தொழில்நுட்பத்தை வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பை மறுஜென்மம் அளிப்பதற்கு கருவியாக மாற்றலாம்


வழக்கமான டிஜிட்டல் சந்தைகள், இயற்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள க்ரிஷி ஜனனியின் சந்தைப்பகுதி, பரவலாக்கம் மற்றும் மீளுருவாக்கத்தை முக்கியத்துவமளிக்கும், மாற்று மாதிரியை உருவாக்கி வருகிறது. ஜனனி க்ரோ என்ற கைபேசி செயலி மீளுருவாக்க தொழில்நுட்பங்களுக்கு மாறவும், சிறு விவசாயிகள், தங்களது விளைபொருட்களுக்கு அதிக மதிப்புமிக்க இயற்கை சந்தைகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக உள்ளது.


தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைப்பாளையம் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப சமூக நிறுவனம், இலாபத்திற்காக உருவாக்கப்பட்டதே ஐந்து வயது நிறைவடைந்த, க்ரிஷி ஜனனியாகும். விவசாயிகள், நுகர்வோர், நிறுவனங்கள் மற்றும் கிரகம் ஆகியவை புத்துணர்ச்சி பெறுவதற்கு, மீளுருவாக்க உயிர்ச்சூழல் அமைப்பை உருவாக்குவதே, எங்களது தொலைநோக்கு பார்வையாகும்.
துவக்க வருடங்களில், நாங்கள் முன்மாதிரி முறைகளை உருவாக்கும் முயற்சியில் இருந்தோம். வயல்களிலிருந்து முடிந்தவரையில் கற்றுக்கொண்டு விவசாய சமூகத்தின் மத்தியில் நம்பிக்கை வளர்த்து, தொழில்நுட்பத்தின் மதிப்பை உயர்த்தி விவசாயிகளுக்கு அளிப்பதே எங்களது குறிக்கோளாகும். மாதிரியை உருவாக்கும் காலநிலையின்போது, இரண்டு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளோடு இணைவதை நாங்கள் மையமாக வைத்து, அவர்களின் விவசாய சாகுபடி குறித்து கற்றுக்கொண்டு, பின்னர் அவர்களின் தேவைக்கேற்ப வாங்கும் குழுவாகவும் பிரிக்கப்பட்டது. எங்கள் கண்டுபிடிப்பின் அடிப்படையில், க்ரிஷி ஜனனி மொத்தமாக இடுபொருட்களை வாங்கி தம்மிடம் தொடர்பில் உள்ள விவசாயிகளுக்கு இறுதியாக கிடைக்கும் சேமிப்பை பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த பாிசோதனை பல தோல்விகள், பல வெற்றிகள் மற்றும் மிகுதியான படிப்பினைகளை கலந்ததாக இருந்தது. இந்த காலத்தில், வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வாக, ஒரு முன்மாதிரி தொழில்நுட்பத்தை வடிவமைத்து, அதன்மூலம் வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பை மீளுருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.
இத்தனை வருட காலத்தில் கிடைத்த கற்றலை வைத்து,தொழில்நுட்ப இயக்கத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் பயன்பெற எடுத்த முயற்சி பயணத்தின் அடுத்த நிலைக்கு செல்வதற்கான அணுகுமுறையை கண்டுபிடிப்பதற்கு உதவியது. இந்த காலத்தில், வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பின், மீளுருவாக்கம் மற்றும் இலாபத்திற்கான சந்தைக்குரிய நட்சத்திரமாக ஜனனி திகழ்கிறது. மாற்று வேளாண்மை தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் உள்ள சிறிய விவசாயிகள் பின்பற்றுவதற்கு, இது ஒரு தொழில்நுட்ப மேடையாக திகழும் அதேவேளையில்,உற்பத்தியாளர்களுக்கு அங்கீகாிக்கப்பட்ட இயற்கை பயிர்கள் மற்றும் விளைபொருட்கள் கிடைப்பதற்கு உதவியாகவும் இருக்கிறது. ஒரு பக்கம், ஜனனி க்ரோ கைபேசி செயலி, சிறு விவசாயிகள் மீளுருவாக்க தொழில்நுட்பத்திற்கு மாறவும், தங்கள் விளைபொருளுக்கு அதிக மதிப்புள்ள இயற்கை சந்தையை தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. மற்றொருபுறம், ஜனனி சந்தை இணைய முகப்பு, சில்லறை வியாபாரிகள், தனித்துவமிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் அறிமுக வியாபாரிகள், நூற்றுக்கணக்கான சிறிய உற்பத்தியாளர்களிடமிருந்து சான்றிதழ் மற்றும் அங்கீகாிக்கப்பட்ட இயற்கை விளைபொருளை வாங்குவதற்கான ஆதாரத்தை தேர்ந்தெடுக்கும் வழி வகுக்கிறது.

எந்த துவக்கமாக இருந்தாலும் ,விவசாயிகளுக்கு சேவை புரியவும், குறிக்கோளை நிறைவேற்றவும் , பல அடுக்குகள் கொண்ட தொழில்நுட்ப தகவலை மெதுவாக வளர்த்து, ஒரு நேரத்தில் ஒரு மென்பொருளை வடிவமைத்தோம். பணியின் முடிவில் பல்வேறு புள்ளி விவரங்கள் சேகாிக்கப்பட்டது. இதில் உணவு மதிப்பு கூட்டுதல் சங்கிலியில் உள்ள பல பங்குதாரர்களான – விவசாயிகள் , இயற்கை சில்லறை வியாபாரிகள், நிறுவனங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் போன்ற தகவல்களை கொண்டுள்ளது.

அடுத்தது தகவல் அடுக்கு. இந்த அடுக்கில், கைபேசி செயலிக்காக பாிவர்த்தனை செய்தி மற்றும் கைபேசியின் மேல் பகுதியில் அனுப்பப்படும் செய்திகளான வெளி சேவைகள் ஒரு அங்கமாக இருக்கிறது. முதலில், விவசாயிகளுக்காக வடிவமைக்கப்பட்ட தமிழ் மொழி கைபேசி செயலி (தற்போது ஆன்ராய்ட் மற்றும் ஐ போன் கைபேசிகளுக்கு உகந்த குறைந்தபட்ச செயலிகள் வெளியிடப்பட்டது) மேலும், உற்பத்தியாளர்களுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும் ஆங்கில வழி இணைய முகப்பு உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது (தற்போது பணி நடைபெறுகிறது).

மேலே கூறப்பட்டுள்ளதை வைத்து, மிக முக்கியமாக நாங்கள் கற்றுகொண்ட பாடம் என்னவென்றால், தொழில்நுட்பம் வளர்க்கும் மேடை உருவாக்குவது சுலபமான ஒன்று. தொழில்நுட்பம் என்பது அனைத்து தேவைக்கான கருவி மற்றும் இயக்கும் அமைப்பாகும். இது சமூக நலனுக்கான சேவையை அளிப்பது மட்டுமில்லாமல் நிலவியிருக்கும் சமூக சீர்கேட்டினை இன்னும் அதிகப்படுத்துகிறது அல்லது இரண்டும் சமஅளவில் இருக்கிறது. மிகவும் கடினமான யோசனையாக இருப்பது என்னவென்றால், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார பிரச்சனைகள், இந்த தொழில்நுட்பம், சேவை செய்யும் கருவியாக மாறுகிறதா? அல்லது அழியும் வெடிகுண்டாக மாறுமா? என்பதுதான். திட்டங்களை இறுதி செய்வதற்குமுன், பல்வேறு அணுகுமுறைகள் மூலம் நாங்கள் சந்தித்த சிரமத்தின் வாயிலாக கிடைத்த சில யோசனைகளை நான் பகிர்ந்துகொள்கிறேன். இதே பாதையில் செல்லும் மற்றவர்களுக்கும் அல்லது தொழில்நுட்ப அடிப்படையில் திட்டம் தொடங்க உள்ள சமூக நிறுவனங்களுக்கும் உதவியாக இருக்கும்.

தொழில்நுட்ப கூட்டல் மற்ற அனைத்தும்
தொழில்நுட்ப மேடையை வடிவமைக்கும் எண்ணங்களுக்கான நிபந்தனைகளே, தொழில்நுட்பத்தை சுற்றி மற்ற அனைத்தும் என்ற தலைப்பிற்கு உகந்தவற்றை கருத வேண்டும். எங்கள் பணியை பொறுத்தவரை, தொழில்நுட்ப காரணிகள் அல்லாத பலவற்றை கருத்தில் கொண்டு, நாங்கள் சில அடிப்படை கேள்விகளை வடிவமைத்தோம். இந்த பயிற்சியில், குறிப்பாக வேளாண்மையில் இது முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால், பல்லாயிரக்கணக்கான வேளாண் குடியிருப்புகள் கடினமான இந்த கேள்விகள் தவறாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது மானிய அமைப்பாகவும் மாற்றி புரிந்துகொள்ளலாம். இந்த கேள்விகள்

உரிமை மற்றும் வடிவமைப்பு
யார் இந்த தொழில்நுட்பத்தை தனதாக்கி, அதை சார்ந்த அனைத்து காரணிகள், குறிப்பாக, புள்ளிவிவரம் மற்றும் உறவுகள் குறித்த தகவல்கள்? எந்த சமூகஅமைப்பில் இந்த தொழில்நுட்பம் வளர்க்கப்படுகிறது அல்லது வலியுறுத்தப்படுகிறது? இந்த சமூகம் உரிமை அல்லது வடிவமைப்பு குறித்து என்ன கூறுகிறது?

ஆபத்து மற்றும் பாிசு
இந்த தொழில்நுட்ப முகப்பின் பிரச்சனைகளை யார் எதிர்கொள்கின்றனர்? யார் பாிசை பெறுகிறார்கள்? இந்த பிரச்சனைகள் மற்றும் பாிசுகள் எல்லோருக்கும் சமமாக பரப்பி மற்றும் பகிர்ந்துகொள்ளப்படுகிறதா?

நிதி மற்றும் மதிப்பு பரவல்
எந்த திசையில் நிதி மற்றும் அதன் மதிப்பு பரவலும் முன்னேறி செல்கிறது? மதிப்பு சங்கிலியில் உள்ள ஒவ்வொருவரின் திடம் மற்றும் தொிவு நிலை வளர்கிறதா?

நோக்கமற்ற விளைவுகள் மற்றும் கற்றல் துளைகள்
தொழில்நுட்பத்தை உருவாக்குபவர், தன்னுடைய குறிக்கோளின் தாக்கத்தை மனதில் வைத்து தொழில்நுட்ப முகப்பை உருவாக்குவர். குறிக்கோளின் தாக்கத்தை அடைய, நாம் என்னென்ன இதர குறிக்கோளற்ற நிகழ்வை விடுபட்டுள்ளன? கருத்து மற்றும் கற்றல் அடிப்படையில், எப்படி நாம் இதை திருத்தம் மற்றும் மாற்றம் செய்யலாம்? எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்கள் ,கற்றல் துளைகளை தொடர்ந்து எதிர்கொள்வதில் பங்குபெற நாம் எந்த வடிவத்தை உருவாக்க வேண்டும்?

இந்த கேள்விகள் மூலம் , சாத்தியமான இரண்டு வித்தியாசமான பாதைகளை வெளிப்படுத்தியதை எடுக்க முடிந்தது. தொழில்நுட்பம் என்பது விரிவுபடுத்திய தொழில் மாதிரிகளை இயக்கும் கருவியாகும். அல்லது தொழில்நுட்பம் என்பது வேளாண் உயிர்ச்சூழலை மீளூருவாக்கும் கருவியாகும்.

தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துபவர்
ஜனனி ஒரு சந்தை பகுதி. இதன் வெற்றி, இணையத் தாக்கத்தின் வளர்ச்சி மூலம் அனைத்து பங்கேற்பாளர்கள் பெற்ற பயன்கள் பொறுத்தே இருக்கிறது. சந்தைப் பகுதி மாதிரிகளின் பல்வேறு வெற்றிகள் உள்ளன. இந்த வெற்றிகள் , வளர்ச்சி, இலாபம் மற்றும் நிறுவன மதிப்பீடு போன்ற பொருளாதார குறியீடுகளில் விளக்கப்படுகிறது. அமேஸான், பேஸ் புக் மற்றும் உபர் ஆகிய சில நிறுவனங்கள் மின்னும் உதாரணமாக தன்னுடைய பாதையில் வெளிச்சத்தை அளித்து உயர்ந்துள்ளனர்.
பிரித்தெடுத்தல் என்பது இந்த தொழில் மாதிரியின் மிகப்பொருத்தமான வார்த்தையாகும். தொழில்நுட்ப அடுக்குகள் ,பல வருடங்களாக உருவாக்கி, மாற்றங்கள் செய்து, மீண்டும் உருவாக்கி, மீண்டும் மாற்றங்கள் செய்து இறுதிப்படுத்தப்படுகிறது. மற்ற பயன்பாட்டிற்கு தொழில்நுட்ப அடுக்குகளின் கூறுகளை, திறந்த மென்பொருள் ஆதாரமாக வெளியிடப்படுகிறது. எதிர்வினை பிறப்பிடம் என்று பொருள் கூறும் ரியாக்ட் நேட்டிவ் ,என்ற வீரிய வடிவமைப்பான ஒன்றே, ஜனனி கைபேசி செயலியின் முதல் பதிப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. இது பேஸ்புக் உதவியுடன் திறந்த ஆதார செயலியாக வெளியிடப்பட்டது. எனினும்’ கூடுதலாக மற்ற அனைத்தும்” என்ற மென்பொருளை பார்க்கும்போது, இதை நாம் பின்பற்றுவதற்கு இது ஒரு மாதிரி அல்ல.

சேவை அளிப்போர், மென்பொருள் மேடைகள் மற்றும் சந்தைப் பகுதிகள் ஆகிய இந்த தொழில்நுட்பத்தின் சுருக்கத்தை வெளியிடுகிறது. தங்களது வாடிக்கையாளருக்கு தனது சேவையை அளிப்பது, குறைந்த விலையிலோ (அமேஸான்), அல்லது வசதி (உபர்),அல்லது சுலபமாக இணைக்கக்கூடிய (பேஸ்புக்) இந்த மேடையில் சேவை வழங்குவோர், தங்களது பயனாளிகளிடமிருந்து பிரிக்கிறது. மேலும் இந்த உறவு மேடையுடன் இருக்கும் உறவாகும், எந்த ஒரு தனி மனிதனோடு அல்ல. இதிலுள்ள அனைத்து மாதிரிகளில், அனைத்து பிரச்சனைகளும் கீழ் பகுதியில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்ற அதேசமயத்தில் அனைத்து பாிசுகளும் மேல்பகுதியில் மிதந்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு சேவை அளிப்போர், குறைந்த மற்றும் குறையும் அடுக்குகளில் போராடி சிறப்பாக செயல்படும் ஒரே ஒரு வெற்றியாளருக்கு மட்டுமே பாிசுகள் வழங்கப்படும். உபர் நிறுவனத்தில் உள்ள ஓட்டுநர்கள், தங்களுடைய காருக்கான மாத தவனை செலுத்துவதற்கு முடியாமல் பலர் இருக்கின்றனர் என்பதே சாட்சியாக இருக்கிறது. அல்லது விற்பனையாளர்கள் அமேசான் நிறுவனத்துக்கு தொடர்ந்து புள்ளி விவரங்களை அளித்துள்ளதை வைத்து, விளைபொருட்களுக்கு இடையில் போட்டிகளை உருவாக்க பயன்படுத்துகின்றது. பாிசுகள், நிதிகள் மற்றும் மதிப்பு, உரிமை மற்றும் வடிவமைப்பு – அனைத்தும் , உள்ளூர் சமூகத்திலிருந்து மேல் செல்லும் அல்லது வெளியில் செல்லும், பின்னர் பங்குதாரர்களுக்கும் ,மேலும் முக்கியமாக இந்த முகப்பில் உள்ள செயல் உரிமையாளர்களுக்கே சென்று சேர்கிறது.

இந்தத் தொழில் மாதிரிகளில் உள்ள பிரச்சனைகள் வெளிவந்த நிலையில், இந்த முகப்பில் உள்ளவர்கள் , ஒன்று தையமாக இந்த பிரச்சனைகளை உதாசீனம் செய்கின்றனர், அல்லது இந்த அலையை திசை திருப்பி தாம் தகுதியற்றவர் என்று உறுதி செய்கின்றனர். பேஸ்புக்கின் பிரச்சனைகள் அதில் வெளியிடப்படும் பொய் செய்திகளே சாட்சியாகும். இந்த முகப்பு, விளம்பரம் மூலம் டாலர்கள் ஈட்டும் வழிமுறையாக மாற்றி, செய்தி நிறுவனத்தை அழிவிற்கு கொண்டு செல்வதற்கு முக்கிய பங்கெடுத்துள்ளது. ஒரு குறிக்கோளற்ற நிகழ்வு – இந்த முகப்பில் தற்போது சூதான நடிகர்கள் தங்களுடைய ஊக்குவிக்கும் பொய்யான கதைகள் மூலம் உலகம் முழுவதும் அரசியல் மற்றும் சமூக குழப்பத்தை உருவாக்குகின்றனர். விளம்பரத்தின் மூலம் கிடைத்த வரவை செலவு செய்த பிறகு, பேஸ்புக் தற்போது இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் போராடிக் கொன்டிருக்கின்றனர்.
இந்த சந்தைப்பகுதியின் மாதிரி, தொழில்நுட்பம் மற்றும் நிதியின் பார்வையில் வெற்றியடைந்திருந்தாலும், இது நீண்டகாலத்திற்கு நிலைத்த மாதிரியாக இல்லை. எந்தத் துறையிலிருந்தும், பிரித்தெடுக்கும் மாதிரிகள் யாவும், தொழில்மயமாக்குதலுக்கும், அதனை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் மத்திய அமைப்பின் நினைவுச் சின்னமாக இருக்கிறது. இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் யாவும், இந்த அமைப்பின் மாற்றித்தின் மூலம் அதை பொறுத்த முடியாது. ஜனனியின் முகப்பிற்கு, நாம் ஒட்டுமொத்த மாதிரியையும் கீழிருந்து மேலாக மறுயோசனை செய்வது அவசியமாகும்.

வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பின் கருவியாக, தொழில்நுட்பம் 
தமிழ்நாட்டில் நிலவிவரும் வேளாண்மையில், ஏற்கனவே இந்தப் பிரச்சனை இருக்கிறது. தண்ணீருக்காக ஆழ்துளை கிணறுகள் தோண்டினோம். சோர்வடைந்த மண்ணிலிருந்து தண்ணீரை பிழிந்தெடுக்க முயற்சி செய்தோம். உயிர்ச்சூழல் தொலைவாக செல்கின்றன. சீதோஷன மாற்றம் வானிலை சீரழிவுகள் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டு செல்கிறது. இந்த சூழ்நிலையில் வேளாண் உயிர்ச்சூழல் மீளுருவாக்கும், விவசாய சமூகத்தினர் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு, குறைந்த செலவு, குறைந்த தொழில்நுட்பங்கள், நீண்ட கால தீர்வாக அமைகிறது.

வேளாண்மை மீளுருவாக்கம், வேளாண் தொழில் மாதிரிக்கு மாற்றாக கருதினால், தொழில்நுட்ப மாற்றம் என்ன? தொழில்நுட்பம் உருவாக்கப்பட்ட ஆதார வேர்களை மறந்து வேளாண் உயிர்ச்சூழல் மீளுருவாக்கத்தை வழிநடத்தும் கருவியாக மாற இயலுமா? இன்னும் தௌிவாக கூற வேண்டுமென்றால் ,தொழில்நுட்ப இரசத்தை எடுத்து, அதையே மீளுருவாக்கம் கொண்டு தொழில்நுட்ப முகப்பு மற்றும் சந்தைப்பகுதியை உருவாக்க வழியிருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிக்க, ஜனனி சந்தைப்பகுதி, கடினமாக உழைத்து கொண்டிருக்கிறது. முக்கியமான குறிப்பு என்னவென்றால், அனைத்து விடைகளையும் இன்னும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. கூடுதலாக சில விடைகளை இன்னும் நிலப்பாிசோதனை செய்ய வேண்டும், நம்முடைய கற்பனையில் மற்ற ஓட்டைகளை வெளிப்படுத்தும் ஒரு செயல்முறையாகும். இந்த அனைத்து எச்சாிக்கைகளோடு, ஜனனி சந்தைப்பகுதி மேலே கூறப்பட்ட அனைத்து அடிப்படை கேள்விகளையும் எப்படி தீர்வுகாண போகிறது?

உரிமை மற்றும் வடிவம்
ஜனனியின் சந்தை முகப்பில், விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் தங்களது புள்ளி விவரம் மற்றும் பரஸ்பர உறவுகளை உரிமையாக்கி கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளது. புள்ளி விவரங்கள் நிதானமாக கவனம் பெறும். பரஸ்பர உறவு, உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை இணைப்பது முக்கிய காரணியாகும். ஜனனி முகப்பு கற்பனையில் இணைப்புகளின் இணைப்பு என கருதப்படுகிறது. இங்கு, அனைத்து இணைப்புகளின் வெற்றி மற்றும் ஒன்று திரட்டுதலை அடிப்படையாக, வெற்றி நிர்ணயமாகும். இந்தத் தொழில்நுட்பம், வாழ்க்கைக்கு கொண்டு செல்வதற்கு ஒரு சவாலான மாதிரியாகும், குறிப்பாக முகப்பின் சில அடிப்படை திறன்களான – புள்ளிவிவரம் மற்றும் சேமிப்பு கோப்பு, தொடர்பு, கட்டணம் செலுத்தும் செயல்முறை போன்றவைகள் பகிரப்படுகிறது.

சமூக உரிமை, பண்ணை பரப்பளவு சார்ந்து இதில் சோ;க்கப்படுகிறது. இருக்கும் அடுக்குகள், உரிமையாளர் மற்றும் பயனீட்டாளர் ஆகிய இரண்டின் அடிப்படையில் விரிவடைந்து நெடுந்தூரம் செல்ல இயலும்.

பிரச்சனைகள் மற்றும் பாிசுகள்:
ஏற்கனவே விவசாயிகள் காற்றில் கலக்கக்கூடிய அதிக பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். முகப்பை உருவாக்கும் கூடுதல் ஆபத்தை கையிலெடுக்கும் எண்ணவோட்டம் அவர்களிடத்தில் இல்லை. இதை உருவாக்குவதற்கான பணியில் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்று, மதிப்போடு ஒன்றிய தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீட்டாளர்களை கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் ஆபத்து மற்றும் பாிசுகளை பகிர்ந்துகொள்ளும் பல்வேறு வெளிப்படையான மாதிரிகளை கையிலெடுக்க துணிந்தவர்கள்.

நிதி மற்றும் மதிப்பு ஓட்டம்
தொழில்நுட்ப முகப்பை உருவாக்குவதில், நன்கு செயல்படும் , ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியிலும் பரவும் நிதி மற்றும் மதிப்பு ஓட்டம் என்பது உற்சாகமான சவால்களில் ஒன்றாகும். குறிப்பிட்ட செயல்பாடுகளில் மதிப்பு ஓட்டத்தை வடிவமைத்த பின்னர், ஜனனி மாற்று தீர்வுகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக, பங்கேற்பாளருடன் கூடிய உறுதியளிக்கும் முறையில், இந்தியாவை இயற்கை சான்றிதழ்க்கான தேர்ந்தெடுக்கப்பட்ட முறையை தத்தெடுத்துள்ளனர். ஏனென்றால் இதன்மூலம் ஞானம் உருவாகி, விவசாயிகள் உள்ளூரிலேயே உண்ணுகின்றனர் என்பது முக்கிய விமர்சனமாகும். இந்த மேடை விவசாயிகள் புள்ளி விவரங்கள் மற்றும் தகவல் ஆதாரங்களை ஒரு இடத்தில் உள்ளிடவும், பின்னர், அதை சான்றிதழ் குழு, நுகர்வோர் மற்றும் இதர விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு சுலபமாய் இருக்கிறது.

குறிக்கோளற்ற நிகழ்வுகள் மற்றும் கற்றல் வளைவுகள்
ஜனனி சந்தைப்பகுதி தொழில்நுட்ப வளர்ச்சிக்காக விரைவான முறையை பின்பற்றுகிறது. மென்பொருள் வளர்ச்சியில் சிறிய வெடிப்புகளோடு அனுமதித்து,வெளியிடுகிறது. முன்பு வெளியிட்ட செயலியிலிருந்து கற்றதை, எதிர்காலத்தில் ஒவ்வொரு முறையும் மறுஉருவாக்கும் செய்யும்போது அதை மேம்படுத்த உதவுகிறது. மென்பொருள் வளர்ச்சி செயல்முறையின் அங்கமாக இந்த கருத்தும், கற்றல் வளைவுகளும் இருக்கிறது. இதே அணுகுமுறையை, தங்களது கற்பனை பார்வையை பண்ணை தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். பல்மடங்கு கற்றல் வளைவுகளை எந்த நேரத்திலும் செயல்படுத்த வேண்டும். இந்த தொழில்நுட்ப மேடை வயல் செயல்பாடுகளிலிருந்து கற்கின்றனர்.

நமது உணவுமுறை இன்னும் தொண்மையாக செயல்படும் எண்ண ஓட்டத்தில் இருக்கும் , தொழில்துறையாகும். இந்த பிரித்தெடுக்கும் தொழில் மாதிரியில், அனைத்தையும் மையப்படுத்தப்பட்டது. உணவு ஒரு பகுதியில் வளர்க்கப்படுகிறது. பல மைல்கள் பயணம் செய்து பின் பதப்படுத்தப்படுகிறது. மேலும் பலமைல்கள் கடந்து நுகா;வதற்கு செல்கிறது. கோவிட்-19 மற்றும் அதனை தொடா;ந்து ஏற்பட்ட இடையு+றுகள் , இந்த முறை உடைவதை நன்கு தௌிவாகியுள்ளது.
மையப்படுத்தப்படாத மற்றும் மீளுஉருவாக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து மாற்றுமுறையை உருவாக்குவது தற்போது மிக முக்கிய மற்றும் அவசர தேவையாகும். இந்த மாதிரியான தீர்வை காணுவதற்கே ஜனனி சந்தைப்பகுதி பணி செய்து வருகிறது. சமூகத்திற்கு, தன்னுடைய உணவுமுறையில் உள்ள பல்வேறு பாகங்களின் மறுவளர்ச்சிக்கு, பல மீளுருவாக்கும் தீர்வுகள் மற்றும் விடைகள் தேவை.

உஷா தேவி வெங்கடாச்சலம்


Usha Devi Venkatachalam
Founder and CEO
Krishi Janani PBC
E-mail: team@krishijanani.org

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2020, வால்யூம் 22, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...