நகர-கிராம பின்னனி பகுதிகளில் உணவு மற்றும் வாழ்வாதார உத்திரவாதம்


நகரப் பகுதிகளுக்கு நுழைய, பின்புல நகரப் பகுதிகள் காத்திருக்கும் அறையாக கருதப்படுவதில்லை. நிலப்பயன்பாட்டின் மாற்றங்கள் மற்றும் வகுக்கப்படாத கட்டுமான செயல்பாடுகளை தடுக்க, நம் எண்ணங்களில் அடிப்படை மாற்றங்கள் தேவை. பல்வேறு செயல்பாடுகள் கொண்ட பசுமைபகுதிகள் மற்றும் பின்புல வேளாண்மையையும், ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதன் மூலம், இந்தச் சூழ்நிலையை இன்னும் நன்கு மேம்படுத்தலாம். கோரக்பூர் நகரத்தின் பின்புல நகர பகுதியிலுள்ள பசுமை பகுதிகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கூட்டுமுயற்சிகளின் விளைவாக, மக்களின் உணவு உத்திரவாதத்தை உயர்த்துதல், நகரத்தை சுற்றி பசுமை பகுதிகளை மேம்படுத்துதல், நகர-கிராம பின்புல நிலங்களில் உள்ள கிராம ஏழைகளின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்துதல் போன்றவைகளை அடைவதற்கு மிக சிறப்பாக வழி வகுக்கிறது.


பின்புல நகர வேளாண்மை, இந்தியாவில் கோரக்பூர் நகரம், நகர வாழ்வாதாரத்தில் பல்வகைமையை உருவாக்கும் கள செயல்முறையின் பிரிதிநிதியாக கருதப்படுகிறது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர சமூகங்களுக்கு, உள்ளூர் உணவான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் , திறந்தவெளிப் பகுதிகளை உணவு சேமிக்கும் இடமாக மேம்படுத்தப்படுகிறது. புதிய தொழில்நுட்ப முறைகளோடு, சீதோஷனம் சார்ந்த பின்புல நகர வேளாண்மையை, இந்தப் பகுதியிலுள்ள நிலபயன்பாட்டு முறை மற்றும் உயிர்ச்சூழல் அமைப்பைக் கொண்டு மேம்படுத்த பாிந்துரை செய்யப்படுகிறது.

திட்டமிடப்படாத நகரமயமாக்குதல் மற்றும் சீதோஷன பன்முகத்தன்மை ஆகிய இரண்டும் நிலைத்தத்தன்மைக் கொண்ட நகரத்தின் வளர்ச்சிக்கு பொியதடைக்கற்களாக இருக்கிறது. நகரப் பகுதிகளின் திறந்தவெளி பகுதியை சுருங்கி வருதல் மற்றும் தங்குவதற்கான தேவையும் வளர்ந்து வருவதால் வேளாண் நிலங்கள் மேல் அழுத்தம் உருவாகிறது. இது பசுமை பகுதியில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் நகரங்களுக்கு முக்கிய உணவு பொருட்களுக்கான விநியோக சங்கிலி தடைப்படுகிறது. கிராமப்பகுதியின் வாழ்வாதார முறையும் பாதிப்படைகிறது.
இந்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், மத்திய உதவித் திட்டத்தால் உதவிபெற்ற கோரக்பூர் சுற்றுச்சூழல் செயற்குழு (GEAG) என்ற நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களை பரப்பப்பட்ட முயற்சிகள் குறித்து இந்த தலைப்பின்கீழ் பகிர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தில் கியாக் நிறுவனம் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேக்கத்தின் ஆபத்திலிருந்து கோரக்பூர் நகரத்தை பாதுகாப்பதற்கு, பின்புல நகர வேளாண்மையை வலுப்படுத்துதல் மூலம் பசுமையை மேம்படுத்துகிறது. இந்த செயல்முறை உயிர்ச்சூழல் சேவையின் முக்கியத்துவத்தை,விரிவடைந்த வேளாண் தொழில்நுட்பம் மூலம் நகரத்தின் சீதோஷன மாற்ற தாக்கத்திற்கு தீர்வு காண்பதை விளக்குகிறது.

கோரக்பூர் பின்புல நகர பகுதிகள் அடர்ந்த மக்கள் தொகை கொண்டது. தீவிர சிறு நில வேளாண்மை என்பது ஆதிக்கம் செலுத்தும் பெயராக உள்ளது. குறநில உள்ளூர் விவசாயிகள், ஏழை நகரவாசிகள் மற்றும் இடம்பெயர்ந்த கிராம மக்கள் அருகருகே வாழ்கின்றனர். மேலும் அவர்கள் வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். பின்புல பகுதிகளில், முக்கிய உணவு உற்பத்தி மையங்கள், வளர்ந்துவரும் நகர மக்கள் தொகைக்கேற்ப, புதிய மற்றும் தேவையான உணவு விநியோகம் செய்வதில் முக்கியபங்கு வகிக்கிறது. பின்புல வாழ்வாதார அணுகுமுறை, அடிப்படை தேவையான உணவு விளைபொருட்கள் மற்றும் வருமானம் அளிப்பதில் வேளாண்மை முக்கியமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, பண்ணை கூலி வேலை போன்றவற்றிற்கு இது வேலைவாய்ப்புக்கான ஆதாரமாக இருக்கிறது. எனினும், பாதுகாப்பான மற்றும் சுலபமாக கிடைக்கக்கூடிய உணவு உற்பத்திக்கான சவால்கள், சுற்றுச்சூழல் நேர்த்தியை அதிகளவில் பாதுகாத்து வைக்கிறது. டிரான்ஸ் சர்யு பகுதியில், கோரக்பூர் பொிய வர்த்தக மையமாக திகழ்கிறது. இதனோடு விளைபொருட்களை சில்லரை மற்றும் மொத்த வியாபார சந்தைகள் இரண்டும், வேளாண் விளைப்பொருட்கள் முதல் வீட்டை அடிப்படையாக கொண்ட குடிசைத்தொழில்கள் வரை இருக்கிறது. வரலாற்றிலேயே, இந்த மொத்த பகுதியும், ஒவ்வொரு வருடமும் குறிப்பாக கோடை காலத்தில் (ஜூன்-செப்டம்பர்), கீழ்மட்ட வெள்ளபெருக்கில் தவித்து வருகின்றனர். நகரத்திலும், அதனை சுற்றியும் இருக்கும் மோசமான நிலையோடு சேர்த்து, கடந்த சில வருடங்களாக ஒழுங்குமுறையற்ற நகரமயமாக்கல் செயல்முறை மற்றும் சீதோஷன மாற்றுத்தன்மையும் (குறைந்தநாட்களில் அதிகமழை) இணைத்து கூடுதல் சவாலாக இருக்கிறது. சமீபகாலமாக ஏற்பட்ட மோசமான நிகழ்வுகள், நகரத்தின் சில பகுதிகளில் தீவிரமாக மற்றும் நீண்ட காலமாக வெள்ளப்பெருக்கும், தண்ணீர் தேக்கமும் அதிகாித்து வருகிறது.

ஒரு முயற்சி
கியாக் நிறுவனம் (GEAG), ஜங்கில் கௌடியா வட்டம், கோரக்பூரில் இரண்டு கிராமங்களில், சீதோஷன மீள்திறன் சார்ந்த புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பாிந்துரைத்து வருகிறது. இது ஜங்கில் கௌடியாடவுனின் அமைப்பு, பின்புல நகர பகுதியில் சுமார் 170 ஹெக்டர் நிலத்தில், குறிப்பாக சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளோடு பணி செய்து வருகிறது. இந்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் உதவியுடன் புதிய தொழில்நுட்பங்களை வலுவேற்றி, பரப்பி, ஊக்கப்படுத்தும் வாழ்வாதாரத்திற்கான திட்டம் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வேளாண் தொழிலில் மொத்த இலாபத்தை விரிவாக்கும் முறையில் கூட்டாக செயல்படுகிறது. குறிப்பாக,நீர்த்தேக்கபகுதி, உவர்ப்புப் பகுதி, மேட்டுப்பகுதி, வெள்ள பாதிப்பு ஏற்படும் நீர்பிடிப்புப் பகுதி மற்றும் பின்புல நகர பகுதிகள் ஆகியவற்றை மையமாக வைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் உருவாக்குதல் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

சனில் திட்டத்தின் கீழ், கியாக் நிறுவனம் மீள்திறன் வேளாண்மையை, பின்புல நகர பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களாக ஊக்கப்படுத்தி வருகின்றனர் (2018 – 2021). இரண்டு சிறு மற்றும் குறு மாதிரி விவசாயிகளான, திரு. சக்ரிவ் (பெட்டிசெய்தி 1) திரு.ராம் சந்தர் (பெட்டிசெய்தி 2) ஆகியவர்களுடன் துவக்கிய முயற்சியில், தற்போது 117 விவசாயிகளுக்கு பரப்பி மாதிரி விவசாயிகளாக உருவாகியுள்ளனர்.

ஏழை மற்றும் சிறிய சமூகங்களுக்கு உகந்த செயல்படுத்தும் வழியை குறிக்கும் பல்வகைமை வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படுகிறது. இது உணவை மையமாக செயல்படுத்தும் நோக்கத்தோடு, உள்ளூர் உணவு விநியோகம் குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள். திறந்தவெளி பகுதியை பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த செயல்முறையை வேளாண் சமூகங்களுக்கு உதவிபுரிகிறது. மேலும் அதிக வலுவான மற்றும் வெள்ளம் மீள்திறன் உருவாக்கி இழப்பின் வாய்ப்பை குறைக்கிறது. வெளியிடுபொருட்களின் தேவையை குறைக்க, பண்ணை உப முறைகளில், விவசாயிகள் மறுசுழற்சி செய்முறைகளையும் பின்பற்றுகின்றனர். வெளியிடுபொருட்களை குறைத்தல், உகந்த பயிர் இரகங்களை வளர்த்தல், இடம் மற்றும் நேர மேலாண்மையை பின்பற்றுதல், விதை வங்கி, நிலம் வடிவமைத்தல் மற்றும் நடமாடும் நாற்றங்கால் முறைகள் ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் உட்படுத்தி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.

வேளாண்மை – தோட்டக்கலைத் துறை – கால்நடை வளர்ப்பு முறைகளை ஒருங்கிணைக்கும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட முயற்சி பல்வகைமை சிக்கலானத் தன்மை மறுசுழற்சி செயல்முறை வேளாண் அமைப்பில் விரிவடைகிறது (படம் 1).

கடந்த முப்பது வருடங்களில் மக்களோடு சேர்ந்து இந்த மாதிரியை கியாக் நிறுவனம் உருவாக்கியது. இந்த மாதிரியின் தனித்துவமிக்க பண்பு என்னவென்றால், நிலைத்தத்தன்மை. இது உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டது. இந்தப் பகுதி அதிக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். அதனால், கைபேசி குறுஞ்செய்தி மூலம் விவசாயிகளுக்கு குறகிய மற்றும் மத்திய கால வானிலை அறிக்கையை தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

வேளாண் அமைப்புகளில் தொழில்நுட்ப உதவியோடு, பாதிக்கப்பட்ட குழுக்களின் மத்தியில் ,சீதோஷன நிலையை தாங்கும் பின்புல நகர வேளாண் அமைப்பு குறித்த தேவையை உருவாக்குவதும் இதன் அணுகுமுறையாகும் சுற்றுச்சூழல் கொள்கையை ஊக்கப்படுத்தி, பின்புல நகரப் பகுதியில் வேளாண் நிலத்தை பாதுகாக்கலாம். இந்த அணுகுமுறையில், மாதிரி விவசாயிகள் மற்றும் வேளாண் சேவை மையங்கள் மூலம் சமூகத்தை நிறுவனமாக உருவாக்குவதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜங்கில் காடியா கூட்டு கிராமங்கள் ஒன்று சேர்ந்து, 16 மாதிரி விவசாயிகள் மற்றும் 4 வேளாண் சேவை மையங்கள் உருவாக்கப்பட்டது.

பின்புல நகர வேளாண்மையின் முக்கிய கூறுகள்

1. மீள்திறன் வேளாண் அமைப்புகளை உருவாக்கி, அதனை பரப்புதல்:  மீள்திறன் வேளாண் முறையை ‘காண்பது நம்பிக்கையளிக்கிறது” என்ற கருத்தை வைத்து இந்தத் திட்டத்தை உருவாக்கி,  பரப்பப்படுகிறது.

2. நிறுவன கட்டமைப்பு:  மேலே விளக்கப்பட்டுள்ள உயிர் இடுபொருள் மற்றும் சீதோஷன மீள்திறன் செயல்பாடுகளை, வயல் வெளிப் பள்ளிகள், சுய உதவிக் குழு, வேளாண் சேவை மையங்கள் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் மூலம் மேலும் செயல்படுத்தி வருகிறது. புதிய கற்றல் செயல்பாடுகள் செயல்படுத்தி, வயல் வெளிப் பள்ளி மூலம் விவசாயிகள் மத்தியில் தகவல்களை பாிமாறியும், அவர்களின் நம்பிக்கையை அதிகாிப்பதற்கு உதவுகிறது. வேளாண் சேவை மையங்களில், வேளாண் கருவிகளான டீசல் ஆற்றலை கொண்ட தண்ணீர் பம்புகள், பாசன குழாய்கள் மற்றும் நாற்றங்கால் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் பசுமைகுடிலை கட்டுவதற்கான பொருட்களும் வாடகைக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள், மாதிரி மற்றும் இணை விவசாயிகள் ஆகிய இரண்டு தரப்பினரையும் உதவி செய்து, சீதோஷன மீள்திறன் உற்பத்தி செயல்பாடுகளை செயல்படுத்துவது முக்கியமாகும்.

3. தகவல் நிறுவனங்களோடு இணைப்பையும் தொடர்பையும் ஏற்படுத்துதல்: இந்தத் திட்டம், விவசாயிகள் மற்றும் புதிய நிறுவனங்கள், விவசாய பயிற்சி மையம், நபார்ட், ஐ.ஐ.டி, கான்பூர் போன்ற பல்வேறு தகவல் நிறுவனங்களிலிருந்து வல்லுநா;களுக்கு இடையில் இணைப்பும், தொடா;பும் உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது. இந்த இணைப்புகள், வல்லுநர்கள், அரசு மற்றும் முக்கிய துறைகளிலுள்ள மானியத் திட்டங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு கிடைக்க செய்கிறது.

திட்டத்தின் தாக்கம்
இந்தத் திட்டம்:
இந்தத் திட்டம் பரவலாக  கீழ்கண்டவைகளை அடைந்தது.
• பின்புல நகர மையங்களிலுள்ள வேளாண் நிலத்தை பாதுகாத்து, நகரத்திற்கு தேவையான உணவு உற்பத்தியை விரிவடையும் மாதிரியை உருவாக்க வழிவகுத்தது.
• உயிர் இடுபொருள் சார்ந்த செயல்பாடுகளை பாிந்துரைப்பதன் மூலம் பின்புல நகர பகுதிகளில், குறநில அமைப்புகளில் நிலைத்த மற்றும் சீதோஷன மீள்திறன் மாதிரிகளை மூலம் வேளாண் – தோட்டக்கலை – கால்நடை முறை உருவாக்கப்பட்டது.
• ஏழை குடும்பங்களுக்கு உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்தியது, இடம் பெயர்தலும் குறைந்தது.
• இடுபொருள் பயன்பாடு குறைந்தது, சிறுவிவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு நிகர இலாபம் விரிவடைந்துள்ளது.
• பின்புல நகர பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டது குழுக்களின் வாழ்வாதார உத்திரவாதம் விரிவடைந்துள்ளது, மேலும் நகர ஏழைகளின் உணவு உத்திரவாதமும் விரிவடைந்துள்ளது.

முடிவு:
கோரக்பூரின் வெற்றி, நம்பிக்கையற்ற விவசாயிகள் இடம்பெயர்ந்து செல்வது குறைந்துள்ளது. மேலும் வேளாண்மையில் புதிய நம்பிக்கையும் உருவானது . சீதோஷன மீள்திறன் வேளாண் முறையின் செயல்பாடுகள் இடுபொருள் செலவு குறைவதற்கும், நிகர இலாபம் அதிகாிப்பதற்கும் உதவுகிறது. பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு வாழ்வாதார உத்திரவாதம் விரிவடைவதற்கும், நகர ஏழைகளின் உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெட்டிசெய்தி 1
பல்வகைத்தன்மை: குறைந்த ஆபத்தையுடைய தேர்வு
ஐம்பது வயதுடைய திரு.சுக்ரீவ் பிரசாத், கோரக்பூர் மாவட்டம், ஜங்கில் கோடியாவட்டம், ஜந்தப்பூர் கிராமத்தில் வாழும் விவசாயி. இவரிடம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் சிலவகை பயிர்கள் மட்டும் பாரம்பாியமாக சாகுபடி செய்துவந்தார். 2019 ஆம் ஆண்டு, பல்வேறு வேளாண் சார்ந்த மென்மையான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றார். மேலும் வேளாண்மையில் தனது அணுகுமுறையை மாற்ற முடிவு செய்தார். இன்று, திரு.சுக்ரீவ் இந்தப் பயிர்களைத் தாண்டி செல்ல முடிவெடுத்தார். பட்டானி, காளிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி, கேரட், கொத்தமல்லி, பூண்டு, வெங்காயம், ஸ்பினாச், உருளைக்கிழங்கு, கோதுமை, தக்காளி ஆகியவை இவரது பணிக்கால காய்கறி பயிர்களாகும். அதேசமயம், பருவகால தட்டில் பீன்ஸ், நீர்காய்கறி, வெண்டைக்காய் மற்றும் நெல் விளைவிக்கிறார். அவர் சிபிபி மற்றும் மண்புழு தயாரிக்கிறார். இதில் கால்நடை உரத்தை சேர்ப்பதால் அவர் தன்னுடைய இயற்கை உரத்தை தயாரித்துக் கொள்கிறார். தற்போது, திரு.சுக்ரீவ் மகிழ்ச்சியாக பாிசோதனை செய்து,தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்.
‘அதிக வருமானம் என்றால், கடன் வாங்குவது குறைகிறது. குடும்பத்திற்கு தேவையான உணவும் அதிகாிக்கிறது” என்று விளக்குகிறார். மேலும் இந்த முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களோடு குறைந்த வெளியிடுபொருட்கள் பயன்படுத்தியதால் நான் 42 சதவிகிதம் சந்தை செலவுகள் குறைத்தேன். திட்டத்தோடு இணைப்பதற்குமுன் எங்களுக்கு நிகர வருட வருமானம் ரூ. 10000 – 12000 கிடைத்தது. ஆனால் தற்போது எங்களின் நிகர வருட வருமானம் ரூ.65000 மாக உயர்ந்தது, தற்போது இவரின் அனுபவம் மற்ற விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் பின்பற்றினார். மேலும் இந்தப் பகுதியில் உள்ள கிட்டதட்ட 25 சதவிகித விவசாயிகள் தங்களின் பண்ணைகளில் தொழில்நுட்பங்களை பின்பற்றுகின்றனர்.

பெட்டிசெய்தி 2: கீழ் சுரங்க பாதை பசுமைக்குடில் தொழில்நுட்பம்
ஜிந்தாபூர் கிராமத்தில் உள்ள திரு. ராம் சுந்தர் உண்மையாக ஒரு விவசாயி இல்லை. 0.6 ஏக்கர் நிலத்தில் அவர் கோதுமையை வளர்த்தார், ஆனால் மிககுறைந்த வருமானமே பெற்றார். ஏனென்றால் நிலம் தாழ்வாக இருப்பதால், நீர் தேங்கியிருக்கும். இவருக்கு ஒருசிறு கடையிலிருந்த வருமானம் கிடைக்கிறது. இதுவே இவருக்கும், இவரது குடும்பத்திற்கு வாழ்வாதார ஆதாரமாக இருந்தது. வேளாண் சேவை மையகுழுவின் கூட்டம் மற்றும் இதரவிழிப்புணர்வு கூட்டங்களில் பங்கேற்றார். ஆனால் அவற்றின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்கவில்லை, மேலும் பயிற்சியில் பங்கேற்று ஒரு வருடமாகியும் அவர் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

குறிப்பாக, தாழ்வான நிலப்பகுதி பயன்பெறும் வகையில் தாழ்தள சுரங்கபாதை பசுமைக்குடில் தொழில்நுட்பமே, இவரது ஆர்வம் பற்றக்காரணம். பசுமைக்குடில் தொழில்நுட்ப அடிப்படையில், வெளிச்சம் மற்றும் சூரியன் உள்ளே செல்லும் வகையில் அமைத்து வெப்பம் வெளிவராதவாறு காத்தது. எனினும், இந்த அமைப்பு கண்ணாடியினால் வடிவமைக்கப்படாமல், குறைந்த வலைக்கொண்ட பிளாஸ்டிக் அல்லது பாலித்தீனைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இந்த சுரங்ககுடில் அமைப்பு அவருடைய நிலத்தில் கட்டினார். வரிசையில் உள்ள காய்கறி பயிர்கள் நன்கு வளர்வதற்கு ஒளி ஊடுருவும் வரை அமைக்கப்படுகிறது. இதில் பருவகாலத்தை தாண்டியும் காய்கறி நாற்றுகள் வளர்ப்பது மட்டுமில்லாமல் பயிர் இழப்பும் குறைந்துள்ளது. இன்று திரு.ராம் சந்தர், காய்கறி நாற்றங்காலை அமைத்து நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகளை அருகிலுள்ள விவசாயிகளுக்கு விற்கிறார். இந்தத் தொழில்நுட்பத்தை மற்ற விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்து, இந்தக் குடிலைப் பன்னிரண்டு விவசாயிகளுக்கு அமைத்து உதவிப்புரிந்தார்.

திரு.ராம் சந்தர், வேளாண் சம்பந்தமான தகவல்கள் குறித்து என்னிடம் கேட்டறிகின்றனர் என்று பெருமிதத்துடன் கூறினார். அதிக இலாபம் பெறும் நிலைக்கு, அவரும், அவர் குடும்பத்தின் வாழ்வும் விரிவடைந்துள்ளது. விருப்பமில்லாத விவசாயியாக இருந்த இவர், தற்போது திரு.ராம் சந்தர் லீசாவின் ஆதரவாளராக இருக்கிறார். குறிப்பாக தாழ்தள சுரங்கக் குடில் தொழில்நுட்பத்தை குறித்து விளக்குவார்.
இந்தத் திட்டத்தை இணைத்தப்பின்,எங்கள் நிகர இலாபம், பருவத்திற்கு ரூ. 3500 ஆக இருந்தது. ஆனால் தற்போது, எங்கள் வருட வருமானம் ரூ.6000 ஆக இருக்கிறது. முன்பு செய்த கோதுமை சாகுபடியில் கிடைத்ததை விட, தற்போது வயல் பணி அதிக தீவிரமாக இருக்கிறது. இவர் காய்கறி சாகுபடி செய்வதன் மூலம் அதிக இலாபம் கிடைப்பதோடு, தன் குடும்பத்திற்கு ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கிறது. புதிய தொழில்நுட்பம் மற்றும் அதிக இலாபம் ஆகிய இரண்டும்,திரு. ராம்சந்தருக்கு வேளாண்மையில் நம்பிக்கை மீண்டும் உறுதிபெற்றது. இவர் தனது நிலத்தை நகரமயமாக்குவதற்கு விடமாட்டார், மேலும் அவரும், அவருடைய குழந்தைகளின் வாழ்நாளிலும் இந்த நிலத்தை மாற்றவிடமாட்டேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார். தற்போது, 50 விவசாயிகளுக்குமேல் நாற்றங்கால் வளர்த்தல் மற்றும் நேரத்தில் காய்கறி அறுவடை செய்தல் போன்ற தொழில்நுட்பங்களை பின்பற்ற செய்தார்.

அஜெய் குமார் சிங் மற்றும் அர்ச்சனா ஸ்ரீவத்சாவா


Ajay Kumar Singh
Archana Srivastava
Gorakhpur Environmental Action Group
HIG - 1/4, Siddharthpuram
Taramandal Road
Gorakhpur-273 017
E-mail: geagindia@gmail.com

மூலம்:  லீசா இந்தியா, மார்ச் 2022, வால்யூம் 24, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...