சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்புப் பயிர் சாகுபடி – காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க


சிறுதானிய வேளாண் சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதன் மூலம் ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்கள் கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துள்ளனர். சிறுதானிய வேளாண் சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட கலப்புப் பயிர் முறையில் சமூகத்தில் மக்களிடையே நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறை பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.


ராயக்கட்டா மற்றும் கோரபுட் மாவட்டங்கள் ஒடிசா மாநிலத்தின் பின்தங்கிய காளஹாண்டி, போலன்கிர் மற்றும் கோரபுட் பகுதிக்கு கீழ் வருகின்றன. கால நிலை மாற்றத்தின் ஏற்ற இறக்கங்களினால் பிழைப்பிற்கான வேளாண்மையில் ஈடுபடும் வளம் குன்றிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறது. பருவநிலையில் ஏற்படும் மாற்றம், குறிப்பாக மழை பொழிவு முறைகள் மற்றும் வெப்பம் போன்றவை வேளாண் உற்த்தியை சீர்குலைத்து, வாழ்வாதாரத்தையும், உணவு உத்திரவாதத்தையும், வருமானத்தையும் மற்றும் பழங்குடி குடும்பங்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

பருவநிலை மாற்றங்களின் விளைவாக ஏற்படும் தாமதமாக நிகழும் மழைப்பொழிவு, தவறான நேரத்தில் பெய்யும் மழை, நீண்ட நாட்கள் மழையில்லாமல் காய்ச்சலாக இருப்பது மற்றும் போதுமான மழைப்பொழிவு கிடைக்காமை போன்றவற்றின் காரணமாக சாிவாக மேட்டுப்பகுதியில் உள்ள மானாவாரி நிலங்கள் பல வழிகளில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து நிலவும் வறட்சியான சூழல் மற்றும் தாமதமாக பெய்யும் மழை இவற்றின் காரணமாக நிலம் காய்ந்து போவதால் அதில் உழவு செய்வது மிகவும் கடினமாக இருக்கும். 2-3 நாட்களுக்கு கடுமையாக மழை பெய்யும் மேல் மண் அடித்துச் செல்வதோடு, விதைகளையும் அடித்து சென்றுவிடுவதால் பயிர் உற்பத்தி மிகவும் குறைந்துவிடுகிறது. மேலும் முன்னதாகவே பெய்யும் மழையும், தாமதமாக வரும் குளிர் காலமும் ராபி பயிர்களுக்கான சாத்தியக்கூறுகளை மிகவும் குறைந்து விடுகிறது. காடுகளின் பரப்பும் மற்றும் உரிய பருவ காலங்களில் விளையும் பழங்களான மா, பலா, பெர்ரி மற்றும் உண்ணக்கூடிய கிழங்கு வகைகளில் உற்பத்தியும் குறைந்து விடுகிறது. தானியங்கள் மற்றும் பருப்புவகைகளின் உற்பத்தி குறைந்துவிடுவதால் மக்கள் உண்ணக்கூடிய உணவுகளின் வகைகளும் குறைந்து விடுகிறது. அனைத்து காரணிகளும் ஒன்று சேர்ந்து மிகவும் பாதிக்கப்பட்ட பழங்குடி குடும்பங்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் அவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதராங்களும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

சிறுதானியங்களை அடிப்படையாக கொண்டு வேளாண் முறையை புதுப்பித்தல்:
இந்த பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் சிறுதானியங்களே பிரதான உணவாக இருந்த போதிலும் கடந்த 10 முதல் 15 வருடங்களில் அரிசியை உணவாக சாப்பிடும் பழக்கம் அதிகாித்து வந்துள்ளது. ஆனால், இன்றும் கூட பழைய தலைமுறை சேர்ந்த மக்கள் சில பாரம்பாிய ரகங்களான மண்டியா, சுவா, நகு, ஜனா மற்றும் குட்ஜீ போன்ற சிறுதானியங்களை விரும்புகின்றனர். பல்வேறு சமூக சேவை அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களில், சிறுதானியங்களுக்கு நீண்ட கால வறட்சியான சூழல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதில் நிறைய திறன் உள்ளது கண்டறியப்பட்டது. இதன் பின்னணியில், இண்டோ குளோபல் சமூக சேவை நிறுவனம் (ஐ.ஜீ.எஸ்.எஸ்.எஸ்) அதன் உள்ளூர் கூட்டாளி நிறுவனமான ஏக்தா மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நிறுவனத்தோடு இணைந்து சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறைகளை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன் முக்கியமான நோக்கம் என்பது கால நிலை மாற்றங்களின் தாக்கங்களை ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறைகளை ஊக்குவிப்பதாகும். 2013 ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தின் ராயக்கட்டா மற்றும் கோராபுட் மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2016 ஆம் ஆண்டில் மேலும் 12 கிராமங்கள் இந்த 2 மாவட்டங்களிலும் கூடுதலாக சேர்க்கப்பட்டது.

இந்த முயற்சியானது, லெட்சுமிபூர் வட்டத்தில் உள்ள பஞ்சடா கிராம் பஞ்சாயத்தின் 637 பராஜா பழங்குடி குடும்பங்களிலும், ராயகட்டா மாவட்டத்தில் உள்ள குடுலி மற்றும் கும்பகிகோட்டா கிராம் பஞ்சாயத்துக்களில் உள்ள 846 கந்தா பழங்குடி குடும்பங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த பழங்குடி குடும்பங்கள் மேட்டு நிலங்களில் நடைபெறும் வேளாண்மை மற்றும் உள்ளூர் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தையே பொிதும் நம்பியுள்ளனர். இங்குள்ள விவசாயிகளின் சராசாி நிலப்பரப்பானது 0.5 ஏக்கர் முதல் 1.5 ஏக்கர் வரையிலான சாிவான நிலப்பரப்பை கொண்டது. மானாவாரி வேளாண்மையையே பொிதும் நம்பியுள்ளதால் அது இந்த சமூகத்தை மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்கிறது.

மக்களை முன்னிறுத்து செய்யப்பட்ட இந்த அணுகுமுறையில், பாிசோதனைகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் அவற்றை செய்துபார்த்து பரவலாக்குவது என்பதே முக்கியமான வழிமுறையாக இருந்தது. துவக்க ஆண்டில், பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விவசாயிகள் கலப்பு பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கிழங்குகள் போன்ற பயிர்கள் காலநிலை மாற்றங்களை சமாளித்து வளரும் திறன் பெற்றதாலும், மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களின் தேவைகளை உறுதி செய்வதாலும், அவற்றை பயிரிடுவதற்கான வாய்ப்புகளை கண்டறிவதில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம செயல் குழுக்கள் அமைக்கப்பட்டன. பங்கேற்பு கிராம வள ஆதாரங்கள் குறித்த மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. பருவநிலை நாட்காட்டிகள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு பருவத்திலும் என்னென்ன பயிர்கள் பயிரிடப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டது. பாிசோதனைகள் மேற்கொள்ளவும், அவற்றை தங்கள் நிலங்களில் நடைமுறைப்படுத்தவும் தகுதி வாய்ந்த விவசாயிகள் (ஆண் மற்றும் பெண்) கிராம செயல் குழுக்களினால் கண்டறியப்பட்டது. 8 விவசாய குழுக்கள் மற்றும் 6 விதைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

கிராம செயல் குழுக்கள், விவசாயிகள் குழுக்கள் மற்றும் விதை குழுக்கள் போன்ற பல்வேறு குழுக்களுக்கு இடையே அனுபவங்களையும், அறிவையும் பாிமாறிக் கொள்வதற்காக குறுக்கு கற்றல் அமர்வுகள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக, விதைக் குழுக்கள் திட்டத்தில் கிடைத்த உதவியின் வாயிலாக 14 வகையான சிறுதானியங்கள், 3 விதமான பயறுவகை பயிர்கள் மற்றும் 2 வகையான சோளம் போன்றவற்றின் விதைகள் வழங்கப்பட்டன. இந்த விதைகள் 2014 ஆம் ஆண்டு செயல்முறை விளக்கங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

கிராம செயல் குழுக்களினால் விதை பெருக்கம், மட்கு உரம் தயாரித்தல், மூலிகை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, விதை சேகாிப்பு போன்ற அறிவுப் பகிர்வு திட்டங்கள் இளம் விவசாயிகளை வேளாண்மையின் பக்கம் கவர்வதற்காக நடத்தப்பட்டது. விவசாயிகளின் குழுக்கள் இயற்கை பூச்சிக் கொல்லிகள் மற்றும் மட்குஉர தயாரிப்பு குழிகள் போன்றவற்றை அவர்களின் வீட்டை சுற்றி கிடைக்கும் வேளாண் கழிவுகளை கொண்டு தயாரித்தனர்.

2016 ஆம் ஆண்டில் சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்பு பயிர் சாகுபடி முறையானது 407 விவசாயிகளின் 148 ஏக்கருக்கு விரிவுபடுத்தப்பட்டது. பல்வேறு பயிர்களின் உற்பத்தியானது 718 குவிண்டால் என்னும் அளவிற்கு, கிட்டத்தட்ட 180 கிலோ கிராம் உணவுப் பொருட்களானது, தானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகள் (பெட்டி செய்தி 1) போன்றவற்றை உள்ளடக்கி விளைந்தது. இது அவர்களின் உணவுத் தேவையை 3 முதல் 4 மாதங்களுக்கு போதுமானதாக இருந்தது. அவர்களின் உணவு முறையில் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, சர்க்கரை சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் இவற்றை உள்ளடக்கியிருந்தது.

விளைவிக்கப்பட்ட பெரும்பாலான சிறுதானியங்கள் குடும்ப அளவில் நுகரப்பட்டது. சிறுதானியங்கள் அரிசியாகவும், கலியாகவும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு சமைக்கப்பட்டது. திணை மற்றும் கம்பு போன்ற சிறுதானியங்கள் உப்புமாவாக செய்து உண்ணப்பட்டது. கேழ்வரகு கூழாகவும், சோளம் மாவாகவும், கேழ்வரகுடன் சேர்த்து உண்ணப்பட்டது. சிறுதானியங்கள் குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அவர்களின் பண தேவைக்காக விற்பனையும் செய்யப்பட்டது. சாியான சந்தை வசதிகள் இல்லாத காரணத்தால், உள்ளூர் வியாபாரிகளிடம் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் சற்று குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று.

பெண்களும், விதை பாதுகாப்பும்

பருவகால மாற்றங்களை சமாளித்து வளரும் உள்ளூர் ரகங்களின் விதைகளை சேகாிப்பதில், பாதுகாப்பதில் மற்றும் சேமித்து வைப்பதில் பெண் விவசாயிகள் முக்கிய பங்களித்தனர். லெட்ரிகுடா, திமாிகுடா, நிராிகுடா, ஹொடிகேந்தரா, படா, மனதாரா, மன்டங்கி, தர்னா, மினியக்கா, மற்றும் குருமுன்டாவை சேர்ந்த விதை குழுக்களின் உறுப்பினர்கள் சிறுதானியங்கள், பயறுவகைகள், மற்றும் காய்கறி போன்றவற்றில் 34 வகையான பாரம்பாிய ரகங்களை பாதுகாத்து வைத்தனர் (பெட்டி செய்தி 2) . சேகாிக்கப்பட்ட தரமான விதைகள் மண்பானைகளிலும், பிளாஸ்டிக் குடுவைகளிலும் பாதுகாத்து வைக்கப்பட்டன. விதைகள் முறையாக காயவைக்கப்பட்டு, உள்ளூரில் கிடைக்கும், பெரும்பாலும் பென்குனியா மற்றும் வேம்பு இலைகளை பயன்படுத்த பாதுகாத்து வைக்கப்பட்டன. விதை வங்கிகள் இருக்கும் இடங்கள் கிராமத்திற்கு கிராமம் அவற்றின் தேவையைப் பொருத்தும் பாதுகாப்பான மற்றும் ஈரம் படாத உலர்ந்த சூழ்நிலைகளில் வைக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்களும் அவர்களால் அங்கு பராமாிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆவணங்கள் சேகாிக்கப்பட்ட ரகங்கள், வினியோகம் செய்யப்பட்ட விபரம் மற்றும் அவற்றின் பங்களிப்பு போன்றவற்றை விளக்கும் வகையில் பராமாிக்கப்பட்டது.

நிலைத்ததன்மை மற்றும் மேலும் உயர்த்துவது.
2014 ஆம் ஆண்டு இந்த முயற்சியானது 45 விவசாயிகளுடன் 11 ஏக்கர் நிலத்தில் துவங்கியது. அதன் பிறகு நிறைய விவசாயிகள் இதில் சேர ஆரம்பித்தனர். 2016 ஆம் ஆண்டு, சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட கலப்புப் பயிர் சாகுபடியானது 148 ஏக்கர் பரப்பில் 407 விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த வருடம் (2017 ஆம் ஆண்டு ) 456 விவசாயிகள் 18 கிராமங்களில் 156 ஏக்கா; பரப்பளவில் சிறுதானியங்களுடன் பல்வேறு பயறுவகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை பயிரிட்டிருந்தனர். இது அவர்களின் பழமையான வேளாண் மற்றும் உணவு உற்பத்தி முறைகளை திரும்பி நடைமுறைக்கு கொண்டு வந்ததிலும், அதிலிருந்து தற்போதைய தேவையை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்ளும் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கான அறிகுறியாகும். இப்போது இந்த பழங்குடியின குடும்பங்கள் இடுபொருட்களுக்காகவும், பணத்திற்காகவும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்வதில்லை. லெட்ரிகுடாவைச் சேர்ந்த சீதா சுண்டா மற்றும் சாலி சுண்டா அவர்கள் கூறும்போது ”சிறுதானிய வேளாண்மைக்கு பணம் தேவைப்படுவதில்லை. அவற்றிற்கு இரசாயனங்களும் மற்றும் விதைகளும் கடனாக வேண்டியதில்லை. சிறுதானியங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் ஞானம் சிறுவர்களிடம் கூட அதிகமாக உள்ளது”. அதேபோல், நிரனிகுடா கிராமத்தை சேர்ந்த அஸ்டாஜனி என்னும் பெண் விவசாயி சொல்லும் ” பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வீட்டில் இல்லாத சமயங்களில், சிறுதானியங்கள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் மற்றும் காடுகளில் இருந்து கிடைக்கும் உணவுகள் எங்களை காப்பாற்றுகின்றன”.

சிறுதானியங்களின் மாறிவரும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனும், அதில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பும், ஒதுக்கப்பட்ட விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இந்த பாரம்பாிய மற்றும் உள்ளூர் ரக சிறுதானியங்களை விதை வங்கிகள் மூலம் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுப்பதே எதிர்கால குறிக்கோளாகும்.

பெட்டிச் செய்தி 1

நிரனிகுடா கிராம செயல் குழுவின் உறுப்பினர்கள் 20 ஹெக்டர் மேட்டு நிலப்பரப்பை பாதிப்புகள் குறித்து ஆய்வின் போது கண்டறிந்தனர். கிட்டத்தட்ட 11 நிலமற்ற ஏழை பழங்குடியின குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 100 வீதம் கிராம குழுவிடம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு வேளாண் பணிகளை துவக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். நில மேம்பாட்டு பணிகளுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் உதவியும் கூடுதலாக பெறப்பட்டது. கிட்டத்தட்ட 4000 முந்திரி மரக்கன்றகள் வளர்க்கப்பட்டு மேட்டு பகுதியல் உள்ள கைவிடப்பட்ட 5 ஹெக்டர் நிலங்களில் நடப்பட்டது. சிறுதானிய சாகுபடியில் ஊடுபயிர்களாக் காய்கறிகளும், வரப்புகளில் கிழங்கு வகைகளும் பயிரிடப்பட்டது. குழு உறுப்பினா;கள் தங்களின் வேளாண் நிலங்களுக்கு 2 கி.மீ தொலைவில் இருந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும் நீரோடையை மடைமாற்றி நீரை கொண்டு வர உதவினர். தற்போது அவர்கள் நெல், சிறுதானியம், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் மற்றும் வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களை பயிர் செய்து வருகின்றனர். இது ஒரு சிறிய முயற்சியாக இருந்தபோதிலும், இதேபோல் சமூக மற்றும் கலாச்சார வேளாண் பருவநிலை நிலவும் பகுதிகளில் தங்களின் வாழ்வாதார மற்றும் உணவு உத்திரவாத பிரச்சனைகளை தீர்க்க விரும்பும் மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

அட்டவணை 1:
பல்வேறு சாிவான நிலங்களில் பயிரிடப்பட்ட கலப்பு சிறுதானிய பயிர்களின் வகைகள்

 
பயிர் ஏக்கர் விவசாயிகள்  உற்பத்தி (குவிண்டாலில்)
சோளம் – கம்பு – மக்காச் சோளம் 24 68 284
சாமை – துவரை 18 64 178
சாமை – எண்ணை வித்துக்கள் 16 44 68
கேழ்வரகு /தட்டைப்பயிறு/ சோளம் 22 45 57
சாமை – உளுந்து – பச்சைப் பயிறு – காய்கறிகள் 58 186 718
மொத்தம் 138 407 718

 

 

 

 

 

 

 

 

அட்டவணை 2:

சேமிக்கப்பட்ட விதைகளின் வகைகள்

சிறுதானியத்தின் பெயர்  பயிரிடப்பட்ட காலம் அறுவடை செய்யப்பட்ட காலம் விதை வங்கி உறுப்பினர்களிடம்; உள்ள விதைகள்
சாமை/குதிரைவால மே கடைசி வாரம் நவம்பர்  ஹோருகோடா, ஜிஞ்சாிகோடா, முன்யாகோடா, கோட்டுருகோடா,
ஜோருடோட்டி,
டெயகோடா
திணை  ஜுன் நவம்பர் டெயஆர்கா(சிறியது) மற்றும் கஜா ஆர்கா(பொியது)
வெள்ளைச் சோளம் ஜுன் டிசம்பர் தசரா, ஜன்கா, டெயஜன்கா, டெப்ளஜன்கா மற்றும் பார்டிஜன்கா (பொியது)
 கேழ்வரகு/
மாண்டியா
ஜுன் செப்டம்பர்/
நவம்பர்
  (3 மாதங்கள்) ஹிகிரிடொயா, கும்டடெயா, தசராமுடு, மஞ்சி, பலு தேயா, கோர்கடிதேயா, கோடைகோடி, டிப்கா
(6 மாதங்கள்) ஜன்பு, மோடோய்முஷ்கோரி, கங்காரா, சோனாடெய், காரா, கோடுரு, கிரெங்கா
கம்பு ஜுன் நவம்பா; குயா/ஜென்டியா
கூடுஜி ஜுன் நவம்பா; கூடுஜி

நன்றிகள்:
இந்த திட்டம் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் கொடுத்துதவிய திரு. அமித் குமார் நாயக் மற்றும் பிஷ்வாம்பர் சாகு மற்றும் விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் மிகவும் நன்றிக்குரியவர்கள்.

கிருஷ்ண சந்திர சாகு


Krushna Chandra Sahu
Head, Livelihood-Programmes
Indo-Global Social Service Society
28 Institutional Area, Lodhi Road, New Delhi
E-mail: sahu@igsss.net

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2017, வால்யூம் 19, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...