இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் தொழிற்பண்புகள்


மழையை சார்ந்து இருப்பது விவசாயிகளுக்கு எப்போதுமே பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். பல போிடமிருந்து உறுதியும், உதவியும் இருந்தால் மட்டுமே பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றுவது சாத்தியமாகும். இதற்கு, செபாஸ்டியன் ஒரு உதாரணமாக இருந்து, முன்மாதிரி பண்ணையாக மாற்றி, இயற்கை சாகுபடி முறைகளுக்கு மாற்ற விவசாயிகளுக்கு உதவி செய்கிறார்.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு, இயற்கை அல்லது உயிர் இடுபொருள்கள் பயன்படுவது முக்கியத்துவம் பெற்றுவருவது அனைவருக்கும் நன்கு தொிந்த விசயமே. சாதாரண வேளாண் முறையில் இரசாயன இடுபொருட்கள் இடப்படுவதால், பயிருக்கு சத்துக்கள் மற்றும் பாதுகாப்பும் நேரடியாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்கு நேர்எதிராக, இயற்கை வேளாண்மையில், இடுபொருட்கள் மண்ணிற்கு செலுத்தி, பொருளாதார அழிவு நிலைக்கு குறைவாக பூச்சிகள் மேம்படுத்துவதற்கு தகுந்த சுற்றுச்சூழல் உருவாக்குகிறது. இந்த முயற்சியில், விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறும்போது அவர்களுடைய எண்ணவோட்டத்தில் 2 முக்கிய பிரச்சனைகள் இருக்கும். ஒன்று, இயற்கை இடுபொருட்கள் கிடைக்கும் நிலை, மற்றொன்று தரமான விளைபொருட்கள்.
சமீபகாலமாக, சில புதிய கண்டுபிடிப்புகளை தொழிலாக ஏற்கும் விவசாயிகள் பலமுறை முயற்சி செய்து, செயல்படுத்தக்கூடிய உகந்த தயாரிப்பு முறைகளை கொண்டு தரமான உயிர்பொருட்கள் உற்பத்திசெய்து, மற்ற விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்கின்றனர். அதனால் விவசாயிகள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து வளரும் விழிப்புணர்வு பயனுள்ளதாக இருக்கிறது. பல்வேறு வகையான இயற்கை மற்றும் உயிர் இடுபொருட்கள் துவக்கி விவசாயிகளுக்கு விற்கப்பட்டது. செபாஸ்டியன் போன்ற விவசாய தொழில் முனைவர்கள்  வெற்றிகரமாக இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி செய்து, பகுதியில் மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டம், முகவனூர் கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி திரு. செபாஸ்டியன் அவர்கள். அவருக்கு சொந்தமாக நான்கரை ஏக்கர் வேளாண் நிலத்தில் இரண்டரை ஏக்கர்கள் மானாவாரி நிலமாகும். இரண்டு ஏக்கர் நிலத்தை, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவை ஆதாரமாக கொண்டு பாசனம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக பயிர் சாகுபடி செய்வது சவாலாக இருக்கிறது. ஆகையால் இவர் அதிகபாசனம் தேவைப்படும் பயிர்கள் சாகுபடி செய்வதை நிறுத்திவிட்டு, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்ற கொடிகளை சாகுபடி செய்கிறார். இந்தக் கொடிகளின் நிழலில், தக்காளியை புதிய முறையில் சாகுபடி செய்கிறார். இது அடிமட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதை அங்கீகாித்து, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் – நார்வே சீதோஷண நிலைக்கு ஏற்ற திட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையின் பயணம்
இவர் வாழ்வதும், இவருடைய பண்ணையும், தமிழ்நாட்டில் நம்மாழ்வார், புகழ்பெற்ற இயற்கை வேளாண்மை ஆர்வலர், துவக்கிய வானகம் என்ற நிறுவனத்திற்கு மிக அருகில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு, உயிர்ச்சூழல் வேளாண்மை குறித்த 5 நாள் பாடத்திட்டத்தில் பங்குகொண்டார். இந்த பயிற்சி சுருமான்பட்டி கிராமத்தில் உள்ள வானகம் உயிர்ச்சூழல் பண்ணையில் நடத்தப்பட்டது. வேளாண்மையில் தன்னுடைய அணுகுமுறையை மாற்றுவதற்கு இதுவே அவருக்கு திருப்புமுனையாக இருந்தது. உள்ளூர் அரசு சாரா நிறுவனமான அஹிம்சா, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தது. அதில் செபாஸ்டியனும் கலந்துகொண்டார். 1990 களில் தமிழ்நாட்டில் ஏ.எம்.இ-ன் தொழில்நுட்ப வழிகாட்டலின்படி இந்த நிறுவனம் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கற்று அதில் மிகுதியான அனுபவமும் பெற்ற நிறுவனமாக மாறியது. மேலும் வையம்பட்டி வட்டத்தில் உயிர்ச்சூழல் வேளாண்மையை ஊக்குவிப்பதில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறது. பின்னர், நபார்ட் மற்றும் அஹிம்சா மூலம் வழிநடத்தப்பட்டதால், அவர் உழவர் மன்றத்தில்  செயல் உறுப்பினராக சேர்ந்தார்.  வானகம் மற்றும் அஹிம்சா மூலம் அவருக்கு கிடைத்த தகவல், செபாஸ்டியனை இயற்கை வேளாண்மை பின்பற்றுவதற்கு ஊக்கப்படுத்தி திடமான முடிவை எடுக்கச்செய்தது. இவர் இயற்கை வேளாண்மை அணுகுமுறைகளை பின்பற்ற தொடங்கி, ஒரு வருடத்திற்குள் தனது நான்கரை ஏக்கர் முழு பண்ணையில் இயற்கை முறைகளை பின்பற்றினார்.
பிரச்சனைகளிலிருந்து கற்பனை பண்பிற்கு மாறுதல்
இவருடைய நம்பிக்கையின் சவால்களை, தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில்  வறட்சி மற்றும் உலர்  நிலை என்று  இயற்கை விளையாடியது. இதனால் அவருடைய இயற்கை விவசாய கனவு தொடர்வது தடைப்பட்டது. மானாவாரி நிலத்தில் தொடர்ந்து குறைந்த அளவு மழை பெய்ததால் இந்தப்பகுதியில் சாகுபடி செய்ய முடியவில்லை. திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துளை கிணறும் வற்றிவிட்ட நிலையில் பாசனம் செய்யும் நிலத்திலும் எந்தப் பயிரை வளர்ப்பதற்கும் சாத்தியமில்லாமல் போனது.
இந்த நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் அண்ணா தோட்டக்கலை பண்ணையில் இரண்டு நாள் பயிற்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பயிற்சியில் உயிர் இடுபொருள் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் எப்படி விவசாயிகள் மாற்று வருமானத்தை பெறலாம்  என்பதை மையமாக கொண்டிருந்தது. பயிற்சியில் கிடைத்த இடுபொருட்கள் மற்றும் யோசனைகள் அவருக்கு உயிர் இடுபொருட்கள் உற்பத்தியை துவக்குவதற்கான நம்பிக்கை அளித்தது. தனது சாகுபடி பிரச்சனைக்கு தீர்வாக அவர் கருதினார். அதனால் பயிர் சாகுபடி செய்வதற்கு ஆற்றல் மற்றும் ஆர்வத்தையும் உயிர் இடுபொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் மாற்றிக் கொண்டார்.
‘இயற்கை வேளாண்மை செயல்படுத்துவதற்கு போதிய நிலம் இருந்தும், தண்ணீர் பிரச்சனை இருப்பதால் எனது நிலத்தின் 50% பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்ய முடிந்தது. அதேநேரத்தில் சில விவசாயிகள் சொந்தமாக உயிர் இடுபொருள் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று வெளிப்படுத்தினார்கள். ஆகையால், நான் உயிர் இடுபொருள் உற்பத்தி செய்வதென்று முடிவு செய்துவிட்டேன். இது எனக்கு வருமானத்தின் ஆதாரமாக மட்டுமில்லாமல், இயற்கைக்கு நகரும் விவசாயிகளுக்கு என்னால் உதவி செய்ய முடிந்தது. இது எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியையும் கொடுக்கிறது” என்று செபாஸ்டியன் கூறினார்.
உயிர் இடுபொருள் உற்பத்தி மற்றும் வருமானம்
பண்ணையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, தற்போது அவர் தசகவ்யா, பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், மண்புழுஉரம், மூலிகை பூச்சி விரட்டிக் கலவை ஆகிய உயிர்பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். கால்நடை மற்றும் பயிர் கழிவுகள் ஆதார பொருட்களோடு குறைந்த இடுபொருட்கள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டது. இவர் இரண்டு நாட்டு இரகமான மணப்பாறை பசுக்கள் மற்றும் ஒரு ஜெர்ஸி மாடு. நாட்டு பசுக்களிலிருந்து, இவர் பசுகோமியம் மற்றும் பசுஞ்சாணம் எடுத்து உயிர் இடுபொருட்கள் தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
இவருடைய திறமையை பார்த்து வேளாண் துறை, 2 டன் அளவில் மண்புழு உர தொட்டி கட்டி தரப்பட்டது. அதேமாதிரி, அஹிம்சா, உள்ளூர் தொண்டு நிறுவனம் தசகவ்யா, பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம் மற்றும் மூலிகை பூச்சிவிரட்டி கலவைகளை தயாரிப்பதற்கு பேரல்கள் மற்றும் தௌிப்பதற்கு தௌிப்பான்களும் வழங்கினர்.
அவருடைய மொத்த குடும்பம் ,அதாவது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர் தனது குழந்தைகளிடம் மூலிகைகளை எப்படி கண்காணிப்பது, அதன் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தார். இவர்களை ஈடுபடுத்தி மூலிகைகளை சேகாிப்பது, தேவையான ஆதாரங்கள், இடுபொருள்கள் தயாரிப்பது மற்றும் தொடர்ந்து கண்காணிப்பது, மேம்படுத்துவது மேலும் விற்பனை செய்வது ஆகியவை குறித்தும் பயிற்சியளித்தார்.
பண்ணை தேவைகளை பூர்த்தி செய்தபின்னர், தற்போது செபாஸ்டியன் வருடத்திற்கு 100 லிட்டர் தசகவ்யா, 100லிட்டர் பஞ்சகவ்யா, 20 லிட்டர் மீன் அமினோ அமிலம், 100 லிட்டர் மூலிகை பூச்சிவிரட்டி கலவை மற்றும் 2000 கிலோ மண்புழுஉரம் ஆகியவை விற்பனை செய்தார். இந்த உயிர் இடுபொருள்கள் விற்பனை செய்வதில் வருடத்திற்கு சுமார் ரூ.60,000 வருமானம் பெறுகிறார். சுமார் 60-70 விவசாயிகள் இவரிடம் இடுபொருட்கள் வாங்குகிறார்கள், இதில் 20 பர் தொடர் வாடிக்கையாளராக இருக்கின்றனர்.
பெரும்பாலும் 90 சதவிகித உயிர் இடுபொருட்கள் தன்னுடைய பண்ணையிலேயே விற்பனையாகிவிடுகிறது. மீதமுள்ள பொருட்களை கைபேசி தொடர்பு மூலம் விற்பனை செய்கிறார். பின்பு, சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதால் இவருடைய உயிர் இடுபொருட்களுக்கு தேவை அதிகமாகியுள்ளது. உயிர் இடுபொருட்களை தயாரிப்பதற்கும் இடுவதற்கும் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு அறிவுரையும் கூறுவார்.
சிறிய கூடம்
2018-2019 ஆம் ஆண்டில், வேளாண்மை துறை மாநில அளவிலான கூட்டுமுயற்சிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான திறனை விரிவாக்குவதன் மூலம் விவசாயிகளை திடப்படுத்துவதற்கான பயிற்சியை ஏற்பாடு செய்தது. செபாஸ்டியன், விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில் உறுப்பினராக, 70 விவசாயிகளுடன் இந்த பயிற்சியில் பங்குகொண்டார். பயிற்சிக்கு பிறகு செபாஸ்டியன் மெட்டாரைசியம் அனிசோஃபிலே பூஞ்சாணத்தை உற்பத்தி செய்யும் ஆர்வம் மலர்ந்தது. மண்ணில் வாழும் பூச்சிகள் மற்றும் வேர் சம்மந்தமான அழுகல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தும் உயிர் கட்டுபாட்டு பொருளாக செயல்படுகிறது. இவர் வேளாண்மை துறையை அணுகி, மெட்டாரைசியம் உற்பத்தி செய்வதற்கு சிறிய உற்பத்தி கூடத்தை அமைக்கும் ஆர்வம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, வேளாண்மை துறையிலிருந்து அலுவலர்கள், இடத்தை களப்பார்வை இட்டனர். மேலும் சிறிய கூடத்தை அமைக்கும் திட்டத்தை இறுதிபடுத்த, குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார். உற்பத்தி கூடம் அமைப்பதற்குத் தேவையான மேசைகள், ப்ரஷர் குக்கர், நுண் ஊதா விளக்குகள், வாளிகள் மற்றும் பாத்திரங்கள் போன்ற அனைத்து பொருள்கள் வாங்குவதற்கு முழு உதவியாக ரூ.70,200 /-அளிக்கப்பட்டது. செபாஸ்டியன், வருடத்திற்கு 50 கிலோ மெட்டாரைசியம் தயாரித்து சுமார் 9000 /- வருமானம் ஈட்டினார்.
எனினும், விற்பனை செய்வது சவாலான ஒன்று. வேளாண்மை துறை விவசாயிகளுக்கு மெட்டாரைசியத்தை நேரடியாக, ஈர்க்கக்கூடிய பொட்டலத்தில், முத்திரை பதித்த பெயரோடு விற்பனை செய்கிறது. செபாஸ்டியன் போன்ற விவசாயிகள் வேளாண்மை துறையுடனே போட்டியிடுகிறார். இவருடைய விளைபொருள் நன்றாக பொட்டலம் போட்டு, பெயாிடாமல் போகிறது. திரும்ப வாங்கும் உதவியை செபாஸ்டியன் , இந்த விற்பனை சவாலை எதிர்கொள்ள காத்திருந்தார்.
முடிவு
இயற்கை முறையில் செல்வதால், செபாஸ்டியன் மற்றும் சில விவசாயிகள் தங்கள் மண்ணின் ஆரோக்கியம் உயர்ந்துள்ளதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். உயிர் இடுபொருள் இடுவதால் மண்ணிற்கு அடியில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கும், ஆரோக்கிய தாவரங்கள், குறைந்த பூச்சி தாக்குதல் மற்றும் உயர்ந்தநிலை அடைந்து பாதுகாப்பாகவும், சுவையான உணவு குடும்பத்திற்கும் கிடைக்கிறது
செபாஸ்டியனின் அனுபவத்தை உள்ளூர் செய்தித்தாளிலும், வேளாண் அரங்கம் என்ற திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி வேளாண்மைக்காகவே ஒதுக்கப்பட்ட நேரமாகும். இந்தப்பகுதியில், செபாஸ்டியன் தொழில் முனைவோருக்கு ஒரு முன்முாதிரியாக திகழ்கிறார்.
விக்டர்.ஐ மற்றும் சுரேஷ் கண்ணா. கே.

 


Victor I
Secretary, AHIMSA, No. 1-207 C, Sona Complex,
Main Road, Vaiyampatti - 621 315, Trichy District,
Tamil Nadu, E-mail: info@ahimsa.ngo
Suresh Kanna K
Senior Team Member, Kudumbam
113/118, Subramaniyapuram, Trichy 620 020
E-mail: kannasuresh71@gmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2021, வால்யூம் 23, இதழ் 1
அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...