கஞ்சிக்குழி – கேரளாவின் முதல் இரசாயனமற்ற,போதுமான காய்கறிகள் கொண்ட பஞ்சாயத்து


1994 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை சாகுபடி முறையில், கிராமத்தில் பாிசோதனைகள் துவக்கியது.
கடல் காற்று மெதுவாக வீசுகிறது, இது மணல் வாடை மற்றும் உப்பு ஆகிய சுமையோடு, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான கஞ்சிக்குழியை நோக்கி சென்றேன். கிராமத்திற்குள் முதலில் நுழையும்போது, தோட்டங்களிலிருந்து புதிய காற்றுடன் சோ;ந்து காய்கறிகளின் புதிய வாசனை காற்றில் திடீரென கலந்தது.


மற்ற இந்தியப் பகுதியிலிருந்து, கஞ்சிக்குழி மிகவும் வேறுபட்டு புதிய வரைபடத்தை வழங்குகிறது. சில நேரங்களில் கிராமங்களில் கூட காய்கறிகள் குறைபாடு ஏற்படுகிறது. கஞ்சிகுழியில், குறிப்பாக இயற்கை முறையில் காய்கறிகள் நிரம்பி வழிகிறது. கேரளாவில் போதுமான காய்கறிகள் உள்ள ஒரே பஞ்சாயத்து, கஞ்சிகுழி, இந்த கிராம மாதிரி பின்பற்றக்கூடிய ஒன்று. ஏனென்றால் 1994 ஆம் ஆண்டிலிருந்து இயற்கைவழி சாகுபடி பாிசோதனைகள் துவக்கினர். மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதிகளில் இந்த தலைப்புக்கூட கேள்விப்படாத நிலையிருந்தது.

எப்படி இது எல்லாம் துவங்கியது? கஞ்சிக்குழியில் மண், வேளாண்மைக்கு தகுதியற்றதாக இருந்ததால், கேரளாவில் மற்ற பகுதியிலிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்வதை நம்பியுள்ளது. இதுவே காய்கறிகளின் விலையில் மாட்டிகொள்ள காரணமாயிருந்தது. இதற்குமேல், கிராமத்தினாின் வருமானம் உள்ளூர் தொழிற்சாலையிலிருந்து (முக்கியமாக தென்னை நார்) குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால், அப்போ திருந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஒரு புரட்சிக்காக அழைத்தனர்.அவர்கள் எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தை நம்பியே இருக்கும் என்ற முடிவுக்கு வந்து, கிராமத்தில் உள்ள விவசாய குடும்பங்களால் பின்பற்றப்பட்டது. காய்கறிகள் எங்கும் வாங்கக்கூடாது, ஆனால் இப்போழுதே இங்கு வளர்க்க வேண்டும் என்பது முக்கியம் என்று பஞ்சாயத்து தலைவரான எம்.ஜி.ராஜூ தொிவித்தார்.
இந்த யோசனை எங்களுக்கு எட்டியபோது, சவால்கள் தொடர்ந்து முளைத்தது. இது மண்ணில் சாகுபடி செய்வதற்கு உகந்ததல்ல என்பது மட்டுமில்லை, ஆனால் இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் தேவையாக இருந்தது. மிக முக்கியமாக, செயல்பாடு மற்றும் அத்தியாவசிய முறைகள் செயல்படுத்தி திட்டத்தை தொடர்ந்து உறுதிப்படுத்துவது தேவையாக இருக்கிறது என்று கூறினார்.

திட்டத்தை உருவாக்கி, பஞ்சாயத்து கமிட்டி, 8600 குடும்பங்களை காய்கறிகள் வளர்ப்பதற்கு அழைத்தது. பாகல் , சிவப்பு பசலை, காளிப்பிளவர், பீன்ஸ் வரை மற்றும் அதற்கு மேல், வீட்டில் ,கொல்லை புறத்தில் மற்றும் மாடியில் வளர்க்க திட்டமிட்டனர். சாகுபடிக்கு உகந்த ஒவ்வொரு இடமும் பயன்படுத்துவதே இதன் முக்கியயோசனையாகும். துவக்கத்தில் பஞ்சாயத்திலிருந்து நிதியளிக்கப்பட்டது. நிலைத்த செயல்பாடுகளை உறுதிபடுத்த, சிறிய கமிட்டியான கார்ஷிகா காமசேனாவை கண்காணித்து காய்கறிகளை வளர்க்க ஊக்கப்படுத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட்டது. இது ஒரு கடினமான செயல்முறையாகும். ஆனால் இறுதியில் பி.எச். சமமாக மாறி, மண்ணில் சத்துக்களின் அளவு மீட்கப்பட்டது. பூச்சி தடுக்கும் முறைகள் செயல்படுத்தப்பட்டது. அதேசமயத்தில் உள்ளூரில் இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டது என்று ராஜூ விளக்கினார்.

விவசாயிகள் சிறப்பாக அறிவர்
ஒரு முறை இந்த அமைப்பு அந்தந்த இடத்தில் வைத்துவிட்டால், கிராமத்தினரோடு பொறுப்பேற்று இதனை செயல்படுத்த வகுக்கப்பட்டது. அதனால், இந்த நாள்,ஒவ்வொரு குடும்பமும் தேவையான அளவு உரம் மற்றும் பூச்சிக்கட்டுபாட்டு செயல்முறைகளை கண்காணித்தது.‘விவசாயிகள் அவர்களுக்கு எந்த முறை சிறப்பாக செயல்படும் என்று தொியும், இது முயற்சி மற்றும் பிழை முறையின் மூலம் முடிவுக்கு வருவர்’ என்றார் ராஜூ. அங்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறதென்றால் அது இரசாயனங்கள் பயன்படுத்தாத சாகுபடி செய்வதேயாகும்.

குடும்பஸ்ரீ என்ற பெண்கள் சுய உதவிக் குழுவால் பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்ட நாற்றுகள் மற்றும் விதைகள் இலவசமாக கிராம பஞ்சாயத்து வழங்குகிறது. சென்ற வருடம் நாங்கள் 50 இலட்சத்திற்குமேல் நாற்றுகள் அளித்தோம். குறைந்த விலையில் சூழல் நட்பு மக்குஉரத்திற்கு தேவையான வசதிகளை நாங்கள் அளித்தோம் என்றார் ராஜூ.

கஞ்சிக்குழி இனிமேல் வேறெங்கும் காய்கறிகளை வாங்க தேவையில்லை. முன்பு காய்கறிகள் அருகாமையிலிருக்கும் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வாங்கிவரப்பட்டது. தற்போது நம்மிடம் புதிய, இயற்கையாக வளர்த்த காய்கறிகள் உள்ளூர் சந்தையில் விற்கப்படுகிறது என்று ராஜூ கூறினார். அளவிற்கு அதிகமாக உற்பத்தி செய்ய துவங்கினால் தேசிய நெடுஞ்சாலையில் சந்தை அமைத்து பயணிகளுக்கு காய்கறிகள் விற்றனர். ஒரு காலத்தில் காய்கறிகளை வாங்கி வந்த நகரத்திற்கே நாங்கள் விற்கத் துவங்கிவிட்டோம். இயற்கை விளைபொருட்களை நியாயமான விலையில் விற்கும்போது வாங்குபவர்களின் தேவையான நிதி மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டு வகையிலும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கிராமத்தில் வாழ்க்கை மாறிவிட்டது. வரம் செழிப்பை அழைத்து வந்தது. சில கிராமவாசிகள் மாதம் ரூ.50000 கூட ஈட்டுகின்றனர். மேலும் அவர்கள் வருடம் முழுவதும் சாகுபடி செய்கின்றனர்.அவர்கள் இயற்கை சாகுபடி குறித்து பாடம் அளிக்கப்பட்டது. சிலர் வீரிய ஒட்டு காய்கறி இரகங்கள் உருவாக்கினார். 48 வயதான சுபகேசன் உள்ளூர் வீரிய ஒட்டு பீன்ஸின் விதைகளாக கூறப்படும் கஞ்சிக்குழி பீன்ஸின் விதைகளை விற்று குடும்பத்திற்கு உதவுகின்றார். நான் 2 சதவிகித நிலத்தில் சாகுபடி செய்வதை துவங்கி, தற்போது 25 சதவிகிதம் வரை விரிவடைந்தது, வேளாண்மை என்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்று அவர் கூறினார். மற்றொரு விவசாயியான 71 வயது நிரம்பிய ஆனந்தன் வருடம் முழுவதும் சாகுபடி செய்வதாக கூறினார். 80 சதவிகித மகசூல் கிடைத்தப் பின்னர் சாகுபடியை நிறுத்தினர். அதாவது நோய்கள் தாக்கும் சமயம். இந்த வழியில் தான் மூன்று முறை, அதாவது வருடம் முழுவதும் சாகுபடி செய்ய முடியும்.

சாகுபடி குறித்த பாடங்கள் கட்டாயம் உள்ளூர் பள்ளிகளில் அடுத்த தலைமுறையை தயார் செய்ய வேண்டும். மண்ணில் தற்போது சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் எங்கள் குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் இரசாயனமற்ற உணவு உண்டு வளர்கின்றனர் என்று ராஜூ கூறுகிறார். கடந்த நிதியாண்டில் பஞ்சாயத்திற்கு வருட வருமானமாக ரூ.14 கோடி கிடைத்தது. கடற்கரை மணலாக கிடந்த இடத்திலிருந்து துவங்கி தற்போது கஞ்சிக்குழி விளைபொருட்கள் ஒட்டுமொத்த கேரளாவையே மகிழ செய்து சாதனை படைத்தது.

தன்யா அப்ரஹாம்


The article was originally published at https://www.thehindu.com/sci-tech/agriculture/how-kanjikuzhivillagein-
alappuzha-became-the-first-chemicalfre e-vegetablesufficient-panchayat-in-kerala/article28949494.ece

மூலம: லீசா இந்தியா, செப்டம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...