டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விவசாயிகளின் வீட்டுவாசலில் கொண்டு வருதல்


இன்று நாம் முன்னெப்போதையும் விட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து இருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்களை நோக்கிய இந்த முன்னுதாரண மாற்றம், நமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறு மற்றும் குறு விவசாய சமூகங்களை மேலும் புறந்தள்ளக்கூடாது. அறிவியல் மற்றும் தொழிற்நுட்பதுறையின் ஆதரவுடன் கியாக் அமைப்பு 1200 சிறு விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகாித்து வரும் வானிலை அதிர்ச்சிகளில் அதிக துல்லியத்துடன் வேளாண்மை செய்யும் அளவிற்கு முயற்சிசெய்து  வருகிறது.


ஆத்ம நிர்பார் பாரத் என்ற இலக்கை அடைவதில்,வானிலை அதிர்வுகளுக்கு மத்தியில் பண்ணையை வளர்ப்பது விவசாயத்தில் மிகப்பொிய சவாலாக உள்ளது. பரவலான வெள்ளம் மற்றும் நீர்நிலைகளால், கிழக்கு உத்திரப்பிரதேசம் மற்றும் வடக்கு பீகாரில் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு உழவர்கள் வேளாண்மை மற்றும் வீடு அற்றவர்களாக மாறியுள்ளனர். காலநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு மற்றும் அது தொடர்பான போக்குகள், அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள், இடைவிடாத வறண்ட காலநிலை, வறட்சியைத் தொடர்ந்து வெள்ளம், பூச்சித் தாக்குதல் மற்றும் வளர்ந்துவரும் பயிர் நோய்கள் ஆகியவை இப்பகுதியில் குறிப்பிடத்தக்கவை. வேளாண் சமூகத்தின் பெரும் பகுதியினர் மானியங்கள், நிவாரணம் மற்றும் இழப்பீடுகளின் கருணையில் வாடும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.
காலநிலை நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வேளாண்மையில் அதன் தாக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளும்போது, விவசாய ஆலோசனை மற்றும் நடைமுறை தீர்வுகளுடன் பாதிக்கப்பட்ட மக்களை அதிக எண்ணிக்கையில் அணுகுவது முக்கியம். இருப்பினும்,வெள்ளம் சூழ்ந்த சூழ்நிலையில், வழக்கமான வழிகளைப் பயன்படுத்தி உழவர்களை அணுகுவது சவாலானதாக இருக்கிறது. எனவே, இத்தகைய நிலைமைகளின் கீழ், டிஜிட்டல் தொழில்நுட்பம் தகவல்தொடர்புக்கான விருப்பமான வழிமுறையாக மாறுகிறது.

இன்று,நாங்கள் பணிசெய்யும் கிராமங்களில் உள்ள பெரும்பாலான உழவர்கள் கைபேசிகளை வைத்திருக்கிறார்கள். இதனால் இணையம் இல்லாமல் கூட எளிய குறுஞ்செய்தி அல்லது குரல் செய்திகள் மூலம் வேளாண் ஆலோசனைகளைப் பெறுவதற்கு வசதிகள் உள்ளன. எனவே, டிஜிட்டல் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் மூலம் வானிலை மற்றும் காலநிலை தகவல்களை அணுகுவது உழவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், மனஅழுத்த சூழ்நிலையிலும் உழவர்கள் தகுந்த முடிவுகளை எடுக்க முடியும். இது தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும்,வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், வரையறுக்கப்பட்டவளங்களின் திறமையான பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும்,செலவைக் குறைப்பதற்கும், பயிர் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகாிப்பதற்கும் நிச்சயமாக முக்கியமானதாக இருக்கும்.

முன் முயற்சி:
2018 ஆம் ஆண்டில்,கோரக்பூர் சுற்றுச்சூழல் நடவடிக்கை குழு (கியாக்) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அரசாங்கத்துடன் இணைந்து கோரக்பூர் மற்றும் மேற்கு சம்பரான் பகுதிகளில் உள்ள 10,000 சிறு மற்றும் குறு உழவர்களுக்கு காலநிலை-எதிர்ப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. வெள்ளத்தை தாங்கும் வேளாண் தொழில்நுட்பம், சிறிய நிலப்பரப்பு பண்ணை இயந்திர மயமாக்கல்,திறமையான நீர்ப்பாசன முறையை உருவாக்குதல், உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் நடைமுறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துதல் ஆகியவை காலநிலையை எதிர்க்கும் தொழில்நுட்பங்களில் அடங்கும்.

கியாக் இரண்டு தானியங்கி வானிலை நிலையங்களை (ஏ.டபுள்யு.எஸ்) உருவாக்கியுள்ளது. ஒன்று மொஹ்நாக் கோரக்பூரில் மற்றும் இன்னொன்று மேற்கு சம்பரனின் ஜமுனியாவில் பச்கவான், தரம்பூர், ஜிந்தாபூரில் உள்ள லோஹா, பூர்வா மற்றும் மேற்கு சம்பாரானில் மைகுந்த்வா ஆகிய இடங்களில் ஐந்து மழை அளவீட்டு நிலையங்களுடன் இணைந்துள்ளது. ஏ.டபுள்யு.எஸ் மற்றும் மழை அளவீடுகள் மூலம் தரவு சேகாிப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை உருவாக்குவது மூன்று செயல்முறைகள் மூலம் செய்யப்படுகிறது. அதாவது (1) தரவு செயலாக்கம், (2) தரக் கட்டுப்பாடு, (3) குறிக்கோள் பகுப்பாய்வு.
உள்ளூர் இந்திய வானிலை தரவுத் துறை அலுவகலம் கியாக் – க்கு பிராந்தியத்தின் பருவநிலைகளை பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது. இது தொடார்புடைய வானிலை தரவுகளைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில், பொிய பரப்பு அளவில் வானிலை முன்னறிவிப்பு தகவல் மற்றும் இந்திய வானிலை தரவுத் துறையால் உருவாக்கப்பட்ட முன்னறிவிப்பு மாதிரிகள் சேகாிக்கப்படுகின்றன. கணித மாதிரி முறைகளைப் பயன்படுத்தி, இந்த பொிய பரப்பு அளவில் தரவுகள் தொகுதி மட்டத்தில் குறைக்கப்பட்டு, ஏ.டபுள்யு. எஸ் மற்றும் பணி செய்யும் பகுதிகளின் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள மழை அளவீடுகளிலிருந்து சேகாிக்கப்பட்ட பொிய பரப்பு அளவில் உள்ள தரவுகளுடன் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. வானிலை ஆலோசனையை இறுதி செய்வதற்குமுன்,கியாக்-இன் துறை நிபுணர் முன்னறிவிப்பின் செயல்திறனை மேம்படுத்த ஆர்வமுள்ள இடத்தை சுற்றி நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொள்கிறார்.

கிராமப்புறங்களில் கிடைக்கும் டிஜிட்டல் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் நன்மைகளை பயன்படுத்தி, சிறு மற்றும் குறு உழவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே வானிலை மற்றும் வேளாண் ஆலோசனைகளை கொடுக்கும் சேவைகளை கியாக் துவக்கிறது. உள்ளூர் இந்திய வானிலை தரவுத் துறை அலுவலகம் மற்றும் நரேந்திததியோ வேளாண் பல்கலைக்ககழகம், அயோத்தி, உத்திரப்பிரதேசம் இவற்றுடன் இணைந்து கியாக் வானிலை தகவல்களின் விரிவான அவதானிப்புகள், தொலைநிலை உணர்திறன் தரவு (ரேடார் மற்றும் செயற்கைகோள்கள்), குறியீடுகளைப் பெறுதல் மற்றும் முடிவுகளை எடுப்பபதற்காக உழவர்களுக்கு பயிர் வளர்ச்சியின் வெவ்வெறு நிலைகளில் மற்றும் வேளாண் நடவடிக்கைகளில் செயல்பாட்டு சேவைகளை வழங்கி வருகிறது.

உள்ளடக்கம் மற்றும் பரப்புதல்
வேளாண் ஆலோசனைகளுக்காக, கியாக்கில் உள்ள நிபுணர் காலநிலை பற்றிய சிறந்த ஆலோசனை தொகுதியை உருவாக்கியுள்ளார். இது அனைத்து முக்கிய பயிர்களுக்கும் பருவம் வாரியாக பயிர் கட்டமைப்புகளை சித்தாிக்கிறது. மாநில ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள வேளாண் நிபுணர்களிடமிருந்து நிகழ் நேரத்தில் தொழில்நுட்ப உள்ளீடுகளையும் இந்த தொகுதி கருத்தில் கொள்கிறது. மேலும், பயிர் ஆலோசனைகளில் மதிப்புகூட்டல், முக்கியமாக சுற்றுச்சூழலியல் கொள்கைகளின் குறைந்த வெளியிடு வேளாண்மையை ஊக்குவிப்பதில் வலியுறுத்தபடுகிறது. இரண்டு தொகுப்பு தகவல்களையும் தொகுத்து, நிலைத்த வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்கும் முன்னறிவிப்பு மற்றும் நோய் தீர்க்கும் நடவடிக்கைகள் உட்பட உள்ளூர் ஹிந்தி மொழியில் உழவர்களுக்கு வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனையை கியாக் அனுப்புகிறது.

டிஜிட்டல் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான முன் முயற்சியின் மூலம், மழையின் நிகழ் தகவு (லேசானது முதல் கனமானது வரை), வெப்பநிலை (அதிகபட்ச வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் தினசாி வெப்பநிலை மாறுபாடு), அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஈரப்பதம், மேக நிலை போன்ற வானிலை நிலைமைகளின் முன்னறிவிப்பு குறித்து உழவர்களுக்கு தொிவிக்கப்படுகிறது. மேலும் வரும் 5 நாட்களுக்கு காற்றின் திசை வேகம், அதே வானிலை முன்னறிவிப்பு செய்தியில் கொடுக்கப்படுகிறது. பொதுவாக காரீப், ரபி மற்றும் ஜாயாத் பருவங்களில் பயிர்களை விதைப்பதற்கான சாியான நேரம்,நீர்ப்பாசனம் குறித்த திட்டமிடல், வயலில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல், மழையின் கணிப்பின்படி  அறுவடை செய்தல், செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது ஆகியவை குறித்தும் உழவர்களுக்கு தொிவிக்கப்படுகிறது. மழைப்பொழிவு நிகழ்வின் அடிப்படையில், முக்கியபயிர்கள், அதன் வகைகள் / இனங்கள் / தாவரங்களின் விதைப்பு நேரத்தை முன்கூட்டியே அல்லது ஒத்திவைக்க உழவர்களுக்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், தாவர வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் பருவகால பயிர்கள் /காய்கறிகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கான சுகாதார பராமாிப்புக்கான அவற்றின் தீர்வு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும் வழங்கப்படுகின்றன.

மொத்தம் 5 நாட்கள் இடைவெளியில் இதுபோன்ற ஆறு அறிவுரைகள் ஒரு மாதத்தில் உழவர்கள் மற்றும்; அறிவியல் மற்றும் தொழிற்நுட்பதுறைஊழியா;களின் மொபைல்களுக்கு எங்கள் இணையதளத்தின் மூலம் சிறுகுறுஞ் செய்திகளாக தொடர்ந்து அனுப்பப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான உழவர்களை சென்றடைவதற்காக, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை பணியாளர்கள் இந்த அறிவுரைகளை ஒவ்வொரு வேளாண் சேவை மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள காட்சிப் பலகையில் எழுதுவார்கள். இதன் மூலம் மையத்திற்கு வரும் உழவர்களுக்கும் இந்த தகவல்கள் தொிவிக்கப்படும்.
இந்த முன் முயற்சியானது, உழவர்கள் பல்வேறு வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்வதை முன்கூட்டியே தொிவிக்கிறது மற்றும் பெரும்பாலும் முன்னறிவிக்கப்பட்ட வானிலை மற்றும் தலையீட்டு பகுதிகளில் நடைமுறை வேளாண் ஆலோசனையின் அடிப்படையில் பண்ணை மட்டத்தில் உடனடி முடிவை எடுக்க வழிகாட்டுகிறது. இதுதவிர, இந்த முயற்சி உழவர்களுக்கு பயிர் இழப்புகளைகக் குறைப்பதற்கும், வேளாண்மையில் உள்ளீட்டு செலவுகளை குறைப்பதற்கும், இறுதியில் அவர்களின் வாழ்வாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

சராசாியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று அழைப்புகள் அல்லது ஒட்டு மொத்தமாக 10-12 உழவர்களின் அழைப்புகள் அல்லது தவறவிட்ட அழைப்புகள் இரண்டு ஆலோசனைக் காலங்களுக்கு இடையில் (அறிவுரை அனுப்பப்பட்ட 5 நாட்களுக்குள்) பெறப்படுகின்றன. சில நேரங்களில் உழவர்கள் கியாக்-ஆல் உருவாக்கப்பட்ட உழவர்களின் வாட்ஸ்அப் குழுவில் தங்கள் மொமைல் மூலம் குறுஞ்செய்தி அல்லது புகைப்படங்கள் மூலம் பிரச்சனை தொர்டபான கேள்விகளை அனுப்புகிறார்கள். வானிலை /தீவர வானிலை எச்சாிக்கை,  பயிர்கள் / கால்நடை வளர்ப்பு  மற்றும் ஆலோசனைகள் பற்றிய சில கூடுதல் தகவல்களை அறிய அவர்கள் எப்போதும் ஆர்வமாக உள்ளனர். கியாக்-இன் வல்லுநர்கள் ஒவ்வொரு உழவர்களின் கேள்விக்கும் உடனடியாகப் பதிலளிப்பார்கள். தத்தெடுப்பு நிலைகள், பொருத்தம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்காக கியாக் தொடர்ந்து உழவர்களிடமிருந்து ஆலோசனையை பெறுகிறது.

தாக்கம்
இதுவரை, கோரக்பூர் மற்றும் மேற்கு சம்பாரனின் 18 கிராமங்களைச் சேர்ந்த 1200 சிறு மற்றும் குறு உழவர்கள் இந்த டிஜிட்டல் சேவையுடன் நேரடியாக இணைக்கப்பட்டு, காரிப் மற்றும் ரபி பருவங்களில் முக்கிய பயிர்களுக்காக கண்காணிக்கப்பட்டுள்ளனர். இருமாநிலங்களின் 36 மாதிரி உழவர்களும் பயிர் ஆலோசனைகள்,வானிலை ஆலோசனைகள், புவி-குறியிடல் மற்றும் பயிர் சுகாதார கண்காணிப்பு குறித்து கியாக்-ஆல் முறையாக பயிற்சி பெற்றுள்ளனர். இந்த மாதிரி உழவர்கள் பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தில் டிஜிட்டல் தலையீடுகளை அதிகாிக்க “மாற்றத்திற்கான முகவர்களாக” பணியாற்றுகின்றனர்.

வானிலை அளவுருக்கள் குறித்த முன்னறிவிப்பு 90-95 சதவீதம் துல்லியமாக இருப்பதாக உழவர்கள் கண்டறிந்துள்ளனர். இரு மாநில உழவர்களின் கருத்துப்படி, டிஜிட்டல சேவையானது தயார் நிலையை மேம்படுத்துதல், தகவமைப்புத் திறனை அதிகாித்தல், சாியான நேரத்தில் காரீப் பயிர்களை நாற்று நடுதல், நீர்ப்பாசன மேலாண்மை, வயலில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக முக்கியமாக, பயிர் அறுவடை சாியான நேரத்தில் நடக்கிறது.

மழைப்பொழிவுத் தகவல்களின் துல்லியம் காரணமாக, தேவையற்ற நீர்பாசன செலவை இது மிச்சப்படுத்தியது, சாியான நேரத்தில் நெல் மற்றும் காய்கறிககளை நடவு செய்வதற்கு உதவியது என்றும் உழவர்கள் கருதுகின்றனர். 45 உழவர்களின் பண்ணை தரவுகளின் பகுப்பபாய்வு, பண்ணை நடவடிககைகளில் பாசனச் செலவு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாடு ஆகியவற்றில் 18-20 சதவீதம் குறைந்துள்ளது. தினசாி முடிவெடுப்பதில் சிறு மற்றும் குறு உழவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் காணப்பட்டது. இது உழவர்களின் வருமானத்தில் ஒட்டுமொத்தமாக  பொிய நிதி தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

முன்னோக்கிய பார்வை
இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி உழவர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் அவர்கள் தங்கள் பண்ணைகளில் நேர்மறையான வேறுபாட்டைக் காண்கிறார்கள் மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டனர். இருப்பினும், குறுகிய காலத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இந்த முயற்சியை அளவிடுவது எளிதல்ல. ஆரம்பத்தில், தகவல் மற்றும் முன்முயற்சியின் மீது மக்களின் நம்பிக்கையை வளர்ப்பது நிறுவனத்திற்கு ஒரு சவாலான பணியாக இருந்தது. மற்ற சவால்களில் மோசமான இணைய இணைப்பு, சிம் கார்டுகளை அடிக்கடி மாற்றுவது ஆகியவை கண்காணிப்பை கடினமாக்குகிறது மற்றும் உழவர்களிடமிருந்து வழக்கமாக கருத்து இல்லாதது ஆகியவை அடங்கும். இருப்பினும், வேளாண் துறையில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றிய நீண்ட அனுபவம் மற்றும் உள்ளூர் இந்திய வானிலை தரவு துறையின் அலுவலகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் கியாக் அதிக சவால்கள் உள்ள பகுதிகளில் இந்த முயற்சியை செயல்படுத்துவதில் வெற்றிகரமாக உள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேளாண் துறைக்கு மிகப் பொிய வாய்ப்பு உள்ளது. இன்று, இப்பகுதியில் உள்ள விவசாயிகள், குறிப்பாக இளம் விவசாயிகள், உள்நாட்டில் பொருத்தமான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் தயாரித்தல், நோய்கள் மற்றும் பூச்சிகளில் இருந்து பயிர்களைப் பாதுகாத்தல், யூ டியூப் மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் சாத்தியமான சந்தை மற்றம் விலை விகிதம் போன்ற பல பண்ணை நடவடிக்கைகளில் அறிவை பெறுவதற்கு வாட்ஸ்அப் குழு போன்றவற்றை ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர். வானிலை தகவல் மற்றும் வேளாண் ஆலோசனைகள் மூலம் அதிகாரம் பெற்ற உழவர்கள் வேளாண்மையில் சிறப்பாக செயல்படுவதை திட்டத்தின் தாக்கம் சுட்டிக்காட்டுகிறது. அவர்களின் பயிர் விளைச்சல், வருமானம் மற்றும் வானிலை அதிர்ச்சிகளை எதிர்க்கும் திறன் அதிகாித்துள்ளது. எனவே, அரசாங்கங்கள் ,வணிகங்கள் மற்றும் உழவர்கள் இடையே வலுவானன கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மலிவு மற்றும் அணுகக்கூடியதாக்க இருப்பதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை சூழலின் மூலம் வேளாண் நடவடிக்கைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் மேலும் புதுமைக்கான அவசரத் தேவை மற்றும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

நன்றிகள்
விதைப் பிரிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்தியாவில் கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் வடக்கு பீகாரில் பருவநிலை அழுத்தப் பகுதிகளில் உள்ள சிறு மற்றும் குழு உழவர்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதாிப்பதற்காக எங்கள் விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வானிலை மற்றும் வேளாண் ஆலோசனை சேவையை செயல்படுத்தியதற்காக கியாக்-இன் காலநிலை நிபுணரான திரு. கைலாஷ் பாண்டே அவர்களுக்கும் எங்கள் நன்றியை தொிவித்து கொள்கிறோம்.

பெட்டிச் செய்தி 1:
“நான் ஒவ்வொரு நாளும் எனது பண்ணையில் பயிர் வளர்ச்சி மற்றும் பூச்சி தாக்குதல்கள் அல்லது ஒழுங்கற்ற வானிலை காரணமாக ஏற்படும் பயிர் இழப்புகளை ஆய்வு செய்ய வேலை செய்கிறேன். நான் எனது கேள்விகளை கியாக்-இன் நிபுணாிடம் எனது ஸ்மார்ட் போன் மூலம் கேட்கிறேன். அவர்கள் சில நிமிடங்களில் ஆலோசனை கூறுகிறார்கள்” என்கிறார் உத்திர பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தின் ஜாங்கிள் கௌடியா பிளாக்கில் உள்ள பூதர்பூர் கிராமத்தில் உள்ள இளம் முன்மாதிரி விவசாயி துர்கேஷ் கண்ணுஜியா

பெட்டிச்செய்தி 2
பயனுள்ள முடிவெடுப்பதற்கான ஆலோசனை
கோரக்பூரில் உள்ளரகுகோர் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான முன்மாதிரி உழவர் ராம் நிவாஸ் கூறுகையில், “பண்ணை திட்டமிடல் நடவடிக்கைகளில் திறம்பட முடிவெடுப்பதில் வானிலை தகவல்கள் எங்களுக்கு உதவுகின்றன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரக்பூரில் குறைந்த மழையே பெய்து வருகிறது. இதனால் காரிப் பருவத்தில் உழவர்கள் வேர்க்கடலையை பயிரிட்டனர். இந்த ஆண்டும் இதே நடைமுறையை இப்பகுதி உழவர்கள் பின்பற்றினர். கிராமத்தில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு உழவர்கள் வேர்க்கடலை பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு நிலைமை மாறிவிட்டது. இரண்டு மாதங்களுக்குள் (ஜூன், ஜூலை 2020) கோரக்பூர் பகுதி முழுவதும் 936 மிமீ மழை பெய்துள்ளது. கனமழை மற்றும் வயலில் தண்ணீர் தேங்கு கடலை செடிகள் சேதமடைந்தன.
ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே முதல் வாரத்தில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆலோசனை மூலம் ரமணிவாஸ் தொிவித்தார். ஒரு புதுமையான விவசாயி என்பதால், அவர் தகவலை தீவிரமாக எடுத்துக் கொண்டார் மற்றும் மே முதல் வாரத்தில் வேர்க்கடலை விதைப்புக்கு முன்வைத்தார். அவர் தனது 0.20 செண்ட் நிலத்தில் வேர்க்கடலையை விதைத்தார். அவர் ரூ. 2300 ஐ முதலீடாக செய்து கடலையை விற்றதன் மூலம் ரூ.4300 ஐ வருமானமாக பெற்றார். கோடைக்காலத்தில் பயிர் ஆலோசனைகளைப் பின்பற்றி இடுபொருட்கள் செலவை 30 விழுக்காடு குறைத்தார். (சாியான நீர்ப்பாசன திட்டமிடல் மற்றும் உரங்களின் பயன்பாடு)

பி.கே. சிங், அஜய் சிங் மற்றும் அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா


References
Pandey, K and Mishra, R, Weather-Agro Advisories: Empowering Transboundary Communities in India
and Nepal, 2019, published by GEAG, https://geagindia. org/sites/default/files/2020-03/Paper-
Weather-AgroAdvisories-Revised-190904.pdf

B K Singh
Senior Programme Officer

Ajay Singh
Programme Professional

Archana Srivastava
Programme Officer
Gorakhpur Environmental Action Group
224, Purdilpur, M G College Road
Gorakhpur - 273 001,
Uttar Pradesh, India.

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2020, வால்யூம் 22, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...