சுய உதவியே சிறந்த உதவி – பொருளாதார மந்த நிலைக்கு எதிராக பழங்குடியின உழவர்கள் வலுவாக நிற்கின்றனர்.


மவ்வியாங் கிராமத்தில் உள்ளூர் பொருட்களை விற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சக்கரங்களில் பண்ணை என்னும் முயற்சி உழவர் குழுக்களுக்கு பல்வகையான உள்ளூர் சந்தையை பரவலாக்கப்பட்ட முறையில் அணுகுவதற்கு உதவியுள்ளது. இதனை மேற்கொள்ளும்போது இந்த முயற்சியானது  மற்ற உழவர் குழுக்களுக்கு உதாரணமாக மேகாலயாவில் உள்ள நெஸ்பேஸ் அமைப்போடு இணைந்து செயல்படுவது, அவர்கள் இந்த முயற்சியை கடைபிடிக்கவும், அவர்களின் பகுதிகளில் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் ஊக்கப்படுத்தியது.


உலகலாவிய பெருந்தொற்றால் இந்த உலகம் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் 19 உலகம் முழுவதும் பொருளாதார தடங்கல்களை, குறிப்பாக பொருளாதாரத்திற்கு தேவையான அடிப்படை மூலதனம் இல்லாதம் அல்லல்படும் சிறு உழவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அன்றாட சந்தைகள் மூடப்பட்டும், அல்லது அரசின் விதிமுறைகளினால் பாதியளவே இயங்கிய சந்தைகள் பலருக்கு மிகப்பொிய அளவிற்கு பொருளாதார கஷ்டங்களை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் இது தற்சார்புடைய பாரம்பாிய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்த சோதனையான நேரத்திலும் அவர்கள் புதிய வகையான கண்டுபிடிப்புகளின் மூலம் தீர்வுகளை கண்டறிந்து,சில்லாங்கில் தலைமையகமாக கொண்டு,வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயா பகுதிகளில் பாரம்பாிய உணவு முறைகளை பாதுகாத்தும், புதுப்பித்தும் அதனை காத்தும் வருகின்ற ஒரு தன்னார்வ அமைப்பான நெஸ்பாஸ் ( மெதுவான உணவு மற்றும் வேளாண் பன்மயத்திற்கான வடக்கு கிழக்கு அமைப்பு) உதவியோடு இந்த சிக்கல்களை சமாளித்துநின்றனர்.

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் நெஸ்பாஸ் அமைந்துள்ளது. தற்போது கிராமப்புற மின்மயமாக்கும் கழகத்தின் (ஆர்.இ.சி) பவுண்டேஷன் திட்டமான 3000 குடும்பங்களுக்கு உயிரினப் பன்மயம் என்பது உணவு, ஊட்டச்சத்து மற்றும் சக்தி உத்திரவாதம் , இதில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது” என்ற திட்டத்தில் நெஸ்பாஸ் மேகாலயா மற்றும் நாகலாந்தில் 130 கிராமங்களில் பணியாற்றி வருகிறது. தற்போது நெஸ்பாஸ் 3249 உழவர்களை ஈடுபடுத்தி பல்வேறு பணிகளை குறிப்பாக இடம் மாற்றிக் கொண்டே செய்யப்படும் வேளாண்மையில் ஈடுபடும் பழங்குடியின பெண் சிறு உழவர்கள் மத்தியில் செய்து வருகிறது. இதில் சில பர் நிரந்தரமாக ஒரு பகுதியில் குடியேறி செய்யும் வேளாண் முறைகளான நெல் மற்றும் சமதள பகுதியில் செய்யப்படும் சாகுடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உழவர்கள் தங்களின் முன்னோர்கள் கொடுத்துவிட்டு சென்ற உள்ளூர் விதைகளை வைத்துள்ளனர். உள்ளூர் விதைகள் மெதுவாக மறைந்து வருகின்ற நிலை இருந்தாலும், அவற்றை புதுப்பிப்பதற்கு சிறப்பு முயற்சிகளின் செயல்பாடுகளான விதை பாிமாற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் மற்றும் சமூக அளவில் விதை வங்கிகளை உருவாக்குதல் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாக இந்த உழவர்கள் தங்களின் விளைபொருட்களை வாராந்திர உள்ளூர் சந்தைகளில் விற்கின்றனர். சிலர் சிறிய அளவிலான பகுதியை வாடகைக்கு எடுத்தும், சிலர் தற்காலிகமான ஏற்பாடாக தரைப்பகுதிகளில் அமைத்தும் விற்கின்றனர். அவர்கள் தங்களிடம் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளும் வணிகர்களிடமும் விற்றுவருகின்றனர். இருப்பினும்,கோவிட் 19 ன் காரணமாக இந்த வகையில் விற்பது மிகவும் பாதிக்கப்பட்டது.

அன்றாட சந்தை வாய்ப்புகளுக்கு இருந்த தடங்கல்களுக்கும், அதனால் ஏற்பட்ட வாழ்வாதார சவால்களை சமாளிக்க உள்ளூர் தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டு, துவக்கப்பட்ட முயற்சிதான் “ சக்கரங்களில் பண்ணை என்பதாகும். சாியான காலக்கட்டத்தில் உழவர் குழுக்கள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோரிடம் விற்பதற்கான இந்த முயற்சி, அவர்களுக்கான நிலைத்த வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்ள உதவியது. உண்மையில் சொல்லப்போனால், இது உழவர் குழுக்கள் ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்து தங்களின் புதிதாக விளைந்த காய்கறிகளை வாரம் ஒரு முறையோ  அல்லது எப்போதெல்லாம் விளைபொருட்கள் தயாராக இருக்கின்றதோ அப்போதெல்லாம் விற்பதாகும். மேகாலயாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவிக்கிடக்கும் கிட்டத்தட்ட 200 உழவர்கள் / 30 குழுக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த உழவர்கள் வாடகைக்கு வாகனத்தை எடுப்பார்கள். இதுவரை ஒரு குழுவிடமும் சொந்த வாகனம் இல்லை ஆனால் எதிர்காலத்தில் அவர்களின் குழு சேமிப்பில் இருந்து வாங்குவதற்கான திட்டம் உள்ளது. உழவர்கள் சந்தை நாட்களை கொண்டு அதற்கு ஏற்றாற்போல் ஒரு திட்டத்தை உருவாக்குவார்கள். பொதுவாக சக்கரங்களில் பண்ணை என்பது வாரத்திற்கு இரண்டு முறை இயங்கும். ஒவ்வொரு குழுவில் இருந்து 1 அல்லது 2 உழவர்கள் வாகனத்தோடு வருவார்கள். இது செலவினங்களை குறைவதை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. நெஸ்பாஸ் இந்த உழவர் குழுக்களுக்கு துவக்குவதற்கான பொருட்கள், சிறிய மூலதன உதவி மற்றும் அவர்களுக்கு பதிவேடுகளை பராமாிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டது. உண்மையில் இந்த சிறு அளவிலான பாரம்பாிய உழவர்கள் பல்வகையான விளைபொருட்களை விளைவித்துவருகின்றனர். விற்கப்படும் பொருட்களில் சில காடுகளில் சேகாிக்கப்படுகின்றவையும் அடங்கும். விற்கப்படும் பொருட்களில் உண்ணக்கூடிய காட்டுப் பொருட்கள், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளும்,பருவத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பயறு வகைகளும் அடங்கும். நெஸ்பாஸ் அமைப்போடு தொடர்புடைய உழவர் குழுக்கள் சக்கரத்தில் பண்ணை என்ற அடித்தளத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நாட்களில் அவர்கள் உள்ளூர் சந்தையிலும் தங்களின் விளைபொருட்களை விற்கின்றனர். இந்த முயற்சியானது சமூக இடைவெளி கட்டுப்பாடுகளோடு வியாபாரம் இயங்குவதற்கு அனுமதிப்பதையும், சந்தையை நுகர்வோர் இடத்திற்கு கொண்டு செல்வதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இது உள்ளூர் உணவு உத்திரவாதத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்களின் உள்ளூர் பொருட்களை வாங்குவதையும், விற்பதையும் உறுதிப்படுத்துகிறது.

இருப்பினும், பெரும்பாலான சிறு விவசாயிகளிடம் அவர்கள் தேவைக்குப் போக உபாியாக உள்ள பொருட்களையே விற்பதால்,விற்கக்கூடிய பொருட்கள் குறைவான அளவிலேயே கிடைத்தது எதிர்கொண்ட சவாலாக இருந்தது. அனைவரிடமும் இருக்கும் பொருட்களை சேகாித்தபோதும், கிடைக்கும் பொருட்களின் அளவு மிகவும் குறைவாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர், எனவே சந்தைக்கு செல்லும் நாட்களையும் குறைத்துக் கொண்டனர்.

இதனை மேற்கொள்ளும்போது, இந்த முயற்சியானது மேகாலயாவில் நெஸ்பாஸ் அமைப்போடு தொடர்புடைய மற்ற உழவர் குழுக்களுக்கு இதனை பின்பற்றி அவர்களின் பகுதிகளில் இதனை எடுத்துச் செல்வதற்கு உதாரணமாக அமைந்தது. சக்கரங்களில் பண்ணை என்ற முயற்சியோடு சேர்த்து மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மலைப்பகுதிகளில் உள்ள சில குழுக்கள்,நகர்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான சங்கத்தின் (எஸ். யு. ஆர். இ) உதவியோடு உழவர்கள் மற்றும் நுகர்வோர் இடையே உள்ள இடைவெளியை இணைக்கும் வகையில் சைல்டு ( ாவவிள://ளலடடயன. உழஅ/ளவழசந) என்னும் தளத்தை அமைத்து காய்கறிகளை இணையதளத்தின் வழியாக விற்பதற்கு உதவியது. நெஸ்பாஸ் அமைப்பின் கூட்டாளி அரசு சாரா நிறுவனமான நகர்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான சங்கம் (எஸ். யு. ஆர். இ) உழவர்கள் மத்தியில் உள்ள இணையதள சைல்டு முயற்சியை ஒருங்கிணைத்தது. விளைபொருட்களின் இருப்பு குறித்த தகவல்களை நகர்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான சங்கம் சைல்டுக்கு அறிவிக்கும். இது உழவர்களிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கு உதவும். இந்த ஏற்பாட்டில் விற்கப்படும் விளைபொருட்கள் – பழங்கள் மற்றும் காய்கறிகள் சைல்டின் இணையதளத்தின் அறிவிக்கப்படும். இன்னும் விபரங்களுக்கு இணையதளத்தை காண்க. இந்த கூட்டுமுயற்சி பொருட்களை நகர்புற மற்றும் கிராமப்புற சமூகத்தில் உள்ள உறுப்பினர்களின் இல்லத்திற்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கு உதவியது. உழவர்களும் தற்போது ஆரோக்கியமான உள்ளூர் விளைபொருட்களை தங்களின் சமையலறை தோட்டங்கள் / வீட்டுத் தோட்டங்களில் விளைவிக்க கூடுதல் முயற்சி மேற்கொண்டு அதன் மூலம் உற்பத்தியை அதிகாிக்கவும் மற்றும் உள்ளூர் விதைகளை சமூகத்தில் உள்ள தேவைப்படும் உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

கரோ மலைப்பகுதிகளில், பழங்குடியின உழவர் குழுக்கள் தங்களின் சமூகங்களில் உள்ள உறுப்பினர்கள் மத்தியில் பல்வகையான சமையலறை தோட்டங்களின் தேவை குறித்து வலியுறுத்தி வருகின்றனர். கோவிட் 19 வைரஸ்க்கு எதிரான நமது போராட்டத்தில் நல்ல உடல் எதிர்ப்பு ஆற்றலை பெறவதற்கும், குடும்பத்தின் உணவு பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சுத்தமான, உள்ளூர் மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவு குறித்து அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவிட் 19, சில வழிகளில் உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு உள்ளூர் உணவின் சார்புத் தன்மையின் அவசியத்தை கோடிட்டு காட்டியுள்ளது. இது உள்ளூர் உழவர்களை தன்னிறைவையும் தற்சார்பையும் அடைவதை நோக்கி முயற்சி செய்வதற்கு மேம்படுத்தியுள்ளது. இப்படியாக பழங்குடியின உழவர்கள் பெரும்பாலும் எடுக்கும் முயற்சிகள் இன்றைக்கு அதிகப்படியான உற்பத்தியை மையப்படுத்தும் தொழிற்சார் வேளாண் உற்பத்தி முறையினால் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

ஜானக் பிரீட் சிங்


Janak Preet Singh
Senior Associate,Livelihoods NESFAS, Shillong.
E-mail: janak.nesfas@gmail.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...