பயனுள்ள கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியின் பார்வை


அனுபவ கற்றல் அடிப்படையில் கற்பிக்கும் முறை, விவசாயியை மையமாக வைத்து பங்கேற்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவை வேளாண் உயிர்ச்சூழல் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும்.


பல வருடங்களுக்குமுன் 1982, அதிக இடுபொருள் பயன்படுத்தி சாகுபடி செய்வதனால் ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கத்தை அங்கீகாித்து, வேளாண்மை, உயிர்ச்சூழல் மற்றும் மனிதன் ஆகிய மூன்று பாினாமங்களை இணைத்து, நெதர்லாந்திலிருந்து சில ஆர்வமிக்க வல்லுநர்கள், வேளாண், மனிதன், உயிர்ச்சூழல் என்ற சர்வதேச பயிற்சித் திட்டம் ஒன்று உயிர்ச்சூழல் வேளாண்மை தலைப்பில் துவக்கியது. எண்பதுகளின் ஆரம்ப  கட்டத்தில், வளரும் நாடுகளிலிருந்து பல பங்கேற்பாளர்களை ஈர்த்து வேளாண், மனிதன், உயிர்ச்சூழல் அமைப்பு உயிர்ச்சூழல் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கியபங்கு வகிக்கிறது. இந்தியாவை பார்க்கும்போது, ஏ.எம்.இ திட்டமாக தொடர்ந்து அந்த காலக்கட்டத்தில் அதிக இடுபொருள் வேளாண்மைக்கு பதிலாக இருக்கும் லீசா (வேளாண் உயிர்ச்சூழல் என்று பரவலாக கூறப்படுகிறது) தொழில்நுட்பத்தை பரப்புவதை முயற்சித்து வந்தனர். ஆர்வமுள்ள நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவி அளிப்பதை நோக்கமாக கொண்டு, லீசா/ வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்த செயல்முறை பயிற்சி அல்லது முன்னோடியாக பங்கேற்புடன் கூடிய கற்றல் செயல்முறை மூலம் விரிவுப்படுத்தி வந்தனர். பின்னர் 90 களில் இந்த முயற்சியை தீவிரப்படுத்தி விவசாயியை மையமாகக் கொண்டு பங்கேற்புடன் கூடிய கற்றல் செய்முறை மானாவாரி பகுதியில் உள்ள பெரும்பாலான சிறு விவசாயிகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு, ஏ.எம்.இ நிறுவனமாக மாறிய பின்னர் வேளாண் உயிர்ச்சூழல் கோட்பாடுகள் அடிப்படையில் பண்ணை மகசூல் மற்றும் பண்ணை வாழ்வாதாரம் அதிகாிக்க மானாவாரி நிலத்தில் நிலைத்த வேளாண் தொழில்நுட்பங்களை இணைத்து விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்டது.

இந்தக் கற்றல் முறை மெதுவாக பயிற்சி பாடத்திட்டங்களிலிருந்து அனுபவமிக்க பங்கேற்புடன் கூடிய கற்றல் செய்முறைக்கு நகர்ந்துள்ளது. ஒவ்வொரு துவக்க செயல்பாடாக, பங்கேற்புடன் கூடிய கிராம மதிப்பீட்டு முறையுடன் கிராம அளவில் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த முறை மூலம், கிராமம் குறித்த தகவல்கள், சமூகம், அவர்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் வாய்ப்புகள் ஆகிய தகவல் குறித்து புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த முறையின் உகந்த கருவியை பயன்படுத்தி சமூகத்திலிருந்து அடிப்படை உண்மைநிலையை தொிந்துகொள்ளப் பயன்படுகிறது. மேலும் இந்த நிலைக்கு உகந்த கற்றல் முறையையும் அதற்கான அணுகுமுறையையும் வடிவமைப்பதற்கு உதவுகிறது.
இதை தொடர்ந்து பருவ காலம் முழுவதும் இணைந்து கற்கும் முறையான பங்கேற்புடன் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி (பி.டி.டி – னு) பின்பற்றப்பட்டது. சிறிய நிலப்பகுதியில் விவசாயக்குழு சில தொழில்நுட்ப கூட்டு செய்பாடுகள் முயற்சி செய்து, தாம் செய்யும் சாதாரன சாகுபடி தொழில்நுட்பங்களின் முடிவை ஒப்பிட்டு பார்த்து சுலபமான,கிடைக்கும் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஏற்றுக்கொண்டு முடிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட பயிர் அடிப்படையில் பிடிடி செய்முறை மூலம், விவசாயிகளுக்கு தொிந்த மற்றும் வல்லுநர்களால் பாிந்துரைக்கப்பட்ட பிரச்சனைகள், உருவெடுக்கும் புதிய பிரச்சனைகள் ஆகியவைகள் உட்பட விவசாயிகள் முக்கிய பிரச்சனைகளை கண்டுபிடித்தனர்.இந்த செயல்முறை விவசாயிகளை சக்திவாய்ந்தவர்களாக, தங்களது சூழ்நிலைகளை எதிர்கொண்டு பாிசோதனைகள் மூலம் தகுந்த தீர்வு காணுகின்றனர்.

பருவத்தின் இறுதியில் ,விவசாயிகள் ஆய்வு செய்வதை ஆவணப்படுத்தி, பல வல்லுநர்களிடம் வருட கூட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். உதாரணமாக இரண்டு பயிர்கள் அடிப்படை பணிக் குழுக்களான– நிலக்கடலை பணிக் குழு மற்றும் பருத்தி வட்டமேசைக் குழு உருவாகியுள்ளது. முக்கியமாக, சவாலாக கருதப்படும் ஒழுங்குமுறை ஞான அமைப்பு மற்றும் ஒழுங்கற்றமுறை ஞான அமைப்பிற்கு மத்தியில், பரஸ்பர மதிப்பு உருவாகியுள்ளது. தொழில்நுட்பவியலரும், கல்வியாளரும் இவர்களுடைய எண்ணங்களை ஒன்றுசர்த்து முன் பருவங்களில் பாிந்துரைக்கப்பட்டவைகளை ஆய்வு செய்யப்பட்டு, வயல்களிலேயே உள்ளூர் தீர்வுகள் உருவாகி வருகிறது. அதனால் இது இருவழி கற்றலாக இருக்கிறது
மேலும் மென்மையான வார்த்தையில், விரிவடைந்த பரஸ்பர மாியாதையை உருவாக்குகிறது இந்த இருவழியை சாிபார்க்கும் முறை. மேலும் பரஸ்பர பொறுப்புகளும் உள்ளிடக்கியுள்ளது. இதற்கு எந்த ஒருவரை பட அணுகுமுறையும் இல்லை. உறுதியளிக்கப்பட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவிலிருந்து இயற்கை முறையில் சாகுபடி செய்துகொண்டு, மெதுவாக தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மையங்களோடு இணைந்து ஆராய்ச்சிகளை துவக்கினர். சிறந்த விதை இரகங்கள் கிடைப்பது, உயிர்ச்சூழல் முறையில் நோய் தடுப்பு தேர்வுகள் மற்றும் விரிவடைந்த தொண்டுநிறுவனம் – அரசு நிறுவனத்தோடு இணைத்தல் ஆகிய பயன்கள் ஏற்படுகின்றது. ஏ.எம்.இ நிறுவனம், நகர்ப்புற வேளாண்மை மற்றும் வேளாண் உயிர்ச்சூழல் சேர்ந்த இதர திட்டங்களிலும் பல தர பட்ட வல்லுநர்கள் உட்பட்டு அறிவு பாிமாற்ற முறைகளுக்கும் வழிநடத்தி வருகிறது.

வேளாண் வயல் வெளிப் பள்ளி, என்பது வேளாண் உயிர்ச்சூழல் கல்விமுறையைக் கொண்டு செல்வதற்கு ஏ.எம்.இ நிறுவனத்தின் மிக அங்கீகாிக்கப்பட்ட பங்காக அமைந்துள்ளது. இந்த நீண்ட பருவக்கால கற்றல் முறையில் 20-30 விவசாயிகள் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் கூடி வேளாண் உயிர்ச்சூழல் அமைப்புகளை கண்கானித்து, ஆய்வு செய்து மற்றும் மண், தண்ணீர் மற்றும் பயிர் மேலாண்மையில் முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கற்றல் முறையின் அடிப்படை உண்மையை, கண்டுபிடிக்க உதவுகிறது, தொழில்நுட்பங்களை பாிசோதனை, விளையாட்டு, மாதிரி ஆகியவற்றின் மூலம், அதற்கு பின்னால் இருக்கும் அறிவியலை புரிந்துகொள்ளவும், சில கருத்துகளை புதிய கற்றல் நிகழ்வுகளின் மூலம் தௌிவுபடுத்த உதவுகிறது. உதாரணமாக, பூச்சிக் காட்சியகம் மூலம் பூச்சி மற்றும் ஊண்உண்ணிகளின் செயல்பாடுகளை காண உதவிபுரிகிறது. விவசாயிகள், கிராம/வட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட வயல் தினவிழாவில் தாங்கள் கற்றவைகளை இதர விவசாயிகளோடு பகிர்ந்துகொண்டு உகந்த மாற்றுகளை பரவலாக்கம் செய்கிறது. வழிநடத்துனர், நேரடியாக கற்றுகொடுக்கும், கற்பித்தலைவிட, விவசாயிகளுக்குத் தேவையான கற்றல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தேவையான கற்றல் முறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

கற்றல் முறைகளில் ஏற்படும் பிரதிபலிப்புகள்
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஏ.எம்.இ நிறுவனத்தோடு இணைந்து பயனித்ததாலும், சர்வதேச குடும்ப வேளாண்மையின் நிகழ்வுகளின் வருடமாக இருப்பதால், கீழே என்னுடைய பிரதிபலிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில், வேளாண் உயிர்ச்சூழல் கல்வியின் தேவைகள் பலதரப்பட்ட உண்மைகளையும், அடித்தள உண்மைகளையும் அங்கீகாிக்கப்படவேண்டும். ஏனென்றால் உயிர்ச்சூழல் அமைப்புகள் , ஒன்றுக்கொன்று இருக்கும் உலகளாவிய உறவுகள், மற்றோன்றை சார்ந்திருப்பதாகவும் இருக்கிறது. உதாரணமாக, சீதோஷன மாற்றங்கள் உலகத்தை தாக்குகிறது, எனினும் பலவாராக இருக்கும். அருகருகே இருக்கும் இரண்டு பண்ணைகள் ஒரேமாதிரியாக இருக்காது. பாரம்பாிய இயற்கை விவசாயிகளின் வாழ்நாள் முழுவதும் எடுக்கும் மண்ணின் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் பிரமிக்கத்தக்க முடிவுகளை அளிக்கும்,அதேசமயத்தில் பக்கத்து நிலத்தில் பழுதடைந்த மண்ணின் காரணமாக பண்ணை வருமானம் மிகவும் குறைந்துள்ளது.
வேளாண் உயிர்ச்சூழல் கல்வி, குறிப்பிட்ட உண்மைகளையும் கடினங்களையும் குறித்த தகவல்களை அங்கீகாித்து உருவாக்கப்பட்டது. தொடர்ந்து உள்ளூர் சமூக கண்டுபிடிப்புகளை புதுப்பிக்கிறது. வேளாண் உயிர்ச்சூழல் கல்வி ‘சமூகத்திலிருந்து கற்றல்;” மற்றும் ஒவ்வொருவரிடமிருந்து கற்பதின் முக்கியத்துவத்தை அங்கீகாிக்க வேண்டும்.
வேளாண் உயிர்ச்சூழல் கல்வி, சூழலின் குறிப்பிட்ட உண்மைகள் மற்றும் சவால்கள் – தொடர்ந்து உள்ளூர் சமூக கண்டுபிடிப்புகள் வளப்படுத்தப்பட்டது.
அடிப்படையில், வேளாண் உயிர்ச்சூழல் கல்வி அடிப்படை கோட்பாடுகளை / மதிப்புகளை, விவசாயி பங்கேற்பதிலும், பரஸ்பர மாியாதை மற்றும் அனுதாபம், ஆகியவற்றில் திடமாக வேரூண்ற வேண்டும். விவசாயிகளின் பங்கேற்பு என்றால் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, பாிசோதனைகளை வடிவமைப்பதில், ஆய்வு செய்தல், ஏற்றுக்கொள்ளுதல் / விளக்குதல் ஆகிய செயல்பாடுகளில் முதலிலிருந்து விவசாயிகளை ஈடுபடுத்தி வருதல். பரஸ்பர மாியாதை என்றால் சில தீர்வு வழிகளை அப்படியே ஏற்றகொள்பவர்களைக் காட்டிலும், விவசாய சமூகம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் தேவைகள், முக்கியத்துவம் மற்றும் சவால்களின் அடிப்படையில் முக்கிய தகவல்கள் அங்கீகாித்து அவர்களை பாரம்பாிய அறிவு/அறிவை உருவாக்கும் சக-ஊக்கிகளாக அங்கீகாிக்கபடுகின்றனர்.

அனுபவம் என்பது வேளாண்மை சம்மந்தமான மற்றும் விவசாயிகள் சந்தித்த பல்வேறு உண்மைகளை கண்டுபடிப்பது. நிலஅமைப்பு, சீதோஷன மாற்றங்கள், சந்தைகள், பாலின பிரச்சனைகள், இடம்பெயர்தலின் பண்புகள் போன்ற நிலைகள் இருக்கும். அதேசமயத்தில் உகந்த தொழில்நுட்பங்கள் அல்லது சமூக செயல்முறைகள் கருத்துருவாக்கி தீர்வுகளை காண்கின்றனர்.

சிறந்த வேளாண் உயிர்ச்சூழல் கல்வி மூன்று தூண்களை சுற்றி உருவாக்கப்படவேண்டும்.
• கற்பிக்கும் கலை – கருத்து மற்றும் குழுவின் சிறப்பு
• பரஸ்பர மாியாதையின் அடிப்படையில் அறிவு பாிமாற்றப்படுதல்
• மாற்று வேளாண் உயிர்ச்சூழல் ஆராய்ச்சி
கற்பிக்கும் கலை அ) வேளாண் கல்விகற்கும் ஆர்வம் உடையவர், தொழில் முனைவர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த விவசாயிகளோடு பணிபுரிதல் ஆ) விவசாய சமூகம் ஒரேமாதிரி இருப்பதில்லை- பலதரப்பட்ட ஆதாரங்கள், திறமைகள் போன்றவைகளை பயன்படுத்துதல் இ) விவசாயி சூழ்நிலைகள் மற்றும் சவால்கள் பல – சீதோஷனம், விற்பனை, நிதி, அறிவு, குறைந்த மதிப்பு. ஒரு சாியான பாடம் மற்றும் ஒரு சாியான கற்பிக்கும் முறை மட்டும் கொண்டு செயல்படுத்த முடியாது.
கற்பிக்கும் முறையானது வளர்ந்த கற்றல் கோட்பாடுகளை சுற்றி, செய்முறை கற்றல், முக்கியமாக, அனுபவ கற்றல் முறைகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. விரிவடைந்த திறன்களைத் தாண்டி நீண்டகாலம் மற்றும் நடவடிக்கைகள் மாறுவதற்கு, அனுபவமிக்க கற்றல் முறையே உகந்தது. ஏனெனில் வயது முதிர்ந்த விவசாயிகள் கற்பவர்களாக இருக்கின்றனர். இளைஞர்களை ஆர்வத்தோடு இருக்க கற்றல் முறையையும், கற்பிக்கும் கருத்துக்கள் வியப்பாகவும், உகந்த வெகுமதியான வருமானம், சமூக அங்கீகாரம் – உடனடியாக மற்றும் நீண்டகால தேவையாக இருக்கிறது.

அறிவு பாிமாற்றம்: – பல்வேறு அறிவு முறைகள் இருப்பது அங்கீகாிக்கப்பட்டாலும், அவற்றை பாிமாறிக் கொள்ள தகுந்த சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். உதாரணமாக, திட்டங்களின் ஒன்றான சிறுதானிய இரகங்கள் கொண்ட திட்டம், விஞ்ஞான ஆய்வில் ஊட்டச்சத்துக்கள் குறித்து முன்னிலை படுத்தப்படுகிறது. தீவன உகந்தத்தன்மை, ஊட்டச்சத்து, சுவை, சமையல், சேமிப்புக் காலம் போன்றவைகளின் அடிப்படையில் விவசாயிகளை ஆய்வு செய்கின்றனர். சில நேரங்களில் உயிர்ச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப தேர்வு கூட பாலினத்திற்கு பொருத்தமற்ற அல்லது கலாச்சாரத்திற்கு ஏற்க இயலாததாக கருதப்படுகிறது.

மாற்று வேளாண் உயிர்ச்சூழல் ஆராய்ச்சி: – சர்வதேச மாநாடு மான்ட்டி பில்லயர், பிரான்ஸில் 2014 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் மற்றும் உலக ஆராய்ச்சி நிறுவனம், தொண்டு நிறுவனம் மற்றும் விவசாய நிறுவனங்கள் ஈடுபட்டன. கீழ்காணும் பார்வையில் முழமையாக பணி செய்யப்பட்ட தலைப்புகள் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் நான் பலதரப்பட்ட வல்லுநர்களோடு கலந்துரையாடும் நிகழ்வில் வழிநடத்தினேன். இந்த கருத்தாக்கம் மற்றும் குறிப்பிட்ட பகுதியின் ஆராய்ச்சி முக்கியத்துவத்தை அங்கீகாித்து சமூகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் திறன்களை புரிந்துக்கொள்வது. ஆதாரத்தை அணுகுதல், உரிமை மற்றும் அறிவு ஆகியவை உட்பட சிக்கல் நிறைந்த சமூக பிரச்சனைகளை உணர்தல், பரஸ்பர மாியாதையின் அடிப்படையில் மாற்றுஅறிவு அமைப்புகளை நோக்கி விவசாயிகளை மையமாக வைத்து அவர்களின் பங்கேற்புடன் கூடிய ஆராய்ச்சி தேவை. ஆராய்ச்சியை சாிபார்க்கும் கள செயல்பாடு, நேர்கோட்டு மாதிரி மட்டுமில்லாமல், சூழற்சி மற்றும் முறையான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. விவசாய நிறுவனங்கள் மற்றும் பொது சமூகங்களோடு கட்டுபாடுகளுடன் ஆராய்ச்சி தேவைகளுக்கு நெருக்கமாக பணி செய்யப்படுகிறது. அனைத்திலும் செயல்பட முடியவில்லை என்றாலும், சில செயல்பாடுகளை முக்கிய தேவையாக இருக்கிறது. ஆராய்ச்சிகள் விவசாயிகளை மையமாக வைத்து செயல்படுத்துகிறது. முறையான ஆராய்ச்சி கள கண்டுபடிப்புகளை ஊக்கப்படுத்தி, அங்கீகாித்து, நன்கு செயல்படும் பிரபலமான உள்ளூர் மாற்றுகளை ஆய்வு செய்தல். பரஸ்பர பங்குதாரர்களோடு, வளர்ந்த பொது சமூகம் மற்றும் விவசாய நிறுவனங்களை வளர்ப்பது அவசியம். இதர நெருக்கடியான வேளாண் உயிர்ச்சூழல் கல்வி காரணிகள் – அ) தொழில்நுட்பத் தரவுகளை தாண்டி கல்வியாளரின் அனுபவ கற்றல் செயல்முறைகளோடு இருக்கும் பிரபலத்தன்மை, ஆ) உள்ளூர் அனுபவங்களை முறையாக ஆவணம் செய்தல், இ) பல்வேறு ஆதாரங்கள்,தரவு முக்கோணம், முறையான கருத்து மற்றும் ஆய்வின் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கற்றல்களை முறையாக ஆவணம் செய்யப்படுகிறது.

கே.வி.எஸ். பிரசாத்


References
K V S Prasad. A perspective on the working of
multistakeholder processes. LEISA India, Vol 18.4,
December 2016. p.10-14

K V S Prasad
Consultant Editor, LEISA India
E-mail: prasadkvs@amefound.org

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2022, வால்யூம் 24, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...