கால்நடையை ஒருங்கிணைத்ததற்கான பயணம்


வெளி முகமையிலிருந்து பெற்ற பயிற்சி மற்றும் உதவியைக் கொண்டு, பல்வகைமையில் ஈர்க்கப்பட்டு புதிய முயற்சியை துவக்கி, அவருடைய கனவு நனவாகி, அது நிலைக்கவும் செய்தார். பல்வகைைமையை ஒரு வாய்ப்பாக மாற்றி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்த, லில்லி மேத்யூஸ் -ன் வெற்றிக் கதை.


கால்நடை வளர்ப்பில் 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்,தற்போது இவர் ஒரு முன்மாதிரியாக இந்தப் பகுதியில் திகழ்ந்து வருகிறார்.

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அவர்களை சோர்ந்து போன நேரத்திலும்,வெகு சில பெண்களில் ஒருவராக, புதிய சவால்களை எடுக்கும் தைரியம் உடையவர், லில்லி மேத்யூஸ். வேளாண்மையில் மிக மோசமான நஷ்டம் ஏற்பட்டு, தன்னுடைய குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, மிளகு சாகுபடியில் இழந்ததை கால்நடை வளர்ப்பின் மூலம் சமாளிக்கலாம் என்று ஒரு முயற்சியை செய்தார். உணர்ச்சிமிக்க பெண் விவசாயியான, லில்லி மேத்யூஸ் ,தற்போது சொந்தமாக 70 க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் வைத்து,கேரளா,வயநாட், மனந்தவாடி என்ற இடத்தில் தனது வீட்டிலேயே கால்நடை தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.ஆனால் இந்த பயணம் மிக எளிதல்ல, இந்த நிலையை அடைவதற்கு, அவர் அமைத்த கால்நடை வளர்ப்புத் தொழிலில் உள்ள சவால்களை எடுத்து, ஆபத்துகளை கையாளும் திறன் கொண்டிருந்தார்.

முன்பு,லில்லி மற்றும் அவரது குடும்பத்தினர்,தங்களது 11 ஏக்கர் நிலத்தில் கருமிளகுடன், இதர பயிர்களான தென்னை, காபி, பாற்கடலை, முந்திரி மற்றும் காய்கறிகள் சாகுபடிகள் பெருமளவில் செய்துவந்தனர். இவர்களது முக்கிய வருமான ஆதாரம்,மிளகேயாகும். 40 க்விண்டால் மிளகு இவர்களுக்கு கிடைத்துள்ளது.தென்னை, காபி மற்றும் பாற்கடலை ஆகியவையும் குறிப்பிட்ட அளவு வருமானம் அளித்தது. ஆனால் 26 வருடங்களுக்குமுன், குறிப்பட்ட பகுதியிலுள்ள மிளகு கொடி,விரைவு வாடல் நோய் மற்றும் மந்த வாடல் நோயினால் பாதிப்படைந்த பிறகு மிளகு கொடிகளை புதிப்பிப்பதற்கு மிகக் கடினமாக இருந்தது. தற்போது, இன்னும் மிளகு இரகங்களை சாகுபடி செய்துவருகின்றனர்.குறிப்பாக காிமுன்டா மற்றும் பனியூர் – 1 இரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வயனந்தன் இரகம் நோயின் தாக்கம் காரணமாக முழுவதும் அழிந்துவிட்டது. குடும்பத்திற்கு அது ஒரு கடினமான நேரம், அவர்களின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்தித்து வந்தனர்.மிளகு தவிர,பாற்கடலையும் நோய்களால் பாதித்தன நன்கு வாழ முடியவில்லை.இந்த மோசமான நேரத்திலும் லில்லி மேத்யூஸ் நம்பிக்கையை இழக்காமல் இருந்தார். அவரின் குடும்பத்து உதவியுடன், இழப்பை ஈடு செய்யும் அணுகுமுறையில் கால்நடை வளர்ப்பு தொழிலை துவங்குவதற்கு முடிவு செய்துவிட்டார். இவரது பெற்றோர் பாரம்பாியமாக கால்நடைகளை வளர்த்து வந்தனர்.இந்த அனுபவமே இவர் தொழிலை துவங்குவதற்கான தைரியத்தை அளித்தது.

பால் பண்ணை முயற்சி
துவக்கத்தில் லில்லி மேத்யூஸ் கோயம்புத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 கலப்பின இரகபால் மாடுகள் கொண்டு சிறிய பண்ணையை துவங்கினார்.மீதமெல்லாம் வரலாறு எனலாம். இவரது கணவர், திரு.மேத்யூஸ் மனந்தவாடியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தார், பின்னர்; இவர் துவங்கிய பால் பண்ணை தொழிலில் தன்னை இணைத்துக் கொண்டார். மிளகு கொடி நோயினால் பாதிப்படைந்ததால் , அவற்றிற்கு ஆதரவு தந்த மரங்களில் சிலவற்றை வெட்டி, அந்த இடத்தில் தீவனபுற்கள் சாகுபடி செய்யப்பட்டது. பால் மாடு வளர்ப்பில் இவருக்கு அனுபவம் இருந்தாலும், பால் மாட்டு பண்ணையை தொழிலாக துவங்கும்போது மொத்ததில் ஒரு புதிய சவாலாக இருந்தது. லில்லி பால் மாடு வளர்ப்பு முழுமையாக எடுத்துக்கொள்ள பல்வேறு பயிற்சிகளில் கலந்துகொண்டு தன்னை மேம்படுத்தி கொண்டார். அரசு துறைகளிலிருந்தும் மற்ற நிறுவனங்களிலிருந்தும் தன்னுடைய பயணத்திற்கான உதவியை பெற்றுக்கொண்டார். 2008 ஆம் ஆண்டு,கால்நடை வளர்ப்புத் துறையிலிருந்து 10 மாடுகளுக்கு உதவி பெற்றார்.அதைத் தொடர்ந்து பால் கறவை செய்யும் கருவி, தீவனபுற்கள் நடவு செய்வதற்கு,மாடு கொட்டகை விரிவுபடுத்துவதற்கும் உதவி பெற்றார். பின்னர் 2014 ஆம் ஆண்டு, பூக்குடியில் உள்ள ஈரோடு கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை கல்லூரி அளித்த கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை எடுத்துகொண்டார். அனைத்து பயிற்சிகளும் இவரது நம்பிக்கை அதிகாிக்க உதவிசெய்து, கால்நடை வளர்ப்பில் மேலும் ஈர்க்கப்பட்டு தன்னுடைய குறிக்கோளை தொடர்ந்து பின்பற்றினார்.

தற்போது அவருடைய பண்ணை, 70 கலப்பின மாடுகளின் வீடாக இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக திருமதி.லில்லி அவர்களே கால்நடை மேலாண்மை குறித்து சில பணியாளர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களை பணியில் அமர்த்தி, அவர்களின் உதவியால் தானியங்கி பால் கறவை கருவி மூலம் பால் கறக்கப்படுகிறது. அனைத்து மாடுகளுக்கும் தரமான தீவனம் மற்றும் தனது பண்ணையிலேயே சாகுபடி செய்யப்பட்ட நல்ல பசுந்தீவனம் அளிக்கப்படுகிறது. இதனுடன் இவரே பண்ணையில் பல்வேறு அடர் மற்றும் இதர தீவனங்களைக் கொண்டு சாியான விகிதத்தில் கலந்து தயாரித்து மாடுகளுக்கு அளிக்கிறார். தேவைப்படும்போது கால்நடை வளர்ப்புத் துறையிலிருந்து அலுவலர்கள் உடனடி அவசர மருத்துவ ஆலோசனைகள் வழங்கியும் உதவி செய்தனர்.

2018 ஆம் ஆண்டு, திருமதி. லில்லி அவர்கள் ஒரு புதிய மைல்கல்லை அடைந்தார். அவரது இல்லத்தில் மதிப்பு கூட்டும் கலனுடன் குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதியை அமைத்து, தயிர், நெய், வெண்ணை, பன்னீர், மோர் போன்று பாலிலிருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்க தொடங்கினார். முன்பு, பால் கூட்டுறவில் ஒரு லிட்டர் பால் குறைந்தது ரூ.35 மட்டுமே இவர் பெற்றார். ஆனால் மதிப்பு கூட்டப்பட்ட கலன் அமைத்ததும் ஒரு லிட்டர் பாலிற்கு ரூ. 55 கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு மாதமும், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை மூலம் நல்ல வருமானம் கிடைக்க உதவுகிறது. தற்போது, இவரது பண்ணையில் ஒரு நாளிற்கு சுமார் 700 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. பண்ணையை வெற்றிகரமாகவும் இலாபகரமாகவும் நடத்த, குறைந்தது ஒரு மாடு 20 லிட்டர் பால் அளித்தால் போதும், இதற்கு கீழ் குறைந்தால், அதிக செலவு இருப்பதால், நமக்கு பாதிப்பே ஏற்படும் என்று இவர் கூறுகிறார். இவருடைய பால் மற்றும் பால் பொருட்கள், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில், தன்னுடைய சொந்த முத்திரை அடையாளமான ‘லில்லீஸ்” என்ற பெயாில் வாகனம் மூலமும், இரண்டு கடைகள் மூலமும் விற்பனை செய்கிறார். அருகாமையில் உள்ளவர்கள் மற்றும் பார்வையாளர்கள் , இந்த பண்ணையை காணவரும்போது நேரடியாக கலனிலிருந்து பொருட்களை வாங்கியும் செல்கின்றனர். கால்நடையை தாண்டி, இவர் கோழி வளர்ப்பு, பறக்கும் வாத்து, போன்றவற்றையும் மேம்படுத்துகிறார். மேலும் எதிர்காலத்தில் சில ஆடுகளை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.

பண்ணையில் ஒருங்கிணைத்தல்
அவரது மாட்டு பண்ணையின் வெற்றியோடு, திருமதி. லில்லி பயிர் சாகுபடியை புதுப்பிக்க ஆசை படுகிறார். காபி, மிளகு, தென்னை ஆகியவற்றை தாண்டி பல்வேறு காய்கறிகளும் அவர் சாகுபடி செய்கிறார். மொத்த பண்ணையும் இயற்கை முறையிலே மேம்படுத்தப்படுகிறது. மாட்டு சாணம் திரவம் (மாட்டுசாணம், மாட்டு கோமியம்) சேகாித்து இயற்கை உரமாக மொத்த பண்ணையிலும் பயன்படுத்தப்படுகிறது. சாணத்தை மறுசுழற்சி செய்ய, சாண எரிவாயு கலன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாட்டு கோமியம் பூச்சி கட்டுபடுத்துவதற்கு உதவுகிறது. மேலும் தேவைகேற்ப விற்பனையும் செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இவர் இயற்கை உரங்களான ஜீவாமிர்தம் தயாரிக்கும் மற்றொரு தொழிலை ஆரம்பிக்கும் திட்டம் வைத்துள்ளார்.

கடந்த வருடங்களில் நஷ்டமான மிளகு பயிரை, மதிப்பு கூட்டுதல் பொருட்களாக அவருடைய தொழிலை விரிவுபடுத்தி புதுப்பிக்கத் தொடங்கிவிட்டார்.

அடுத்த வருடம் அவருடைய பண்ணையின் வெள்ளிவிழாவை கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறார். மாடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகாிப்பதன் மூலம், பண்ணையில் பால் உற்பத்தி ஒரு நாளிற்கு 1000 லிட்டர் உயர்த்துவதே தனது கனவு என இவர் பெருமையாக கூறுகிறார். இந்த தொழிலுக்கு புதிதாக வருபவர்களுக்கு, சிறியளவில் தொழிலை துவக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். மேலும், அவர்களின் குறிகோளை அடைவதற்கு முறையான பயிற்சி பெற்று சீராக தொழிலை தொடங்க வேண்டும். இவரது வெற்றியால், திருமதி. லில்லி மேத்யூஸ் தற்போது, சக விவசாயிகளுக்கும், பண்ணையை பார்வையிட வரும் மாணவர்களுக்கும் அறிவுரை கூறும் வல்லுநராக அங்கீகாிக்கபடுகிறார். இவர் தேசிய மற்றும் மாநில அளவிலும் ,குறிப்பாக வருடத்தின் பால் பண்ணையின் பெண் என்று அவரது சாதனையை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாராட்டப்பட்டது. மனன்தாவாடி, த்வர்காவில் உள்ள வானொலி மட்டொலியில் தனது அறிவு மற்றும் அனுபவத்தை பகிரும் முக்கிய பேச்சாளராகவும் இருக்கிறார்.

அவருடைய கடந்தகாலத்தை நினைவூட்டிப் பார்க்கும்போது, திருமதி. லில்லி அவரது வாழ்க்கை கடுமையான கடனிலிருந்து மாறி எப்படி நல்ல வீடு பெற்று, சாதாரண சாகுபடி அமைப்பில் கறவை மாடு வளர்ப்பு முறையை ஒருங்கிணைத்து வெற்றிகரமான தொழிலும் பெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். கால்நடை வளர்ப்பு, பாரம்பாிய சாகுபடி முறையில் ஒருங்கிணைத்தால் பயிரை அடிப்படையாக கொண்ட வேளாண்மை முறையின் இயக்கவியலை மாற்ற முடியும் என்பதற்கு இவரது வாழ்க்கை பயணமே ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

அர்ச்னா பட், ரவீந்திரன் மற்றும் அப்துல்லா ஹபீப்


Archana Bhatt
Scientist

Raveendran
Development Assistant

Abdulla Habeeb
Development Associate
MSSRF-Community Agrobiodiversity Centre
Wayanad, Kerala
E-mail: archanabhatt1991@gmail.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...