சூரிய வெப்பத்தில் உலர்த்துவது மூலம் மதிப்பு கூட்டுதல்


பெண் விவசாயிகளின் ஒட்டுமொத்த சக்தியையும், முதல்நிலை விளைப்பொருள் மதிப்பு கூட்டுதலோடு, ஒருங்கிணைந்த சூரிய உலர் தொழில்நுட்பத்தின் மூலம், பயன்படுத்தப்படுகிறது. பரவலாக தொழில் அணுகுமுறையினால் தேவைகேற்ப வழங்கும் அதேசமயத்தில் பதப்படுத்துதல் மூலம் விவசாயிகள் சிறப்பான மகசூலை எடுக்கமுடியும்.


இந்தியா பல பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் முதன்மையானதாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பழம் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவதாக இருக்கிறது. அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருப்பினும், பல்வேறு மட்டங்களில் ஊட்டச்சத்து பற்றாகுறை எங்குமிருக்கிறது. ஏனென்றால் வருடம் முழுவதும் தொடர் வினியோகமில்லாததால், பழம் மற்றும் காய்கறிகள் கிடைப்பதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம். பல்வேறு நாட்டு அறுவடைக்குபின் ஏற்படும் நஷ்டம் 20 முதல் 30 சதவிகிதம் பழங்கள் மற்றும் காய்கறிகள் வருடத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்பலான நஷ்டம் ஏற்படுகிறது. விலை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பற்றாகுறையில் நேரம் கவனிக்கப்படுகிறது. மீண்டும் தேவையான அளவு சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் அறுவடைக்குபின் உள்ள தொழில்நுட்பங்களின் பங்கும் ஓரளவுக்கு காரணமாக இருக்கிறது.

பெரும்பாலும் விவசாயிகள் பசுமையான விளைப்பொருட்களை கிடைக்கும் விலையில் விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பல நேரங்களில், அந்த விலை, உற்பத்தி செலவுகள் கூட எப்போதாவதே ஈடு செய்யும் . உற்பத்தியாளர்கள் எப்போதாவதுதான் பதப்படுத்துதல் அல்லது மதிப்புக் கூட்டுதல் செய்கின்றனர். மதிப்பு கூட்டுதல் செய்யும்போது பெரும்பாலும் தொழில் நிறுவனங்களால் , தொழிற்சாலை கொள்ளளவில், விளைபொருள் பிரிக்கப்பட்டு, பதப்படுத்தி, பொட்டலம் போடப்படுகிறது. இந்த பதப்படுத்துதல் , தளவாடங்கள் , போக்குவரத்து மற்றும் ஆற்றல் ஆகியவை அதிகம் தேவைப்படுகிறது. விவசாயிகள் குறைந்த மதிப்பையுடைய பசுமை விளைபொருட்களோடு ஆபத்தை ஏற்றுக்கொள்வதால் பதப்படுத்துபவர்கள் மதிப்பு கூட்டுதல் செய்து பயன்களை பெறுகின்றனர்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்பு கூட்டச்செய்வது நிலைத்த வருமானம் ஈட்டுவதற்கு சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். சூரிய வெப்பத்தில் உலர்த்துதல் என்பது பல்வேறு அறுவடைக்குபின் உள்ள தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். இது பரவலாக பதப்படுத்தும் முறையோடு ஒத்துபோகிறது. பசுமையான உணவு விளைபொருள் உலர்த்திய பின்னர் அதன் வைப்புக்காலம் அதிகாிக்கும் அதேசமயத்தில் நிறம், சத்துக்கள் மதிப்பு மற்றும் நறுமணம் பாதுகாக்கப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் உடனடியாக சமைக்கும் உணவுப்பொருள்களுக்கு வளரும் முக்கியத்துவம் ஆகியவற்றிற்கு இந்த வகை தொழிலில் அதிக தனித்துவம் பெறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ளவற்றில், பழங்கள் மற்றும் காய்கறிகளை சூரிய வெப்பத்தின் மூலம் உலரவைப்பதை புனேயில் உள்ள உருளிகஞ்சன் தொகுப்பில் இருக்கும் பைப் நிறுவனம் சிறியதாக துவங்கப்பட்டது.

ஒரு துவக்க முயற்சி
பைப் நிறுவனம் உருளிகஞ்சன் பகுதியில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானம் பெறுவதற்கு நிலைத்த வாழ்வாதார வழிகள் பாிந்துரைத்து வருகிறது. சராசாி நிலஅளவு இந்தத் தொகுப்பில் 4 ஏக்கர்கள். ஐந்துக்கு ஒரு பங்கு விவசாயிகள் வறுமைக் கோட்டின்கீழ் வருகின்றனர். பாசன நிலம் வளமாகவும், மீதமுள்ள பகுதி குறைவான வளர்ச்சி பெற்றிருக்கிறது.

புனே சிட்டியின் வெளிபுற பகுதியான, உருளிகஞ்சன் அறை நகர்ப்புற பகுதிக்கு சிறந்த உதாரணம். இங்கு பெரும்பாலான விவசாயிகள் கீரைகள், தக்காளி, வெங்காயம் , கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்வதில் ஈடுபடுகின்றனர். பட்டம் மாறி வருவதால் தொடார்ச்சியாக உற்பத்தி வினியோகமுறை நடைபெறுகிறது. ஆனால் குறிப்பிட்ட பொருளின் தேவை தொடர்ச்சியாக அல்லது வினியோக சுழற்சிக்கு சம்மந்தமில்லாமல் இருக்கும். அறுவடைக்கு பின் உள்ள தேர்வுகளான குளிர்சாதனத்தில் சேமிப்பது மிகவும் குறைவு மற்றும் விலையுயர்ந்தது. பல நேரங்களில் , உற்பத்தி செலவு ஈடுசெய்யக் கூடியவகையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகுப்பு பகுதி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் ஹைவேயில் இருப்பதால், வருடம் முழுவதும் சில விளைபொருட்களை உறுதியாக வினியோகம் செய்யவேண்டிய தேவையை உணர்ந்தனர். பாதுகாப்பு குறித்த தேவைக்கு எதிராக விலை முரண்பாடு மற்றும் கஷ்டப்பட்டு விற்பது குறித்து திடமாக உணரப்பட்டது . இது தொழில் முயற்சிக்கான உந்தும் புள்ளியாக கருதப்பட்டது. பழங்கள் மற்றும் காய்கறிகள் சூரிய வெப்ப உலர்த்துதல் திட்டம் சிறிய அளவில் உருளிகஞ்சனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

உருளிகஞ்சன் தொகுப்பு கிராமங்களில் சிறிய திட்டத்தை பரவலான முறையில் (ஒரு பங்கேற்பாளருக்கு ஒரு உலர் கருவி) நிறுவப்பட்டது. தொழில்நுட்ப பரவலாக்க முயற்சியில் ஒரு அங்கமாக பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனுடன் சூரிய உலர் கருவியும் ஒன்று. ஒரு பங்கேற்பாளருக்கு ஒரு கருவி என்று ஒதுக்கப்பட்டது. சூரிய உலர் கருவியில் நுண் ஊதா கதிர்கள் உள்ளே நுழையாதவாறு ஒரு வடிக்கட்டியை அமைத்திருப்பது முக்கியானதாகும் . இதனால் சூரியவெப்பத்தில் நேரடியாக உலரவைக்கும்போது ஏற்படுவதுபோல் இல்லாமல், உலர்ந்த விளைபொருளின் நிறம், நறுமணம் மற்றும் சத்துக்கள் யாவும் அப்படியே நிலைத்திருக்கிறது. அதனால் சாியாக துாஸ்கி சதாச்வதிஷ் ஹமீஷா பெண்கள் குழு உருவாக்கப்பட்டு, விளைபொருள் உலர்த்துவது வீட்டிலேயே செய்வதாக முடிவு செய்யப்பட்டது. பிரித்தல், பொட்டலம் போடுதல் மற்றும் சந்தைபடுத்துதல் ஆகியவைகளை குழுவாக செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அணுகுமுறை வீட்டிலிருந்தே பெண்கள் தங்களது பணியை செய்ய முடியும் என்று உறுதிப்படுத்துகிறது. அதேநேரத்தில் கூட்டுச்செயலாக பொருளாதாரங்களின் அளவை விரிவடைய செய்வது.

இந்த முயற்சி கீழே குறிப்பிட்டுள்ளவாறு வடிவமைக்கப்பட்டது.
1. பி/சி தர மலிவு விலையில் காய்கறிகள் உள்ளூரில் கொள்முதல் செய்வது அல்லது குறிப்பாக சொந்த விளைபொருளை பயன்படுத்துவது .
2. ஆரோக்கியமான ஈரப்பதம் இல்லாத சூழ்நிலைகளில், வெட்டுதல், உலர்த்துதல், பொடித்தல் (தேவைப்பட்டால்) மற்றும் பொட்டலம் போடுதல் ஆகிய செயல்பாடுகள் செய்யப்படுகிறது.
3. சந்தை இணைப்பு – கொள்முதல் முகமைகள், உள்ளூர் சந்தை, உணவு சங்கிலி போன்றவைகள்.
தக்காளி, இஞ்சி, வெங்காயம், ஸ்டீவியா, முருங்கை இலைகள், ஸ்பினாச், வெந்தயம் போன்ற பல காய்கறிகள்/விளைபொருட்களை சூரிய வெப்பத்தில் உலர்த்தப்படுகிறது. சில உடனடி / தயார் நிலையில் உண்ணும் விளைபொருட்களும் உள்ளூரில் தயாரிக்கப்பட்டது. அவை உலர் சபோட்டா சிப்ஸ், உடனடி புரான் சப்பாத்தி (மகாராஷ்ட்ரியன் உணவு), உடனடி பாலக் மற்றும் மேத்தி பரோட்டா, பீட்ரூட் பொடி போன்றவைகளாகும். உலர்த்துவதற்கான மூலப்பொருள் ஒன்று பங்கேற்பாளர்கள் உற்பத்தி செய்வார்கள் அல்லது மற்ற விவசாயிகளிடம் உள்ளூரிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்த ஆர்டர்களுக்கு பங்கேற்பாளர்களே தரத்தை சாிபார்த்த பிறகு பொட்டலங்கள் / மூட்டைகள் தயாரிப்பர். சில்லறை ஆர்டர்களுக்கு சங்கல்ப் அங்காடியில் பொட்டலங்கள் மற்றும் லேபிள்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறை தனிநபராக உலர்த்துவதற்கும், குழுவாக பிரிப்பதற்கும் திட்டமிடப்பட்டது. இது பெண்கள் வீட்டிலிருந்தே தங்களுடைய பணிகளை முடியும் என்று உறுதிபடுத்துகிறது. ஆனால் அவர்கள் கூட்டுச்சக்தியோடு வாய்ப்புகளை பற்றிகொள்வதற்கும், தேவைகளை விரிவுபடுத்துவதற்கும் செயல்படுகின்றனர்.

விளைபொருள் குறித்த விபரங்கள் மற்றும் நிலைத்தத்தன்மை குறித்த விபரம் கீழே சுலபமாக விவரிக்கப்பட்டுள்ளது

காய்கறிகள் – தற்போது உற்பத்தி செய்யப்பட்டது
விளைபொருள்- சந்தையில் கிடைக்கும்
(முதல் தேர்வு) காய்கறிகள் – தற்போது உற்பத்தி செய்யப்படவில்லை

விளைபொருள் – சந்தையில் கிடைக்கும்
(இரண்டாவது தேர்வு)

காய்கறிகள் – தற்போது உற்பத்தி செய்யப்பட்டது
விளைபொருள் – சந்தையில் கிடைப்பதில்லை
(குறைந்த தேர்வு) காய்கறிகள் – தற்போது உற்பத்தி செய்யப்படவில்லை

விளைபொருள் – சந்தையில் கிடைப்பதுமில்லை
(கிடைசி தேர்வு)

விளைபொருட்களை இரண்டு சேனல்கள் மூலம் விற்கப்படுகிறது – ஒன்று சங்கல்ப் – சில்லறை வியாபாரம் உருவாக்கப்பட்ட பெண்கள் குழுக்கள் , தற்போது தொழில் முனையும் செயல்பாடுகள் செய்வதற்கு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பின் கீழ் , உருளிகஞ்சன் பகுதியில் 2013 ஆம் ஆண்டு சங்கல்ப் என்ற பெயரோடு உணவு மற்றும் அழகு சாதன பொருட்களின் அங்காடி துவக்கப்பட்டது. மற்றொரு வழி , மொத்த வியாபாரம் மூலம் சந்தைப்படுத்துவது – தொழில் பணிகள், மேலாண்மை மற்றும் பராமாிப்பு உறுப்பினர்களால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சிகள் யாவும் பைப் நிறுவனம் அளிக்கிறது. தினமும் உலர்த்துதல், மேலாண்மை மற்றும் உலர் கருவி பராமாிப்பு ஆகியவை தனிநபர் பங்கேற்பாளர்களால் செய்யப்படுகிறது. சூரிய உலர் கருவிகள் இயக்குவதற்கான செலவு இல்லாதது முக்கிய சாதகமாகும். மேலும், இதில் நகரும் அல்லது மின்சார பாகங்கள் இல்லாததால், பராமாிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. எனினும் சில சிறிய பிரச்சனைகளான புறஊதா கதிரின் வடிக்கட்டும் தட்டு, திடீரென உருவாகும் புயல் காற்றால் ஒரு முறை சேதமடைந்ததை கவனிக்கப்பட்டது.

பரவலாக்கம்
பகுதி வறண்ட சீதோஷன சூழ்நிலை இந்தப் பகுதியில் இருப்பதால் தொழில்நுட்பம் பின்பற்றுவதற்கு உகந்ததாக இருக்கிறது. சூரிய உலர் கருவிகளைப் பயன்படுத்தி, பங்கேற்பாளர்கள் பல உணவுபொருள்களை உருவாக்குகின்றனர். அவர்கள் பி மற்றும் சி தர காய்கறிகளையும் பதப்படுத் முடியும், அதாவது வேளாண் கழிவுகள் என்று கூறப்படும் என்ற ஒன்றை பதப்படுத்த முடியும். தற்போது, ஒவ்வொரு பங்கேற்பாளர் உறுப்பினர்களும் இந்த முயற்சியின் வாயிலாக மாத வருமானம் கூடுதலாக ரூ.2500 – 3000 பெறுகின்றனர்.
சிறிய திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் அடிப்படையில், இன்னும் அதிகமாக சூரிய உலர் கருவிகள் அமைப்பதற்கு தேவை ஏற்பட்டுள்ளதை சமூகங்கள் முடிவு செய்தது. இன்னும் 100 உலர் கருவிகள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. சுமார் 20 விழுக்காடு செலவை உறுப்பினர்களே ஏற்றுக்கொண்டனர். சில பாிந்துரைக்கும் உதவி கிடைக்கும் நேரத்தில் செயல்பாட்டு செலவுகள் குழுவால் ஏற்கப்பட்டது.

‘நுட்ரிசோல்” என்ற பெயாில் (சூரிய வெப்பத்தால் உலர்த்துவதன் மூலம் சத்துக்கள் பாதுகாக்கப்படுகிறது) குழுவானது விற்பனையை துவக்கியது. உறுப்பினர்களுக்கு ஆரோக்கியமாக பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, தொழிலை பொியளவில் உருவாக்குவதற்கு முன்னேற்ற இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தக் குழு. முழுமையாக வருடத்திற்கு 8-9 மாதங்கள் இயக்குவதால் (சாகுபடி செய்யாத காலத்தில் தவிர்த்து) தொழிலில் 20-30 விழுக்காடு வருமானத்தை பெறுகின்றனர். இயக்கும் சாத்தியத்தன்மை பொருத்து ஈர்க்கக்கூடிய அளவிற்கு 1-3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தவது, விளைபொருள் வகையின் அடிப்படையில்தான் இருக்கிறது.

இயற்கை ஆதாரமான சூரிய ஆற்றலை பயன்படுத்தி, புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பது சாதகமாக இருப்பதால், செலவு பாதுகாக்கவும் உதவி செய்கிறது. எனினும், இந்த தொழிலில் சவால்கள் இல்லாமல் இல்லை. மழை காலங்களில் சூரிய உலர் கருவிகள் சாதாரணமாகவே இயக்கப்படுவதில்லை. ஏனென்றால் தேவையான அளவு காய்கறிகள் கிடைக்கிறது. உலர்த்தப்பட்ட காய்கறிகளுக்கான சந்தை பொியது. எனினும் இணைப்புகள் இன்னும் வளர்ச்சி அளவிலேயே இருக்கிறது. அதனால் தேவையையும், விற்பனையையும் உறுதிபடுத்துவது சவாலாக இருக்கிறது. இந்தத் தொழில் அளவிற்கு அதிகமாக பெறும் விளைபொருளையே பயன்படுத்தும் கோட்பாட்டின் வழியில் பணிசெய்கிறது. சில சமயங்களில் தேவை எழும்போது / மற்ற சிதைவுகளின்போது மாறி பசுமையான காய்கறிகள் விற்பனை பயன் தருகிறது. இதுபோல உதாரணங்களால், சூரிய உலர் கருவி தொழிலில் மூலப்பொருள் குறைபாட்டை சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது குறைந்த அளவு ஆர்டர்கள் மட்டுமே தற்போது கையாள முடிகிறது.

இவ்வாறு அனைத்து பாதங்களுடன், இந்த முயற்சி வறண்ட பகுதிக்கு சாியான தேர்வாக இருக்கிறது. தொடர்ந்து மூலப்பொருள் வினியோகமிருந்தால் , இந்த முயற்சி படர்ந்து பரவலாக இதன் தேவை அதிகாிக்கும். இந்த மாதிரி பரவலான தொழில் மாதிரிகள் பெண்களை சக்திவாய்ந்தவர்களாக உருவாக்கும் , கிராம பொருளாதாரம் திடமாக மாறும் மற்றும் சுற்றுச்சூழல் சாதகமான பங்களிக்கும்.

பெட்டிசெய்தி 1 சூரிய உலர் கருவியின் விபரங்கள்
தேவை மற்றும் சாத்தியமான இயக்கங்களை வினியோகிப்பதற்கு, 15 – 20 உலர் கருவிகளோடு ஒரு இயக்கும் மையத்தை துவக்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஒரு உலர் கருவிக்கு சுமார் 20 கிலோ ஈரப்பதத்தோடு உள்ளிடும் திறன் கொண்டதாகும் (2மீ X 2மீ அளவு). இந்தக் கருவிகள் ஒரு வருடத்திற்கு 8-9 மாதங்களுக்கு, தலா ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் உலர் கருவியை இயக்க வேண்டும்.

நன்கு உருவாக்கப்பட்ட சந்தையில் தோராயமான விளைபொருள் உலர்த்தும் செய்முறை கீழே கொடுக்கப்படுள்ளது.
1. காய்கறிகளான தக்காளி, பாகல், சுரைக்காய், வெள்ளரி, பூசணி போன்றவை ( உலர் விகிதாச்சாரம் 10 கிகி : 1கிகி, ஈரப்பதம் உள்ள காய்கறி கொள்ளளவு : 15கிகி /முறை)
2. காய்கறிகளான இஞ்சி, வெண்டை, மிளகாய் போன்றவை (உலர் விகிதாச்சாரம் 6 கிகி : 1கிகி, ஈரப்பதம் உள்ள காய்கறி கொள்ளளவு: 17-20 கிகி/முறை)
3. இலைகளான ஸ்பினாச், வேம்பு, துளசி, முருங்கைக்காய் போன்றவை (உலர் விகிதாச்சாரம் 5 கிகி : 1 கிகி, ஈரப்பதம் உள்ள காய்கறி கொள்ளளவு: 10கிகி/முறை )
4. முளைக்கட்டிய பச்சைபயறு மற்றும் நாிப்பயறு போன்றவை (உலர் விகிதாச்சாரம் 1.5 கிகி : 1கிகி, ஈரப்பதம் உள்ள காய்கறி கொள்ளளவு: 15கிகி/முறை)

ராகேஷ் கே வாரியர் மற்றும் மகேஷ் என் லேடி


Rakesh K Warrier
Chief Programme Executive
E-mail: rakeshkwarrier@baif.org.in

Mahesh N Lade
Sr. Project Officer
E-mail: maheshlade@baif.org.in
BAIF Development Research Foundation
BAIF Bhavan, Dr. Manibhai Desai Nagar
NH4, Warje, Pune – 411058

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...