரணமான உணவு மகசூல் தாண்டி பல வருடங்களாக சேர்த்ததாகும்.

கல்பவிருக்ஷா, இரசாயனங்கள் பயன்படுத்தும் மற்ற நவீன பண்ணையை காட்டிலும், அதிக மகசூல் சுலபமாக அளிக்கிறது. இது எல்லா சமயங்களிலும் உடனே தொியும். நாட்டிலேயே ஒரு மரத்தில் அதிக எண்ணிக்கையில் இளநீர் காய்க்கிறது. ஒரு சில தென்னை மரங்கள் ஒரு வருடத்திற்கு 400 இளநீர்கள் கிடைக்கின்றன. அதேசமயத்தில், சராசாியாக 350 இளநீர்கள் கிடைக்கின்றது. சப்போட்டா மரங்கள் 45 வருடங்களுக்குமேல் நடப்பட்டது. அதேமாதிரி அதிகளவில் ஒரு வருடம் ஒரு மரத்திற்கு 300 கிலோ சுவையான பழங்கள் அளிக்கிறது.

மேலும் தோப்பில் பல்வேறு வாழை இரகங்கள், பப்பாளிகள்,பாக்கு மற்றும் போிச்சை, முருங்கை, மா, பலாப்பழம், பனை, சீத்தாப்பழம், முகடு, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, கொடி முந்திரிப் பழம், இலுப்பை, புளியமரம், வேம்பு, ஆடும்பா . சில மூங்கில் மரங்களைத் தாண்டி பல்வேறு கீழ் அடுக்கு புதர் செடிகளான காிவேப்பிலை, க்ரோட்டன், துளசி மற்றும் மிளகு, வெற்றிலை, கொடித்தோடை போன்றவைகள் வளர்க்கப்படுகிறது.

நவாபி கோலம், உயர, சுவையான மற்றும் அதிக மகசூல் அளிக்கும் அரிசி இரகம், பல்வேறு வகையான பருப்பு வகைகள்,குளிர்க்கால கோதுமை மற்றும் சில காய்கறிகள், கிழங்குகள் 2 ஏக்கர் நிலத்தில் பருவ சுழற்சி வளர்க்கப்படுகிறது. இந்த சுய நிலைத்தத்தன்மை அடைந்த விவசாயியின் குடும்பத்திற்கும், எப்பொழுதாவது வரும் விருந்தினர்களுக்கு போதுமான பொருட்களை வழங்குகிறது. பெரும்பாலான வருடங்களில்,  சில உபாி அரிசி கிடைக்கிறது, அவற்றை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பாிசாக அளிக்கின்றனர். இவர்கள் இந்த பொருட்களின் உயர்ந்த வாசனை மற்றும் தரத்தை பாராட்டுகின்றனர்.
பல்வகைமை தாவரங்கள் உள்ள பாஸ்கர் சாவே பண்ணையில் நெருக்கமான தாவரங்களின் இணக்கமான சமூகத்தை கொண்டு கலந்து இருக்கிறது. சிறிய அளவிலான மண்ணை கூட, சூரியன், காற்று அல்லது மழையின் நேரடி தாக்கம் ஏற்படும் நிலை மிக குறைவாகவே இருக்கிறது. சப்போட்டா மரங்களின் கீழ் அதிக நிழல் இருக்கும் பகுதியில் அடர்ந்த கம்பளம் போல இலைகள் உதிர்ந்திருக்கிறது, சூரிய ஒளி ஊடுருவப்படும் இடங்களில் மட்டும் பலவகையான களைகள் முளைத்துள்ளது.
பூமியில் இலைகள் கொண்டு தடிமனான படர்வு மண்ணின் நுண் சீதோஷண நிலைக்கு சிறந்த மதிப்பீட்டாளராக இருக்கிறது. பாஸ்கர் சாவே இதனை,வேளாண்மையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று வலியுறுத்துகிறார். வெயில் நிறைந்த கோடை நாளில், தாவரங்களின் நிழல் அல்லது இலை மூடாக்கு மண்ணின் மேற்பரப்பு குளிர்ச்சியாகவும், சிறிது ஈரமாகவும் இருக்கும். குளிர் பனி இரவுகளின்போது,பூமி படர்வு பகல் சமயத்தில் வெப்பத்தை பாதுகாக்கும் போர்வையாகவும் இருக்கும்.
ஈரப்பதம் கூட அடர்ந்த தாவரங்களின்கீழ் அதிகமாகவும், ஆவியாவது குறைந்துள்ளது. அதன் விளைவாக, பாசனம் செய்வது மிகவும் குறைந்துள்ளது. பல சிறிய பூச்சி நண்பர்கள் மற்றும் மண்ணில் நுண்ணுயிர்கள் இந்த சூழலில் வாழ்ந்து வருகிறது.

பத்து ஏக்கர் தோப்பு, தொடர்ந்து மகசூல் அளிக்கிறது,வருடத்திற்கு சராசாியாக ஏக்கருக்கு 15,000 கி.கி. உணவு மகசூல் அளிக்கிறது. (கடந்த 15-20 ஆண்டுகளாக, அதிகாித்துவரும் தொழில்துறை பகுதியிலிருந்துவரும் மாசுகளினால் மகசூல் குறைந்து கொண்டே இருக்கிறது). ஊட்டச்சத்துகளின் மதிப்பு, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ஹாியானா மற்றும் இதர பகுதியில் உள்ளது போல் நச்சத்தன்மை கொண்ட இரசாயனங்கள் அதிகமாக பயன்படுத்தி வளர்த்த உணவின் சமமான எடையை ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்வாக உள்ளது.

இயற்கையின் தூருகள் மற்றும் வளத்தை பெருக்குபவர்கள்
எந்தகாரணமும் இல்லாமல் இது நடைபெறாது என்று சார்லஸ் டார்வின் 100 வருடங்களுக்குமுன் கூறினார். மண்புழுவைபோல் உலக வரவாற்றில் மிக முக்கிய பணியை மேற்கொள்ளும் உயிரினம் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இருக்கலாம்.‘ஒரு விவசாயி, தன்னுடைய பண்ணையின் இயற்கை மறுஜென்மத்திற்கு உதவும் மண்புழு மற்றும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள், திடமாக மீண்டும் செழிப்பான வழியில் செல்கிறார்” என்று திரு பாஸ்கர் உறுதிபடுத்துகிறார். பல்வேறு இதர மண்ணில் வாழும் உயிரினங்களான – எறும்புகள், கரையான்கள் பல்வேறு நுண்ணுயிர் சிற்றினங்கள் – மண்ணின் இயற்பியல் தன்மை மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் மறுசுழற்சி செய்வதற்கு உதவுகிறது.மேலும் கல்பவிருக்ஷா போன்ற இயற்கை பண்ணையின் ஒவ்வொரு சதுரஅடியில் இது போன்ற பல்வேறு நன்மை தரும் உயிரினங்கள் இருக்கின்றன.
முற்றிலும் மாறுபட்டதாக, நவீன வேளாண்மை தொழில்நுட்பங்கள் மண்ணின் வாழும் இயற்கை உயிரினங்களை அழிந்துவிட்டதை உறுதிப்படுத்தியது. மண்ணின் இயற்கை வளத்தை அழிப்பதனால் ,நாம் உண்மையில் செயற்கையாக வெளியிடு பொருட்களின் தேவையை உருவாக்குகிறது, மேலும் நாமாகவே தேவையற்ற கூலியாட்களை வேலை செய்வதற்கு வரவழைக்கிறோம், இது தரம் குறைந்த முடிவுகளை தருவதோடு, ஒவ்வொரு பாதையிலும் அதிக செலவாகிறது. ‘வாழும் மண்ணே” பாஸ்கர் சாவே அவர்களுக்கு அழுத்தம் தருகிறது. இது இயற்கை ஒற்றுமை மற்றும் மொத்த வாழ்வின் வளையையும் பாதுகாக்கப்பட வேண்டும் ,மேலும் அதன் வளர்ச்சியை உயர்த்த வேண்டும். இயற்கை சாகுபடியே வழியாகும்.

களைகளே நண்பா;கள்
இயற்கையில் ஒவ்வொரு உயிரினம் மற்றும் தாவரம் உயிர்ச்சூழல் முறையின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொன்றும் உணவு  சங்கிலியின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது.
ஒரே விவேகமான மற்றும் நீடித்த வேர் பாிசோதனையை முக்கிய பயிர்கள் மத்தியில் பரவலான களை வளர்ச்சிக் கட்டுபடுத்துவதற்கு கலப்புபயிர் மற்றும் பயிர் சுழற்சி பின்பற்றப்படுகிறது. அதேசமயம் இரசாயனம் மற்றும் ஆழமாக உழவு செய்வதை தொடரக்கூடாது.பிரச்சனைக்குரிய களைகள்,மண்ணில் ஆரோக்கியம் கூடும்போது மெதுவாக வெளியேறிவிடும். முக்கிய உணவுப் பயிர்கள் மீண்டு வளர்ந்து வரும்போது, இவை அதிக நிழல் தரும் நிலை உருவாகும். இதை சமாளிக்க சில கால இடைவெளியில் 3-4 இஞ்ச் தடிமனான அளவில் களையை (பூக்கள் மலர்வதற்குமுன்) வெட்டி மண்ணின் மேல் மூடாக்கை, முக்கிய பயிரின் கீழ் போட வேண்டும். எந்த சூரியஒளி மண்ணில் புதைக்கப்பட்ட களையின் விதைகள் மீது படாமலிருப்பதால், அதில் புதிய முளைவிடுவது தடுக்கப்படுகிறது.

விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மீண்டும் மாறும்போது, அவர்களின் மண்ணின் ஆரோக்கியம் ஒவ்வொரு வருடமும் அதிகாிக்கும். அதற்கேற்ப, பயிர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும், அதேசமயத்தில் களை வளர்ச்சி குறையும்,வெறும் 2-3 வருடங்களில், எந்த களைகளும் வளர்வதற்கான தேவை ஏற்படாது. இதுவரைக்கும் விவசாயிகள் களைகளை வெட்டி மூடாக்கு இடுவதற்கு வலியுறுத்த வேண்டும்.
நிலப்பரப்பின் மேல்பகுதிவரை களைகளின் வளர்ச்சியை வேர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல், வெட்டுவது, அதனை பூமியில் மூடாக்காக விடுவது, மண்ணிற்கு பல்வேறு வழிகளில் பயன்படுகிறது. மூடாக்கு போடுவதால்,காற்று அல்லது மழையினால் ஏற்படும் மண் அரிமானம் குறைகிறது,மண் இறுகுவதும், தண்ணீர் ஆவியாவதும் குறையும். மேலும் பாசனம் தேவையும் குறையும். மண்ணில் காற்றோட்டம் அதிகாிக்கும். ஈரப்பதம் உறுஞ்சுவதும் அதிகாிப்பதனால், வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாப்பு ஏற்படும். மூடாக்கு மண்புழுக்கள், நுண்ணுயிர்களுக்கு உணவளிக்கிறது, இது பயிர்களுக்கு சத்துக்கள் நிறைந்த மக்குஉரம் அளிக்கிறது.அதுமட்டுமில்லாமல், பூமியில் உள்ள களைகளின் வேர்கள் இருப்பதனால், மண்ணை தொடர்ந்து ஒன்று சேர்த்து வைக்கிறது. இதே முறையில்,நிலத்தின் மேல்பரப்பில் உள்ள இயற்கை வாழ் உயிரினங்கள் வளர்வதற்கு உதவுகிறது. இறந்த வேர்கள் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு, மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு உணவாகவும் அளிக்கிறது.
களைகள், பூக்கள் பூப்பதற்குமுன் அல்லது மகரந்த சோ;க்கை நடைபெறவதற்கு முன்னே வெட்டி, மூடாக்கு போடும் செயல்பாட்டை செய்வது முக்கியமாகும்.விவசாயி இதை தவறவிட்டால், மகரந்தச்சோ;க்கை நடைபெற்ற களையின் விதைகள், புதிய செடிகள் மீண்டும் திடமாக மூடாக்கு போட்ட இடத்தில் முளைத்துவிடும்.

எதுவும் செய்யாதே?
இயற்கை பண்ணையில் உடல் ரீதியான பணி, நவீன பண்ணையை காட்டிலும் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து மனரீதியான கவனிப்பு அவசியமாகும். ‘விவசாயியுடைய கால்தடம், அவர்களின் தாவரங்களுக்கு சிறந்த உரமாகும்” என்ற ஒரு சொலவடை இருக்கிறது. மரங்களை பொறுத்தவரையில், ஆரம்பகாலத்தில் சில வருடங்களுக்கு இந்த கவனிப்பு மிக முக்கியமானது. தொடர்ந்து இவை சுயசார்புத்தன்மை அடைந்த பின்னர் ,விவசாயியின் பணி வெகுவாக குறைந்து,அறுவடை தவிர்த்து, எதுவுமே செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. தென்னையை பொறுத்தவரையில்,  பாஸ்கர் பாய் அறுவடையோடு விநியோகிக்கவும் செய்தார். அவர் தென்னை முற்றிதானாக கீழே விழும் வரை காத்திருந்து, விழுந்தவற்றை சேகாித்து வைப்பது மட்டுமே வேலையாகும்.
தானியப் பயிர்களான அரிசி, கோதுமை, பருப்புவகை, காய்கறிகள், போன்றவை, சிலபருவ காலகவனிப்பு,வருடத்திற்கு வருடம் தேவைப்படுவது தவிர்க்க முடியாது. இதனால் பாஸ்கர் பாய் -அவருடைய களப்பயிர் வளர்ப்பு முறையை – இயற்கை சாகுபடி என்கிறார், அதேசமயத்தில் நல்ல தூய்மையான ‘ எதுவும் செய்யாத இயற்கை சாகுபடி” மரம்-பயிர் முறை முற்றும் நிலையிலேயே அடைகிறது.எனினும், களப்பயிரில் கூட, விவசாயி எந்த உள் செயல்பாடுகளும் தேவையில்லாத நிலை ஏற்படுகிறது. இது இயற்கையின் உயாிய ஞானத்திற்கான மாியாதை அளிப்பதும், வன்முறையை குறைத்து கொள்வதேயாகும்.

சாகுபடியின் ஐந்து முக்கிய அக்கறைகள்
பாஸ்கர் சாவே, இயற்கை சாகுபடியில் இந்த அணுகுமுறையின் முக்கிய செயல்பாடுகள், ஐந்து பெரும்பகுதிகளாக செயல்பாடுகளை குறிக்கிறது. இவை உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளின் பொதுவான அக்கறை.

உழவு
மரப்பயிர்களுக்கு உகந்த ஒரே ஒரு செயல்பாடு, உழவாகும், இது நாற்று அல்லது விதைகள் விதைப்பதற்குமுன் மண்ணை பொலபொலப்பாக மாற்றப்படுகிறது. நடவு செய்த பின்னர், மண்ணில் நுண்துளைகள் மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்தும் பொறுப்பை மொத்தமாக நுண்ணுயிர்கள், மண்ணில் வாழும் உயிரினங்கள்,பூமியிலுள்ள தாவரவேர்களிடம் அளிக்கப்படுகிறது.

வளத்தைபெருக்கும் இடுபொருள்கள்
பண்ணையில் உள்ள பயிர் கழிவுகள் மற்றும் இலைகள் மறுசுழற்சி செய்வது, மண்ணின் வளத்தை மேம்படுத்துவதை உறுதிபடுத்துவதற்கான மிக முக்கியமான செயல்பாடாகும். பண்ணை சார்ந்த உயிர்பொருள் குறைந்துள்ள இடங்களில் துவக்கத்தில் , இயற்கை இடுபொருட்களை வெளியிலிருந்து பெறுவது உதவும். எனினும், இரசாயன உரத்தை பயன்படுத்தக்கூடாது.

களைகள்
களையெடுப்பதையும் தவிர்க்க வேண்டும் முக்கிய பயிருக்கு மேல் வளர்ந்துவிட்டால், சூரியஒளி பயிரின் மீது படுவது முழுவதுமாக தடுக்கும் நிலையிருந்தால், அந்த களைகளை வெட்டி மூடாக்கு போடுவதன் மூலம் கட்டுபடுத்திவிடலாம்.முழுவதுமாக வேரோடு எடுத்து சுத்தம் செய்வதைவிட, மூடாக்கு போடுவது சிறந்தது.களைக்கொல்லிகள் கண்டிப்பாகபயன்படுத்தக்கூடாது.

தண்ணீர் பாசனம்
பாசனம் குறைவாகபாய்ச்சவேண்டும்,தேவைக்குஅதிகமாகபயன்படுத்தாமல்,மண்ணில் ஈரப்பதம் மேம்படுத்தும் அளவிற்குபயன்படுத்தவேண்டும்.முழுமையானதாவரபோர்வை – முக்கியமாகபலஅடுக்குபயிர்- மற்றும் மூடாக்குதண்ணீர் தேவையைபெருமளவுகுறைந்துவிடும்.

பயிர் பாதுகாப்பு
பயிர் பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக இயற்கையாக வாழும் எதிர்உயிர் பூச்சிகள் அல்லது நுண்ணுயிர்களைக் கொண்டு இயற்கை செயல்முறையில் உயிரியல் கட்டுபாடுகள் ஏற்படுகிறது. பல்வேறு சாகுபடி முறைகளில் ஆரோக்கியமாக, இயற்கையாக, ஆரோக்கியமான மண்ணில் வளர்க்கப்பட்ட பயிர்கள், பூச்சித் தாக்குதலுக்குஅதிக எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது. எந்த சேதமும் குறைவாகவும், சுயமாக சாிசெய்ய கூடிய நிலையிலே இருக்கிறது. அதிகபட்சமாக சில இரசாயன மில்லதா முறைகளான வேம்பு, நீர்த்த நாட்டு மாடின் கோமியம் போன்றவைகள் பயன்படுத்தலாம். ஆனால் அதுகூட தேவையில்லை.

நவீன விவசாயிகளின் முதலில் செய்யப்பட்ட அனைத்து வேலைகளும்,சுமக்க வேண்டிய பலபாரங்களும் இயற்கையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அதனால் நிலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
பாஸ்கர் சாவே ‘வன்முறையற்ற, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக உருவாக்கமே, இயற்கை சாகுபடியின் அடிப்படை குறியாகும்” என கூறுகிறார்.
முடிவாக, சாவே – ‘ உயிர் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுளான,அன்ன பூர்னாவால் ஆசீர்வதிக்கப்பட்ட முறையே இயற்கை சாகுபடி” என்று கூறினார்.

பெட்டிசெய்தி

இயற்கையோடு பொருந்தும் சாகுபடியின் கோட்பாடுகள்
நான்கு அடிப்படை இயற்கை சாகுபடிகோட்பாடுகள் மிக சுலபமானது என்று பாஸகர் சாவே கூறுகிறார். முதலாவது, அனைத்து வாழும் உயிரினங்களுக்கு சமமான உரிமை இருக்கிறது. இதை மதிக்கும் வகையில், சாகுபடி வன்முறையற்றதாக இருக்க வேண்டும்.
இரண்டாவது கோட்பாடு, இயற்கையில் இருக்கும் அனைத்தும் வாழ்க்கையின் வலை பின்னலில் ஒரு பயனுள்ள காரணத்திற்காக படைக்கப்பட்டவை.
முன்றாவது கோட்பாடு, சாகுபடி என்பது ஒரு தர்மம், புனிதமான பாதையில் இயற்கை மற்றும் சக உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். இது மறுசுழற்சி செய்து முழுமையாக பணம் சார்ந்த தொழிலாக மட்டும் பார்க்கக் கூடாது. அதிக வருமானம் ஈட்டலாம் என்ற குறுகிய பார்வையினால் இயற்கையின் சட்டம் உதாசினபடுத்துவதே – எப்போதும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் ஆனிவேராகும்.
நான்காவது, கோட்பாடு வளத்தை குன்றாமல் அதிகாிக்கச் செய்வது. மனிதர்களாகிய நாம் பழங்கள் மற்றும் விதைகளின் பயிர்களை மட்டுமே வளர்ப்பதற்கு உரிமை உள்ளது என்பதை கவனிக்கப்படுகிறது. தாவரத்தின் உயிர்பொருள் மகசூல் 5-15%அளிக்கிறது. மீதம் 85 – 95% உயிர்பொருள், பயிர்க்கழிவு, மண்ணிற்கு மீண்டும் செல்வதால், நேரடியாக மூடாக்காகவோ அல்லது பண்ணை கால்நடைகளின் உரமாகவோ அதன் வளம் புதுப்பிக்கும். இதுமாதிரியாக பின்பற்றினால்,வெளியிலிருந்து எந்த பொருளும் தேவையில்லை, நிலத்தின் வளம் குன்றாது.

பரத் மான்ஸாட்டா


Bharat Mansata
E-mail: bharatmansata@yahoo.com

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...