ஒருங்கிணைந்த பண்ணை அதிக வருமானம்


ஒருங்கிணைந்த சாகுபடி முறை, பண்ணை அமைப்பில் உள்ள பல்வேறு கூறுகளை இணைக்கிறது.
கூறுகளுக்கு மத்தியில் ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஒரு கூறின் வெளிபாடு மற்றொரு கூறின் இடுபொருளாக உருவாகிறது. ஒருங்கிணைந்த சாகுபடி முறையின் அணுகுமுறை, மற்ற கிராம தேவைகள் பூர்த்தி செய்வதைத் தாண்டி, ஆதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல், நிலைத்த, பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை வாழ்வாதாரங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஆரோக்கிய மற்றும் பல்வகை உணவு, கால்நடை தீவனம் போன்றவைகளின் வழியை நோக்கி செல்கிறது.


தமிழ்நாடு, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனபகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம், கொடியள்ளியாகும். இங்கு பெரும்பாலும் சிறு மற்றும் மானாவாரி விவசாயிகள் வானிலை மாற்றங்களினால் அச்சமுற்று இருக்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு, அவர்கள் பருவக்கால மானாவாரி நிலத்தில் ஒற்றை சாகுபடி முறைகளை நம்பியே இருக்கின்றனர். குறைந்த மண் வளம், பூச்சி மேலாண்மைக்கு விலையுயர்ந்த மற்றும் ஆபத்தான இரசாயன இடுபொருள்களை பயன்படுத்துகின்றனர். ஆண்கள் நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்வதால், பெண்களே விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர். பூச்சி தாக்குதல், குறைந்த மண் வளம் மற்றும் சீதோஷண நிலைமாற்றத்தோடு ஒற்றை பயிர் முறையில் உள்ளடங்கியிருக்கும் ஆபத்தோடு பல பேர் போராடி வருகின்றனர்.

விவசாயிகளை உயிர்ச்சூழல் முறைக்கு மாற்ற உதவி புரியவும், அதனால் சாகுபடி செலவுகளை குறைத்து மகசூல் அதிகாிக்கவும் ஏ எம் இ நிறுவனம் கொடியள்ளி விவசாயிகளோடு 2021 ஆம் வருடத்திலிருந்து பணிபுரிந்து வருகிறது. முறையாக விவசாய சமூகங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, தொடர் கள வழிகாட்டுதல் மூலம், இயற்கை ஆதார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த சாகுபடி முறைகளிலிருந்து ஏற்றுகொள்ளக்கூடிய மற்றும் சுலபமாக செயல்படுத்தக்கூடிய மாற்று தொழில்நுட்பங்களை பாிசோதனை மேற்கொண்டனர். இந்த கற்றல் முறைகளில் ஆர்வமாக பங்குகொண்ட விவசாயிகளில் ஒருவர், 27 வயது நிரம்பிய தமிழரசி ஆவார்.

ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் நிலக்கடலை அல்லது கேழ்வரகு பயிர்களை ஒற்றைப்பயிர் முறையில் சாகுபடி செய்து வந்தார். அவர் இரண்டு மாடுகளுக்கு தொடர்ந்து விலையுயர்ந்த மற்றும் வெளியிலிருந்து வாங்கப்பட்ட பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர்த்தீவனங்கள் அளிக்கப்பட்டது. ஏஎம்இ நிறுவனத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலமாக தமிழரசி ஊக்கப்படுத்தப்பட்டு, அவருடைய நிலத்தில் ஒருங்கிணைந்த சாகுபடி முறை மாதிரியை செயல்படுத்தினார். மேலும் இவர் வீட்டுத் தோட்டங்கள், அசோலா மற்றும் காளான் போன்ற கூடுதலான கூறுகளை தன்னுடைய பண்ணையில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்.

கலப்பு சாகுபடிக்கு நகர்தல்
துவக்கத்தில், தமிழரசி குடும்பத்திற்கு தேவையான உணவு, தீவனம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயிர் சாகுபடியிலிருந்து பலப்பயிர் சாகுபடிக்கு நகர்வதற்கு முடிவு செய்தார். உயிர்ச்சூழல் அணுகுமுறைகளை செயல்படுத்துவதற்கு தயாராக இருந்தார். பயிர் இணைகளான ஆழமான வேர் மற்றும் மேலே கொண்ட வேர்களும், தானியம் மற்றும் பயறு விதைகள் கண்டு பல்வேறு பயன்கள், தேவைகளை பூர்த்தி செய்கின்றது. உதாரணமாக, பல்வேறு உணவுகள் கிடைக்கும், கால்நடையின் உணவு ஆதாரங்கள், மண் மற்றும் சிறுசீதோஷணத்தை உயர்த்தவும், பயிர் கழிவின் மகசூலை விரிவடைய செய்யவும், பூச்சி மற்றும் நோய்கள் கட்டுபடுத்துவதற்கு உயிர்ச்சூழல் முறை மூலம் அதாவது பூச்சிகளை கட்டுபடுத்த, உண்ணிகளை பயன்படுத்த ஊக்கப்படுத்தி, இந்த சாகுபடி முறையை பின்பற்ற செய்கின்றனர். மேலும், இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு தாவரம் மற்றும் கால்நடைகளின் கழிவுகள் சேகாிக்கப்படுகிறது.

குடும்பத்திற்கு வருடம் முழுவதும் இருக்கும் தேவையை, நிலக்கடலையோடு ஊடுபயிராக துவரையை விதைப்பதில் பூர்த்தி செய்யப்படுகிறது. பூச்சியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஆமணக்கு பொறிப்பயிராக விதைக்கப்படுகிறது, உள் வரிசையில் தட்டப்பயிரை பயறுவகையின் ஆதாரமாக கருதப்படுகிறது. வெளிவரிசையில் செஞ்சோளம் / கம்பு விதைகளை விதைப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் உள்ளே வருவதை தடுத்து முக்கியப்பயிரை காக்கிறது. உணவு தானியங்கள் மற்றும் தீவன மகசூலை தாண்டி உண்ணிகளையும் ஈர்க்கிறது. அரை ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடிக்கு ஒதுக்கப்பட்டது, அடுத்த பாதி நிலத்தில் கேழ்வரகுடன் அவரை மற்றும் துவரை ஆகியவை ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது.

0.5 ஏக்கர் பகுதியில் தீவனபயிர்கள் உருவாக்கப்பட்டது. பல வருட பயிரை வகையை சேர்ந்த தீவனபுல்லான கோ 4 கம்பு நேப்பியர், இனிப்பு சூடான், கோ எப் எஸ் 29 பல்வெட்டு செஞ்சோளம், டெஸ்மேந்தஸ் போன்றவை 3-4 மாத காலத்திற்கு தேவையான தீவன தேவையை பூர்த்தி செய்வதற்கு இவை சேர்க்கப்படுகிறது

பயிர் மற்றும் கால்நடை கழிவுகள் மறு சுழற்சி செய்தல்
முன்பு, தமிழரசி பயிர் மற்றும் கால்நடை கழிவுகளை மறுமுறை சுழற்சி செய்வதற்கு பயன்படுத்துவதேயில்லை. அவற்றை பண்ணை முழுவதும் அப்படியே விட்டுவிடுவார். இது 10-11 மாதத்திற்கு சூரியன் மற்றும் மழைக்கு வெளிப்பட்டு சாியாக மக்காமல், அதனால் மண் வளம் விரிவடைவதற்கு உதவவில்லை.

ஆனால் தற்போது பயிர் மற்றும் கால்நடை கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரத்தை தயாரிக்கும் முறையை கற்று, செயல்படுத்தினார்.10 க்கு15 அடி அளவுகொண்ட குழி எடுக்கப்பட்டது. இதை இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டது. ஒரு பங்கில், பசுஞ்சாணம் பாதுகாப்பாக மக்கு செயல்முறையின் கீழ் சேகாிக்கப்படுகிறது. மற்றோரு குழியில் அறுவடை செய்யபட்ட கழிவுகள், தோகைகள், மற்றும் இதர தாவர இலைதழை ஆதாரங்கள் சேகாிக்கப்படுகிறது. தினந்தோரும், ஒவ்வொரு குழியும் நிரப்பப்படுகிறது. மேலும் 1-2 அடி இலைதழைகளை நிரப்பிய பின்னர், சாணக் கரைசலை தௌிக்க வேண்டும்.

கொல்லைப்புறத்தில் 5 கோழிகள் மற்றும் இரண்டு ஆடுகள் வளர்த்ததனால், அதன் கழிவுகளும் மக்குஉரக் குழியில் நிரப்பப்படுகிறது. சராசாியாக 2 பசுக்களிலிருந்து 25 கிலோ சாணமும், 5 கோழிகளிலிருந்து, 600கிராம் கழிவும் மற்றும் 2 ஆடுகளிலிருந்து ஒரு கிலோ புலுக்கையும் சேகாிக்கப்படுகிறது. குறைந்த நேரத்தில், அதிக தரமான உரம் தயாரிக்கப்படுகிறது.

தீவன மேலாண்மை
கேழ்வரகு வைக்கோல் (912 கிலோ), நிலக்கடலை சக்கை (476 கிலோ), செஞ்சோள வைக்கோல் (122கிலோ), போன்ற பல்வேறு தீவனபயிர் அறுவடைகள், பண்ணையில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனமாக பங்களிக்கிறது. பருவக்கால பயிர்களை அறுவடை செய்வதானால், தீவனங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. அதேசமயத்தில் செஞ்சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆற்றல் அளிக்கும் தானியமாக பயன்படுகிறது. நிலக்கடலை பிண்ணாக்கு புரத ஆதாரமாக இருக்கிறது. சுமார் 47 கிலோ கடலை பிண்ணாக்கு,100 கிலோ நிலக்கடலை கொட்டையிலிருந்து எண்ணெய் எடுத்தப்பின் கிடைக்கிறது. கேழ்வரகு மற்றும் பயறு தவிட்டோடு கலந்து சுமார் 200 கிலோ அடர்தீவனம் தயாரிக்கப்படுகிறது.

பயிர் அறுவடைக்குபின் கிடைக்கும் தாவர கழிவுகளை தீவனமாக பயன்படுத்தி, அடர் தீவனங்கள் தயார் செய்து பயன்படுத்துவதால், தமிழரசி பசுந்தீவனம் மற்றும் அடர்த்தீவனம் வாங்குவதை தவிர்த்தார். முன்பு, மாதத்திற்கு 210 கிலோ அடர் தீவனம் ரூ.1650 ற்கு வாங்கப்பட்டது. 250கிலோ பசு (சோளம்) அல்லது உலர் (வைக்கோல்) தீவனம் வாங்குவதற்கு ரூ.7500 ஆகிறது. இந்த செலவுகள் என்னுடைய மொத்த வருமானமும் காலியாகிறது. உணவுத் தேவையோடு பண்ணை கால்நடைகள் வளர்ப்பது பல நேரங்களில் பாரமாக கருதினேன் என்றார் தமிழரசி. இவரின் 2 பசுக்கள் தற்போது தினமும் 10-15 லிட்டர் பால் மகசூல் அளிக்கிறது. பால் விற்பது மூலம் மாத வருமானம் சராசாியாக ரூ.16,500 முதல் 20,000.

ஒருங்கிணைந்த சாகுபடி முறை – பல்வேறு பயன்கள்

2019-20 ஆம் ஆண்டு, அரை ஏக்காில், தமிழரசி 280 கிலோ நிலக்கடலை மற்றும் 670 கிலோ கேழ்வரகு அறுவடை செய்து, ரூ. 30,000 முதல் 35,000 / ஏக்கர் வருமானம் பெற்றார். ஆனால், 2021-22 ஆம் ஆண்டில், முக்கிய பயிரான நிலக்கடலை (436கிலோ / 0.5 ஏக்கர்) மற்றும் கேழ்வரகைக் (920கிலோ/ 0.5ஏக்கர்) காட்டிலும் பல பயிர்களை அறுவடை செய்து ரூ.44,560 வருமானம் பெற்றார். கொல்லைபுறத்தில் உருவாக்கிய வீட்டுத்தோட்டத்தில் மூன்று மாத காலத்தில், இவர், 3 கிலோ தக்காளி, 1.5 கிலோ மிளகாய், 3 கிலோ வெண்டைக்காய், 2 கிலோ அவரை, 25 கிலோ சுரைக்காய், 20 கிலோ பீர்க்கங்காய்,10 கிலோ பாகற்காய், 2.5 கிலோ கத்தாிக்காய், 4 வகை கீரைகள், 10 கிலோ கொத்தவரை மற்றும் 25 கிலோ பூசணிக்காய் ஆகியவற்றை அறுவடை செய்கிறார். வெளியில் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்து, தமிழரசி செப்டம்பர் முதல் நவம்பர் 2021 வரை சுமார் ரூ.4500 சேமித்து, ஆரோக்கிய உணவும் கிடைத்தது. மேலும், காய்கறி கழிவுகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், மக்குஉரக் குழியிலும் பயன்படுத்துவர்.

கால்நடை தாண்டி, கூடுதலாக மூன்று கூறுகள் தன்னுடைய பண்ணை அமைப்பில் வருமானம் மற்றும் உர ஆதாரங்கள் உயர்த்துவதற்காக – கொல்லைபுற கோழிவளர்ப்பு, ஆடுகள் மற்றும் அசோலா ஆகியவற்றை சேர்த்தார். டிசம்பர் 2021 நிலவரப்படி, ஆடுகள் ரூ.16.000, கோழிகள் 40 முட்டை மகசூல் கிடைத்தது. 250 கிராம் எடை கொண்ட 35 குஞ்சுகள் பொறித்தது. கோழிகள் வளர வளர எதிர்பார்த்த இலாபம் சுமார் ரூ.28,000. கொல்லை புறத்தில் நவம்பர் மாதம் இவர் அசோலா வளர்க்க துவங்கினார். 12 சதுரமீட்டர் பகுதியில் ஒரு நாள் இடைவெளியில் 0.5 முதல் 1 கிலோ அறுவடை செய்ய துவங்கினார்.

இவ்வாறு அனைத்து இணைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த கூறுகள் மூலம் தமிழரசி மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் சேமிப்பும் சேர்ந்து பண்ணையிலிருந்து சுமார் ரூ.1,05,560/- பெற்றார். அதிகாிக்கப்பட்ட வருமானத்தை தாண்டி, ஒருங்கிணைந்த சாகுபடி முறை மூலம், தமிழரசிக்கு ஊட்டச்சத்து உணவு கிடைக்கிறது, உயிர்ச்சூழல் பூச்சிக்கட்டுபாட்டை பின்பற்றுவது, தாவரம் மற்றும் கால்நடை கழிவுகள் மறுசுழற்சி செய்து வீட்டிலேயே கால்நடைக்கான தீவனம் தயாரிக்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த அனைத்து கூடுதல் தொழில்களும், பண்ணையில் நீண்ட காலத்திற்கு பணியில் இருக்க வைக்கிறது. என்னுடைய சொந்த பணியை செயல்படுத்துவதில், நான் பெருமையாக நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

ஜெ. கிருஷ்ணன்


J Krishnan
Team Leader,
AME Foundation
Dharmapuri, Tamil Nadu
E-mail: krishnan.j@amefound.org

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 4

 

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...