தென்னையில் காணப்படும் பூச்சிகளுக்கு உயிர் மேலாண்மை முறைகள் – விவசாயிகள் அதிகமாக பின்பற்றுவதற்கான சமூகவழிமுறை


சமூகத்தின் சிறப்பான பங்கேற்புடன்,விரிவாக்க அணுகுமுறைகள் மூலம் தனிநபாிலிருந்து சமூக மட்டம் வரை முறையான மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான விரிவாக்க அணுகுமுறைகள் தொழில்நுட்பங்களை பரவலாக பின்பற்றுவதை அதிகாிக்கவும், அதில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளவும், மேலும் அதன் சிறப்பு பயன்களை மதிப்பீடு செய்து, தொழில்நுட்பங்களை வேகமாக பரவுவதற்கும் தேவைப்படுகிறது.


சிறு மற்றும் குறு விவசாயிகள், அருகருகேயுள்ள நிலப்பரப்புகளில் தென்னையையே பரவலாக வளர்க்கின்றனர்.சாதாரண விரிவாக்க முறையான விவசாயிடமிருந்து-விவசாயிக்கு என்ற முறையின் மூலம் பயிர் மேலாண்மை பரவலாக பின்பற்றப்பட்டாலும், உண்மையான தேவைகளை கண்டறிந்து, அவற்றிற்கு ஏற்ற முறையை பயன்படுத்தி விவசாயத் தோட்டங்களில் மேலாண்மையை பயனுள்ளதாக உயர்த்துவது தற்போதைய தேவையாகும்.

கருவண்டு என்று கூறப்படும் காண்டாமிருக வண்டு, தென்னைப்பயிரின் மிக முக்கிய பூச்சிகளில் ஒன்றாய் தனது கொம்பு போன்ற வடிவத்தில், அதன் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் சேதம் விளைவிக்கிறது. விவசாய நிலத்தில், தென்னை நாற்றுகளை 23 முதல் 48 சதவிகிதமும், காய் வளர்ச்சிக்கு முன் மற்றும் காய்க்கும் சமயங்களில் 23 சதவிகிதமும் இந்த காண்டாமிருக வண்டு தாக்குகிறது. ஆங்கில எழுத்தான “V” வடிவத்தில் விரிந்த தென்னை கீத்துகளை வெட்டுகிறது. இந்த பூச்சிகளின் தாக்கத்தில் தென்னை நாற்றுகளை இழந்து காய்க்கும் தென்னையில் மகசூல் 10 சதவிகிதமாக குறைகிறது. இதன் தாக்கத்தை தடுப்பதற்கு அருகாமை பகுதியில் உள்ள விவசாய சமூகங்கள் ஈடுபட்டு செயல்படுத்த வேண்டும். புள்ளி விவரங்களின் வாயிலாக, கருவண்டை கட்டுபடுத்தக்கூடிய எதிர்உயிரியைக் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு மிக குறைவாகவே உள்ளது.

சமூகங்களுடைய பங்கேற்புடன் கூடிய ஆய்வில், மிக குறைந்த செலவு, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் எதிர் உயிரி தொழில்நுட்பங்களை, வண்டை கட்டுபடுத்துவதற்கு தேர்ந்தெடுத்துள்ளதாக தொிகிறது. இதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
• ஒவ்வொரு தென்னை மரங்கள் கொண்ட வீடுகளில், இந்த வண்டின் தாக்கம் பொதுவானதாக இருக்கிறது.
• தென்னை மரங்கள் உயரமாக இருப்பதால், பயிற்சிபெற்ற தென்னைமரம் ஏறும் நபர்கள் தேவை. இவர்கள் அறுவடை செய்வதற்கு மட்டுமல்லாமல், மரத்தின் உச்சிக்கு சென்று சுத்தம் செய்யவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
• தற்போதைய விரிவாக்க முறையானது, தனிநபர் விவசாயிகளை தொழில்நுட்ப கலன்களாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
• முக்கிய உயிர் இடுபொருட்கள் கிடைப்பதில்லை என்பதால், விவசாயிகள் மத்தியில் இதன் அறிவு மற்றும் விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளன.

இந்த பயிர் மற்றும் கருவண்டும் வரலாற்று காலத்திலிருந்தே நிலவி வருவதால், பல்வேறு பாரம்பாிய தொழில்நுட்பங்களை, பல விவசாயிகள் இன்றும் பின்பற்றிவருகின்றனர். கோரை புல்லான களை செடிகளை, சாணம் சேகாிக்கும் குழி, மட்கு உரக்குழி மற்றும் தென்னை நார் கழிவு குவியலில் கலந்து விட வேண்டும், இரும்பு கம்பியை கொண்டு வண்டினை கொக்கி போன்ற வடிவத்தில் குத்தி எடுக்க வேண்டும். கல் உப்பு, சாம்பல் மற்றும் மணலினை சமமான அளவில் கலந்து மரத்தின் மேல் உள்ள உச்சியில், வருடத்திற்கு மூன்று முறை இட வேண்டும். இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று வயது முதிர்ந்த விவசாயிகள் கூறினர். ஆனால் தற்போது இந்தத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தபடுவதில்லை. தேவையின் அடிப்படையில் சமூக பாிசோதனைகள் மேற்கொண்டு, தென்னை காண்டாமிருக வண்டின் உயிர் மேலாண்மை சார்ந்த, பகுதிக்கு உகந்த சமூக விரிவாக்க அணுகுமுறைகளை, சிறப்பான, சுலபமாக பரவலாக்கம் செய்யுக்கூடிய மாதிரிகளை உருவாக்குவதற்கான திட்டத்தை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கிழ் உள்ள மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்தின் வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

பங்கேற்புடன் கூடிய விரிவாக்கம்
தென்னை விவசாயிகள் மத்தியில் பச்சை மஸ்காற்டியன் பூஞ்சை பயன்படுத்துவது குறித்த விரிவாக்க அணுகுமுறைகளை, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் 2007 ஆம் ஆண்டு முதன்முதலில் துவங்கப்பட்டது. ஆனால் கள மட்டத்தில் உற்பத்திக் கலன்களில் மிக குறைவான கள செயல்பாடுகள் தோல்வியடைந்தன. அதனால் 2008 ஆம் ஆண்டு கள அளவில் உற்பத்தி கலன்களை தரமான நபர்களை கொண்டு துவக்கியும் இவை நிலைக்கவில்லை. சுமார் 1200 ஹெக்டர் பகுதி பரப்பளவில் பூச்சியின் இனப்பெருக்கப் பகுதிகளில் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது . இது காலத்தை செலவழிக்கும் மற்றும் குறைந்த சிறப்பினையுடையது என்று உறுதி செய்யப்பட்டது. உயிர் பொருள் தேவையான அளவு கிடைக்கவில்லை மற்றும் முழுமையாக செயல்படுத்த இயலாமை ஆகிய பிரச்சனைகள் சந்திக்க நேர்ந்தது.

பின்பற்றப்பட்ட சமூக செயல்முறையை மூன்று முதற்கட்ட செயல்பாடு மட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

முதல் மட்டம்
பற்கேற்பாளருடன் கூடிய திட்டத்தில் கிராம பெண் விவசாய சுய உதவி குழுக்களை ஈடுபடுத்தி, அவர்களுக்கு காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் கள அளவு திட்டங்கள் செயல்படுத்துவது. தொழில்நுட்ப தாக்கம் குறித்து கண்கூடாக ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை வளர்த்து, அவர்களை தானாகவே இந்த செயல்முறைகளில் பங்குகொள்ள வைப்பது. அவர்கள், தென்னை விவசாய வயல்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துகட்ட தொழில் நுட்ப விளக்கங்களையும் ஈடுபடுத்தப்பட்டது.

இரண்டாம் மட்டம்
படித்த கிராமப்புற பெண் விவசாயிகளை ஈடுபடுத்தி பொதுவான மெட்டாரைஸியம் உற்பத்தி மாதிரி உருவாக்குவதற்கு, மக்கள் பிரதிநிதிகளுடன், பஞ்சாயத்து வேளாண் அலுவலர் பேச்சுவார்த்தையை நடத்தினார். பெண்களின் பங்கேற்புடன் கூடிய ஆய்வுகள், பரஸ்பர கற்றல்கள் மற்றும் செயல்படக்கூடிய நிலையில் உள்ள செயல்முறைகள் மூலம் அழகான மற்றும் சுலபாக வடிவமைக்கப்பட்ட குறைந்த செலவில் உற்பத்தி செயல்முறைகளை உருவாக்கியதே பெண்கள் சுய உதவி குழுவின் மிகுதியான மதிப்புடைய மற்றும் முக்கிய பங்காகும்.

மூன்றாம் மட்டம்
ஐ சி ஏஆர் – சி. பி. சிஆர் ஐ விஞ்ஞானிகள் மேற்பார்வையிலும், வழிநடத்துதலின் கீழ் பச்சை மஸ்காற்டியன் பூஞ்சானத்தை உற்பத்தி செய்கின்றனர். இந்தச் சமூக மாதிரியை நிலையாக உருவாக்குவதற்கு, வேளாண் அலுவலர், பெண் தலைவர்கள் மற்றும் உள்ளூர் சுய அரசு ஆகியோரின் தலைமை பண்பு உறுதுணையாக இருந்தது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் எடவா கிராம பஞ்சாயத்தில், பகுதிவாரியாக பங்கேற்புடன் கூடிய விரிவாக்கத் திட்டம் சிறியளவில் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 5465 தென்னை விவசாயிகளை ஈடுபடுத்தி, 520 ஹெக்டேர் நிலப்பரப்புப் பகுதியில் 1,10,143 தென்னை மரங்கள் திட்டத்தில் உள்ளன. ‘தென்னை, இந்தப் பஞ்சாயத்தின் நரம்பு மற்றும் வலிமையான வாழ்வாதாரமாக கருதப்படுகிறது. ஏனென்றால் பாரம்பாியமாக இது ஒரு தென்னை நார் கிராமம். ஐசிஏஆர் சிபிசிஆர்ஐ – உடன் சமூக ஆராய்ச்சி செயல்முறையில் பங்குகொண்டதன் மூலம் கிடைத்த அனுபவத்தினால் எங்களுக்கு பெருமையும் அதிக அறிவும் விரிவாக்க திட்டசெயல்பாடுகள் மூலம் கிடைத்தது. ஆராய்ச்சி நிறுவனங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு விரிவாக்க முகமைகளுடன் இணைந்து பரஸ்பரம் கற்றல் மற்றும் வளர்த்தல் நடைபெறுகிறது என்று உறுதியாக நான் கூறுவேன். இந்த பங்கேற்புடன் கூடிய சமூக ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் புதிய கண்டுபிடிப்புகளே சமூக வளர்ச்சிக்கு முக்கியமானது. மேலும் பெண் விவசாயிகள், தொழில்நுட்பங்களில் சிறுமாறுதல்கள் செய்வதற்கு உகந்த ஆதாரங்களாக திகழ்கின்றனர். அதனால் தொழில்நுட்பங்களை வேகமாக பரவலாக்கம் செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று திருமிகு.தேஜஸ்விபாய், வேளாண் அலுவலர், எடவா கிராம பஞ்சாயத்து கூறுகிறார்.

புதிய தொழில்நுட்பங்கள்
இந்தத் திட்டத்தில், சமூக அளவிலான விழிப்புணர்வு மற்றும் செயல்பாடு, குழு முயற்சிகள் அனைத்தும் ஒன்று சேர்த்தல், விரிவாக்க முகமைகளுடன் இணைத்தல், உயிர் பொருள்களை பொதுவாக உற்பத்தி செய்தல், பங்கேற்புடன் கண்காணித்தல் மற்றும் உயர்ந்த தொழில்நுட்பங்களை அறிவதற்கு பெண் விவசாயி குழுக்களை சேர்த்து கூட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவைகள் உட்படுத்தப்பட்டன.
சமூக பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். சாணம் சேமிக்கும் குழி, மண்புழு கலன், தென்னை நார் கழிவு கலன், சிதைந்த தென்னை கட்டைகள் ஆகிய இடங்களில் கருவண்டு இனப்பெருக்கம் செய்வதால் பச்சை மஸ்கார்டியன் பூஞ்சை பாிசோதனைகளை பஞ்சாயத்து அளவிலான நிகழ்ச்சிகளில் பரவலாக்கலாம். இந்த முறையின் மூலம் பூச்சியின் தாக்குதல் குறையும். இந்த பூஞ்சாணம், பூச்சியின் பல்வேறு வளர்ச்சி நிலையை ஒரு வாரத்திற்குள் தாக்கும். கருவண்டினை அதிக நாட்களில் தாக்கும். மண்புழு உரத்தில் உள்ள மண் புழுவை எவ்வகையிலும் தாக்காது. பச்சை மஸ்கார்டின் பூஞ்சை, தேவையான அளவு கிடைக்காததாலும் அதனைக் குறித்து விழிப்புணர்வு இல்லாததாலும், இந்தத் தொழில்நுட்பம் குறைவாக பின்பற்றுவதற்கு தடையாக இருக்கிறது. பச்சை மஸ்கார்டின் பூஞ்சை உற்பத்தி, பண்ணை அளவில் உற்பத்தி பெருக்ககலன்கள் அமைத்து, பயிற்சி பெற்ற பண்ணை பெண் குழுக்களுக்கு பிரித்து செயல்படுத்தப்பட்டது. திறன் வளர்ப்பு மற்றும் கலன்களின் திறன் உயர்த்தும் பணிகள், அவர்களுக்கு நம்பிக்கை வளர்க்கும் வகையில்,தொடர்ந்து செய்து வருகிறது.
தொழில்நுட்பம் வேகமாக பரவுவதற்கும் மற்றும் பல்வேறு நிலையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாவதற்கும், வேளாண்மை துறை, தென்னை விவசாயக் குழுக்கள் /கூட்டமைப்பு, கால்நடைத் துறை, பால் கூட்டுறவு சங்கங்கள், கால்நடை விவசாயிகள், ஊடகங்கள் குறிப்பாக அனைத்திந்திய வானொலி நிலையம், உள்ளூர் சுய அரசுகள் போன்ற அமைப்புகளோடு சிறப்பாக தொடர்பு வளர்த்துக் கொள்வது மற்றொரு அணுகுமுறையாகும்.

ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள தெக்கீகாரா,தேவிகுளங்காரா மற்றும் எடவா ஆகிய மூன்று பஞ்சாயத்துகளில் சுமார் 2000 ஹெக்டேர் பரப்பளவு தென்னை பகுதிகளை இந்த செயல்முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இரண்டு மற்றும் மூன்று பெண் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், ஒவ்வொரு பஞ்சாயத்தின் விரிவாக்க அலுவலர்கள், ஒவ்வொரு தென்னை விவசாய கூட்டுகளிலிருந்து, ஒவ்வொரு வார்டில் 8-10 விவசாயிகளை தொழில்நுட்ப பகிர்வு செயல்பாடுகளிலும், இனப்பெருக்கப் பகுதிகளிலும் பாிசோதனை செய்வதற்கு ஈடுபடுத்தினர்.

அதனால், ஒரு பஞ்சாயத்தில் 150-200 பெண்களை பிரதிநிதிகளாக உருவாயின. இதிலிருந்து, இந்தத் தொழில்நுட்பங்களை பெண்கள் சுலபமாக செய்யக்கூடியதாக இருப்பதாக தொிகிறது.
சுமார், 32 பயிற்சித் திட்டங்களை, விவசாயிகளுக்கும் பண்ணை பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்தியில் சில திருத்தங்களை செய்ய, அலுவலர்களோடு வீடியோ கான்பரன்சிங் மூலம் சாிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நிலைத்த உயிர் இடுபொருள் கிடைப்பதற்கு, குறைந்த செலவு பண்ணை அளவில் பச்சை மஸ்கார்டின் பூஞ்சை பெருக்கக் கலனை பெண்கள் குழுக்களால் அமைக்கப்பட்டது.
கலனை அமைப்பதற்கு துவக்க செலவாக சுமார் 8000-10000 இருக்கும். ப்ரஷர் குக்கர் (20 லிட்டர்), பச்சை மஸ்கார்டின் பூஞ்சையின் ஆதாரம்., பாலிப்ரப்பலீன் உறைகள், தரமான அரிசி, மற்றும் இதர பொருள்களான பஞ்சு, அலுமினியம் உறை, தடிமனான மெழுகுவர்த்தி, கையுறை போன்ற அடிப்படை பொருட்கள் தேவைப்படுகிறது. பண்ணை அளவில் செய்யப்படும் பச்சை மஸ்கார்டின் பூஞ்சையின் உற்பத்திக்கு முக்கியமாக தூய்மை நிலையை உறுதிப்படுகிறது. இதை பயன்படுத்துவது மிக சுலபம். ஒரு பொட்டலம் (100கிராம்) பூஞ்சானை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, காண்டாமிருக வண்டு இனப்பெருக்கம் செய்யும் இடங்களான, சாணம் சேமிக்கும் இடம், மக்குஉரக் குழி, மக்கிய தென்னை மட்டைகள் போன்ற இடங்களில் தௌிக்க வேண்டும். புழுக்கள் 5-7 நாட்களில் இறக்கும்.
பகுதி வாரியான சமூக பயன்பாட்டுத் திட்டங்களில் ,ஜிபிஎஸ் மூலமாக, காண்டாமிருக வண்டு இன பெருக்கம் செய்யும் இடங்களை கண்டுபிடித்து ஒவ்வொரு வார்டிலும் திட்டமிட்டுள்ளன. பஞ்சாயத்து பலதரப்பட்ட இனப்பெருக்க இடங்கள் கண்டுபிடித்து கால்நடை விவசாயிகள் (643 எண்ணிக்கை), மண்புழுஉரம், தென்னை நார் கழிவு குவியலில் ஒவ்வொரு வார்ட்டிலும் செயல்படுத்தப்பட்டது. ஆறு வார்ட்களில் பரவிக் கிடக்கும் 82 சதவிகித விவசாயிகள் சிறப்பாக பின்பற்றுபவர்களாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் பச்சை மஸ்கார்டியன் பூஞ்சையை கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது. இது பல்வேறு அறிஞர்களும் சிறப்பாக பங்கேற்கும், ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி. இவர்களிடம் கொண்டு செல்வதற்கு மக்கள் பிரதிநிதி, விரிவாக்க அமைப்பான வேளாண்மை துறை மற்றும் கால்நடைத் துறை, பால் கூட்டுறவு சங்கங்கள், இதில் கால்நடை விவசாயிகள் மற்றும் பெண்கள் சுய உதவி குழுக்கள் உறுப்பினராக உள்ளனர் ஆகிய அனைவரின் ஒருங்கிணைந்து முயற்சியினால் ஏற்பட்டது. இந்த அணுகுமுறையால் இரண்டு மாதங்களில் சிறப்பாக ஏற்றுக்கொள்பவர்களை அடைவது 90 சதவிகிதத்திற்குமேல் தாண்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் தாக்கத்தின் தரவு, புதிய பூச்சித் தாக்கம் 75.8 சதவிகிதம் குறைந்துள்ளது. பூச்சிதாக்குதல் குறைந்திருப்பதை பார்ப்பதற்கு, விவசாயிகள் புழுக்களை பூஞ்சாணம் தாக்கிய பின்பு ஒரு வாரம் கழித்து, தாக்கப்பட்ட புழுக்கள் மற்றும் வண்டுகளை அனைத்து வார்ட்டுகளிலிருந்தும் சேகாித்தனர்.
தொடர்ந்து கருத்துக்கள் பெறப்பட்டது. இனப்பெருக்கப் பகுதியை நேர்த்தி செய்வது இரண்டு வருடத்திற்கு பதிலாக வருடத்திற்கு ஒரு முறை செய்யலாம் என்று பங்குபெற்ற விவசாயிகள் கருத்து தொிவித்தனர். இதனை நிபுணர்கள், மேலும் ஆய்வு செய்வதற்கு அங்கீகரித்தனர்.

வெளிப்பாடு
இந்தத் திட்டம் 70-80 சதவிகிதம் திறன் வாய்ந்த தொழில் ஏற்பாளர்கள் அடைந்தன. காண்டாமிருக வண்டு குறிப்பாக தென்னை குலைகளில் தாக்குவது, 75 சதவிகிதம் திட்டம் செயல்படுத்தாத பகுதியை (நீந்தகார கிராம பஞ்சாயத்து, கொல்லம் மாவட்டம்) விடத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் (எடவா கிராம பஞ்சாயத்து, திருவனந்தபுரம் மாவட்டம்) தென்னை விவசாயிகளின் அறிவு கூடுதலாக உள்ளன. 90 சதவிகித்திற்கு மேலாக இரண்டு பகுதியில் உள்ள விவசாயிகளால் கருவண்டை கண்டு அடையாளம் காட்டமுடிகிறது. மேலும் 50-60 சதவிகித விவசாயிகளுக்கு பொதுவான இனப்பெருக்க பகுதிகள் மற்றும் பூச்சித் தாக்கத்தின் அறிகுறிகள் குறித்து தொிந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த பண்ணை அளவில் தென்னைக்கு கூடுதலாக, பலா, காய்கறிகள் மற்றும் பசுஞ் சாணம், காளான் வளர்த்தல் ஸ்பான் உற்பத்தி மற்றும் செயல்முறைகள் மற்றும் மண்புழுஉரம் எடுக்கப்பட்டது.
பண்ணை அளவிலான பச்சை மஸ்கார்டின் பூஞ்சை தொழில்நுட்பத்தை குழுக்களால் சில மாற்றங்கள் செய்து, உற்பத்தி செலவு 40 சதவிகிதமும், நேரத்தை 35 சதவிகிதம் குறைந்தும் காணப்படும் கிராம பயற்சி மையம் துவக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2054 விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

கற்ற பாடங்கள்
தொழில்நுட்ப தொகுப்போடு உகந்த விரிவாக்க முறைகளை, சமூக-பொருளாதார சூழ்நிலைகளில் மற்றும் தொழில்நுட்ப காரணிகள், விழிப்புணர்வு பெருமளவு பரவியது, மேலும் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டு, அதன் தேவையும் உயர்ந்தது.

பங்கேற்புடன் செயல்பாட்டு இணைப்புகள் அடிமட்ட அளவில் இருந்தால் , தொழில்நுட்ப பயன்பாடு சிறப்பான முறையில் தாக்கம் ஏற்படும். உருவாக்கப்பட்ட மாதிரி சமூக விரிவாக்க அணுகுமுறையும் அதனையே வெளிப்படுத்துகிறது. அதாவது மக்கள் பிரதிநிதிகள், விவசாய நிறுவனங்கள், விவசாய தலைவர்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு விரிவாக்கத் துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து இவர்களோடு இணைந்திருப்பது பலனைத்தரும் என்று அடி கோடிட்டு வெளிப்படுகிறது.

இந்த விரிவாக்க அணுகுமுறையின் முக்கிய காரணி, தொழில் நுட்பத்தை மையப்படுத்தாமல் வழிநடத்தியதேயாகும். உதாரணமாக, பெண் விவசாய குழுக்கள், பயிற்சியாளராகவும், பச்சை மஸ்கார்டியன் பூஞ்சையை பண்ணை அளவில் உற்பத்தியாளராகவும் மாற்றுவதற்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் திறன் மற்றும் முக்கிய பயனீட்டாளர்களை (கால்நடை விவசாயிகள் சாணக் குழி, தென்னை நார் கழிவுகலன்கள் , கூடுதலாக தென்னை பதப்படுத்துதல் மற்றும் மக்கு உரக்குழி விவசாயப் பண்ணையில் இருக்கும்) மனதில் கொண்டு உயிர் கட்டுபாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு செல்வது. தொழில் நுட்பத்தை பின்பற்றப்படாத முக்கிய விவசாயிகளால், சமூகஅளவில் தொழில்நுட்பங்களை மற்ற விவசாயிகள் பின்பற்றுவதற்கு தடையாக இருக்கிறது.
தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது முக்கியம். பாரம்பாிய தொழில்நுட்ப அறிவான கோரை புல்லை இனப்பெருக்கப் பகுதிகளில் மடக்கி கலந்து விடுவது. இலைகளை உப்பு / மணல் / சாம்பல் கலவையை தௌிப்பது, ஆகிய தொழில்நுட்பங்கள், பாிந்துரைக்கப்பட்ட தொழில்நுட்பங்களோடு ஒருங்கிணைத்தல்.
குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை கொண்டு சமூக விரிவாக்க நுட்பங்கள், வயது, ஈடுபாடு மற்றும் பண்ணை அமைப்புகளில் விவசாயிகளால் எவ்வளவு பின்பற்றப்படுகிறது என்பதை தாண்டி விவசாய சமூகத்தின் அறிவு உயர்ந்து நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் நல்ல வெளிப்பாடு பெறுவதற்கு தொழில்நுட்ப அறிவிற்கான தேவையை அதிகப்படுத்துகிறது.

அதிக மக்கள் மத்தியில் செய்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பரப்புவதற்கும், பகுதிவாரியான அணுகுமுறைகளில் ஊடகம் பொியபங்கினை வகிக்கிறது. சமூகபங்கு, விரிவாக்க தொடர்பு,விரிவாக்க பங்கேற்பு, ஊடகத் தாக்கம் மற்றும் கலந்துகொண்ட பயிற்சிகள், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க தொடர்புகள் முன் எப்போழுதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது விரிவாக்க அணுகுமுறையில் நேர்மறை தாக்கம் ஏற்படுவதை குறிக்கிறது.

கால்நடை விவசாயிகள், உயிர் கட்டுபாட்டு தொழில்நுட்பங்களின் திறன் ஏற்றுகொள்பவர்களாக இருந்தாலும், சமூகம் உயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களான உச்சியிலையில் சாம்பல் கலவையை நிரப்புதல், இயக்கவியல் முறையில் அழித்தல் மற்றும் நோய் தடுப்புமுறைகள் நேர்மறை தாக்கத்தை உருவாக்குவதில் இணைந்துள்ளது. இது விரிவாக்க தொடர்பு மற்றும் பங்குதாரர்கள் மற்றும் ஊடகங்களுடன் உள்ள உறவு வெளிப்படுகிறது.

கற்றல் மற்றும் அர்த்தமுள்ள பங்குதாரர்கள், தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தில் இருந்தால், நேர்மறை பரவல் ஏற்பட்டு, தொழில்நுட்பத்தை பின்பற்றி, சில மாற்றங்கள் செய்து மற்றும் தரம் உயர்த்தி, தென்னை விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் சுலபமாக கிடைக்கிறது.

முடிவுரை
சமூக அடிப்படையிலான பகுதிவாரியான அணுகுமுறையில், பூச்சி மேலாண்மை குறித்த ஆழ்ந்த அறிவை உருவாக்கி, ஒருங்கிணைந்த உயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதால், பூச்சிக்கொல்லியை தவறாக பயன்படுத்தியதால் ஏற்புடைய தீர்வுகாணப்படுகிறது. ஏ.டபிள்யு.சி.எ என்பது செயலற்ற செய்முறை அல்ல என்பது நிரூபனமானது. ஆனால் தொழில்நுட்ப தேவை மற்றும் பயன்பாட்டை உயர்த்துவதற்கு வல்லுநர்கள் மத்தியில் கலந்துரையாடலில் ஈடுபடுத்துவது. விரிவாக்க அலுவலர்கள் கருத்து மற்றும் பதில்கள், மற்ற சமூகத்திற்கும் பரவ, இது நேர்மறை தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

அதிக பரப்பளவில், சிறப்பு தொழில்நுட்ப பயனீட்டாளர் வகையை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக விரிவாக்க அணுகுமுறை மையப்படுத்தி தனிப்பட்ட தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சமூக பொருளாதார ஆதார அடிப்படையில் உள்ள சிறப்பற்ற நிலையை தாண்டி வரமுடியும். எனினும், தென்னை வளர்ப்பு சமூகங்கள் மத்தியில் தொடர் முயற்சிகள் மற்றும் நிலைத்தத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்ட கூறுகள் தேவை. ஆகையால், பண்ணை அளவில் உள்ள உற்பத்தி கலன்கள் கிராம அளவிற்கு ஈர்க்கக்கூடிய விளைபொருட்கள் மற்றும் வைப்பு காலத்துடன் தொழிலாக உயர்த்த, தொழில்நுட்ப மேற்பார்வை மற்றும் தரக்கட்டுபாடு குறித்து ஆராய்ச்சி இடுபொருள்கள் தேவை. இல்லையெனில், இந்த கலன்களின் வெற்றி மற்றும் நிலைத்தத்தன்மை அளவோடு நின்றுவிடும், மேலும் இவை குறுகிய கால வெற்றியாகவே அமைந்துவிடும்.

அனிதாகுமாரி.பி


Anithakumari P
Principal Scientist (Agricultural Extension)
ICAR CPCRI, regional Station
Krishnapuram P.O
Kayamkulam 690533
E-mail: anithacpcri@gmail.com

மூலம் : லீசா இந்தியா, மார்ச் 2021, வால்யூம் 23, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...