ஊட்டச்சத்து வீட்டுத் தோட்டம் – கோவிட் காலத்திற்குப் பிறகு உறுதியளிக்கும் புதிய தொழில்நுட்பம்


உலகமே புதிய கொரோனா வைரஸால் பற்றிக்கொண்டு அழிவின் தாக்கத்தில் இருக்கிறது. நாடுகள் பல கேள்விகளோடு நோய் தாக்குதலின் நேரடி தாக்கத்தை தாண்டிசெல்லும் நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிகபட்ச வாழ்வாதார இழப்புகள், வேலையின்மை, பசி மற்றும் குடிமக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நிலையும் குறைந்துள்ளதை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.


ஊரடங்கு வேளாண்மை பொருளாதாரத்தில் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கும் வண்ணம் அரசானது சில நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், உணவு வினியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையு+றுகள் நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பொியளவிலான அதிர்ச்சியை வலுக்கட்டாயமாக பொறுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. கூலியாட்கள் குறைபாடு, போக்குவரத்து மற்றும் குறைவான சந்தை இயக்கங்கள் ஆகிய காரணங்களால், விவசாயிகள் அறுவடை செய்வதற்கும், பசுமை பொருட்களை விற்பனை செய்வதற்கும் போராடி கொண்டிருக்கின்றனர்.

கோவிட் – ஐ தவிர்த்து, மோசமான வானிலை ஏற்றத்தாழ்வுகள், தண்ணீர் பற்றாக்குறை, மண் சீர்கேடு போன்ற சவால்கள் எதிர்கால உணவு வினியோகத்தை அச்சுறுத்துகிறது. வேளாண்மை உற்பத்தியில் பல்வகைமை முறை, இந்த சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வுகாண உதவும், மேலும் ஆற்றல் நிறைந்த உணவிலிருந்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுமுறைக்கு மாறும். நிலைத்த உணவு மதிப்புசங்கிலிகள் உருவாக்கி உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தலாம்.

ஊரடங்கின்போது எங்களுக்கிருந்த ஒரே சிந்தனை எப்படி ஒரேநேரத்தில் தூய்மையான மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைக்கும். நாம் முழுமையான உணவிலிருந்து தொலைதூரம் கடந்து கொழுப்புசத்து நிறைந்த பர்கர் மற்றும் பாஸ்தாஸ் ஆகிய உணவுமுறைக்கு மாறிவிட்டோம். ஒரு காலத்தில் நாம் உண்ணும் உணவு வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்க்கப்படும், இந்த பழக்கம் இன்னும் கேரளா மாநிலத்தில் புழக்கத்தில் உள்ளது.

உள்ளூர் குறித்த கருத்து என்பது இந்நாட்களில் புதுமையாக கருதி ஒவ்வொரு உள்ளூர் பொருளும் நவீனத்தன்மை என்ற முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் இவை சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கிறது.
தேசியளவில், ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க ஊக்கபடுத்தி, அனைத்திற்கும் மேலாக உள்ளூர் காய்கறி வகைகளை உட்படுத்தும் தேவையை உணர்த்துவதற்கு பல இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் காய்கறிகள் கண்டிப்பாக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியம், சமூகம், கலாச்சாரம் மற்றும் உயிர்ச்சூழல்கள் அனைத்தையும் உயர்த்துகிறது.

சட்டீஷ்கர் அரசு, உதாரணமாக, இதன் முக்கியதுவத்தை உணர்த்துவதற்கு, ஒரு பள்ளியில் படி வளர்ச்சி என்ற மாதிரி திட்டமான என்.ஜி.ஜி.பி (நர்வாகாறு அ குருவாபடி) ஏற்கனவே இந்த திசையில் பணியை துவங்கி, படிஸ் – ஐ எப்படி வளர்ப்பது என்ற வழிகாட்டி கையேட்டை வழங்குகிறது. வானிலை மற்றும் கொரோனா பரவல் போன்ற சவாலான சமயத்திலும் , அரசின் ஊக்கத்தொகை கொல்லைப்புற தோட்டம் வளர்ப்பதில் மாற்றத்தை உணவு உத்திரவாதம் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும் திசையில் கொண்டு வரலாம். ப்ரதான் அமைப்பின் அறிக்கைப்படி, (அர்பான் பட்டாச்சர்ஜி மற்றும் அஜெய் குப்தா, வேளாண் உலகம், ஜூன் 2020) சோமிபாகெல், பஸ்தார், சட்டீஷ்கர் , சேர்ந்த ஒரு குறு விவசாயி, ஊக்கமளிக்கும் கதை ஒன்று இவர் படியை உருவாக்க முடிவு செய்யக் காரணமாக இருந்தது. பின்னர் இவர்கள் நபார்டு வங்கியின் பல திட்டங்கள், மாவட்ட தோட்டக்கலைத் துறை, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் ப்ரதான் அமைப்பு ஆகியவற்றின் கீழ் உதவிகளை படி உருவாக்குவதற்கு மற்றும் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் கற்று அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்றனர்.

படி திட்டத்தில் ,வேளாண் மாற்றுவழிகளான சத்துக்கள் நிறைந்த வீட்டுத் தோட்டம் வளர்க்க செய்வதற்கு பங்கேற்பாளருக்கு மேடையளிக்கிறது. படி வித்தியாசமில்லாமல் அனைத்து பழங்குடியினர் வீட்டிலும் மக்காச் சோளம், சிறுதானியங்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்த உள்ளூர் காய்கறிகளான பப்பாளி, முருங்கை, சில பலபயிர் கொடிகளான கோவைக்காய், சாம்பல் பூசணி, மற்றும் கீரைகளின் இரகங்கள் யாவும் தேவைக்கேற்ற மாதிரி குறிப்பிட்ட இலாபம் மற்றும் உணவுப்பொருள் வினியோகிக்கிறது. படிஸ் என்பது கிராம பழங்குடியின விவசாயிகள் குறிப்பாக பெண்களுக்கு கிடைத்த விலையில்லா ஆதாரங்கள் . வீட்டுத் தோட்டம் குறித்த பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. மேலும் இதன் பன்முக பயன், கிராம குடும்பங்களுக்கு நல்ல வாழ்வளிக்கும் என்பதும் இந்த வாக்குவாதத்திற்கு துணைபோகும் . கொரோனா காலத்திற்குபின் பெண்கள் உணவு உத்திரவாதத்தை உறுதிசெய்ய தாங்கள் படிஸ்-ஐ உருவாக்குவதற்கு இந்தத் திட்டத்தில் பதிவுசெய்வது அதிகாித்துள்ளது. லோக்கலிஷியஸ் என்பது உள்ளூர் உணவுக்கான மக்கள் இயக்கம் . மேலும் கிருஷ்ணா மெக்கென்ஸ், சாலிட்யூட் கபே, ஆரோவில், பாண்டிச்சோி, அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சி. உள்ளூர் உணவுகள் கடினமாகவும் அதிகளவில் வளர்வதற்கும் சுலபமாக இருக்கிறது. இதற்கு குறைந்த அளவே பாதுகாத்தால் போதும் , அதாவது சிறிது தண்ணீர் ஊற்றி வளர்த்தால். இது சுலபமாக வளர்க்கலாம் நிறைய சத்துக்கள் இருக்கின்றது,மேலும் பொருளாதார ரீதியில் அனைவருக்கும் சாத்தியமான தேர்வு.

ஒட்டுமொத்த சமூகமும் வாரம் சில நாட்கள் அதிக பல்வகைமை கொண்ட சத்துமிக்க ஸ்பினாச்சுகள், கிழங்குகள் அல்லது பச்சை பப்பாளி ஆகியவற்றை உண்டால் அதன் சாகுபடியை அதிகாிக்கலாம். நமது மீட்கும் பணியில் தாய் பூமியோடு இணைவதற்கும், நமக்கு தேவையான ஊட்டச்சத்தையும் , நம் உணர்வோடு ஆழமான மாற்றம் உண்டாகும். கொரோனா காலத்திற்குப் பின் அதிக எண்ணிக்கையில் சமூக காய்கறி கூடை திட்டத்திற்கு கையொப்பமிட்டனர்.

உத்தான், குஜராத் மாநிலத்தில் உள்ள நிறுவனம் , தொடர்ந்து இவர்கள் பணிசெய்யும் கிராம சமூகங்களோடு தொடர்பில் இருந்தனர். அவர்கள் கொரோனா சமயங்களில் பல கிராமங்கள் காய்கறிகள் அல்லது நிலைத்த விதை இரகங்கள் சுலபமாக கிடைக்காமல் கஷ்டபட்டதை கவனித்தது. பணம் இல்லாத காரணத்தால் யாரும் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்தனர். பெண்களும் , குழந்தைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஏனென்றால் ஆண் ஆதீக்கம் உள்ள குடும்பங்களில் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல நிலமற்ற விவசாயிகள் காய்கறிகள் வளர்ப்பதற்கும் வாய்ப்பில்லாமல் இருந்தனர்.

53 கிரமங்களைச் சேர்ந்த 2514 குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்ட கிட்டுகள் வழங்கப்பட்டன. ஆறு இரகவிதைகள் கடலோரப் பகுதியில் உள்ள 864 குடும்பங்களுக்கும், பழங்குடியின பகுதியில் உள்ள 1650 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. உயிர் உரம் மொத்தமாக பெண்கள் குழுக்கள் மற்றும் நிலைத்த வேளாண்மை பெண்கள் பயிற்சியாளர்களால் கவனிக்கப்பட்டது. இந்த கிட்டுகள் சுமார் 1000-1500 ச.அடி வடிவமைக்கபட்ட நிலப்பகுதி அல்லது மக்களின் வீடுகளை சுற்றியுள்ள நிலம் பொருத்தமாக இருக்கும். உள்ளூரில் ஆராய்ச்சி செய்த மற்றும் தூய்மையான விதை இரகங்களான வெண்டை, கொத்தவரை, கருப்பு புள்ளி பட்டானி, சுரைக்காய், பாகல், பீர்க்கங்காய் ஆகியவை வினியோகிக்கப்பட்டது. இவற்றை வினியோகிக்கும்போது பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உத்தான் நிறுவனத்தால் உருவாக்கி அதாவது முகக்கவசம், கையுறை மற்றும் குழு மற்றும் கிராம உதவியாளர்களால் இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தினர். நல்ல தொழில்நுட்பங்களை உறுதிப்படுத்த நிறைவான முயற்சிகளை பெண்கள் பயிற்சியாளர்களால் எடுக்கப்பட்டது. அவை விளம்பர சீட்டு,சாகுபடி முறைகள் மற்றும் உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி குறித்த வீடியோக்கள் மூலம் டிஜிட்டல் விழிப்புணர்வை நிலைத்த வேளாண்மை தொழில்நுட்பங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

இந்த நோய் பரவலின்போது தேவையான இரக்கத்தோடு உணர்வு பூர்வமாக எடுக்கும் முயற்சிகள் 2514 குடும்பங்களுக்கு சென்றடைந்தது, இதன் மூலம் மேலும் 7500 குடும்பங்களுக்கு உதவிசெய்தது, குறிப்பாக நிலமற்றவர்கள், நிலம் மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் இல்லாத நிலையில் காய்கறிகள் வளர்க்க முடியவில்லை. இது ஒரு நாளைக்கு 700 கிராம் சத்துக்கள் உத்திரவாதத்திற்கு தேவையான காய்கறிகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காய்கறிகள் 7500 குடும்பங்களுக்கு 2.5 மாதங்கள் அதாவது மத்திய ஜுலை முதல் செப்டம்பர் 20 வரை சராசாியாக ஆறு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு இது போதுமானது.
இம்மாதிரியான பல இயக்கங்கள் இருக்க வேண்டும் அதில் சத்துக்கள் வீட்டுத் தோட்டத்தின் மூலம் பலவகை உணவு வகைகளை வளர்ப்பதினால் சத்துக்கள் கூடுதலாக கிடைக்கும் என்ற முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான தேவையின் முக்கியத்துவத்தை இந்த சவாலான சமயங்களில் அளிக்க வேண்டும். எந்த இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைக் காட்டிலும் உள்ளூர் காய்கறிகளே நல்ல எதிர்ப்புசக்தி அளிக்கும். விவசாயிகளும் தங்களின் கலாச்சார சாகுபடி பாரம்பாியத்தை மதிக்க துவங்க, வெளிப்படுத்த, அவர்களுடைய சமூகத்தை உருவாக்க உதவுவதற்கு தயாராக இருக்க வேண்டும். இது அவர்களை பொருளாதாரத்தின் மூலம் கௌரவ படுத்துகிறது.

லட்சுமி உண்ணிதான்


Lakshmi Unnithan
Editor - Agriculture World
Head PR & Communication
KRISHI JAGRAN, DSR AGRI MEDIA PVT LTD
60/9, 3rd Floor, Yusuf Sarai Market
Near Green Park Metro Station, New Delhi-110016
E-mail: dr.lakshmi@krishijagran.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...