சிறிய வன பொருட்களின் மதிப்பு கூட்டுதல் – பழங்குடியின சமூக அங்கீகாரத்திற்கு சாத்தியமான கருவி


சிறிய வன பொருட்களின் மதிப்பு கூட்டுதல் என்பது மறைந்திருக்கும் திறன் மற்றும் வன விளைபொருட்களின் மதிப்பு ஆகியவை பயன்படுத்தும் சிறந்த வழி. இந்த சமூகத்தின் சமுதாய மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை உயர்த்தலாம். அடிமட்ட உதவியோடு அரசு உதவியும் கைகோர்த்து கொண்டு, பழங்குடியின மற்றும் நலிவடைந்த சமூகத்திற்கு வாழ்வாதார வாய்ப்புகளையும் சிறப்பான நிலையையும் உருவாக்குவதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும்.


வயநாட், அதிகளவு பழங்குடியின மக்கள் வாழும் மாவட்டம். இங்கு 12 பழங்குடியின சமூகங்கள், வாழ்வாதார பாரம்பாியங்கள், பேச்சுவழக்கு, கலாச்சார தொழில்நுட்பங்கள் மற்றும் சமுதாய-பொருளாதார இணைப்புகள் போன்ற குறிப்பிட்ட பல்வகைமையோடு வாழுமிடமாகும். பழங்குடியின பொருளாதார சிறப்புகளை அடிப்படையாக வைத்து, ஆதிவாசிகள் பல்வேறு குழுக்களாக பிரித்துள்ளனர். இதில் வனம் சார்ந்த சமூகம் இங்கு முதன்மையாக ஆக்கிரமிப்பு பெற்றுள்ளது. ஆய்வு காலங்கள் செல்ல செல்ல வனம் சார்ந்த சமூகங்கள் முக்கிய வாழ்விற்கான சவால்களான வானிலை ஏற்றத்தாழ்வுகள், வன விளைபொருட்களை பயன்படுத்துவதில் கட்டுபாடு குறைந்த விற்பனை விலை மற்றும் வன விளைபொருளை பிரித்தெடுத்து, சேகாிப்பதில், அதிக ஆபத்தை சந்தித்து வருகின்றனர். வனம் சார்ந்த சமூகங்களின் வருமானம் ஈட்டும் அனைத்து காரணிகளும் பெருமளவு குறைக்கப்பட்டது.

சிறிய வன விளைபொருட்கள் மனிதரால் சேகாிக்கப்படுவது சவாலான ஒன்று. மேலும் இதை பதப்படுத்தவில்லை என்றால் மிககுறைவான வருமானமே அளிக்கிறது. இவர்களுடைய மனதும், கைகளும் சேகாிப்பதற்கு பயன்படுத்தப்படும் முதன்மை பணம் போன்றது. இதன் சேவைகள் கீழ்மட்டமாக கருதப்படுகிறது, ஏனெனில் விற்பனை விலை மிக குறைவாக மதிப்பிடப்படுகிறது. சாியான எடையை அளப்பதில்லை, இடைத்தரகர்களுக்கு தரகு அளித்தல், சில விளைபொருட்களுக்கு வைப்புநாட்கள் குறைவாக இருப்பது, பயிர் பட்டத்தின்போது தேவைக்கு அதிகமாக வைப்பு இருத்தல், சேமித்து வைத்திருக்கும் வசதிகள் குறைவாக இருப்பது, விற்பனை மற்றும் விளைபொருட்களின் பொட்டலம் போடுவது போன்ற உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான பணம் இல்லாததேயாகும். ஆதிவாசிகள் தாங்கள் சேகாித்த விளைபொருட்கள் சீக்கிரம் அழியக்கூடியத்தன்மை என்பதால் தங்கள் விளைபொருட்கள் சந்தையில் அதிகமதிப்பு கிடைப்பதற்கு பதிலாக குறைந்த விலையிலேயே விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்களின் நிலை வறுமையாகவே இருக்கிறது.

ஒரு முயற்சி
சீயம்பம் 73 குடியேற்றம், கேரளாவில் வயநாட் மாவட்டம் பூத்தாடி கிராம பஞ்சாயத்தில் இருக்கிறது. இந்த குடியேறிய இடம் அரசுக்கு சொந்தமான தோப்புகள், பின்னர், பனியன், காட்டுநாயக்கம் மற்றும் முள்ளுக்ருமா சமூகத்தை சேர்ந்த 302 நிலமற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. வனம் சார்ந்த சமூகமாக இருப்பதால், காட்டுநாயக்கன் சமூகக் குடும்பங்கள், உள்ளூரில் சிறிய வன விளைபொருட்களை சேகாிப்பதையே நம்பியிருக்கின்றனர்.பாரம்பாியமாக வனம் சார்ந்த சமூகங்களாக இல்லையென்றாலும், பழங்குடியினர் குடியேறிய மக்களின் அணுகுமுறை நிலையினாலும், இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தினால், மற்ற இரண்டு சமூகங்களும் சிறிய வன விளைபொருட்கள் சேகாிப்பதை நம்பியே வாழ்வாதாரம் இருக்கிறது. 302 குடும்பங்களில், 53 குடும்பங்கள் வீட்டு உபயோகத்திற்கும், வாழ்வாதாரமாக ஏற்கவும், சிறிய வன பொருட்களையே நம்பியுள்ளனர். சிறிய வன பொருட்களை சேகாிக்கும் மாதங்களின்போது,அவர்களின் மாத வருமானம் இந்த சிறிய வன பொருட்களிலிருந்து 90 சதவிகிதத்திற்கு மேலாக இருக்கிறது. அதிக வருமானம் பெறுவதற்கு,சிறிய வன பொருட்களில் மதிப்பு கூட்டுதல் தேவையும், அதிக ஆற்றலும் இருப்பதாக முதன்மை தரவிலேயே வெளிப்படுத்துகிறது.

சமூக வேளாண் உயிர் பல்வகைமை மையம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், வயநாட், கேரளா சிறிய வன பொருட்களை, மதிப்பு கூட்டுதல் முயற்சியை துவக்கினர். முறையான சந்தை இணைப்புகள் இல்லாத காரணத்தால், இழப்புகளை குறைப்பது மட்டுமல்ல, இடைத்தரகர்;களை தடுத்து விளைபொருட்களுக்கு நல்ல விலையை உறுதிபடுத்தலாம். சிறிய வன பொருட்களை மதிப்பு கூட்டி அதனுடைய வாழ்நாள் அதிகாிக்க செய்து, இதனை வெறும் சேகாிப்பாக மட்டுமில்லாமல் வாழ்வாதார வாய்ப்பாக மாறிவிட்டது. இந்த முயற்சி நபார்ட் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, இந்திய அரசு, இணைந்து செயல்படுத்துவதற்கு உதவி செய்தது.

2018 ஆம் வருடத்திலிருந்து தொடர்ந்து கள ஆய்வுகள் மற்றும் பயிற்சிகள், மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறு வன பொருட்கள் சேகாித்து, மதிப்பு கூட்டுதல் குறித்த வெற்றிடங்கள் மற்றும் பிரச்சனைகளை கண்டுபிடித்து, பல்வேறு பிரிவுகளாக பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில், சிறு வன பொருட்கள் குறித்த அறிவு அடிப்படையிலான பயிற்சி, இரண்டாவது மதிப்பு கூட்டுதல் குறித்த செயல்விளக்கம் அடிப்படையிலான பயிற்சி (செய்து பார்த்து கற்றுகொள்ளுதல்) மற்றும் இறுதியாக உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த பயிற்சி.

பழங்குடியின சமூகத்திலிருந்து 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பங்கேற்கும் வனாமிகா என்ற சுய உதவிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. மதிப்பு கூட்டுதலில் பல்வேறு தலைப்புகளான, விளைபொருட்களில் அதிகபட்ச சத்துக்களை உறுதிபடுத்துவது, பாதுகாக்கும் இரசாயனங்கள் மற்றும் கலப்படம் ஆகியவை பயன்படுத்துவதை குறைப்பது, உணவு பதப்படுத்துதல் மற்றும் பருவக்காலத்தில் கிடைக்கும், புதிய காய்கறிகளை மதிப்புகூட்ட செய்வதில் பயிற்சியளிக்கப்பட்டது. வீட்டின் ஊட்டச்சத்துக்களுக்கு உத்திரவாதம் அளித்தல், வருமானம் உருவாக்குதல் ஆகிய இரண்டு கூறுகளில் மையமாக வைத்து பயிற்சியளிக்கப்பட்டது. எனினும் நமது பார்வை அதிகமாக சிறு வன பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றின் மேல் மட்டுமே இருந்தது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதலின் தேவையை செயல்படுத்துவதற்கு, ஒரு கலனை, குறைந்த பட்ஜெட்டில் துவக்கப்பட்டது. சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, மதிப்பு கூட்டுதல் என்பது கூடுதல் வருமானம் ஈட்டும் செயலாக இருப்பதால், தொடர்ந்து வருமானம் ஈட்டும் ஆதாரமாக உறுதிபடுத்துவது சாத்தியமில்லை. ஆனால் தொடர்ந்து பணி கொடுக்கும் செயலாக மதிப்பு கூட்டும் பொருட்களை மாற்றமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பப்பாளி, இஞ்சி, பலாப்பழம் மற்றும் காப்பியை, குழுவாக தற்போது மதிப்பு கூட்டுதல் செய்துவருகின்றனர். இது பருவக்காலம் இல்லாதபோதும் கலனை நிலைக்க செய்து, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குழுவால் மதிப்பு கூட்டுபொருட்களை உருவாக்கி விற்பனை செய்யப்பட்ட விவரங்களை அட்டவணை 1 இல் அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு அப்பாற்பட்டு, வல்லுநர்களால் விற்பனை செய்வதற்கு உதவியளிக்கப்படுகிறது. இந்த துறையிலுள்ள விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே பொியளவில் மதிப்பு கூட்டுதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களோடு தொடர்பு ஏற்படுத்தித்கொள்வது. இந்த தொடர்பு பழங்குடியின சமூகத்திற்கு மூலப்பொருட்களை விற்பனை செய்வதில் உதவியாக இருக்கிறது. தற்போது சுய உதவிக் குழு, இரண்டு முக்கிய விற்பனை அணுகுமுறையை பின்பற்றுகிறது. அவை 1. நேரடியாக பொருட்களை விற்பனை செய்வது. 2. மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் பல்வேறு இயற்கை அங்காடிகள் / இயற்கை பொருட்களின் அங்காடிகளை பயன்படுத்துவதேயாகும். மொட்டுவிடும் பருவம் போன்ற நிலையில் இருக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு, வரும் வருடங்களில் அதிக வெற்றி பெரும்.

தாக்கம்
இந்த முயற்சி புதிதாக இருப்பதால், குடும்ப அளவில் பொருட்களின் தாக்கத்தை கண்டுபிடிப்பதற்கு கடினமாக உள்ளது. எனினும் தற்போது வரை ஆய்வு செய்த அடிப்படையில், காட்டு வில்வேர் தூள் ஒப்பிடுகையில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இது ஏனென்றால் கலப்படமில்லாத காட்டு வில்வேர் தூள் சந்தையில் கிடைப்பது அரிது. ஆனால் இங்கு குறைபாடு என்று சொன்னால் பதப்படுத்துதலில் சார்ந்து இருக்கிறது. இந்த விளைபொருளுக்கு அதிக தேவையிருந்தாலும், பாரம்பாிய பதப்படுத்துதல் முறையானது அதிக நேரம் எடுப்பதால், உற்பத்தி மிகக் குறைவாக இருக்கிறது. காட்டு வில்வேர் வனத்தில் அதிகம் கிடைக்கிறது, ஆனால் இதன் மூலப்பொருள் குறைந்த விலையில் விற்கப்படுவதால், மக்கள் இதனை சேகாிப்பதற்கு உதாசீனம் செய்கின்றனர். ஆனால் இப்பொழுது, பதப்படுத்தும் கருவியிருப்பதால், பதப்படுத்துவது சுலபமாகிவிட்டது சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகிறது. மேலும் இந்த சமூகத்தின் உழைப்பும் குறையும். சென்ற வருடம் 20 கிலோ பதப்படுத்தபட்ட வில்வேர், ஒரு கிலோ ரூ.1500 க்கு விற்கப்பட்டது. மொத்தத்தில், சென்ற வருடம் சிறு வன பொருட்கள் அடிப்படையிலான மதிப்பு கூட்டிய பொருட்களை விற்றதில் சுமார் ஒரு இலட்சம் இலாபம் கிடைத்துள்ளது.

மதிப்பு கூட்டுதல் முயற்சி, குழுவாக உருவாக்கியதன் மூலம் பழங்குடியின பெண்களின் நிதி கூடுதலாக கிடைத்துள்ளது. மேலும் இணைந்து முயற்சியினால் சமூகத்தின் சமுதாய மற்றும் பொருளாதாரம் திடமாக உயர்ந்துள்ளது. புதிய செயல்பாடுகளின் முயற்சிகள் சமுதாயத்திலிருந்து சிறிய வன பொருட்களை வாங்குவது, மூலப்பொருள் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்கள் விற்பதற்கு வழிநடத்துதல் மூலம் உதவி செய்தல்.மேலும் தொழில் முனைவோர் திறன்கள் உறுப்பினர்கள் மத்தியில் உயர்ந்து, சமூகத்தில் குழு உறுப்பினர்களின் சுய மாியாதையும் உயரும். இதனால் இவர்கள் தங்களின் சொந்த திடம் மற்றும் திறன்களை உணர்ந்து தனக்குதானே வாழ்வாதார வாய்ப்புகளை வளர்த்து, ஒட்டுமொத்த சமூகமும் வளர்கிறது. மையத்தின் பல்வேறு பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு செயல்பாடுகள் மூலம், திறன் மற்றும் அறிவை அடைந்த பின்னர், அவர்களின் அனுபவத்தோடு தொழில்நுட்பமும் சேர்ந்து திறமையான பணியாளர்களாகவும், சக்தியோடு உருவாயினர்.

கோவிட் பரவலோடு, கூலியாட்கள் பழங்குடியின வாழிடத்திற்கு அதிகமாக இடம்பெயர்ந்த மிக மோசமான நிலையில், வனாமல்லிகா சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நல்ல முறையில் வருமானம் ஈட்டமுடிந்தது. மதிப்பு கூட்டுபொருட்களை உற்பத்தி செய்து, விற்பனையை தின கூலி அடிப்படையில் ஒரு நபருக்கு ரூ.600 அளிக்கப்பட்டது. உணவு திருவிழா போன்ற பல்வேறு மேடைகளில் ஊட்டச்சத்துகள் நிறைந்த மதிப்புக் கூட்டுபொருட்கள் குறித்து சுய உதவிக் குழு செயல்விளக்கம் அளித்ததன் மூலம் நுகர்வோர் விழிப்புணர்வு அதிகளவில் பரவியது. மேலும் இந்த பொருட்கள் வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை பொருட்கள் , இயற்கையாக மற்றும் வீட்டிற்கு அருகில் கிடைக்கும் என்பதால், மதிப்பு கூட்டு பொருட்கள் நுகர்வோர் உண்பதற்கு பாதுகாப்பான ஒன்று என வனாமல்லிகா குழுக்கள்  உறுதிபடுத்துகின்றனர்.

சவால்கள் மற்றும் எதிர்கால முயற்சி
கோவிட் காரணத்தால் மீண்டும் கட்டுபாடுகள் விதித்த நிலையில் முன்னெப்பொழுதும் இல்லாதவகையில் பெரும் பிரச்சனைகள் மதிப்பு கூட்டுதல் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கோவிட் தாக்கத்தால் மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிப்பதற்கு மூலப்பொருட்கள் கிடைப்பது கடினமாக இருந்தது. மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பெரும்பாலான பொருட்கள், பருவக்கால சிறு வன பொருட்களாகும் . குறிப்பாக. காட்டு வில்வேர், காட்டுநெல்லி, காட்டுதேன், காட்டு மாங்காய், பலாபழ விதை போன்றவை பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும். மூலப்பொருட்கள் இயற்கையாகவே விரைவாக அழுகும் பண்புகொண்டது. மூலப்பொருட்கள் தங்கள் வாழ்விடத்திற்குள், சுலபமாக கிடைக்கும்போது, மட்டுமே மதிப்பு கூட்டுதல் இலாபகரமாக இருக்கும். இவற்றால்தான் கலன் செயல்பாடு நிலைத்தத்தன்மையை  தீர்மானிக்கிறது.

சேமிப்பு வசதிகள் போதுமானாதாக இல்லை, குறைந்த தரமுடைய பொட்டலம் (சாியானதாக பொட்டலம் இல்லாமல் இருந்தால், வாழ்நாள் மற்றும் நுகர்வோரின் ஈர்ப்பு குறைந்துவிடும்), விளம்பரம் போன்ற விற்பனை அணுகுமுறைகள் இல்லையென்றால், சந்தையில் நிலைத்தத்தன்மையை குறைக்கும் பல்வேறு காரணிகளாகும். மேலும், கோவிட் சூழ்நிலையும் பொருட்களின் பல்வேறு விநியோக சங்கிலிகள் அழிக்கப்பட்டது. இந்த சமயத்தில் இந்தப் பிரச்சனையை புரிந்துகொள்ளுதல் கடினமாக உள்ளது.
குழு அளவில் மற்றொரு சவால் என்னவென்றால், பழங்குடியின சமூகத்தினால் நிலையற்ற அறுவடையின் காரணமாக சில சிறு வன பொருட்கள் கிடைப்பது குறைந்து வருகிறது. ஆதிவாசி சமூகம் பாரம்பாியமாக பின் தங்கிய சமூகம். மேலும் சமூகத்தில் குழு உறுப்பினர்களிடம் நம்பகத்தன்மை இல்லாததாலும், தொழில்முறையில் அனைத்து செயல்பாடுகள் செயல்படுத்துவது கடினம். இந்தப் பிரச்சனைகள் உற்பத்தியிலிருந்து விநியோகம் வரை அனைத்து பதப்படுத்தும் முறைகளும் பாதிக்கும். குழு உறுப்பினர்களை பல்வேறு வகையான பொருட்களின் வளர்ச்சி மற்றும் விநியோகம் குறித்து வலுபடுத்துவதற்கு, துவக்கத்தில் வெளிப்புற உதவிகள் அவசியம் என்று முக்கியமாக கவனிக்க வேண்டும். அடிமட்ட அமைப்புகளோடு கைகோர்த்து கொண்டு, அரசு உதவிகள் ஆகியவை பழங்குடியின மற்றும் பின் தங்கிய சமூகங்களுக்கு சிறந்த வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்குவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

அட்டவணை 1: வனாமல்லிகா சுய உதவிக்குழுவால் தயாரிக்கப்பட்ட சிறு வன பொருட்களின் மதிப்பு கூட்டுபொருளின் விவரம்

வ.எண் சிறு வன பொருட்கள்  மதிப்புக்கூட்டுபொருட்கள்
1 காட்டுநெல்லி ஊறுகாய், தேனுடன் நெல்லி, நெல்லி மிட்டாய், உலர்ந்த நெல்லி, நெல்லி தூள், மருத்துவத்திற்காக பயன்படும் நெல்லி விதை
2 தேன் பதப்படுத்தப்படும் தேன் (சூடேற்றுதல், வடிக்கட்டுதல், மற்றும் இரட்டை கொதி முறைகள்).
3 பலாப் பழம் பாயாசம், பலா வரட்டி, பலா பிரியாணி, பலா வருவல், பலா சமோசா, பலா விதை தூள்
4 இஞ்சி உலர்ந்த இஞ்சி, இஞ்சி தூள், இஞ்சி காப்பி
5 கிழங்கு கிழங்கு மிக்ஸ்சர்
6 கறிவேப்பில்லை கறிவேப்பிலை தூள்,கறிவேப்பிலை புளி கலப்பு தூள்
7 முருங்கை முருங்கை இலை தூள்

 

 

 

 

 

 

 

 

 

அர்ச்சனா பட் மற்றும் விபின் தாஸ்


Archana Bhatt
Scientist, Community Agrobiodiversity Centre
MSSRF, Wayanad, Kerala
E-mail: archanabhatt1991@gmail.com


Vipindas
Development Associate
Community Agrobiodiversity Centre
MSSRF, Wayanad, Kerala

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2021, வால்யூம் 23, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...