உயிரினப்பன்மயம் நெகிழ்திறனை கட்டமைக்கிறது


ஒழுக்கற்ற மழைபொழிவு முறைகளோடு ஒரினப்பயிர் முறைகள் சேர்ந்து கொள்ளும்போது, வேளாண்மை என்பது குறிப்பாக மானாவாரி பகுதிகளில் மிகவும் நம்பத்தன்மையற்றதாகவும், ஆபத்தானதாகவும் உருவாக்கி விடுகிறது. நீர் சேமிப்பு போன்ற சிறிய செயல்பாடுகள் பொிய மாற்றங்களை உருவாக்கி, விவசாயிகளை காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும் வகையில் தயார்படுத்தி விடுகிறது. பண்ணையில் உயிரினப் பன்மையை மேம்படுத்துவது, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும், ஆபத்துக்களை குறைப்பதிலும் உதவி செய்கின்றன.


தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வேளாண்மைதான். மதுரை மாவட்டத்தில் உள்ள மானாவாரி வேளாண் பகுதிகளில் 90 விழுக்காடு பயிர் இழப்பு என்பது பயிரின் வளர்ச்சிக்கு தண்ணீர் தேவைப்படும் மிகவும் முக்கியமான கட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுவதுதான். சமீபத்திய வருடங்களில், ஒழுக்கற்ற மழைப்பொழிவு மற்றும் உயர்ந்துவரும் வெப்பநிலை போன்றவை குடிப்பதற்கும், நீர்பாசனத்திற்குமான தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுவதோடு மட்டுமல்லாமல் நீரினால் ஏற்படும் நோய்களையும் அதிகாித்து விடுகிறது. தண்ணீர் பற்றாக்குறையினால், பயிர் இழப்பு அடிக்கடி ஏற்படுவதும், தீவன பற்றாக்குறை அதிகாிப்பதும், அதன் காரணமாக மக்கள் தங்களின் கால்நடைகளை விற்றுவிட்டும், வேளாண்மையை விட்டுவிட்டும் அருகாமையில் உள்ள நகர்புறங்களை நோக்கி இடம் பெயர்ந்து விடுகின்றனர்.

கால நிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில் சமூகங்களின் திறனை மேம்படுத்தி, அவர்களை வேளாண்மையில் தொடர்ந்து தக்க வைப்பதற்காக, தானம் பவுண்டேசன் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான திட்டத்தை முன்னெடுத்தது. டிசம்பர் 2011 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த திட்டம் மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டியில் 4 பஞ்சாயத்துக்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது முதலில் சமூக மூலதனத்தை கட்டமைப்பதில் கவனம் செலுத்தி பின்னர் நீர் அறுவடை செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. நீர் குறைவாக பயன்படும் பயிர்கள் சிறுதானியங்கள் மற்றும் தோட்டங்களை மரப்பயிர்கள் தேர்வில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் அணுகுமுறையாக விவசாயிகளும், கால்நடைகளும் காப்பீடு செய்யப்பட்டன. சுருக்கமாக சொன்னால், இது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒட்டுமொத்த அணுகுமுறையாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கிளங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் வேளாண்மை வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய மிகப் பொிய மாற்றம் வெற்றிக் கதையானது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மாறுவதற்கு கற்றுக்கொண்டது

இளங்கோவன் என்பவர் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி வட்டத்தில் உள்ள கிளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்திற்கு சொந்தமாக அவரின் தந்தை பயிரிட்டுவரும் 2 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. ஒழுங்கற்ற மற்றும் நிச்சயமற்ற மழைபொழிவின் காரணமாக கடந்த 3 வருடங்களில் அவரால் சாகுபடி மேற்கொள்ளமுடியவில்லை. அவர்களின் குடும்ப செலவுகளை மேற்கொள்வதற்கு கறவையில் இருந்து கிடைக்கும் வருமானம் போதவில்லை என்றாலும் அதையே நம்பியிருக்க வேண்டியிருந்தது.

மற்றொரு விவசாயிடம் இருந்து இளங்கோவன் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். அந்த நிலத்தில் இருந்த முட்புதர் செடிகளை அகற்றி விட்டு குதிரைவாலி மற்றும் பருத்தி பயிர்களை பயிரிட ஆரம்பித்தார். இந்த பயிர்களை அவர் தொடர்ச்சியாக 3 வருடங்களுக்கு பயிரிட்டார். ஆனால் அதில் ஒரு நல்ல அறுவடையை வெற்றிகரமாக அவரால் எடுக்க முடியவில்லை. அவர் கடும் இழப்பை சந்தித்தார்.

திட்டம் குறித்த ஓர் விளக்கக்கூட்டம் கிராமத்தில் விவசாய சமூகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பருவநிலை மாற்றம் மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு போன்றவற்றின் சவால்களை சமாளிப்பதில் இளங்கோவனுக்கு தேவைப்படும் விசயங்கள் இந்த திட்டத்தில் மிகப் பொருத்தமாக இருந்தது. பண்ணைக்குட்டை அமைப்பதனால் ஏற்படும் பயன்கள் குறித்து இளங்கோவனுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பண்ணைக்குட்டை என்பது நிலத்தில் உள்ள ஒரு பகுதியில் மண்ணை தோண்டி எடுத்து மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரை சேகரித்து அறுவடை செய்வதற்காக உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலத்தின் மேற்பரப்பிலும், அடிப்பரப்பிலும் வழிந்தோடி வரும் நீர் பண்ணைக்குட்டைகளில் சேகாிக்கப்படுகிறது. பண்ணைக்குட்டையில் சேகரிக்கப்படும் நீர் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் எடுத்து பயிர்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.

பண்ணைக்குட்டைகளில் பயன்களை அறிந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் யூனியனில் உள்ள முதுகுளத்தூருக்கு ஒரு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. சவேரியார்பட்டிணத்தில் விவசாயிகளோடு பண்ணைக்குட்டையின் தாக்க நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் படிப்பினைகளுக்கு பிறகு, இளங்கோவன் தனது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைப்பதென்று முடிவெடுத்தார். 2012 டிசம்பர் மாதம் இளங்கோவன் 33 மீட்டருக்கு 15 மீட்டர் என்ற அளவில், 1.6 மீட்டர் ஆழத்திற்கு 4 சென்ட் அளவில் தனது நிலத்தில் பண்ணைக்குட்டையை வெட்டினார். துரதிஷ்டவசமாக மழை இல்லாத காரணத்தால் அவரது பண்ணைக்குட்டைக்கு நீர் கிடைக்கவில்லை.

உயிரினப் பன்மயத்தை மேம்படுத்துவதால், வேளாண்மையில் உள்ள சவால்கள் பெருளவில் குறைக்கப்படுகிறது. வருமானத்திற்கான ஆதாரம் என்பது பல பயிர் சாகுபடி வேளாண்மையோடு கால்நடைகளையும், மீன் வளர்ப்பையும் சேர்த்து பெறப்படுகிறது.

உயிரினப் பன்மயத்தை மேம்படுத்துதல்:

2013 ஆம் ஆண்டு ஒரே மழையில் பண்ணைக்குட்டையானது நீரால் முழுமையாக நிரம்பியது. பண்ணைக்குட்டையில் நீர் முழுமையாக இருந்ததால், இளங்கோவன் தனது பண்ணையில் உயிரினப் பன்மயத்தை மேம்படுத்துவதற்காக பல பயிர் சாகுபடி செய்வதென முடிவெடுத்தார். பள்ளப்பட்டியில் உள்ள அழகர்சாமியின் பண்ணைக்கு ஒரு கல்வி சுற்றுலாவிற்காக சென்றது, அவரை தனது நிலத்தில் 50 முருங்கை கன்றுகளை வளர்ப்பதற்கு ஊக்கமளித்தது. இந்த கன்றுகள் அனைத்தும் பண்ணைக்குட்டையில் இருந்த தண்ணீரை கொண்டு வளர்க்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து மரக்கன்றுகளில் காய்கள் காய்க்க தொடங்கியது. அவருக்கு 40 காய்கள் கிடைத்தது. அதனை அவர் தனது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.

போதிய அனுபவம் இல்லாத நிலையிலும், அவர் செண்டுமல்லி சாகுபடியை நவம்பர் மாதம் மேற்கொண்டார். பிப்ரவரியில் அவர்கள் மலர்களை பறித்து அவரது பண்ணையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள தே. கல்லுப்பட்டி பகுதி சந்தையில் விற்றார். அதன் மூலம் ரூ.5800 வருமானம் ஈட்டினார். செண்டுமல்லி சாகுபடியானது தொடர்ச்சியான பணப்புழக்கத்திற்கு உதவியது. தாவரத்தின் இலைகள் அவரிடம் இருந்து 12 ஆடுகளுக்கு (2 ஆடுகள் இளங்கோவனுக்கு சொந்தமானது. மீதம் உள்ள 10 ஆடுகள் பக்கத்து விவசாயிகளுடையது) தீவனமாக பயன்படுத்தப்பட்டது. கடைசியாக நிலமானது அதில் இருந்த தாவர கழிவுகளோடு மடக்கி உழப்பட்டு மண்ணில் இயற்கை மட்கு பொருட்களை அதிகாித்தது.

பண்ணைக்குட்டைக்கு மேற்கு பகுதியில் உள்ள நிலத்தில் அவர்கள் 3 சென்டில் கத்திரி சாகுபடி செய்திருந்தார். பருவமழை தவறியதாலும், நோய் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததாலும், பயிர் மகசூல் மிகவும் குறைவாக கிடைத்தது. வெறும் 25 கிலோ கத்திரி மட்டுமே அறுவடை செய்யப்பட்டு அதில் 5 கிலோ வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மீதம் உள்ளவைகளை விற்றதன் மூலம் அவருக்கு ரூ. 750 வருமானமாக கிடைத்தது.

அதே காலக்கட்டத்தில், அவர் அரை ஏக்கர் பரப்பில் மிளகாய் சாகுபடியும் செய்திருந்தார். சவரியார்பட்டினத்திற்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு பண்ணைக்குட்டைகள் வைத்திருந்த பெருவாரியான விவசாயிகள் நிலத்தடி நீரை (உப்புத் தண்ணீர்) பண்ணைக்குட்டையில் இருந்த நீரோடு கலந்து நீர் பாய்ச்சுவதை கவனித்திருந்தார். அதே முறையை பயன்படுத்தி தனது நிலத்தில் உள்ள பயிர்களுக்கு நீர் பாய்ச்சினார். நீர் பாயும் வாய்க்கால் கரைகளில் 10 செஸ்பேனியா (அகத்தி) செடியையும் மற்றும் குப்பைக் கீரையும் பயிரிட்டிருந்தார். அதேபோல் நீர் பாயும் வாய்க்கால் கரையில் 2 கிலோ சின்ன வெங்காயத்தையும் பயிரிட்டிருந்தார்.

மிளகாய் பயிருக்கு அருகாமையில, 50 சென்ட் நிலத்தில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதுவரை அவர்கள் 14 முறை பருத்தி அறுவடை செய்து ரூ.2500 வருமானம் ஈட்டியுள்ளார். மேலும் அவர் காய்கறிப் பயிர்களான பாகல், பீர்க்கு மற்றும் கொத்து அவரை போன்றவற்றை கொண்டு வீட்டுத் தோட்டம் அமைத்தார். அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் அவரின் சொந்த நுகர்வுக்கும், அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் மீதம் உள்ள காய்கறிகள் அந்த கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த செயல்பாடு தனது குடும்பத்தின் தேவைக்கு காய்கறிகள் வாங்கும் செலவினை குறைத்ததோடு, அப்போதே பறிக்கப்பட்ட புதிய காய்கறிகளை உண்பது அதிகாிக்கச் செய்தது.

அனைத்துப் பயிர்களையும் அறுவடை செய்தபிறகு, அவர் தீவனச் சோளத்தை பயிரிட்டார். களைகளை தடுப்பதற்காகவும், நிலத்தின் உற்பத்தி திறனையம், நீர் பயன்பாட்டை அதிகாிக்கவும் ஊடுபயிர்களையும் பயிரிட்டார்.

கூடுதலாக அவர் பண்ணைக்குட்டையில் மீனும் வளர்த்தார். தானம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மீன் வளர்ப்பு பயிற்சியில் இளங்கோவன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார். அதன்பின் ரோகு, மிர்கால் மற்றும் கட்லா என்ற மூன்று வகையில் 750 மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டார். அதன் மூலம் 7.5 கிலோ மீன்களை அறுவடை செய்து அதில் 5.5 கிலோ மீன்களை கிராமத்தின் உள்ளே விற்றுவிட்டார். மீதம் இருந்த 2 கிலோ அவரின் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.

நீர் சேகாிப்பும் அதன் பயன்களும்

“அடிக்கடி பருவமழை பொய்த்துவிடுகிறது. திறந்த வெளி கிணறுகள் மற்றும் போர்வெல்லில் உள்ளவர்களிடம் தண்ணீர் வாங்குவது மிகவும் செலவு அதிகமானதாக உள்ளது. அதற்கு நான் முயற்சித்தாலும், அடிக்கடி நிகழும் மின் வெட்டுகளினால் மக்கள் யாரும் தண்ணீர் தருவதற்கு தயாராக இல்லை. தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்களை பார்க்கும்போது எனது இதயம் வேகமாக துடித்து அழ ஆரம்பிக்கிறது. நாம் பயிர்களை மட்டும்தான் உற்பத்தி செய்யமுடியும், தண்ணீரை அல்ல. கடவுளுக்கு நன்றி, பண்ணைக் குட்டை அமைத்ததன் வாயிலாக தண்ணீரை சேகாிக்கும் வழியை கண்டறிந்தேன். நான் தண்ணீருக்காக இனி நான் மற்றவர்களிடம் கையேந்த வேண்டியதில்லை, என பண்ணைக்குட்டையை பற்றி கூறுகிறார் இளங்கோவன்.

பண்ணைக் குட்டையின் வழியாக மழை நீர் சேகாிக்கப்படுவதன் பல்வேறு பயன்களை இளங்கோவன் உணர்ந்தார். பண்ணைக்குட்டையில் இருந்த தண்ணீர் 98 சென்ட் நிலத்தில் (ஒரு ஏக்கருக்கு சமம்) பயிர்களை வளர்ப்பதற்கு உதவி புரிந்தது. இருப்பினும், அவர் ஊடுபயிர்கள் மற்றும் அடர்த்தியாக பயிர்களை பயிரிட்டதனால் மொத்த சாகுபடி நிலப்பரப்பானது 191 சென்டாக மிக அதிக அளவாக காணப்பட்டது. முருங்கையில் ஊடுபயிராக சென்டுமல்லியும், மிளகாயில் ஊடுபயிர்களாக வெங்காயம் மற்றும் அகத்தியும், அதன் பின் பயிராக தீவனச் சோளம் 23 சென்டில் பயிரிடப்பட்டு அங்கு சென்டுமல்லி பயிரிடப்பட்டது. இந்த வகையில் முன்பு இருந்ததை காட்டிலும் பயிரின் அடர்த்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

அனேக பயிர்களின் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு அதனால் செலவினங்களை குறைத்தது. ஊதாரணத்திற்கு சென்டுமல்லி மற்றும் கத்திரியின் இலைகள் ஆடுகளுக்கு தீவனமாக பயன்பட்டது. மேலும் அதனுடன் செஸ்பேனியா (அகத்தி) அவரது நிலத்தில் பயிரடப்பட்டு, அதன் மூலம் அவர் பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடிந்தது.

பண்ணைக்குட்டை நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், அதன் வாயிலாக நிலத்தடி நீர் மட்டம் அதிகாிப்பதற்கும் உதவியது. பண்ணைக்குட்டை உருவாக்குவதற்கு முன் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து 20-25 நிமிடங்களுக்கே தண்ணீர் இறைக்க முடிந்தது. ஆனால் தற்போது 40-45 நிமிடங்களுக்கு தண்ணீர் இறைக்க முடிகிறது.

உயிரினப்பன்மயத்தை அதிகாிக்கப்பட்டதன் வாயிலாக வேளாண்மையில் சிக்கல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டது. (அட்டவணை 1). வருமானத்திற்கான ஆதாரம் என்பது பல பயிர் சாகுபடி வேளாண்மையோடு கால்நடைகளையும், மீன் வளர்ப்பையும் சேர்த்து பெறப்படுகிறது. மேலும் குடும்பத்திற்கான உணவு தேர்வு அதிகாித்து, அதன் மூலம் குடும்பத்தின் ஊட்டச்சத்தும் கூட அதிகாித்துள்ளது. மிக முக்கியமாக, பண்ணைக்குட்டையின் மூலம் நேரம் தவறி கிடைக்கும் மழைப் பொழிவைக்கூட சேகாித்து தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ள அவரால் முடிந்தது. மாரியம்மன் சுய உதவிக் குழுவின் உறுப்பினராகவும், கிராம அளவில் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் அமைப்பின் உறுப்பினராகவும், இளங்கோவன் இந்த அமைப்புகளை தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஆலோசனைகளை பெறவும், மற்றவர்களை கவர்கிற வகையிலும் பயன்படுத்தி வருகிறார்.

அட்டவணை 1:

 
வ.எண் பயிரின் பெயர் சாகுபடி பரப்பு/
விதைஅளவு
சாகுபடி செலவு (ரூ) மகசூல் சொந்த பயனுக்கு மொத்த வருமானம்  (சந்தை மதிப்பு)  நிகர வருமானம்

 

1 மாரிகோல்டு 46 சென்ட் 1650 184.5 கி – 10 அறுவடையில் 5800 4150
2. மிளகாய் 24 சென்ட் 3820 150 கி – காய்ந்த மிளகாய் 10 கி 9800 5980
3. சின்ன வெங்காயம் மிளகாயில் ஊடுபயிராக 50 154 கி 4கி 1040 990
4. கத்திரி 3 சென்ட் 500 25கி 5 கி 750 250
5. பாகல் 2 பாக்கெட் 10 15கி 4கி 600 590
6. கொத்து அவரை 2பாக்கெட் 10 10 கி 4 கி 100 90
7. பருத்தி 25 சென்ட் 1750 62.5கி 2500 750
8. முருங்கை 50 செடி 1500 முதல் முறை 40 காய்கள் அனைத்தும் 100 100
9. அகத்தி 10 விதைகள் 5 8கட்டுகள் 1 கட்டு 40 35
10.  கீரை 50 கிராம் 50 90 கட்டு 25 கட்டு 360 310
11. பீர்க்கு 2 பாக்கெட் 10 6 கி 90 80
12. மீன் வளர்ப்பு 750 மீன் குஞ்சுகள் 1050 7.5கி 2கி 1875 825

 

ஆர். ஆதிநாராயணன்


Adhinarayanan R
Program Leader,
Climate Change Adaptation Programme
DHAN Foundation
1 A, Vaidhyanathapuram East
Kennet Cross Road
Madurai 625016.
Tamil Nadu, India
E-mail: aadhi@dhan.org

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2017, வால்யூம் 19, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...