ஒருங்கிணைந்த வேளாண் முறை


வேளாண் அறிவியல் மையங்களில் பண்ணையில் ஒருங்கிணைந்த முறைகளை கடைப்பிடிப்பதில் விவசாயிகளுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் மூலம் அவர்கள் அதிக உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற உதவுகின்றன. வேளாண் அறிவியல் மையம் வழங்கிய ஆதரவில் லிங்க்ராவின் பண்ணை, இப்போது ஒரு மாதிரி பண்ணைக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


ஸ்ரீ வல்லம் குபர் லிங்க்ரா, ஒரு அர்ப்பணிப்புள்ள முற்போக்கான மற்றும் புதுமையான விவசாயி. இவர் மேகாலயாவின் கிழக்கு காசிமலை மாவட்டத்தில் உள்ள மவ்லாய் சி மற்றும் ஆர் டி பிளாக்கின் மவ்சியத்னம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பட்டதாரி மற்றும் தொழில் ரீதியாக ஒரு ஆசிரியர். சிறந்த விவசாய முறைகளில் கவனம் செலுத்தி தனது நேரத்தை செலவிடத் தொடங்கினார். இவருக்கு சொந்தமான 4.94 ஏக்கர் நிலத்தில் 2.50 ஏக்கர் நிலம் ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு விவசாய தொழிற் விற்பன்னராக, திரு. லின்க்ரா, வழக்கமான விவசாய சாகுபடி முறை தனது மகசூல் மற்றும் வருமானத்தை குறைக்கிறது என்பதை உணர்ந்தார்.

இது குறைந்த உற்பத்தித்திறன், விவசாய உள்ளீடுகள் மீதான அதிகாித்த செலவு மற்றும் பண்ணையில் இருக்கும் வளங்களை மோசமாக பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்தாத நிலம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. வழக்கமான முறையானது மட்டுப்படுத்தப்பட்ட பயிர் பன்முகத்தன்மை மற்றும் மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குவதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உருவாக்கியது.
நிலைத்த விவசாயியாக ஆவதற்கான அவரின் பயணம் நிலைத்த வேளாண் முறைகளை நோக்கிய தீர்வுகளை தேட ஆரம்பித்தபோது தொடங்கியது. அதன் பிறகு அவருக்கு 2013 ஆம் ஆண்டில் கிழக்கு காசிமலை மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய அதிகாரிகளோடு நெருக்கம் ஏற்பட்டது. நிலைத்த வேளாண்மை குறித்த தொழிற்நுட்ப வழிகாட்டுதலை அவர் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் வழியாக பெற்றார். மேகாலயாவின் ரி-போய் மாவட்டம், உமியம், உம்ரோய் ரோடு, உமியம் வடகிழக்குமலை பிராந்தியத்திற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அவர் ஒரு பட்டறிவு பயணத்தில் பங்கேற்று ஈர்க்கப்பட்டார். அங்கு அவர் ஒருங்கிணைந்த விவசாய முறையின் கருத்து மற்றும் வருமான வாய்ப்புகளை அறிமுகப்படுத்தினார். வேளாண் அறிவியல் மையம் மற்றும் பிற துறைகள் நடத்திய பல பயிற்சி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு தொழில்நுட்ப அறிவை சேகாித்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2.50 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண் அறிவியல் மையத்தால் நடத்தப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை அவர் நிறுவினார். ஒருங்கிணைந்த விவசாயம் பற்றிய வலுவான அடித்தளத்துடன், ஸ்ரீ லிங்க்ரா தனது பண்ணையில் கூடுதல் கூறுகளாக கோழி வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு போன்றவற்றை இணைத்து தனது பண்ணையை மேலும் மேம்படுத்தினார்.

உட்கூறுகளின் விபரங்கள்

தற்போது உள்ள ஒருங்கிணைந்த பண்ணையமானது 2.5 ஏக்கர் நிலப்பரப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உட்கூறுகளை கொண்டுள்ளது.
1. தோட்டக்கலைப் பகுதி
2. கால்நடை மற்றும் மாடுகள் வளர்ப்பு பகுதி
3. மண்புழுஉரப் பகுதி

தோட்டக்கலைப் பகுதி

தோட்டக்கலைப் பிரிவில் முட்டைக்கோஸ், காலிபிளவர், மிளகாய், இஞ்சி, சௌ-சௌ போன்ற காய்கறி பயிர்களும், பப்பாளி, அன்னாசி, அசாம் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழப் பயிர்களும் அடங்கும். கிருஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையம்), கிழக்கு காசிமலை மாவட்டங்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிடுவதன் மூலம் நிலத்தை திறம்பட பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்திவருகின்றன. இது விவசாய வருமானத்தை அதிகாிக்கும் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துகிறது. பல பயிற்சித் திட்டங்களுக்குப் பிறகு, காய்கறிப் பயிர்கள் பல்வகைப்படுத்துதலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன என்பதையும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் அவர் புரிந்துகொண்டார். அவரது கிராமமான மவ்சியத்க்னம், பாலிஹவுஸ் உள்ளே ஆண்டு முழுவதும் காய்கறிகள் உற்பத்தி சாத்தியம். மே முதல் அக்டோபர் வரை அதிக மழைப்பொழிவு இருப்பதால் திறந்தவெளியில் இரண்டாம் பயிரை வளர்ப்பது மிகவும் கடினம். தன்னால் பாலிஹவுஸ் கட்டமுடியாததால், அவர் வேளாண் அறிவியல் மையத்தை அணுகினார். இதையொட்டி வேளாண் ஜவுளி அமைச்சகத்தின் மூலம் சஸ்மிரா உடன் இணைந்து மானிய விலையில் ஒரு பாலிஹவுஸ் கட்ட அவருக்கு உதவியது. தற்போது ஆண்டு முழுவதும் காய்கறிகளை உற்பத்தி செய்து, ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்டி வருகிறார்.

2. கால்நடைபராமாிப்புமற்றும் கால்நடைபிரிவு

அ) கோழிப்பண்ணைபிரிவு

அவர் 2000 ஆம் ஆண்டு தனது பண்ணையில் ஐம்பது பறவைகளுடன் கோழி வளர்ப்பைத் தொடங்கினார். இருப்பினும்,எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை. பின்னர்,பறவைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி தனது கோழி வளர்ப்பை மேம்படுத்தினார். அவர் அடுக்குப் பறவைகளை (பி.வி. 360) வளர்க்கத் தொடங்கினார். இதன் மூலம் அறிவியல் கோழி வளர்ப்பில் சிக்கல்களை எதிர்கொண்டார். பிரச்சனைகளை சமாளிக்க, அவர் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற ஆரம்பித்தார். இருப்பினும், அவர் இன்னும் இழப்புகளை சந்தித்தார். கூர்ந்து கவனித்ததில், பறவைகள் மூலைகளிலும் கருமையான நிழல்கள் உள்ள இடங்களிலும் முட்டையிட விரும்புவதைக் கண்டறிந்தார். இதை உணர்ந்து, முட்டையிடும் அறைகளை உருவாக்கினார். இது பறவைகள் முட்டையிடுவதற்கு ஈர்க்கிறது. முட்டையிடும்போது முட்டைகள் உடைவதைத் தடுக்கும் (0 விழுக்காடு முட்டை உடைப்பு) அறைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு பராமாிக்கப்பட்டது. கோழிக் கொட்டகைக்குள் நுழையாமல் கேபினிலிருந்து முட்டைகளை எளிதாகச் சேகாிக்க வசதியாக, முட்டைகளைச் சேகாிப்பதற்கான ஏற்பாடுகள் கீல் செய்யப்பட்ட மேல் அட்டைகள் வடிவில் செய்யப்பட்டன. இந்த முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், அவர் தனது பண்ணையில் முட்டை உற்பத்தியை அதிகாிக்க முடியும். அதேநேரத்தில் பறவைகளின் இறப்பைக் குறைக்க முடியும். சராசாியாக, விவசாயிகளால் பின்பற்றப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட புதுமையான தொழில்நுட்பம் முட்டைகள் கெட்டுப்போதுவதை 90 விழுக்காடு குறைத்து, உற்பத்தித்திறனை 80-90 விழுக்காடு அதிகாித்தது. விவசாயிகளால் பின்பற்றப்படும் முறையானது அதிக உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த இறப்பு விகிதத்துடன் குறைந்த முதலீடுகளை உள்ளடக்கியது. இது பொருளாதார ரீதியாக மிகவும் சாத்தியமானதாக ஆக்குகிறது.

பன்றி வளர்ப்பு பிரிவு

கிழக்கு காசிமலை மாவட்டத்தில் பன்றிகள் மிகவும் பொதுமான மற்றும்  இனமாகும். இப்பகுதியில் உள்ள விவசாயக் குடும்பங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பன்றிகளை (பெரும்பாலும் 1-2 பன்றிகள் / வீட்டுகள்) முக்கியமாக கொழுப்பிற்காக வளர்க்கின்றன. உற்பத்தி செயல்முறை பாரம்பாியமாக உள்நாட்டு இனங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், பன்றி உற்பத்தியாளர்களுக்கு பாரம்பாிய அறிவு மற்றும் கொழுப்பை உண்டாக்கும் திறன் உள்ளது. ஆனால் சிலருக்கு பன்றிகளை வளர்க்கும் திறன் உள்ளது. இந்த வாய்ப்பை பார்த்து பன்றி வளர்ப்பு பிரிவை தொடங்கினார். அவர் 9 பெண் பன்றிகள் மற்றும் 1 ஆண் பன்றியை வளர்த்து வருகிறார். அங்கு ஒரு பன்றி ஒரு வருடத்திற்கு குறைந்தது 1 குட்டியை ஈன்றெடுக்கும். சந்தையில் பன்றி இறைச்சிக்கான தேவை அதிகமாக உள்ளது. இது முன்னேற்றம் /விரிவாக்கத்திற்கு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.

அ. ஆடு வளர்ப்பு அலகு
இந்த அலகு 15 எண்ணிக்கையிலான ஆடுகளைக் கொண்டுள்ளது. அவை மேய்ச்சலுக்கு வேலி அமைக்கப்பட்ட இடத்தில் வளர்க்கப்படுகின்றன. தீவனத்திற்காக புஜ்ஜிய செலவு செய்யப்படவில்லை. வேலி மற்றும் குறைந்த விலை கொட்டகைக்கான செலவுகள் சுமார் ரூ. 5000 மட்டுமே. ஆடுகள் உள்ளூர் சந்தையில் விற்கப்படுகின்றன.

ஆ. மீன்பிடிஅலகு
2018 ஆம் ஆண்டில், அவர் 600 கிலோ/0.3 ஹெக்டர் உற்பத்திதிறன் கொண்ட 3 எண்ணிக்கையிலான மீன் குளங்களை உருவாக்கினார் மற்றும் உள்ளூர் சந்தையில் மீன்களின் சராசாி விலை ரூ 200/கிலோ பண்ணையின் அனைத்து அலகுகளிலிருந்தும் பொருட்கள் மீன் குளங்களுக்கு உரமாகவும் தீவனமாகவும் பயன்படுத்தபடுகின்றன.

இ. மண்புழு உர பிரிவு
ஆண்டுக்கு சராசாியாக 3000 கிலோ மண்புழுஉரம் தயாரிக்கும் திறன் கொண்ட 6x4x2 அடி அளவுள்ள 2 மண்புழுப் படுக்கைகளைக் அமைத்துள்ளார். இது அவரது பண்ணையில் உள்ள அனைத்து பயிர்களுக்கும் முழுமையாக பயன்படுகிறது. பண்ணையில் இருந்துவரும் மூலப்பொருட்கள் ஆண்டு முழுவதும் உரம் தயாரிக்கப் பயன்படும் அடி மூலக்கூறுகளாகும்.

தாக்கம்:

விவசாயி உருவாக்கிய புதிய தொழில்நுட்பங்கள், கடந்த 3 ஆண்டுகளாக அவரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, பொருளாதார ரீதியாக பலனளிக்கின்றன. ஸ்ரீ வல்லம் கே. லிங்ராவின் பண்ணை இப்போது ஒரு மாதிரி பண்ணையாக உள்ளது. அவரது வெற்றியால் அவரது கிராமத்திலும், மாவட்டத்திலும் கோழிப்பண்ணை வைத்திருக்கும் விவசாயிகள் ஊக்கமடைந்து, கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் விருது பெற்ற புதுமையான யோசனையை ஏற்றுக்கொண்டனர். “குறைந்த விலை கோழி அடுக்கு கொட்டகை மாவட்டம் மட்டுமன்றி மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கோழிப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். அவர் தனது பண்ணையில் இருக்கும் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து வருகிறார். அவர் தனது பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு முற்போக்கான விவசாயியாக, அவர் எப்போதும் திறன் மேம்பாட்டிற்குத் திறந்தவர் மற்றும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் விவசாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தொிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார். பயிற்சிகள்,பல்வேறு துறைகளைச் சர்ந்த நிபுணர்களைச் சந்திப்பது போன்றவற்றால், அவர் இப்போது மேம்படுத்தப்பட்ட விவசாய முறைகள் தொடர்பாக மற்ற விவசாயிகளுக்கு ஒரு செல்வாக்கு மற்றும் ஊக்குவிப்பாளராக உள்ளார். மாவட்டத்தில் கோழி மற்றும் பன்றி வளர்ப்பு சிறப்பு குறிப்புடன் அவர் தனது தொகுதியில் வெற்றிகரமான ஒருங்கிணைந்த வேளாண்மை முறையை நிறுவுவதற்கு முன்மாதிரியாக மாறியுள்ளார்.

அட்டவணை 1: ஒருங்கிணைந்த பண்ணையின் ஒவ்வொரு கூறுகளிலிருந்தும் பெறப்பட்ட மொத்த செலவு மற்றும் நிகர வருமானம்

 
கூறுகள் பகுதி/எண்ணிக்கை மொத்தவருமானம் நிகரவருமானம் பி:சி
பாதுகாக்கப்பட்டசாகுபடி (2018 லிருந்து)  1 (500 மீ2)  1,10,000.00 45583.00 0.71 (முதல் ஆண்டு )
திறந்தசாகுபடி  எள்ளு 2,40,000 182508.00 3.20

 

 

 

 

 

 

கால்நடை பராமாிப்பு மற்றும் கால்நடைகள்

 
1.கோழிவளர்ப்பு முட்டையிடும் கோழிகள் 8,76,000.00 7,09,140.00 4.25
உள்ளூர் இனங்கள் 18,000.00 8,556.00 2
2.ஆடு வளர்ப்பு 15  60000.00 38000.00 1.73
3. பன்றிவளர்ப்பு 1 (9 பெண் பன்றிகள் மற்றும் 1 ஆண் பன்றி 6,00,000.00 4,31,419.00 2.4
4.மீன் வளர்ப்பு (மதிப்பீடு) மீன் வளர்ப்பு (மதிப்பீடு) 15000.00 35000.00 2.3

 

 

 

 

 

 


Mawsiatkhnam KVK
East Khasi Hills,
Upper Shillong – 793009
Meghalaya
E-mail: kvkekhup@gmail.com

Note: This article was originally published in Bidyut C. Deka, A.K.Singha, Divya Parisa, Azriel Mervin Tariang,
Emika Kordor Kyndiah Mesaya R. Marak (Eds.,),Integrated Farming Systems for Doubling Farmers’
Income in NEH Region of India, ICAR- Agricultural Technology Application Research Institute, Zone – VII,
Umiam, Meghalaya – 793103, March 2020.

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 4

 

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...