தொற்றுநோய் காலங்களில் மஹூவாவிற்கு மதிப்பு சேர்த்தல்


மஹூவாக்கள் மற்றும் பழங்களின் நியாயமான மற்றும் வணிகா தியான பயன்பாடு மதிப்பு கூட்டல் மூலம் கிராம மக்களுக்கு லாபகரமான நிறுவனமாக இருக்கும். பல தயாரிப்புகளைத் தாண்டி மஹூவாபுக்கள் சானிடைசரை உற்பத்தி செய்வதற்கான ஆதாரமாக இருக்கக்கூடும் என்பதை கிராமவாசிகள் அறிந்துகொண்டனர். மேலும் தொற்றுநோய்களின் காலங்களில் தங்களைத் தாங்களே நம்பியிருக்கிறார்கள்.


இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள திகம்கர் மாவட்ட மக்கள், காடுகளுக்கு அருகில் எளிமையான இருப்பைக் கொண்டுள்ளனர். ஆனால் நடைபாதை சாலைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் நகரமயமாக்களில் பெருகி வரும் லட்சியம் சில விரும்பத்தகாத மாற்றங்களுக்கு வழிவகுத்தன. இருப்பினும்,வனவியல் தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரம் இங்கு பாரம்பாிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இருப்பினும்,புதிய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப கிராம வாழ்க்கையின் மாற்றங்களால் இந்த நடைமுறையின் பெரும்பகுதி இழக்கப்படுகிறது. மேலும்,வறட்சியின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டு, உள்ளூர் மக்கள் கிராமப்புற அமைப்புகளில் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் நிலையான வேலையைத் தேடி பெரு நகரங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

காடுகளின் பாரம்பாியத்தை புதுப்பித்தல்

மாவட்டத்தின் கீழ் உள்ள முழுப்பகுதியும் பாரம்பாியமாக காடுகளின் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதுவும் மஹூவா (மதுகாலாங்கி போலியா),பலாஸ் (புட்டியா மோனோஸ்பர்மா) தேக்கு (டெக்டோனா கிராண்டிஸ்) மற்றும் டெண்டு (டயோஸ்பைரோஸ் மெலனாகசிலோன்) போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களைக் கொண்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு மஹூவா ஒரு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. இது பாரம்பாியமாக மதுவின் மூலமாகும். மறுபுறம், பீடித்தயாரிக்க டெண்டு இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மஹூவாபுக்கள் மற்றும் பழங்களை சேகாிக்கும் பாரம்பாிய முறை சுகாதாரமற்றது, உலர்த்துவது முறையற்றது மற்றும் சேமிப்பது விஞ்ஞான ரீதியாக இல்லை” என்று விவசாய விஞ்ஞானி டாக்டர். எல். எம். பால் கவனித்தார். விஞ்ஞான ரீதியில் செய்யப்படாத சேமிப்பு அதிக நுண்ணுயிர் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மதுபானம் வடிப்பதற்கும், கால்நடை தீவனத்திற்கு மட்டுமே அவை பொருத்தமானவை என்று அவர் கருத்து தொிவித்தார். பதப்படுத்துவதில் போதிய அறிவு இல்லாததால், மஹூவா பூக்கள் விற்பனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் கவனிக்க முடிந்தது. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, மத்தியப் பிரதேச அரசின் பல்லுயிர் வாரியத்தின் நிதியுதவியுடன் திகம்காில் உள்ள வேளாண்மைக் கல்லூரி ஒரு திட்டத்தை எடுத்து, மஹூவா பூக்களை விரும்பிய தரத்தைப் பெறுவதற்கு பொருத்தமான முறையில் உலர வைத்து (மைக்ரோவேவ் மற்றும் சோலார் உலர்த்துதல்) பாதுகாப்பு முறைகளை தரப்படுத்தியது.

பல்வேறு முறைகளில் உலர்த்தும்போது மஹூவா பூக்களின் பல உலர்த்தும் பண்புகள், பயனுள்ள ஈரப்பதம் பரவல் மற்றும் வண்ண இயக்கவியல், (சூரிய மற்றும் நுண்ணலை உலர்த்துதல்) கல்லூரியின் நன்கு பொருத்தப்பட்ட உயிர் வேதியியல் ஆய்வகத்தில் விரிவாக ஆராயப்பட்டது. ஈரப்பதம், வண்ண அளவீடு, ரீஹைட்ரேஷன் விகிதம் மற்றும் புரதம் மற்றும் மொத்த சர்க்கரை உள்ளடக்கம் ஆகியவற்றை அறிய உலர்த்தப்பட்ட இயற்பியல் வேதியியல் பண்புகள் முதன்மையாக மதிப்பிடப்படுகின்றன. புட்டு, கீர், பூரி மற்றும் பர்பி போன்ற உள்ளூர் சுவையான உணவுகளை தயாரிக்க மஹூவா பூக்களை இயற்கை இனிப்புகளாக எளிதில் சுத்திகாிக்க முடியும் என்பதை இந்த ஆய்வுகள் அனைத்தும் வெளிப்படுத்தியுள்ளன. உலர்ந்த மஹூவா பூக்கள்,மிட்டாய் பூ, மஹூவா பார், ரெடி டு சர்வ் பானங்கள் (ஆர்.டி.எஸ்) ஸ்குவாஷ், ஜாம், லட்டு, கேக் மற்றும் டோபி போன்ற பல்வேறு வகையான உணவுப் பொருட்களாக மாற்றுவது கிராம மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் இரட்டை வடிகட்டுதல் செயல்முறை மதுவை பிரித்தெடுப்பதில் விளைந்தது. துளசி இலைகள்,எலுமிச்சை புல் மற்றும் அலோவேரா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகள் மஹூவாவிலிருந்து வெளிப்படும் வாசனையை அகற்ற பயன்படுத்தப்பட்டன.

கோவிட் 19 – ஒரு வாய்ப்பு கட்டவிழ்த்துவிடப்பட்டது:

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கின் தவிர்க்க முடியாத தன்மை ஆகியவை பிராந்தியத்தின் வெளிநாட்டினரை தாயகம் திரும்ப கட்டாயப்படுத்தியது. வருமான ஆதாரம் இல்லாததால்,கிராமத்திற்கு திரும்பிய இவர்களின் நிலை பாிதாபமாக உள்ளது. கூடுதலாக,மிகச் சிறிய நிலம், விவசாயத்தின் மீது இளைஞர்களின் கடுமையான அக்கறையின்மை மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை ஆகியவை பிரச்சினைகளை மோசமாக்கியது.
கிராமச் சுற்றுப்பயணத்தின்போது, திகம்கர் வேளாண்மைக் கல்லூரியின் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் குழு,நாடு முழுவதும் தொற்றுநோய் பரவியபோதிலும், கிராமவாசிகள் சானிடைசர் பயன்படுத்துவதில் பெரும் அலட்சியமாக இருப்பதைக் கண்டனர். தவிர, திரும்பிய புலம்பெயர்ந்தோர் மத்தியில் வருமான ஆதாரம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றமும் கண்டனர். இந்த இக்கட்டான காலங்களில், டிகாம்காில் உள்ள வேளாண்மைக் கல்லூரி, உள்நாட்டிலும் ஏராளமாக கிடைக்கும் மஹூவாவின் மதிப்புக் கூட்டல் மூலம் இந்த புலம்பெயர்ந்தோருக்கு வாழ்வாதாரத்தை ஈட்ட ஒரு சிறந்த வாய்ப்பை வழங்க முயற்சித்தது. கல்லூரிக் குழு, அப்பகுதியில் உள்ள மஹூவா மரங்களை உள்ளூர் மக்களுக்கு வருமான ஆதாரமாகப் பயன்படுத்துவதன் மூலம் சுரண்டுவதற்கான முன்முயற்சிகளை எடுத்தது. ஆனால், கோவிட் தொற்றைத் தவிர்க்க ஆல்கஹால் அடிப்படையிலான சுத்தப்படுத்தும் திரவத்தை பயன்படுத்த அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கிராம மக்களிடமிருந்து மொத்தம் 300 குவிண்டால் மஹூவா கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை சுமார் 60 லிட்டர் மஹூவா சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு கிராம மக்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளது. 100 மில்லி பாட்டிலில் கிராமப்புற இளைஞர்களுக்கு சானிடைசர் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில்,தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் இளைஞர்களுக்கு பயிற்சியின் மூலம் மஹூவா அடிப்படையிலான உணவுப் பொருட்கள் மற்றும் சானிடைசர்களை பிரபலப்படுத்துதல் மற்றும் வணிக மயமாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. ஆய்வகம் உலர்ந்த மஹூவாவின் சேமிப்பு ஆயுளை நீட்டித்து, மஹூவாவின் சிதைவைத் தணித்து,ஆண்டு முழுவதும் கிடைக்கச் செய்கிறது.

தாக்கம்

கிராமத்தில் உள்ள மக்கள் இப்போது சானிடைஸாின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர். மேலும் இது தங்களைச் சுற்றியுள்ள பொருட்களால் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு விருப்பம் என்பதை உணர்ந்துள்ளனர். பல கிராமவாசிகள் மஹூவா பூக்களை மட்டும் பயன்படுத்தாமல், கிலோய்,  எலுமிச்சம் பழ செடிகளை வீட்டு தொட்டிகளிலும், படுக்கைகளிலும் திட்டமிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கர்மராய் கிராமத்தைச் சேர்ந்த அஜய் யாதவ், இந்தத் திட்டத்தின் தன்னார்வத் தொண்டரும், கிராமமக்கள் பர்பி மற்றும் மஹூவாவால் செய்யப்பட்ட மிட்டாய்களை அதிகம் விரும்புவதாகக் கூறுகிறார்கள். பெருநகரங்களில் இருந்து திரும்பிய இளைஞர்கள் இப்போது மஹூவா பூக்கள் மற்றும் பழங்களை சேகாிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் கல்லூரியின் வழிகாட்டுதலின் மூலம் மஹூவாவின் பிற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். தொற்றுநோய் நிலைமை மேம்பட்டாலும், வேலைக்காக மீண்டும் பொிய நகரங்களுக்குச் செல்லும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்கிறார் தயாராம் அஹிர்வார். இந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கூடுதல் வருவாயை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோய்களின் காலங்களில் விவசாயிகள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பவும் தன்னம்பிக்கையுடன் இருக்கவும் உதவியது.

யோகரஞ்சன்,லலித் மோஹல் பால், தினேஷ் குமார் மற்றும் ஆயுஷி சோனி


Yogranjan Scientist (Biotechnology)
E-mail: yogranjan@gmail.com

மூலம:; லீசா இந்தியா, ஜூன் 2021, வால்யூம் 23, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...