நகர்புற வேளாண் முயற்சிகள்


தொழில்மயமான வேளாண்மையானது பருவநிலை மாற்றம், நிலங்கள் சீரழிப்பு மற்றும் உணவு பாதுகாப்பிற்கு மிகப் பொிய சவால்களை அளித்து வரும் வேளையில், நகர்புறத்தில் உள்ள பகுதிகள் உணவு உற்பத்தி மற்றும் நுகர்விற்குமான தங்களின் உறவுமுறைகள் குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலான நகர்புற வேளாண் முயற்சிகளானது,உணர்திறன், விழப்புணர்வு, நிலத்தோடும், உழவர்களோடும், சுற்றுச்சூழல் அமைப்போடும் கூடிய தொடர்பு போன்றவற்றை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்பதை நிருபித்து வருகிறது.


உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வசித்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்து வரும் நகரமயமாக்கலின் விகிதம், மிக வேகமாக சிரழிந்துவரும் சுற்றுச்சூழலுக்கு காரணமாக அமைந்துள்ளது. விரிவடைந்து வரும் நகர சூழல் என்பது உணவு உத்திரவாதமின்மை, புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, அளவிற்கு அதிகமாக நீர் ஆதாரங்களின் சுரண்டல், குறைந்து வரும் வனப்பகுதி போன்ற மற்ற பிரச்சனைகளோடு தொடர்புடையது. மேலே கொடுக்கப்பட்டுள்ள நகரமயமாக்களின் போக்கானது, நகரங்களை வடிவமைக்கும்போதும், அவற்றில் நாம் எப்படி வாழ்க்கிறோம் என்பதும் நிலைத்ததன்மைக்கான சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது தௌிவாகிறது.

நகர வேளாண்மை, கூட்டுச் சொல்பாடுகளுக்கு ஒரு அடித்தளம்
உணவு பாதுகாப்பும் மற்றும் உற்பத்தியும் நகரமயமாக்கள் மற்றும் அது தொடர்புடைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளோடு நெருங்கிய தொடர்புடையது, இருப்பினும் அவை உடனடியாக தொிவதில்லை. நகரத்தில் உள்ள இடங்கள் பொதுவாகவே வேளாண்மை நடைபெறக்கூடிய பகுதிகளில் இருந்து அதிக தூரத்தில் தொடர்பற்று இருக்கும். உணவானது தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டாில் இருந்து பல்வேறு இடைத்தரகர்களில் வழியாகபயணப்பட்டு, அந்த வகையில் உணவின் சூழல் தடங்கள் போன்றவற்றின் செலவினங்களை அதிகப்படுத்துகிறது. இந்த வகையிலான உணவு கொள்முதல் முறையானது விவசாயிகளுக்கும் சுரண்டலை ஏற்படுத்துகிறது.

அண்மை ஆண்டுகளில், ஒரு சுவாரஸ்யமான எதிர் கதை உருவாகி வருகிறது. இந்தியாவானது ஒரு சிறிய, ஆனால் கவனிக்கத்தக்க  போக்கை பார்க்கிறது. அதாவது கார்ப்போரேட் துறையில் உள்ள மக்கள் தங்கள் வேலையை துறந்து விட்டு வேளாண்மையை ஒரு தொழிலாக செய்ய துவங்கி உள்ளனர். இது பாதுகாப்பான உணவு மற்றும் சூழலியல் நேர்மைக்காக என பல்வேறு காரணங்களை பிரதான கவனமாக கொண்டு நடைபெறுகிறது. இந்த போக்கானது பாரம்பாிய நடைமுறைகளில் உள்ளடங்கியுள்ள, உயிர்ச்சூழலுக்கு உகந்த வேளாண் முறைகளை புதுப்பிப்பதிலும், தேடுவதிலும் இணைந்து காணப்படுகிறது. இந்த கட்டுரையானது, ஒரு சமூக நகரப்புற பண்ணை என்னும் ஒருநகர்புற முயற்சியை பற்றியது.

கனவுசோலை-சமூகம் முன்னின்று செய்யும் நகரப்புற பண்ணை
கனவுசோலை என்பது மும்பையில் உள்ள 800 சதுர அடி பரப்பளவு கொண்ட பொதுமக்கள் பூங்காவில் நகர்ப்புற வேளாண் முயற்சியாகும். முன்பு இந்த பூங்காவானது, புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு மோிபால் என்னும் உள்ளூர்வாசியை தூண்டி அதனை குழந்தைகளுக்கு மற்றும் முதியோர்களை ஒரு வரவேற்கும் இடமாக 2018ல் மாற்றினார். தன்னார்வ அடிப்படையில் பூங்காவை பராமாிக்க உள்ளூர் குழுவை அவர் உருவாக்கினார். அந்த குழுவில் ஏற்கனவே முன் அனுபவம் உள்ள பிரமிளா மார்டிஸ் மற்றும் தீப்தீ ஜாங்கியாணி (பெட்டிச் செய்தி 1 ஐ காண்க) என்பவர் உண்ணக்கூடிய தாவரங்களை வளர்ப்பதில் நகர்ப்புற இலைகள் என்னும் நகர வேளாண் குழுவில் முன் அனுபவம் கொண்ட இருவரும் இடம் பெற்றிருந்தனர். குழுவில் உள்ள ஒவ்வொரு வரும் கீழே விழும் இலைகளை, சமையலறை கழிவுகளை, தென்னை நார் கழிவுகளை அருகாமையில் வசிப்போரிடம் இருந்து சேகாித்து அதனை பூங்காவினுள்ளே சாணம் மற்றும் கோமியத்தின் உதவியோடு குவியல் முறையில் மட்குஉரமாக தயாரிக்கும் (அம்ரிட் மிட்டி என்று அழைக்கப்படும் பணியை) பணியை மார்டிஸ் முன்னேடுத்தார். பின் அந்த சத்துக்கள் மிக்க இலைமட்குகள் இயற்கை முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் பிர்கார் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்;.சி) இந்த யோசனைக்கு தயக்கம் காட்டியது, பின்னர் உள்ளூர்வாசிகளின் ஏற்றுச் செயல்படும் தன்மை மற்றும் அந்த இடத்தின் பௌதீக மாற்றம் அவர்களை பூங்காவை பராமாிப்பதில் உதவ தூண்டியது. தற்போது, இது போன்ற சமூகம் முன்னின்று செய்யும் உணவு தோட்டங்களில் அவர்களின் யோசனைகளும் முதலீடாக உள்ளது.

ஜாங்கியாணியின்  கூற்றுப்படி, கடந்த இரண்டு வருடங்களில், அவர்கள் 50 வகையான உண்ணக்கூடிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் உள்ளடக்கிய தாவரங்களை வளர்த்துள்ளனர். பருவகால அறுவடையில் பைன்ஆப்பிள், வாழை, சேனை, முள்ளங்கி, தக்காளி, பாகற்காய்,மிளகாய், வெண்டை என இன்னும் பல சொல்லிக்கூடியவையும் உள்ளடங்கும். மிக முக்கியமாக, உடல் உழைப்போடு கூடிய செயல்பாடுகளான மட்குஉரம் தயாரிப்பு, உழவு மற்றும் பயிர் பராமாிப்பு முதலியவற்றில் மக்களின் பங்கெடுப்பு, உணவு உற்பத்தி செய்யும் இந்த செயல்முறையில் அவர்கள் தங்களை சாி செய்துகொள்ள உதவியது. 7 முதல் 80 வயது வரை என பல்வேறு வயதுடைய குழுக்களின் பங்கெடுப்பு புதிய வகையில் தலைமுறையினருக்கிடையேயான ஒற்றுமை மற்றும் விவாதங்களுக்கு இட்டுச் சென்றது. சராசாியாக பல்வேறு குழுவை சேர்ந்த 20 தன்னார்வலர்கள் வாரத்தின் கடைசியில் பூங்காவிற்கு வருகை தந்து அங்கு விதைப்பு, நடவு, அறுவடை மற்றும் நீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளில் பங்கெடுப்பார்கள். அவளின் வார்த்தைகளில், “ ….நீங்கள் சொந்தமாக பங்கெடுக்கும்போது, இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். நாங்கள் பயிர்களை மட்டும் வளர்க்கவில்லை,மனிதர்களையும் வளர்க்கிறோம்’.
இந்த குழுவானது தங்களின் செயல்பாட்டுத் தளத்தை அருகில் உள்ள வாராந்திர உழவர் சந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அங்கிருந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விதைகள், அங்கு காய்கறி கழிவுகளாக விடப்பட்டவற்றை மட்குஉரமாக மாற்றுவதில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்களின் அதிகமான ஆர்வம் மற்றும் உணவு முறைகள் அதன் நிலைகள் மீது உள்ள கவலையின் காரணமாக, ஊரடங்கு காலக்கட்டத்தில் பிரமிளா “பயாிடுவோரிடமிருந்து பாண்டார வீடுகளுக்கு” என்ற அமைப்பை ஏற்படுத்தி, அங்கிருந்து அவர் விவசாயிகளின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கண்டறிந்து, அறுவடை செய்யப்பட்டவற்றை விவசாயிகளிடமிருந்து அல்லது விவசாயபொருட்களை சேகாிப்போரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. படிப்படியாக, இந்த கூட்டமைப்பானது விரிவடைய மற்ற உறுப்பினர்களும் அவர்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தின் வழியாக குழுவிற்கு மேலும் அதிக விவசாய பொருட்களை அறிமுகப்படுத்தினர்.

ஊரடங்கு காலத்தில் நம்பிக்கையான ஒரு கூட்டமைப்பை கட்டமைத்தது
பிரமிளா மார்டிஸ் கடந்த சில வருடங்களாக சில இயற்கை உழவர்களிடம் அரிசி மற்றும் தானியங்களை வாங்கி வந்தார். உழவர்கள் தங்கள் விளைபொருட்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள ஆன்லைன் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டார். அவரது கூற்றுப்படி, விவசாயிகள் பகிர்ந்துகொண்ட விவரங்கள் அவர்களுடன் நம்பிக்கை மற்றும் தொடர்பை வளர்க்க உதவியது. உதாரணமாக,குழுவில் தங்கள் விளைபொருட்களை விற்ற உழவர்களில் ஒருவர் சுசீல் போர்கா தொழிலில் அவர் ஒரு தொழிலதிபராக இருந்தாலும், நிலத்தை பராமாிப்பதில் தான் தனது இதயம் அடங்கியிருக்கிறது என நினைக்கும் அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் அவ்வாறு செய்து வருகிறார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) வனவிலங்கு கிளப்பில் ஒரு மாணவராக இருந்தபோது அவர் பெற்ற அனுபவங்களே இயற்கையின் மீதான அவரது ஆர்வத்திற்குகாரணம். அவர் இரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை. மேலும் பண்ணையில் உருவாகி வரும் உணவு சூழலை கவனத்தில் கொள்கிறார். அவர் தனது தயாரிப்பு பற்றி குழுவில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“எங்கள் பண்ணை பொருட்களை இந்த வாரம் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று உங்களுக்குதொிவித்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பத்மஸ்ரீ சுபாஷ் பாலேகாின் இயற்கை வேளாண் முறையை நாங்கள் பின்பற்றுகிறோம். இது பசு மாடுகள் அடிப்படையிலான கானம்ருத் மற்றும் ஜீவாம்ருத் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனைத் தயாரிக்க, எங்களிடம் மொத்தம் 18 நாட்டு கால்நடைகள் (பசுக்கள், காளைகள் மற்றும் கன்றுகள்) உள்ளன. மேலும் நாங்கள் பசுக்களுக்கு பால் கொடுப்பதில்லை. எங்களின் அனைத்து தயாரிப்புகளும் 100 விழுக்காடு இயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன.
எங்கள் மாம்பழங்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன. ஹபூஸ் (எங்கள் மாம்பழத்தில் 80 விழுக்காடு), ரத்னா (10 விழுக்காடு), கேஷா (10 விழுக்காடு). மாம்பழங்கள் கடைசி நிமிடத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. இதனால் அவை முழுமையான மரமாக முதிர்ச்சியடையும். பின்னர் அரிசி வைக்கோலில் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன. விற்கப்படும் மாம்பழங்கள் பழுத்த /பாதிபழுத்த நிலையில் இருக்கும். குறைநந்தபட்ச ஆர்டாின் அளவானது 8 டஜன்கள். மாம்பழத்தின் அளவில் நெகிழ்வாக இருக்கும்.

நுகர்வோர் தனிப்பட்ட உழவர்களிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தங்கள் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். தீப்தியின் கூற்றுப்படி, தாவரங்களில் பழம் தரும் பருவகால முறைகள் பற்றிய அவர்களின் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் என்ன கிடைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் அனுமதித்தது.

உள்ளூர் பொருட்களை விநியோப்பதற்கான ஆதரிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் அதீத பங்கேற்பு

பண்ணைகளிலிருந்து நகரங்களுக்கு செல்லும் பயணச் செலவினங்களை குறைக்கும் வகையில், உழவர்களிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, அவர்களின் முடிவில் விளைபொருட்களைப் பிரித்து கொடுக்கும் பொறுப்புகளையும் குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர். செயல்களில் ஈடுபடாமல் வெறுமனே பெறுவர்களாக இருப்பதற்கு பதிலாக,தனிநபர்கள் விளைபொருட்களுக்கான உரிமையையும், உழவர்கள் மீதான கனிவையும் உணர்ந்துகொண்டனர். உதாரணமாக,வெவ்வேறு விவசாயிகளிடமிருந்து வெங்காயம் மற்றும் பழங்களை வாங்க குழு ஒன்று கூடி தங்களுக்குள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தியது.

எல்லா டெலிவரிகளும் திட்டமிட்டபடி நடக்கும் என்று சொல்லமுடியாது, சிலசமயங்களில் தளவாடங்கள் அல்லது உற்பத்தியின் தரத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். இருந்தபோதிலும், பிரமிளா, உழவர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்களை நுகர்வோருடன் இணைப்பதில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதை பார்த்துக் கொண்டார். ஏனெனில் உணவு பன்முகத்தன்மையைப் பற்றி நன்கு விரிவாகக் கற்றுக்கொண்டார். அது மாதிரியான தகவல்களை குழுவில் உள்ள மற்றவர்களுக்கு அனுப்புவது, அவர்கள் உணவை பெறுவதில் ஆர்வம் காட்ட உதவியது என்ற கருத்தையும் அவர் தொிவிக்கிறார்.

மதிப்பீடு மற்றும் சுய பலம் பெற்றது குறித்த நல்லொழுக்க வட்டங்கள்
உழவர்களிடம் இருந்து தொடர்ச்சியாக பெறப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் கருத்துக்கள் தங்களின் தேர்வு மற்றும் கூட்டுச் செயல்பாட்டு முயற்சிகளால் குழு சுயபலம் அடைந்திருப்பதாக எண்ணியது.
“எங்களில் வெங்காயம் வாங்கியவர்களுக்கு,வெங்காயம் உற்பத்தி செய்த உழவரான அவியுடன் ஒருங்கிணைந்து விநியோகம் மற்றும் விநியோகத்தை ஏற்பாடு செய்ததற்காக அமித் அவர்களுக்கு ஒரு பொிய நன்றி. உங்களின் தகவலுக்காக, அதாவது அவி மற்றும் அவரது அருகில் உள்ள உழவர்கள் 6 டன் கோடை வெங்காயத்தை வைத்திருந்தனர். வணிகர்களிடம் குறைந்த விலைக்கு கொடுக்க மறுத்து மும்பைக்கு தனிப்பட்ட முறையில் வழங்க முடிவு செய்தனர். கடந்த வாரம் 1500 கிலோ எடை போட்டனர். நாங்கள் ஒரு சிறிய பகுதியாக 100 கிலோவில் இருந்தோம். ஆனால் அது நன்றாக இருந்தது. “
குழுவின் ஆதரவு மிகவும் சிறிய அளவிலான தயாரிப்புகளுக்கும் (தேங்காய்,ஊறுகாய் போன்றவை) நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் அதிகஅளவு உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குகிறது.

முன்னோக்கி செல்லும் வழி: உள்ளூர் முன்முயற்சிகள் மூலும் உழவர்களின் விளைபொருட்களை ஆதாித்தல்
நகர்புற வேளாண் முயற்சிகளில் குழுவின் தொடர்ச்சியான பங்கேற்பு உழவர்களின் முயற்சிகளை பாராட்ட உதவும் என்பதை விவரிப்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. உள்ளூர் காலநிலை விளைபொருட்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொண்ட, அளவு அல்லது தரத்தில் உள்ள முரண்பாடுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தனர். வழக்கமான கருத்து மற்றும் உரையாடல் செயலற்ற நுகர்வோர் என்பதைவிட உழவர்களுடன் கூட்டு உணர்வை உணர அவர்களுக்கு உதவியது. நம்பிக்கையின் உறவைக் கட்டியெழுப்புவது, மற்றவர்களின் திருப்தியை (நுகர்வோருக்கு தரம் மற்றும் உழவர்களுக்கு நியாயமான விலை) உறுதி செய்வதற்காக இரு தரப்பினரும் கூடுதல் மைல் செல்ல தயாராக இருக்க வழிவகுத்தது.

சமூக அடிப்படையிலான அனுவங்களின் அடிப்படையில் நகா;ப்புற நுகர்வோரை உணர்தல், நிலையான வேளாண் முயற்சிகளுக்கு தேவையான தேவைகள் மற்றும் ஆதரவை பெற உதவும். உழவர் சந்தைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கிடையேயான செயலில் உள்ள ஒத்துழைப்பு, அதிக அளவில் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை செயல்படுத்துவதற்கும், பண்டமாற்று,. தன்னார்வ நேரம், வளங்கள் போன்றவற்றின் மூலம் பொருளாதார பாிவர்த்தனைகளுக்கான மாற்று வழிகளை உருவாக்குவதற்கும் ஒரு வழியாகும். ஒதுக்கீட்டுத் தோட்டங்கள்  கருத்தாக்கம் போன்ற நகர – வேளாண் முயற்சிகளை ஊக்குவித்து நிலைநிறுத்த உள்கட்டமைப்பு அல்லது வளங்களைச் செயல்படுத்துவது, நகரத் திட்டமிடலுக்கான கொள்கைப் பாிந்துரையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். உள்ளூர் உழவர்களை தீவிரமாக ஆதாிப்பதற்கான முக்கிய மனவிழிப்புணர்வு மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்குவதில் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட உணவுத்தோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகர திட்டமிடல் சார்ந்த கொள்கைகளில் இத்தகைய முயற்சிகள் இடம் பெற வேண்டும்.

பெட்டிச் செய்தி 1: தன்னார்வலர்கள் சுய விவரங்கள்:
நிதித்துறையில் கல்வியில் பின்புலம் கொண்ட பிரமிளா மார்டிஸ், தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 2013 ஆம் ஆண்டு சமூக நகர வேளாண் குழுவில் (நகர்புற இலைகள்) சர்ந்தார். அவர் “நகர்புற இலைகள்” நடத்திய சமையலறை தோட்டம் பற்றிய கருத்துப்பட்டறை பயிற்சியில் பங்கேற்றார்.
பத்திரிக்கை துறையில் பின்னணி கொண்ட தீப்தி ஜாங்கியானி, கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் ஆர்வம் காட்டினார். அவர் தொடர்ந்து வீட்டில் உரம் தயாரிக்கத் தொடங்கினார். பின்னர் நகர்ப்புற இலைகளில் தன்னார்வலராக ஆனார்.
அம்ரித் மிட்டி, உலர்ந்த உயிர்மத்தை சிதைத்து, பெரும்பாலும் காய்ந்த இலைகளை உள்ளடக்கி, அம்ருத்ஜல் எனப்படும் ஆர்கானிக் முடுக்கியைப் பயன்படுத்தி தயாரிக்கிறார். இது தண்ணீர், கால்நடை சிறுநீர், கால்நடை சாணம் மற்றும் காிம கருப்பு வெல்லம் ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

டேபோரா தத்தா


References
Dutta, D., & Chandrasekharan, S. (2018). Doing to being: farming actions in a community coalesce
into proenvironment motivations and values. Environmental Education Research,24(8), 1192-
1210.
Parnell, S., Elmqvist, T., McPhearson, T., Nagendra, H., &Sörlin, S. (2018). Introduction: Situating
knowledge and action for an urban planet. The urban planet: knowledge towards sustainable
cities, 1-16.

Deborah Dutta
Senior Research Fellow
Living Farm Incomes Project
Institute of Rural Management
Anand-388001
E-mail: deborah@irma.ac.in;
debbiebornfree@gmail.com

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...