பங்குதாரர்களை உருவாக்கும் மின்னனு சாதன அமைப்பு


கடந்த சில வருடங்களாக பெருமளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த வாய்ப்புகள், வேளாண் பிரிவில் குறிப்பிடத்தக்க பயன்கள் எதுவும் ஏற்படவில்லை. வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பில் அனைத்து வல்லுநர்களுக்கும் உரிய நேரத்தில், தேவையான தகவல்களை பெற்று பயன்பெறலாம். அறிவு பாிமாற்றம், வரையறுக்கப்பட்ட பாிந்துரைகள், சந்தை ஒருங்கிணைப்புகள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகித்து அதன்மூலம் வேளாண்மை ஒரு இலாபம் ஈட்டும் தொழிலாக ஆகிறது.


வேளாண்மை உற்பத்தி பிரச்சனைகளை, சுற்றுச்சூழல் பிரச்சனைகளிலிருந்து தனித்து பார்க்க இயலாது. வேளாண்மையில் மின்னணு கருவிகளின் பயன்பாடு பல தரப்பு வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் தகவல்கள், அதிக உற்பத்தி, உயிர்ச்சூழலில் நிலைத்தத்தன்மை, உணவு உத்திரவாதம், பொருளாதார ஆய்வுகள் ஆதார பாதுகாப்பு மற்றும் சமூக சமநிலை ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. வேளாண்மையில் நவீன தகவல் மற்றும்  தொழில்நுட்ப தொடர்பு கருவிகளை பயன்படுத்துவதால், வணிக செலவு குறைதல், சந்தையின் வெளிப்படை தன்மை உயர்கிறது. தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை சிறந்த முறையில் ஒருங்கிணைத்தல்,நிதியுதவி மற்றும் காப்பீடுகளை வழங்குவதற்கும் கைபேசி மூலம் தகவலை வெளியிடுவது, வல்லுநர்களை ஒருங்கிணைத்தல், மதிப்பு சங்கிலி மத்தியில் உள்ள திறமைகளை உயர்த்துவது. மதிப்பு சங்கிலியில் உள்ள ஒவ்வொரு செயல்பாட்டாளரும், மற்றொரு செயல்பாட்டாளருக்கு தேவைப்படும் பொருள் மற்றும் சேவைகளை வழங்க ஊக்குவிக்கிறது. அதனால் ஒற்றுமையோடு செயல்பட்டால் வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பு முன்னேற உதவும். சாியான நேரத்தில் தகவல் கிடைப்பதால் வல்லுநர்கள் சுமூகமான முறையில் செயல்பட உறுதுணையாக இருந்து, அனைவருக்கும் வெற்றிபெரும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது.

வேளாண்மைக்காக, தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு இந்தியாவில் நீண்ட வரலாற்றை கொண்டவை. வர்ணா வையர் கிராமம் (1998 துவக்கப்பட்டது), கியான் தூத் (2000 ஆம் ஆண்டில் அறிமுகபடுத்தப்பட்டது), நோக்கியா லைப் (2009 ல் அறிமுகப்படுத்தப்பட்டது), ரூட்டர்ஸ் சந்தை விலக்கு (2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டது), இ-சாகு (2004 இல் அறிமுகப்படுத்தப்பட்டது), இ-க்ரிஷி, இ- சௌபால், ஐ- கிஸான் ஆகியவை சில முன்னோடி உதாரணங்கள் ஆகும். கியானதூத், வர்ணா, வயர்ட் கிராமம் மற்றும் நோக்கியா லைப் ஆகிய முயற்சிகள் வேளாண்மைக்காக மட்டும்  துவக்கவில்லை. இவர்கள் கல்வி, ஆரோக்கியம், பொழுதுபோக்கு, பிறப்பு/இறப்பு சான்றிதழ் குறித்த அரசு சேவைகள், நில தலைப்புகளுக்கான நகல், அரசு திட்டங்கள், அரசு மானியங்கள் மற்றும் பல்வேறு இதர தகவல்கள் மற்றும் சேவைகளும் துவக்கினர். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற முயற்சிகள் யாவும், வேளாண்மை சம்மந்தமான தகவல் மற்றும் சேவைகள் மட்டுமே வழங்குகிறது. அரசு திட்டங்கள், தொண்டு நிறுவன திட்டங்கள் மற்றும் தனியார் பிரிவு வாழும் திட்டங்கள் அனைத்தும் கலந்திருக்கிறது. தகவல் பரப்பும் ஊடகங்கள்,முதல் நிலை ஊடகங்கள் (1) செயலாளரை இணைக்கும் கணினி விற்பனை மையம் (2) தொலைபேசி மூலம் ஒலியை அனுப்புதல் (அழைப்பு மையம் மற்றும் கைபேசி) (3) இணையம் செல்லும் வழிகள் மற்றும் (4) முதல் மூன்று ஊடகங்களின் பல்வேறு இணைப்புகள் அடங்கியுள்ளன.

வேளாண்மையில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டை தாண்டி, முதல் நிலை கருத்துகளில் ஒன்றானது என்னவென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கு தேவையான தகவல்கள் கிடைக்காததே பெரும் தடையாக இருக்கிறது. ஆகையால் முன் தலைமுறை தகவல் தொடர்பு தொழிற்நுட்பங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு முதலில் தகவலை பரப்ப வேண்டும். எனினும் இன்று நாம் விரும்பும் கருவிகள் நம்மிடம் உள்ளது. அவை, அ) அதிகளவில் புள்ளி விவரங்களை சேகாித்து ஆய்வு செய்தல் ஆ) ஆய்வு செய்யும் கருவிகள் மற்றும் தீர்மானம் எடுக்க உதவும் அமைப்புகள் இ) செயல்படுத்த முடியும் அமைப்புகள் மற்றும் அதனை கண்காணித்தல்

மிதவறண்ட பகுதிக்கான சர்வதேச ஆராய்ச்சி மையம், வேளாண்மையில் இன்றைய சவால்களை சந்திப்பதற்கு சிறு விவசாயிகளுடன் வேளாண்மை புதிய தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்த சவால்கள் வெறும் தொழில்நுட்பத்தில் மட்டும் உருவாகாமல் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் குறிப்பாக சுற்றுச்சூழலிலிருந்து உருவாகிறது. தகவல் பாிந்துரைப்பதற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை பாரம்பாியமாக பயன்படுத்துவதைத் தாண்டி புதிய கருவியான ட்ரோன் எனப்படும் குரலை பதிவு செய்யப்படும் கருவியை இக்ரிசாட் மையம் அறிமுகப்படுத்தியது. புதிய நவீன கருவிகள் மற்றும் பாரம்பாியமும் இணைந்து எங்களின் சில முயற்சிகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வல்லுனர்களும் ஒன்றுகூடி பணிசெய்வதற்கு உந்துதலாய் இருந்து துணை-சஹாரன் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள சிறு விவசாயிகள் வாழ்வை உயர்த்துகிறது.

புள்ளி விவர ஆய்வுகள் மற்றும் தொழில் அறிவு கொண்டு விவசாயிகளை சக்திமிக்கவர்களாக்குதல்
விவசாயிகளுக்கான புதிய விதைப்பு செயலியுடன் தனிபட்ட கிராம அறிவுரையாளர் அறை ஒன்று, விவசாயிகளுக்கு சாியான விதைப்பு நேரம் எடுத்துகொள்ள உதவுகிறது. அதனால் வானிலை மாற்றத்தினால் ஏற்படும் உறுதியற்ற தன்மையை தவிர்க்க உதவுகிறது. ஆந்திர பிரதேசத்தில் இது சிறியளவில் செயல்பட்டு வருகிறது. விதைப்பு செயலி மூலம் வானிலை, மண் மற்றும் இதர அறிகுறிகள் சார்ந்த பயிர் விதைப்பின் சிறந்த நேரத்தின் அறிவுரைப்படி, விவசாயிகள் மிகுதியான அறுவடைகளை பெற உதவுகிறது.

விதைப்பு செயலியில், அமொிக்காவை அடிப்படையாக கொண்ட அவேர் இங்க் என்ற நிறுவனம் வழங்கிய சத்திவாய்ந்த செயற்கை புரிதிறன் உடன், வானிலை முன் அறிவிப்பு மாதிரிகள் மற்றும் கடந்த 45 வருடங்களில் பெய்த மழையளவும் கர்நூல் மாவட்டத்தின் 10 வருடங்களுக்கான நிலக்கடலை விதைப்பு புள்ளிவிவரத்தையும் உள்ளடக்கிய பரவலான புள்ளிவிவரங்களை பயன்படுத்தப்படுகிறது. இந்த புள்ளிவிவரம் சுருங்க செய்து வருமுன் அறியும் திறனை வளர்த்து, சாியான விதைப்பு வாரத்தை தேர்வு செய்யும் அளவிற்கு விவசாயிகளை வழிநடத்துகிறது. சேகாிக்கப்பட்ட இதர புள்ளிவிவரங்களை இணைக்கும்போது, அதனை சிறந்த புள்ளிவிவரகூட்டுகளாக உருவாக்கி, விவசாயிகளுக்கான வருமுன் அறியும் மாதிரிகளாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதே மாதிரி, தனிபட்ட கிராம அறிவுரையாளர் அறை, பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகள் குறித்த உடனடி பார்வையை வழங்கி அதன்மூலம் ஆரோக்கியமான பயிர் மகசூலை உறுதிப்படுத்துகிறது. தற்போது செயல்படுத்திவரும் சிறிய திட்டத்தில் விவசாயிகளுக்கு விதைப்பு தேதி குறித்த தகவலை தெலுங்கு மொழியில் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு 13 மாவட்டத்தில் உள்ள 10000 ஹெக்டோிலும் இக்ரிசாட் அலுவலர்களால் நேரடியாக புள்ளிவிவரங்கள் சேகாிக்கப்பட்டது. இவைகளை மைக்ரோசாஃப்ட் அஷுர் க்லௌட் அமைப்பினால் மின்னனு கருவியில் ஏற்றப்பட்டது.

வேளாண்மை மேம்பாட்டு ஆய்வுகளின் பயன்பாடு மூலம் வேளாண் தொழில்நுட்பங்களை நேர்படுத்தி, வலுபடுத்த உதவுகிறது. விதைப்பு செயலி மற்றும் தனிபட்ட கிராம அறிவுரையாளர் அறை, மேகங்கள் அடிப்படையில் வருமுன் அறியும் ஆய்வுகளை சிறப்பாக அளிக்கிறது. இதன் மூலம் முக்கிய தகவல் மற்றும் நுண்ணறவினால் விவசாயிகளை மேம்படுவதோடு பயிர் இழப்பை குறைய மகசூல் அதிகாிக்கவும் உதவுகிறது. மேலும் அழுத்தம் குறைந்து சிறந்த வருமானம் கிடைக்கிறது. ஆந்திர அரசு, மைக்ரோசாஃப்ட் அவேர் மற்றும் இக்ரிசாட் இணைந்து, ஆந்திர அரசு நிதியுதவில் செயல்பட்டு வரும் ரைத்துக் கோசம் (விவசாயிகளுக்காக என்று பொருள்) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உள்ளூர் அடிமட்ட நிறுவனமான சைதன்யா இளைஞர் சங்கம் செயல்பட்டு வரும் கர்ணூலில் இந்த முயற்சிக்கு களத்தில் உதவி செய்கிறது.

நிலத்தினில்
இக்ரிசாட் குழு கிராமத்தை பார்வையிடும்போது சிவப்பா என்ற ஒரு கோபமிக்க விவசாயி ‘மற்றவர்களுக்கு வரும் குறுஞ்செய்தி எனக்கு வராதது எப்படி” என்று ஆவேசமாய் தன் கோபத்தை வெளிபடுத்தினார். அதேபோல், இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கர்ணூல் மாவட்டத்தை சேர்ந்த யுசப் பாஷா மற்றும் மதன்ன கந்தப்பா ஆகிய இருவரும் இதனையே பகிர்ந்துகொண்டனர்.
கர்ணூல், தவனகொண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ஜுன் 15 முதல் அவர்களுடைய கைபேசிகளுக்கு, விதைப்பிற்கு சாியான நேரம், விதைப்பிற்கு முன் தயாரிப்புகள் என்ற தகவல் அடங்கிய குறுஞ்செய்தி அறிவுரையாக அனுப்பப்படுகிறது. சுமார் 1000 விவசாயிகளில் தற்போது 175 விவசாயிகளுக்கு இந்த அறிவுரைகளை வானிலை, வளர்க்கும் பயிர், மண் ஆரோக்கியம் மற்றும் இதர அறிகுறிகள் அடிப்படையாகக் கொண்டு சிறந்த விதைப்பு நேரத்தை தகவலாக கிடைக்கிறது.
தவனகொண்டா மற்றும் சுற்றுபுற கிராமங்களில் உள்ள விவசாயிகள் முதலில் மழையை நம்பியே இருக்கின்றனர். சுமார் 60 % நிலப்பகுதியில் நிலக்கடலையும், 22% பகுதியில் பருத்தியும் மற்றும் 17% பகுதியில் ஆமணக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கடலை உற்பத்திக்கு, உள்ளூர் மொழியான தெலுங்கு மற்றும் ஆங்கில மொழியிலும் அறிவுரைகள் அனுப்பப்படுகிறது. பல விவசாயிகள் முதல் தலைமுறை கைபேசிகள் பெற்றிருந்தனர்.ஆனால் அவைகளில் உள்ளூர் மொழி இல்லாததால் செய்திகளை ஆங்கிலத்திலும் அனுப்பப்பட்டது. எழுத்தறிவு தடைகளை தாண்டி வர சில விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு செய்திகளை மற்ற விவசாயிகள் மூலம் பகிர்ந்துகொள்ளும் பொறுப்பை அளித்தது.மேலும் குரல் பதிவு செய்து செய்திகளை அனுப்பும் சாத்தியக்கூறுகளை வெளிகொணர்ந்தனர்.

திருமதி. ரமேஷ்வரம்மா இந்த அறிவுரை சேவையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.அவர் தனது 1.5 ஹெக்டர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்தார். மேலும் அவர் ஜிப்சம் இடுதல், ஈரப்பதம் சேமிப்பதற்கு பார் எடுத்தல், துவரையை ஊடுப்பயிராக விதைத்தல் மற்றும் நுண்ணூட்டச்சத்து இடுதல் போன்ற அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றினார். இன்று அவருடைய முயற்சியை காட்டும் வகையில் பயிரை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். முன்பு குறுஞ்செய்தியை பெறுவதற்கு கையொப்பமிடாத சிவப்பா போன்ற பல விவசாயிகள், தன்னுடைய சக விவசாயிகள் பயன்பெற்றதை கண்டு தற்போது இதில் கையெழுத்திட ஆர்வமாக உள்ளனர். ஜுன் 24 முதல் விவசாயிகளை கண்காணித்து, அவர்களுக்கு விதைப்பு அறிவுரையை தொடங்கியது முதல் 15 விழுக்காடு விதைப்பு பகுதி முதல் ஜுலை 4 இல் 100 விழுக்காடு வரை உயர்ந்தது.

முடிவு
இந்த முயற்சி, பொதுவான மேடையில் வல்லுநர்களை ஒன்று சேர்ந்து பகிர்ந்துகொண்டு சிறுவிவசாயிகளை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குகிறது. சீதோஷன மாற்றங்கள் பொறுத்தவரையில், விவசாயிகளுக்கு தகவல் அளித்து சாியான முடிவுகளை எடுத்து அவர்களுக்கு பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இடர்பாடுகள் சந்திப்பதற்கு வேளாண்மை அமைப்புகளில் பயிர் பல்வகைமையை அறிமுகப்படுத்துவது, சீதோஷனம் சார்ந்த வேளாண்மைக்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல். இதற்கு விவசாயிகள், ஆராய்ச்சி மையங்கள், அரசு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்று கூடி, வேளாண்மையை இலாபகரமாக மற்றும் நிலைத்திருக்கவும் ஒருங்கிணைந்த முறையில் பணிபுரிகின்றனர்.

நன்றி கூறுதல்
டாக்டர். சுஹாஸ் வாணி, திட்ட ஆராய்ச்சி இயக்குநர் – ஆசியா மற்றும் இந்தத் திட்டத்தை தலைமை வகித்த திட்ட தலைவர், இக்ரிசாட் வளர்ச்சி மையம், இக்ரிசாட், டாக்டர். ஏ.வி.ஆர். கேசவ ராவ், ஐடிசி, இக்ரிசாட், திரு. ஜி. ஆதி நாராயணா, ஆராயச்சி அலுவலர், இக்ரிசாட், கர்ணூல், திரு.வி.கோபிநாத், தொழில்நுட்பவியர், இக்ரிசாட், கர்ணுால், டாக்டர். பிரபாகர் பாதக், ஆலோசகர், ஐடிசி, மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கர்ணூல் மாவட்டம், ஆ.பிரதேசம் ரைத்துக் கோசம் திட்டம் மற்றும் சி. மதுசூதன்,திட்ட அலுவலர் மற்றும் செத்தன்ய இளைஞர் சங்கத்தின் இதர அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி தொிவிக்க விரும்புகிறேன். இந்தப் பணி, ஆந்திர அரசு நிதியுதவி பெற்ற ஆ.பிரதேச ரைத்துக் கோசம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

பெட்டி செய்தி
ஜுன் 27 ஆம் தேதி அன்று அனுப்பப்பட்ட மாதிரி குறுஞ்செய்தி
1. மானாவாரி நிலக்கடலை பயிரின் விதைப்பை துவக்கலாம்.
2. விதைப்பிற்குமுன் விதை நேர்த்தி முக்கியம்
3. விதை மற்றும் மண் சம்மந்தமான நோய்களை தடுப்பது மிக முக்கியம்
4. ஒரு கிலோ விதையுடன் 3 கிராம் திரம் அல்லது காப்டன் அல்லது மேங்கொசெப்புடன் நேர்த்தி செய்ய வேண்டும்.
5. எங்கெல்லாம் வெள்ளை வண்டு பிரச்சனைகள் இருக்கிறதோ, அங்கு ஒரு கிலோ விதைக்கு 6.5 மி.லி. க்லோர்பைரிபாஸ் விதைப்பிற்கு முன் நேர்த்தி செய்ய வேண்டும்.
6. விதைக்கும்போது சாியான மண் ஈரப்பதம் இருக்கிறதா என்பதை உறுதிகொள்ள வேண்டும்.
7. மண்ணில் 5 செ.மீ. ஆழத்தில் விதையை விதைக்க வேண்டும்.

அமித் சக்ரவர்த்தி


Amit Chakravarty
Senior Manager
ICRISAT, Patancheru
Hyderabad
E-mail: a.chakravarty@cgiar.org

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...