சாகுபடி செய்யப்படாத உணவுகள் – மறைந்திருக்கும் பொக்கிஷம்


காடுகளிலிருந்து கிடைக்கும் சாகுபடி செய்யப்படாத உணவுகளின் பங்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஹாியா பழங்குடியின மக்களின் உணவு பழக்கங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதுகாத்தல், சேமித்தல் மற்றும் சாகுபடி செய்யப்படாத உணவுகளை பதப்படுத்துதல் போன்ற முயற்சிகள், இவர்களின் பழைய நிலையை அடைவதற்கு உதவியது, சமூகத்தின் உணவு பழங்களில் பல்வகைமை விரிவடைகிறது. மேலும் பட்டினி மற்றும் சத்துகுறைபாடு ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.


அது ஜனவரி மாதம் காலை பொழுது, மலைப்பகுதியை சூழ்ந்துள்ள பனி மூட்டம் சிறிது சிறிதாக மறைய தொடங்கி சூரியனின் வெளிச்சம் ஊடுருவியது. நான் மலையடிவாரத்தில் உள்ள சந்தல் கிராமத்தை கடந்து,ஜார்கண்ட் மாநிலம், பக்கூர் மாவட்டம், லிட்டிபுரா வட்டம், மலை உச்சியில் இருக்கும் குட்லோ பக்கூர் பஹாி என்ற பஹாரியா கிராமத்தை அடைவதற்கு, மேல் நோக்கி நகர்ந்தேன். பஹாரியாஸ் என்ற பழங்குடியின சமூகமே பெருமளவில் இங்கு வசிக்கின்றனர். ராஜ் மஹல் மலையில் உள்ள மலை தொடர்களில் பஹாரியாஸ் என்ற பெயருக்கு ஏற்ப மலை பழங்குடியினர்களாக வாழ்ந்து வந்தனர். பஹாரியாஸ், மாற்று சாகுபடி மற்றும் பாரம்பாிய வன காடு அடிப்படை பொருளாதாரத்தை நம்பியே வாழ்கின்றனர்.

ஒரு மணி நேரம் நடை பயணத்திற்குப்பின், அந்த கிராமத்தை நான் அடைந்தேன். அங்கு எந்தெந்த தொழிற்நுட்பங்கள் புழக்கத்தில் உள்ளது என்ற தகவலை கிராமத்தினர் அளித்தனர். பெரும்பாலும் பஹாரியாஸ் மலையில் உள்ள புதர்கள் எரித்து, சுத்தம் செய்து, காராமணியை சாகுபடி செய்வர். மேலும் அவர்கள் துவரை மற்றும் கோதுமையோடு கலப்புப் பயிராக சாகுபடி செய்வர். விதைகள் மற்றும் சந்தைப்படுத்துவதற்கும் உள்ளூரில் கடன் வழங்கும் மஹாஜன்ஸையே சார்ந்திருக்கின்றனர், பஹாரியாஸ் இனத்தவர். மேலும் மஹாஜன்ஸ் அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்றவற்றை விற்பனை அல்லது பண்டமாற்று முறையிலும் அடிப்படை பொருட்களை வழங்குவர். எனினும் மஹாஜன்ஸை, அச்சுறுத்துபவர்களாக கருத இயலாது. மாறாக வெளி உலகத்தில் ஒரு இணைப்பாக மட்டுமே இருக்கின்றனர்.

பெரும்பாலும் மக்கள் தொகை அதிகாிப்பினால் காடுகள் உள்ள அடிப்படை உணவுகள் மற்றும் பாரம்பாியம் தொலைந்ததற்கான காரணம் என்று மக்கள் பகிர்ந்துகொண்டனர்.

உணவு பழக்கத்தில் உள்ள இடைவெளி
2012 ஆம் ஆண்டு பஹாரியா பழங்குடியினர்களின் 10 கிராமங்களில் வெல்தங்கர் ஹல்பியின் பட்டினி போராட்டம் முதல் முயற்சி என்ற திட்டத்தின் கீழ் அடிப்படை ஆய்வின் அங்கமாக சத்துக்கள் ஆய்வு நடத்தப்பட்டது. 33 சதவிகித குழந்தைகள் மிகவும் குறைவான எடையையும், இதர 40 சதவிகித குழந்தைகள் மிதமான எடையை கொண்டுள்ளனர் என்பது இந்த ஆய்வின் முக்கிய முடிவாகும். 56 சதவிகித குழந்தைகள் வளராமல் சிறியதாகவே இருக்கின்றனர். உணவு பற்றாகுறை இருக்கும் காலத்தில் சராசாி சத்து உட்கொள்ளும் அளவு 1500 கி.கலோரியாக குறைந்துள்ளது. எதிர்பதமாக நியம்கிரி  மலைகளில் வாழும் டங்காரியா குந்த் சமூகத்துடன் நடத்திய ஆய்வில், காடுகள் வருடம் முழுவதும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவை அளிக்கிறது. பழங்குடியின மக்களின் மொத்த உணவு கூடையில், கோடை காலம், மழைக்காலம் மற்றும் பனிக்காலங்களில் தலா 37, 30 மற்றும் 45 சதவிகித பங்கு உணவு அளிக்கிறது. பழங்குடியினர்களின் உணவு பழக்கத்தில் காட்டு உணவுகளின் பங்கு பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. உதாரணமாக கடந்த சில வருடங்களாக, பழங்குடின மற்றும் வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசியை அரசு அறிமுகப்படுத்தியது.
இது அவர்களது வாழ்க்கையில் உணவு பழக்கங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. அதாவது அவர்களின் உணவு பல்வகைமை குறைந்து மிக சுலபமாக கிடைக்கும் அரிசி அடிப்படை உணவாக மாறியது. சத்துக்கள் குறித்து மிக குறைந்த விழிப்புணர்வு உள்ள பழங்குடியினர் தற்போது சத்துக்கள் நிறைந்த காட்டு உணவுகளான பழங்கள், வேர்கள், மற்றும் கிழங்குகள். பூச்சிகள், பறவைகள், எலிகள், உண்ணக்கூடிய இலைகள், காளான்கள், புளி மற்றும் மூங்கில் கொம்புகள் ஆகியவைகளை இடைத்தரகர்களிடம் அளித்து அதற்கு மாற்றாக உப்பு, எண்ணெய் மற்றும் இதர விளைப்பொருட்களை தரப்படும் விலையில் பெறுகின்றனர்.

பொக்கிஷம்.
எங்கள் காலத்தில் இருந்ததுபோல் குழந்தைகள் தற்போது திடமாக இருப்பதில்லை என்று ராத்தே பஹாரியா, சமூகத்தை சேர்ந்த வயது முதிர்ந்த உறுப்பினர்களில் ஒருவர் புலம்பினார். இதனை எதிர்கொண்டு, காலத்திற்கேற்ற காட்டு உணவுகளை நோக்கி செல்வது, எங்கள் துவக்கப் புள்ளியாக அமைந்தது. இந்த உணவுகளை தேர்வு செய்து ஆவணம் செய்யும் பொறுப்பை நாங்கள் குழந்தைகளுக்கு அளித்தோம். நவீன வளர்ச்சி முறையில், அவர்களின் பாரம்பாிய அறிவின் அடிப்படையே அழிந்துவிட்டதை ஆதாரத்துடன் காண முடிகிறது. அவர்களின் பாரம்பாியம் மற்றும் உயிர்பல்வகைமை குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு இல்லை. மேலும் உணவு மற்றும் மருந்துகளுக்கு வெளி ஆதாரத்தையே நம்பியுள்ளனர். அதன் விளைவாக, இவை சத்துக்கள் குறைபாடு, பசி மற்றும் நோய்கள் ஏற்படும் சூழல் உருவாகிறது.

இலைகள், பூக்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், காளான்கள், மீண்கள், நண்டு, எறா, தேன், போன்றவற்றை உள்ளடக்கிய காட்டில் பெரும்பாலும் கிடைக்கும் சாகுபடி செய்யப்படாத உணவு உண்ணும் தாவரங்களை சமூகத்தினர் ஞாபகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் இயற்கை அதிர்ச்சிகளுக்கு குறிப்பாக அழுத்தமான காலமாக கூறப்படும் கோடை மற்றும் மழைக் காலங்களில் இந்த சாகுபடி செய்யபடாத உணவு இயற்கை காப்பீடாக எப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்துகொண்டனர்.

நாற்பது வயது மதிக்கத்தக்க விவசாயி முன் வந்து, என்னுடைய குழந்தை பருவத்தின்போது மண்ணெண்னெய் மற்றும் உப்பை தவிர வேறு எதவும் வெளி சந்தையில் வாங்கியதில்லை. தற்போது பொரும்பாலான பொருட்கள் வெளிசந்தையிலும், எங்களோடு தொழில்புரியும் மஹாஜன்களிடமும் வாங்கும் நிலையுள்ளது. வாழ்வதற்குத் தேவையான வருமானமே தற்போது பொிய சவாலாக உள்ளது. கட்டாய இடம்பெயர்ச்சி மற்றும் மரங்களை வெட்டுதல் ஆகியவை இந்த மாற்றத்திற்கான நேரடி காரணமாக இருக்கிறது என கூறினார்.

சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில், இந்த சமூகத்தனருக்கு, காட்டில் கிடைக்கும் 10 வகை காளான்கள், 8 வகை நீர்க்களைகள், 5 வகை தேன், 20 வகை பறவைகள், 24 வகை கீரைவகைகள், 15 வகை பழங்கள், 6 வகை காய்கறிகள், 6 வகை பயறு வகைகள், 2 வகை சிறுதானியங்கள், 3 வகை மலர்கள், 4 வகை கிழங்குகள் மற்றும் 3 வகை விதைகள் அனைத்தும் தேர்வு செய்தனர். இவை அனைத்தும் மிக கவனத்துடன் ஒவ்வொன்றின் உள்ளூர் பெயர், விஞ்ஞானப் பெயர், விளக்கங்கள், பெருக்கம் செய்யும் முறைகள், தேர்வுகள் மற்றும் சகிப்புத் தன்மை, பயன்பாடு, சத்துக்கள் மதிப்பு பருவக்காலம் போன்றவைகளை சமூக ஆர்வலர்கள் ஆவணம் செய்தனர். காளான் மற்றும் மீன்களின் விஞ்ஞான தேர்வுகளில், வல்லுநர்களின் ஈடுபாடு இருந்தும் ஆவணம் செய்ய இயலவில்லை.

செயல்படுத்துதல்
ஆவணம் செய்ததனால் எங்களுக்கு இயற்கை, சுற்றுச்சூழல், உணவு மற்றும் பஹாரியா பழங்குடியின சமூகத்தின் பண்பாடு ஆகியவை குறித்து முழுமையான புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் சமூகத்தை பொறுத்தவரையில் உணவு பல்வகைமை உயர்ந்து காணப்படுகிறது. துவக்கத்தில், இந்த உயர்வு அறிவாகவே இருந்தது. மழைக்காலத்தின்போது இரண்டு வகை கிழங்குகள் மற்றும் கீரை வகைகள் மற்றும் கோடைக்காலத்தின்போது சில பழங்களும் அவர்களின் உணவு வகைகளில் கூடியது. இது ஒரு வாரத்தில் மதிய உணவு மற்றும் இரவு சிற்றுண்டி என்ற ரீதியில் மொத்தம் 12 முதல் 14 முறை உட்கொள்ளலாம். கிட்டதட்ட மறக்கப்பட்ட சில உணவு வகைகள் மற்றும் தொழிற்நுட்பங்கள் பெண்களால் ஞாபகப்படுத்தி கொள்ள முடிந்தது. சேமிப்பு செயல்பாடுகளான பசுந்தழையை உலர வைத்தல், உள்ளூர் உலர்ந்த இலைகளில் செய்யப்பட்ட பயறு கேக்குகள் மற்றும் அரைத்த பயறு வகைகள் போன்றவை முயற்சி செய்து, பாராட்டி மேலும் அதனை மீண்டும் உணவுகளில் சேர்க்கப்பட்டது.

இந்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு, சத்துக்கள் குறித்து திறன் வளர்ப்பு கையேடு உருவாக்கப்பட்டது. இதில் அடிப்படை ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் மற்றும் தூய்மை சார்ந்த பிரச்சனைகள், உள்ளூர் உணவு வகைகளின் தயாரிப்பு விவரம், உணவு பதப்படுத்துவதற்கான சுலப தொழில்நுட்பங்கள் போன்றவை அடங்கும். மேலும் 10 கிராமங்களிலிருந்து 25 தாய்மார்கள் தேர்வு செய்யப்பட்டு உருவாக்கிய பெண்கள் குழுவிற்கு இந்த தலைப்புகளை அனைவருக்கும் கொண்டு செல்வதற்காக பயிற்சியளிக்கப்பட்டது.

இந்த முறை உணவு மற்றும் உணவு வழக்கங்களை தாண்டி சென்றுவிட்டது. மூத்த தலைவர்கள் சாகுபடி செய்யபடாத உணவு மற்றும் சுற்றியுள்ள இயற்கை ஆதாரங்கள் பாதுகாக்க ஆரம்பித்தனர். பாதுகாப்பு முறையின் போது, பல்வேறு சவால்கள் சந்தித்தனர். புதிய தாவர மாதிரிகளை பாதுகாப்பது முக்கிய சவாலாக இருந்தது. காடுகளில் உள்ளூர் சிற்றினங்கள் மத்தியில் மிக சிறந்த சார்புத்தன்மை நிறைந்திருக்கிறது. இதனால் அவர்கள் வாழ்வும், வளர்ச்சியும் உறுதிப்படுத்துவது காண முடிகிறது. ஆனால் அழிக்கப்பட்ட காடுகளில் மரம் வளர்ப்பு பெரும்பாலும் தோல்வியில் முடிகிறது. இந்த படிப்பினை ஏற்று, அடர் காட்டு பகுதிகளில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கத்தோடு நிலத்திலேயே பாதுகாக்கும் முறைகளை வளர்ப்பதில் சமூகங்கள் முயற்சி செய்கின்றனர். நான்கு வெளி பாதுகாப்பு பகுதிகள் உருவாக்கப்பட்டது. புச்சோடோலா மற்றும் சிம்லாங் கிராமங்களில் தலா ஒன்றும், குட்லோ பஹர் கிராமத்தில் இரண்டு அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 35 முதல் 40 உள்ளூர் சிற்றனங்கள் துவக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இந்த பணியை தொடர்ந்து, சாகுபடி செய்யப்படாத உணவு மற்றும் பொதுவானவைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு சார்ந்து பிரச்சனைகள் குறித்து சமூக தலைவர்கள் மற்றொரு திறன் வளர்ப்பு கையேட்டை மேலும் உருவாக்கினர்.

உணவில் உள்ள சத்து குறைபாட்டை இணைப்பதற்கு, சில கூட்டு செயல்பாடுகள் எடுக்கப்பட்டது. அறுவடைக்குப்பின் பெரும்பாலான பயறுவகைகளை உள்ளூர் சமூகத்தினர் பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைத்ததனால் பூச்சி தாக்குகிறது. ஆகையால் விவசாயிகள் பயிறுவகைகளை அறுவடை செய்து ஒன்று அல்லது மாதத்திற்குள் விற்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஜி.ஐ. ஷீட் டிரம்களை 70 குடும்பங்களுக்கு பயறுவகைகளை சேமிப்பதற்கு அறிமுகம் செய்தது. உள்ளூர் பொருட்களான காய்ந்த வேம்பு, புங்கம் மற்றும் நொச்சி இலைகளை பயன்படுத்தி சேமிக்கும் முறைகள் குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதனால் பயறு வகைகளை வலியோடு விற்பனை செய்வது தவிர்க்கப்பட்டது.

வெளி சேமிப்பு முறையுடன், பல்வேறு இதர முயற்சிகள் எடுக்கப்பட்டது. உதாரணமாக ஜுஜுபே. சீதாப்பழம், மா, கொய்யா, பலாப்பழம் போன்ற உள்ளூர் இரகங்களை வீட்டு பின்புறத்தில் வளர்க்கப்பட்டது. ஆறு கிராமங்களில் கம்பு சாகுபடி புதுப்பிக்கப்பட்டது. தண்ணீருக்காக நீர்ப்பிடி பகுதியை திருத்தியமைப்பது மற்றும் வாய்க்கால் உருவாக்குவதால் தண்ணீர் மேலும் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்த முடிகிறது.

பார்வையை தாண்டி காணுதல்
மக்களின் எண்ணத்திலும் உணவில் முற்காலத்தில் இருந்த இடம் மீண்டும் பெற்றது, சாகுபடி செய்யப்படாத உணவு. காடுகள் அடிப்படை மீண்டும் உயிர்பெறும் வரை, உயிர்ச்சூழல் அமைப்பு மீண்டும் உருவாகும் வரை சாகுபடி செய்யப்படாத உணவுகளின் தேவையை சந்தித்திருக்க முடியாது என்பதை மேலும் உணரப்பட்டது. சாகுபடி செய்யப்படாத உணவுகளில் ஆரம்பித்த முயற்சியின் தேவை தண்ணீர், உணவின் உணர்வு மற்றும் பண்ணை பல்வகைமை ஆகியவற்றிலும் வளர்ச்சியடைந்துள்ளது.
சில விவசாயிகளை ராஞ்சி மற்றும் டில்லிக்கு, தங்களின் அறிவை பகிர்ந்துகொள்ள அழைத்து செல்லப்பட்டனர். சிலர் மோட்டார் வாகனத்தில் முதல்முதலில் தங்களின் முதல் தடம் பதித்தனர். அவர்களின் பொக்கிஷம் இந்த உணவுகள், ஆனால் எங்களின் பொக்கிஷம் ராத்தே பஹாரியா, ஷங்களி பஹாரியா மற்றும் பல விவசாயிகளின் கண்களில் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையே. காட்டிலேயே இந்த காட்டு உணவு ஆதாரங்களை பாதுகாப்பதற்கு உணவு, எரிபொருள் மற்றும் தீவனம் ஆகியவற்றை அளிக்கும் பல்வேறு மரங்கள் செடிகள், கொடிகள், புற்கள், கிழங்குகள் போன்றவைகளை வளர்த்து ‘உணவு காடு” தற்போது உருவாக்கவதற்கு ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் நீண்ட வழி செல்ல வேண்டும் என்பது நிதர்சனம்.

இந்த சமூகத்தனருக்கு, 10 வகை காளான்கள், 8 வகை நீர்க்களைகள், 5 வகை தேன், 20 வகை பறவைகள், 24 வகை கீரைவகைகள், 15 வகை பழங்கள், 6 வகை காய்கறிகள், 6 வகை பயறு வகைகள், 2 வகை சிறுதானியங்கள், 3 வகை மலர்கள், 4 வகை கிழங்குகள் மற்றும் 3 வகை விதைகள் ஆகிய காட்டு வகைகள் அனைத்தும் கிடைத்தன.

அன்ஷீமன் தாஸ்


Anshuman Das
Programme Manager
Welthungerhilfe Country Office - INDIA
A-3, Soami Nagar
New Delhi 110 017, India.
E-mail: Anshuman.Das@welthungerhilfe.de

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2016, வால்யூம் 18, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...